சேகரித்த மயிலிறகு போல்
சேமிக்கிறேன் பொக்கிஷமாக....
என் தோழியவள் குரல்மொழியை
தேடுகிறேன் வசந்தமாக....
இன்றும் ரசிக்கிறேன்
என் எழுத்துப்புத்தகத்தை மாணவணாக...
இலக்கிணமில்லா உன்
எழில் கிறுக்கல்களை
வியக்கிறேன் பித்தனாக...
புகைப்படங்களின் பிண்ணணியில்
புதையலாய் காக்கும் பெண்ணவளை..
நினைக்கும் போதெல்லாம்...
நெஞ்சத்தில் புது சக்தி..
நேர்மறை எண்ணங்களும்
உன்னாலே உற்பத்தி...
நிஜங்களும் நிலையற்ற வாழ்வில்
நிழகாக கிடைத்த உன் நட்பில்
இன்பமாய் சிறகடித்த காலங்கள்...
வெற்றியின் விளிம்புகள்
விளையாட்டாய் கைகொடுக்கும்..
தோல்வியும் உன் ஆறுதலால்
துவண்டு தோற்கடிக்கப்படும்...
உருகாத உறைபனிபோல்
உன் கட்டளைகள்....
கெடாமல் காக்கப்படும்
எந்நாளும் என் இதயத்துடிப்புகள்...
உன் தீஞ்சுடர் பார்வையின்
திகைப்பான திறனில்...
தீண்டாமலே தீயாகும்
என் விரலிடையே புகைகுச்சிகள்...
என் இலக்குகளை எழுதியபோது
என்னருகே புன்னகைத்த நீ...
எனக்கான மாற்றத்தை
முன்னேற்றமாய் வடிவமைத்த நீ...
என்னிடம் சொல்லாமலே
பிரிந்தது ஏனடி...
இவ்வுலகம் சிறிதென்று
சொல்லாமல் சொன்னாயோ...
என்றாவது சந்திப்போம்
என எண்ணங்கள் கொண்டாயோ...
உன் உறுதிமொழி ஒன்று மட்டும்
உள் மனதில் வைத்துகொண்டு...
வாய்ப்புகள் வழிதேடி
நெடுந்தூரம் பறந்தேனோ...
எதிர்கால சூழ்ச்சிதனில்
என் தோழியுனை தொலைத்தேனோ...
இன்றும் உன்
செல்லக் குறும்புகள் நினைத்து...
என்னுள்ளே சந்தோஷம்...
சோகத்தின் சூழ்நிலையும்
சுகமாக்கும் அதிசயம்...
பயணங்கள் பலவருடம்
பறவைபோல் கடந்தாலும்...
உனை சந்திக்கும் நொடிக்காக
காலங்களை கடத்துகிறேன்...
உன் முதிர்முகம் காண
முனைப்பாய் வாழ்கிறேன்...
என் தோழியவள் தோழமையை
தூய்மையாய் போற்றுகிறேன்...
ஜே...
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro