💞 31 💞
சமீர், தன் மனதின் வலிகளை எல்லாம் மறைத்துக் கொண்டு , மகிழுந்தை விட்டு இறங்கி தன் இடத்தை நோக்கி நடக்கலானான்.
ஷாஜிதாவின் மனம் வார்த்தைகளால் விவரிக்க முடியாத அளவுக்கு வேதனையை அனுபவித்துக் கொண்டிருந்தது. இத்தனையையும் மீறி ஷாஜிதாவின் மனம் ஜாராவை நினைத்தது.
ஷாஜிதா , ' ஜாரா! உனக்கு என்னாச்சு டி... எதாவது பிரச்சனையில சிக்கியிருக்கியா? இல்ல என்ன? எனக்கு ஒன்னுமே புரியலை.... உன் நினைப்பு தான் இன்னிக்கி எனக்கு அதிகமா இருக்கு.... ' என மனதிலே ஜாராவை நினைத்துப் பதறினாள்.
ஒரு பக்கம் தவறே செய்யாத தன்னவனை இரக்கமின்றி அடித்ததை நினைத்து மனம் வலித்துக் கொண்டிருக்க , இன்னொரு பக்கம் தன் அக்காவை நினைத்து வருந்திக் கொண்டிருக்க , என்ன செய்வது எனத் தெரியாமல் அப்படியே அமர்ந்திருந்தாள் , ஷாஜிதா.
ஷாஜிதா , அடுத்து என்ன செய்ய வேண்டும் என யோசிக்கத் தொடங்கினாள். சமீர் இருக்கும் இடத்தை நோக்கி நடந்தாள் , ஷாஜிதா.
சமீர் தன் இடத்தில் அமர்ந்திருந்தான். சமீரின் கைகள் புத்தகத்தைப் புரட்டினாலும் , மனம் ஷாஜிதாவையே நினைத்துக் கொண்டிருந்தது.
அப்போது , "உள்ளே வரலாமா? " என்ற குரலை கேட்ட , சமீர் தன் நினைவுகளில் இருந்து மீண்டு, யாரென பார்த்தான்.
அங்கே , முதலாம் ஆண்டு படிக்கும் மாணவி ஒருத்தி நின்றிருந்தாள். அவளைப் பார்த்து சமீர் , "ம்ம்ம் உள்ள வாங்க. " என அனுமதி கொடுத்தான்.
அந்த மாணவி சமீரிடம் , " ஸார் , எனக்கு ஒரு டவுட்.... " எனக் கூறிக்கொண்டே சமீருடன் நெருங்கி நின்றாள்.
அதை உணர்ந்த சமீர் , " ஒரு நிமிஷம் " என எழுந்து அவளிடம் இருந்து தள்ளி நின்று , " இப்ப கேளுங்க ! " என்றான்.
அவளோ , ' ஆமா... டவுட் இருந்தா தானே கேட்கிறதுக்கு.... நானே உங்களைத் தான் பார்க்க வந்த...' என மனதில் நினைத்துக் கொண்டிருக்க , அவளை உற்று கவனித்த சமீருக்கு அவளின் எண்ணம் புரிந்துக் கொண்டதும் , அதிர்ந்தான்.
"எந்த சந்தேகமா இருந்தாலும் வகுப்புக்கு வருவேன்ல அப்ப கேளு... இப்ப கிளம்பு " என சமீர் தன் குரலில் கடுமையைக் காட்டி கூறியதும் அவள் அடுத்து என்ன சொல்வதென்று தெரியாமல் அமைதியாக நின்றாள்.
அதன்பின் , " ஸார்.... ஐ லவ் யூ " என்றதும் சமீரை பார்க்க வந்த ஷாஜிதாவின் காதில் விழ , மனதிற்குள்ளே கதறிவிட்டாள். சமீரின் பதிலை எதிர்பாராமல் அங்கிருந்து கண்ணீருடன் ஓடிவிட்டாள், ஷாஜிதா.
சமீருக்கு , கோபம் சுளிரென ஏற, அதை அடக்கிக் கொண்டு , " இங்க பாருமா... நான் உனக்கு ஏத்தவன் கிடையாது... நான் வேற ஒரு பொண்ணை விரும்புற... அவள் தான் என் வாழ்க்கை... அவளோட மட்டும் தான் என் வாழ்க்கை .... கிளம்பு " என கூறிவிட்டு தன் இடத்தில் அமர்ந்துக் கொண்டான். அவள் அழுதுக் கொண்டே தன் வகுப்பறைக்குச் சென்றுவிட்டாள்.
சமீர் , 'ஏய் பட்டு! நீ சொல்ல வேண்டியதெல்லாம் யார் யாரோ சொல்றாங்கடி..... ஏன்டி இப்படி பண்ற?..... ' என தன் மனதிலே அழுதான்.
அதன்பின், ஒவ்வொரு ஆசிரியராக வரத் தொடங்கினார்கள். வகுப்புகளும் தொடங்கியது.
ஷாஜிதா , கல்லூரியின் ரெஸ்ட் ரூமிற்கு பக்கத்தில் ஒரு அறை இருந்தது. அதில் நுழைந்த ஷாஜிதா , கதறி அழுதாள்.
அந்த நேரம், பலமாக சிரிக்கும் சப்தம் கேட்டதும் , அதன் பக்கம் திரும்பினாள் ஷாஜிதா. அது வேறு யாரும் இல்லை ஷாஜிதாவின் மனசாட்சியே!.
ஷாஜிதா அவளிடம் , "ஏய் எதுக்கு சிரிக்கிற? " என கேட்டதும் , "பின்ன சிரிக்காமல் என்ன செய்வாங்களா?.... மனசுல இவ்வளவு காதலை வைச்சிட்டு ஏன் உனக்குள்ளேயே அழுது சாவுற? " என அவள் கேட்டதும், " அ...அவருக்கு எதாவது ஆகிடும்... அ...அந்த ஹசினா அ...அவரை எதாவது ப...பண்ணிட்டானா? அ...அவர் இ...இல்லாத வாழ்க்கை நி...நினைச்சு பார்க்கவே முடியலை....." என பயத்துடனே கூறினாள் , ஷாஜிதா.
" ஹே..... லூசு... அப்படி எல்லாம் ஆகாது.... அந்த ஹசினாவால அவரை ஒன்னும் பண்ண முடியாது... நீ தைரியமா உன் மனசுல இருக்கிறதை சொல்லு ஷாஜிதா " என்றதும் ஷாஜிதா , " வேணா.... " என பயத்துடனே கூறியதை கேட்டவள் , "ஏய் லூசு மாதிரி பேசாத ... உன்னோட எல்லா வலிக்கும் மருந்து சமீர் மட்டும் தான்.... நீ இப்படி அழுதன்னு மட்டும் உன் பப்புக்கு தெரிஞ்சுது.... அவ்ளோ தான்... துடிச்சு போய்டுவாறு டி... அவரால மட்டும் தான் உன்னை நல்லா பார்த்துக்க முடியும்.... யோசிச்சு பாரு... உனக்கு ஒன்னுனா அவர் மட்டும் தான் வந்து நிற்பாரு.... தயவுசெய்து அவர்கிட்ட போய் உன் காதலை சொல்லுடி.... அவருக்கு எதாவது ஆகிடும் பயந்தீனா? அதுக்கு ஒரு முடிவை கட்டு.... அவ்ளோ தான். "என பேசிவிட்டு அவள் சென்றுவிட , ஷாஜிதா அங்கேயே அமர்ந்து யோசித்துக் கொண்டு ஒரு முடிவோடு தன் கண்களைத் துடைத்துக் கொண்டு வகுப்பறையை நோக்கி நடந்தாள்.
வகுப்புகள் தொடங்கி இருக்க , அப்போது தான் ஷாஜிதா வகுப்புக்கு வந்தாள். வகுப்பில் பேராசிரியர் , ஷாஜிதா வகுப்பறையில் வந்து நிற்பதை பார்த்து முறைத்தபடி , "இவ்வளவு நேரம் எங்க சுத்திட்டு வர? "என கேட்க , ஷாஜிதா என்ன சொல்வதென்று தெரியாமல் விழித்துக் கொண்டிருந்தாள்.
பேராசிரியரும் , " இந்த ஹவர் மட்டும் வெளியேவே நில்லு! " என முறைத்துவிட்டு பாடங்களை எடுக்கத் தொடங்கினார்.
ஷாஜிதாவின் மனதில் சமீரை பற்றிய எண்ணங்களே ஓடிக் கொண்டிருந்தன. சமீரை கண்ட நொடி முதல் நின்று வரை தன் வாழ்க்கையை நினைத்துக் கொண்டிருந்த , ஷாஜிதாவிற்கு அப்போது தான் விளங்கியது சமீரை தான் எந்தளவிற்கு நேசிக்கிறோம் என்று. ஷாஜிதாவின் உதடுகள் தன்னை அறியாமலே புன்னகை ஒன்றை ஏந்தியது. ஆனாலும் இத்தனை நாட்கள் சமீரை தான் படுத்தியப்பாடை நினைத்து வருந்தினாள். ' கவலைப்படாதீங்க பப்பு நம்ம கல்யாணத்துக்கு அப்பறம் உங்களை நான் நல்லா பார்த்துப்பேன் ' என தன்னவனுக்கு மனதின் மூலமாகவே தூதுவிட்டாள், ஷாஜிதா.
-----
பேராசிரியர் வகுப்பை நடத்திக்கொண்டு இருந்தார். எல்லாரும் கவனித்துக் கொண்டிருந்தனர். ஆனால் ஜாரா மட்டும் கவனிக்காமல் ஏதோ சிந்தனையிலே ஆழ்ந்திருந்தாள். ஜாராவின் மனமும் ஏனோ ஷாஜிதாவை காண ஆசைக் கொண்டது. அது ஏன் என புரியவில்லை , ஜாராவுக்கு. இடைவேளை நேரம் வர அனைவரும் எழுந்து தங்கள் வேலைகளுக்கு சென்றனர்.
ஜாராவின் தோழிகளுக்கு ஜாரா தங்களிடம் பேசாமல் இருப்பதை பார்த்து கோபம் கொண்டார்கள். தங்கள் வலையில் ஜாராவை சிக்க வைக்க வேண்டும் என திட்டம் தீட்டிக் கொண்டிருந்தார்கள் அந்த நயவஞ்சகர்கள்.
அதன்பின் யோசனையில் இருந்து மீண்ட ஜாரா , படிப்போம் என புத்தகத்தை எடுத்துப் படித்துக் கொண்டிருந்தாள். அந்தப் பாடத்தில் சந்தேகம் எழ , யாரிடமாவது கேட்கலாம் என பார்த்த , ஜாரா வகுப்பறையில் சங்கரை தவிர்த்து யாருமில்லை என்பதை உணர்ந்தாள்.
சங்கர் , நன்றாகப் படிக்கக் கூடிய மாணவன் , அதனால் அவன் தன் சந்தேகத்தை தீர்ப்பான் என்ற எண்ணத்தில் சங்கர்யிடம் ஜாரா பாடத்தைப் பற்றிய சந்தேகத்தை கேட்க போனாள். ஆனால் , அதன் மூலம் தன் வாழ்க்கையில் ஏற்பட போகும் சூறாவளியை ஜாரா இப்போது அறிந்திருந்தால் , இதனை செய்திருக்கமாட்டாள்.
ஜாரா , சங்கர் அருகே சென்று , " சங்கர் எனக்கு இதுல ஒரு டவுட் சொல்லித் தரீயா? " என கேட்டதும் சங்கர்க்கு ஆச்சரியம். அதன்பின் , " உட்கார் ஜாரா சொல்லித் தரேன் " என அந்தப் பாடத்தில் உள்ள சந்தேகங்களை தீர்த்தான்.
வகுப்பிற்கு வந்த மாணவர்கள் ஜாராவின் செயலை வியப்பாக பார்த்துக் கொண்டிருந்தனர். ஜாராவின் மாற்றம் மொத்த வகுப்பிற்கும் பிடித்திருந்தது.
-----
ஷாஜிதா , அந்த வகுப்பு முடிந்தவுடன் , " சார் சாரி... இனி இப்படி பண்ண மாட்டேன்... " என மன்னிப்பு கேட்க, " ம்ம்ம் நானும் பார்த்துட்டு தான் இருக்க ஷாஜிதா... கொஞ்ச நாளா நீ சரியில்லை.... நல்லா படிச்சிட்டு இருந்த எப்பவும் சுறுசுறுப்பா இருப்ப? இப்ப அது எதுவும் இல்ல... இனி ஒழுங்கா இரு... போ " என உள்ளே அனுப்பினார்.
ஷாஜிதா அமைதியாக உள்ளே வந்து தன்னிடத்தில் அமர்ந்தாள். அது, சமீரின் வகுப்பு . சமீர் உள்ளே வந்ததும் , ஷாஜிதாவை தான் பார்த்தான். ஆனால் , ஷாஜிதா யோசனையில் ஆழ்ந்திருந்தாள்.
சமீர் , " இன்னிக்கி செமினார் கிளாஸ் எல்லாரும் ரெடியா? " என்ற குரலில் தான் ஷாஜிதா நினைவில் இருந்து மீண்டு வந்தாள்.
சமீர் , " இன்னிக்கி யார் செமினார் எடுக்க வேண்டும்? " என கேட்டதும் , அனைவரும் ஷாஜிதா என்றவுடன் , " ஹே இன்னிக்கி இல்ல நாளைக்கு தானே நா எடுக்கனும்.... " என அவசரமாய் ஷாஜிதா கூறியதும், அனைவரும் , "ஆங்! இல்ல இல்ல இன்னிக்கி தான் எடுக்கனும்... " என்றவுடன் , " ஷாஜி! எனக்கு தெரியும் நீதான் எடுக்கனும்ன்னு எதுவும் பேசாம வந்து பாடத்தை நடத்து " என சமீர் முறைக்க , " பப்பு.... ஏன் பப்பு இப்படி பண்றீங்க? " என பாவமாக முகத்தை வைத்துக் கொண்டு வகுப்பின் முன் சென்று நின்றாள்.
ஷாஜிதா , தான் எடுக்க வேண்டிய பாடங்களை ஐந்து நிமிடம் பார்த்துக் கொண்டிருந்தாள். சமீர் , " என்ன மேடம் இன்னும் பார்த்துட்டு இருக்கீங்க? " என கேட்க , ஷாஜிதா , "ஐ...ஐ....ஐந்து நிமிடம் " என கூறிவிட்டு அடுத்த ஐந்து நிமிடங்கள் பாடத்தைப் புரட்டி விட்டு நடத்த தொடங்கினாள்.
ஷாஜிதா , வகுப்பை நடத்தும் விதத்திலும் அழகிலும் தன்னையே மறந்து பார்த்துக் கொண்டிருந்தான், சமீர்.
ஷாஜிதா நடத்தி முடித்தவுடன் சமீரை பார்க்க , " ம்ம்ம் நல்லா தான் நடத்துன? அப்பறம் எதுக்கு இப்படி பண்ண? " என கேட்டதும் , ' ம்ம்ம் வேற எதுக்கு எல்லாம் உங்க திருட்டு முழியை பார்க்கத் தான் ' என மனதில் நினைத்தவளுக்கு அதை சொல்ல நாவெழ அதைக் அடக்கிக் கொண்டு , சமீரைப் பார்த்து முறைத்தாள்.
ஷாஜிதாவின் முறைப்பில் அடங்கிய சமீர் , ' அப்படி என்ன தான் டி அந்த கண்ணுல வைச்சு இருப்ப? ' என நினைத்துவிட்டு , "போ இடத்தில் போய் உட்காரு " என கூறியதும் ஷாஜிதா தனக்குள்ளே சிரித்துக் கொண்டு தன் இடத்தில் வந்தமர்ந்தாள்.
'அச்சோ!... பப்பு நீங்க சோ சீவிட்😘😘😘... ' என சமீரின் நினைவுகளில் திளைத்து இருந்தாள் , ஷாஜிதா.
🖤 தொடரும் 🖤
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro