Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

பெண் பார்க்கும் படலம்

அமீன் குழப்பமாகவே இருந்தது. அவர் தன் மகன் ஆபித்க்கு பல இடங்களில் பெண் தேடினார். கண்ணுக்கும், மனதுக்கும் பிடித்தாற்போல் எதுவும் அமையவில்லை. அலைந்து திரிந்து கடைசியில் பக்கத்து கிராமத்தில் வசிக்கும் பாசில் என்பவரின் மகள் ஸீனா  போய் பார்த்தார். குறை சொல்ல முடியாது அளவுக்கு அழகாகவும், குணவதியாகவும் தெரிந்தாள். பட்டப்படிப்பு முடிந்ததிருக்கிறாள். ஆபித்க்கு நல்ல ஜோடிப்பொருத்தமாகவே தோன்றினாள். அவள் குடும்பத்தை சேர்ந்தவர்கள் அனைவரும் அன்பாகவும், இயல்பாகவும் பேசினார்கள். அதிலும் பெண்ணின் தந்தை முபஷ்ஷிர் மிகவும் வெளிப்படையாகவே பேசினார்.

"எனக்கு மூணு பொண்ணுங்க. பூர்வீக நிலம் எதுவும் கிடையாது. இப்ப நாங் குடியிருக்கிறது சொந்த வீடு. அது மட்டும் தான் எங்கள் சொத்து. என் ஒருத்தனோட சம்பாத்தியத்தில் தான் குடும்பம் ஓடுது. கொஞ்சம் சேமிப்பு இருக்கு. மாச சீட்டு கட்டிட்டு வர்றேன். இருக்கிறதை பகிர்ந்து மூணு பெண்ணுங்களுக்கும் செய்யணும். அதிகபட்சம் 10 பவுன் போடுவேன். சம்மதம்ன்னா மேற்கொண்டு பேசாம்" என்றார்.

தேங்காய் உடைத்தாற் போல் பட்டென்று பேசியது அமீன்க்கு பிடித்திருந்தது.

  "எனக்கு சம்மதம் தான். பொண்ணோட போட்டோ கொடுங்க. நான் பையன்கிட்டே காட்டுறேன். அவன் சரின்னு சொல்லிட்டா ஒரு நல்ல நாள் பார்த்து குடும்பத்தோட பெண் பார்க்க வர்றேம்" என்றார் அமீன்.
 

பெண்ணோட போட்டோவை பார்த்து விட்டு ஆபித்  சம்மதம் சொன்னான்.

"ஞாயிற்றுக்கிழமை எல்லாரும் சவுகரியமாக இருக்கும். அன்னைக்கு வர்றதா சொல்லிடுங்கப்பா. ஃபோன்ல சொல்ல வேண்டாம். நேர்ல போய் பார்த்து தகவல் சொல்லுங்க" என்றான்.

"சரிப்பா"

"நம்ம வீட்டு சார்பா 5 பேர் போனா போதும்பா.. அதிக கூட்டம் சேர்க்க வேண்டாம்." என்றான் ஆபித்.

"சரிப்பா" என்றவர்.

  மறுநாள் காலையில் ஷேர் ஆட்டோ பிடித்து கிளம்பி அந்த கிராமத்திற்கு சென்றடைந்தார்.

  காலை 8  மணியை கடந்த பின்னரும் குளிர் இன்னும் மீதமிருந்தது. டவுனுக்கு நிகரான நாகரான நாகரிக வளத்தோடு இருந்த அந்த கிராமத்தில் இருந்து சற்று தள்ளி முபஷ்ஷிர் வீடு இருந்தது. அங்கே போனால் டீ, காபி ஏதாவது கொடுப்பார்கள் என்றாலும் குளிருக்கு இதமாக ஒரு டீ குடிக்க தோன்றியது,  அமீன். டீக்கடைக்கு சென்றார். கடையில் டீ பருகிக் கொண்டிருந்த அனைவருடைய பார்வையும் புதியதாய் தோன்றிய  அமீன் மீது படிந்து. அதில் ஒருவர், "யார் நீங்க.. புதுசா இருக்கே?" என்று கேட்டார்.

"நான் டவுன்லேருந்து வர்றேன். இங்கே முபஷ்ஷிர் , பொண்ணையா பார்த்திருக்கீங்க" என்று பேச்சுக் கொடுத்த படியே அமீன் டன் நடக்க தொடங்கினார்.

"ஆமாம்... ஏன்? என்று அமீன் சற்று தயங்கி தயங்கி அவர் முகத்தை பார்த்தார்.

"உங்க பையன் என்ன வேலை செய்கிறார்'' என்று கேட்டார் உடன் வந்தவர்.

  "வாங்கில உதவி மேனேஜர் இருக்கான். ஏன் கேக்குறீங்க?"
   "நல்ல வேலையில் இருக்கிற பையனுக்கு அதே போல் வேலையில் இருக்கிற பெண்ணாய் பார்த்தால் தானே சரியா இருக்கும்.."

   "நீங்க என்ன சொல்றீங்க?" குழுப்பமாய் கேட்டார், அமீன்.

   "இந்த காலத்துல கணவன், மனைவி ரெண்டு பேரும் வேலைக்குப் போறவங்களா இருந்தால்தானே குடும்பத்தை சமாளிக்க முடியும்.. நீங்க என்ன சொல்றீங்க" என்றார்.

  "வாஸ்தவம் தான்... அந்த மாதிரி பெண் கிடைக்கணுமே" என்றார், அமீன்.

  "நீங்க ஏன் கவலைப்படுறீங்க ? நம்ம சொந்தத்துலேயே அப்படிப்பட்ட பெண் இருக்கு. இவ்வளவு ஏன்..? என் பொண்ணையே எடுத்துக்குங்க.. கம்ப்யூட்டர் படிப்பு முடிச்சுட்டு மாதம் 30,000 சம்பளம் வாங்குறா.. வந்து பாருங்க.. பிடிச்சிருந்தா பேசலாம்.

  உடன் வந்தவரின் தடாலடி பேச்சு அமீன் குழப்பியது. "இப்ப பார்த்திருக்கிற முபஷ்ஷிர்  பெண் கூட பட்டப்படிப்பு படிச்சிருக்கே. வேலைக்கு முயற்சி செஞ்சா கிடைக்கும்ல" என்றார், அமீன்.

  "இந்த காலத்துல வேலை கிடைக்குறது குதிரைக் கொம்புங்க.. என்னோட பெண் வேலைக்கு போய் சம்பாதிக்கிறாளே.. அதை பாருங்க"

  "உங்களோட சொந்த பொண்ணா?"

  "சொந்தப் பெண் போலத்தான். என் அண்ணனோட மகள். நீங்க பார்த்து இருக்கிற பெண்ணை விட அழகா, லட்சணமா இருப்பா.. ஒரே பொண்ணு. நீங்க எதிர்பார்க்கறதை விட அதிகமாகவே சீர்வரிசை செய்வாங்க" என்றார் , அவர்.

  அமீன்க்கு குழப்பமாகவும், தர்ம சங்கடமாகவும் போய் விட்டது. சற்று நேரம் யோசித்தவர் "என் பையனை கேட்டுத் தான் முடிவெடுக்கணும்" என்றார்.

  "தாராளமா கேளுங்க. உங்க பையன் என்ன சொல்லப்போறார் ? அவருக்கும் இந்த மாதிரி பெண்ணைத்தான் பிடிக்கும்" என்றார், அவர்.

  அமீன் ஏற்கனவே பார்த்திருந்த பெண்ணின் வீட்டுக்கு  செல்வதை கைவிட்டு விட்டு, ஒரு ஆட்டோ பிடித்து வீட்டிற்கு திரும்பினார். வழி நெடுக அவரது சிந்தனை சிதறி ஓடியது‌

  'அவர் சொல்றதும் சரிதானே.. நல்ல வேலையும் சம்பளமும் கூடவே நல்ல அழகும் இருக்கிற பெண் அமைவது அதிர்ஷ்டமாச்சே' என்று எண்ணினார்.

   மாலையில் ஆபித் அலுவலகத்தில் இருந்து வீடு திரும்பியதும் நடந்து விஷயங்கள் அனைத்தையும் சொன்னார்.

  சிறிது நேர யோசனைக்கு பிறகு, "வேண்டாம்பா ! ஒரு பொண்ணை பார்த்துட்டு அவளை பற்றி ஊர்லயே மத்தவங்கிட்ட விசாரிக்கிறபோது எல்லோருமே நல்லவிதமாகதான் சொல்வாங்க. நீங்க யாருக்கிட்டேயும் விசாரிக்க கூட இல்லை. அவரா வந்து, 'என்னோட  பொண்ணு அழகா இருக்கா. வேலையில் இருக்கா. நல்ல சம்பளம், சம்பந்தம் பேசலாமான்னு கேட்டா, அது சுயநலம் தானே. நீங்க முபஷ்ஷிர் பெண்ணை பார்த்து வந்ததும் இந்த ஆள் நம்மளை பத்தி விசாரிக்கலை. நம்ம மேல இருக்கிற நம்பிக்கையில் பொண்ணை கட்டித்தர சம்மதிச்சிருக்காரு. அதனாலே முதல்ல பார்த்த பொண்ணையே பேசி முடிச்சிடுங்கப்பா" என்று தீர்மானமாக சொன்னான்.

  இந்த விஷயம் முபஷ்ஷிர்க்கு  தெரியவர மனம் நெகிழ்ந்து போனார். அவர் மனதில் ஆபித் கோபுரமாக உயர்ந்து நின்றான். அவனும் மறுநாளே முபஷ்ஷிர் பேச்சும், சுபாவமும் ஸீனாவுக்கு பிடித்து போனது. 'இப்படியொரு மாப்பிள்ளை என் பொண்ணுக்கு கிடைக்க நாங்க கொடுத்து வெச்சிருக்கணும் ' என்று முபஷ்ஷிர் பெருமிதம் கொண்டார்.

 

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro