Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

💞 38 💞

யிருக்கு ஆபத்தான நிலையில் போராடிக் கொண்டிருந்தாள் , ஷாஜிதா. கத்திக்குத்துப் பட்டத்தில் , இரத்தம் அதிகமாக வழிந்துக் கொண்டிருந்தது.

"டாக்டர் , இப்ப உடனே இரத்தம் வேணும். இல்லன்னா patient'யை காப்பாத முடியாது " என ஒரு மருத்துவர் கூறியதும் , "ஓகே நாம டிரை பண்ணலாம் "  என அப்பாஸ் வேகமாக வெளியே வந்தான்.

அப்பாஸ் வெளியே வருவதை உணர்ந்த சமீர் ,  "டேய் என் ஷாஜி எப்படி டா இருக்கா? நான் போய் பார்க்கலாமா? "  என கண்கள் கலங்க கேட்டவனிடம் ,  " இல்ல டா இன்னும் முடியலை. ஆனா உயிருக்கு ஆபத்தில்லை. கவலைப்படாத... " என அப்பாஸ் ஆறுதலாக பேசிவிட்டு , யூசுபை தனியே வரச் சொல்ல , அவனும் சமீருக்குத் தெரியாமல் அப்பாஸ் அருகில் சென்றான்.

"சொல்லுடா! " - யூசுப்

"அல்ஹம்துலில்லாஹ், கத்தி ஷாஜிதாவோட கர்ப்பப்பையை தாக்காம இருந்தவரைக்கும் க்ஹைர். ஆனா கத்தி ரொம்ப ஆழமா பட்டதால இரத்தம் அதிகமா போய்டுச்சு... இரத்தம் இன்னும் தேவைப்படுது. இரத்தம் வந்தா மட்டும் தான் அடுத்து எதுவுமே பண்ண முடியும். ஷாஜிதாவோட இரத்தம் O-ve. யார்கிட்டயாவது கேளு. நானும் பிளட் பேங்க் ல இருக்கான்னு பார்க்கிறேன்... " என வேகமாக கூறிவிட்டு அங்கிருந்து நகர்ந்தான்.

யூசுப் , அடுத்து என்ன செய்ய என யோசித்தவன் , தன் இணையதளத்தில், இரத்தம் தேவைப்படுகிறது என தகவல் போட்டான்.

அதேபோல், தனக்கு தெரிந்த நண்பர்களை அழைத்து விசாரிக்க , யாருக்கும் அந்த இரத்த வகை இல்லை என்றுவிட்டனர்.

அங்கே , சமீர் சிகிச்சை அறையில் இருந்த ஷாஜிதாவையே பார்த்துக் கொண்டிருந்தான். சமீர் , இதழ்கள் 'ஷாஜி ஷாஜி ' என முணுமுணுத்துக் கொண்டே தன் உயிரின் பாதியை ஏக்கமாக பார்த்துக் கொண்டிருந்தான்.

ஃபீஸ் மற்றும் சூரஜ் விபத்து நடந்த இடத்திற்கு விரைந்துச் சென்றனர். இருவரும் அங்கிருந்த கடைக்குள் நுழைந்தனர்.

அந்தக் கடை உரிமையாளரை சந்தித்தனர். "ஸார், என் பெயர் சூரஜ் இவன் பெயர் நஃபீஸ் நாங்க ரெண்டு பேரும் காவல் அதிகாரி இது எங்களோட அடையாள அட்டை...இப்ப நடந்த சம்பவத்தை நடத்தின அந்தக் கொலைக்காரனை கண்டுப்பிடிக்கனும். அதனால, உங்க கடையோட கண்காணிப்பு கேமரா பார்க்கனும்... " என சூரஜ் கூறியதும் ,  "கண்டிப்பா பார்க்கலாம்... வாங்க "  என அவர் அழைத்துச் சென்று கண்காணிப்பு கேமராவை காட்டினார்.

அதில், சமீரை குத்த வந்தவன் யார்? என கவனமாகப் பார்க்க , அவனோ கைகுட்டையால் தன் முகத்தை மறைத்திருந்தான்.

நஃபீஸ் , " டேய்! என்னடா இவன் முகத்தை மூடி இருக்கான். ச்சை.... " என எரிச்சலடைந்தான்.

சூரஜ் ,  "டேய் ! கொஞ்சம் பொறு டா " என்றவன் , கடை உரிமையாளரிடம் , " ஸார் , இந்த வீடியோவை எனக்கு இந்த பென் டிரைவ்ல ஏத்தி தரமுடியுமா? " என பணிவாக கேட்டதும் ,  "ம் கண்டிப்பா  ஸார் " என கூறியவர், அதை செய்தும் கொடுக்க ,  "ரொம்ப நன்றி ஸார். நாங்க இதை என்னிக்குமே மறக்க மாட்டோம்.. " என சூரஜ் கூறியதும் , " பரவாயில்லை ஸார் இதில என்ன இருக்கு. " என கூறிவிட , இருவரும் அவரிடம் கூறிவிட்டு விடைபெற்றனர்.

"சரி டா வா நாம ஹாஸ்பிட்டலுக்கு போவோம். அங்கே ஷாஜிதா எந்த நிலையில் இருக்காள் தெரியலை "  - சூரஜ்

"ம் " - நஃபீஸ்

"டேய்! என்னாச்சு ? "  - சூரஜ்

"சமீரை காப்பாற்ற ஷாஜிதா இந்தளவுக்கு துணிவாள்ன்னு எதிர்பார்க்கலை டா. மனசுல இவ்வளவு காதலை வைச்சிட்டு எதுக்கு டா மறைக்கனும்? " - நஃபீஸ்

"அவள் நிலையில இருந்து யோசிச்சு பாருடா. இனி அவளே விலகனும் நினைச்சாலும் , முடியாது டா. " - சூரஜ்

"ம்... சரி நாம நம்ம வேலையை பார்க்கலாம் வா " - நஃபீஸ்

"ம்... வா நாம முதல்ல அவனை கண்டுப்பிடிக்கனும் " என சூரஜ் கூறியதும் , "எஸ்பி ஆபீஸ்க்கு விடு வண்டியை. இதை முதல்ல திவ்யசாந்தி மேம் கிட்ட காட்டனும் "  என நஃபீஸ் வண்டியில் அமர்ந்தவாறு கூறினான். இருவரும் எஸ்பி ஆபீஸ்க்கு விரைந்தனர்.

அங்கே திவ்யசாந்தியிடம் இதனை ஒப்படைத்து , "மேம் நாங்க ஷாஜிதாவை பார்த்துட்டு அப்படியே இந்த வழக்கை விசாரிக்கத் தொடங்கிடுறோம் " என நஃபீஸ் கூறியதும்,  "நீங்க எல்லாரும் ஹாஸ்பிட்டலுக்கு ஷாஜிதாவுக்கு பாதுகாப்பு கொடுங்க. இந்தக் கேஸை நான் எடுத்து நடத்துறேன் " என திவ்யசாந்தி கூறியதும் ,  "மே..ம் "  என இருவரும் தயங்க, "சொல்றதை மட்டும் செய்ங்க! " என கூறிவிட்டு தன் அலைபேசியை எடுத்து, " சார்லஸ், நீ எங்கே இருந்தாலும் சரி இன்னும் அஞ்சு நிமிசத்துல என்னோட இடத்தில இருக்கனும் " என கோபமான குரலில் கூறுவதைக் கேட்டு , நஃபீஸ் மற்றும் சூரஜ் பயந்து அந்த இடத்தை காலி செய்தனர்.

கிட்டத்தட்ட ஒரு மணி நேரமாக இரத்தம் கிடைக்காமல் தவித்துக் கொண்டிருந்தார்கள்.

சமீரின் குடும்பம் இருபது நிமிடத்தில் வந்து சேர்ந்தனர்.  வெளியில் இருந்தபடி , உள்ளே உயிருக்கு போராடிக் கொண்டிருந்த ஷாஜிதாவை பார்த்த அஸ்மாவின் மனம் பதறியது.

பித்துப் பிடித்தவன் போல் நின்றிருந்த தன் மகன் சமீர் அருகில் சென்ற , அஸ்மா , " டே..ய் ! கண்ணா இப்படி வந்து உட்காரு டா " என வாஞ்சையாய் கூற , "அம்ம்ம்மா... " என கதறிய  சமீர் , "எ...என் ஷாஜி ம்மா... என் ஷாஜியை எழுந்து வர சொல்லுங்க ம்மா. எனக்கு என் ஷாஜி வேணும் ம்மா.  ஷாஜி இல்லாம என்னால வாழவே முடியாது ம்மா.. எனக்கு வர வேண்டிய கத்திக்குத்தை அவள் வாங்கிட்டு இப்படி கிடைக்கிறாள் ம்மா.. எனக்கு என் ஷாஜி வேணும் ம்மா.. அவள் தான் ம்மா என் உயிர். வர சொல்லுங்க ம்மா.. வர சொல்லுங்க ம்மா.. " என கண்ணீருடன் கதறினான், ஷாஜிதாவின் கண்ணாளன்.

இதுவரை எதற்கும் கலங்காத அந்த ஆறடி ஆண்மகன், மொத்தமாக கலங்கி நின்றான். எப்போதும், கம்பீரமாக இருப்பவன் , அதை இழந்து நின்றான்.

"சமீர், ஷாஜிக்கு ஒன்னுமில்ல. நீ இப்படி வந்து உட்காரு " என அம்மா அஸ்மா அன்பாக கூறியும் சமீர் அந்த இடத்திலே நின்றிருந்தான்.

"சமீர் , உன் ஷாஜி உன்கிட்ட வந்து சேருவா டா. அல்லாஹ் காப்பாத்துவான்.  நீ முதல்ல தைரியமா இருடா. நீயே இப்படி இருந்தா என்னாகுறது? " என லத்தீப் ஆறுதலாக பேசியும் எந்தப் பயனும் இல்லை. சமீர் அந்த இடத்திலே நின்றிருந்திருந்தான்.

யார் சொல்லியும் கேட்ட பாடில்லை சமீர். 'ஷாஜி ஷாஜி ' என சமீரின் இதழ்கள் அனிச்சையாக முணுமுணுத்துக் கொண்டே, உள்ளிருந்த ஷாஜிதாவை ஏக்கமாக பார்த்துக் கொண்டிருந்ததான்.

அதற்கு மேல் யாரும் எதுவும் பேசாமல் சமீரை அப்படியே விட்டு விட்டனர். லத்தீப் , யோசித்து தீர்க்கமாக ஒரு முடிவை எடுத்து , தன் மனைவி அஸ்மாவையும் , யாசரையும் செய்கையில் தனியே அழைக்க , இருவரும் லத்தீப் பின் சென்றனர்.

அந்த இடத்தில் இருந்து சற்று தள்ளி வந்த லத்தீப் நின்றார். லத்தீப் அருகில் வந்த யாசர் ,  "என்ன விஷயம் மாமா? " என கேட்டதும் , இருவரையும் ஒரு நிமிடம் பார்த்தார்.

"என்னங்க ஏதோ சொல்லனும் நினைக்கிறீங்க? ஆனா தயங்குறீங்க! என்னன்னு சொல்லுங்க "  என அஸ்மா கேட்டதும் , "ஷாஜிதா, கண்முழிச்ச அடுத்த நாள் சமீருக்கும் ஷாஜிதாவுக்கும் நிக்காஹ் நடக்கனும். இதுக்கு மேல இவங்க பிரிஞ்சு இருக்கிறது நல்லதில்லை. ரெண்டு பேரும் ஒருத்தர் மேல ஒருத்தர் உயிரே வைச்சிருக்காங்க. ஆக வேண்டிய வேலையை பார்க்கனும். யாசர் , நீ உங்க வீட்டுக்குப் போய் மெஹ்ராஜ் கிட்ட விஷயத்தை சொல்லி உடனே அழைச்சிட்டு வா. நான் போய் பள்ளிவாசல்ல நிக்காஹ் நடக்கிறதுக்கான வேலையை பார்க்கிறேன். அஸ்மா, நீ முஸ்கானை அழைச்சிட்டு கடைக்கு போய் எல்லாருக்கும் தேவையான துணி, முக்கியமா நம்ம மகனுக்கும் மருமகளுக்கும் துணி , நகை எல்லாம் வாங்கிட்டு வா. மீதி பேர் இங்கேயே இருக்கட்டும்... "  - லத்தீப்

"ஏங்க என்னங்க இது? தீடிருன்னு சொன்னா எப்படி? ஷாஜிதா எப்ப கண்ணு முழிப்பாள்ன்னு தெரியலை? ஷாஜிதா சமீர் கிட்ட சம்மதம் வாங்கனும். இதெல்லாம் இல்லாம எப்படி? "  - அஸ்மா

"இல்ல அஸ்மா , பேசி சம்மதம் வாங்கனும். அவங்க ரெண்டு பேரும் சம்மதிச்சாலும் சம்மதிக்கலை அப்படினாலும் இந்த நிக்காஹ் நடக்கும் " என தெளிவாக லத்தீப் கூறியதும் , அஸ்மாவால் மறுக்க முடியவில்லை. சற்று திரும்பி தன் மகனையும் உள்ளே உயிருக்கு போராடி கொண்டிருக்கும் ஷாஜிதாவையும் பார்க்க , அஸ்மா , உடனே சம்மதித்தார்.

"மாமா, நீங்க சொல்றது தான் சரி. நாம நடக்க வேண்டியதை பார்க்கலாம்" - யாசர்

"சரி. அதுக்கு முன்ன நாம யூசுபை பார்த்துட்டு போலாம் " என யூசுபை தேடிச் சென்றனர் ,மூவரும்.

அப்பாஸ் , " டேய்! இரத்தம் கிடைக்கவே மாட்டேன்து டா ! இரத்தம் கிடைத்தா தான் அடுத்து ஆக வேண்டியதை பார்க்க முடியும்..." என யூசுபை பார்த்தான்.

"நானும் எல்லா வலைதளத்திலும் போட்டேன். அதுக்கும் பதில் இல்லை. " - யூசுப்.

"அல்லாஹ்வே கொஞ்சம் இரக்கம் காட்டேன்... இந்த சின்ன பிள்ளை என்ன செய்தா? இந்த பொண்ணு மேல உனக்கு இரக்கமே வராதா அல்லாஹ்.. அவ பாவம்.. " என கண்ணீர்விட்டு அல்லாஹ்விடம் பேசிக் கொண்டே வேகமாக குறுக்கும் நெடுக்குமாக நடந்துக் கொண்டிருந்தான், அப்பாஸ்.

அப்போது , "எஸ்கீயூஸ் மீ! " என ஒருவன் அழைக்க , "எஸ் " என அவன் புறம் திரும்பிய யூசுப் , " என்ன ? " என்பது போல் பார்த்தான்.

அவன் , " என் பெயர் பைசூர் ரஹ்மான் (Faizur Rahman), O-ve இரத்தம் தேவைன்னு மீடியா ல பார்த்தேன்... " என கூறியதும் , "அல்ஹம்துலில்லாஹ். வாங்க சீக்கிரம் " என அப்பாஸ் , பைசூர் ரஹ்மான்யை இழுத்துக் கொண்டு விரைந்தான்.

அங்கிருந்தவர்களை நோக்கிய அப்பாஸ் , "அல்ஹம்துலில்லாஹ், இரத்தம் கிடைச்சிடுச்சு. இனி எந்த கவலையும் பயமும் வேண்டாம். ஷாஜிதாவை காப்பாத்திடலாம்." என கூறிவிட்டு வேகமாக சிகிச்சை அறையை திறத்துக் கொண்டு உள்ளே நுழைந்தான்.

'ஷாஜிதா' என்ற பெயரை கேட்டதும், இருபது வருடங்களுக்கு முன், அவன் தாத்தா அவனுடைய தங்கை பிறந்ததும் 'ஷாஜிதா' என்ற பெயரை சூட்டிய சம்பவம் பைசூர் ரஹ்மானின் கண்களில் காட்சியாக வந்துச் செல்ல, அப்படியே அந்த இடத்தில் நின்று விட்டான்.

உள்ளிருந்து வந்த செவிலிய பெண்மணி , பைசூர் ரஹ்மானை அடையாளம் கண்டுக் கொண்டு , "ஹலோ ஸார் , சீக்கிரம் " என கூறியதும் , "ம்ம்ம் " என தலையசைத்த பைசூர் ரஹ்மான் , தன் கண்களை துடைத்துக் கொண்டு செவிலியர் உடன் சென்றான்.

லத்தீப் , " யூசுப் , இங்க ஒரு நிமிஷம் வா. பேசனும் "  என யூசுபை அழைத்தார்.

லத்தீப் அருகில் வந்த யூசுப் , " சொல்லுங்க ப்பா "  என்றவுடன் , முழு விஷயத்தையும் கூறியதும் ,  சிறிது நேரம் யோசித்த யூசுப் , "நீங்க சொல்றது சரிதான் ப்பா ,   ஷாஜிதாவை இதுக்கும் மேல தனியா விடக்கூடாது. அவளுக்கு ஒரு பாதுகாப்புத் தேவை. கணவனா சமீர் இருந்து பாதுகாக்கிறது தான் சரி. நீங்க ஆக வேண்டியதை பாருங்க. நான் எல்லார் கிட்டயும் சொல்லிடுறேன். " என்றவுடன், "அல்ஹம்துலில்லாஹ் யூசுப் நான் போய்ட்டு வரேன். " என ஸலாம் வைத்து விட்டு அங்கிருந்து நகர்ந்தார்.

அகிலன், முபாரக் , முஷினா , முஸ்கான் மற்றும் ஃபிர்தவுஸிடம் , யாசர் விஷயத்தை கூறியதும் , " இதை முதல்ல அத்த கிட்டயும் அம்ரீன் கிட்டயும் சொல்லனும் ரொம்ப சந்தோஷப்படுறாங்க " என ஃபிர்தவுஸ் கூறியதும் , அகிலன் , " வேணாமா இப்ப இருக்கிற நிலையில இந்த விஷயத்தை யாருக்கும் தெரியப்படுத்த வேண்டாம் " என அவசரமாக தடுத்ததும் , "அதுவும் சரிதான் " என ஃபிர்தவுஸ் புரிந்துக் கொண்டு அமைதியாகினாள்.

யூசுப் , பைசூர் ரஹ்மானை காண சென்று விட்டான். முபாரக் , தன் வீட்டில் சொல்லி விட்டு வருவதாக கிளம்பி விட்டான். அஸ்மா , முஸ்கானை அழைத்துக் கொண்டு கடைக்குக் கிளம்பினார்.

யாசர் , தன் குடும்பத்தை அழைத்து வர சென்றான். சமீருடன் , அகிலன் மற்றும் அவன் அக்கா முஷினா இருந்தனர்.

இரத்தம் கொடுத்துவிட்டு வெளியே வந்தான் , பைசூர் ரஹ்மான். அங்கேயே அமர வைத்து உணவு கொடுத்தனர்.

கிட்டத்தட்ட இரண்டு மணி நேர தீவிர சிகிச்சைக்குப் பின் , வெற்றிகரமாக ஷாஜிதாவின் உயிரை காப்பாற்றி விட்டார்கள்.

மலர்ந்த முகத்துடன் வெளியே வந்த  அப்பாஸ் , வெறும் ஜடமாக நின்றிருந்த சமீர் அருகில் வந்து , " சமீர் " என அழைத்ததும், சமீர் ஏக்கமாக அவனைப் பார்த்தான்.

"சமீர் , அல்லாஹ் உன் ஷாஜியை உன்கிட்டயே திருப்பிக் கொடுத்தாட்டான். " என அப்பாஸ் கூறியதை கேட்ட சமீர் , "உ...உண்மையா எ..என் ஷாஜி உயிர் பிழைச்சிட்டாளா? என் ஷாஜி என்கிட்டயே வந்துட்டாளா!" என குழந்தை போல் கேட்டதும் , "ஆமா. ஷாஜிதாவை காப்பாத்திட்டோம் அல்லாஹ்வோட உதவியால. ஆனா அவள் கண்ணு முழிக்க இன்னும் பன்னிரண்டு மணிநேரம் ஆகும் அதுவரைக்கும் காத்திரு.. அப்பறம் சரியான நேரத்திற்கு வந்து இரத்தம் கொடுத்த , Mr. Faizur Rahman கிட்ட அப்படியே உன் நன்றியும் சொல்லிடு. " என அப்பாஸ் புன்னகையுடன் கூறியதும் , அவனை அணைத்துக் கொண்டு கண்ணீர் விட்டான் சமீர்.

அப்போது , யூசுப்  பைசூர் ரஹ்மானை அழைத்துக் கொண்டு வந்தான்.

"சமீர் , இவர் தான் நம்ம ஷாஜிதாவுக்கு இரத்தம் கொடுத்தவர். பெயர்... " என யூசுப் கூறுவதற்குள் , " பைசூர் ரஹ்மான் " என்றதும் யூசுப் , அப்பாஸ் மற்றும் ஃபிர்தவுஸ் மூவரும் பைசூர் ரஹ்மானை அதிர்வாக பார்த்தனர்.

சமீர் , "ரொம்ப தேங்க்ஸ் " என கண்கள் கலங்க, "அல்லாஹூ! என்ன ஸார் இது? ஒரு உயிரை காப்பாற்ற சந்தர்பத்தை அல்லாஹ் எனக்கு கொடுத்திருக்கான். இதில நன்றி சொல்றதுக்கு ஒன்னுமில்ல. எல்லா நன்றியும் அல்லாஹ்வுக்கு போய் சேர வேண்டியது " என பைசூர் ரஹ்மான் கூறியதும் , நன்றி கலந்த பார்வையுடன் அவனை பார்த்தான் சமீர்.

இவர்கள் மூவரையும் கவனித்த முஷினா , "ஏய் ஃபிர்தவுஸ்! யூசுப், அப்பாஸ்" என  அழைத்ததும் , பைசூர் ரஹ்மானின் மனம் , இருபது வருடங்களுக்கு முன் சென்றது.

நான்கு பேர் மனதிலும் ஒருசில குழப்பங்கள் தோன்றிட , அதை எல்லாம் அடக்கி விட்டு , முஷினா அழைப்பிற்கு செவி மடுத்தார்கள்.

அதன்பின் , சமீர் மற்றும் அப்பாஸிடம் பொறுமையாக அகிலன், அனைத்தையும் கூறியதும் , சமீர் அமைதியாக திருமணத்திற்கு சம்மதித்தான்.

முஷினா , தன் அப்பா அம்மாவிற்கு அலைபேசி மூலம் ஷாஜிதா உயிர் பிழைத்த விஷயத்தை கூற, இருவரும் மகிழ்ந்தனர்.

முஷினா , "அப்பாஸ் , ஷாஜிதாவை எப்ப நாம வீட்டுக்கு அழைச்சிட்டு போலாம்? "

"திங்கட்கிழமை அழைச்சிட்டு போய்டலாம். ஆனா பத்திரமா பார்த்துக்கனும். டேய் சமீர், இனி ஷாஜிதாவை நீதான் பத்திரமா பார்த்துக்கனும். சரியா " - அப்பாஸ்

"இன் ஷா அல்லாஹ்! கண்டிப்பா. என் ஷாஜியை என் கண்ணுக்குள்ள வைச்சி பாத்துப்பேன்." - சமீர்.
"ம் அல்ஹம்துலில்லாஹ்." - அப்பாஸ்

" அப்பறம் சமீர் , ஃபிர்தவுஸ் , அப்பாஸ் , அக்கா , அகிலா உங்க எல்லார் கிட்டயும் ஒரு முக்கியமான விஷயம் சொல்லனும். ஆங் பைசூர் நீங்களும் தான். இங்கேயே இருங்க" - யூசுப்

"என்ன டா? " - முஷினா

"ம்ம்ம் சொல்றேன் "  என யூசுப் பைசூர் ரஹ்மான் அருகில் சென்றான்.

அந்த நேரம் நஃபீஸ் மற்றும் சூரஜ் அந்த இடத்திற்கு வந்தனர்.  அவர்களிடம் பிறகு சொல்லிக்கலாம் , என விட்ட பேச்சை தொடங்கினார்கள்.

"பைசூர் , இப்ப நீங்க எங்க தங்க போறீங்க? "  - யூசுப்.

"தெரியலை. இனிமே தான்  தங்குறதுக்கு இடம் தேடனும் " - பைசூர் ரஹ்மான்

"இது உங்க சொந்த ஊரு இல்லையா? " - அப்பாஸ்

"இருபது வருஷத்துக்கு முன்ன இந்த ஊருல இருந்து நான் காணாம போய்ட்டேன். யார்கிட்ட உதவி கேட்கிறதுன்னு தெரியலை " -  பைசூர் ரஹ்மான்

"அதுக்கு தானே நாங்க இருக்கோம் ! என்ன உதவி செய்யனும்? " என நஃபீஸ் கூறியதும் , தயங்கினான் பைசூர் ரஹ்மான்.

"உங்களோட நண்பர்கள் நாங்க சொல்லுங்க. நாங்க உதவுறோம் " என அகிலன் நம்பிக்கை தந்தான்.

"அ..அது வந்து , என் அம்மா பெயர் மும்தாஜ் , என் அப்பா பெயர் ஹசன். என் தாத்தா பெயர் ரியாஸ். அவர் ஹஜ்ரத். பாட்டி பெயர் மைமூன். அதையும் தாண்டி இன்னும் சில உறவுகள் இருக்காங்க ஆனா அவங்க பெயர் எல்லாம் என் நியாபகத்தில இல்ல. எனக்கு அப்ப ஐந்து வயது. அன்னிக்கி எங்க அம்மாவுக்கு பிரசவ வலி வந்துடுச்சு சொல்லி அவங்களை ஹாஸ்பிடலில் சேர்த்திருந்தாங்க. நான் ஸ்கூல் முடிஞ்சு வந்து பார்க்கும் போது எங்க தாத்தா கையில ஒரு குழந்தை இருந்துச்சு. அவளை என்கிட்ட காட்டி, ' இவள் தான் உன் தங்கச்சி , இப்ப தான் இந்த உலகத்தை பார்த்திருக்கா. நீதான் இவளை பத்திரமா பார்த்துக்கனும்.' சொல்லி தாத்தா என் தங்கச்சி காதுல  'ஷாஜிதா ' அழைச்சு பெயர் வைச்சாங்க. எனக்கு ரெஸ்ட் ரூம் வந்துச்சு சொல்லி நான் போன அப்ப , என்னே கடத்திட்டாங்க. எங்க அழைச்சிட்டு போறாங்க கூட தெரியலை. அப்ப ஒரு விபத்து நடந்துது அதில வந்தவங்க எல்லாரும் இறந்துட்டாங்க , நான் மட்டும் உயிருக்கு போராடிட்டு இருந்தேன். அப்ப அந்த வழியா வந்த , ஒரு பாதர் ( Father) டேவிட், என்னே தூக்கிட்டு போய் ஹாஸ்பிடலில் அட்மிட் பண்ணி , என்னே காப்பாற்றினாரு. அவரு என் கழுத்தில இருந்த செயின்ல என் அப்பா அம்மா போட்டோ பார்த்து நான் முஸ்லிம் தெரிஞ்சிக்கிட்டு , என்னே இஸ்லாமிய வழி படியே வாழ வைச்சாரு. நான் சொல்லுவேன் என் ஊருக்கு போறேன். அப்ப பாதர் டேவிட் , வேணாம் நீ பெரியவனா ஆனதுக்கு அப்பறம் போ. அதுதான் உனக்கு நல்லது சொன்னாரு. நானும் என்னோட பள்ளி படிப்பு , கல்லூரி படிப்பு MCA  முடிச்சிட்டு பாதர் கிட்ட கேட்டேன். அவர் அனுமதி கொடுத்ததும், இங்கே வந்துட்டேன். ஆனா எனக்கு என்னோட வீட்டு அட்ரஸ் சுத்தமா மறந்து போய்டுச்சு. அதான் இப்ப அடுத்து என்ன செய்றது தெரியாம இருக்கேன் " - பைசூர் ரஹ்மான்.

🖤 தொடரும் 🖤

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro