Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

💞 32 💞

ஃபிர்தவுஸ் , யாசரை அழைத்துக் கொண்டு தன் பிறந்த வீட்டிற்கு ஷாஜிதாவின் சிறுவயதுப் புகைப்படங்களை அடங்கிய ஆல்பத்தை எடுக்கச் சென்றாள்.

தன் வீட்டிற்கு வந்த மகளைப் பார்த்து மலர்ந்த சல்மா ,  சிரித்த முகத்துடன் , "ஃபிர்தவுஸ்... வா...வா... வாங்க மாப்பிள்ளை... " என இருவரையும் அழைத்ததும் , " நான் இங்க உறவு கொண்டாட வரலை ... ஷாஜிதாவோட ஆல்பத்தை எடுக்க வந்த... அதை எடுத்துட்டு போய்ட்டே இருப்பேன்... ஏங்க வாங்க!..." என யாசரின் கரத்தைப் பிடித்து இழுத்துக்கொண்டு அறைக்குச் சென்றாள்.

அறையில் இருந்த ஸ்லாபில் யாசர் ஏறி ஒரு கட்டைப் பையை எடுக்க , அதில் இரண்டு ஆல்பங்கள் இருந்தது. அதை எடுத்துக் கொண்டு வெளியே வந்தாள்.

ஏதோ நினைவு வர உடனே ஷாரூக் அறைக்குச் சென்றாள். அங்கு ஷாஜிதாவின் புகைப்படங்களை தேடினாள்.

அங்கேயும் ஒருசிலது இருக்க , அதையும் எடுத்துக் கொண்டு களைத்தப் பொருட்களை எல்லாம் அடுக்கி வைத்துவிட்டு கீழே இறங்கினாள்.

சல்மா ,  பாலை காய்ச்சி எடுத்துக் வந்து யாசரிடம் நீட்ட , " மன்னிக்கனும்... எனக்கு வேணாம்... "  என்று கூறிய பொழுது , " ஏங்க எல்லாமே எடுத்தாச்சு நாம கிளம்பலாம் "  என்று கூறியபடி இறங்கி வந்தாள் , ஃபிர்தவுஸ்.

யாசர் , " ம்ம்ம் போலாம் " என்றவுடன் , "ஏய் நில்லுடி... "  என சல்மா தடுக்க, " நிக்கிறதுக்கு எல்லாம் எனக்கு நேரமில்ல... எனக்கு நிறைய வேலை இருக்கு...  ஏங்க வாங்க போகலாம்... "  என அவசரமாக சென்ற ஃபிர்தவுஸை ,  "ஏய் நில்லுடி.."  என கோபமாய் கத்தியவுடன் , " இப்ப எதுக்கு கத்துற?" என ஃபிர்தவுஸ் தன் அம்மாவின் புறம் திரும்பி கேட்டதும்,

"என்ன டி உன்னை பெத்தவள் என்னை கொல்ல திட்டம் போட்டவள் கூட போய் உறவு கொண்டாடுறியே... உனக்கு வெக்கமா இல்ல? " என சல்மா கோபமாக கேட்டவுடன் ,

" ஷாஜிதா ஒன்றும் கொல்ல திட்டம் போடலை சரியா... ஷாஜிதா ரொம்ப நல்லவள்... அப்பாவி... அவள் தாத்தா பாட்டியோட வளர்ப்பு... " என ஃபிர்தவுஸ் பதிலளித்ததும் ,

" என் அம்மா அப்பா வளர்ப்பு சொல்லி என் அம்மா அப்பாவை அசிங்கப்படுத்தாத... " - சல்மா

"அம்மா போதும் நிறுத்துறீயா உன் பேச்சை! உனக்கு என்ன தெரியும் ஷாஜிதாவை பற்றி?  அவள் ரொம்ப நல்லவள்... என்ன சொன்ன உன் அம்மா அப்பாவை அவள் அசிங்கப்படுத்துறாளா? உன் அம்மா அப்பாவை  அசிங்கப்படுத்துறது ஷாஜிதா இல்ல ம்மா நீ... நீதான் ... ஷாஜிதா சின்ன வயசுல இருந்து எப்படி வளர்ந்தா அப்படி உனக்கு மட்டுமல்ல நம்ம மொத்த குடும்பத்துக்குமே தெரியும். அப்படி இருந்தும் நீ எப்படி அதை நம்புனீயோ? நான் இப்ப சொல்றேன் நல்லா  கேட்டுக்கோ ம்மா.... கூடிய சீக்கிரமே எல்லா உண்மையும் தெரிய வரும்... உண்மை தெரிய வரும்போது அவளை பெத்தவங்க முதல் அவளை காதலிச்சு துரோகம் செய்தவன் வரைக்கும் எல்லாரும் ஒருத்தர் விடாம ஷாஜிதா காலுல விழுந்து மன்னிப்பு கேட்கிற நாள் வரும்... அது ரொம்ப தூரம் இல்ல.... அந்த நாள் பக்கத்தில வந்துட்டு இருக்கு... Count your days " என கோபத்தில் கூறிவிட்டு யாசர் கரத்தைப் பிடித்து இழுத்து சென்றாள் , ஃபிர்தவுஸ்.

ஃபிர்தவுஸ், சென்ற பின் வீடே அமைதியாக இருந்தது. அஸ்மாவிற்கு ஏனோ அப்போதும் உண்மையை உணராமல் ஷாஜிதா மேல் கோபம் கொண்டார்.

ஷாஜிதா , சமீரின் நினைவில் தான் இருந்தாள்.  ஷாஜிதா மனதில் , ' பப்பு நான் உங்களை விரும்புறேன்... ஆனா அதை உங்ககிட்ட சொன்னால் உங்களுக்கு எதாவது ஆகிடுமோ பயமா இருக்கு பப்பு... எனக்கே எனக்குன்னு இருக்க ஒரே உறவு நீங்க தான்... உங்களையும் இழக்க நான் விரும்பலை... உங்களுக்கு எதாவது ஆகிடுச்சு அப்படின்னா அதை தாங்கிக்கிற சக்தி எனக்கு இல்ல.... அதனால நாளைக்கே இதுக்கு ஒரு முடிவை கட்டிட்டு என் மனசில இருக்கிறதை உங்க கிட்ட சொல்லப் போறேன்... அதுவரைக்கும் காத்திருங்க பப்பு... ' என முடிவெடுத்தாள். ஆனால் பாவம் தனக்கு நேர போகும் ஆபத்தை அறியவில்லை.

அன்றைய வகுப்பு முடிய ,  அனைவரும் வீட்டிற்கு சென்றனர்.  ஷாஜிதா வருவதற்கு முன்பே சமீர் அங்கு வந்துவிட்டான்.  ஷாஜிதா வண்டியில் ஏறாமல் , சமீரைப் பார்த்து , " எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு நீங்க போங்க நான் வீட்டுக்கு வந்துடுறேன்... "  என்றதும் ,  " நானும் வரேன் எங்க போகனும்  சொல்லு ஷாஜி... " என ஷாஜிதாவின் கண்களைப் பார்த்து நேராக சமீர் கேட்டதும் , ஷாஜிதா , " அ....அது வந்து ஜா...ஜாராவைப் பார்க்கனும் அவள் காலேஜ்க்கு போகனும்..." என தயங்கி தயங்கி சமீரைப் பார்க்க கடும் கோபத்தோடு தன்னை பார்ப்பதை உணர்ந்த ஷாஜிதா பயத்தில் உடம்பெல்லாம் நடுங்கியது.

சமீர் , தன் கோபத்தை அடக்கிக் கொண்டு ,  " வண்டியில ஏறு...... " என அழுத்தமாக சொன்னதும் ஷாஜிதா பயந்து அமைதியாக மகிழுந்தில் ஏறி அமர்ந்துக் கொண்டாள்.

சமீர் , மகிழுந்தை வேகமாக வண்டியை செலுத்தினான். சமீர் வண்டியை செலுத்தியே விதமே ஷாஜிதாவிற்கு உணர்த்தியது தன்னவனின் கோபத்தை. ஷாஜிதாவின் உடம்பெல்லாம் நடுங்கத் தொடங்கியது.  மனதில் ,  ' அல்லாஹ் பப்பு கிட்ட பேச தைரியம் கொடு... ஜாராவுக்கு ஏதோ பிரச்சினை இருக்கு... நான் போய் அவளை பார்த்துட்டேனா போதும் அவளுக்கு தெளிவு கிடைக்கும்... தயவுசெய்து அந்த தைரியத்தை நீ எனக்குக் கொடு... '  என அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்த படி இருந்தாள்.

வேகமாக மகிழுந்தை ஒரு வெற்று இடத்திற்கு கொண்டு வந்து நிறுத்திய சமீர் , ஷாஜிதாவை பார்த்த , " இறங்கு பேசனும்... "  என முறைத்தபடி இறங்கி வெளியே நின்றான்.

சமீருக்கு , ஷாஜிதா தான் ஜாராவை பார்க்க வேண்டும் என்று கூறியவுடன் எரிச்சலும் கோபமும் வந்துவிட்டது. ஷாஜிதா, பயந்துக் கொண்டே இறங்கி சமீர் முன் வந்து நின்றாள்.

தன் முன் நின்ற ஷாஜிதாவை கோபத்தோடு பார்த்த சமீர் , " ஏய் மனசுல என்ன டி நினைச்சிட்டு இருக்க?  " என முறைக்க ,  ' உங்களைத் தான் பப்பு நினைச்சிட்டு இருக்கேன்... உங்க மறமண்டைக்கு தான் அது புரிய மாட்டேன்து...'  என மனதில் நினைத்தபடி விழித்தாள், ஷாஜிதா.

ஷாஜிதா விழிப்பதைப் பார்த்த சமீர் , " இப்படி முழிச்சா என்ன அர்த்தம்? "  என மறுபடியும் முறைத்தான். ஷாஜிதா , அமைதியாக சமீரையேப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

சமீர் , " இப்ப எதுக்கு ஜாராவைப் பார்க்கனும் நினைக்கிற? " என சற்று குரலில் கடுமையைக் காட்டியபடியே கேட்டான்.

ஷாஜிதா , " அ...அது அ....அவளுக்கு ஏதோ பிரச்சனையோ தோனுது... அதான் என்னன்னு...." என கூறி முடிப்பதற்குள் சமீர் , "ஏய்.... " என ஷாஜிதாவின் எதிரே எச்சரிக்கை செய்யும் விதமாக தன் விரலை நீட்டி , " உனக்கு அறிவிருக்கா? உன்னை அழிக்கனும் நினைத்தவளைப் போய் பார்க்கனும் நினைக்கிற? காப்பாத்தனும் நினைக்கிற? உனக்கு என்ன பைத்தியமா? "

என கேட்டதும் , " நான் ஜாராவைப் பார்க்கனும் அவ்ளோதான்... "  என   கறாராக ஷாஜிதா கூறியவுடன் , சமீர் சலிப்பு தட்டிய படி வேறுபக்கம் திரும்பியதும், ஷாஜிதா சிரித்துக் கொண்டே சமீரை நோக்கி , தன் கைகளால் அவனை சுற்றி முத்தமொன்றை பறக்க விட்டதை சமீர் மகிழுந்தின் கண்ணாடி வழியாக கவனித்துவிட , வேகமாக ஷாஜிதாவைப் பார்த்தான். ஷாஜிதா, சமீர் திரும்புவதை உணர்ந்ததும் ஒன்றும் தெரியாதப் பிள்ளை போல் முகத்தை வைத்துக் கொண்டு நின்றிருந்தாள்.

சமீர் , " ஏய்! இப்ப என்ன பண்ண?  "

ஷாஜிதா , " நா..நான் ஒன்னும் பண்ணலையே... " என சாதாரணமாக கூறியதும் ," இ...இல்ல இப்ப நீ ஒன்னு பண்ண... நான் பார்த்தேன்... "  என சமீர் கூறிக் கொண்டே அருகில் வந்தான்.

ஷாஜிதா உடனே ,  " இப்ப ஜாராவைப் பார்க்கனும் நானே போய்க்கிறேன்... "  என பேச்சை மாற்றியதும் , " சொன்னா மட்டும் கேட்கவா போற... வா  " என  சலித்துக் கொண்டு மகிழுந்தில் ஏறினான், சமீர்.

ஷாஜிதா , 'அவ்வ்வ் எவ்ளோ கியூட் பப்பு நீங்க... ' என சமீரைப் ரசித்தபடி மகிழுந்தில் ஏறி அமர்ந்துக் கொண்டாள்.

சமீர், ' இன்னிக்கி என்ன மேடம் ஒரு டைப்ஆ இருக்காங்க... என்னாச்சு இவளுக்கு... முகம் கூட இவ்வளவு பளிச்சென்று  இருக்கு... என்னவா இருக்கும்? இப்ப எதுக்கு மேடம் ஜாராவைப் பார்க்கப் போறாள்? ஒன்னும் புரியலை ' என மனதில் யோசித்துக் கொண்டே மகிழுந்தை செலுத்தினான்.

ஷாஜிதா , ' ஜாராவைப் பார்க்கனும் சொன்னதற்கே இவ்வளவு கோபப்படுறாரு... ஃபிர்தவுஸ் அண்ணனை பார்க்கனும் சொன்னனா என்ன பண்ணுவாரோ தெரியலை... ஆனா பேசி தானே ஆகனும்... ஜாராவோட வாழ்க்கைக்காக! அல்லாஹ் ப்ளீஸ் எனக்கு துணையா இரு ' என மனதில் நினைத்துக் கொண்டு சமீரைப் பார்த்தாள்.

சமீர் வண்டியை செலுத்திக் கொண்டிருந்தான். சமீரைப் பார்த்து மெலிதாய் புன்னகை செய்தாள். ' உங்களோட இருக்கிறப்ப உணர பாதுகாப்பு வேற யார்கிட்டயும் உணர்ந்ததில்லை பப்பு. எப்படி பப்பு என்மேல இவ்வளவு அன்பா உங்களால இருக்க முடியுது? உங்களை எவ்ளோ காயப்படுத்தி இருக்கேன்... ஆனா அதை எதையும் பொருட்படுத்தாம , எனக்காக இவ்வளவும் எப்படி பப்பு உங்களால செய்ய முடியுது? உங்க இடத்தில நான் இருந்திருந்தா இவ்வளவு பொறுமையா இருந்திருப்பனா  மாட்டேன்.  கண்டிப்பா உங்களை நான் நல்லா பார்த்துப்பேன் பப்பு. ' என நினைத்துக் கொண்டு வேறுப்பக்கம் திரும்பித் தன் கண்களைத் துடைத்துக் கொண்டாள், ஷாஜிதா. இதை எதுவும் கவனிக்காமல் சமீர் வண்டியை செலுத்திக் கொண்டிருந்தான்.

🖤 தொடரும் 🖤

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro