வீராஞ்சலி
எல்லையின் வீரரே...
எந்நாட்டு காவலரே...
காகிதத்தாள் கட்டளைக்கு
கண்ணியமாய் கட்டுப்பட்டு
வீரத்துடன் போர்செய்து..
நம் தாய்நாட்டைக் காத்தாயே!
விண்ணளவு சோகத்தை
விதைக்கப்பட்ட போராளியாய்
களையாத கனவுகளோடு
கல்லறையில் உறங்குகிறாயோ!
வஞ்சகத்தின் நஞ்சுக்கள் செய்த
தீஞ்செயல் குண்டுகள் யாவும்
கடமைகளை பொசுக்காத போதும்
காவலின் சின்னமாய்
செங்குருதி படர்த்தாயோ!
உம் வான் புகழ் காக்க
அயராத முனைப்போடு
உறங்காது போராடும்
உம் தோழர்களும் இங்குண்டு...
துரோகத்தை துயிலுரித்து
மாறாத பதிலடி தந்து
புதுபாரதம் அமைக்கும்
இளைஞர்களின் படையுமுண்டு...
கலங்காது கண்ணுறங்கு...
கலங்காது கண்ணுறங்கு...
எந்நாளும் உம் நினைவுவோடு
இமயத்தில் கொடிநாட்ட
இலட்சியக் கொள்கையோடு
வீராஞ்சலி புரிகின்றோம்...
ஜெய்ஹிந்த்...
ஜெய்ஹிந்த்...
ஜெய்ஹிந்த்...
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro