என்னை விட்டு சென்றாய்
பகல் வானுக்குறியவனை இரைஞ்சினேன்
தன் அனலால் சுட்டெரித்து சென்றான்...
என்றும் தன் மறுமுகம் காட்டா நிலவினை இரைஞ்சினேன்
தன் குளிரால் வாட்டிச்சென்றான் ...
சுமைகொண்ட மேகத்தை கிழித்து கொட்டும் முத்து மழையிடம் இரைஞ்சினேன்
ஆழங்கட்டிகள் கொண்டு தாக்கிசென்றான் ...
அறுபது நிமிடங்கள் போராடும் பெரிய முள்ளையும் அதற்கு சிறிதே கருணை காட்டும் சிறிய முள்ளையும் கொண்ட கடிகாரத்தை இரஞ்சினேன்
ஒரு நிமிடத்தையே ஒரு யுகமாக மாற்றி வதைத்து சென்றான் ...
என் இதயத்தின் கடினத்திரையை கிழித்து சென்றவனிடம் இரைஞ்சினேன்
காயபடுத்திய இதய அறைக்கு மருந்தாக வர மறுத்து நோகடித்துச்சென்றான் ..
........................................................................
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro