💞 37 💞
(Frds நேற்றிய பகுதியில் ஒருசில காட்சிகளை விட்டுவிட்டு முக்கியமான காட்சிகளை மட்டும் வைத்தேன். இந்த நாடகங்களில் தொடரும் போடுவதற்காக காட்சிகளைச் சுருக்கி தொடரும் போடுவார்கள் அல்லவா அதுபோல் வேகமாக முடித்தேன்... இன்று அதை விரிவாக கூறியுள்ளேன். அதனால், முழுவதுமாக படியுங்கள் )
சமீரும் ஷாஜிதாவும் எஸ்பி ஆபிஸில் இருந்து, கிளம்பினார்கள். மகிழுந்தை மிகவும் பொறுமையாகவே செலுத்தினான் , சமீர்.
"ஏய்! ஷாஜிதா உன் ஆள்ட்ட பேசுடி... " என மனம் சொல்ல ,
"எ...எப்படி ஆரம்பிக்கிறது? " என ஷாஜிதா முழிக்க ,
"ஹய்ய... தோடா... வம்பு மட்டும் இழுக்கத் தெரியும் ஆனா பேசத் தெரியாதா... அப்படியே ஒன்னு வுட்டேன் வை... ச்சீ பேசித் தொலை... " என திட்ட , "ம்ஹும் " என பட்டென தலையசைத்துக் கொண்டே சிரித்த ஷாஜிதாவை கவனித்த சமீர் , "ஹலோ மேடம்... என்ன தனியா சிரிக்கிறீங்க? சொன்னா நாங்களும் சிரிப்போம்ல " என வண்டியை செலுத்தியபடி கேட்டதும் திருதிருவென விழித்தாள்.
ஷாஜிதா விழிப்பதைக் கவனித்த சமீர் , தன்னவளின் அருகே நெருங்கி , "திருதிருன்னு முழிக்கிறப்ப ரொம்ப அழகா இருக்க ஷாஜி " என கூறியதும் , ஷாஜிதா சமீரைப் பார்த்து முறைத்தாள்.
ஆனால், நாணமோ அதை இரண்டு நொடிக் கூட நீடிக்க வைக்கவில்லை. உடனே தன் தலையைப் பனித்துக் கொண்டாள். "ஸா...ஸாரி..." என மென்மையான குரலில் கூறியதும் ,
"எதுக்கு ஷாஜி ? " என சமீர் ஷாஜிதாவை புரியாமல் பார்க்க ,
"அ...அது உ..உங்களை நான் நிறைய தடவை கஷ்டப்படுத்திருக்கேன். நிறைய்ய காயப்படுத்தி இருக்கேன். வார்த்தைகளால என்னோட செயல்களால இப்படி எவ்வளவோ வழியில உங்களை காயப்படுத்தி இருக்கேன். ஆனா அ...அதை எதையும் மனசுல வச்சிக்காம! என் மேல நீங்க வெறும் அன்பை மட்டுமே காட்டுறீங்க. " என ஷாஜிதா கூறியதும்
"இங்கப் பாரு ஷாஜி! உன்ன நேசிக்கத் தொடங்கிய நாளிலருந்து இந்த நொடி... ம்ஹூம் சாவுற...." என சமீர் கூறியதும் ஷாஜிதா பதறியடித்துக் கொண்டு தன் கைகளைக் கொண்டு சமீரின் வாயைப் பொற்றி , "ம்ஹூம்... " என்று சமீரைப் பார்த்தாள்.
தான் என்ன சொல்ல வருகிறோம்? என்பதை முழுமையாக கேட்காமல் இறப்பு என்று கூறியவுடன் பதறியபடி தன் வாயைப் பொற்றியவளை கண்ணிமைக்காமல் பார்த்துக கொண்டு இருந்தான், ஷாஜிதாவின் கண்ணாளன்.
இருவரின் பார்வையும் அலைமோதத் தொடங்கியது. மகிழுந்துச் செலுத்துவதில் கவனம் சிதறுவதை உணர்ந்த சமீர் , சட்டென மீண்டு , தன்னவளின் கையை இறக்கி , "பதறாத ஷாஜி... முழுசா கேளு... நீ தான் என் மனைவின்னு நினைச்சிட்டு வாழ்ந்துட்டு இருக்கேன்... மனசுல இவ்ளோ நேசம்.. ம்.. " என கூறி மெல்ல புன்னகைத்தான்.
ஷாஜிதா, தன் முகத்தைப் பனித்துக் கொண்டாள். ஷாஜிதாவின் மனம் என்னென்னவோ செய்யத் தொடங்கியது. 'அவனிடமே தஞ்சம் புகு' என மனம் பரபரக்க , அதை அதட்டி அடக்கி வைத்தாள் , ஷாஜிதா.
அப்போது, துணிக் கடையை பார்த்ததும் , "துணிக் கடையாண்ட நிறுத்துறீங்களா! " என ஷாஜிதா சமீரைப் பார்க்க,
"எதுக்கு ஷாஜி? " என சமீர் கேட்டதும்
"அ...அது என்கிட்ட இருந்து அஞ்சு சுடில மூனு சுடி கிழிஞ்சி போய்டுச்சு.. ரெண்டு தான் இருக்கு... காலேஜ் போகனும்ல அதான்... " என ஷாஜிதா கூறியதைக் கேட்டு சமீரின் மனம் வலித்தது மட்டுமல்லாமல் கண்கள் கலங்கவும் செய்தது.
சமீர் , மெதுவாக மகிழுந்தை அந்தக் கடையின் வண்டிகள் நிறுத்தும் இடத்தில் நிறுத்தியதும் , "நீ..நீங்க இங்கேயே இருங்க நான் பத்து நிமிஷத்துல வந்துடுறேன்... " என ஷாஜிதா கூறிவிட்டு இறங்க ,சமீர் தனக்குள் சிரித்துக் கொண்டு மகிழுந்தை நிறுத்தி விட்டு இறங்கி வெளியே வந்தான்.
சமீர் கிளம்பிய அந்த நேரம் எஸ்பி ஆபிஸில்,
அகிலன் , சூரஜ் , நஃபீஸ் மற்றும் யூசுப் திவ்யசாந்தி அறைக்குச் சென்றார்கள். திவ்யசாந்தி , "வாங்க ! " என அனுமதி கொடுத்ததும் உள்ள நுழைந்தார்கள், சமீரின் நண்பர்கள்.
திவ்யசாந்தி, மேசையில் தன் இரு கை முட்டியை ஊன்றியபடி தன் தாடையில் உள்ளங்கையை தாச்கியபடி அனல் பறக்கும் கண்களோடு அமர்ந்திருந்தாள்.
திவ்யசாந்தி அமர்ந்திருக்கும் தோரணையே அவளின் கோபம் உணர்த்தியது அவர்களுக்கு.
"மேம் என்னாச்சு ? ஷாஜிதா எதுக்கு வந்தா? " என அகிலன் கேட்டதும் திவ்யசாந்தி ஷாஜிதா கொடுத்த அந்தக் கடிதத்தை அவர்களிடம் நீட்ட , யாருக்கும் புரியவில்லை ஒருவரையொருவர் பார்க்க , அவர்களைப் பார்த்த திவ்யசாந்தி அதனை உணர்ந்து , "ம் வாங்கி படிச்சு பாருங்க! " என கூறியவுடன் அனைவரும் வாங்கிப் படித்ததும் , மிகப்பெரிய அதிர்வாகவே இருந்தது.
"இதை வச்சி அவ மேல நடவடிக்கை எடுத்திடலாமா? மேடம்..." என அகிலன் கேட்டதும்
"ம் வேணாம்... ஷாஜிதா அவ படிப்பு முடியட்டும் சொல்லி இருக்காள். And at the same time she is deeply love with Sameer. சமீருக்கு எதாவது ஆகிடுமோன்னு பயமா இருக்கு பாதுகாப்பு தாங்க சொல்லிட்டு போயிருக்கா " என திவ்யசாந்தி சிறுப் புன்னகையுடன் கூறினார்.
அகிலன் , " சரி அப்ப நான் போய் சமீர் கிட்ட இந்த விஷயத்தைச் சொல்லிடுறேன்.... " என கிளம்பிச் சென்றுவிட்டான்.
யூசுப் , "இந்தக் கேஸை நான் எடுத்து நடத்துறேன். ஷாஜிதாவுக்கு ஆதரவான வக்கீலா நான் நிக்கிறேன்... " என மனதில் தன் கோபத்தை அடக்கிக் கொண்டு கூறினான்.
திவ்யசாந்தி , " ம் சரி நாம ஆக வேண்டியதை பார்ப்போம்.. இதை நாம யாருக்கும் தெரியாம விசாரிக்கனும்." என கூறியதும் , "கண்டிப்பா மேடம். " என சூரஜ் கூறியதும் , " சரி போய் வேலையை பாருங்க " என கூறிவிட்டு, தன் வேலையை தொடர்ந்தாள் திவ்யசாந்தி.
கடைக்குள் நுழைய இருந்த ஷாஜிதா , அருகில் நிறைய சுடிதார்களை வைத்து ஒரு பெண்மணி விற்றுக் கொண்டிருந்தார். அதன் அருகில் சென்ற ஷாஜிதா, தனக்கு எது வாங்கலாம் என ஒவ்வொன்றாகப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
அப்போது , சமீர் தன் மகிழுந்தை நிறுத்திவிட்டு வரவும், அங்கு அகிலன் வரவும் சரியாக இருந்தது.
சமீர் அருகில் வந்த அகிலன் , " டேய்! .... " என அந்தக் கடிதம் என எதையும் விடாமல் கூறி முடித்ததும் சமீர் ஒரு வெற்றிப்புன்னகை மட்டுமே சிந்தினான்.
அகிலன் , "டேய்... ஷாஜிதா உன்னோட முழு விவரத்தையும் சொல்லி உனக்குப் பாதுகாப்புத் தரச் சொல்லி எஸ்பி கிட்ட கேட்டிருக்கா.. ஏன்னா உனக்கு எதாவது ஆகிடுமா " என்றது தான் உறைந்துப் போனான், சமீர்.
சிலையாகி நின்றிருந்த சமீரை உலுக்கிய அகிலன் , "டேய்! என்ன டா? " என கேட்டதும் , "இல்ல டா எனக்கு எதுவுமே ஆகக்கூடாது.. எப்படி டா? முடியலை எதுவும் பேச முடியலை... வார்த்தை வர மாட்டேன்து " என அகிலனிடம் பேசிக் கொண்டிருந்தான்.
அப்போது , ஒருவன் கைக்குட்டையால் தன் முகத்தை மறைத்துக் கொண்டான். தன் இடுப்பில் வைத்திருந்த , கத்தியை எடுத்துக் கொண்டு சமீரை நெருங்கிக் கொண்டிருந்தான்.
சமீரும் அகிலனும் எதுவும் கவனிக்கவில்லை. இருவரும் பேசிக் கொண்டிருந்தனர். அவனோ சமீரின் அருகில் நெருங்கியபடி, தன் கையில் வைத்திருந்த கத்தியை பின் ஓங்கவும், "பப்புஉஉஉஉ " என ஷாஜிதா சமீரைத் தள்ளிவிடவும் , அவன் ஓங்கிய வேகத்தில் ஷாஜிதாவின் மேல் குத்தி விட்டான்.
தனக்குத் தேவையான துணிகளை வாங்கிக் கொண்டு , வந்துக் கொண்டிருந்த ஷாஜிதா , அந்த மர்மமான நபரைப் பார்த்ததும் ஒரு நிமிடம் நின்று உற்றுக் கவனித்தப் பின் தான் அவன் சமீரிடம் நெருங்கிக் கொண்டிருக்கிறான் என்பதை உணர்ந்தாள். உடனே , வேகமாக ஓடிய ஷாஜிதா , "பப்புஉஉஉஉ " என தன்னவனை தள்ளி விட்டு, அந்தக் கத்திக்குத்தை தான் வாங்கிக் கொண்டாள்.
அந்தக் கத்திக்குத்தை தான் வாங்குவோம் என ஷாஜிதா அப்போது அறியவில்லை. ஏன் அதைப் பற்றிக் கவலையும் கொள்ளவில்லை. அவளுக்கு எப்படியாவது தன் உயிரானவனை காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே இருந்தது.
சமீரைத் தள்ளிவிட்டதும் அவன் நிலைக் கொண்டு நிற்க முடியாமல் கீழ விழச் சென்ற சமீரை , அகிலன் தான் கைத்தாங்கலாக பிடித்தான். உடனே , திரும்பிப் பார்த்த இருவரும் திகைத்தனர்.
" ஷாஆஆஆஆஆஜிஇஇஇ...." என கத்திய சமீர் , கீழ சரிந்த தன் உயிருக்கு உயிரானவளை தன் கையில் பதறியடித்துக் கொண்டு தாங்கினான்.
அகிலன் உடனே, அவனைப் பிடிக்க ஓட அவனோ தப்பித்து விட்டான். "டேய் அவனை அப்பறம் பிடிச்சிக்கலாம்... நீ ஷாஜிதாவை தூக்கு டா... நான் காரை எடுத்துட்டு வரேன்... " என பதறிய குரலில் கூறிய அகிலன் , சமீர் கையில் இருந்த சாவியை பிடிங்கிக் கொண்டு மகிழுந்தை நோக்கி ஓடினான்.
அகிலன் , நஃபீஸுக்கு அலைபேசியில் அழைத்தான். இரண்டே நொடியில் அழைப்பை ஏற்ற நஃபீஸ் , " சொல்லுடா. " என்றவுடன் , "டேஏஏய்... ஷாஜிதாவை எவனோ ஒருத்தன் குத்திட்டான் டா... நீங்க இங்க வந்து விசாரிங்க நானும் சமீரும் ஷாஜிதாவை தூக்கிட்டு ஹாஸ்பிட்டலுக்கு போறோம் கொஞ்சம் அப்பாஸுக்கு சொல்லு... " என பதிலுக்கு காத்திருக்காமல் அழைப்பைத் துண்டித்து விட்டு , மகிழுந்தை எடுத்துக் கொண்டு சமீர் இருக்கும் இடத்திற்கு வந்தான்.
அகிலன் கூறியதைக் கேட்டதும், அதிர்ந்த நஃபீஸ் , உடனே எஸ்பி அறைக்கு விரைந்தான். நஃபீஸ் சென்ற வேகத்தைப் பார்த்து ஏதோ பிரச்சினை என்று யூகித்துக் கொண்ட , அவன் நண்பர்கள் அவன் பின் ஓடினார்கள்.
நஃபீஸ் , தடார் என கதவைத் திறந்ததும் , பயந்த திவ்யசாந்தி , உடனே பதறியடித்து எழுந்து நின்றார். நஃபீஸ் என்பதை உணர்ந்ததும் , " என்ன நஃபீஸ் என்னாச்சு? " என கேட்டதும் , " மேம் ஷாஜிதாவை எவனோ ஒருத்தன் கத்தியால குத்திட்டானா... சமீரும் அகிலனும் ஹாஸ்பிட்டலுக்குத் தூக்கிட்டு போய்ருக்காங்க. நாங்க கிளம்பிறோம் மேம் " என தகவலை கூறியதும் , அனைவரும் அதிர்ந்து நின்றனர்.
சூரஜ் , " மேம் நாங்க சம்பவ இடத்துக்கு போய் விசாரிக்கிறோம்... யூசுப் நீ கிளம்பி வேகமா ஹாஸ்பிட்டலுக்கு போய் அப்பாஸ் கிட்ட விஷயத்தைச் சொல்லி எல்லா ஏற்பாடும் பண்ணு. எப்படியும் அகிலன் அங்க தான் ஷாஜிதாவை அழைச்சிட்டு போவான்... " என கூறிவிட்டு பதிலுக்குக் காத்திருக்காமல் , சூரஜ் மற்றும் நஃபீஸ் இருவரும் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
சமீர் , ஷாஜிதாவை தன் கையில் ஏந்திக் கொண்டு மகிழுந்தில் கிடத்தினான். தான் ஏறிக்கொண்டவுடன் , ஷாஜிதாவை தன் மடியில் கிடத்தினான். அகிலன் , மகிழுந்தை அசுர வேகத்தில் செலுத்தினான்.
ஷாஜிதாவின் வயிற்றில் இருந்து இரத்தம் நிற்காமல் வழிந்துக் கொண்டிருந்தது. இரத்த வெள்ளத்தில் சமீரின் மடியில் கிடந்த ஷாஜிதா , மெல்ல சமீரின் கரத்தைப் பற்றினாள்.
தன் கையைப் பற்றியதும் , ஷாஜிதாவைப் பார்த்த சமீர் , " ஒன்னுமில்ல மா இப்ப போய்டலாம்... " என மனம் துடித்தாலும் தன்னவளுக்கு தைரியம் கூற , " இ...இதுக்கு தா..தான் நா...ன் ப...யந்தேன்.. உ...ங்க...ளை எ...னக்கு பிடிக்கும் ரொ...ரொம்ப ரொம்ப பிடிக்கு... ஹ....ய் ல...வ் யு...யூ... " என தன் காதலை வலியுடன் மொழிந்து விட்டு மயங்கிச் சரிந்தாள் , சமீருக்கு உயிரானவள்.
ஷாஜிதா மயங்கியவுடன் பதறிய சமீர் , "ஷாஜி... என்னாச்சு டா கண்ணைத் திற டா... டேய்.... பட்டு பாருடா உன் பப்பு டா.. உன் சமீர் டா... கண்ணைத் திற டா... " என கிட்டத்தட்ட அழுகுரலில் அழைத்தும் பதில் வராததைக் கண்டு , " டேய்... அகிலா வேகமா போடா ... பயமா இருக்கு.... " என தன் உயிரானவளை நெஞ்சோடு அணைத்துக் கொண்டு கதறினான் சமீர்.
அகிலன், " டேய் ஒரு அஞ்சு நிமிஷம் டா... பக்கத்தில வந்துட்டோம்... " என தன் கண்களைத் துடைத்துக் கொண்டு மகிழுந்தை அதிவேகமாக செலுத்தினான்.
அங்கிருந்து கிளம்பிய யூசுப் , அப்பாஸிடம் விஷயத்தைக் கூறி அதற்கான ஏற்பாடுகளைச் செய்தான்.
அரை மணி நேரத்தில், வர வேண்டிய இடத்திற்கு பதினைந்தே நிமிடங்களில் அழைத்து வந்தான் , அகிலன்.
வெளியில் இவர்களுக்காக காத்திருந்தான் யூசுப். மருத்துவமனை வந்ததும் , கண்கள் கண்ணீரோடு தன்னவளை கைகளில் ஏந்திக் கொண்டு யூசுப் அழைத்துச் சென்ற இடத்திற்கு விரைந்தான்.
ஷாஜிதாவை உள்ளே அழைத்துச் சென்றதும் , அப்பாஸ் , " இங்கேயே இருக்கடா... நான் பார்த்துக்கிறேன்... " என கூறிவிட்டு விரைந்தான்.
ஷாஜிதா, உள்ளே செல்லவும் அவள் பின்னே சென்றது சமீரின் உயிரும் தான். குருதியின் கறையுடன் சிலையாய் நின்றிருந்தான் , சமீர்.
யூசுப் , " டேய்... கொஞ்சம் வா... " என அகிலனை தனியே அழைத்துச் சென்று , " என்னாச்சு டா எப்படி? " என கேட்டதும்
அகிலன் , "டேய்... அவன் குத்த வந்தது ஷாஜிதாவை இல்ல... சமீரை. ஷாஜிதா சமீரை தள்ளி விட்டு அந்தக் குத்தை தான் வாங்கிட்டு இப்படி படுத்துட்டு இருக்கா " என கண்களைத் துடைத்தவன் , " சரி இதெல்லாம் அப்பறம் பேசிக்கலாம்... நான் சமீர் வீட்டுல விஷயத்தைச் சொல்லி அழைச்சிட்டு வரேன்.. அதுவரைக்கும் நீ இங்கேயே இரு... " என கூறியதும் , " டேய் நீ போ நான் பார்த்துக்கிறேன்... " என்றான் யூசுப்.
அகிலன் , "நீ சமீரைப் பத்திரமா பார்த்துக்கோ.." எனக் கூறிவிட்டுச் சென்றான்.
யூசுப் , உள்ளே சென்றான். அங்கே சமீரைப் பார்த்து வருந்தினான், யூசுப். சமீர், அவசர சிகிச்சை பிரிவு அறையின் ஓட்டை வழியாக ஷாஜிதாவைப் பார்த்துக் கொண்டிருந்தான்.
சமீரின் உதடுகள் தானாகவே, ' ஷாஜி... ஷாஜி.... ' என முணுமுணுத்தது. சமீரின் கண்முன் , ஷாஜிதாவின் சிரித்த முகம் தான் வந்துச் சென்றது.
சமீர், எழுந்து அவசர சிகிச்சை பிரிவின் அறையில் இருந்த தன் உயிரானவளை , தன்னிடம் திரும்பி வந்துவிட மாட்டாளா? என ஏக்கத்துடன் பார்த்துக் கொண்டிருந்தான்.
இத்தனை நேரம் தன்னிடம் சிரித்துப் பேசிக் கொண்டு வந்தவள் , இப்போது பேச்சு மூச்சே இல்லாமல் படுத்துக் கிடந்தவளை பார்த்து மனமெல்லாம் வலித்தது.
நீண்ட நேரம் பார்க்க முடியாமல் , மெல்ல அருகில் இருந்த சுவற்றின் மீது தன் தலையை சாய்த்துக் கொண்டு நின்றிருந்தான்.
யூசுப் , சமீரின் அருகே வந்து அவனை அழைக்க , அவன் சிலை போல் நின்றிருந்தான்.
அகிலன் , சமீரின் வீட்டிற்கு மகிழுந்தில் பறந்தான். அனைவரும் தங்களது வேலையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்கள்.
அகிலன் , வேகமாக வீட்டிற்கு வந்தான். அகிலன் வந்ததைக் கவனித்த அஸ்மா , " டேய்.. அகிலா வா " என அழைத்ததும் தயங்கித் தயங்கி உள்ளே நுழைந்தான்.
அகிலன் தயங்கித் தயங்கி வருவதைப் பார்த்த லத்தீப் , " டேய்! என்னடா எப்பவும் உரிமையா உள்ள வருவே? இன்னிக்கி என்ன இப்படி தயங்குற? " என கேட்டதும் , "அப்பா... ஒரு தப்பு நடந்து போச்சு ப்பா.." என அடிக்குரலில் இருந்து அகிலன் கூறியதும் , "என்னாச்சு அகிலா ? " எனக் கேட்டுக் கொண்டே எழுந்து அகிலன் அருகில் வந்தார் , லத்தீப்.
அகிலன் , "அ...அது வந்து ப்பா... நம்ம ஷாஜிதாவுக்கு.... " என நடந்த அத்தனையும் அழுதுக் கொண்டே கூறியவன் கீழே மண்டியிட்டு அமர்ந்தான்.
அகிலன் கூறியதும் அத்தனை பேரும் அதிர்ந்து நின்றனர். ஷாஜிதாவின் நிலையை கூறியதும் ஃபிர்தவுஸ் மயங்கி விழ , முதலில் முசினா கவனித்து அவளை தன் கையில் தாங்கிப் பிடித்துக் கொண்டாள்.
தன்னவள் மயங்கியதும் பதறிய யாசர் , உடனே ஓடி தண்ணீர் எடுத்துக் கொண்டு வந்தவன் , ஃபிர்தவுஸ் முகத்தில் தெளித்தான்.
சிறிது நிமிடங்களில் மயக்கம் தெளிந்து , ஃபிர்தவுஸ் எழ , யாசரை நோக்கி , "அவளுக்கு ஒன்னுமில்ல தானே. நீங்க பொய் தானே சொல்றீங்க? " என குழந்தைப் போல் கேட்டவளை வார்த்தைகள் வெளி வராமல் , யாசர் தன்னோடு அணைத்துக் கொண்டு , " ஒன்னுமில்ல வா... " என சமாதானம் செய்தான்.
அஸ்மா , " எல்லாரும் வாங்க போலாம்... " என அனைவரும் மருத்துவமனைக்கு விரைந்தனர்.
சமீர் , எதற்கும் அசையாமல் அங்கேயே நின்றிருந்தான். யூசுப் எத்தனை முறை அழைத்தும் அசைந்த படி இல்லை.
உள்ளிருந்து அப்பாஸ் வெளியே வந்தான். ஷாஜிதா சிகிச்சை பெற்று அறையில் இருந்து யாரோ வருகிறார் என்பதை உணர்ந்த சமீர் , பார்க்க அப்பாஸ் தான்.
சமீர் , "டே...டேய்... என் ஷாஜி எப்..எப்படி இருக்கா? அவளுக்கு ஒன்னுமில்ல தானே.. " என கண்ணீரோடு கேட்டதும் , அப்பாஸ் , " ஒன்னுமில்ல டா... " என சமீரிடம் கூறிவிட்டு யூசுபை தனியே வா என கண்களில் செய்கை காண்பித்துவிட்டு, நகர்ந்தான். யூசுப் அமைதியாக அப்பாஸ் இருக்கும் இடத்திற்கு சென்றான்.
யூசுப் , " சொல்லுடா ஷாஜிதாக்கு ஒன்னுமில்ல தானே... " என கேட்டதும் அப்பாஸ் , " கத்தி ரொம்ப ஆழமா பட்டிருக்கு. அல்ஹம்துலில்லாஹ் அது ஷாஜிதாவோட கர்பப்பையை தாக்காம இருந்த வரைக்கும் சந்தோஷம். இரத்தம் ரொம்ப போய்டுச்சு டா. இரத்தம் இருந்தா மட்டும் தான் இனி எதுவுமே பண்ண முடியும். அதுவும் ஷாஜிதாவுக்கு O-ve blood டா... உனக்கு தெரிஞ்சவங்க கிட்ட சொல்லு... நானும் blood bank la இருக்கான்னு பார்க்கிறேன்... " என அவசர அவசரமாக கூறிவிட்டு ஓடினான், அப்பாஸ்.
யூசுப் உடனே தன் வாட்ஸ்அப் , முகநூல் மற்றும் இன்ஸ்டா கிராம் பக்கத்தில் இதனை கூறி பகிர்ந்தான்.
சமீர் வீட்டிலிருந்து அனைவரும் வருவதைப் பார்த்த யூசுப் , அனைவரிடமும் ஷாஜிதாவின் நிலையை கூறியதும் திகைத்தனர். அதேபோல் சமீர் இருக்கும் நிலையையும் கூறி தான் அழைத்துச் சென்றனர்.
இரத்தமும் கறையுமாக நின்றிருந்த தன் மகனைப் பார்த்தவுடன் அஸ்மாவின் மனமெல்லாம் வலித்தது. எதுவும் பேசாமல் அமைதியாக ஷாஜிதாவை வெளியில் இருந்தே பார்த்தார்கள் அனைவரும்.
அனைவருமே ஷாஜிதா சமீர் மேல் எந்தளவுக்கு நேசம் வைத்திருக்கிறாள் என்பதை உணர்ந்தார்கள். ஃபிர்தவுஸ், பேச்சற்று நிற்க , யாசர் மெல்ல தன் தோளில் சாய்த்துக் கொண்டான்.
மலர்ந்த முகத்துடன் வந்த அப்பாஸ் , " அல்ஹம்துலில்லாஹ்! இரத்தம் கிடைச்சிருச்சு... பயப்பட வேண்டாம்.... இனி எல்லாமே நல்லதாவே நடக்கும்... " என அவசரமாக அவர்களிடம் கூறிவிட்டு உள்ளே நுழைந்தான்.
🖤 தொடரும் 🖤
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro