
சுவடுகள்...
வைகறை விடியல் வேண்டி
விழிக்கதவுகள் திறந்திருக்க...
அதிகாலைப் புறப்பாட்டின்
அரங்கேற்றம் அலங்கரிக்க...
கண்முன்னே என்னவளின்
எழில் பிம்பம் புன்னகைக்க...
புதிதாய்ப் பிறந்தவன் போல்
புத்துணர்வுப் புது நாள் தொடங்க..
விழிகளது அசையாது
வேறுதிசை பார்க்காது
என்னவள் ஏகமாய்
எட்டுவைத்த சாலைகளில்
காலடி மெல்லிசையை
காதுகள் தூதுரைக்க
அவள் சுவாசித்த காற்றினை
நாசியது தேடிச்செல்ல
முன்பு நாங்கள் அன்பாக
தங்கிச் சந்தித்த சந்தோஷம்..
மேப்பூக்கள் மரம் மட்டும்
ஆசிர்வாத இலை கொட்டும்
இன்று உன்னில் செம்பூக்கள்...
நான் தனிமையில்
ரசிக்கும் சாபங்கள்...
அவள் எழுதிவைத்த
பெயர்க்கீரலில்
இன்னமும் ஈரம் வடிய...
ஒவ்வொரு முகங்களும்
பித்தனைப்போல் வியப்பார்க்க...
என்னவள் தனிமுகமோ
எங்கு தேடியும் கிடைக்காமல்...
ஏமாற்றங்கள் சேர்ந்தென்னை
ஒய்யாரமாய் புன்னகைக்க..
கரையாத சோகத்தை
கண்ணீரும் கண் நனைக்க...
கனவுலகில் மட்டும் வருவாளோ...
தனிவுலகில் மட்டும் சிரிப்பாளோ...
காற்றலையில் மட்டும் கைகோர்ப்பாளோ...
காலம் வரட்டும் என விட்டுச் சென்றாளோ...
நிஜவுலகில் நெருப்பாக நானும்
நிழல் உலகில் நிலவாக நீயும்.. உன்
ஒவ்வொரு நினைவு தினமும்
கண்ணீர் கடல்களாக...
காலத்தின் முனை வேண்டி
போராட்டமும் தோல்வியாக...
தனிமையில் தவித்தாலும்
உன் நினைவெனும் சுவடுகளை
நான் சுமப்பதும் சுகம்தானடி...
ஜே...
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro