வண்ணம் - 10
மின்னல் வேகத்தில் வீட்டை அடைந்த ரகுவின் கால்கள் வீட்டின் வாயிலை நெருங்கவும் சற்று திணறி தான் போனது. ஒரு வார்த்தை தான் தேவைப்பட்டது அவளது மனதை அவனுக்கு எடுத்துக்காட்ட, இதோ ஓடி வந்துவிட்டான் மனைவியை தேடி.
சில மணி நேரங்களுக்கு முன்பு ரிசார்ட்டில், ரகு நண்பனுக்கு தகவல் கூறி தன்னுடைய பையை எடுத்து வாயிலில் வந்து தேட, அவள் அங்கு இல்லை. வேகமாக வண்டியை விரட்டி பேருந்து நிலையம் வந்து தேட சரியாக அவள் ஒரு பேருந்தை நோக்கி சென்றாள்.
அவளை மறித்து ரகு பேச நினைக்க அதற்குள் அவள் ஏறிய வாகனம் புறப்பட்டுவிட்டது. பின்னாலே சென்றவன் அவளை பொது இடங்கள் எங்கும் நிறுத்தாமல் வீடு வரை நிதானமாக தொடர்ந்து வந்தான்.
அவனுக்கு தெரியும் அழைத்தாலும் மனைவி தன்னோடு வரப்போவதில்லை என்று. அதனாலே தூரத்தில் நின்றே அவளை கவனித்தவன் அவள் வீட்டின் உள்ளே செல்லும் வரை அவள் முன்பே வந்து நிற்கவில்லை.
இப்பொழுது உடல் நடுங்க வீட்டின் உள்ளே சென்றவன் பூனை போல் நுழைந்து கதவை அடைத்து திவ்யாவை தேட, அவனுக்கு வேலையே வைக்காமல் அறையிலிருந்து சத்தம் வந்தது.
வரவழைத்த தைரியமும், அவள் வார்த்தை கொடுத்த உந்துதலும் அவனை நடக்க வைத்தது.
அறையினுள்ளே வந்த திவ்யாவுக்கு கோவம், ஆற்றாமை என ரகுவை நிற்க வைத்து கேள்வி கேட்க தோன்றியது.
அதே நேரம் மனதின் ஓரம் ஒரு வெறுமை. வெறுமை உண்டாக்கும் வெற்றிடம் அடர் கானகத்தில் படர்ந்தோடும் நீரோடை போல் படர்ந்து விசாலமானது.
அதே போல் தான் மனித மனமும், தேவையான பல சிந்தனைகளோடு, தேவையற்ற சில எண்ணங்களையும் தன்னுள் அடக்கி வைத்துக்கொள்ளும். இரண்டு நாட்கள் ரகுவின் செயல்கள் எல்லாம் அவள் மனதை உடைத்திருந்தது.
வரும் வழி எங்கும் பல சிந்தனைகளோடு பயணித்து வந்தவளால் வீட்டிற்குள் வந்து கண்ணீரை கட்டுப்படுத்த முடியவில்லை. ஒரே மூச்சாக குளியலறை சென்று அழுது தீர்த்து முகம் கழுவி அறைக்குள் வந்தாள்.
ரகுவின் அன்னை கார்த்திகா வீட்டை சுத்தப்படுத்தி தான் சென்றிருந்தார். அவளது பையை தேட, அது ஒரு மூலையில் இருந்தது. ஆனால் அதில் துணிகள் எதுவும் இல்லை.
அலமாரியை தேட, அனைத்தும் அங்கு தான் இருந்தன. மாமியாரை திட்டி மீண்டும் உடையை எடுத்து பெட்டியில் அடுக்க, வந்தான் ரகு உள்ளே. வீட்டை விட்டு செல்கிறாள் என நினைத்து பதறினான், "என்ன திவ்யா பண்ற?"
மௌனம்
"ஹே என்னடி பண்ற, எங்கையும் போறியா?"
மீண்டும் மௌனம். ஒருவேளை வீட்டை விட்டு மீண்டும் வெளியில் செல்ல எண்ணம் கொண்டாளோ என்று நினைத்து தவித்துப்போனான். அவள் சென்று இரண்டு நாள் கூட தாக்கு பிடிக்கவில்லை ரகு அந்த நாளில்.
சண்டை மட்டுமே இருந்த இல்லற வாழ்க்கையிலிருந்து தப்பித்தோம் என நிமித்தி மூச்சு விட்டு கண்களை திறக்க அவன் உலகமே களையிழந்து வண்ணங்கள் தொலைத்து போயிருந்தது. கற்பனையோ என கடினப்பட்டு நாட்களை ஓட்டி பார்க்க... ம்ஹூம் சிறிதும் மாற்றமில்லை.
ஏதோ தவறிய உணர்வு. விடாப்பிடியாக 'எல்லாம் கற்பனையே' என்று கூறி மனதை சமன் செய்தும் அதே வெறுமை தான்.
'அவ இல்லனா என்ன, என்னால இருக்க முடியாதா? அவ்ளோ தான் எல்லாம் முடிஞ்சது. இனியாவது சந்தோசமா இருப்பேன்' தன்னை தானே வசைப்பாடி விறைப்பாக நிமிர்ந்த நேரம் தான் வந்து நின்றாள் திவ்யா.
முகத்தை தூக்கி வைத்து நின்றாலும் மூன்று மாதங்களில் இல்லாத ஒரு நிம்மதி மனதோடு வந்து ஒட்டிக்கொண்டது. எங்கே அந்த திருப்த்தியை மனம் எந்நாளும் நாடிவிடுமோ என்ற பயமே அவனை அவளை விட்டு விலக்கியே வைத்திருந்தது.
அவளது ஆசையை நிறைவேற்ற தான் இந்த இடைவெளி என்ற சமாதானமும் செய்துகொண்டான். ஆனால் அவன் மறந்தது, 'இருத்தல் என்பதே காதலின் நிலையான கவிதை' என்பதை.
எளிதாக விவாகரத்து என்ற பேச்சை எடுத்துவிட்டு தள்ளி தள்ளி நின்றனர், அதன் பிறகு தான் புரிந்தது, இந்த காதல் கொண்ட இதயம் இரத்தின சுமைகளை தாங்கும் ரணங்கள் மிகுந்த இதயமென்று.
என்ன தான் மானம்கெட்ட மனமோ, அடிபட்டு அடிபட்டு மீண்டும் துவங்கிய இடத்திலே வந்து நிற்கிறது.
அன்று அவள் செல்லட்டும் என மகிழ்ந்த உள்ளம் இன்று பதைபதைக்கிறது அவள் இல்லாத வாழ்க்கையை எண்ணி. தனக்காக பெற்றோரிடம் சண்டையிடும் திவ்யாவின் அந்த புது பரிமாணம் கூட காதலுக்கு கவர்ச்சியாய் இருந்தது.
எங்கு அந்த ஈர்ப்பு தன்னை விட்டு விலகிடுமோ என்ற பயத்தில் கோவத்தை காட்டினான், "என்னடி இது புது பழக்கம், எதுக்கு எடுத்தாலும் கோவிச்சிட்டு வீட்டை விட்டு கெளம்புறது?" அவள் முன்னே வந்து உடையை எடுக்க விடாமல் தடுத்து நின்றான்.
"வழி விட்டு நில்லு" என்றாள் அவனை பார்க்காமல்.
"அதெல்லாம் முடியாது. இனி உனக்கு வழி விடுற எண்ணமே எனக்கு இல்ல"
"ஆமா ஆமா வழி விடுற எண்ணம் வராது, மொத்தமா என்னோட வழிய அடைகிற எண்ணம் தான் இருக்கும்"
"என்ன பேச்செல்லாம் ஒரு மாதிரி போகுது, அங்கையும் என்னமோ சொன்ன இப்பயும் வேற அர்த்தத்தை மனசுல வச்சிட்டு பேசுற மாதிரி இருக்கு?" கண்கள் இடுங்க அவளை முறைத்தான்.
"ஏன் எந்த அர்த்தத்துல சொல்றேன்னு உனக்கு புரியாதா?"
"அர்த்தம் புரியல, ஆனா சொல்ற ஆள மட்டும் யார்னு தெரியிது" மீண்டும் திவ்யா அமைதியாகிவிட, அவளது அமைதியில் சலிப்புற்றவன்,
"இப்ப எதுக்கு நமக்குள்ள யாரை யாரையோ இழுத்துட்டு வர்ற?" என்றான் பொருமலாய்.
"நாமனு ஒன்னு இன்னும் இருக்கா ரகு?" நிதானம் தவறாமல் கேள்வி கேட்கவள் கேள்வியில் ரகுவின் நிலை தான் ஆட்டம் கண்டது.
"சரி அதுக்குன்னு எதுக்கு விஜியை நீ நடுல இழுக்குற? நாளைக்கு வேற ஒருத்தனை கல்யாணம் பண்ணி போக போற பொண்ணு. என்னோட ஆபீஸ் மேட்ஸ் இருக்கப்போ தெரியாம இந்த வார்த்தை வந்தாலும் அவளோட வாழ்க்கைல தான பிரச்சனை வரும்?"
"முதல அவளுக்கு உன்ன தவற வேற ஒருத்தனை கல்யாணம் பண்ணிக்க விருப்பமானு கேளு, அதுக்கு அப்றம் அவளோட எதிர்காலம் பத்தி பேசலாம்" ரகு மௌனமாய் ஆகினான், விஜியின் நடவடிக்கையும் அவனை அமைதியாகியிருக்க, அவனது சலனமான முகத்தை பார்த்தே அதுவும் நடந்திருக்க கூடும் என்ற திவ்யாவின் அனுமானம் உறுதியானது.
"உனக்கு எல்லாரோட எதிர்காலமும் முக்கியம், உன்னோடது என்னோடது தவற. இவ்ளோ வருத்தப்படுற நீயே பேசாம அவளை கல்யாணம் பண்ணிக்கோ"
காரமாக வார்த்தையை திவ்யா விட, ஏற்கனவே விஜியின் செயலில் அடிபட்டிருந்தவன் திவ்யாவின் வார்த்தையில் சினம் பிறக்க, "நானும் அப்ப இருந்து பாக்குறேன் ரொம்ப தான் துள்ளுற, என்ன தான்டி உனக்கு பிரச்சனை?" குரலை உயர்த்தி சற்று கட்டமாகவே கேட்டான்.
அவளுக்கும் கோவம் சளைக்காமல் இருக்க தன்னுடைய கையை பற்றியிருந்தவனை தள்ளிவிட்டு, "நீ தான்டா என்னோட பிரச்சனை. ப்ரன்ட் ப்ரன்ட்னு சொல்லிட்டு ஒருத்தி உன்ன ரசிக்கிறத கூட கவனிக்காம அவகிட்ட உன்ன பத்தி சொல்லி, என்ன பத்தி சொல்லி, நம்மள பத்தியும் எல்லாத்தையும் வச்சிருக்க பாத்தியா... இத மட்டும் தான் சொன்னியா இல்ல வேற.." என்று இழுத்தவளை,
"ஏய்" கடும் சினத்தோடு நிறுத்தினான்.
"என்ன மிரட்டுற வேலை வசிக்காத ரகு, தெருல போறவங்க வர்றவங்க எல்லார்கிட்டையும் உனக்கு என்ன பத்தி அசிங்கமா பேசணும். அது தான?"
"ஏன் நீ உன்னோட ப்ரன்ட்ஸ் கூட பேசுனதே இல்லையா, இல்ல நம்ம சண்டையை பத்தி தான் சொன்னதே இல்லையா"
"சொல்லிருக்கேன், ஆனா அது எல்லாம் ஒரு லிமிட்ல நிக்கும்"
"நான் என்னத்த லிமிட் மீறி போனேன்னு நீ பாத்த?"
"அதை நீ தான் ப்பா சொல்லணும், எதுக்கு ரகு வாழ்க்கைல மறுபடியும் வந்த, போனவ அப்படியே போகாம அவனை முழுசா கொல்ல போறியானு கேக்குறா"
சாரை சாரையாக கண்ணீர் வெளியேற மேலும் தொடர்ந்தாள் கண்களை துடைத்து, "அதான் எதுக்கு இன்னொருதடவ எல்லை மீறி நீ எதுவும் என்னால தற்கொலை பண்ணிக்க போனா..." வார்த்தைகள் வராமல் தொண்டை அடைத்தது திவ்யாவுக்கு.
மனையாளின் கண்ணீர் அவன் கோவத்தை மொத்தமாய் மட்டுப்படுத்தியது. மெதுவாக, "திவ்யா..." என்றழைத்தான்.
"வேணாம்... என்னோட சுயநலத்துக்காக யாரோட உயிரோடவும் நான் விளையாட விரும்பல. உன் அம்மா அப்பா இருந்தாங்கனு தான் இத்தனை நாள் இருந்தேன், இல்லனா அப்பயே போயிருப்பேன்"
அவனை விலக்கிவிட்டு உடையை எடுக்க அவள் கை பிடித்து தன்னில் இழுத்துக்கொண்டான். அவனோடான நெருக்கத்தை வெறுத்தவளுக்கு மேலும் அழுகை வர அவனை விட்டு விலகும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டாள்.
"திமுறாத திவ்யா. அன்னைக்கு ஏதோ ரொம்ப சண்டை போட்ருந்தோம், அந்த கோவத்துல தெரியாம ட்ரின்க் பண்ணி எங்கையோ போய் முடிஞ்சது"
"அதுக்குன்னு சாகுற அளவா ரகு?" வேதனையோடு அவனிடம் கேட்டவள் முகத்தை திருப்பி அழுதாள்.
"தெரியாம பண்ணிட்டேன் ம்மா... அந்த குற்ற உணர்ச்சில தான் ரெண்டு நாள் வீட்டுக்கே வராம இருந்தேன். நான் உன்கிட்ட பேசணும் என்ன திரும்பி பாரேன்"
"எனக்கு உன்கிட்ட பேச வேணாம்" திருப்பவில்லை அவளும் முகத்தை அழுகை அழுகையாக வந்தது. அவனும் விடவில்லை.
"ஆனா நான் பேசணும்" என்றான் இளகிய குரலில்.
அவன் பிடியை தளர்த்த போராடி தோற்று போன பெண்ணவள் அவனின் கரத்தினுள்ளே இறுதியாக அடங்கி தான் போனாள்.
"விஜி உன்ன வந்து பாத்தாளா?" அவன் கேள்வியில் அன்று விஜி கூறிய ரகுவின் தற்கொலை முயற்சி நிறைவுக்கு வர உடல் நடுங்கியது.
மனைவியின் உடல் மாற்றம் தந்த பதிலில், "அவளுக்கும் எனக்கும் நடுல நட்புன்னு கோட தவற எதுவுமில்லை... நான் என்னோட பாண்ட் ஆஃப் வியூ பத்தி சொல்றேன். அவளோட மனசெல்லாம் மாத்திட்டு இருக்குறது என்னோட வேலை இல்ல"
"அப்போ அவ உனக்கு ப்ரப்போஸ் பண்ணியும் என்கிட்ட ஜஸ்ட் ஆபீஸ் மேட்னு பொய் சொன்ன"
"நான் ப்ரொபோஸ் பண்ணானு சொல்லவே இல்லடி"
"அவளோட பார்வை போதுமே ரகு அவளுக்கு உன் மேல என்ன அபிப்ராயம் இருக்குனு சொல்ல" பேச முடியாமல் தலை கோதி நின்றான்.
"இவளுக்கும் நமக்கும் இனிமேல் என்ன சம்மதம்னு நீ என்கிட்ட சொல்லாம மறைச்சிருப்ப. ம்?"
"அப்டிலாம் இல்லடி. அது தேவையில்லாத விசியம்னு தான் விட்டேன்"
மறுப்பாக தலையை ஆட்டினாள், "உனக்கும் அவளை பிடிக்கும்னு தான சொன்ன? நீ அவளை கல்யாணம் பண்ணிக்கோ ரகு..."
"ச்சி அறிவிருக்காடி... மடச்சி மாதிரி பேசுற?" கோவமாக காய்ந்தான் அவளை தள்ளிவிட்டு.
"அடேயப்பா ரொம்ப தான் நடிக்கிற, என்னமோ உன் பொண்டாட்டி மாதிரி அவ என்ன வந்து அசிங்கமா பேசுறா, நீ உரிமை குடுக்காமையா இதெல்லாம் நடக்குது?"
"உன்ன என்ன பேசுனா சொல்லு நான் அவளை கிழிச்சு விடுறேன் அதை விட்டு அறிவு கெட்ட தனமா இருக்கு உன்னோட பேச்செல்லாம், அவ ஏதோ உரிமைல அப்டி பேசிட்டா, அதுக்குன்னு இப்படியா நீ ரியாக்ட் பண்ணுவ"
"ஓ அவளுக்கு உன் வாழ்க்கைல உரிமை இருக்கும், ஆனா எனக்கு உன்னோட ஒரு சின்ன பொருள் மேல கூட உரிமை இல்ல. பொது இடம்னு கூட பாக்காம என்ன பேசுவா...
என்னோட அப்பா அம்மாவ வர வச்சு அவங்க கூட என்ன அனுப்பி வக்கிர அளவு உனக்கும் என் மேல உரிமை இருக்கும். ஆனா, நான்... நீங்க எல்லார் சொல்றதையும் கேட்டுட்டு அப்டியே நடக்கணும். அப்டி தான?" உணர்ச்சி துடைத்த முகத்தோடு ரகுவை பார்த்து திவ்யா கேட்டதில் தவித்து தான் போனான்.
"நான் வேலை பாக்குறதை கூட உன்கிட்ட சொல்லணும், ஆனா நீ கார் வாங்குனதை சொல்லல, ஆஸ்திரேலியா போக போற விசயத்தை கூட சொல்லல. ஏன் ரகு?" தலை குனிந்து நின்றவனிடம் கண்ணீரோடு கேட்டாள், அவளது கேள்விக்கு பதில் கொடுக்க தான் முடியவில்லை ஆணவனால்.
"உன்னோடது புது கார்னு நீ விஜயலக்ஷ்மி கூட பேசிட்டு இருந்தப்போ தான் எனக்கு தெரிஞ்சது. என்னை தாண்டி பேசிட்டு போன நீ, அப்போ கூட என்ன உன் கூட கார்ல கூட்டிட்டு போகணும்னு தோணலல..."
கண்ணீரை துடைத்து வரவழைத்த சிரிப்போடு அவனது வாடிய முகத்தை பார்த்து, "நீ ஒன்னும் பீல் பண்ணாத, இதெல்லாம் பழைய மாதிரியே எதிர்பாத்த என் மேல தான் தப்பு. நீ தான் இதெல்லாம் மறைச்சு தெளிவா சொல்லிட்டியே, பழைய மாதிரியே என்கிட்ட எதையும் எதிர் பாக்காதனு. அப்பயே சுதாரிச்சு நான் தெளிஞ்சிருக்கணும்"
"திவ்யா, நான் பண்ணதுக்கு நீயே ஏன் உன்ன வருத்திக்கிற..." அவள் கையை பிடித்து மீண்டும் தனக்கு அருகே நிறுத்தி அவள் முகத்தை வேதனையோடு பார்த்தான்.
அவன் அருகாமை அவளை மேலும் வதைத்தது, "நான்... நான் அவ்ளோ ஈஸியா உன் வாழ்க்கைல இருந்து போய்ட்டேனா ரகு?"
"ஹே... திவ்யா..." துடித்து போனான் அவள் கண்ணீரில்.
"கோவத்துல, திமிருல டிவோர்ஸ் கேட்டுட்டேன். நீ ஏன் ரகு ஒடனே சரி சொன்ன? என் மனசை மாத்த ட்ரை பண்ணிருக்கலாம்ல? இந்த பிசாசு வேணாம்னு முடிவு பண்ணிட்டியா? உன் அம்மாகிட்ட என்ன பத்தி அவ்ளோ பேசுனியே, எல்லாம் சரி தான்.
உன்ன இருக்க சொல்லிட்டு நான் யார் யார்கூடையோ பேசுனது தப்பு தான். ஆனா அதெல்லாம் உன் கூட இருக்கணும்னு ஆசைப்பட்டு தானே செஞ்சேன். சரி நீ சொல்லு, கல்யாணம் ஆகி ஆறு மாசம் கழிச்சு என்ன எத்தனை தடவை நீ வெளிய கூட்டிட்டு போயிருப்ப?
உனக்கு பயம், எங்க இவளை கூட்டிட்டு வெளிய போனா மொத்த காசையும் வேஸ்ட் பண்ணிடுவாளோனு. சொல்லிருக்கலாமே ரகு? நீ செய்றது பிடிக்கல, உன்னோட ஊதாரித்தனம் பிடிக்கலனு... மாத்திருப்பேனே... மொத்தமா என்ன மாத்திருப்பேனே ரகு.
அன்னைக்கு எப்டியோ போனு சொல்லிட்டு போன மனசுக்கு இன்னைக்கு அப்டி போக மனசு வரல. ஒரு தடவையாவது நல்ல சாப்பாடு சமைச்சிட மாட்டேனானு தினம் தினம் எதிர்பார்த்து ஏமாந்து போகுற ரகுவ பாத்து ரசிச்சு சிரிக்கணும் போல இருக்கு.
நாம லவ் பண்ணது, சண்டை போட்ட நேரத்துல ஒருத்தரை ஒருத்தர் சமாதானம் பண்ணி, கல்யாண பிரச்சனை வந்தப்போ ஒருத்தருக்கு ஒருத்தர் துணையா நின்னு சப்போர்ட் பண்ணி வருதத்துலையும் சந்தோசமா சிரிச்சு நமக்கான வாழ்க்கையை வாழ்ந்த அந்த நாளுக்கு மறுபடியும் போகணும்னு ஒவ்வொரு நிமிஷமும் ஆசையா இருக்கு.
ஆனா நீ இதெல்லாம் மறந்துட்டல. இப்போ என் அப்பாகிட்ட போய் பேசுனது கூட நீ ஆஸ்திரேலியா போகுறப்போ உனக்கு தடையா நான் நின்னுட கூடாது, என்ன தனியா விட்டுட்டு வந்தோம்னு உன் மனசாட்சி உன்ன கேள்வி கேக்காம இருக்கணும்னு தான்.
என்னோட பதட்டம் எல்லாம், உன் பக்கத்துல வீக்கா ஆகுறேனோனு பயமா இருக்கு, நான் வேணாம்னு என்ன விட்டு நீ போக போக உன்ன தான் மனசு அதிகம் நெருங்குது. நீ என்ன விட்டு ரொம்ப தூரம் போய்ட்ட, இல்ல என் மேல இருந்த ஆசையெல்லாம் போச்சா? அந்த அளவு உன்ன டார்ச்சர் பண்ணிட்டேனா ரகு?"
தன்னை கேள்வி கேட்டு நிற்பவளிடம் என்ன பதில் கூறுவதென்று தெரியாமல் நின்றான். ஒரு வகையில் அவள் கேட்ட அனைத்து கேள்விகளும் அவனுள்ளே அவன் கேட்ட கேள்விகள் தான்.
ஏன் அதை தான் உண்மை எனவும் நம்பியிருந்து வாழ்க்கையில் அடுத்த கட்டத்திற்கு செல்லும் பாதையாகவே இந்த ஆஸ்திரேலியா செல்லும் திட்டம். ஆனால் ஒரே நாளில் அவனது எண்ணங்களை மாற்றி அவள் பக்கமே இழுத்து வந்துவிட்டாள்.
அன்று மட்டும் தினேஷ் தனக்கு திவ்யா வேலை செய்வதை பற்றி கூறாமல் இருந்திருந்தால் அவளுடைய அன்றைய தவிப்பு, இன்றைய காதல் எல்லாம் மறந்தே சென்றிருப்பானே.
"நேத்து உன்னோட ப்ரன்ட் ஜாப் இருந்தா ரெஃபர் பண்ண சொன்னார். சார் ஒடனே பேசி வாங்கி வச்சாச்சு. ஆனா இங்க நான் வேலை கிடைக்காதானு நாய் மாதிரி ஒவ்வொரு கம்பெனி ஏறி இறங்கி வேலை தேடி அசிங்கப்பட்டு நின்னேன், அப்போல்லாம் ஒரு சாதாரண மனுசிக்கு ஹெல்ப் பண்ற மாதிரி கூட எனக்கு ஹெல்ப் பண்ண தோணல.
ஹோட்டல்ல வேலை பாக்குறது உனக்கு கஷ்டமா இருக்கு... இல்ல இல்ல கௌரவ குறைச்சலா இருக்கு. ஏன்னா உன்னோட ப்ரன்ட்ஸ் என்ன பத்தி உன்கிட்ட பேசுறது உனக்கு அசிங்கமா இருக்கு.
ஆஸ்திரேலியால வேலை பாக்க போற உன்னோட மனைவியோட வேலை உன்ன முகம் சுளிக்க வச்சிருக்கு. அதுக்காக வந்து கெஞ்சி அந்த வேலைய பாக்க விடாம தடுத்த. இனிமேல் உனக்கு அந்த கவலை வேணாம். இந்த வாரம் எண்ட்ல டிவோர்ஸ்க்கு சைன் பண்ணிடுறேன்.
சந்தோசமா போ, இவ மூஞ்சிய பாக்கணுமே, வீட்டுக்கு வந்தா சண்டை போடுவாளேனு வீட்டுக்கு வராம எங்கையும் தங்க வேண்டாம். ஏன் நீ ஊருக்கு கிளம்ப ரெண்டு நாள் முன்னாடியே நான் இந்த வீட்டை விட்டு போய்டுவேன். எனக்க.. எனக்காக நீ கை அறுத்துட்டு..."
முடியவில்லை அவளால், அதை நினைத்து பார்க்க பார்க்க மனம் துடிக்கும் துடிப்பு வேதனையாக இருந்தது. எப்படி இப்படி ஒரு காரியம் செய்ய துணிந்தான், தன்னை விட்டு செல்ல எப்படி மனம் வந்தது அவனுக்கு?
அன்று ஏதேனும் நிகழ்ந்திருந்தால்...!!?? யோசிக்க கூட முடியவில்லை அதன் பிறகு தனக்கான வாழ்க்கையை. உடல் நடுங்க, கண்ணீர் பெறுக தேம்பி அழுதவள் இறுக்கமாய் மூடியிருந்த கைகள் வலிக்க துவங்கியது.
உணர்வுகளை எத்தனை முயன்றும் கட்டுப்படுத்த முடியாமல் தவித்த மனைவியை கைகளில் அள்ளி மெத்தையில் அமர்ந்த ரகு, அவளை தன்னுடைய மடியில் பத்திரமாக சிறை செய்துவிட்டான்.
அவன் ஸ்பரிசம் இன்னும் இன்னும் பெண்ணவளை ஏங்க வைத்தது, 'இன்று அழுகாதே என்று சமாதானம் செய்து இவன் சென்றிடுவான் அதற்கு பிறகு நான் தானே தவிப்பது? நேற்று அவன் கொடுத்த முத்தமே இன்னும் தன் சிந்தை விட்டு அகலாமல் வண்டாய் மனதை குடைவது அவனுக்கு எங்கு தெரியும், இல்லை அதன் பிறகு அவன் விலகி சென்றதன் தாக்கம் தான் அவனுக்கு தெரிந்திடுமா?'
"ஹே பொண்டாட்டி அழுகாதடி" மனம் ஏங்கிய வார்த்தை, எத்தனை மாதங்கள் பிறகு அழைக்கிறான் இவ்வாறு.
"அப்டி சொல்லாத என்ன" கெஞ்சுவது போல் அவள் அழுவது அவனை மேலும் சிரிக்க தான் வைத்தது.
"அப்டி தான்டி சொல்லுவேன் என் பொண்டாட்டி" பல் வரிசை தெரிய அழகாக சிரித்தவன் மேல் காதல் இன்னும் இன்னும் கூடியது அவள் பிழையோ!
"சொல்லாதடா" அழுகை சற்று மட்டுப்பட்டு கோவம் எட்டி பார்த்தது திவ்யதர்ஷினிக்கு.
இதை தெரிந்து வைத்தே மேலும் அவளை சீண்டினான், "என் பொண்டாட்டிய நான் பொண்டாட்டி சொல்லாம வேற யாரை சொல்றதுடி பொண்டாட்டி..."
"நமக்கு டிவோர்..." மனைவியின் கழுத்தை பிடித்து தன்னை நோக்கி இழுத்தவன் அவளது இதழ்களை கவ்விக்கொண்டான்.
வார்த்தைகளை தடை செய்ய துவங்கப்பட்ட முத்தத்திற்கு உணர்ச்சிகளை கட்டுப்படுத்த முடியாமல் போனது. தன்னுடைய வசதியாக மனைவியின் கழுத்தை பற்றி தனக்கு வசமாக வளைத்தவன் முத்தம் ஒவ்வொரு நொடியும் ஆழமாய் அழுத்தமாய் அவளுள் வேரூன்ற துவங்கியது.
இடையோடு இருந்த அவனது மற்றொரு கரம் அவள் கன்னத்தில் ஓவியம் தீட்ட அவனது கைவளைவினுள் சிறைப்பட்டு கிடந்தவள் முயன்று தன்னை கட்டுப்படுத்தி அவனை விட்டு எழுந்து நின்றாள்.
"என்னடி?" மோகம் சூழ்ந்த கண்களோடு அவளை பார்த்தான்.
"நமக்கு டிவோர்ஸ் ஆக போகுது"
நொடியில் எழுந்து நின்றவன், "இன்னும் ஆகலல" என மீண்டும் மனைவியின் இதழ்களை நோக்கி நெருங்க அவனை மொத்த சக்தியையும் திரட்டி தள்ளி நிறுத்தினாள்,
"ச்சீ இப்டி பேச உனக்கு அசிங்கமா இல்ல" முகம் சுளித்து அவனை அருவருப்பாய் பார்த்தாள்.
அவனுக்கும் உள்ளே கோவம் இருக்க தான் செய்தது, விவாகரத்து என்னும் பேச்சை எடுத்தது அவள் தான், தங்களுக்குள் பிரச்சனைகள் வர சில நேரங்களில் அவளும் காரணமாக இருந்துள்ளாள்.
அவள் கூறியது போல் ஹோட்டலில் வேலை பார்க்க கூடாதென்று இல்லை, எந்த வேலையும் கௌரவ குறைச்சலை தருவதில்லை, அவள் கஷ்டப்பட கூடாதென்னும் முக்கிய காரணம் தான் இருந்ததே தவிர வேறு எதுவும் அவன் நினைக்கவில்லை.
அவளுக்கு தெரியாதது, அவன் அவர்கள் திருமணம் ஆகும் முன்பு அன்னை தந்தையிடம் கோவித்து, இந்த வேலையை சில மாதங்கள் செய்துள்ளான். அதில் ஏற்படும் மன உளைச்சல்களை பலமுறை கடந்து வர, நாட்கள் ஆகியுள்ளன.
தனக்கே இந்நிலை என்னும் பொழுது, வீட்டில் ஒரு பாத்திரத்தை கூட கழுவி பழகாதவள் மனநலனை மட்டுமே யோசித்து ரகு அவ்வாறு பேசியது. அதிலும் தன்னுடைய சுயநலம் தான் உள்ளதென்று பேசுபவள் வார்த்தைகளை இப்பொழுது திருத்த தோன்றவில்லை, உணர்ச்சிகளின் பிடியில் இருந்ததால்.
"டிவோர்ஸ் கேன்சல் பண்ண சொல்லிட்டேன்" என்றவன் அவளை மீண்டும் தன்னை நோக்கி இழுக்க, திகைத்து நின்றவள் அவன் நெஞ்சில் கை வைத்து இருவருக்கும் இடையே இடைவெளி ஏற்படுத்தினாள்.
"ஆமாடி லாயர்கிட்ட பேசிட்டேன், இனி காலத்துக்கும் நீ என்கூட தான் குப்பை கொட்டணும்"
அவள் கரங்களை தன்னுடைய கழுத்தோடு வளைத்து போட்டு அவளை மடியில் கிடத்தினான். திவ்யா இன்னும் அதிர்ச்சியிலிருந்து மீளவில்லை.
"யாரை கேட்டுடா கேன்சல் பண்ண?"
"நான் எதுக்கு யாரையும் கேக்கணும், ஒருத்தி மனசு உன் பின்னாடி வருதுனு சொல்லிட்டு அழுதுட்டே வந்துட்டா அதுக்கு மேல என்ன பண்ண முடியும் சொல்லு... அதான் எல்லாத்தையும் கிழிச்சு போட சொல்லிட்டேன்" என்றான் பெருமையாக.
"நீ சொன்னா அந்த லாயர் கிறுக்கன் ஒடனே கேப்பானா, நான் மறுபடியும் அப்ளை பண்ண தான் போறேன். நீ ஆஸ்திரேலியா கிளம்ப போறல? போடா கெளம்பு" அவன் சட்டையை பிடித்து மிரட்ட அவள் முகம் கணவனுக்கு வசதியாக நெருக்கத்தில் வந்தது.
"ஆமா கிளம்ப தான் போறேன், ஆனா தனியா இல்ல, என் பொண்டாட்டிய கூட்டிட்டு முதல் ஹனிமூன் போக போறேன்" என்றவன் விரல்கள் அவள் வெற்று இடையில் மெல்ல மெல்ல கோலம் போட துவங்கியது.
ரகுவின் கைகளின் பயணத்தை தடை செய்து, "இரக்கப்பட்டு நீ என் கூட இருக்கணும்னு ஒரு அவசியமும் இல்ல. இத்தனை நாள் கூட இருந்தப்போ என்னோட உணர்வுகள் இவருக்கு தெரியாதாம், நான் ரெண்டு சொட்டு கண்ணீர் விட்டதும் பாவப்பட்ட வாழ்க்கை போடுற நீ ம்?"
"எந்த மடையன் அப்டி சொன்னான்?"
"ரகுநந்தன்னு ஒரு மடையன் தான்"
"அவன் சொன்னா சரியா தான் இருக்கும், அப்போ இரக்கப்பட்டு யாருக்கும் வாழ்க்கை குடுக்க வேணாம்னு நீயும் சொல்றியா?"
ஒரு நொடி கலவரம் கண்களில் உதயமாக அடுத்த நொடி அதை மறைத்து, "ஆமாம்" என்றவள் பிடி மட்டும் அவன் சட்டை காலரில் கூடியது.
அவளை படித்தவன் உள்ளடக்கிய சிரிப்போடு, "அப்போ டிவோர்ஸ் குடுக்கலாம்னு சொல்றியா?" என்றான் கேள்வியாக.
தலை தயக்கத்தோடு ஆடினாலும் கண்ணீர் மணிகள் அவள் தவிப்பை படம் பிடித்து காட்டியது.
"நிஜமா?" விசும்பலோடு அவன் நெஞ்சினில் முட்டியவள் தலை தன் விருப்பமின்றி ஆமாம் என ஆட அவளை நெஞ்சோடு இறுக்கமாக அணைத்துக்கொண்டான் ரகு.
கணவனிடமிருந்து திமிறி திமிறி தோற்றவள் ஆற்றாமையில் அவன் நெஞ்சத்திலே பலமின்றி அடிக்க, சுகமாய் அந்த சிறு பிள்ளையின் அடியை வாங்கி சிரித்தான் அந்த காதல் கள்வன்.
உடலில் இருந்த தெம்பு மொத்தமும் வடிய அவன் மார்பினில் வேதனை எல்லாம் கொட்டி தீர்த்தவள் அவனை விடவே மாட்டேன் என்னும் அடமாய் மேலும் மேலும் இறுக்கமாக அணைத்திருக்க, அவள் விருப்பத்தின்படி அசைவற்று சிறைப்பட்டு சிரிப்போடு கிடந்தான்.
இருவர் மனதிலும் வார்த்தைகள் சொல்லாத நிம்மதி. சேர வேண்டிய இடத்தில் பத்திரமாக அடைந்த கூட்டு குருவிகள் போல் ஒருவரை ஒருவர் உணர்ந்து நிம்மதியாக இருந்தனர். நேரம் கடக்க அவர்களின் துயரங்களும் தூரம் கடந்து போனது.
கடந்த கால மன சஞ்சலங்களை பேசி இருவரின் குற்ற உணர்ச்சியை மற்றவர் கிளறும் எண்ணம் சுத்தமாக இல்லை, தவறுகள் இன்னதென்று உணர்ந்து இனி அவை நடக்கவே கூடாதென்று அனுபவம் எடுத்துரைத்தது தம்பதிக்கு.
சக மனிதர்களின் உணர்வுகளை புரிந்து கொள்ளும் நாம் இணையின் உணர்வுகளை படிக்க தவறி அவர்களின் கண்களில் தவறாகி போகிறோம். தவற்றை உணர்ந்து அதனை திருத்திக்கொள்ளும் தம்பதிகள் அதில் சிலரே.
'சாரி... சாரி' இருவருக்குமே அவரவர் பக்க தவறுகளை புரிந்து மன்னிப்பு கேட்டுக்கொண்டனர். இருவரும் அவரவர் நியாயத்தை மற்றவருக்கு வார்த்தை பேசாமலே புரிய வைத்துவிட்டனர்.
"ஹே கோவிந்தம்மா கை வலிக்கிதுடி" அவள் தோளில் சோர்வாய் முகம் புதைத்து தகவல் கொடுத்தான்.
அவளோ நீ பேசிக்கொண்டே இரு என நிம்மதியாய் அவள் மார்பினில் கிடந்தாள். இவள் நகரப்போவதில்லை என உணர்ந்தவன் அப்படியே மனைவியை மெத்தையில் சரித்து விழ, இருவருக்கும் மேலும் வசதியாக போனது.
"ரகு.."
"ம்?"
"நிஜமா நாம ஹனி மூன்க்கு ஆஸ்திரேலியா போறோமா?"
அவள் கேள்வியில் சத்தமாய் வாய் விட்டு சிரித்தவன், "அது உன்ன சமாளிக்கிறதுக்கு சும்மா சொன்னேன்டி"
தலையை தூக்கி அவனை முறைத்தவள் அவன் நெஞ்சத்தில் சற்று பலமாய் கடித்து, "ச்சீ பிராடு... சரியான கஞ்சன்டா நீ"
"ஹாஹா... அது என்னவோ உண்மை தான். ஆனா இனி இல்ல. அய்யா டபுள் இன்க்ரீமென்ட் வாங்கிட்டோம்ல" என்றான் மீசையை முறுக்கி.
மகிழ்வதற்கு பதில் அடி தான் இரு மடங்காக விழுந்தது, "ஏன்டா இன்னும் என்ன என்னடா என்கிட்ட இருந்து மறைச்சிருக்க, இதுல இந்த வேலையே பிடிக்கல எல்லாம் இவளாலனு கதை விட்டுட்டு இருக்குறது" வெளுத்து வாங்கிவிட்டாள் மனைவி.
"உண்மையை சொல்லு உனக்கு எத்தனை பிள்ளைங்க இருக்கு?"
"அறிவு கொழுந்தே, மூணு மாசத்துல யாருக்குடி புள்ள பிறக்கும்? வேணும்னா நீ ம்ம் சொல்லு பத்து மாசத்துல ரெடி பண்ணிடலாம்"
ஒவ்வொரு அடியும் இடி போல் விழுங்க, ஒரு கட்டத்திற்கு மேல் தாங்க முடியாமல் மீண்டும் மன்னிப்பு வேண்டி மனைவியே சரணாகதி என அவளிடம் சரணடைந்தான்.
மெல்ல மெல்ல பேச்சுகள் அழகாய் நீல, மதிய உணவை வெளியில் வாங்கி உண்ட இருவரும், இரவு உணவிற்கும் வெளியில் போகலாம் என கூறிய ரகுவிடம் தானே சமைப்பதற்கு மனைவி கூறினாள்.
அவளது சமையல் கலையை தெரிந்தவன் தானே உடன் சென்று அவளை சீண்டி தீண்டி இரவு உணவை முடித்தனர். கையேடு மனைவியை தன்னுடைய இருசக்கர வாகனத்தில் அழைத்து சென்று அந்த இரவினை குளிமையாக்கினான்.
மகிழ்ச்சியாய் கட்டிலில் படுத்திருந்தவன் கதவு சாத்தப்படும் சத்தத்தில் தலை திருப்பி பார்க்க, தொள தொளவென ஒரு கிரீம் நிற டீ-ஷர்ட் அணிந்து கூந்தலை முடித்து வர அந்த சிறிய டீ-ஷர்ட் அவளது இடையினை பளிச்சிட்டு காட்டியது.
"ஐயோ" தலையை தலையணையில் புதைத்து குப்புற படுத்து கிடந்தவனை உரசிக்கொண்டு அருகே படுத்த மனைவியை மறந்தவன் போல் இருந்தான். அவளது உரசும் உடல் வேறு கிளர்ச்சியை தூண்டியது.
"ரகு, தூங்கிட்டியா?" அவன் இடையோடு கை போட்டு சோர்வாக கேட்டாள்.
"ஆமா" என்றான்.
அதோடு விடாமல் அவன் மேல் உருண்டு மறு பக்கம் வந்தவள் செயல் அவனை தன்வசம் இழக்க வைத்தது, "என்னடி பண்ற?" உணர்ச்சிகளை கட்டுப்படுத்த முடியாமல் கோவமாக கேட்டான்.
"என்கிட்ட கொஞ்ச நேரம் பேசேன், தூக்கம் வரல" அவனோடு நெருங்கி படுத்து வினவினாள்.
"நான் பேசுற மூட்ல இல்ல. பேசாம படுடி"
"ம்ம்ஹூம் முடியாது"
காலை அவன் மேல் போட்டு மூக்கு உரசும் நெருக்கத்தில் வந்து, "அப்போ மூட் இருக்கா?" கேட்டாள் குழைவாக.
"என்ன மூட்?"
"மூடான மூட்" இறுக மூடியிருந்த அவன் கையை அவள் இடையோடு போட்டு கேட்க,
"கோவிந்தம்மா நீ சரியில்ல பாத்துக்கோ, அப்றம் நீ தான் கஷ்ட படுவ" எச்சரித்தான் பல நாள் ஆசையை மனதில் வைத்து.
கணவனின் கண்கள் தன்னுடைய கண்கள், உதடு, நாடி என கீழே இறங்க, அவன் நாடியில் கை வைத்து மேலே இழுத்தவள், "நான் பேசுற மூட் சொன்னேன், நீ என்ன பண்ற?"
கிறக்கம் குரலில் அப்பட்டமாய் தெரிய, தன்னை வம்பிற்கு இழுக்கும் திவ்யாவின் செயலில் சிரித்தவன் அவள் விரலை பிடித்து கடிக்க, திவ்யா கையை எடுத்த நொடி அவள் முகத்தை சற்று மேல் தூக்கி இதழ்களை சிறை செய்தான் வன்மையாக.
ஆசை மோகத்திற்கு தூபமிட, வெட்கம் தயக்கம் விடைபெற்று தேடல் துவங்கியது. இதழ்கள் ஆசையாய் அவளது ஒவ்வொரு இதழின் ஓரத்தையும் பதம் பார்த்து முற்று பெறாத போதையை தேனாய் பருகியது.
நீண்ட நொடிகள் பிறவியின் பயனை அடைய விடாமல் தடுக்க ரகுவின் கைகள் மனைவியின் மேல் தங்கு தடையில்லாமல் பயணித்தது. அவனை இரண்டு நாட்களாக இம்சித்த அவளது வெண்ணை இடையை வளைத்து அழுத்தி பிடிக்க, மூச்சுக்காக ஏங்கிய அவளது உடல் அந்த நொடியை பயன்டுத்தி அவன் இதழிலிருந்து பிரிந்தது.
மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க தத்தளித்த பெண்ணின் சுவாச தேவை ஆணுக்கு இல்லை போல், இதழ்களுக்கு கொடுத்த பரிசை அவளது நாடி, கன்னம், கழுத்து காது என பாதை முடிவில்லாமல் நீண்டது.
"ரகு..." காது மடலில் அவன் கடித்த சுகம் பெண்ணவளை முனக வைத்தது.
சிரிப்போடு கடித்த இடத்தில் முத்தம் வைத்து முத்த வேட்டையை இரக்கமின்றி பேதையின் கழுத்தை தாண்டி கீழே இறக்க, துடித்தது திவ்யாவின் பெண்மை.
மாய போர்வை இரவின் இருளையும் கிழித்து அவ்வறை முழுதும் பரவ, தேடல்கள் தொலைந்து காதலின் பரிணாமத்தை தெரிந்து புரிந்து அது காட்டும் வழிகளில் ஒருவரை மற்றொருவர் வெல்ல விட்டு இன்பம் அடைந்தார்.
மனைவியின் தேவை உணர்ந்தவன் அவள் ஆசையை ஆசையாய் தீர்க்க, கணவனின் முரட்டுத்தனத்தையும் இன்முகத்தோடு ஏற்றுக்கொண்டு ரகுவின் நெஞ்சத்தில் கலைந்த முடியோடு அழகிய ஓவியம் போல் ஓய்ந்து கிடந்தாள் திவ்யதர்ஷினி.
எ.சியின் உபயத்தால் வியர்வை துளிகள் இருந்த இடம் தெரியாமல் மறைந்திருக்க, விடாமல் ஓடிய அந்த இயந்திரம் அறையை தன்னுடைய குளிரால் உறைய வைத்தது.
உடல் நடுங்குவதை கூட பொருட்படுத்தாமல் சோர்வில் இருந்தவள் உடலை சரியாக தழுவாத போர்வையை உடல் வரை மூடி விட்டு நெற்றியை தொடர்ந்து இதழில் மென்மை முத்தம் கொடுத்து அவள் உறங்கும் அழகை ரசித்து கிடந்தான்.
குறுகுறு பார்வையில் பாதி உறக்கத்தில் இருந்தவள் விழித்து அவனை கேள்வியாக பார்க்க, மெல்ல சிரித்தவன் ஒன்றும் இல்லை என்றான்.
நெளிந்து அவனை நோக்கி நன்றாக திரும்பியவள் அவனது தாடியை தடவிவிட்டு சிரிக்க, அந்த சோர்வோடு சிரிக்கும் அந்த கண்களுக்கு ஆயிரம் முத்தம் குடுத்தால் என்ன? என்று தான் தோன்றியது.
அழகு அவள். அவன் கண்களுக்கு எந்த தோற்றத்திலும் அவள் அழகே.
நிம்மதியை தாண்டி அவள் கண்களில் ஒரு அலைப்புறுதல் இருந்தது. "என்ன?" என்றான் அவன் கன்னம் வருடி.
"நான் உன்கிட்ட சொல்லலனா நீ டிவோர்ஸ் கேன்சல் பண்ணிருக்கவே மாட்டல ரகு?"
"அது என்னவோ உண்மை தான். நீ தான் பிடிவாதமா இருக்கனு நான் நினைச்சேன். ஆனா என் கோவிந்தம்மா மனசுல இவ்ளோ யோசிச்சு பீல் பண்ணிருக்கானு தெரிஞ்சிருந்தா இவ்ளோ தூரம் இத வளர விட்ருக்க மாட்டேன்"
"பொய் தான சொல்ற?"
"இல்லடி... வீறாப்புல போனு சொல்லிட்டேன், ஆனா அதுக்கு அப்றம் மனசு தவிச்சது. கிட்சேன் போனா தீஞ்ச ஸ்மெல் வரல, வீடு கிளீன் பண்ற தேவையே இல்லாம நீட்டா இருந்தது, காய் வாங்க போனா ஒரு ஆர்வமே இல்ல, அப்டி பல விசியம்.
கடைசில தான் தெரிஞ்சது தனிமையை வெறுக்கல, நீ இல்லாத இந்த இடத்தையே வெறுத்துட்டேன்னு. சரியா பொட்டிய தூக்கிட்டு வந்து நின்ன, அப்பவும் ஒரு திமிரு, ஈகோ உன் பக்கத்துல வர விடாம தடுத்துச்சு. நாள் ஆக ஆக ரொம்ப கஷ்டமாச்சு. அதுல அந்த கவின் வேற வந்து என் முன்னாடியே நீ அழகா இருக்கனு சொன்னது எவ்வளவு கோவம் தெரியுமா?
அவனை அடிச்சு மூஞ்சி முகரைய எல்லாம் ஒடைக்கணும்னு தான் தோணுச்சு. ஆனா எந்த உரிமைல பண்றது? எனக்கு அவனை தான் பிடிச்சிருக்குன்னு நீ சொன்னா... ஆஆ வலிக்கிதுடி" பேசிச்சின் இடையே அவன் வார்த்தைகள் பிடிக்காமல் அவன் கைகளில் கடித்திட கத்திவிட்டான்.
"மேல சொல்லு" என்றாள் அவன் முகத்தை பார்த்து சிரிப்போடு.
கடித்து வைத்து சிரிப்பை பார் என முறைத்தவன், "ம்... எங்க விட்டேன். ஆ... உன்கிட்ட இருந்து தெரியாம கூட அப்டி ஒரு வார்த்தையை கேக்க விரும்பல அதான் போடினு வந்துட்டேன். அப்றம் உன் அப்பாகிட்ட பேசி நீ தனியா இருக்குறத சொன்னேன். வந்துட்டாங்க எல்லாரும் என் பின்னாடியே"
"அப்பயும் ஒரு பக்கம் என் மனசு தவிச்சது தெரியுமா, மனசு மாறி என் கூட வந்துட மாட்டியானு" அவன் அணைப்பு அவளிடம் கூடியது.
மேலும் மேலும் தன்னோடு இழுத்துக்கொண்டான் மனைவியை.
"பண்றது எல்லாம் பண்ணிட்டு என்ன இழுத்து பிடிக்கிற, நான் உன்கிட்ட சொன்னேனாடா லூசு பயலே, என் அப்பா வேணும், அண்ணனுங்க வேணும்னு?
தன்னோட பிடிவாதம் தான் முக்கியம்னு போனவங்கனு தெரிஞ்சாலும் என்னைக்கு என் கைல காச குடுத்து வெளிய போக சொன்னாங்களோ அப்பயே அவங்கள முழுசா வெறுத்துட்டேன்.
இதுல போய் பேசுனதை பெருமையா சொல்லிட்டு வந்துட்டான் தியாகி பட்டம் கட்டிட்டு"
"என்ன என்னடி பண்ண சொல்ற, எப்ப பாரு மூஞ்ச தூக்கிட்டே சுத்துன, கண் மூடுனா கூட நிம்மதி இல்ல. இன்னும் சொல்ல போனா நான் தான் ஏதோ பண்ணுற மாதிரி ஒரு குற்றவுணர்ச்சி வேற என்ன கொன்னுட்டு இருந்தது.
அவள வற்புறுத்தி கூட இருக்க வைக்கிறோமோனு. ஏற்கனவே ஹியரிங் டேட்ட ரெண்டு வாரம் தள்ளி வச்சேன் பொய்யா காரணம் சொல்லி. இதெல்லாம் தாண்டி கடந்து வந்துடுவேன் நிம்மதியா சிரிச்சிட்டே குட் பாய் சொல்லலாம்னு நினைச்சா அப்டியே உல்டாவா நடக்குது"
"என்னது ஹியரிங் டேட்ட தள்ளி போட்டியா?"
"ஆமா, உன் லாயர் மூக்கை ஒடைச்சிட்டு வந்தேன் உனக்கு இனி போன் பண்ண கூடாதுன்னு"
"டேய் கேடிடா நீ" சிரிக்காமல் திவ்யாவால் இருக்க முடியவில்லை.
"சரி உன் அப்பா அம்மாவை இப்டியே தள்ளியே நிறுத்த போறியா?"
"நிறுத்துனா தான் என்ன? இப்ப போய் சொல்லு நாங்க செந்துட்டோம்னு. மறுபடியும் உனக்கு அடி விழுங்கும், ஆமா ஏன்டா அன்னைக்கு அடி வாங்குன, திரும்ப ரெண்டு தட்டு தட்டிருக்கலாம்ல?"
"இப்ப இப்டி சொல்லுவ, நாளைக்கு நீங்க ஒன்னு சேந்துட்டா என் அண்ணனை அடிக்க நீ யாருனு கேப்ப... எதுக்கு வீண் சண்டை, அதான் பேசாம இருந்துட்டேன். இல்லனா எனக்கு அன்னைக்கு இருந்த ஆத்தரத்துக்கு உன் அண்ணனுங்க இருந்த இடம் தெரியாம எங்கையாவது ஓடிருப்பானுங்க"
"ரொம்ப தான்"
"பேச்சை மாத்தாம கேட்ட கேள்விக்கு பதில் சொல்லு. அவங்க மூணாவது மனுசங்க இல்ல என்னைக்குனாலும் அந்த சொந்தம் உனக்கு கண்டிப்பா தேவை. மத்தவங்க எப்டியோ உன் அப்பா உன் மேல உண்மையாவே பாசம் வச்சிருக்கார். நீ அன்னைக்கு போனது கூட தெரியாத மாதிரி சொல்றார்"
"அப்டி பாசம் இருக்குறவர் அண்ணன் உன்ன திட்டவும் ஏன் எதுவும் பேசாம வேடிக்கை பாத்தார்?"
"என்ன திட்டுனதுக்கெல்லாம் நீ ரியாக்ட் பண்ணிட்டு இருக்காத"
"உனக்கு மரியாதை இல்லாத இடத்துல எனக்கு ஒரு வேலையும் இல்ல. இதுக்கு மேல பேசுன, உன்ன கொன்னே போட்டுடுவேன். அவங்கள ஏத்துக்குறதும் ஏத்துக்காததும் என் மனசை பொறுத்து. நான் இப்போ தூங்க போறேன்"
உறுதியாக கூறி போர்வையை இழுத்து கழுத்தோடு போர்த்திக்க, அவள் கையை பிடித்து தடுத்தவன், "என்ன தூங்குற?"
"ரகு" கள்ள சிரிப்போடு தன்னை அணுகும் கணவனை பார்த்து பயந்தவள் அவனை முறைக்க, அவள் முறைப்பெல்லாம் அங்கு எடுபடவில்லை.
"டயர்டா இருந்த, அதான் கொஞ்சம் தெளிய வச்சேன். ஆறு மாசம் விட்டதெல்லாம் பிடிக்க வேணாமா செல்ல பொண்டாட்டி" என்றவன் அவளுக்கு நேரம் கொடுக்காமல் தன்னுடைய வேலையை துவங்க, அவனது காதல் தாக்குதலில் சிக்கிக்கொண்டு வெளிவர முடியாமல் மகிழ்ச்சியாய், இன்னும் இன்னும் ஆழமாய் அவனுள் புதைந்தாள் திவ்யா.
நிலவின் நிகழ்ப்படமாய் இருளிலும் ஜொலித்தவளை அன்றி வேறொருவரோடு இது போன்ற இரவுகளை கழித்திருக்க மாட்டோம் என அந்த நொடி அவன் மனம் அடித்து கூறியது.
சிரிக்க அவள், வருந்த அவள், அழுக அவள் என அனைத்திலும் அவள் மட்டுமே தன்னை கட்டுப்படுத்த முடியுமென தன்னை ஏந்தியவள் அழகாய் கூறியிருந்தாள் வார்த்தைகளற்று.
அவள் சிரிப்பு அவன் போதையானது, அவன் மூச்சுக்காற்று அவள் சுவாசமானது. இனி என்னை உரிமையாய் அழைக்காதே என்றவள், அவனுள் தன்னுடைய உரிமையை தேடி தேடி சேமிக்க,
அவள் பேசும் பொழுது காதை அடைத்தவன் அவள் கூறும் ஆயிரம் கதைகளை கேட்டு, அவளிடமிருந்து வரும் அவன் பெயர் உச்சரிப்பை இனிய கீதமாய் ரசிக்கிறான்.
அவ்வளவே காதல், நம்பிக்கை, தீராப்பற்று, விட்டுக்கொடுத்தல்.
முற்றும்...
Satisfied with the story?
கதை மொத்தமா எப்படி இருக்கு? புடிச்சிருக்கா எல்லாருக்கும்? ஏதாவது என்னுடைய எழுத்துல நான் மாத்தணும்னு தோணுனா தயங்காம சொல்லுங்க கண்டிப்பா மாத்திக்கிறேன், இல்ல என்கிட்டே என்ன எதிர்பாக்குறிங்கனு சொல்லுங்க கண்டிப்பா அதை அடுத்த கதைல கொண்டு வர்றேன்.
How is the chapter?? Seekiram epilogue oda varen... (apdiye with title of next story)
Comments please...
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro