💞 30 💞
அந்த இரண்டு கனவுகளும் மறுபடியும் ஷாஜிதாவிற்கு வர, பதறியபடி எழுந்தமர்ந்தாள். ஷாஜிதா , பதறியடித்துக் கொண்டு விழித்ததில் பயந்த சமீர் , தன்னவளின் அருகில் அமர்ந்து , "ஷாஜி! என்னாச்சு டா? " என பொறுமையாக அக்கறையுடன் கேட்டதும் பெண்ணவளின் மனம் உருகி விட்டது.
தன்னை அறியாமலே சமீரையே ஏக்கமாக பார்த்துக் கொண்டிருந்தாள் , ஷாஜிதா. ஷாஜிதாவின் பார்வையில் எதையோ உணர முடிந்தது, சமீரால். ஆனால், அது என்ன ? என்று சமீரால் சரியாக புரிந்துக் கொள்ள முடியவில்லை.
இருவரின் கண்களும் மோதிக் கொள்ள , அதிலிருந்து முதலில் மீண்டது சமீர் தான். சமீர் , " ஷாஜி! என்னாச்சு மா ஏன் இப்டி பதறியடிச்சிட்டு எழுந்த? எதாவது கெட்ட கனவு கண்டியா? " என வாஞ்சையாக கேட்க ஷாஜிதா , "ம்ஹும் ஒன்னுமில்ல " என்றுவிட்டு அறைக்கு சென்றுவிட்டாள்.
அறைக்கு சொன்ற ஷாஜிதாவையே பார்த்த சமீர் , ' என்கிட்ட வந்து சேர்ந்துடு ஷாஜி. உன்ன நா நல்லா பாத்துக்குவேன்! அல்லாஹ் ப்ளீஸ் என் ஷாஜியை எப்டியாது என்னோட சேர்த்து வை ' என மனமுருகி இறைவனிடம் பிரார்த்தனை செய்துவிட்டு பள்ளிவாசலுக்கு கிளம்பினாள்.
ஷாஜிதா, எப்போதும் போல் கல்லூரிக்கு கிளம்பிவிட்டு மாடிக்கு சென்று அமர்ந்திருந்தாள். இத்தனை நாட்கள் இல்லாமல் இன்று ஏனோ ஷாஜிதாவின் மனமெல்லாம் ஜாராவையே நினைத்துக் கொண்டிருந்தது.
மாடியில் நடைப்போட்டு கொண்டே , ' என்ன இன்னிக்கி மனசு என்னவோ பண்ணுது. ஏன் ஜாராவை பாக்க மனசு இப்டி துடிக்குது? ஒருவேளை அவளுக்கும் அந்த அறிவில்லாதவனுக்கும் எதாவது பிரச்சனையா? இல்ல இவ எதாவது பிரச்சனைல மாட்டி இருக்காளா? ஒன்னுமே புரியலையே! ஏன் இப்டி? நாம அவ காலேஜ்க்கு போய் ஒரு எட்டு பாத்துட்டு வந்துடலாமா? எதாவது பிரச்சனை வந்துடுச்சுனா? இது ஒரு லூசு. நம்மல சுத்தி இருக்கிறது நல்லவங்களா இல்ல கெட்டவங்களா தெரியாம சுத்திட்டு இருக்கு. ஏன் தான் இவ இப்டி இருக்காளோ? இந்த லட்சணத்துல கல்யாணம் வேற இவளுக்கு. அவ ஏன் இப்டி குழந்தையா இருக்கா? ' என தன் மனதில் நினைத்துக் கொண்டிருந்தாள்.
சமீர் , சாப்பிட அமரும் போது தன் அம்மாவிடம் , " அம்மா ஷாஜி சாப்பிட்டாளா ம்மா! காலேஜ்க்கு வேற நேரமாகுது? " என கேட்க , " ஏய் முஸ்கான் ஷாஜிதா எங்க? " என அஸ்மா முஸ்கானிடம் கேட்க , " தெரியலை ம்மா " என சாதாரணமாக முஸ்கான் சொன்னதும் சமீருக்கு கோபம் வந்துவிட்டது. சாப்பிடாமல் எழுந்து ஷாஜிதாவை வீட்டிற்குள் தேட தொடங்கினான்.
அதன்பின் ஏதோ நினைவு வர மாடிக்கு சென்றான். அங்கே தன் கைகளை நெஞ்சின் குறுக்கே கட்டிக்கொண்டு மனதில் எதையோ நினைத்த வண்ணம் யோசித்துக் கொண்டிருந்தாள், சமீரின் ஷாஜிதா.
தன்னவளை கண்ட பின் தான் நின்ற இதயம் துடிக்க தொடக்கியது, சமீருக்கு. சமீர், மெல்ல ஷாஜிதாவின் அருகில் சென்று , "ஷாஜி" என அழைத்ததும் ஷாஜிதா தன்னிலை வந்து சமீரை பார்த்து , "என்ன? " என கேட்க.
சமீர் , " இங்க என்ன பண்ற? "
ஷாஜிதா , "பாத்தா எப்டி தெரியுது? " என சமீரை முறைத்தாள்.
சமீர் , "சரி மாடிக்கு போறேன் கீழ சொல்லிட்டு வந்திருக்கலாம்ல! எங்கலாம் தேடுறது " என்றவுடன் ஷாஜிதா , "அப்ப என்னே சந்தேகப்படுறீங்க அப்டிதானா? " என கேட்டதும் சமீர் , "இது சந்தேகம் இல்ல ஷாஜி! உன் மேல இருக்க அக்கறை பாசம் காதல் டா " என பொறுமையாக கூற , "சொல்லிட்டு வந்திருக்கலாம் சொல்றதுக்கு பேர் அக்கறையா? ம்ஹ்ம் இல்ல சந்தேகம் " என ஷாஜிதா எரிச்சலாக கூறியதும் , சமீருக்கு கோபம் வர , "என்ன சந்தேகமா? உனக்கு எதாவது ஆகிடுமோன்ற பயத்துலயும் அக்கறையிலயும் கேட்ட வார்த்தை உனக்கு சந்தேகம்னா அப்டியே வச்சிக்கோ. ஆமாடி சந்தேகம் தான். அதுக்கென்ன இப்ப? உன்ன மாதிரி பொண்ணுக்கெல்லாம் எங்களை மாதிரி உண்மையா நேசிக்கிற பசங்களை பார்த்தா சந்தேகப் பேர்வழி! ஏமாத்துக்காரன் தான் சொல்வீங்க! ஆனா அந்த ஷாரூக் மாதிரி ஏமாத்துற பசங்களை தான் உருகி உருகி காதலிப்பிங்க! " என கத்தியதும் , ஷாஜிதாவுக்கு சமீரை விட அதிகமாக கோபம் ஏற , சமீரை ஓங்கி அறைந்தாள்.
சமீரை அறைந்த ஷாஜிதா அனல் பறக்கும் பார்வையோடு தன் ஒற்றை விரலை நீட்டி , " ஏய்! இதுக்கு மேல பேசுன அவ்ளோ தான் " என்றவள் தன் கண்களை துடைத்துக் கொண்டு கீழே இறங்கினாள்.
சமீரும் பேச வேண்டுமென பேசவில்லை! ஷாஜிதாவும் என்ன பேசுகிறோம் என உணராமலே பேசிவிட்டாள். சமீர் பேசியதில் ஷாஜிதாவுக்கு கோபம் வரவில்லை மாறாக தன்னவன் மேல் காதல் தான் அதிகரித்தது. சமீர் கூறிய "ஷாரூக் மாதிரி ஏமாத்துற பசங்களை தான் உருகி உருகி காதலிப்பிங்க " என்ற வார்த்தையில் நொறுங்கியது பேதை மனம்.
சமீரை தானே ஷாஜிதா உயிரையும் விட மேலாக நேசிக்கிறாள். அந்த கோபத்தில் தான் சமீரை அறைந்தாள் , ஷாஜிதா.
சமீருக்கும், தான் பேசியது தவறு என்று தன்னவள் சென்ற பின் தான் புரிந்தது. ஆனால் ஷாஜிதா தன்னை மன்னிப்பாளா? என யோசித்த சமீருக்கு பதில் இல்லை. சமீர் கலங்கிய தன் கண்களை வலியோடு துடைத்துக் கொண்டு கீழே இறங்கினான்.
இருவரும் சாப்பிட வேண்டும் என்பதற்காக சாப்பிட்டு விட்டு கல்லூரிக்கு கிளம்பினார்கள். இருவரும் எதுவும் பேசவில்லை பேரமைதியாக இருந்தது. ஷாஜிதா, வெளியே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள். சமீர் அமைதியாக மகிழுந்தை செலுத்தினான்.
நேராக கல்லூரியில் நின்றது மகிழுந்து. ஷாஜிதா இறங்கும் நேரத்தில் , ஷாஜிதாவின் கரத்தைப் பிடித்த சமீர் , தன் நெஞ்சில் வைத்து , " என்னே மன்னிச்சிடு ஷாஜி! ப்ளீஸ்.... " என கெஞ்ச , 'உங்க மேல எனக்கு கோபம் இருந்தா தானே பப்பு நா மன்னிக்க! உங்களுக்கு இல்லாத உரிமையா என்கிட்ட? ' என மனதிலே பேசி கொண்டே ஷாஜிதா சமீரிடம், " ப...பரவாயில்லை "என்றாள்.
சமீர் , தன் கண்ணீரை அடக்கிக் கொண்டு , "என்னே விட்டு விலகிடாத ஷாஜி! " என்றவுடன் , " விலகி இருக்கிறது தான் நல்லது. " என பதிலுக்கு காத்திருக்காமல் மகிழுந்தை விட்டு இறங்கிய ஷாஜிதா , ' நா விலகி இருக்கிறது உங்களுக்காக தான் பப்பு. உங்களுக்கு எதாவது ஆச்சுனா அத தாங்குற மன தைரியம் எனகில்லை ' என தன் மனதிலே கூறிய ஷாஜிதா தன் கண்ணீரை துடைத்துக் கொண்டு வகுப்பறைக்கு நடந்தாள்.
ஷாஜிதாவின் வார்த்தை சமீரின் இதயத்தை இரண்டாக கிழித்தது. மகிழுந்திலே கண்ணீரிலே சிறிதுநேரம் கரைந்த , சமீர் தன்னை திடப்படுத்தி கொண்டு உள்ளே சென்றான்.
♥️ தொடரும் ♥️
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro