Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

💞 33 💞

சமீரும் ஷாஜிதாவும் ஜாராவின் கல்லூரிக்கு வந்து சேர்ந்தனர். சமீர்,  மகிழுந்தை விட்டு இறங்கியதும் ஷாஜிதா சமீரை நோக்கி ,  " நீங்க இங்கேயே இருங்க வந்துடுறேன்... " என்றவுடன் ,  " நானும் வரேன் வா " என சமீர், ஷாஜிதாவைப் பார்க்க ,  " தேவையில்லை " என முறைத்தாள்.

சமீர் , " ஏன்? நான் வந்தா என்ன ? "  என கேட்டதும் ,  "நான்தான் சொல்றேன்ல நான் மட்டும் போறேன்'ன்னு... " என கோபத்தில் சற்று அழுத்தமாகவே ஷாஜிதா கேட்டதும் , " நான் ஏன் வரக்கூடாது'ன்னு சொல்ற? " என சமீர் கடுமையாக முறைக்க , " ஏன்னா! எனக்கே எனக்கு'ன்னு இருக்கிற ஒரே உறவு நீங்க தான் நீங்க மட்டும் தான்... உங்களையும் இழக்க நான் தயாரா இல்ல... இங்கேயே இருங்க... " என கண்களில் கண்ணீரோடு கூறிய ஷாஜிதா தான் என்ன பேசுகிறோம்? என உணராமல் அறியாமல் தன் காதலை வெளிபடுத்தி விட்டு வேகமாக கல்லூரிக்குள் நுழைந்தாள்.

ஷாஜிதா கூறிய வார்த்தைகளில் திகைப்பும் வியப்புமாய் உறைந்திருந்தான் சமீர்.  என்ன சொல்வதென்று தெரியாமல் அதே இடத்தில் அசையாமல் நின்றிருந்தான், சமீர்.

ஷாஜிதா ,  ஜாராவை காண வேண்டும் என அனுமதி கேட்டதும் , ஜாராவை அழைப்பை விடுத்தனர்.  பத்து நிமிடங்களில் ஜாரா வந்தாள்.

ஷாஜிதாவைப் பார்த்ததும் ஜாராவின் மனம் மகிழ்ந்தது. ஷாஜிதா , ஜாராவைப் பார்த்ததும் ஷாஜிதாவின் மனமும் மகிழ்ந்தது.

ஜாரா, " ஷா...ஜிதா... " என முணுமுணுத்தப்படி ஷாஜிதாவின் அருகில் வந்தாள்.

ஷாஜிதா, தனது அருகில் வந்த ஜாராவை அணைத்துக் கொண்டு , " எதாவது பிரச்சினையா? ஜாரா..."  என கண்கள் கலங்க கேட்டவளிடம்  , "அதெல்லாம் இல்ல.. இப்ப எதுக்கு சீன் போடுற! "   என ஜாரா கூறியதும் , தன்னை விலக்கிக் கொண்டு ஷாஜிதா ஜாராவை உற்றுப் பார்த்து , " நல்லாவே பொய் சொல்ற ஜாரா... சரி எதுவா இருந்தாலும் பரவாயில்லை... ஒன்னு சொல்றேன்... உனக்கு எந்தப் பிரச்சினை இருந்தாலும் உன் கணவனை தவிர்த்து வேற யார்கிட்டயும் சொல்லாத...  அதுவும் முக்கியமா உன் தோழிகள் உன் தங்கிச்சி அப்பறம் உன் அம்மா இப்படி யார்கிட்டயும் சொல்லாத... உனக்கு நல்லது இல்ல.. " என சொன்னதும் ,  " ஓ அவங்க எல்லாரும் கேட்டவங்க நீ தான் நல்லவள் அப்படிதானே.."  என ஜாரா எரிச்சலாக ஷாஜிதாவை பார்த்ததும் , " ம்ஹும் அப்படி இல்ல ஜாரா.. சொன்னா புரிஞ்சிக்கோ உன் நல்லதுக்கு தான் சொல்றேன்... உன்ன சுத்தி இருக்கவங்க யாரும் நல்லவங்க கிடையாது.. உனக்கு ஒரு நல்ல புகுந்த வீடு கிடைச்சிருக்கு அதை நீயே கெடுத்துக்காத ஜாரா.. அவ்ளோ தான் சொல்வேன்... எனக்கு நீ முக்கியம். நான் வரேன் " என ஷாஜிதா கூறிவிட்டு ஜாராவை பார்க்காமல் சென்று விட்டாள்.

ஜாரா , ஷாஜிதா சென்ற திசையே பார்த்தபடி , ' என்னை மன்னிச்சிடு ஷாஜிதா.. உன்ன பார்த்ததும் என் மனசு அவ்ளோ சந்தோஷப்பட்டுச்சு.. ஆனா ஏதோ ஒன்னு என்னை தடுக்குது... இப்ப என் மனசு என்னவோ கொஞ்சம் தெளிவான மாதிரி ஒரு உணர்வு ' என மனதில் நினைத்த வண்ணம் தன் வகுப்பை நோக்கி நடந்தாள்.

ஷாஜிதா , தன் மனதில் உள்ளதை கூறிவிட்டு சென்றதும் இது கனவா? நினைவா? என்ற நிலையில் சமீர் இருந்தான். 

'ஏன்டி எனக்கு எதாவது ஆகிடும் பயந்து உன்னேயே நீ கஷ்டப்படுத்துக்கிற? உன்ன பார்த்துக்க தான்டி நானிருக்க. நான் பொறந்திருக்கிறதே உனக்காகத் தானடி.. உன் மனசுல இருக்க காதலை எப்படி வெளியே கொண்டு வரனும் எனக்குத் தெரியும்... '  என மனதில் நினைத்த சமீர் , தன்னவளின் மனதில் தான் இருக்கிறோம் என்ற நிம்மதியில் நிறைந்தது ஆணவன் மனம்.

பாவம் சமீர் மனம் ஒன்றை மறந்துவிட்டது. தன்னை விட மிக நன்றாக திட்டம் போடக் கூடியவன் அல்லாஹ் ஒருவனே என்பதை தற்செயலாக மறந்திருந்தது.

சிறிது நேரத்தில் ஷாஜிதா வர , சமீர் மெல்லிய சிரிப்போடு தன்னவளை பார்த்துக் கொண்டிருந்தான். 'சரியான சண்டக்காரி... '  என சமீர் , தனக்குள் சிரித்தான்.

ஷாஜிதா ,  சமீர் அருகில் வந்தவுடன் , சமீர் ,  " பார்த்துட்டல இப்ப வீட்டுக்கு போலாமா " என கண்களில் குறும்பு மின்ன கேட்டதும் , "அ...அ...அது வந்து ஃபி...ஃபிர்தவுஸ் அண்ணனையும் பா...பார்க்கனும். " என்றதும் ,  சமீருக்கு இறங்கிய கோபம் மறுபடியும் ஏறிக்கொண்டது.

என்ன சொன்னாலும் கேட்க மாட்டாள் என்பதை உணர்ந்த சமீர் , "ஏறு .... " என தன் பற்களைக் கடித்துக் கொண்டே மகிழுந்தில் அமர , ஷாஜிதாவும் நல்லது என மனதில் நினைத்துக் கொண்டு அமர்ந்துக் கொண்டாள்.

ஷாஜிதா , இன்னுமும் உணரவில்லை தான் சமீரிடம் என்ன பேசினோம் என்று. ஷாஜிதா, சாய்ந்துக் கொண்டு கண்ணை மூடினாள்.

ஜாரா எல்லாரிடமும் தான்தான் தேநீரில் விஷத்தை கலந்தது என தவறாக எண்ணிக் கொண்டு காண்பித்தது , சல்மா அதை நம்பி தன்னை ஏசியது ; ஷாரூக் தன்னை அறைந்து அவமானப்படுத்தியது ; தன் தந்தையே தன்னை வெளியில் விரட்டியது எல்லாம்  ஷாஜிதாவின் மனத்திரையில் ஓடியதும் ஷாஜிதாவின் முகம் கோபத்தில் சிவந்தது. ஷாஜிதாவால் தன் கோபத்தை அடக்க முடியவில்லை. ஷாஜிதா , தன் கைகளை இறுக்கமாக மூடி அதை கட்டுப்படுத்திக் கொண்டிருந்தாள். ஆனால், ஷாஜிதாவால் எவ்வளவு கட்டுப்படுத்தியும் முடியவில்லை.

ஷாஜிதாவால் தன் உணர்வுகளை ஒரு கட்டத்தில் கட்டுப்படுத்த முடியாமல் ,  தன் சுவாசத்தை வேகமாக இழுத்துக் கொண்டே , "நோஓஓஓஓஓ.... "  என அதிரும் அளவிற்கு கத்தினாள். ஷாஜிதாவின் கத்தலை கேட்டவுடன் , சமீர் பயந்து மகிழுந்தை நிறுத்திவிட்டு ,  "ஷாஜி... ஷாஜி "  என அவளின் தோளை உலுக்கினான்.

அதில் உணர்வு பெற்ற ஷாஜிதா , "ஒரு பத்து நிமிஷம் "  என சமீரிடம் கூறிவிட்டு மகிழுந்தை விட்டு இறங்கினாள்.

ஷாஜிதாவின் நிலையைக் கண்டு சமீர் , பயந்துப் போனான். ' இவளை இப்படியே விட்டா நல்லதுக்கு இல்ல... இவள் மனசுல தான் நாம இருக்கோம் தெரிஞ்சிடுச்சு.. மிரட்டியாவது கல்யாணத்துக்கு சம்மதிக்க வைக்கனும்... இப்படியே விட்டா அவ்ளோ தான்..'  என சமீர் நினைத்துக் கொண்டே ,  மகிழுந்தை விட்டு இறங்கினான்.

ஷாஜிதா , அமைதியாக நின்றுக் கொண்டே தீவிரமாக யோசிக்கத் தொடங்கினாள். தன் வாழ்வை அழித்தவனா? இல்லை தன் அக்காவா? என ஷாஜிதாவின் மனதில் போராட்டம் நடந்துக் கொண்டிருந்தது .

அங்கிருந்த கட்டையில் அமர்ந்த ஷாஜிதாவின் கண்களில் கண்ணீர் மட்டுமே வந்தது.  ' முடியாது.. முடியவே முடியாது... அந்த கெடுக்கெட்டவனை நான் போய் பார்க்க மாட்டேன்...  அவன் முகத்தில முழிக்கவே மாட்டேன்... என்னை ஏமாத்துனவனை என்னிக்குமே மறக்கவும் மாட்டேன் மன்னிக்கவும் மாட்டேன்... அவன் வாழ்க்கை எப்படி போனால் எனக்கென்ன? அவன் யார் எனக்கு ? அல்லாஹ்... ஜாரா ஜாரா... ஜாரா... எதுக்குடி உன் வாழ்க்கையே நீயே அழிச்சிக்கிட்ட ?  என்னால முடியலை ... அந்த பாவிக்கு சொல் புத்தியும் கிடையாது! சுய புத்தியும் கிடையாது! எனக்கு உன்ன நினைச்சா தான் பயமா இருக்கு... காலையில இருந்து மனசு தப்பாவே நினைக்குது உன் விஷயத்தில... நான் இப்ப என்ன பண்றது?..."

ஷாஜிதாவின் முடிவு என்னவாக இருக்கும்? காத்திருந்து பார்ப்போம்

🖤தொடரும்🖤

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro