Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

வண்ணம் - 3




காலை துயில் களைந்து எழுந்து வந்த ரகுவின் உடல் வழக்கம் போல் சோம்பேறித்தனமாக இருந்தது. திங்கள்கிழமை வந்தாலே படுக்கையை அதிகம் தேடும் அவன் உள்ளம் இன்றும் அதற்கு விதிவிலக்கல்ல. சோர்வோடு வெளியில் வந்தவனுக்கு சமையலை எண்ணி இன்னும் சோர்வு கூடியது.

நேரம் இப்பொழுதே ஏழு முப்பத்தை தொட்டிருக்க இவளுக்கும் உணவு சமைக்க வேண்டுமே என்ற அயர்வு அவனுக்கு. ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தாள் இன்னமும். தேநீரையாவது தயாரிக்கலாமென அந்த வேலையை முடித்தவன் கைபேசிக்கு அலுவலகத்திலிருந்து அழைப்பு வர அவளது தூக்கத்தை தொந்தரவு செய்யாமல் அறையினுள் சென்றுவிட்டான்.

நீண்டுகொண்டே சென்ற அந்த அழைப்பில் நேரம் கடந்திருக்க அதற்கு மேல் சமையல் செய்ய முடியாது வெளியில் வாங்கலாம் என நினைத்து ரகு வரவேற்பறைக்கு வந்த நேரம் திவ்யா கையில் ஒரு பையோடு நின்றாள். எழுந்து குளித்ததற்கான அடையாளம் இல்லை, முகம் கழுவி சிகையை மட்டும் அள்ளி போனி டைல் போட்டிருந்தாள்.

"கடைல வாங்கிருக்கேன் பரவால்ல தான?"

"நானும் அத தான் பண்ணனும் நினைச்சேன். குளிச்சிட்டு வந்தர்றேன்" அவன் வரும் முன்பு நேற்று இரவு பயன்படுத்திய பாத்திரங்களை திவ்யா சுத்தம் செய்து வர, சரியாக ரகுவும் வந்திருந்தான்.

தனியாக உணவு மேஜை அங்கு இருந்ததில்லை, டீ பாயை தான் மேஜை போல் பயன்படுத்துவார்கள்.

இன்றும் அதில் இவருக்கான உணவை எடுத்து வைத்து திவ்யா அவனை பார்க்க, கைக்கடிகாரத்தை அணிந்து அமரவும் மீண்டும் ஒரு அழைப்பு வரவும் சரியாக இருந்தது.

திவ்யாவை பார்த்து ஒரு நொடி தயங்கி பிறகு அந்த அழைப்பை ஏற்று காதில் வைத்தான்.

தன்னை ரகு பார்ப்பது தெரிந்தும் தலையை கவிழ்த்து வேலையை துவங்க, "சொல்லு டால்" என்ற ரகுவின் குரலில், கைகள் பாதியில் நின்றது அவளுக்கு.

அவனோ அவளுக்காக இதை பேசவில்லையே, அவன் பேசும் மொழியே இது தான் என்பது போல் ஒரு கவளம் உண்பதும் சிரிப்பதும், பேசுவதுமாய் இருந்தான். அழைத்திருந்தது அவன் அலுவலகத்தில் உடன் வேலை செய்யும் பெண் ஒருத்தி தான்.

"அட நீ வேற அதை ஏன் நியாபகப்படுத்துற, நானே அந்த அசிங்கத்தை மறைக்க தான் எல்லாருக்கும் டீ வாங்கி குடுத்து பேச்ச மாத்திவிட்டேன்"

"நீ எங்க டா மறக்க வச்ச, பேசி பேசி மறந்துடுங்க மறந்துடுங்கனு சொல்லி சொல்லியே மனசுல நல்லா பதிய வச்சிட்ட" என்றாள் அந்த பெண். பெயர் விஜயலக்ஷ்மி. திவ்யாவின் வயதை ஒத்தவள் தான்.

"சரி விட்டேன்டி" அவனது அந்த உரிமை அழைப்பில் இங்கு திவ்யாவுக்கு உணவு தொண்டையில் அடைத்தது.

இதுவரை தன்னை தவிர வேறு எவரிடமும் இவ்வளவு உரிமையாய் டி எல்லாம் வைத்து பேசவே மாட்டான் என எண்ணியது எல்லாம் பொய்த்துப்போனது.

அவனுக்கு அவ்வாறு பேசவும் பிடிக்காது என்பது அவனே அவன் வாயால் கூறிய செய்தி. இன்று இத்தனை உரிமையாய் அழைக்கவும் இருவருக்குமான நெருக்கம் என்னவென புரிந்துகொண்டாள் திவ்யா.

"அதெல்லாம் விட முடியாது. பெருசா என்ன கவனி நீ, அசிங்கப்பட்ட வீடியோவ வெளிய லீக் ஆகாம பாத்துக்குறேன்" என்றாள் விஜயலக்ஷ்மி.

"அடிப்பாவி வீடியோ வேறயா?" அதிர்ச்சியிலும் சிரித்தவனை ஏறிட்டும் திவ்யா பார்க்கவில்லை.

"ஆமா அவ்ளோ அழகா அசிங்கப்பட்டு நின்னுருக்க, நாள பின்ன எங்கையாவது உதவுமேன்னு  நானும் சரத்தும் எடுத்து வச்சிட்டோம்"

"அட சதிகாரய்ங்களா" என்றான் இன்னும் சிரிப்போடு.

"ஏன்டா, நான் டி.ஜே நைட்ல சும்மா டூயட் ஆடுனதை என் மொத்த குடும்பத்துக்கும் அனுப்பிவிட்ட நீ இதெல்லாம் சொல்லலாமா? என்ன கோபி இதெல்லாம்"

"ஒரு கிக்கு வேணாம்...?? சரி அப்படியே அந்த விடீயோவை டெலீட் பண்ணு உன்ன தனியா பெருசா கவனிக்கிறேன்"

"சத்தியமா?"

"அட என்ன வேணும்னு மட்டும் சொல்லு" என்றான்.

"நம்ம ஆபீஸ் பின்னாடி புதுசா ஒரு ஸ்பா ஓபன் பண்ணிருக்காங்களாம். ஹேர் டிரீட்மென்ட் நல்லா இருக்காம். பண்ணலாம்னு யோசிச்சேன்... சரியா ஒரு ஆடு சிக்கிடுச்சு. செலவு மொத்தமும் நீ தான் சரியா?"

பெரிதாக செலவு வரும் என உறுதியாக எண்ணியவன், "அதெல்லாம் உனக்கு எதுக்கு விஜி? உன் முடி இருக்க அழகுக்கு இதெல்லாம் தேவையா"

"இந்த காக்கா பிடிக்கிற வேலை இங்க வேணாம். உன் அபார்ட்மெண்ட் வந்துட்டேன். வரப்போ மறக்காம காசு எடுத்துட்டு வா"

சிரிப்போடு இணைப்பை துண்டித்தவன் அவசர கதியில் உணவுண்டு ஷூ மாட்டி வாயிலை நோக்கி நகர, "ரகு பைக் கீ" அவன் முன்னே சாவியை நீட்டினாள் திவ்யா.

"வேணாம் திவ்யா. இப்பலாம் நான் வண்டில போறதில்ல, ப்ரன்ட் கூட கார்ல தான் போறேன்"

கதைவடைத்து பரபரப்போடு வெளியில் சென்றவன் சென்ற வேகத்திலே மீண்டும் உள்ளே வந்து அவள் கையில் பணத்தை திணித்தான்.

"நீ ஸ்டே பன்னிருந்த பி.ஜிக்கு இந்த காசு கட்டிட்டு. மிச்சம் நீ வச்சுக்கோ" அவள் பதிலையே கேட்காமல் ஓடிவிட்டான் மின்தூக்கியை நிறுத்த.

அவன் சென்றதும் பால்கனி சென்றவள் அப்பார்மென்டின் வாயிலை பார்க்க, அவன் கூறியது போல் ஒரு சிகப்பு நிற ஹூண்டாய் க்ரேட்டா ஒன்று நிற்க முன்னிருக்கையில் ஏறிக்கொண்டான்.

அவன் ஏறவும் அந்த வாகனம் வழுக்கிக்கொண்டு தார்சாலையில் சீறியது. அதை கவனித்து வீட்டினுள் வந்த திவ்யா கையிலிருந்த பணத்தை அதே வேகத்தில் அவர்களுடைய அறையில்... இல்லை இல்லை அவனுடைய அறையில் வைத்துவிட்டு சோபாவில் அமர்ந்தாள்.

இங்கு நடப்பவற்றை எல்லாம் பார்க்க மனதிற்கு தைரியமில்லை. முதலில் ஒரு வேலையை தேட வேண்டுமென்ற முனைப்பில் ரகுவின் மடிக்கணினியை வீட்டில் தேடி எடுத்து தனக்கு சரியாக வருமென நினைத்த வேலைகளை எல்லாம் விண்ணப்பத்து முடிக்கவே மதியமாகியது.

உணவு உண்ணவும் தோணவில்லை, சமைக்கவும் தோன்றவில்லை. உறக்கம் வராமலே படுத்துக்கிடந்தாள். நேற்று ஆறுதலாய் தெரிந்த அந்த குட்டி பூனையின் வரவும் கூட இன்று ஆறுதல் தரவில்லை. 

அந்த அமைதியும் தற்காலிக நிம்மதி தானா என்ற சலிப்பு வந்தது.மாலை வேளையிலும் மனம் நிம்மதியே இல்லாமல் தவித்தது. 

இத்தனை நாள் இதே வீட்டில் தான் இருந்தாள், அப்பொழுதெல்லாம் இல்லாத ஒரு சஞ்சலம் இந்த இரண்டு நாட்களில். வேறு இடம் போல், தான் அவ்விடத்தில் ஒன்றி போகாமல் ஒரு அந்நிய உணர்வு.

அந்த வீட்டில் இருக்க மூச்சடைக்க அபார்ட்மென்டின் கீழ் பகுதியில் அமைந்திருந்த சிறுவர்கள் விளையாட்டு பூங்காவில் சென்று அமர்ந்தாள். கண்ணீர் பெருகிக்கொண்டு வந்தது.

தன்னுடைய உடல் தனக்கே பாரமாக மாறியது. ஆசைகள் ஆயிரம் வைத்து, கனவுகள் பல லட்சம் வைத்து துவங்கிய வாழ்க்கை இன்று பாதை தெரியாத காட்டில் தனித்து சிக்கியது போலாகியது.

நேற்று வீட்டினர் பேசிய வார்த்தைகள், இன்று காலை ரகு செய்த செயல்கள் என அனைத்தும் அவளை அதிகம் வருத்தியது. ஒன்றாக வாழ்ந்த காலங்களில் கூட இல்லாத எதிர்பார்ப்பு இப்பொழுது அதிகம் வருவது எவ்வளவு பெரிய பிழை? நிதானித்தாள் மனதை கண்கள் மூடி.

'அவனோடு அதிகம் பேச கூடாது, அவனோடு அதிக நேரம் செலவழிக்க கூடாது. அவன் முகத்தையே அதிகம் பார்ப்பதை தவிர்த்திட வேண்டும். அவன் வீட்டில் இருக்கும் நேரங்களில் அவன் முன்னே செல்ல கூடாது. அவனை பற்றிய எண்ணங்களை தனிமையிலும் எண்ணி பார்க்க கூடாது'

பற்பல அறிவுரைகளை தனக்கு தானே வழங்கி கண்களை திறந்தாள்.

அவளை சோதிக்கவென்றே வாயிலில் காலை ஏறி சென்ற அதே வாகனத்தில் ஓட்டுநர் இருக்கையிலிருந்து இறங்கினான் ரகு. அவனை தொடர்ந்து மறு பக்க கதவை திறந்து ஒரு பெண்ணும் வர அவளை முழுமையாக ஆராய்ந்து திவ்யாவின் கண்கள்.

திவ்யாவை விட மெல்லிய உடல். ஆனால் ஆளை வீழ்த்தும் அழகு உடல் தான். எளிமையான உடை. கருப்பு நிற ஜீன்ஸ், வெள்ளை நிற ஹால்ப் ஸ்லீவ் ஷர்ட் அணிந்திருந்தாள்.

திவ்யாவுக்கு சிகையை அதிக நீளத்தில் வைத்திருக்க பிடிக்காது. ரகுவும் பல முறை முடியை வளர்க்க கேட்டு பார்த்து சோர்ந்து போனான்.

இவளுக்கோ அழகான நீல முடி. தளர காற்றில் ஆட விட்டிருந்தாலும் அதனை வெட்டியிருந்த விதம் அவளுக்கு இன்னும் அழகாக இருந்தது.

காலையிலிருந்து அலுவலகத்தில் வேலை செய்து வந்த களைப்பு சிறிதும் இல்லாமல் புதிதாக பூத்த மலராக தான் தெரிந்தாள். இருவரும் ஏதோ தீவிரமாக வாகனத்தை சுற்றி பார்த்து பேசிக்கொண்டிருக்க பார்வையை வேறு பக்கம் திருப்பிக்கொண்டாள் திவ்யா.

இதயத்தின் மேல் யாரோ ஏறி அழுத்த நடப்பது போல் வலித்தது. என்றைக்கும் இது போல் பலவீனமாக உணர்ந்ததில்லை அவள். இந்த புதிய உணர்வு அவளை அவளுக்கே பிடிக்கவில்லை. தளர்ந்த மனதை வெறுத்து இருளை பார்த்து அமர்ந்திருக்க, அவளை இடித்து தள்ளி அருகில் அமர்ந்தான் ரகு.

வந்தது அவன் தான் என தெரிந்தும் அவள் திரும்பவில்லை.

"ஹே காலைல போட்டிருந்த அதே டிரஸ் தான இது? என்னடி குளிக்கலையா இன்னும்?"

லூசாக அணிந்திருந்த அவளது டீ-ஷர்டின் கை பகுதியை பிடித்து மெல்ல இழுத்தான் கேலி செய்யும் பொருட்டு. அவன் கையை தட்டிவிட்டவள், "டி சொல்லாத" என்றாள் வேகமாக கோவத்தை காட்டாமல்.

"என்னது?" தவறாக கேட்டுவிட்டோமோ என மீண்டும் கேட்டான்.

"நான் என்ன உன் பொண்டாட்டியா இப்டி உரிமையா டி சொல்லி பேசுற" முகம் சுளிக்காமல் தீர்க்கமாய் அவள் கேட்ட கேள்வியில் தன்னால் அவளை ஒட்டியிருந்த கால்களை தள்ளி அமர்ந்தான்.

"என்னாச்சுடி... ப்ச்" தலை கோதியவன் பிறகு, "என்னாச்சு உனக்கு? காலைல நல்லா தானே இருந்த" நிதானமாக கேட்டான் பொறுமையை பிடித்து வைத்து.

"ஏன் எங்கையாவது தலைல அடிபட்டு பைத்தியமானா தான் இப்டி எல்லாம் பேசணுமா"

"இவ்ளோ நேரம் சந்தோசமா இருந்தேன். கருமம் ஏன்டா உன்ன பாத்து பேச வந்தேன்னு இருக்கு. அப்டியே போயிருக்கனும்" கோவத்தில் அவள் மடியில் வைத்த மடிக்கணினி பையை வெடுக்கென பிடிங்கி வீட்டை நோக்கி சென்றுவிட்டான்.

அவன் செல்லவும் இவளால் ஜடமாக அமர்ந்திருக்க முடியவில்லை, கேட்பாறட்று மௌனமாய் அலுத்து தீர்ந்தாள்.

சில நிமிடங்களில் தானும் மேலே வந்த திவ்யா அவனை திரும்பியும் பார்க்காமல் இரவு உணவை சமைத்துக்கொண்டிருந்த வேளையில் அவன் அறையிலிருந்து கத்தினான்,

"எத்தனை தடவ தான் திவ்யா உனக்கு சொல்றது? கைல காச குடுத்தா அத கண்ட இடத்துல வைக்காதன்னு" வார்த்தைகள் அவளை நெருங்கிக்கொண்டே வந்தது.

சமயலறையில் தனக்கு பின்னே அவன் வரவை அறிந்தவள், "எனக்கு உன் காசு வேணாம் ரகு. என்னோட தேவைய நானே சம்பாதிச்சு பூர்த்தி பண்ணிக்குறேன்"

"ஓ நீ தங்க என் வீடு வேணும், ஹெல்ப் பண்ண நான் வேணும். ஆனா நான் குடுக்குற பணத்தை மட்டும் வாங்கிக்க மாட்ட. அப்டி தான!"

ரகுவுக்கு பொதுவாகவே கோவம் சற்று அதிகம் வரும். இன்று அவள் பேசிய வார்த்தைகள் அவனுக்கு இன்னும் ஜுவாலையை கூட்டியிருந்தது.

"நான் இனிமேல் இந்த வீட்டுல எல்லா வேலையும் பாக்குறேன். நீ எதுவும் பண்ண வேணாம். சமையல் கூட" என்றாள் அவனை பார்த்து.

அவளை நொடியில் நெருங்கியிருந்தவன் அவளது உயரத்திற்கு குனிந்து தீயாய் கண்களை பார்த்து முறைத்தான். அவனது அனல் பார்வையில் பயந்த திவ்யா சமையல் திட்டோடு ஒட்டி நின்று கைகளை அந்த ஸ்லாபில் ஊன்றி பின்வாங்கினாள்.

அவனது சூடான மூச்சுக்காற்று அவளது நெற்றியை அடைய இதயம் தாறுமாறாக துடித்தது பெண்ணுக்கு.

"வேலைக்காரியா இருக்குறேன்னு சொல்றியா?" அவன் கேள்விக்கு அவள் அமைதியே பதில் கூறியது.

"கொன்னு பொதைச்சிடுவேன் ஜாக்கிரதை. வீட்டு வேலை பாக்குறேன், எடுபுடி வேலை பாக்குறேன்னு டயலாக் பேசிட்டு இருந்தா இப்டியே வீட்டை விட்டு வெளிய கெளம்பு. 

சும்மா திடீர்னு வந்த பொறுப்பு பருப்பை வச்சு சீன் க்ரியேட் பண்ணிட்டு இருக்காத. இந்த கண்றாவியை எல்லாம் பாக்குறதுக்கு எனக்கு நேரமில்லை. ஒழுங்கா நல்ல வேலையா பாத்துட்டு வீட்டை விட்டு கெளம்புடி. சாவடிக்கனே வந்துருக்கா"

அவள் கையை பிடித்து ஓரமாக நிற்க வைத்து தனக்கான தோசையை தானே சுட்டு அறைக்குள் எடுத்து சென்றுவிட்டான். அவன் வார்த்தைகள் அவளை சுற்றிக்கொண்டே இருந்தது.

அனைத்து தவறும் தன் மேல் தானோ என்ற எண்ணம் அவளுள் உதிக்க துவங்கியது. ரகுவின் கைகளில் இருந்து வெளி வந்த பிறகு தான் அவளுக்கும் பணத்தின் அருமையும் புரியத் துவங்கியது. 

மனதில் அவன் வார்த்தைகள் விடாமல் விளையாட, உணவு இறங்க மறுத்தது. கட்டாயப்படுத்தி உள்ளே தள்ளினாள்.

அறைக்குள் சென்ற ரகுவும் உணவை முடித்து வெளியில் வர வரவேற்ப்பறையில் ஒரு மூலையில் போர்வையை உடலோடு போர்த்தி அமர்த்திருந்தவள் இவன் சத்தம் கேட்டு படுத்துகொண்டாள்.

அவளை கவனிக்காதவாறு மீண்டும் அறைக்குள் அடைந்து கொண்ட ரகுவுக்கு இன்னும் கோவம் குறைந்தபாடில்லை. வேலை செய்வதற்கா அவளை வீட்டினுள் அனுமதித்தது.

அவளுக்கான வேலை ஒன்று தேடி எவருடைய துணையும் இல்லாமல் நிற்கும் வரை அவளை தன்னுடைய பாதுகாப்பில் வைத்திருக்க மட்டும் எண்ணியிருந்தான் ரகு.

ஆனால் அவளோ வேறு விதமாக யோசித்து, தன்னையும் வாட்டியிருந்தாள். இன்று அவன் பேசியதற்கு எப்பொழுதும் அவளிடம் சிறிய பூங்காங்கமே வெடித்திருக்க கூடும்.

ஆனால் அவளது அமைதி, பிடிவாதம், தீர்க்கம் எல்லாம் அவனுக்கும் புதிது தான். மனதில் எதையேனும் நினைத்து புழுங்குகிறாளா, இல்லை என்னுடைய ஏதாவது செய்கை அவளை இந்த அளவு பாதித்ததா... ஒருவேளை அன்று நான் பணம் கேட்டத்தை மனதில் வைத்தது பேசுகிறாளோ?

பல வேறு கேள்விகள் மனதில் குடைந்துகொண்டே இருக்க அறையிலே குறுக்கும் நெடுக்கும் நடை பயின்றான். மனம் அமைதியுற மறுத்தது. கதவை மெல்ல திறந்து பார்த்தான் உறங்கவில்லை அவள்.

அசைவு தெரிந்துகொண்டே தான் இருந்தது. அவளிடம் சென்று பேசவும் மனம் வரவில்லை.

அதிகம் பேசிவிட்டோமோ என்ற பயம் வியாபித்தது ரகுவுக்கு.

அன்று கூறியது போல் அவனுடைய அன்னையும் தந்தையும் அவனிடம் பேசினார்கள் தான். ஆனால் அவனது மனைவியை பற்றி கேள்வி கேட்ட பொழுது திக்கி திணறி உண்மையை கூறியவன் மேல் பெற்றோருக்கு கட்டுக்கடங்காத கோவம்.

மாரியாக வசவு சொற்களை பொழிந்துவிட்டனர். ஆனால் அப்பொழுதும் தன்னுடைய முடிவில் உறுதியாக தான் இருந்தான். இப்பொழுதும் உள்ளான்.

சரி செய்ய முடியும் என்ற அளவு சண்டைகள் தான் என்றாலும் ஒருவரை ஒருவர் ஒத்துபோய் வாழலாம் என்ற நிலையை தாண்டியிருந்ததாய் எண்ணம் அவர்களுக்கு.

தொட்ட விஷயமெல்லாம் சண்டையில் முடிய, கோவம் அதிகரித்து வார்த்தைகள் நிதானம் இல்லாமல் திசைமாறி தறிகெட்டு சென்றது.

"ரகு இத பாரேன்" ஆசையாக கேட்டுக்கொண்டே அவன் மடியில் வந்தமர்ந்தவள் அவன் தோளில் சாய்ந்துகொள்ள, அவள் இடை வளைத்து அவள் தலை சாய்ந்தான் ரகு. அவள் காட்டிய தொடு திரையில் அழகாய் ஒவ்வொரு வடிவங்களில் மின்னியது சில கண்ணாடி பாத்திரங்கள்.

"இது எதுக்குடி?" என்றான் மெதுவாக.

"கண்டைனர் எதுக்குடா கேப்பாங்க? வாங்கி தர்றியா பருப்பு எல்லாம் அடுக்கி வச்சுக்கலாம். அழகா இருக்கும்" ஆசையாக அவன் முகம் பார்த்தாள்.

"அதெல்லாம் சமைக்கிறவங்களுக்கு ம்மா. நீ தான் சமைக்க மாட்டியே உனக்கு எதுக்கு அத வாங்கி காச வேஸ்ட் பண்ணனும்?"

"அதெல்லாம் நான் சமைப்பேன். பாரு ஆன்லைன்ல நெறையா விடீயோஸ் பாத்து வச்சிருக்கேன். இனி நீ டெய்லி ஆபீஸ் விட்டு வரப்போ ரக ரகமா செஞ்சு தருவேன்"

சத்தமாக சிரித்தவன் அவளது மூக்கை பிடித்து ஆட்டினான், "இப்டி சொல்லி தான் அவன் வாங்குன. மவளே கருகுன சிக்கன், தீஞ்ச கேக் தான் வந்தது. கண்டைனர் வாங்கி தர்றேன் ஆனா சமைக்க மட்டும் செய்யாத ப்ளீஸ்"

இடுப்பில் பலம் கொண்டு ரகுவை திவ்யா கிள்ள வலியில் கத்தியவன் வாயை பொத்தி அவன் முகத்திற்கு நேராக வந்து, "வாங்கி தர்றேன் சொல்லுடா" என்றாள் மிரட்டலாக.

பொத்தியிருந்த கையை பிடித்து கடித்து வைத்தவன், "முடியாது போடி" என்றான் விரிந்த புன்னகையோடு வீம்பாக.

அடுத்து கிள்ளிய அவன் இடுப்பை விடாமல், "வாங்கி தர்றேன்னு சொல்லு" வலியில் துடித்தவன் தவிப்பை அவள் கண்டுகொள்ளவே இல்லை,

"என் இடுப்பையே புடிச்சு நீ ஒடைச்சலும் வாங்கி தர மாட்டேன். ஆனதை பாத்துக்கோடி" அடுத்து பல நிமிடங்கள் போராடி பார்த்து தோற்று போனவள் அவனது கழுத்து வளைவில் சோகமாக கிடந்தாள்.

கொஞ்சல் மொழிகளில் சிறிதும் இளகாதவன் அவளது அமைதியில் மனம் தவிக்க, "ஒரு லாங் டிரைவ் போகலாமா?" என்றான்.

மின்னலாய் மின்னியவள் முகம் அடுத்த நொடியில் வாடியது, "நாளைக்கு உனக்கு ஆபீஸ் இருக்கே"

மனைவியின் கன்னம் கிள்ளி முத்தமிட்டவன், "ரொம்ப தான் அக்கறை. கெளம்பி வாடி"

"அப்டியே தான் வருவேன்" மேலும் கீழும் பார்த்தான்.

எளிமையான இரவு உடை தான், "என் பொண்டாட்டி எவ்ளோ அழகுனு காமிக்கட்டுமா" அவளது இடையோடு இருந்த கைகள் இறுக்கமாக அவனது எண்ணத்தை புரிந்தவள் அருகில் இருந்த ஹெல்மெட்டை எடுத்து அவன் தலையில் வைத்து,

"துறை எங்க ஆரமிச்சு எங்க போவிங்கனு எனக்கு தெரியும். மரியாதையா கெளம்புடா" அவனை பிடித்து வெளியே அழைத்து சென்றாள்.

இருவரும் அந்த நாள் இரண்டு மணி நேர இரவு பயணத்தை ஒவ்வொரு நொடியும் அனுபவித்து வாழ்ந்தனர், கடற்கரை சென்று வந்தது என அழகிய நிகழ்வுகள் நினைவுகளாக மாறியது.

மனைவியின் சின்ன சின்ன ஆசையை நிறைவேற்றியவன் வீட்டினுள் நுழைந்ததும் மனைவியை தன்னோடு அணைத்து தன்னுடைய ஆசையை மெல்ல மெல்ல அவளிடம் தேட துவங்கினான்.

அவனது கைகளில் சோர்ந்து கிடந்தவளை இன்னும் ஆசையோடு பார்த்தவன் அவளது கன்னத்தை மீசை கொண்டு கூச செய்ய,

"ரகு" என்ற சிரிப்போடு அவனை தள்ளி நிறுத்தியவள் இடையில் அவனது கைகள் கிச்சு கிச்சு மூட்ட, அந்த குறுகுறுப்பு தாங்காமல் வயிறு வலிக்க சிரித்தவள்,

"ரகு ரகு..." அவனது பெயரை மூச்சு விடாது அழைத்தாள். இருவரின் சிரிப்பு சத்தமும் காற்றினை நிறைந்திருக்க வியர்க்க விறுவிறுக்க எழுந்தமர்ந்தவள் தன்னை சுற்றிலும் பார்வையை சுழற்றினாள்.

எங்கும் இருட்டு. ஆனால் அவர்களது கட்டிலில் இல்லாமல் வரவேற்பறையில் தலையில் இருந்தது அவள் உடல். போர்வை கழுத்து வரை இருக்க, வெயில் காலத்தின் தாக்கம் அவள் உடலை மொத்தமும் வியர்க்க செய்திருந்தது.

அப்பொழுது தான் அவளுக்கே புரிந்தது, அந்த உண்மையான கடந்த கால நிகழ்வு கணவாய் மாறி ஏகாந்த நாட்களை நினைவுபடுத்தியுள்ளதென.

கண்களை இறுக்கமாக மூடி மீண்டும் படுத்துகொண்டாள் எதை பற்றியும் யோசிக்கவே கூடாதென்ற முடிவோடு. 

அதற்கடுத்து வந்த நாட்களும் இருவருக்கும் இது போலவே பட்டும் படாமலும் ஒரு மாதம் ஓடியது.

ரகு அன்று எவ்வளவு கூறியும் வீட்டில் இருந்த வேலை அனைத்தையும் அவளே செய்து முடித்துவிடுவாள். அவளை எதுவும்  பேச முடியவில்லை அவனால்.

ஒரு முறை அவனே மன்னிப்பும் கேட்டான், "அன்னைக்கு காசு கேட்டது சும்மா உன்ன கிண்டல் பண்ண தான். அத நினைச்சு பீல் பண்ணாத திவ்யா. சாரி" என்று.

அவளோ அவனை பார்த்து எதுவும் பேசாமல் மீண்டும் வேலையை துவங்க அதற்கு பிறகு இருவருக்கும் இடையில் சுத்தமாக பேச்சுவார்த்தை நின்றுவிட்டது. வீட்டிற்கு தேவையான பொருட்களை மட்டும் அவன் கண்ணில்படும் படி ஒரு காகிதத்தில் எழுதி வைக்க அவன் வாங்கி வந்துவிடுவான்.

மௌனமாய் சென்ற நாட்களுக்கிடையில் அன்று திவ்யா விண்ணப்பித்திருந்த ஒரு வேலைக்கு ஆன்லைனில் நேர்முக தேர்வு நடைபெற இருந்தது.

ரகுவின் மடிக்கணினியை எடுத்து அறையினுள் அமர்ந்திருந்த திவ்யா, தன்னுடைய நேரம் வந்ததும் கொடுத்திருந்த இணைப்பை பயன்படுத்தி நேர்காணல் செய்பருக்கு மதிய வணக்கத்தை கூறி தன்னை பற்றி அறிமுகம் செய்துகொண்டிருந்த பொழுதே வாயில் கதவு திறக்கும் சத்தம் கேட்டு திடுக்கிட்ட திவ்யாவுக்கு வார்த்தைகள் உறைந்தது.

வந்தது நிச்சயம் ரகுவாக தான் இருக்குமென தெரியும். ஆனாலும் அவன் வரும் வேகம் அச்சத்தை கொடுத்தது.

"திவ்யா... வாட் ஹாட்பண்ட்?" பயத்தோடு அறை வாயிலிருந்து பார்வையை திருப்பி, "சாரி சார். ஐ அம் ஹாவிங் நாலேஜ் இன்..."

"கோத்தா டேய் காண்டு மயிரை கெளப்பாத. நீ விடுற பொய்யெல்லாம் எனக்கு தெரியாதாக்கோம். மவனே ட்ரவுசர அவுத்து ரோட்டுல..."

யாரையோ கைபேசியில் சரமாரியாக திட்டிக்கொண்டே அறையினுள் நுழைந்திருந்தவன் பேச்சை சற்றும் எதிர் பாராத திவ்யா, "ரகு நிறுத்து" என தடுத்து நிறுத்தினாள்.

ஆனால் அவனோ அவளை வழக்கம் போல் சட்டையே செய்யவில்லை.

"ஓடவிட்டுடுவேன். ஓ செய்ய மாட்டேன்னு நினைக்கிறியா? டேய் நீ கெளம்பி வாடா அப்போ தெரியும் நான் யாருன்னு. நீ என்ன என் ரூம்ல இருக்க வெளிய போ"

"ரகு ஐ அம் ஆன் இன்டெர்வியூ" திவ்யா குரலை உயர்த்தி அவனை முறைத்தாள்.

அப்பொழுது தான் வீட்டிலே சுடிதார் அணிந்திருந்தவளை கவனித்தான். கையில் மடிக்கணினி, காதில் காதொலிப்பான் என தொழில்முறை தேர்வுக்கு தேவையான முறையில் தன் இருந்தாள்.

"திவ்யா. வி வில் கனெக்ட் யூ லேட்டர்"

"சார் சாரி பார் தி..."

"இட்ஸ் ஓகே திவ்யா. வி வில் கால் பேக் யூ சூன்"

வற்புறுத்தி அவர்களை தடுத்து நிறுத்தவும் முடியாது பற்களை கடித்து, "அறிவில்லையா ரகு? நிறுத்துன்னு சொன்னா வேணும்னே பேசிட்டே போற?"

"இன்டெர்வியூ என்னாச்சு?" என்றான் பதட்டமாக.

"என்ன ஆனா உனக்கென்ன? அதான் உன்னால முடிஞ்சத நல்லா செஞ்சிடியே" இன்னும் கோவம் அப்படியே தான் இருந்தது.

பல விண்ணப்பங்கள் கொடுத்திருக்க ஓரிரு அழைப்புகள் வரும். அதிலும் இந்த ஒரு நிறுவனம் தான் நேர்முக தேர்வு வரை கொண்டு வந்திருந்தனர். கையில் இருந்த ஒரு வாய்ப்பும் நழுவியது போலிருந்தது.

"தெரியாம பண்ணிட்டேன் திவ்யா. நீ அவங்களுக்கு ஒரு மெயில் வேணா போட்டு பாறேன்" என்றான் உண்மையான வருத்தத்தோடு.

மடிக்கணினியை எடுத்த இடத்திலே வைத்துவிட்டு அவனிடம் பேசாமல் வீட்டை விட்டு வெளியேறியிருந்தாள். தலையில் கை வைத்து அமர்ந்துவிட்டான் ரகு.

"இப்டியாடா ரகு சொதப்புவ?" என்ன செய்து சரி செய்யலாம் என யோசித்து பார்த்து எந்த வித தீர்வும் இல்லாமல் சோர்ந்துபோனான்.

தோழிகள், தோழர்கள் என தெரிந்த அனைவருக்கும் தன்னுடைய ரெஸ்யூம் அனுப்பி வைத்து அவர்கள் நிறுவனத்திலோ இல்லை தெரிந்த நிறுவனத்திலோ வேலை இருந்தால் தெரிவிக்குமாறு கேட்டுக்கொண்டாள். ஆனால் அவளது நேரம் அனைத்தும் ஒரு பக்க தொடர்பாகவே இருந்தது.

எவரும் உதவ முன்வரவில்லை. அவர்களை மீண்டும் அழைத்து கேட்க திவ்யாவுக்கும் தயக்கமாக இருந்தது. வறட்சியாக திவ்யாவின் வாழ்க்கை செல்ல, அந்த பக்கம் ரகுவுக்கு மகிழ்ச்சியாக சென்றது. அலுவலகம், நண்பர்கள், பார்ட்டி என குதூகலமாக இருந்தான்.

ஆனால் வீட்டிற்கு வந்தால் அவனுடைய மகிழ்ச்சி வடிந்து, வாடியே திரிபவளை பார்க்க என்னவோ செய்யும். அன்று ஒரு நாள் ஞாயிறு இருவரும் வீட்டில் இருக்க வாயில் அழைப்பு மணி ஒலித்தது.

ரகு சென்று கதவை திறக்க, அங்கு அவனது கல்லூரி நண்பன் ஒருவன் வந்திருந்தான், உடன் தினேஷும்.

"என்னடா குமரா சொல்லாம கொள்ளாம திடீர்னு வந்து நிக்கிற? நீயாவது சொல்லிருக்க வேணாம்?" தினேஷை பார்த்து கேட்டு நண்பர்கள் இருவரையும் உள்ளே அழைத்தான்.

"ஏன்டா சொல்லிட்டு தான் வரணுமா உன் வீட்டுக்கு? சொல்லாம வந்தா கவனிக்க மாட்டியா என்ன?" என்றான் சிரிப்போடு குமரன்.

"எப்பா டேய். தெரியாம கேட்டுட்டேன்" நண்பனிடம் ஒப்புக்கொண்டு சிரித்தான் ரகு.

"எங்கடா உன் காதல் புறா?"

ரகு தினேஷ் இருவரின் முகமும் நொடியில் மாறியது. விவாகரத்து பற்றி இருவரை தவிர நட்பு வட்டாரத்தில் எவருக்கும் தெரியாது. இப்பொழுது கூட சொல்லிவிடலாம் ஆனால் சொல்லுமளவிற்கு குமரன் நெருங்கிய நண்பன் கிடையாது என்பதால் சொல்ல தயங்கினர் இருவரும்.

"கிட்சன்ல இருப்பா" என்றவன் எழுந்து, "நான் கூட்டிட்டு வர்றேன்" என சமையலறை சென்றான்.

குரல் கேட்டு அப்பொழுதே எட்டி பார்த்த திவ்யா வெளியில் வராமல் திட்டில் சாய்ந்து நின்றிருந்தாள். உள்ளே வந்த ரகு, "காலேஜ் மேட் வந்துருக்கான். டிவோர்ஸ் பத்தி தெரிய வேணாம்" ஏன் என கேட்க தூண்டிய மனதை அடக்கி சரி என்றாள்.

அனைவருக்கும் தேநீர் போடலாமென திரும்பியவன் அங்கு தயாராக இருந்த தேநீரை பார்த்து சிறிது பயந்து தான் போனான். இவள் செய்த தேநீரை கொடுத்தால் வந்தவன் நிலை என்னவாகும் என தோன்றினாலும் நண்பர்களுக்கும் அந்த கொடுமையை அனுபவிக்க விட்டான்.

திவ்யா முன்னே செல்ல கையில் தேநீர் தட்டை எடுத்து பின்னாலே வந்தான் ரகு. 

அவனை பார்த்து சிரித்த குமரன், "டேய் காலேஜ் நாள்ல தான் அவ பின்னாடி சுத்துறனு பாத்தா இப்பயுமா?" என்றான் கேலியாக.

"அதெல்லாம் காலேஜோட முடிஞ்சது ண்ணா. இப்ப என்ன தவற மத்த எல்லா பொண்ணுங்க பின்னாடியும் போவான்" அவளது குரலில் இருந்தது கேலி என அனைவரும் நினைக்க தனது வேதனையை அந்த சிரிப்பில் மூடி புதைத்தாள் திவ்யதர்ஷினி.

"இன்னுமாடா நீ மாறல? ஏன்மா. இவன் உன்ன லவ் பண்ணப்பையும் சைட்ல மாக்ஸ் டீச்சர்க்கு லவ் லெட்டர் எழுதுனவன். தெரியாம வந்து விழுந்துட்டியே ம்மா"

"டேய் குமரா நல்லா இருக்க குடும்பத்துக்குள்ள கும்மியடிச்சிடாத" தினேஷ் பதறி அவனை திசை திருப்பினான். அவனோ சிரிப்போடு தேநீரை பருகிவிட்டு,

"முக்கியமான விஷயம் சொல்ல தான்டா வந்தேன். அடுத்த வாரம் கல்யாணம் பிக்ஸ் ஆகிருக்கு. மஹாபலிபுரம்ல ரிசார்ட்ல தான் மூணு நாள் கல்யாண செலிப்ரேஷன். பேச்சிலர் பார்ட்டி எல்லாம் இருக்கு ரூம் எல்லாம் புக் பண்ணிட்டேன்.

மறக்காம வந்துடுங்க. சண்டே தான் கல்யாணம். பசங்க எல்லாரையும் கூப்ட்ருக்கேன். ஒரு சின்ன மீட் அப் மாதிரி வச்சுக்கலாம்னு பேசுறாங்க"

எழுந்து நின்றவன், "திவ்யா நீயும் மறக்காம வந்துடு ம்மா, இந்த ஜொள்ளு வண்டிய தனியா விட்டுடாத" பத்திரிகையை இருவருக்கும் பொதுவாக கொடுத்து சில நேரம் கல்லூரி கால கதைகள் எல்லாம் பேசி சென்றான்.

மறுநாள் அலுவலகம் சென்ற ரகுவுக்கு இன்ப செய்தி காத்திருந்தது. ஆறு மாதம் அவசர வேலையாக ஆஸ்திரேலியா செல்லும் வாய்ப்பு அவனுக்கும் அவனுடைய நண்பன் ஒருவனுக்கும் கிடைத்திருந்தது.

இரண்டு வாரங்கள் பிறகு செல்ல எல்லா ஏற்பாடுகளும் துவங்கிவிட்டதாக கூறியிருந்தனர். மகிழ்ச்சியில் டீம் மேட்ஸ் அனைவருக்கும் அவனுடைய விருந்து தான். உணவு இடைவேளையின் பொழுது நண்பர்களோடு இருக்க தினேஷின் அழைப்பு வந்தது.

"மச்சான் இன்னைக்கு எனக்கு ஒரே கொண்டாட்டம் தான்டா. சந்தோசமான விசியம் சொல்லணும்னு நினைச்சேன். நீயே கால் பண்ணிட்ட" என்றான் மடை திறந்த வெள்ளமாக.

நண்பனின் மகிழ்ச்சி ஆத்திரத்தை தர, அதை புறக்கணித்து, "வீட்டுல இருக்க புள்ளைய சர்வர் வேலைக்கு அனுப்பி வச்சு அப்டி என்ன கிழிக்கிற அளவு பண தேவை உனக்கு?" காட்டமாக தினேஷ் கத்தினான்.

சுற்றி நண்பர்கள் இருக்க அமைதியாக தள்ளி வந்தான், "தெளிவா பேசு டா. என்னாச்சு?"

"என்ன ஆகணும் இன்னும்? உன்ன நம்பி வந்ததுக்கு அந்த புள்ள அனுபவிக்க கூடாத எல்லாத்தையும் அனுபவிக்கித்து, இப்ப அடுத்தவன் தட்டை எடுத்து கழுவி... ச்சை பாக்கவே கஷ்டமா இருக்கு. நீ அங்க ஆடி பாடி சந்தோசமா இரு ராசா"

"அவளை எங்க பாத்த?"

"ஐ.டி பார்க் பக்கத்துல இருக்க மெட்ராஸ் ஹோட்டல்னு ஒரு ரோடு கடைல வேலை பாக்குறா. எப்படிடா அந்த பிள்ளையை பத்தி கொஞ்சம் கூட கவலை இல்லாம இருக்க நீ? இப்டி எல்லாம் இருப்பனு தெரிஞ்சிருந்தா நானே உங்கள பிரிச்சு விட்ருப்பேன்" வருத்தமாக பேசி தினேஷ் இணைப்பை தூண்டிவித்துவிட செய்வதறியாமல் தவித்து நின்றான் ரகு.


எனக்கு என்னமோ கதை சரியா வரல ஏதோ ஒன்னு மிஸ் ஆகுது... என்னனு தெரியல ப்பா.

சோ கதையை சீக்கிரமா சின்ன கதையா பத்து சாப்டர்ல முடிச்சி விடலாம்னு ஐடியா.

அடுத்த கதைல அதிரடியா ஒரு ஹீரோ, அடாவடியா வில்லன் (ஹீரோ) ரெண்டு பேர் வச்சு எழுத போறேன். உங்கள் கருத்து என்ன?

Comments on the chapter plzz...

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro