💞 34 💞
ஷாஜிதாவின் மனம் குழப்பத்தில் சூழ , கண்கள் எல்லாம் கலங்கியது. தன் ஒற்றைக் கையை தான் அமர்ந்திருந்த அந்தக் கட்டையில் தொடர்ந்துக் குத்திக் கொண்டே இருந்தாள்.
மகிழுந்தில் இருந்து இறங்கிய சமீர் , ஷாஜிதாவின் செயலை கண்டு மனம் வருந்தியது. ஷாஜிதாவின் அருகில் வந்த சமீர் , ' இதுக்கு மேல இவளை இப்படியே விடக்கூடாது.. அல்லாஹ் நீதான் என்கூட இருக்கனும் ' என மனதில் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு , ஷாஜிதாவின் அருகில் அமர்ந்தான்.
சமீர் , பொறுமையாக ஷாஜிதாவின் கரத்தைத் தன் கையில் வைத்தான். சமீர் , தன் கைகளை பிடித்தவுடன் ஷாஜிதா அவனைப் பார்க்க , " ஷாஜி! ஏதோ குழப்பத்தில இருக்கன்னு மட்டும் தெரியுது! என்னன்னு சொல்லு " என ஷாஜிதாவின் கண்களைப் பார்த்துக் கேட்டான்.
ஷாஜிதா , எதுவும் சொல்லவில்லை அமைதியாக இருந்தாள். சமீர் , ஷாஜிதாவின் கரத்தை சற்று அழுத்தி , " ஷாஜி! நான் இருக்க சொல்லு " என நம்பிக்கைத் தந்ததும், ஷாஜிதாவின் கண்களில் இருந்து இரண்டு சொட்டு கண்ணீர் வெளியே வந்தது.
தன்னவளின் கண்ணீரைப் பார்த்ததும் சமீரின் மனம் துண்டாக உடைந்த உணர்வு. உடனே தன்னவளின் கண்ணைத் துடைத்த சமீர், " ம்ஹும் அழக்கூடாது.. நானிருக்க சொல்லு " என ஷாஜிதாவைப் பார்க்க , ' ஏன் பப்பு? ஏன் என் மேல இப்படி அன்பா இருக்கீங்க? இதுக்குலாம் நான் என்ன திருப்பித் தரப் போறேன் தெரியலை... இப்பவே என் காதலைச் சொல்லிடனும் தோனுது... எனக்கு நீங்க வேணும் பப்பு... ஆனா உங்களுக்கு எதாவது ஆகிடுமோன்னு பயமா இருக்கு... அதுக்கு ஒருவழி பண்ணிட்டு உங்க கிட்ட என் காதலைச் சொல்லப் போறேன்...' என அவனையே காதலோடு பார்த்துக் கொண்டிருந்தாள், ஷாஜிதா.
ஷாஜிதாவின் பார்வையில் மாற்றத்தை உணர்ந்த சமீர் , அவளின் கண்களைக் கவனித்த சமீர் அதன் அர்த்ததை உணர்ந்ததும், ' மனசுல இருக்க காதல் அப்படியே கண்ணுல தெரியுது... சீக்கிரம் என்கிட்ட வந்து சேருடி என் பட்டு ' என அமைதியாக உள்ளுக்குள் சிரித்தான்.
சமீர் , "என்ன ஷாஜி யோசிக்கிற? எதுவா இருந்தாலும் சொல்லு நானிருக்க " என தன்னவளின் தோளை உலுக்கி கேட்டதும், "அ...அது வந்து ஃபிர்தவுஸ் அண்ணனைப் பார்க்க என் மனசு ஏத்துக்கவே மாட்டேன்து... ஆ..ஆனா ஜ...ஜாராவுக்கு எதாவது ஆகிடுமோன்னு பயமா இருக்கு... " என யோசிக்காமல் ஷாஜிதா கூறியதும் சமீர் ஷாஜிதாவின் குழப்பத்தின் காரணத்தை உணர்ந்துக் கொண்டான்.
சமீர் , " உன் வாழ்க்கையை அழிச்சவங்க மேல உனக்கு ஏன் இவ்வளவு அக்கறை? " என மெல்ல ஷாஜிதாவைப் பார்த்தான்.
ஷாஜிதா, " இல்ல ஜாரா நல்லவள்... அவளை தப்பானவளா கூட இருக்கவங்க மாற்றி விட்டாங்க.. " என பொறுமையாக பதிலளித்தாள்.
சமீர் , " சரி இப்ப என்னப் பண்ணலாம் இருக்க? " என்றவுடன் , "தெ..தெரியலை " எனப் பதிலளித்தாள், ஷாஜிதா.
சமீர் , " சரி இப்ப வா " என ஷாஜிதாவின் கரத்தைப் பிடித்து அழைத்துச் சென்றான். ஷாஜிதா மறுபேச்சு பேசாமல் சமீர் பின் நடந்தாள்.
சமீர் , அந்த இடத்தில் இருந்த கழிவறைக்கு அழைத்துச் சென்று , " போய் முகத்தை கழுவிக்கிட்டு வா... மனசு கொஞ்சம் தெளிவாகும்.. " என ஷாஜிதாவை அனுப்பி வைக்க , ஷாஜிதா எதுவும் சொல்லாமல் அமைதியாக சமீர் சொன்னதைச் செய்தாள்.
முகம் கழுவியதும் மனம் ஏதோ தெளிவு பெற , ஒரு புன்னகை ஒன்றை சிந்தியபடி வெளியே வந்தாள் , ஷாஜிதா. அதுவரை வெளியில் காத்திருந்தான் , சமீர். ஷாஜிதா ,புன்னகையுடன் வெளியே வருவதைப் பார்த்த சமீரின் கண்களுக்கு அழகு தேவதையாகத் தெரிந்தாள்.
தன்னை மறந்து ஷாஜிதாவைப் பார்த்துக் கொண்டிருந்தான் , சமீர். ஷாஜிதா , தன் அருகில் வருவதை உணர்ந்த சமீர், தன்னை நிலைப்படுத்திக் கொண்டு நின்றான்.
ஷாஜிதா , சமீரிடம் "வீட்டுக்குப் போலாம். ஜாராவுக்காக என் துஆ இருக்கு அது போதும். " என்றதும் , "ம்ம்ம் சரி வா..." என சமீர் கூறினான்.
இருவரும் ஒன்றாக நடந்தனர். அந்த வழியில் எப்போதும் பூ விற்கும் பாட்டி இருவரையும் பார்த்து, " யப்பா ராசா " என அழைத்தார்.
குரல் வந்த திசையை நோக்கித் திரும்பினார்கள் இருவரும். இருவரும் பார்ப்பதை உணர்ந்த அந்தப் பூ விற்கும் பாட்டி , " உங்களைத் தான் கண்ணு ரெண்டு பேரும் இங்க வாங்க ! " என்று அன்பாக அழைத்ததும் இருவரும் அவர் அருகில் சென்றனர்.
" சொல்லுங்க பாட்டி " என சமீர் அந்த பூ விற்கும் பாட்டியிடம் கேட்டதும் , " என்ன ராசா நீ பொண்டாட்டிக்கு பூ வாங்கித் தராம போற? ஒரு முழம் வாங்கிப் பொண்டாட்டி தலையில வைக்கிறது " என்றதும் சமீரும் ஷாஜிதாவும் அதிர்ந்தனர்.
இருவரையும் பார்த்த அந்தப் பெண் , " என்ன ராசா நீ பொண்டாட்டிக்கு பூ வாங்கித் தர இவ்வளவு யோசிக்கிற? " என்றதும், "அ..அத்...அது வந்து நீங்க... " என சமீர் கூற வருவதை காதில் வாங்காமல் , இரண்டு முழம் பூவை சமீர் கையில் திணித்தப் பாட்டி, " ராசா! பொண்டாட்டிக்கு வைச்சி விடு... அம்மாடி கண்ணு திரும்பி உன் தலையை காட்டு உன் புருசன் வைச்சிவிடுவான்... " என பாட்டி ஹேர்பினை சமீரிடம் திணித்தபடி கூறினார்.
இருவரும் ஒருவருக்கொருவர் தயங்கி நின்றனர். " அட என்ன ராசா வைச்சி விடு... உன் பொண்டாட்டி தானே.... வை " என வற்புறுத்தினார்.
ஷாஜிதா, திரும்பி நின்று தலையில் இருந்த துணியை பின்னிருந்து சற்று உயர்த்த, சமீர் தட்டு தடுமாறி பூவைச் சூடி விட்டான்.
ஷாஜிதாவும் சமீரும் தங்களுக்குள் பார்த்து நாணமாய் தங்கள் தலையை குனிந்துக் கொண்டார்கள்.
"இப்ப பாரு உன் பொண்டாட்டி எவ்வளவு அழகா இருக்காள் என்று... என் கண்ணே பட்டுவிடும் போல ரெண்டு பேரும் ஜோடியும் அவ்வளவு அழகா இருக்கு... போங்க போய் சந்தோஷமா வாழுங்க.. " என பாட்டி வழியனுப்பி வைத்தார்.
சமீர் , பூவிற்கு பணம் செலுத்த வேண்டும் என நினைவிற்கு வர பணத்தை எடுத்து பாட்டியிடம் நீட்டினான். அந்தப் பாட்டி வேண்டாம் என மறுத்துவிட்டார்.
ஷாஜிதாவின் முகமோ அந்தி வானமாய் சிவந்திருந்தது. எதையும் பார்க்க முடியாமல் தட்டுத்தடுமாறி கொண்டிருந்தது ஷாஜிதாவின் கண்கள். சமீரின் மனமோ இரண்டு மடங்காக துடித்தது.
இருவரும் அமைதியாக நடந்தனர். கிட்டத்தட்ட இருவருக்குமே நாணம் பிடுங்கித் தின்றது. இருவருக்கும் வார்த்தைகள் வர மறுக்க, அமைதியாக மகிழுந்தில் ஏறி அமர்ந்து தங்கள் வீட்டிற்குப் புறப்பட்டனர்.
ஷாஜிதா , மெல்ல பேச்சைத் தொடங்கினாள். "நா...நாளைக்கு எஸ்பி ஆபீஸ் போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைச்சிட்டு போறீங்களா? " என சமீரிடம் கேட்க , 'ஏன்னு கேட்டா கண்டிப்பா பதில் வராது...ம்ஹ்ம் ' என மனதில் நினைத்துக் கொண்டு சமீர் , " சரி ஷாஜி அழைச்சிட்டு போறேன்... " என்றான்.
"அ...அப்றம் நாம ரெண்டு பேர் மட்டும் இருக்கிற மாதிரி ஒரு இ...இடத்திற்கு அ...அழைச்சிட்டு போறீங்களா .. " என ஷாஜிதா தலையைப் பனித்துக் கொண்டே தயக்கமாய் கேட்டதும் , சமீர் புரியாமல் ஷாஜிதாவைப் பார்த்து , "என்ன? " என கேட்டதும் , ' சரியான மக்கு ... மறமண்ட.... டியூப் லைட் ... வெத்துவேட்டு... ' என தனக்குள்ளே முணுமுணுத்தாள்.
ஷாஜிதாவின் முணுமுணுப்பை பார்த்த சமீர், " அங்க என்ன முணுமுணுப்பு ? " என்றதும் "ஙே... ஒன்னுமில்ல வண்டியை ஓட்டுங்க... " என கடுப்பாக கூறிவிட்டு ஷாஜிதா திரும்பிக் கொள்ள சமீர் , தனக்குள் சிரித்துக் கொண்டு வண்டியை ஓட்டினான்.
ஃபிர்தவுஸ், ஷாஜிதாவின் ஆல்பத்தை எடுத்துக் கொண்டு யாசருடன் சமீர் வீட்டிற்கு வந்தாள். சமீரின் அக்கா முசினா தன் கணவன் மற்றும் குழந்தையுடன் வந்திருந்தாள்.
முஸ்கான் , ஃபிர்தவுஸிடம் " அண்ணியோட ஆல்பம் எடுத்துட்டு வந்துடிங்களா? " என ஆர்வமாக கேட்க , "ம்ம்ம் எடுத்துட்டு வந்துட்டோம் " என அந்தப் பையை முஸ்கானிடம் கொடுத்தாள் , ஃபிர்தவுஸ்.
அதை எடுத்துப் பார்க்கப் போன முஸ்கானிடம் , " ஷாஜிதா முன்னாடி இதைப் பார்க்க வேணாம். ஏன்னா இந்த ஆல்பத்தில தாத்தா பாட்டி தான் அதிகமா இருப்பாங்க... அதுவும் தாத்தாவோட தான் அதிகமா இருப்பாள். தாத்தாவை பார்த்துட்டா அவளை கட்டுப்படுத்த முடியாது.. அழ ஆரம்பித்துவிடுவாள். அதனால அவள் தூங்குனதுக்கு அப்பறம் இல்லாத நேரத்தில ஆல்பத்தை பாருங்க " என ஃபிர்தவுஸ் கூறியதும் , "ம்ம்ம் சரி... ஆனா இன்னும் அவங்க வரலை தானே இப்ப பார்கவா? " என முஸ்கான் கேட்க , "ஏய் இப்ப அவங்க ரெண்டு பேரும் வர நேரம் போய் சமீர் ரூம்ல வை... அப்றம் பார்த்துக்கலாம்... " என அஸ்மா அதட்டியதும் முஸ்கான் சரியென அமைதியாக சமீர் அறையில் சென்று அந்தப் பையை வைத்துவிட்டு வந்தாள்.
சமீர் மற்றும் ஷாஜிதா வீட்டிற்கு வந்து சேர்ந்தனர். இருவரும் ஜோடியாக நடந்து வந்தனர். இருவரும் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டே நடந்தனர். அறையில் இருந்து வெளியே வந்த முஸ்கான், அதைப் பார்த்து விட , தன் கண்களை கசக்கி இது நிஜமா? என பார்த்தாள்.
உடனே முஸ்கான் , தன் அக்காவையும் ஃபிர்தவுஸையும் அழைத்து வந்து இருவரையும் காண்பிக்க , அவர்களும் ஆச்சரியமாக பார்த்துக் கொண்டிருந்தனர்.
முஸ்கான் , " ஏன் ஃபிர்தவுஸ் ஒருவேளை அண்ணி அவங்க மனசுல இருக்க காதலைச் சொல்லி இருப்பாங்களோ? " என ஃபிர்தவுஸிடம் சொன்னதும் , " அட நீ வேற... அதெல்லாம் இல்ல அந்தப் பக்கி சொல்லி இருக்க வாய்ப்பே இல்ல... " என்றதும் , " அப்ப ஏதோ நடந்திருக்கு... ஆனா என்ன நடந்திருக்கும்... " என முசினா கேட்க , " யாருக்குத் தெரியும்.. " என முஸ்கான் கூறியதும், " சரி என்ன நடக்குதுன்னு பார்க்கலாம்... " என அமைதியாக மறைந்திருந்துப் பார்த்தனர் மூவரும்.
சமீரும் ஷாஜிதாவும் ஜோடியாக மெல்ல நடைப்போட்டுக் கொண்டு வருவதைப் பார்த்த அஸ்மாவின் மனம் சந்தோஷத்தில் நிறைந்தது. இருவரும் எப்படியாவது இணைந்து விட்டால் போதும் என நினைத்தார்.
ஷாஜிதாவும் , சமீரும் ஒருவரையொருவர் பார்த்தபடி அன்ன நடைப் போட்டு கொண்டு வீட்டிற்குள் நுழைந்தார்கள்.
ஷாஜிதா , தன் அறைக்குள் நுழையும் முன் சமீர் தன்னைப் பார்க்கிறானா? என ஆவல் எழ, தாமதிக்காமல் எட்டிப் பார்த்தாள்.
சமீர் , தன் அறைக்குள் நுழையும் முன் ஷாஜிதா தன்னைப் பார்க்கிறாளா? என்ற ஆவல் அவனுக்கும் எழ , எட்டிப் பார்த்தான்.
சமீர் , தன்னைத் தான் பார்க்கிறான் என்பதை உணர்ந்த ஷாஜிதா , தன் நாக்கை கடித்துக் கொண்டு சட்டென்று உள்ளே நுழைந்துக் கொண்டாள்.
சமீர் தனக்குள் சிரித்துக் கொண்டு உள்ளே நுழைந்துக் கொண்டாள். மொத்தக் குடும்பமும் இவர்கள் இருவரையும் கவனித்துக் கொண்டிருப்பதை இருவரும் மறந்தேப் போனார்கள்.
முஸ்கான் , முசினா மற்றும் ஃபிர்தவுஸ் வாயைப் பிளந்து கொண்டு பார்த்தார்கள்.
பெற்றவர்கள் தங்களுக்குள் சிரித்துக் கொண்டு அமைதியாகி விட்டனர். யாசரும் முபாரக்வும் வியந்தபடி இருந்தனர்.
"டேய்! யாசர் என் மச்சானா டா இது? " என யாசரிடம் கேட்டதும் , " எனக்கும் அந்த சந்தேகம் இருக்கு... உனக்கு மச்சானா இருந்துட்டு இவனுக்கு எப்படி இப்டிலாம்... " என முபாரகை கலாய்த்ததும் அதை சற்று தாமதமாக புரிந்துக் கொண்ட முபாரக் , "அடேய்! நாரப்பயலே உன்ன " என அடிக்க வர ஓடிவிட்டான் யாசர்.
"நன்னாரி பையலே... என் கையில மாட்டுவளே அப்ப இருக்கு உனக்கு... " என அமைதியாக அமர்ந்தான்.
முஸ்கான் , "யக்கா! என்ன க்கா நடக்குது இங்க? ஒரு நிமிஷம் தலை சுத்துற மாதிரி இருக்கு... " என ஆச்சரியத்தின் உச்சியில் இருந்தாள்.
முசினா , " அடியேய் சும்மா இருடி... ஒருவேளை ஷாஜிதா காதலைச் சொல்லி இருப்பாளோ? "
முஸ்கான் , "இருக்கலாம்... ஏய் ஃபிர்தவுஸ் நீ என்ன நினைக்கிற? " என ஃபிர்தவுஸை பார்க்க , ஃபிர்தவுஸ் கண்ணீருடன் நின்றுக் கொண்டிருந்தாள்.
முசினா, " ஏய் என்னாச்சு மா? " என அக்கறையாய் கேட்டதும் ஃபிர்தவுஸ், "ஒன்னுமில்ல... இவள் காதலைச் சொல்லி இருப்பான்னு எனக்கு கொஞ்சமும் நம்பிக்கை இல்ல... ஆனா சமீர் அண்ணாவை நேசிக்கிறா அது மட்டும் உண்மைன்னு மட்டும் புரியுது... அவள் வாயாலே சொல்ல வைக்கனும்.. இப்ப அதுமட்டும் தான் வேலை " என கூறியதும் இருவரும் சரி என கூறினார்கள்.
அறைக்கு வந்த ஷாஜிதா , கண்ணாடியில் தன் பிம்பத்தை பார்த்து ரசித்துவிட்டு நாணமாய் தலையைப் பனித்து சிரித்தாள். பின் தொழுதவிட்டு உறங்கிவிட்டாள்.
கட்டிலில் அமர்ந்த சமீர் , தலையணையை தன் மடியில் வைத்துக்கொண்டு அமைதியாக அமர்ந்திருந்தான். வீட்டுக்கு வந்த சமீர் , மறுபடியும் தன் வண்டி சாவியை எடுத்துக் கொண்டு வெளியேச் சென்று விட்டான்.
ஷாஜிதாவை சாப்பிட அழைக்க வந்தார் அஸ்மா. ஷாஜிதா உறங்கிக் கொண்டிருப்பதைப் பார்த்து , எதுவும் பேசாமல் அமைதியாக வெளியில் சென்றார்.
சமீரை சாப்பிட சமீர் அறைக்குச் சென்றார் , அஸ்மா. ஆனால் சமீர் வெளியில் செல்வதைப் பார்த்து அழைப்பதற்குள் சமீர் தன் வண்டியில் கிளம்பிவிட்டான்.
அஸ்மா , ' ரெண்டு பேரும் சாப்பிடலை.. என்ன நடந்துச்சு தெரியலை? ' என மனதில் நினைத்துக் கொண்டு தொலைக்காட்சி பார்க்கத் தொடங்கினார் தன் கணவருடன் சேர்ந்து.
இஷானா தூங்கிக் கொண்டிருந்தாள். யாசர் , முபாரக் , முசினா , ஃபிர்தவுஸ் மற்றும் முஸ்கான் மாடியில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள்.
அனைவருக்கும் இருவருக்கிடையில் என்ன நடந்திருக்கும் என தீவிரமாக யோசித்துக் கொண்டிருந்தனர்.
"மாம்ஸ் அப்படி என்ன நடந்திருக்கும் ? இவங்க ரெண்டு பேரும் சரியில்லை " என முஸ்கான் ஆரம்பிக்க ,
" தெரியலை முஸ்கான்.. ஆனா ஏதோ நடந்திருக்கு! அதுமட்டும் உண்மை... " என முபாரக் கூற
" ஆமா... இல்லன்னா வீட்டுல நாம இருக்கோம் தெரியாத அளவுக்கு அவங்க நடந்திருக்க மாட்டாங்க ... என்னவா இருக்கும் ! " என யாசர் தீவிரமாக யோசிக்க
" இதெல்லாம் இருக்கட்டும்... இப்ப ஷாஜிதா மனசுல இருக்க காதலை சமீர் அண்ணா கிட்ட எப்படி வெளியே கொண்டு வரது யோசிப்போம்... " என ஃபிர்தவுஸ் கூறியவுடன்
"ஹே ஆமா .. என்கிட்ட ஒரு யோசனை இருக்கு சொல்லவா? " என முஸ்கான் கேட்க
" ம்ம்ம் சொல்லு முஸ்கான்... " - முசினா
" அண்ணாவுக்கு ஒரு பொண்ணை பார்த்துட்டோம்... அவங்களை நிச்சயம் பண்ண போறோம்... சொல்லி நாமலே கதையை கட்டி விடுவோம் ... எப்படி இருந்தாலும் பொண்ணு அவங்கத்தான். அவங்களையே கற்பனையா மாற்றி சொல்லலாம்... " என முஸ்கான் யோசனை கூறியதும்
"அட அட அட என் மாமன் பொண்ணுக்குள்ள இப்படி ஒரு அறிவா? " என யாசர் பாராட்ட
"அடியேய் இது சரிபட்டு வருமா? " என முசினா யோசிக்க
" அதெல்லாம் சரி வரும்... " என ஃபிர்தவுஸ் கூறியதும்
" அப்றம் என்ன பிளானை தொடங்கிட வேண்டியது தான்..." என முபாரக் கூறியதும் , அனைவரும் மென்மையாய் சிரித்தனர்.
சமீர், கடற்கரை மணலில் வண்டியில் சாய்ந்தபடி நின்றிருந்தான். சிறிது நேரத்தில் நஃபீஸ் , அகிலன் மற்றும் சூரஜ் வந்தனர்.
சமீர் , அவர்கள் வந்ததைக் கூட உணராமல் தனக்குள் சிரித்துக் கொண்டிருந்தான். சமீர் இருக்கும் நிலையை பார்த்து வியந்தனர்.
அகிலன் , சமீரின் தோளில் கைவைத்து , "டேய்.... மச்சி " என அழைத்தபின் சமீர் நினைவிற்கு வந்தான்.
தன் நண்பர்களை பார்த்து , "டேய்! நீங்களா எப்ப டா வந்தீங்க? " என பதற்றமாக கேட்டதும் , மூவரும் சிரித்துக் கொண்டே , " டேய் டேய் இப்ப எதுக்கு பதறுற? நாங்க வந்து பத்து நிமிஷம் ஆகுது" என்றான் நஃபீஸ்.
" எது பத்து நிமிஷமா? " - சமீர்
"ஆமா டா அப்படி என்ன யோசனை.. " என சூரஜ் கேட்டதும் சமீர் மென்மையாய் புன்னகைச் செய்துக் கொண்டே , இன்று நடந்த அத்தனையும் ஒன்று விடாமல் கூறி முடித்தான்.
" டேய் மச்சி ரொம்ப சந்தோஷம் டா... " என்றான் நஃபீஸ்.
"ஷாஜி இன்னுமும் உணரலை என்கிட்ட அவள் காதலை வெளிப்படுத்தினது... உணர்ந்தேன் அவ்ளோதான்... என்னை உண்டில்லை பண்ணிடுவாள்.. " என சிரித்தான் , சமீர்.
"ஆனா உன் கோபம் ரோஷம் எல்லாம் எங்க டா போச்சு? ஷாஜிதா கிட்ட மட்டும் எப்படி உன்கிட்ட இவ்வளவு பொறுமையா இருக்க முடிஞ்சிது உன்னால? " என சூரஜ் கேட்டதும் ,
"ம்ஹும் தெரியலை மச்சி " என தலையசைத்துக் கொண்டே கூறினான் சமீர்.
" இதுதான்டா காதல். நமக்காக நமக்கு பிடிச்சவங்களுக்காக நம்மலையே மாத்திப்போம்.. " என அகிலன் கூறியதும்
"உண்மை தான்டா... ஷாஜிதா இப்ப என் உயிராவே மாறிட்டா... " என்றான் சமீர் காதலோடு.
"ஆங் சொல்லவே மறந்துட்டேன் நாளைக்கு எஸ்பியை மீட் பண்ணணும் சொன்னா ஷாஜி... ஆனா ஏன் தெரியலை..." என்றான் சமீர். சமீர் கூறியதை கேட்டதும் மூவரும் அதிர்ந்தனர்.
" என்னடா சொல்ற? எஸ்பியை எதுக்கு பார்க்கனும்? என்னவா இருக்கும்? " என நஃபீஸ் புரியாமல் கேட்க , " எனக்கும் அந்த கேள்வி இருக்கு... சரி பார்ப்போம் முதல்ல எஸ்பிக்கு போன் போட்டு இந்த விஷயத்தை சொல்லுவோம்... " என்ற சமீர் எஸ்பி திவ்யசாந்தியிடம் அலைபேசி வழியாக தகவல் கூறினான்.
நாளைக்கான விடியல் நல்லதாக அமையுமா? இல்லை கெட்டதாக அமையுமா?பார்ப்போம்
🖤 தொடரும் 🖤
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro