💞 29 💞
ஃபிர்தவுஸ் , அறையில் குறுக்கும் நெடுக்குமாக தன் நகத்தை கடித்தவாறு நடந்துக் கொண்டே எதையோ தீவிரமாக யோசித்துக் கொண்டிருந்தாள்.
சாப்பிட்டு விட்டு அறைக்கு வந்த யாசர் , தன்னவளின் செய்கையை பார்த்தவன் , ' என்ன இந்த குலாம் ஜாமுன் இப்டி நடந்துட்டு இருக்கு? எதாவது சம்பவம் நடக்க போதோ? ' என தன் மனதிலே சொல்லிக் கொண்ட யாசர், தன்னவளை பின்னிருந்து அணைத்த வண்ணம் , " ஓய் குலாம் ஜாமுன்! யோசனை எல்லாம் ரொம்ப பலமா இருக்கு! அப்டி என்ன யோசிக்கிற? " என கேட்க, ஃபிர்தவுஸிடம் இருந்து எந்த பதிலும் இல்லாமல் போனது.
பதில் வராததை உணர்ந்த யாசர் , ' அப்டி என்னத்த யோசிக்கிறா? ' என நினைத்த யாசர் அவளை கூர்மையாக கவனித்தவன் , ' இப்ப இருக்குடி உனக்கு ' என தன்னவளின் காதை லேசாக கடித்தான், யாசர்.
தன் காதில் ஏதோ வலியை உணர்ந்த ஃபிர்தவுஸ் , ' ஸ்ஸ்ஸ் ஆஆஆ ' என நெளிந்தபடி திரும்ப, திடிரென மிக மிக நெருக்கத்தில் தன்னவனை பார்த்ததும் பயத்தில் , " ஆஆஆஆ " என கத்த பயத்தில் யாசரும் , " ஆஆஆஆ " என கத்த தொடங்கினான்.
இருவரின் கத்தலும் வெளியே வரை கேட்க , அனைவரும் பதறியடித்துக் கொண்டு கதவை தட்ட, எந்த பதிலும் இல்லாத காரணத்தால் சமீர் கதவை தன் தோளால் தட்டி தட்டி திறந்தான்.
கதவை திறந்து படபடப்பாக உள்ள வந்து என்னாகிற்று? என்ன பார்த்தவர்களுக்கு ஒன்றுமே புரியவில்லை. இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து கத்திக் கொண்டிருக்க , லத்தீப் , "யாசர் " என சப்தமாக அழைத்த பிறகு தான் இருவரும் கத்தலை நிறுத்தி பார்த்தனர்.
அஸ்மா , " எதுக்கு இப்டி ரெண்டு பேரும் கத்துனீங்க? " என கேட்க , "ஆங் அ..அது அதுவந்து ப...பல்லி கீழே விழுந்துச்சு அதான் பயந்துட்டேன்." என ஃபிர்தவுஸ் சமாளிக்க , " ஆமா அத்த பல்லி தான் பல்லி தான் கீழே விழுந்துச்சு " என யாசரும் அசடு வழிய சமாளித்தான்.
அப்போது ஷாஜிதா , "எது பல்லியை பார்த்து நீ பயந்த? அத நாங்க எல்லாரும் நம்பனும்! அப்டிதானே. போடி லூசு. யாரும் நம்பாதீங்க அவளை பொய் சொல்றா" என அனைவரையும் பார்த்து சொல்ல , 'போச்சே மானம் போச்சே! ' என யாசரும் ஃபிர்தவுஸும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டிருந்தனர்.
லத்தீப் , " என்னமா சொல்ற? " என ஷாஜிதாவிடம் கேட்டதும் ஷாஜிதா , " ஆமா! இவ சின்ன வயசுல ஒரு நாள் என்னாச்சு தெரியுமா? நா என் தங்கச்சி இவ சேர்ந்து விளையாடிட்டு இருந்தோமா அப்ப சுவத்துல இருந்த பல்லி கீழ விழுந்துடுச்சு. அப்ப இவ என்ன பண்ணா தெரியுமா? அந்த பல்லியை ஓரே அடியில கொன்னு கையில வைச்சு விளையாடிட்டு இருந்தா! அப்டி பண்ணவ பல்லியை பாத்து பயந்தாளா? யார் கிட்ட கதை விடுற? " என சிறுவயது கதையை சொல்ல, அனைவரும் சிரித்தனர்.
ஃபிர்தவுஸ் , 'இவ ஒருத்தி நேரங்காலம் தெரியாம! மொத்த மானத்தையும் இப்டி வாங்கிட்டாலே! அல்லாஹ்வே நா என்ன பண்ணுவேன். இவளை! இருடி இரு உன்னையே ஒரு நாள் வச்சிக்கிறேன்' என மனதில் ஷாஜிதாவை திட்டினாள்.
அந்தநேரம், பல்லி சத்தமிட்டு கொண்டே சுவற்றில் இருந்து ஷாஜிதாவின் அருகில் விழ, அதில் பயந்த ஷாஜிதா , தன் அருகில் நின்றிருந்த சமீரின் நெஞ்சில் சாய்ந்துக் கொண்டாள்.
சமீர், ஷாஜிதாவின் திடீர் அணைப்பால் அதிர்ந்தான். தன்னவளின் அணைப்பில் உறைந்து அப்படியே நின்றிருந்தான். சமீருக்கு பேச்சு கூட வர மறுத்தது.
முஸ்கான் , ஒரு நொடி தன் கண்ணை மூடி திறந்து அதிர்ந்தாள். ஃபிர்தவுஸ் மற்றும் யாசர் இதை எதிர்ப்பார்க்க வில்லை. அஸ்மா மற்றும் லத்தீபுக்கு இன்னும் பேரதிர்ச்சியாக இருந்தது.
சமீர் ஷாஜிதா அருகே நின்றிருக்க, அவர்களின் ஜோடி பொருத்தத்தை தன் கண்ணில் வைத்து நிறைத்து கொண்டிருந்த அஸ்மா , ' யா அல்லாஹ்! இவங்களை எப்டியாது ஒன்னு சேர்த்துடு ' என மனதில் அல்லாஹ்விடம் வேண்டினார்.
அஸ்மா , ஷாஜிதாவை அழைக்க நகர முஸ்கான் தன் தாயின் மனதை உணர்ந்தவளாய் வேண்டாம் என தடுத்தாள்.
சிறிது நேரத்தில் , தன்னிலை வந்த ஷாஜிதா எங்கே இருக்கிறோம் என உணர வெடுக்கென விலகி, தான் இருக்கும் அறைக்கு ஓடினாள்.
ஆனால், சமீர் இன்னும் அந்த அதிர்ச்சியில் இருந்து மீளவில்லை. ஃபிர்தவுஸ், யாசர் மற்றும் முஸ்கான் தங்களுக்கள் சிரித்துக் கொண்டனர். அஸ்மாவும் லத்தீபும் அமைதியாக தங்கள் அறைக்கு சென்றனர்.
அறைக்கு வந்த ஷாஜிதா , தன் கண்களை சுருக்கி நுனி நாக்கை கடித்தபடி தன் தலையில் அடித்துக்கொண்டு , ' லூசு லூசு உன்ன்ன்ன! எல்லாரும் என்ன நினைப்பாங்க.' என சிணுங்கிக் கொண்டே தன் நாணத்தை அடக்க வழி தெரியாமல் தலையணையில் தன் முகத்தை புதைத்த வண்ணம் இருந்தாள்.
ஷாஜிதா சென்ற பின்பும் உறைந்த நிலையில் இருந்த சமீரை உலுக்கி நிகழ் காலத்திற்கு வரவழைத்தான் யாசர். சமீர் எதுவும் பேசாமல் அமைதியாக தன்தறைக்கு சென்றான்.
தன் அறைக்கு வந்த முஸ்கான் , ஷாஜிதாவின் செயலை பார்த்து தனக்குள் சிரித்தபடி , மனதிற்கு ஷாஜிதாவை சீண்ட நினைக்க , ஏனோ ஒருவித பயத்தை உணர்ந்த முஸ்கான் அமைதியாக உறங்கினாள்.
சிறிது நேரத்தில் முஸ்கான் உறங்கிவிட்டாள். ஆனால், ஷாஜிதாவிற்கு உறக்கம் என்ற ஒன்றே வர அறவே மறுத்தது. என்ன செய்வது என தெரியாமல் புரண்டு புரண்டு உறங்கி கொண்டிருந்தாள்.
உறக்கம் வர அறவே மறுக்க , எழுந்து வெளியில் வந்தாள். மெது நாற்காலியில் அமர்ந்த ஷாஜிதாவின் மனமெல்லாம் திரும்ப திரும்ப அதையே நினைத்து கொண்டிருந்தது.
இவள் இப்படி என்னால் இவளின் இவனோ சொல்லவே வேண்டாம். தன்னறைக்கு வந்த சமீர் , கட்டிலில் அமர்ந்தான். தன்மேல் சாய்ந்த தன்னவளின் காட்சியே மீண்டும் மீண்டும் மனத்திரையின் முன் வந்து நின்றது.
ஒரு பெண்ணின் ஸ்பரிசம் இவ்வளவு அழகானதா? என சமீரின் முகம் அழகான புன்னகை ஒன்றை ஏந்தியபடி , ' பட்டு ஏன்டி இப்டி என்னே கொல்ற? என்கிட்ட சீக்கிரமா வந்து சேருடி ' என மனதில் தூது விட்டுட்டு உறங்கினான்.
சமீருக்கும் தூக்கம் வர மறுத்தது. எத்தனை தடவை புரண்டு புரண்டு படுத்தாலும் உறக்கம் வர மறுக்க , எழுந்து ஹாலுக்கு வந்தான், சமீர்.
தங்கள் அறைக்கு வந்த , அஸ்மா தன் கணவன் லத்தீபிடம் , " ஏங்க இவங்க ரெண்டு பேரோட ஜோடி பொருத்தமும் கண்ணுக்கு அழகா இருக்குங்க! " என கூற , " ம்ம்ம் ஆமா அஸ்மா. ஆனா அந்த பொண்ணு மனசுல தான் சமீர் இல்லையே என்ன பண்றது? " என லத்தீப் கேட்க
அஸ்மா , "இல்லங்க! அந்த பொண்ணு மனசுல நம்ம பையன் இருக்கா." என்றதும்
லத்தீப் , "எப்டி சொல்ற? "
அஸ்மா , "அவ சமீரை விட்டு விலகி அறைக்கு ஓடும் போது அவ கோபத்தோட போகலை நாணத்தோட ஓடினாள். அது ஒன்னே போதாதா அவள் மனசுல என்ன இருக்குன்னு சொல்ல? "
லத்தீப் , " ம்ம்ம் சரி நான் ஒன்னு கேட்பேன் நீ உண்மைய சொல்லனும் "
அஸ்மா , " கண்டிப்பா "
லத்தீப் , "சரி ஷாஜிதாவை சுத்தி ஒரு பிரச்சனை இருக்கு. ஒருவேளை அந்த பிரச்சனையால நம்ம குடும்பத்துக்கு ஏதாவது ஆபத்து வந்துச்சுனா என்ன பண்ணுவ? "
அஸ்மா , " என்னங்க இப்டி கேட்கிறீங்க? எவ்வளவு பிரச்சினை வந்தாலும் எனக்கு அதை பத்தின கவலை இல்லை. இவள் தான் நம்ம பையனுக்கு ஏத்த பொண்ணு. நம்ம குடும்பத்துக்கு ஏத்த மருமக. ரியாஸ் ஹஜ்ரத் பேத்தி இது ஒன்னு போதாதா இவளோட குணத்தை சொல்ல. எவளோ ஒருத்திக்காக இவளை எப்டிங்க நாம வேணாம் சொல்ல முடியும். எவ்வளவு கஷ்டம் வந்தாலும் சோர்ந்து போகாமா தைரியமா எதிர்த்து நிற்கிறா. இந்த குணம் ஒவ்வொரு பொண்ணு கிட்டயும் இருக்க வேண்டியது. என்ன ஆனாலும் ஷாஜிதா தான் இந்த வீட்டுக்கு மருமகள். " என தன் முடிவை அழுத்தமாவும் தெளிவாகவும் கூற, லத்தீப் தன் மனைவியை பெருமையாக பார்த்தார்.
ஷாஜிதா உறக்கம் வராமல் தவித்துக் கொண்டிருக்க , தான் எப்போது உறங்கினாள் என்பதை உணராமலே மெது நாற்காலியிலே உறங்கி விட்டாள்.
அதை பார்த்த சமீர் , மெல்லிய சிரிப்போடு ஷாஜிதாவின் அருகில் வந்தான். அப்போது , ஷாஜிதா தலையணை ஏதும் இல்லாமல் உறங்குவதை பார்த்த சமீர் , தன்னறைக்கு சென்று தனது தலையணையும் போர்வையும் எடுத்து வந்தான்.
மெல்ல ஷாஜிதாவின் தலையை எடுத்து தலையணையில் வைத்தான். பிறகு மெல்ல போர்வையை போர்த்தி விட்டான்.
ஷாஜிதாவின் முன் மண்டியிட்டு அமர்ந்த , சமீர் ஷாஜிதாவின் தலையை மெல்ல வருடினான். அப்போது ஷாஜிதா உறக்கத்தில் சமீரின் கைகளை இறுக பிடித்துக்கொண்டு சமீரின் கரங்களில் உறங்கினாள்.
இதை எதிர்ப்பார்க்காத சமீர் , தன் கைகளை எடுக்க முயன்று தோற்று போக, அப்படியே அமர்ந்தான்.
சமீர் , மெல்ல ஷாஜிதாவின் முகத்தை பார்க்க , குழந்தை போல் உறங்கி கொண்டிருந்தாள்.
அனைவரும் அறையை விட்டு சென்ற பின் ,ஃபிர்தவுஸ், யாசர் மீது நெருப்பு பார்வை ஒன்றை வீசி கொண்டிருக்க , யாசர் தன் சமாதான கொடியை பறக்க விட தொடங்கினான்.
" சாரி குலாம் ஜாமுன்! நான் கூப்பிட்டேனா நீ திரும்பலை அதான் கடிச்ச ஆனா கத்துவேன் நிஜமா எதிர்ப்பார்க்கலை சாரி மா " என கெஞ்சிக் கொண்டிருந்தான். பல நேர கெஞ்சலுக்கு பின்னே சமாதானம் ஆனாள்.
யாசர் , "சரி குலாம் ஜாமுன் அப்டி என்ன யோசிச்சிட்டு இருந்த? " என கேட்க , " அதுவந்து பட்டர் பன் சமீர் அண்ணா ஷாஜிதாவோட சின்ன வயசு போட்டோ கேட்டாரு. எங்க வீட்டுல அவளோட சின்ன வயசு ஆல்பம் மூனு இருக்கு. அதை எப்டி போய் எடுத்துட்டு வருவது யோசிச்சிட்டு இருக்கேன். " என்ற ஃபிர்தவுஸ் கூற , " அவ்வளவு தானே நாளைக்கு போய் எடுத்துட்டு வந்துட்டா போய்டுச்சு. அதுக்கு ஏன் இப்படி தீவிரமா யோசிச்சிட்டு இருக்க? " என்றதும் ஃபிர்தவுஸ் தன் தலையை தொங்க போட , "என்ன சொல்லு? " என யாசர் கேட்டதும் , " இல்ல பட்டர் பன் உங்களுக்கு ரொம்ப அதிகமா கஷ்டத்தையும் சிரமத்தையும் கொடுக்கிறனோ தோனுது. நீங்க நம்ம கல்யாணத்துக்கு அப்றம் நிம்மதியா இல்ல அங்கேயும் இங்கேயும் அலைந்துட்டு இருக்கீங்களா" என ஃபிர்தவுஸ்அப்பாவியாக யாசரை பார்த்தாள்.
தன்னவள் கூறியதில் கோபம் வர நங்கென்று தலையில் குட்டு வைத்து , " நா அப்டி சொன்னனா? லூசு பொண்டாட்டி..... உன்ன்ன்ன. உனக்காக செய்யாம வேற யாருக்காக டி செய்ய போறேன். நீ என்னோட பொண்டாட்டி டி. என்னோட பாதி உனக்கு செய்ய வேண்டியது என்னோட கடமை குலாம் ஜாமுன். அதேமாதிரி உன் அண்ணன் என்னோட நண்பன் அவன் பண்ண பாவத்துக்கு பிராய்ச்சித்தம் யார் செய்வா? அதான் ஷாஜிதாவுக்கு நல்ல வாழ்க்கை அமைச்சு தர என்னால முடிஞ்சதை செய்ற" என்ற தன் கணவனின் மார்பில் சாய்ந்து கொண்ட ஃபிர்தவுஸ் , "உங்க பொண்டாட்டின்னு சொல்லவே ரொம்ப பெருமையா இருக்கு பட்டர் பன் " என்றவுடன் , யாசர் , "ம்ஹும் " என தலையசைத்து , " உன் புருஷன் சொல்றதுல தான் பெருமையா இருக்கு குலாம் ஜாமுன்! " என தன்னவளின் முகத்தை தன் கரங்களில் ஏந்தி நெற்றியில் இதழ் பதித்து கண்களில் காதலோடு கூறினான்.
-----
ஷாரூக் அமைதியாக உறங்கி கொண்டிருந்தான். ஆனால் ஜாரா தான் உறங்காமல் காலையில் நடந்த நிகழ்வை மனதில் போட்டு குழம்பிக் கொண்டிருந்தாள்.
இன்று வகுப்பில் தன் தோழிகளோடு அரட்டை அடித்து கொண்டிருந்தாள், ஜாரா. இடைவேளை நேரத்தில் ஜாராவின் தோழிகள் அனைவரும் வெளியில் செல்ல ஜாரா மட்டும் தனியே அமர்ந்திருந்தாள்.
அப்போது அவளுடன் பயிலும் தோழி ஜாரா அருகில் வந்தமர்ந்தாள். அவளை என்ன என்பது போல் பார்க்க , அப்பெண் பேச தொடங்கினாள்.
" ஜாரா உன்ன எனக்கு ரொம்ப பிடிக்கும். எனக்கு மட்டுமில்ல நம்ம மொத்த கிளாஸ்க்கும் உன்னய ரொம்ப பிடிக்கும். உன்னோட திமிரு, கோபம் எல்லாமே பிடிக்கும். ஆனா அதை நீ தப்பா உபயோகப்படுத்துறது தான் எங்க யாருக்கும் பிடிக்கலை. நீ ரொம்ப நல்லவள் ஜாரா ஆனா உன் கூட சுத்துற உன் தோழிகள் நல்லவங்க கிடையாது, உன் தங்கச்சியையும் சேர்த்துதான் சொல்றேன். கோபப்படாத ஜாரா! முழுசா கேளு. உன்ன சுத்தி இருக்கிற அத்தனை பேரும் அவங்க தேவைக்கு உன்னேயே பயன்படுத்திக்கிறாங்க. அவங்களை விட்டு நீ விலகி இருந்தா மட்டுமே போது உன் வாழ்க்கை அழகா மாறிடும். இப்ப நீ முன்ன மாதிரி இல்ல. உனக்கு கல்யாணம் ஆகிடுச்சு. உன்ன நம்பி ஒரு குடும்பம் இருக்கு. உனக்கும் உன் ஹப்பிக்கும் நடக்கிற எந்த பிரச்சினையும் வெளியே சொல்லாத. ஏன்னா உன்ன சுத்தி நல்ல சக்தி இல்ல எல்லாமே கெட்ட சக்தி தான் உன்ன சுத்தி இருக்கு. உன் நல்லதுக்கு தான்டா சொல்றோம் புரிஞ்சிக்கோ மா. நீ குழந்தை மாதிரி. குழந்தை எப்டி யார் என்ன சொன்னாலும் நம்புமோ அப்டி தான் நீயும். உன்னோட வெல் விஷ்ஷரா இதை நான் உனக்கு சொல்றேன். ப்ளீஸ் மா புரிஞ்சிக்கோ. யோசி சரியா! " என ஜாராவின் தலையை வருடி பொறுமையாக எடுத்துகூறி விட்டு அப்பெண் எழுந்து சென்றாள்.
அதன்பிறகு, ஜாரா யாருடனும் பேசவில்லை அதுவே திரும்ப திரும்ப மனதில் ஓடிக் கொண்டிருந்தது. வீட்டிற்கும் வந்தவள் எதுவும் பேசாமல் எப்போதும் செய்ய வேண்டிய எதுவும் செய்யாமல் அப்படியே அமர்ந்திருந்தாள். ஷாரூகும் ஜாராவை கவனிக்கவில்லை.
மனதில் பெரிய குழப்பம் ஒன்று ஏற்பட அதை யாரிடம் கேட்பது எப்படி கேட்பது என்று எதுவும் புரியவில்லை. அப்போதும் மனம் தன் தோழிகளையே நாடியது. ஆனாலும் ஏதோ ஒன்று ஜாராவை தடுத்தது.
ஷாரூக் திரும்பி உறங்கும் போது ஜாரா உறங்காமல் இருப்பதை பார்த்து எழுந்தமர்ந்து , ஜாராவின் தோளில் கை வைத்து , " ஜாரா இன்னும் தூங்காம என்ன பண்ணிட்டு இருக்க? காலையில காலேஜ் போகனும் தூங்குடா! " என்றவன் அப்போது தான் அவளை கவனித்தான்.
" ஜாரா! மனசுல அப்டி என்னத்தை போட்டு குழம்பிட்டு இருக்க? " என ஷாரூக் கேட்க , " ஆங் ஒன்னுமில்ல " என்று ஜாரா கூறியதும் , "சரிவா " என ஜாராவின் கரத்தை பிடித்து இழுத்து தன்னோடு அணைத்து உறங்க வைத்தான்.
தன் மனதில் இருக்கும் குழப்பத்தை தன் கணவனிடம் கேட்டிருந்தாள், தன் வாழ்வில் வரப்போகும் சூறாவளியை அடக்கியிருக்க முடியும். ஆனால் என்ன செய்ய?..... பெண்ணவள் சிக்கிக்கொண்டு இருப்பது வஞ்சகர்களின் கூட்டம் அல்லவா?
-----
சமீரும், ஷாஜிதாவை ரசித்தபடி அப்படியே உறங்கி போனான். அந்த இரண்டு கனவுகளும் மீண்டும் வர, ஷாஜிதா பதறியடித்துக் கொண்டு உறக்கத்திலிருந்து விழித்து அமர்ந்தாள்.
சமீரும் அவள் பதறியதில் விழித்து , " ஷாஜி என்னாச்சு டா? ஏன் இப்டி பதறுற? " என ஷாஜிதாவின் அருகில் அமர்ந்துக் கேட்க, ஷாஜிதா அமைதியாக , " ஒன்னுமில்ல " என எழுந்து சென்று உளூ செய்துவிட்டு தொழுதாள்.
♥️ தொடரும் ♥️
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro