
ஊடல் உலகப்போர்...
விரல் கோர்த்து விரகாக
தீஞ்சுடர் துணையாக
விளையாடி மகிழ்ந்தோடி
கண்களின் மொழிகொண்டு
காதலைப் பகிர்ந்தோமடி...
மின்னல் போல் வந்த
இன்னலின் ஊடலினை
மத்தாப்பு பொறிபோல
கரம் கொண்டு பிடியாக்கி...
சருகான இலைமாறி
உருவான தோற்றத்தில்
திசைதெரியா நகர்ந்தோமடி...
கண் கொண்ட காதலை
காற்றலையில் சிதற விட்டு...
கரம் காத்த அன்புதனை
ஆணவமாய் பரக்க விட்டு...
இரத்தமும் யுத்தமும்
மனப்போரில் மாண்டுகொண்டு
நித்தமும் தனிமைகளை
துணையாக்கி கொண்டோமடி..
ஒளிர்கின்ற பிறைநிலா
மேகத்தில் மறைந்தாலும்
பிரிவுகள் சில நேரமே...
எண்ணற்ற காதலை
எண்ணுள்ளே வைத்துவிட்ட
நீயும் என் நிலாப் பெண்ணே...
ஊடலெனும் ஊடகத்தில்
நாளும் உந்தன் நாடகத்தில்
நாயகன் நான்தானடி..
என் உள்ளத்தின் உய்வுதனை
உதடுகள் உறைக்காமலும்..
மறைக்காத மனமென்றும்..
மாயவளே உன் வசம் தானடி..
உன் மந்திரக்கண்கள்
பலமுறை என்னை
பார்க்காமல் நகர்ந்தும்
வார்த்தைகள் தினறுதடி...
உன் வலிதனைச் சொல்லுதடி..
கண்கள் தழுவிய ஈரத்தில்
என்றும் காதல்கள் கரையாதடி..
ஓங்கி வரும் ஆழிப்பேரலை
ஆங்காங்கே கொட்டாதடி..
அன்புற்ற மனமோதலும்
குறும்புகளின் சினுசினுப்பும்
கொஞ்சலில் வஞ்சனையும்
நம் அணைக்காதலில் மூழ்குமடி...
இதழ் உதிர்ந்த பூவும்
கிளையுடைந்த மரமும்
சிறகிழந்த பறவையும்
அழகெனத் தோன்றினால்
நானும் அழுகுதானடி...
இது உன்
பிரிவு தந்த பரிசுதானடி..
இறந்த காலத்தில்
இழந்த காதலை
எதிர்த்து மீட்போமடி...
ஊடல் போரில்
காதல் படைகொண்டு
கழகம் அமைப்போமடி..
வரும் காதல்காலத்தில்
வாழ்க்கை பாடத்தில்
வரலாறு படைப்போமடி...
ஜே...
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro