அவனின் அவள்
இந்த முப்பது வார திங்கள் மட்டுமே அவனை அறிவேன் நான் ..
முழுமையாய் இரண்டு வருடங்கள் என்னை அறிவான் அவன் ...
பார்வையில் கண்ணியம் கொண்டு, செய்கையில் நம்பிக்கை காட்டி திருடிவிட்டான் ,எவரும் அறியா வண்ணம் என் இதயத்தை...
கோபத்தில் இமையமலையென உயர்ந்து நின்றாலும் , உறுகும் பனியாய் மாறி நிற்பான் என்னிடம் மட்டும் ...
எள்ளலவும் பொறுமை அற்றவன் ,
காட்டுத்தீயென கோபம் கொண்டாலும்
மின்னலாய் நொடி நேரத்தில் அமைதியான முகத்துடன் என்னை எதிர்கொள்வான் ...
ஆயிரம் வேலைகள் அவன் கழுத்தை கட்டி நெருக்கி கொண்டிருந்தாலும் , அவன் பாறை கைகள் மென்பூவாய் என் கழுத்தை சுற்றியிருக்கும் ...
காதலர்கள் என்ற பெயர் தம்பதிகளாய் மாற அவன் செய்த ஒவ்வொரு முயற்சிகளும் அவனின் காதலன் உறவானது கணவனாய் மாறிபோனது என் மனதினுள் ...
துளி கண்ணீர் சிந்தினாலும் கண் இமைகள் தாண்ட விடாமல் தடுப்பதற்கு அவன் கட்டும் பாச அணைகள் அத்தனை பலம் கொண்டவை ...
உயிர்மூச்சுள்ளவரை எனக்காக துணையாய் நிற்பேன் என்று அவன் சொல்லாதபோதும் சிறு அசைவு கூட உணர்திவிடும் அவன் மன பிம்பத்தை ....
என்னுடையனுக்காக அவனின் அவள் எழுதிய சிறு கவிதை ...
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro