ஒற்றைக் கல் எடுத்து
உதிராக் கடல் தெளித்து
பச்சை செடி வளர்த்து
பல்லுயிர் பங்கமைத்து
பசிக்கு பண்டம் சேர்த்து
வசிக்க வாழ்வு தந்து
பரிசாகப் படைத்தவன்
கொடுத்ததை உலகென்று...
விருந்தினர் என்று மறந்து
நிரந்தரம் நீடு நினைத்து
வருந்தியே வட்டம் கட்டி
வாழ்வுதனை சுருக்கிட்டு
இயற்கையின் கட்டமைப்பை
எண்ணாமல் கணக்கிட்டு...
தன்னுடல் ஜீவசுகம்
மாண்பினில் பெரிதென்று
மயக்க நிலை மாயத்தினால்
கலக்கமுற்று கண்மூடி
கரைசேரா ஓடம் போல்
தள்ளாடும் மனதும்
தவிக்கின்ற பயமும்
நெடுங்காலம் நெஞ்சில் வைத்து
நேர்மையென பறைசாற்றி...
வெற்றுடல் மூங்கிலாய்
வேடிக்கை மனிதராய்
வாழ்வாங்கு வாழ
வான்மழையும் வதைக்கிறது
வையகம் எரிகிறது...
சுயநலச் சுடரால் சூடான உலகு
சாம்பலாய் கருகி, சவங்களாய் மாறுது
இனியாவது,...
தர்மம் எனும் குணம் கற்று
தரணியெங்கும் நீதி காத்து
மனிதம் என்ற மாண்பு ஒன்றே
மானுடத்தில் பெரிதென்று
உறுதி கொண்டு உழைத்திட்டு
உண்மைதனை காத்திட்டு...
புத்துலகம் படைப்போம்....
ஜே...
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro