மெளன ராணி...
கற்பனை பல கோடி
கண்களில் சிதறுதடி...
காரணம் புரியாது
காலமும் கரையுதடி...
புன்னகை உதிர்க்காத
உன் பூவிதழ் முரண்பற்றி!
சிந்தனை சில நாட்கள்
என் மனதினை வாட்டுதடி...
உன் அழகெனும் ஆராய்ச்சி
முன் ஜென்ம தொடர்ச்சியென
என் முழுமனதாய் உணர்ந்தேனடி..
உன் பதில் தேடி அலைந்தேனடி...
காலத்தின் கேள்விதனை
மாளிகை போல் கட்டமைத்து
மாறாத மனக்குழப்பம் உன்
கண் சிமிட்டல் காட்டுதடி...
நீ மறுக்கின்ற தலை அசைவில்
கூந்தல் பூ குழுங்குதடி
இது பூகம்பமா? புதுப்புயலா
உன் பூக்களும் குழம்புதடி...
சொற்களை சேமிப்பதில்
சுகம் என்ன கண்ணம்மா?
காதலுக்கு கவசம்தான்
நீ கொண்ட மெளனமா?
உன் காதலின் கதிர்வீச்சால்
கண் பார்வை இழந்தாலும்!
கால்களை மறந்தோடி
காற்றிலே மிதந்தேனடி...
கண்களால் கண்களை
களவாடும் கலைதனை
கச்சிதம் குறையாமல்
எவ்விடம் கற்றாயடி?
என்றும் என் உறைவிடம்
உன் காதலின் மனம்தானடி...
கனவுகள் போதும் சொல்லம்மா...
காதலை பகிர்வாய் கண்ணம்மா....
ஜே...
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro