Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

என் அருகில் நீ இருந்தால்- 11


எப்படியாவுது இவளுக்கு தன் .. மனதை புரியே வைக்க வேண்டும்.. என்று.. யோசித்த படி.. குமரன் உறங்க... ..

விடியல்..இருவரும் விழிபர்தற்க்கு காத்து இருக்காமல்.. அழகாய் விடிந்தது...

வழக்கம் போல் ருக்குமணி சுப்ரபாதம் பாடலை போட்டுவிட்டு பூஜையே முடிக்க...

காலையில் முதலில் விழித்தது குமரன் தான்.. விழித்தவன் எழுந்துரிக்க முயல.. ஆனால் ஒரு இஞ்ச் கூட அசையே முடியாமல்.. போனது .." என்ன இது என்று.. பார்க்க.. ...நிஷா.. அவன் மேல் தன் ஒரு கால் போட்டு.. அவனை அனைத்து கொண்டு உறங்கி கொண்டு இருந்தால்...
குமரன்.. அடிபாவி... இதுக்கு தான் கிழ. படுக்க போனியா.. சரிதான்... பில்லோ (pillow) ஹக்கர் புள்ளையா நீ.. . இதுவும் நல்லா தான் இருக்கு... என அவளை அணைக்க போக.. சட்டு என கைகளை.. விளக்கி.. ஹ்ம்ம் கொஞ்சம் நாள் ஆகட்டும் நாமலே சொல்லிட்டு.. எதையாவுது செய்து.. நம்ம இவ கேவலமா நினைச்சுட்டா.. .. ஹ்ம்ம்ஹுன் . கொஞ்சம் காலம் பொறு டா குமார.. அப்புறம் பிள்ளையார பிடிக்க.. போய் ஆஞ்சிநேயர்.. மாட்டின கதை ஆகிட போகுது என அவனுக்குள் பேசி கொண்டே இருக்கும் பொது... நிஷா.. விழித்து கொண்டால்..முதலில் தான் எங்கே இருக்கிறோம் என்று.. யோசிக்க.. அவளது முகம் அருகே.. குமரன் முகம் தெரியே .. பட்டு என. விலகி... எங்கே அவன் கோவித்து கொள்ளுவானோ என்கிற பயத்தில்.. " சாரிங்க

நைட். தூக்கத்துல...

ம் ம்ம் அவள் நகர்த்த உடன் தானும் எழுந்து.. நான் ஏதும் சொல்லவே இல்லையே ஏன் இவ்வளோ பதட்டம்.. நான் ஜோக்கிங் போறேன் நீ ஸ்கூல் கிளம்ப ரெடி ஆகு.. போ.. என்று சொல்லிவிட்டு... ட்ரக் மாற்றி கொண்டு ஜோக்கிங் சென்று விட..
நிஷா.. நல்ல வேலை தப்பா.. ஏதும் நினைக்கல நம்மள.. . இப்பிடியா அணைச்சுக்கிட்டு படுத்து கிடப்போம்.. . கருமம். இப்படியா தூங்குவேன்... அம்மா தன்னை திட்டுவது சரி தான்.. என்று தன் தலையில் ஒரு தட்டு தட்டி விட்டு. குளிக்க சென்றாள்......
.

ஸ்கூல் போக ரெடி ஆகி..வந்து.. ருக்குமணி மற்றும் சிவா நேசன் இடம் பேசி கொண்டு இருக்க.. அப்போது தான் குமரன்.. ..
தனது ஜோக்கிங் முடித்து விட்டு வந்தான்....

" குட் மோர்னிங் அப்பா.. ம்மா... " என அவன் சொல்ல ..

" குட் மோர்னிங் குமாரா சீக்கிரம் குளிச்சுட்டு வா.. நிஷாவ.. ட்ரோப் பண்ணனும்." சிவநேசன் குமரனை கிளம்ப சொன்னார்...

" இதோ ரெண்டு நிமிஷம்.. ப்பா.. என மாடி ஏற போனவன். திரும்பி.. நிஷா.. நீ ப்ரேக்பாஸ்ட் சாப்பிட்டியா.. "

" ஹ்ம்ம் ஆச்சுங்க.. " என சொல்லிவிட்டு தன் பாடத்தை ஒரு முறை திருப்பி பார்த்து கொண்டாள்...

" சரி இரு வரேன்.. என்று சொல்லிவிட்டு.. சென்று விட்டான் "

குமரனுக்கு பதில் சொல்லிவிட்டு.. நிஷா.. பெரியவர்கள் உடன் பேச ஆரம்பித்தாள்

ருக்மணி.. " அவள் கைகளை பற்றி.. குமரன் ஏதும் உன் கிட்ட கோபமா பேசிடலையே நிஷா.. என கவலை உடன் கேட்டார்.. [ அம்புட்டு நம்பிக்கை பையன் மேல.. சூப்பர் அம்மா நீங்க ]

நிஷா, " ஐயோ , அத்தை .. அது எல்லாம் ஏதும் இல்லை.. நீங்க கவலை பட வேண்டாம்..., அத்தை சாரி அத்தை/..."

" நீ ஏன் ம்மா சாரி கேட்குற.. "

" இல்லை அத்தை.. இன்னைக்கு லேட்டா எழுந்துட்டேன் நாளைல இருந்து சீக்கிரம் எழுந்து உங்களுக்கு ஹெல்ப் பண்ணுறேன்.. என்ன பண்ணனும் எப்பிடி பண்ணனும் சொல்லுங்க அதன் படி செய்துடுரேன்...என நிஷா சொல்ல.. "

" ருக்மணி.. அவளின் பேச்சில் மகிழ்ந்து போய்.. அது எல்லாம் ஒன்னும் வேண்டாம்.. நீ படிக்கிற வேலையே மட்டும் பாரு.. சரியா. மத்தது எல்லாம் நானே பார்த்துப்பேன் . என.. அவள் இடம் கண்டிப்பு உடன் சொன்னார்..

இப்படி மூவரும் பேசி கொண்டு இருக்க. குமரன் ஸ்டேஷன் போக கிளம்பி வந்துவிட்டான்.. கிளம்பலாம நிஷா...

நேசன்.. " குமாரா சாப்பிட்டுவிட்டு கிளம்பு.. "

" இல்ல அப்பா.. நேரம் ஆச்சு.. இவள ஸ்கூல வேற விட்டுட்டு போகணும்.. "

அவன் சாப்பிடாமல் வருகிறான் என்று. நிஷா.. " நான் உங்க கூட வர மாட்டேன்.. என பட்டுன்னு சொல்ல..

குமரன், ' ஏன்.. வர மட்ட.. " குழப்பத்துடன் கேட்க...

" சாப்பிடாமல்.. இருக்கிறவங்க கூட எல்லாம் நான் பேசுறது கூட கிடையாது.. இதுல எங்கே.. அவங்களோட.. போறது "

" நிஷா.. நேரம் ஆச்சு .. ' அவன் சொல்ல...

" எனக்கு ஒன்னு லேட் ஆகல . நீங்க சாப்பிட்டுட்டு வாங்க.. " என அவளும் பிடிவாதம் பிடித்தாள்.."

இனி தான் பேசுவது செல்லாது என்று.. " குமரன்.. இரண்டு தோசையே தட்டில் போட்டு.. சாப்பிட ஆரம்பிக்க. "

ருக்மணி.. அதை பார்த்து... அட பாவி மகனே.. எவ்வளோ நாள் கெஞ்சி இருப்பேன்.. சாப்பிட சொல்லி.. இப்பிடி இன்னைக்கு மாறி போயிட்டானே.. என மனதுக்குள் போலம்பினார்..' [ மனதுக்குள் சாப்பிட்டா சரி தான் ]

அவசரமாய் சாப்பிட்டுவிட்டு. நிஷாவை அழைத்து கொண்டு .. கிளம்பினான் குமரன்... ...

அவளை பள்ளியில் விட்டுவிட்டு.. ஆபீஸ் வர..

குணா..." என்ன டா வந்துட்ட.. இன்னைக்கே..'

குமரன், " இல்ல குணா.. கேஸ் பத்தி. கொஞ்சம் வேலை இருந்ததுல அதான் ' அவன் முகம் பார்க்காமல்..குமரன் பதில் சொல்ல..

" அதுக்கு இன்னைக்கே வரணும்மா என்ன .. நிஷா. எங்கே.. டா.."

" அவள ஸ்கூல விட்டுட்டு தான் வரேன்.. எக்ஸாம் இருக்குல அதான் '

" என்னது.. ஸ்கூலா. என்ன டா சொல்லுற.. டேய்.. நேத்து தான் டா உனக்கு கல்யாணம்.. ஆச்சு.. " குணா அதிர...

" ஆமா அதுக்கு என்ன இப்போ" குமரா அசால்ட்டாக குணாவுக்கு பதில் சொன்னான்...

" அவன் அவன்.. நாலு மாசம் , ஒரு வருஷம் லீவ் எடுத்துட்டு ஊட்டி காஷ்மீர் சுத்துவான்.. நீ என்னனா.. இப்பிடி விடிஞ்சா உடனே வந்து ஆபீஸ் வந்து நிக்கிற... "

" ம்ம்ச்.. அதன் சொன்னேன்ல.. கேஸ் விசாரணை இருக்குனு..."

" அத நாங்க பார்த்துக்க மட்டோமா .. சரி அத விடு.. நிஷா கிட்ட ஏதும் பேசுனியா.. இல்ல...."

" நண்பன் எதை... கேட்கிறான் என்று குமரனுக்கு புரியே.. . சமாளிக்க வேண்டுமே.. என்று.. ஹ்ம்ம் ராகவி பற்றி அவளோட நடவடிக்கை பத்தி நேத்து கேட்டேன் டா..."

குணா.. " அடபாவி.. வேற என்ன கேட்ட.. .."

" அவளுக்கு பிசிக்ஸ் எதோ டவுட் இருந்தது.. அத சொல்லிகொடுத்தேன்.."

குணா. தன் நெற்றியில் அடித்துக்கொண்டு.. .. பிசிக்ஸ் , ராகவி கேஸ்.. பத்தி பேச நல்ல நேரம் பார்த்த டா நீ உன்னை எல்லாம் போடா போ.. வேற அசிங்கமா எதாவுது திட்டிர போறேன்.. நான் வரேன்.. . . என சொல்லிவிட்டு குணா கிளம்ப போனான்..

அவனை தடுத்து நிறுத்தி..."

" ஏன் டா குணா.. இப்பிடி கோப படுற.. நான்அப்பிடி என்ன தப்பு பண்ணினேன்.. "

" என்ன தான் டா நீ பண்ணல .. மல்லாக்க படுத்து யோசி.. என்ன பண்ணி வச்சு இருக்கேன்னு உனக்கே புரியும் ,... நான் கிளம்புறேன்.. என்று போய்விட்டான்.. '

' குமரன், "குணா சென்றதை பார்த்து... என்ன சொல்லிடு போறான் இவன் ஒண்ணுமே புரியலையே.."

சரி அப்புறம் இவன் கிட்ட பேசுவோம் இப்போ வேலையே பார்ப்போம் என்று.. மீண்டும்.. தான் சேகரித்த வைத்து இருந்த.. கேஸ் பற்றி. பார்த்து கொண்டு இருந்தான்.... குமரன்..

" வெளியே சென்ற குணா.. திரும்பி குமரன் அறையே எட்டி பார்க்க.. அங்கே அவன் வேளையில் முழ்கி விட...அதை பார்த்த குணா தன் நெற்றியில் தட்டி....இவன் எல்லாம் திருந்தவே மாட்டான்.. என்று சொல்லிவிட்டு சென்றுவிட்டான்...

மாலை வரையில் வேளையில் முழ்கி இருந்த... குமரன்... குணா வந்தது கூட கவனிக்காமல்... கம்ப்யுட்டரில் எதையோ பார்த்து கொண்டு இருந்தான்...இவனது செய்கையில்....

குணா... கடுப்பு ஆனான்,...." இவனுக்கு.. எதுக்கு.. கல்யாணம்... பண்ணி வச்சான்கனே தெரியல... ..இவன நம்பி ஒருத்தி வந்து இருக்காளே... அவள் நிலைமை ரொம்ப கஷ்டம் டா கடவுளே...

அப்போது தான் நிமிர்ந்த குமரன்.. " ஹே குணா போன வேலை என்ன ஆச்சு... ஆமா எப்போ வந்த ஏன் இப்பிடி நிக்கிற .. "

" சார் போதும் சார் போதும் என்ன கேடிங்க.. நானா இப்போ தான் வந்தேன் சார்....என கோபமாய் சொல்ல..

" டேய் குணா. நானும் பார்த்துகிட்டு இருக்கேன்.. இப்போ எதுக்கு டா இவ்வளோ கோபம் வருது உனக்கு.... ..."

குணா., " அதையும் நான் சொல்லி தான் உனக்கு தெரியனுமா.. "

' பின்ன வேற யாரு சொல்லு வாங்க....' குமரன் கேட்டான்..

" அப்போ நல்லா கேட்டுக்கோ.. எதுக்கு டா நீ கல்யாணம் பண்ணின .. இப்பிடி ஆபீச்ல.. குடி இருக்கிறதுக்க.... அந்த பொண்ணு பாவம் டா.. நீ கேட்டுகிட்டனு.. உன்ன கட்டிக்க.. வேற சம்தம் சொல்லி.. '

" நான் தான் காலைல சொன்னேனே... அவ கிட்ட பேசி இருக்கேன்னு.. "

" டேய் எதுக்கு டா இப்போ இந்த கண்ணா மூச்சி ஆட்டம் யார காதுல பூ சுத்த போற.. நீ இப்போ......"

சும்மா ஏதும் சொன்னால் நன்பம் நம்ப மாட்டான் என்று தோன்றியது குமரனுக்கு..

" கண்ணாமூச்சி இல்லை டா என்ன அவ புருஞ்சுக்கணும்..., . என் காதல புருசுக்கணும்.. அதுக்காக தான் டா.. இவ்ளோவும்... அது மட்டும் இல்லாம.. பிளஸ் டூ வேற இப்போ அவ கவனம் படிப்புல தான் இருக்கணும்.. ..என் அவன் சொல்லி கொண்டே போக...

" என்ன காதலா...இது எப்போதுல இருந்து..நேத்து மண்டபத்துல கேட்டதுக்கு ஒன்னும் இல்லைன்னு சொன்ன.. இப்போ இப்பிடி சொல்லுற.... என குணா அதிரிச்சியாக...

" நண்பனிடம் உளறி விட்டோமே.. என தலை குனிந்த....படி...அவள முதல பார்த்த அப்போவே தான்... அப்போ சொல்ல முடியல.. சொல்லுற அளவுக்கு காலம் என் கிட்ட இல்லை டா... நிஷாவ கல்யாணம் பண்ணுறது வரையில.. என் உசுரு என்கிட்டே இல்ல டா.."

கல்யாணத நிறுத்தின அப்போ.. அதுக்கு தான் பேசி.. நிஷாவ கட்டிவையுங்க நின்னியா..., இப்போ தான் குணாவிற்கு எல்லாம் புரிந்தது...

குமரனும்.. " ஆமா என சொல்ல. '

' அடபாவி..சொல்லவே இல்லை என்கிட்டே அதுக்கு தான் அப்பிடி பொலம்பி தவிச்சியா ...நீ..ஆமா... காதல்ன்னு சொல்லுற.. ஆனா இப்பிடி தனியா.."

" முடியும் டா.. இப்போ அவன் கூட இருகிறதே எனக்கு போதும் .அவ.. ஸ்கூல் படிப்ப முடிக்கட்டும்... அப்புறம் பாப்போம்... ."

".. அது இல்லை டா.. ' மேலும் இழுக்க.

" போதும் டா. வேற பேசலாம்.. நான் சொல்ல மறந்துட்டேன்... . இந்த

கேஸ்ல நாம் ஸ்டடி. பண்ணின வரைக்கும்.. ரெண்டு வித போதை பொருள் யூஸ் பண்ணி இருக்காங்க.. .

பேச்சை மாத்திட்டான் இனி என்ன கேட்டாலும்... வாயே திறக்க மாட்டான்.. என்று குணாவும்... அவனது பேச்சை கவனித்தான்..

" என்னது ரெண்டு விதமான போதை பொருளா .. '

" எப்பிடி சொல்லுற.. குமரா ..."

" ஆமா...heroine and methodane "

" ஒ "' ஹ்ம்ம் ரெண்டு ரொம்ப ஆபத்தானது.... ரெண்டும் கலந்து உள்ளே போனா.. உயிர் பிழைக்குறது.. கஷ்டம்... அப்பிடியே பிழைச்சாலும் ... யூஸ் இல்லை.. "

' இதுல இமுப்புட்டு விவகாரம் இருக்கா..."

" ஆமா குணா... "

" இப்போ என்ன பிளான் பண்ணிர்க்க.."

" கேஸ் லிஸ்ட் ல கடத்தல் கேங் பத்தின பழையே ரெகார்ட்ஸ் பார்போம் .. புதுசா ஏதும் சிக்கினாலும் அதையும் விசாரிப்போம்... அப்புறம்.. அந்த ஹோட்டல இப்போ யாரோ புதுசா வந்து போறதா சொன்னியே.. அவனுங்க.. மேல ஒரு கண்ணு வை... யாரு அவனுங்க எல்லா எனக்கு வந்துட்டே இருக்கணும்... ராகவியே கவனமா பார்த்துக்க ஒரு லேடி கோன்ச்டேபல் எப்போவும் அங்கே இருக்கிற மாதிரி பார்த்துக்....அவளை அங்கே பார்க்க யார் எல்லாம் வராங்க டிடைல்ஸ் . எனக்கு வந்துட்டே இருக்கணும்.. " அடுத்து அடுத்து குணா என்ன செய்ய வேண்டும் குமரன் சொல்லி முடித்தான்...

" சரி குமரா ..." என குணா அவன் சொல்லுவதை குறித்து கொண்டான்...

தன்னோட கை கடிகாரத்தை. பார்த்தவன்... மணி ஆகிடுச்சு.. நான் நிஷாவ கூப்பிட கிளம்புறேன்.. மத்தத... நாளைக்கு பார்ப்போம் என குணாவின் பதில் எதிர் பாராமல் கிளம்பி சென்று விட்டான்......."

.குணா, குமரன் போவதை..பார்த்து கொண்டே... என்ன ஒரு மனுசனா " மதிக்கிறதே... இல்லை.. பாரு எப்பிடி விட்டு கிளம்பிட்டானு... டேய் எனக்கும் காலம் வரும் டா அப்போ பார்த்துகிறேன்.. . உன்னை...என அவன் சொல்ல ஆனா அதை கேட்க... குமரன் அங்கே இல்லையே.......

ஸ்கூல் ஸ்பெஷல் கிளாஸ் முடிந்து... லதா உடன் இன்றியே டெஸ்ட் பத்தி.. பேசி கொண்டே வந்தாள் நிஷா.....

லதா... நிஷாவிடம்... என்ன முடிவு பண்ணிற்க நிஷா..என தீவிரமாக... கேட்க..

நிஷா, ' எத பத்தி டா.. "

" ஹ்ம்ம் உங்க வாழ்கையே பற்றி....."

" அது... எனக்கு என்ன சொல்லனே தெரியல டா.."

" என்னடி.. இப்பிடி... சொல்லுற...."

" ஆமா டா அவங்க மனசுல அக்காவ எப்பிடி எல்லாம் லவ் பண்ணிற்பாங்க . இப்போ நான்... நிஷா தயங்க..

" லூசு மாதிரி உளறாதே பக்கி...' லதா கோபத்தில் நிஷா மண்டையில் ஒன்று போட்டாள் ..

" ஸ்ஸ்ஸ் ஏண்டி அடிச்ச என்ன வலிக்குது பாரு.. " என அழுதுவிடுபவள் போல் சொல்ல..

" உனக்கு ஒன்னு தெரியுமா.. உங்க அக்காவ குமரன் சார் க்கு பேசி முடிச்சதுல இருந்து... ரெண்டு பெரும் போன் ல கூட பேசிகிட்டது இல்லை தெரியுமா.. "

நிஷா, " என்ன சொல்லுற.. நீ லட்டு.." என நிஷா அதிர்ந்தாள் ..அப்போ அவ யாரு கூட பேசினா..

" ஆமா . சொல்லுறாங்க சுரைக்கைக்கு உப்பு இல்லைன்னு அவ அந்த பாஸ்கர் கூட பேசி இருக்கலாம்..... "

" ஏன் லட்டு.. இப்பிடி பேசுற.."

" பின்ன என்ன.. நல்லா கேட்டுக்கோ... கல்யாணத்துல.. சார் சொன்னத எங்க மாமா என் கிட்ட சொன்னங்க.... அப்புறம் எப்பிடி டி அதுவும் இல்லாம.. கல்யாணம் மொத நாள் கூட.. இந்த கல்யாணம் சரி வருமான்னு இவர் கிட்ட சொல்லி பொலம்பி தள்ளினாராம்.. இப்போ சொல்லு... உங்க அக்கா மேல காதல் இவருக்கு எங்கே இருந்து... வந்ததுன்னு.."

நிஷா, " ஆமா ல.. ஒரு வேலை வேற பொண்ண லவ் பன்னிர்பாரோ.."

லதாவிற்கு.... நிஷாவின் பேச்சை கேட்டு..... எதையாவுது கொண்டு அவளை நாலு போட்ட தான் என்று இருந்தது...

" வேற ஒருதார்ன்ன உன்னை எதுக்கு அவர் கல்யாணம் பண்ணிக்கணும்.... கல்யாணம் நின்ன உடனே.. அந்த இடத்த விட்டு கிளம்பி இருக்கலாம்ல.. "...தெளிவா எல்லாவற்றையும் லதா சொல்ல..

நிஷா.. மேலும் குழம்பி கொண்டு இருந்தால்...லதா என்ன சொல்ல வருகிறாள் என்று... பட்டு ஏதோ தோன்ற... என்று.." அப்போ அவர் என்ன தான் லவ் பண்ணினாரு சொல்ல வரியா லட்டு.. என மனதில் நினைத்ததை கேட்டு விட்டாள்......

" ஹாஹா ஹா.. நிஷா செல்லம்.. கரெக்டா கண்டுபிடிச்சுட்ட... ஹ்ம்ம் இருக்கலாம்.."

" சும்மா உளறாத... லட்டு.. அது எப்பிடி... அவர்க்கு நான் யாருனே தெரியாத பொது.. எப்பிடி .."

லதா, " அடியே என் தங்கமயிலு... காதல் இண்டர்வியு செய்து எல்லாம் வராது...... கண் சிமிட்டுற நேரத்துல வந்துரும்.... மனசு இருந்த போதும் டா.. காதலுக்கு....

நிஷா, " லட்டு.. சரி தான்.. போ... நீ கெமிஸ்ட்ரில விளக்கம் கேட்டா கூட இப்பிடி விலாவரியா சொல்ல மட்ட.. ஆனா என்னமோ காதல் சப்ஜெக்ட் ல.. பி அச் . டி.. பண்ணின மாதிரி பேசுற.. எனக்கு சிரிப்பா சிரிப்பா தான் வருது.. அவர் எனக்கு நல்ல பிரெண்ட் . இப்பிடி எல்லாம் பேசாத..."

லதா, " என்னாது பிரெண்டா . விளங்குச்சு....போ.. இல்ல நிஷா.. பிரெண்ட் இல்லை... அவர் உனக்கு.. ஹச்பண்ட் .. அத நீ மொதல புரிஞ்சிக்க முயற்சி பண்ணு...."

நிஷா,, " நேத்து குமரன் தன் இடம் சொன்ன அதே வார்த்தை... .. ஆனால் சொல்லும் விதம் தான் வேறு.., என நினைக்க.. " இப்போ நான் என்ன செய்யனும் நினைக்கிற லட்டு...

லதா.. " நடந்தத நீ மறக்கணும் சொல்லுறேன்... "

நிஷா, ' என்ன நடந்தத "

லதா, " இவரு உங்க அக்காக்கு பார்த்த மாப்பிள்ளைன்னு நீ மறக்கணும் . இப்போ அவர் உன் புருஷன்.. அத மட்டும் நினைவுல வை.. .. யாருக்காகவும் நீ அவர விட்டு கொடுக்க கூடாது என் நேரத்துலயும் எந்த மாதிரி சூழ்நிலையிலும்....அது உன் அக்காவே வந்து நின்னாலும்.... "

நிஷா, " அக்காவ நீ என்னடா சொல்லுற... அக்கா ரொம்ப நல்லவ டா.."

லதா, " அது உனக்கு.. சொல்லுறேன்னு தப்ப எடுத்துக்காத.. . அவ ஒரு சுயநல பிசாசு.. அவளுக்கு அடி சருக்குதுன்னு தெரிஞ்சா என்ன வேணும்னாலும் செய்வா.. முக்கியமா.. உன் கல்யாண வாழ்க்கைல தலையிட்டு. குட்டையே கிளப்பி கூட விடலாம்.. எனக்கு.. குமரன் சார் பத்தி பிரச்சனை இல்லை.. நீ.. பாட்டுக்கு உன் அக்கா கண்ண கசக்கி கிட்டு வந்து நின்னு பேச..அவ பேச்சை.. கேட்டு.. நாளைக்கே... அவறையும் சேர்த்து.. கஷ்ட படுத்திட கூடாது இல்லையா.. அதுக்கு தான் இப்போவே சொல்லுறேன்... கவனமா இரு உன் அக்கா விஷயத்துல கொஞ்சாம் கூடவே கவனமா இரு.. "

நிஷா. " இப்பிடி எல்லாம் கூட செய்வாங்கள டா.. அதுவும் அக்காவே "

" உன் அக்கா மாதிரி ஆளுங்க எல்லாம் என்ன வேணும்னாலும் செய்வாளுங்க.. . தானும் நல்ல இருக்க மாட்டாங்க அடுதுவங்கள கூட நிம்மதியா இருக்க விடமாட்டங்க... என்ன புரியுதா... .. "

நிஷா, " ஹ்ம்ம் புரியுது டா.. சரி ரொம்ப நேரம் ஆச்சு கிளம்பலாமா..என சொல்லிவிட்டு இருவரும்

கிளம்பினார்கள்...

அவ்வளோ நேரம் குமரன் இவர்கள் பேச்சை கேட்டு...கொண்டு இருந்தான்... அவனுக்கு ஒரு விஷயம் மற்றும் புரியவில்லை அன்னைக்கும் லதா.. நிஷாவின் அக்காவை வைத்து தான் எச்சரித்தாள் இன்றும் அப்பிடியே சொல்கிறாள் என்றால் இதில் ஏதோ இருக்கும் போலவே.. எப்பிடி கண்டுபிடிப்பது.. . லதா விடம் இதை பற்றி பேச வேண்டும்,....என முடிவு செய்துவிட்டு.. நிஷா லதா இருக்கும் இடத்துக்கு போனான்..

லதா.. " டி.. வந்துடாரு.. உன் ரோமியோ.. நீ கிளம்பு.. "

நிஷா, " யாரு. என்று பார்க்க.. அங்கே.. குமரன் தனது போலீஸ் உடையில் கம்பிரமாக நடந்து வர.. அவ்வளோ நாள் தோன்றாத என்தோ ஒன்று .. இன்று.. நிஷாவின் மனதை தாக்கியது...... ஹ்ம்ம் அழகா தான் இருக்கான்.. அன்பானவனும் கூட.. என நினைத்து மெல்ல புன்னகைக்க..

அதை கவனித்த.... லதா..' டி.. நிஷா.. நல்லாத்தான் சைட் அடிக்கிற..

நிஷா.. ஹ்ம்ம் என் வீட்டுக்காரர் தானே நான் அப்பிடி தான்.. இப்போ என்னாங்கிற...'

" அடிபாவி.. இது எபோதுல இருந்து..'

" நீ தானே மாற சொன்ன மாறனும் முடிவு ஆகிருச்சு. எப்போ மாறினா என்ன அதான் இப்போவே மாறியாச்சு குமரன் பொண்டாட்டியா.. "

லதா.. ஆச்சரியத்தில் வாய் பிளந்து நிற்க.. நிஷா. போதும் வாயே மூடு.. வண்டு ஏதும் வாய்குள்ள போக போயிட போகுது.. என சொல்லிக்கொண்டே அவள் வாயே மூடி விட.."

லதா.. " போலச்சுக்குவ டி.. நீ.. எம்மா "

நிஷா.". அப்பிடியா சொல்லுற.. "

ஆமா ஆமா. என்று இரண்டு பெரும் ஒருவரை ஒருவர் வாரி கொண்டு.. வர.. அதற்குள் குமரன் அருகில் வந்து விட்டன..

கிளாஸ் முடிஞ்சதா.. என்கிற கேள்வி உடன்.."

நிஷா, ' ஹ்ம்ம் முடிஞ்சதுங்க.. '

" அப்போ கிளம்பலாமா ..அவள் இடம் கேட்டு விட்டு லதா பக்கம் திரும்பி.. வாமா லதா உன்னையும் வீட்டுல விட்டுறேன்.. "

லதா, " குணா இன்று.. தன் இடம் பேச வேண்டும் என்று சொல்லியதால்.. அவன் காக காத்து கொண்டு இருந்தால்.. குமரன் அழைத்ததும்..

" இல்லை அண்ணா.. வீடு பக்கத்துல தானே நானே போய்க்குவேன்.. நீங்க கிளம்புங்க..

" இல்ல ம்மா.. ரொம்ப இருட்டிடுச்சு.. அதான் சொல்லுறேன்.. தனியா போனா செப் இல்லை... .."

குமரன் இடம் பேசி கொண்டு இருக்கும் போதே குணா அங்கே வந்துவிட்டான்..

' அவன் வருவதை மோதலில் பார்த்தது நிஷா. தான்.. லதா வராதற்கு கரணம் இப்போ புரியே...

நிஷா லதாவை.. கேலியாக பார்க்க.. லதா அவளை சும்மா இருடி..என ..பார்வையாலையே அடிக்கினால்....

" என்ன என்று கேட்ட குமரனை.." பார்த்த நிஷா..அவனிடம்...

" அங்கே பாருங்க.. என்று நிஷா கை காட்டினாள்.."

" என்ன என்று அவன் பார்க்க.. அங்கே குணா தனது வண்டியே.. நிறுத்தி. விட்டு... இவர்கள் நின்ற.. இடத்தக்கு .வந்து கொண்டு இருந்தான்.. "

" இப்போது குமரனுக்கு புரிந்தது..." ஒஹ் .." என சிரிக்க.. '

" அது வந்து அண்ணா "

" சரி ம்மா.. என்று சொல்லிவிட்டு குணாவை பார்த்து இங்க என்ன டா பண்ணுற நீ "

" ஹ்ம்ம் இசை கச்சேரி நடக்குதுன்னு சொன்னாயங்க யாரோ அதான் பார்த்துட்டு போகலாம் வந்தேன்.. யாரு டா இவன்... நீ மட்டும் உன் வீடுகார அம்மாவை கூப்பிட வரலாம் நாங்க மட்டும் வர கூடாதா.. "

" என்னது... வீட்டுக்கார அம்மாவா... இது உன் மாமாவுக்கு தெரியுமா.."

" இப்போ ஏன்டா அந்த மனுசன பத்தி பேசுற... நீ.. "

" அதுக்கு இல்லடா குணா..." மேலும் எதோ சொல்ல போக...

" டேய் வேணாம் அழுதுர்வேன் டா.... குமரா.சும்மா.. பேசிட்டு போகலாம் தான் வந்தேன் அதுக்கு ஏன் டா இப்பிடி...பண்ணுற.. "

" ஹாஹா . சரி நாங்க கிளம்புறோம்.. நீ பேசிட்டு.. 10 நிமிசத்துல.. லதாவ ... வீட்டுல அழைச்சுட்டு போய் விட்டுறணும் சரியா.." காரராக சொல்லிவிட்டு நகர...

அதை...கேட்ட..குணா, " என்னது... 10 நிமிசமா.. அதுக்குள்ள என்னதா டா பேசுறது... உனக்கு இவ அப்பா எவ்வளோ பரவாயில்லை. .. கொடுமை டா. உன்னோட.... "

குமரன் தனது காரை ஸ்டார்ட் செய்தபடி...இப்போவே... 4 நிமிஷம்

ஆகிருச்சு டா.. "

" டேய் நீ மொதல கிளம்பு.. ." என குணா கை எடுத்து கும்பிட...

" இவர்களின் பேச்சை கேட்டு.. நிஷா.. லதா.. வையிற்றை..பிடித்து கொண்டு சிரித்தார்கள்... "

குணா முனங்கி.. கொண்டே லதாவை அழைத்து கொண்டு.. அவளது வீட்டில் விட சென்று விட்டான் ...

சற்று தள்ளி வண்டியே நிறுத்தி.. குணா செல்வதை பார்த்த குமரன் தனது காரை கிளப்பினான்..

" இது உங்களுக்கே நல்லா இருக்கா . இப்பிடி பண்ணுரின்களே .. பாவம் அண்ணா.. '

" ஹ்ம்ம்.. சும்மா விளையாட்டுக்கு என்று சொல்லிவிட்டு தன் வீட்டை நோக்கி காரை செலுத்தினான்...

" கொஞ்சம் நேரத்தில் நிஷா.. உங்க போனை குடுங்க.... என கேட்க..'

" ஏன் என்று கேட்காமல்.. தனது.. போனை எடுத்து அவளிடம் கொடுத்தான்.. .."

" அதில் எல்லாம் அப்ஸ் பார்த்து விட்டு.. இதுல கேம் இல்லையா.. "அவள் கேட்க...

" என்னது கேமா.. "

" ஆமா கேம்.. . வீடு போற வரைக்கும் போர் அடிக்கும்ல அதான் கேம் விளையாட கேட்டேன் இதுல ஒரு கேம் கூட இல்லை உங்க மொபைல் சுத்த வேஸ்ட் ..என .. சாம்சங்.. கலாசி.. ஸ்மார்ட் போன் பார்த்து சொல்ல..

" அடிபாவி.. வேஸ்டா .. நேரம் தான் .. போ என்று நினைத்து. கொண்டு வர, "

நெட் இருக்கா.. என அடுத்த கேள்விக்கு தாவினாள் .."

" ம் இருக்கு..'

" ஹப்பாடா.. என்று நெட் அன் செய்து.. தனக்கு பிடித்த எல்லாம் கேம் டவுன்லோட் செய்து கொண்டு இருந்தால்..'

' கேம் டவுன்லோட் ஆகின உடனே அத விளையாடி கொண்டே வர.. '

குமரன், " என்ன செய்ற.. "

நிஷா, " கேம் விளையாடிட்டு இருக்கேன்.. மாமா.. என்று சொல்ல..

" குமரன் தனது காரை சட்டென் பிரேக் போட்டு நிறுத்தினான்...

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro