Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

💞 28 💞

அப்சல், தான் அம்ரீனை நேசிப்பதாக கூறியவுடன் அங்கே ஒரு பெரும் அமைதியே நிலவியது.

அதைக் கலைக்கும் விதமாக ஆபிதா பேச்சைத் தொடங்கினார். " என்னங்க யோசிக்கிறீங்க? " என கேட்க

அதற்கு சலீம் , " சரி வர ஞாயிறு, அவங்க வீட்டுக்கு போய் பேசிட்டு வந்துடலாம்! " என்றதும் அப்சல் முகத்தில் சந்தோஷம் தாண்டவம் ஆடியது. ஆனால் அந்த சந்தோஷம் ரொம்ப நீடிக்க போவதில்லை என்பதை அப்சல் அறியவில்லை.

ஃபர்ஜானா மனதில் மிகப்பெரிய போராட்டம் நடந்துக்கொண்டிருந்தது. ஷாஜிதா என்ன சொல்வாள்? அம்ரீன் தன் அண்ணனை ஏற்றுக்கொள்வாளா? என தன் மனதிலே நினைத்துக் கொண்டிருந்தாள்.

அப்சல் மனம் இப்போது ஆகாயத்தில் பறந்துக் கொண்டிருந்தது. " அப்பா தேங்க்ஸ் " என அப்சல் கூறியதும் , " டேய் உன் சந்தோஷம் தான்டா எங்க சந்தோஷமும் , எங்களுக்கு முழு சம்மதம். எதைப் பத்தியும் நினைக்காம சந்தோஷமா இரு. அம்ரீன் தான் இந்த வீட்டு மருமகள். சரியா ! நீ நிம்மதியா வேலைக்கு போ நாளைக்கு " என்று சலீம் கூற, அப்சல் மகிழ்வாக தன் அறைக்குள் சென்றான்.

ஞாயிற்றுக்கிழமை வர இன்னும் நான்கு நாட்கள் இருக்கிறதே? என தவித்தான் அப்சல். தன் காதல் கைகூட தான் படவிற்கும் கஷ்டங்களை அறியாமல் மகிழ்வுடன் உறங்கச் சென்றான், அப்சல்.

-----

ஷாஜிதா , அறையில் அமர்ந்துக் கொண்டுப் பாடப் புத்தகங்களை புரட்டிக் கொண்டு இருந்தாள். ஆனால் ஷாஜிதாவால் அதில் கவனம் மட்டும் செலுத்த முடியவில்லை. தன் தாயும் தங்கையும் மட்டுமே நினைவில் இருந்தனர். ஒருபுறம் இப்படி என்றால்? மற்றொரு பக்கம் சமீரின் அழகிய முகமும் வசீகர சிரிப்பும் இம்சை செய்துக் கொண்டிருந்தனர்.

இரண்டையும் அடக்க வழி தெரியாமல் அமைதியாக அமர்ந்திருந்தாள் , ஷாஜிதா. என்னவோ போல் அமர்ந்திருந்த ஷாஜிதாவை கவனித்த முஸ்கான் , ஷாஜிதாவின் தோளை உலுக்கியதும் தன்னிலை வந்தாள் ஷாஜிதா.

ஷாஜிதா, தன் யோசனையில் இருந்து விலகி முஸ்கானை புரியாமல் பார்க்க , " என்ன பண்ணிட்டு இருக்க ஷாஜிதா? " என கேட்க , " படிச்சிட்டு இருக்கேன்! " என ஷாஜிதா பதில் அளித்தாள்.

முஸ்கான் அமைதியாக , " ஓ மேடம் படிச்சிட்டு இருக்கீங்க! அப்டிதானே! " என முறைக்க , " ஆமா படிச்சிட்டு இருக்கேன் பார்த்தா எப்டி தெரியுது? " என பதிலுக்கு ஷாஜிதா கேட்க , தன் இடுப்பில் கையில் கைவைத்தபடி , " புக்கை தலகீழா வச்சி படிக்கிறப்பவே புரிஞ்சிக்கிட்டேன் நீ படிக்கிறீயா? இல்ல என்ன பண்றேன்னு " என முஸ்கான் முறைத்தாள்.

ஷாஜிதா , அப்போது தான் தன் கையில் இருந்த புத்தகத்தை பார்க்க , அது தலை கீழாக இருந்தது. தன் நிலையை நினைத்துத் தன்னையே நொந்துக் கொண்டாள் ,ஷாஜிதா.

முஸ்கான் , " ஷாஜி! " என அழைத்ததும் ஷாஜிதாவிற்கு கோபம் வந்துவிட , " என்னை ஷாஜின்னு கூப்பிடாதீங்க! அது தாத்தா மட்டும் தான் என்னயே அப்டி அழைப்பாரு. தாத்தாவை அடுத்து நா அப்டி அழைக்கிற உரிமைய நா யாருக்கும் கொடுக்கலை! கொடுக்கவும் மாட்டேன் " என கோபம் கொள்ள , "சரி சரி கூல் ஷாஜிதா இனி அப்டி கூப்பிடலை." என்றதும் தலையசைத்தாள்.

முஸ்கான் மனதில் ஏதோ யோசிக்க , 'இதுதான் சரியான நேரம் இதைப்பத்தி பேசிடுவோம் ' என உறுதி எடுத்துக்கொண்டு ஷாஜிதாவிடம் பேச முனையும் போது அறையினுள் ஃபிர்தவுஸ் வந்தாள்.

ஷாஜிதா அருகில் வந்த ஃபிர்தவுஸ் , " பாவி " என ஷாஜிதாவை அறைந்தாள். ஷாஜிதா , ஃபிர்தவுஸ் ஏன் தன்னை அடித்தாள் என தெரியாமல் முகத்தை பாவமாக வைத்துக்கொண்டு , " இப்ப எதுக்குடி வந்ததும் வராததுமா அடிக்கிற? " என குழந்தைப் போல் கேட்டதும் , " நடிக்காதடி பக்கி! " என கலங்கிய தன் கண்களை துடைத்துக் கொண்டு அதட்டினாள் , ஃபிர்தவுஸ்.

ஷாஜிதா , " ஹே இப்ப என்ன ஆகிடுச்சுன்னு அழுவுற ஃபிர்தவுஸ். நம்ம கண்ணீர் தான் மத்தவங்களுக்கு பலம். அதை எப்பவும் அவங்களுக்கு காட்டிடாதே!" என்றதும் அங்கே ஒரு அமைதி நிலவியது.

அந்த அமைதியை கலைக்கும் விதமாக , " உள்ளே வரலாமா? " என சமீரின் குரல் கேட்க , " ம் வா ண்ணா! " என முஸ்கான் பதில் அளித்ததும் உள்ளே வந்தான்.

ஷாஜிதா அமைதியாக நின்றுக் கொண்டிருந்தாள். ஷாஜிதாவின் அருகில் வந்த சமீர் , " ஷாஜி! என்னோட புக் காலேஜ்லே வைச்சிட்டு வந்துட்டேன். உன்னுடைய புக் தா! நா நோட்ஸ் ப்ரிபேர் பண்ணிட்டு புக்கை திரும்பித் தந்துடுறேன் " என்று கேட்டதும் ஷாஜிதா தன் பையிலிருந்து புத்தகங்களை எடுத்து சமீரிடம் நீட்ட , அதை வாங்கிய சமீர் , " தேங்க்ஸ் ஷாஜி! " என்றுவிட்டுத் தன் அறைக்குச் சென்றான்.

இருவருக்கும் இடையில் நடந்தப் பேச்சு வார்த்தையை இருவரும் நன்றாகவே கவனித்தார்கள். அமைதியாக இருவருமே வெளியே வந்தார்கள்.

இருவரும் மெது நாற்காலியில் அமர , " ஷாஜிதா, சமீர் அண்ணாவை நேசிக்கத் தொடங்கிட்டாள் நினைக்கிறேன் " என ஃபிர்தவுஸ், முஸ்கானை பார்க்க , " எனக்கும் அதான் தோனுது " என முஸ்கானும் ஃபிர்தவுஸை பார்த்தாள்.

ஃபிர்தவுஸ் , " இதை சமீர் அண்ணா கிட்ட சொல்லனும் வா " என்றவுடன் இருவரும் சமீரை காண சென்றனர்.

சமீர் , நாளை எடுக்கவிருக்கும் பாடங்களை பார்த்துக் கொண்டிருந்தான். அப்போது , " அண்ணா உள்ள வரலாமா? "என முஸ்கான் குரல் கேட்டதும், புத்தகத்தை மூடி வைத்துவிட்டு , " உள்ள வா மா " என்றதும் இருவரும் உள்ளே வந்தனர்.

இருவரையும் பார்த்து , " உட்காருங்க " என்றதும் அமர்ந்தனர். இருவரும் அமைதியாக ஒருவருக்கு ஒருவரை பார்த்துக் கொண்டனர்.

அதை கவனித்த சமீர் , " என்ன அமைதியா இருக்கீங்க? எதையோ சொல்ல வந்துட்டு இப்டி அமைதியா இருந்தா என்ன அர்த்தம்? " என கேட்க , ஃபிர்தவுஸ் தான் முதலில் பேசத் தொடங்கினாள்.

ஃபிர்தவுஸ் , " அண்ணா ஷாஜிதா உங்களை லவ் பண்றா " என்றவுடன் சமீர் , " அட! போம்மா நீ வேற. அவளாவது என்னை லவ் பண்றதாவது! " என தன் வலியையும் மறைத்துக் கொண்டு சலிப்பாக கூறியதும் முஸ்கான் கோபமாய், " லூசு அண்ணா! உண்மையாவே அண்ணி உன்ன லவ் பண்ண ஆரம்பிச்சிட்டாங்க." என முறைத்தாள்.

தன் தங்கையின் முறைப்பில் உண்மை இருப்பதை உணர்ந்த சமீர் , " எப்டி சொல்றீங்க ஷாஜி என்னயே லவ் பண்றாள்னு? " என கேட்டதும், " இப்ப நீங்க சொன்னீங்களே ஷாஜின்னு அதை வைச்சி தான் சொல்றோம் " என ஃபிர்தவுஸ் சொன்னவுடன் , "அதுல என்ன இருக்கு? "என சமீர் புரியாமல் இருவரையும் பார்க்க , " அண்ணா , இப்ப நா அண்ணியை ஷாஜின்னு கூப்பிட்டதும் அவ்ளோ கோபமா என்னயே ஷாஜின்னு கூப்பிடாதீங்க! ஷாஜின்னு என்னோட தாத்தா மட்டும் தான் கூப்பிடனும். ஷாஜின்னு கூப்பிடுற உரிமையை தாத்தாவை தவிர வேற யாருக்கும் கொடுக்கலை கொடுக்கவும் மாட்டேன் சொன்னாங்க. ஆனா நீ ஷாஜின்னு கூப்பிட்டதும் எதுவும் சொல்லலை அதை வச்சிதான் சொல்றோம் " என்றாள்.

சமீர் , " ம்ம்ம் அப்படியா? "

ஃபிர்தவுஸ் , " ம்ம்ம் ஆமா ண்ணா. சின்ன வயசுல இருந்தே ஷாஜிதா யாரையும் தன்னை ஷாஜின்னு அழைக்க விடமாட்டாள். தாத்தா பாட்டி மட்டும் தான் அப்டி அழைக்கனும். வேற யாராவது அழைச்சா அவ்ளோ தான். உங்களை ஷாஜின்னு அழைக்க விட்டு இருக்கான்னா அது கண்டிப்பா லவ் தான். நான் அடிச்சி சொல்ற உங்க மேல இருக்க லவ்யை உணர்ந்தும் உணராத மாதிரி நடிக்கிறா " என்றாள்.

உடனே முஸ்கான் , " அதை முதல்ல உடைக்கனும் " என்றதும் " அது முடியாது. அவ உயிர் போற நிலைமை வந்தா கூட சொல்லமாட்டா. கேட்டா எதுக்கு என்னால மத்தவங்களுக்கு கஷ்டம்ன்னு சொல்லுவா? " என பொரிந்து தள்ளினாள் ஃபிர்தவுஸ்.

பாவம் ஃபிர்தவுஸிற்கு தெரியவில்லை ஷாஜிதாவின் உயிருக்கு போராடும் நிலை கூடிய விரைவில் ஏற்பட ஏற்பட போகிறது என்று.

முஸ்கான் , " ஏன் ஃபிர்தவுஸ் ஷாஜிதா இப்டி இருக்கா? இந்த வீட்டுக்கு வந்து ரெண்டு நாளாகுது. ஆனா யார்கிட்டயும் பேசவே மாட்றா? சின்ன வயசுல இருந்தே இப்டி தானா ? " என ஃபிர்தவுஸை பார்த்தாள்.

ஃபிர்தவுஸ் மென்மையாய் முஸ்கானை பார்த்து சிரித்துவிட்டு , "ம்ம்ம் ஆமா. யார்கிட்டயும் பேச மாட்டா. அம்ரீன் அஜ்மல் இவங்க ரெண்டு பேர்கிட்ட மட்டும்தான் பேசுவா. அப்றம் என்கிட்ட. நண்பர்களுன்னு சொல்லிக்க அவ்ளவா யாருமில்ல அவளுக்கு . ஸ்கூல் விட்டா வீடு வீடு விட்டா ஸ்கூல். தாத்தா இருந்த வரைக்கும் பார்க் பீச் இப்டி அழைச்சிட்டு போய்ட்டு வருவார். தாத்தா போனதுக்கு அப்றம் அதுவும் இல்ல. காரணமே இல்லாம இல்லாத காரணத்தை வச்சி ஷாஜிதாவுக்கு சூடெல்லாம் வைச்சி இருக்காங்க. ஒரு நாள் காரணமே இல்லாம சூடு வைக்கப் பாத்தாங்க ஷாஜிதாவுக்கு ஆனா அதை அப்டி அவங்களுக்கு திரும்பி வைச்சி விட்டா. இப்டியே அவ மொத்தமா மாறிட்டா. எதிர்த்து பேச ஆரம்பிச்சிட்டா. பிடிவாதமும் அதிகமாகிடுச்சு அவளுக்கு. பாட்டி சொன்னா மட்டும் தான் கேட்பா. எதுக்கும் துணிச்சவளா மாறிட்டா! அவள் வாழ்க்கை கடைசி வரைக்கும் இப்டியே போய்டுமோ பயமா இருக்கு "என தன் கண்ணீரை சுண்டி விட்டாள்.

இதைக் கேட்ட சமீருக்கு கோபம் தலைக்கேறியது. கோபம் கொண்டு சமீர் , தன் கையை மடக்கி அருகில் இருந்த மேசையில் குத்தினான். சமீரின் வேகமே அவனின் கோபத்தை உணர்த்தியது.

சமீரின் கோபத்தைப் பார்த்த, ஃபிர்தவுஸ் சற்று பயந்து போனாள். முஸ்கான், ஃபிர்தவுஸின் பயத்தை உணர்ந்து தன் அண்ணன் அருகில் சென்று பொறுமையாக , " ண்ணா கோபத்தை அடக்கு ஃபிர்தவுஸ் ரொம்ப பயப்படுறா! " என்றதும் சமீர் கோபத்தை அடக்கிக்கொண்டு ஃபிர்தவுஸிடம் , " சாரி ஃபிர்தவுஸ். கவலப்படாத ஷாஜியை நா அப்டிலாம் விட்ற மாட்டேன். அவ இந்த சமீரோட ஷாஜிதா. என் ஷாஜி மேல கொலை பழி போட்டவங்களை சும்மா விட மாட்டேன். நீங்க கவலப்படாதீங்க" என்றுவிட்டு , " ஆங் ஃபிர்தவுஸ், உங்க கிட்ட ஷாஜியோட சின்ன வயசு போட்டோ இருக்கா? " என கேட்டதும் , " எதுக்கு ண்ணா? " என புரியாமல் சமீரை பார்த்தால் ஃபிர்தவுஸ்.

புரியாமல் பார்த்த ஃபிர்தவுஸின் மனதை புரிந்த சமீர் , " நீங்க ரியாஸ் ஹஜ்ரத் பேத்தி தானே? " என கேட்டதும் ஃபிர்தவுஸ் , " ம்ம்ம் ஆமா!" என சற்று அதிர்ந்தவாறே பதிலளித்து விட்டு , "உங்களுக்கு எப்டி எங்க தாத்தாவை தெரியும்?" என கேட்க, சமீர் புன்னகையுடன் , " எனக்கும் அவர்தான் குர்ஆனை ஓத கத்து கொடுத்தாரு. அப்ப மதரஸாக்கு ஷாஜியை தூக்கிட்டு வருவார். யார்கிட்டயும் போக மாட்டா என்கிட்ட தான் இருப்பா. என் தோளுல தூங்கிடுவா. அவ சிரிப்பு அவ்ளோ அழகா இருக்கும். இன்னும் அது என் கண்ணை விட்டு மறையலை! அந்த சிரிப்பை நான் மறுபடியும் பார்க்கனும். ஷாஜியோட சின்ன வயசு அதாவது மூனு வயசு போட்டோ இருக்கா? " என கேட்க , " ம்ம்ம் இருக்கு ண்ணா! நா நாளைக்கு வீட்டுக்கு போய்ட்டு எடுத்துட்டு வந்துடுறேன்! " என ஃபிர்தவுஸ் சம்மதித்தாள்.

சமீர் , "நீங்க எதுக்கும் கவலப்படாதீங்க! ஷாஜி என்னோட பொறுப்பு. நிம்மதியா இருங்க " என ஃபிர்தவுஸிற்கு ஆறுதல் அளித்து அவளை அனுப்பினான். முஸ்கானும் சென்றுவிட்டாள்.

சமீருக்கு ஹசினா மேல் கோபம் இன்னும் அதிகமானது. சரியான நேரத்திற்காக காத்திருந்தான் சமீர்.

முஸ்கான், ஷாஜிதாவை சாப்பிட அழைக்க அறைக்கு வர , அங்கே ஷாஜிதா உறங்கி கொண்டிருந்தாள்.

உறங்கி கொண்டிருந்த ஷாஜிதா அருகில் அமர்ந்த முஸ்கான் , "அதுக்குள்ள தூங்கிட்டா! " என சிரித்துவிட்டு ஷாஜிதாவிற்கு போர்வை போர்த்தி வெளியே வந்தாள்.

அஸ்மா , " ஷாஜிதாவை சாப்பிட அழைச்சிட்டு வர சொன்னா என்ன பண்ணிட்டு இருக்க? " என கேட்டதும் , " அண்ணி தாங்கிட்டாங்க ம்மா! " என்றாள் முஸ்கான்.

அஸ்மா , " சாப்பிடாம தூங்கிட்டாளே இந்த பொண்ணு! சரிவிடு வா வந்து சாப்பிடு "என அனைவரையும் சாப்பிட அழைத்து பரிமாறினார்.

முஸ்கான், " அம்மா அண்ணாவுக்கும் அண்ணிக்கும் சீக்கிரமா கல்யாணம் பண்ணி வை ம்மா! பாவம் ம்மா அண்ணி. ரெண்டு நாளா நைட் தூங்கவே இல்ல. எதையோ இழந்த மாதிரி எப்பவும் இருக்காங்க. அவங்களுக்கு விருப்பமே இல்லனாலும் வற்புறுத்தியாது இந்தக் கல்யாணத்தை நடத்துங்க ம்மா." என தன் தாயிடம் கூறியதும் , "முஸ்கான் நம்ம இஸ்லாத்தில கட்டாய கல்யாணம் கிடையாது. அப்படியே பெண்ணையே கட்டாயம் பண்ணி கல்யாணம் பண்ணி வைச்சா அந்த கல்யாணமே செல்லாது. அது உனக்கு தெரியும்ல அப்றம் என்னடா? " என அஸ்மா கூற

முஸ்கான் , "அம்மா பிடிக்காதவனை கட்டாயம் பண்ணி கல்யாணம் பண்ணி வைச்சா தானே தப்பு! நேசிக்கிறவங்களை கல்யாணம் பண்ணி வைச்சா தப்பு இல்ல. ஏன்னா அண்ணி அண்ணாவை நேசிக்க தொடங்கிட்டாங்க. அதனால தான் சொல்றேன் ம்மா ப்ளீஸ் " என கெஞ்ச அஸ்மா முடியாது என ஒரேயடியாக மறுத்துவிட்டார்.

அஸ்மா , " இங்க பாருடா! இந்த விஷயத்தை பொறுமையா தான் கையாளனும். நான் பேசுற அதுவரைக்கும் கொஞ்சம் பொறுத்திரு. சரியா! " என தன் மகளின் தலையை வருடி விளக்க முஸ்கானும் அமைதியாக தலையசைத்துவிட்டு சாப்பிட தொடங்கினாள்.

சமீர் , ஏதோ அறைகுறையாக சாப்பிட்டு விட்டு எழுந்து தன்னறைக்கு சென்று விட்டான். சமீரின் மனம் தன்னவள் தன்னை எப்போது ஏற்று கொள்வாள் என ஏங்கி கொண்டிருந்தது.

தன் சட்டை பையில் இருந்த தன்னவளின் புகைப்படத்தை எடுத்த, சமீர் , ' ஏன்டி இப்டி பண்ற? எனக்கு நீ வேணும் டி. உன்ன ஆயுசுக்கும் கண் கலங்காம பாத்துக்குவேன்டா உன்ன. என்னை நம்புடி ' என ஷாஜிதாவின் புகைப்படத்தை அணைத்துக் கொண்டு கண்ணீர் விட்டான் சமீர்.

பார்ப்போம் சமீரின் கண்ணீருக்கு விடை கிடைக்குமா என்று

♥️ தொடரும் ♥️

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro