💞 27 💞
ஷாஜிதா , மகிழுந்தில் ஏறி அமர்ந்ததும் சமீருக்கு ஏதோ நினைவு வர , உடனே ஷாஜிதாவிடம் திரும்பி , " ஷாஜி! கொஞ்சம் இருடா சையின் போட்டுட்டு வந்துடுறேன் " என மெல்லிய சிரிப்போடு கூறிவிட்டு மகிழுந்திலிருந்து இறங்கி உள்ளே சென்றான்.
ஷாஜிதா, ' ஏங்க என் மேல இவ்வளவு பாசமா இருக்கீங்க? நா உங்களுக்கு என்ன பண்ணேன்? நீங்க எனக்கு வேணும் ஆ..ஆனா என்னால உங்களுக்கு பிரச்சினை தான். உங்களுக்கு எதாவது ஒன்னுன்னா அதை என்னால தாங்கிக்க முடியாது. அ...அதனால என்னோட காதலை உங்க கிட்ட இருந்து மறைக்கிறது தவிர வேற வழியில்லை ! அ....அய் ல...லவ் யூ அண்ட் அ...அயம் சாரி வெரி வெரி சாரி ' என மானசீகமாக சமீரிடம் மனதில் தன் காதலையும் மன்னிப்பையும கூறி தன் கண்களில் வழிய இருந்த கண்ணீரை தன் ஒற்றை விரலால் சுண்டி விட்டாள்.
சமீர் மகிழுந்தின் கதவை திறந்ததும் , ஷாஜிதா தன்னை இயல்பாக்கி கொண்டாள். சமீர் , தன் இருக்கையில் அமர்ந்தபடி , "சையின் போட்டாச்சு! நாம போலாம் " என புன்னகைக்க, ஷாஜிதா அமைதியாகவே இருந்தாள்.
எப்போது தனக்காக எதைப்பற்றியும் கவலைப்படாமல் தன்னை தவறான உறவுக்கு அழைத்த அவனை ஊரார் முன்னிலையில் சாட்டையால் அடித்து தன் காலில் விழுந்து மன்னிப்பு கேட்க வைத்தானோ அப்போதே ஷாஜிதாவின் மனம் சமீரை தன்னவனாக ஏற்றுக்கொண்டது. இருந்தாலும் தன்னால் சமீருக்கு எந்தவொரு பிரச்சினையும் வரக்கூடாது என்று தன் காதலை மறைக்க முடிவெடுத்தாள்.
ஷாஜிதா, அமைதியாக இருக்க , சமீர் மகிழுந்தை ஓட்டத் தொடங்கினான். சமீர் , மகிழுந்தில் பாடலை ஒலிக்கச் செய்தான்.
" ஒரு ஊரில் அழகே உருவாய்
ஒருத்தி இருந்தாளே! "
என்ற பாடல் ஒலிக்க , ஷாஜிதா தன் இதழோரத்தில் சிறிய புன்னகை ஒன்றை விரித்தாள். அது ஷாஜிதாவிற்கு பிடித்தப் பாடல்.
சமீர் , ஷாஜிதா முதல் முறையாக சிரிப்பதை பார்த்ததும் , மொத்தமாய் விழுந்துவிட்டான். அதிலும் , ஷாஜிதா சிரிக்கும் பொழுது கன்னத்தில் விழுந்த குழியில் தன்னை இழக்கத் தொடங்கினான்.
சமீர் , ஷாஜிதாவிடம் , " ஷாஜி! நீ சிரிக்கும் போது அழகா இருக்க டா " என்றுவிட்டு மகிழுந்தை ஓட்டுவதில் கவனம் செலுத்தினான். ஷாஜிதாவிற்கு என்ன சொல்வதென்று தெரியாமல் சமீரையே ஒரு நிமிடம் பார்த்தாள்.
சமீர் , ' சின்ன வயசுல உன்னோட பால் பல்லோட இப்டி தான் ஷாஜி அழகா சிரிப்ப! அந்த சிரிப்புல இருக்க எல்லா துன்பமும் மறந்து போய்டும்! அப்டி ஒரு ஈர்ப்பு உன்னோட அந்த சிரிப்புல! இப்ப வரைக்கும் அந்த சிரிப்பு மாறல. இந்த சிரிப்பு உன் முகத்தில எப்பவும் நிலைச்சு இருக்கும் டா அதுக்கு நா பொறுப்பு ' என மனதில் சபதம் எடுத்துக்கொண்டு வண்டியை கவனம் செலுத்தி கொண்டிருந்தான்.
ஷாஜிதா, தன்னை மறந்து சமீரை பார்த்து கொண்டிருக்க , சமீர் அதை கவனிக்காமல் மகிழுந்தை செலுத்தி கொண்டிருந்தான்.
ஷாஜிதாவின் கண்களுக்கு சமீர் ஒரு குழந்தையாகவே தெரிந்தான். ஏனோ ஷாஜிதாவின் கரங்கள் , சமீரின் தலையை கோதிவிட ஆர்வம் கொள்ள, அதை பெரும்பாடுப்பட்டு அடக்கினாள்.
சிறிதுநேரம் கழித்துத் தன் பார்வையை வேறு பக்கம் திருப்பிக் கொண்டாள், ஷாஜிதா.
இருபது நிமிடத்தில் வீட்டிற்கு வந்து சேர்ந்தார்கள் , இருவரும். ஷாஜிதா உடனே சென்று தொழுதாள்.
ஷாஜிதா , ' யா அல்லாஹ்! நா எடுத்திருக்க இந்த முடிவு தப்பா சரியான்னு கூடத் தெரியலை. ஆனா என்னால அவருக்கு கண்டிப்பா பிரச்சினை இருக்கு. அவருக்கு எதாவது ஆகிடுச்சு அப்டினா அதை தாங்குற சக்தியோ துணிச்சலோ எனக்கு இல்ல. எப்பவுமே அவர் பக்கத்தில துணையா நீ இரு எனக்கு அதுவே போதும். ' என அல்லாஹ்விடம் முறையிட்டு வெளியே வந்தாள்.
முஸ்கான், மெது நாற்காலியில் அமர்ந்துக் கொண்டு தொலைக்காட்சியைப் பார்த்துக் கொண்டிருந்தாள். அஸ்மா, சமையல் வேலையை செய்து கொண்டிருந்தார். லத்தீப் மற்றும் சமீர் இருவரும் பள்ளிவாசல் சென்றுவிட்டனர்.
முஸ்கான் , " ஹே ஷாஜிதா இங்க வா ! " என ஷாஜிதாவை அழைக்க, ஷாஜிதா முஸ்கான் அருகே சென்றாள்.
முஸ்கான் ஷாஜிதாவின் கையை பிடித்து தன் அருகில் அமர வைத்து , " இன்னிக்கு காலேஜ் எப்டி போச்சு? " எனக் கேட்க
ஷாஜிதா , " ம்ம்ம் அல்ஹம்துலில்லாஹ் நல்லா போச்சு! "
முஸ்கான் , "உன்னோட aim என்ன? "
ஷாஜிதா , " ம்ச் அப்டிலாம் எதுவும் இல்ல! "
முஸ்கான் , " எதுவுமில்லையா? "
ஷாஜிதா , " இல்ல! "
முஸ்கான் , " ஹே என்ன சொல்ற? "
ஷாஜிதா , " ம்ம்ம் ஆமா! என்னோட வாழ்க்கையில அடுத்த நாள் பத்தின எந்தவொரு கவலையும் பயமும் இல்லாம நிம்மதியா தூங்குனும். அதுவே போதும் எனக்கு " என மெலிதாய் சிரித்தாலும் , ஷாஜிதாவின் வலியை உணர முடிந்தது முஸ்கானால்.
தன் கண்களில் வழிந்த கண்ணீரை ஷாஜிதாவிற்கு தெரியாமல் துடைத்துக் கொண்டு , " கவலப்படாத! அல்லாஹ் உன் கஷ்டத்தை எல்லாம் சீக்கிரம் சரி செய்வான்! நா துஆ செய்றேன் " என்றதும் ஷாஜிதா மென்மையாய் புன்னகை செய்தாள்.
அதன்பிறகு அந்த இடமே அமைதியாக இருந்தது. ஷாஜிதாவிற்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. அமைதியாக இருந்தாள்.
ஷாஜிதாவின் பதிலால் முஸ்கானின் மனம் கஷ்டப்பட்டது. ஷாஜிதா, அங்கும் இங்கும் தன் பார்வையை அலைய விட்டுக் கொண்டிருந்தாள். தொலைக்காட்சி தானாக ஓடிக் கொண்டிருந்தது.
அஸ்மா சமையல் வேலையை முடித்துவிட , " ஷாஜிதா, முஸ்கான் ரெண்டு பேரும் வாங்க சாப்பிடலாம் " என சுப்ரா துணியை தரையில் விரித்தபடி அழைத்தார்.
ஷாஜிதா , முஸ்கான் இருவரும் , "இதோ வரோம் " என இருவரும் எழுந்து கைகளை கழுவ சென்றனர்.
அதற்குள் பள்ளிவாசலுக்கு சென்ற சமீரும் லத்தீபும் தொழுகை முடித்துவிட்டு வீட்டிற்கு வந்தனர்.
தோட்டத்திற்கு கைகால்களை கழுவ சென்ற சமீர் , தன் கைகளை கழுவி கொண்டு முஸ்கானிடம் பேசி கொண்டே வந்த ஷாஜிதாவின் மேல் மோதினான்.
சமீருக்கு மனமெல்லாம் படபடத்தது , ' அவ்வ்வ் இந்த சண்டக்காரி என்ன வம்பிழுக்க போதோ தெரியலையே ' என நினைத்துக் கொண்டு ஷாஜிதாவிடம் , " ஸ..ஸாரி தெரியாம மோதிட்டேன்" என்று மெல்ல கூற
ஷாஜிதா , "கண்ணு என்ன தலையிலயா வச்சிட்டு வர! பாத்து வர மாட்டியா? இப்டி தான் வந்து மோதுவியா? அறிவில்லை " என முறைக்க, சமீர் தன் முகத்தை பாவமாக வைத்துக்கொண்டு ஷாஜிதாவை பார்த்துக் கொண்டிருக்க , " முகத்தை இப்டி வச்சிக்கிட்டா நாங்க அமைதியா இருப்போமா? " என்றவுடன் சமீர் , " ஸாரி இனி இப்டி மோத மாட்டேன்! போதுமா " என்று குரலில் கடுமையுடன் சொல்ல ஷாஜிதா , " போதும் ம்ஹ்ம் " என்று விட்டு தனக்குள் சிரித்துக்கொண்டு நடந்தாள்.
முஸ்கான் இருவரையும் வியந்து பார்த்து கொண்டிருந்தாள். தன் தங்கையை பார்த்த சமீர் , " ஏய்! ஒட்டடக்குச்சி என்ன லுக்? " என தங்கையை சீண்டினான்.
முஸ்கான் , " ஓய் என்ன? இரு அண்ணியை கூப்பிடவா? " என்றதும்
சமீர் , " அம்மா தாயே ! வேணாமா இப்ப புயல் ஓய்ஞ்சு இருக்கு! திரும்ப அதை அழைக்காத! " என கெஞ்சியதும் , முஸ்கான் , "டேய்! நீயெல்லாம் டீடெக்ட்டிவ் வெளியே சொல்லிடாத! " என தலையில் அடித்துக்கொண்டு கூறியதும் , முஸ்கானின் பின்தலையில் அடித்த சமீர் , " ரொம்ப பேசாத போ " என கூறிவிட்டு கைகளை கழுவ சென்றான்.
ஷாஜிதாவிற்கு சிரிப்பு தாங்க முடியவில்லை. தன்மேல் இடித்துவிட்டு என்ன செய்வதென தெரியாமல் விழித்த சமீர் ஷாஜிதாவின் கண்களுக்கு சிறு குழந்தையாக தான் தெரிந்தான். 'அல்லாஹு! நீங்க இன்னும் வளரனும்! நா உங்களை டீஸ் பண்றேன் அத கூட தெரியாத அப்பாவியா இருக்கீங்களே! அச்சோ! பப்பு நீங்க ரொம்ப ஸ்வீட் ' என தனக்குள் சிரித்து கொண்டிருந்தாள்.
மற்றவர்கள் வருவதை உணர்ந்த ஷாஜிதா அமைதியாக இருந்தாள். அனைவருக்கும் அஸ்மா பரிமாறிவிட்டு தானும் சாப்பிட்டார்.
தான் பிறந்த வீட்டில் தான் தன் தங்கை மற்றும் அம்மா மூவரும் அந்த வீட்டின் வேலைக்காரியை போல் தானே இருந்தோம். இப்போதும் தன் அம்மாவும் தங்கையும் அப்படிதானே இருக்கிறார்கள். அதை நினைத்த ஷாஜிதாவின் மனம் வலித்தது. தன் தங்கை மற்றும் அம்மாவின் நினைவு வந்து விட்டது, ஷாஜிதாவிற்கு. முகத்தில் இருந்த கொஞ்ச சந்தோஷமும் போனது. அமைதியாக உணவை சாப்பிட்டு விட்டு எழுந்தாள்.
அஸ்மா , " என்னடா கொஞ்சமா சாப்பிட்டு எழுந்துட்ட? இன்னு கொஞ்ச வைச்சிக்கோ டா " என சாப்பாட்டை ஷாஜிதாவின் தட்டில் போட்டு , "சாப்பிடு" என அமைதியாக சாப்பிட்டார்.
அஸ்மாவின் பேச்சுக்கு மரியாதை கொடுத்து சாப்பிட்டு எழுந்து அறைக்கு சென்றாள், ஷாஜிதா.
தன் பிறந்த வீட்டை விட்டு வெளியே வந்து நான்கு மாதங்கள் ஆகிவிட்டன. இதுவரை தன்னை தன் தந்தை தன்னை ஒரு நாளும் தேடி வராததை நினைத்த ஷாஜிதாவின் மனம் சொல்லொணா வலியால் தவித்தது.
பெண்பிள்ளைகள் என்றால் எப்போதும் அப்பா செல்லம். ஆனால்! இங்கே? தன்னை ஏதோ புழுவைப் பார்ப்பது போல் பார்க்கிறார் என நினைத்த பேதையின் மனம் ஈட்டியில் இதயத்தை கிழித்தால், எப்படி வலிக்குமோ அப்படி வலித்தது.
எப்படி உறங்கினாள் என்றெல்லாம் ஷாஜிதாவிற்கு தெரியவில்லை ஆனால் உறங்கிவிட்டாள்.
ஷாஜிதா உறங்கிக் கொண்டிருப்பதை பார்த்த முஸ்கான் அமைதியாக வெளியே சென்றாள்.
அஸ்மா , "முஸ்கான் , ஷாஜிதா என்ன பண்றா? " எனக் கேட்க
முஸ்கான் , " தூங்கிட்டு இருக்காள் ம்மா! " என்றவுடன்
சமீர் , " ரொம்ப நல்லது. உங்ககிட்ட ஒரு முக்கியமான விஷயம் சொல்லனும் " என்றான்.
லத்தீப் , "என்ன விஷயம்? "
சமீர் , "அம்மா நா சொல்லிட்டு இருந்தேன்ல ஷாஜிதாவை எங்கேயோ பார்த்த மாதிரி இருக்குன்னு " என அஸ்மாவிடம் சொன்னதும்
முஸ்கான் , " என்ன ண்ணா சொல்ற? அண்ணியை நீ முன்னவே பாத்து இருக்கியா? " என ஆச்சரியமாக கேட்க
சமீர் , " ம்ம்ம் ஆமா! "
அஸ்மா , " எங்க டா எப்ப பார்த்த? " என ஆர்வமாக கேட்க
லத்தீப் , " டேய் எங்கடா பாத்த சொல்லு "
சமீர் , " ரியாஸ் ஹஜ்ரத் உடைய பேத்தி தான்ம்மா ஷாஜி! "
லத்தீப் , "என்னடா சொல்ற? ஷாஜிதா ரியாஸ் ஹஜ்ரத் பேத்தியா? "
சமீர் , " ம்ம்ம் ஆமா ப்பா! இருந்தாலும் சின்ன டவுட் இருக்கு! பாக்கலாம் "
முஸ்கான் , "நீ பாக்கும் போது அப்ப அண்ணிக்கு என்ன வயசு இருக்கும் " என ஆர்வமாக கேட்க
சமீர் , " ம்ம்ம் ஒரு மூனு வயசு இருக்கும் " என்றதும்
முஸ்கான் , "என்ன சொல்ற? மூனு வயசா? "
சமீர் , "ம்ம்ம் ஆமா. ரொம்ப சின்ன பொண்ணு! " என தன் நினைவுகளை நினைத்து மெல்லிய புன்னகை ஒன்றை சிந்தினான்.
லத்தீப் , "ம்ம்ம் நல்ல மனுஷன்! இவர் எப்பவும் அந்த ஹஜ்ரத் அக்பர் அப்பறம் மஹ்பூல் ஹஜ்ரத் உடன் தான் இருப்பார். அவங்க மூனு பேரும் ரொம்ப நெருக்கம் சின்ன வயசுல இருந்து. இப்ப அந்த ரெண்டு ஹஜ்ரதும் இருக்காங்க. இவர் இல்ல " என வருத்தமாக கூறினார்.
சமீர் , " ம் சரி இந்த விஷயம் ஷாஜிக்கு தெரிய வேணாம் நா பார்த்துக்கிறேன் " என்றதும் அனைவரும் சம்மதித்தனர்.
------
ஜாரா - ஷாரூகின் திருமணம் முடிந்து ஒரு மாதம் ஆகிறது. விருந்து சுற்றுலா என எல்லாம் முடிந்து இப்போது ஜாரா கல்லூரிக்கும் ஷாரூக் வேலைக்கும் செல்ல தொடங்கி இருந்தனர்.
சல்மாவிற்கு உடம்பு முடியவில்லை. கல்லுரி முடித்துவிட்டு வீட்டிற்கு வந்த ஜாரா, அறையில் அமர்ந்து தன் அலைபேசியை அலைசி கொண்டிருந்தாள்.
சல்மா , " ஜாரா " என அழைக்க
ஜாரா , " ஹான் இதோ வரேன் " என குரல் கொடுத்துவிட்டு கீழே சல்மா அருகில் வந்து , " ம்ம்ம் சொல்லுங்க அத்த! "
சல்மா , " எனக்கு கொஞ்சம் உடம்புக்கு முடியலை மா வீட்டை மட்டும் பெருக்கிடு" என்றதும்
ஜாரா , "எது நா வீட்டை பெருக்கனுமா? என்னால முடியாது! " என முகத்திற்கு நேராக சொல்லிவிட்டாள்.
சல்மா , " என்னமா இப்டி சொல்ற? என்னால முடியலை தானே சொல்றேன். இன்னிக்கி மட்டும் பெருக்கிடு! " என பொறுமையாக கூறினார்.
ஜாரா , " நா ஒன்னும் இந்த வீட்டு வேலைக்காரி இல்ல! இந்த வேலையெல்லாம் செய்றதுக்கு " என்றுவிட்டு தன்னறைக்கு சென்றுவிட்டாள்.
சல்மாவிற்கு மனம் நொந்து விட்டது. தலையெழுத்து என நினைத்து கொண்டு தானே வீட்டை சுத்தம் செய்து முடித்தார்.
இரவு ஏழு மணிபோல் , ஷாரூக் வீட்டிற்கு வர தன் அம்மாவின் நிலையை கண்டதும் பதறியபடி , "அம்மா! என்னாச்சு? ஏன் இப்டி உட்கார்ந்திருக்கீங்க? " என கேட்க
சல்மா , " ஒன்னுமில்ல உடம்பு சரியில்லை! " என்றதும்
ஷாரூக் , " ஏம்மா உடம்பு சரியில்லாத நேரத்தில இந்த வேலையெல்லாம் நீங்க தான் செய்யனுமா? ஜாரா கிட்ட சொல்ல வேண்டியது தானே " என்றதும்
சல்மா , " இதுல என்ன இருக்கு! அவ படிக்கிற பொண்ணு "என உண்மையை மறைக்க நினைத்தார். ஆனால் பாட்டி ரஹிமா தடுத்து , " பொய் சொல்றாள் ஷாரூக்! உன் மனைவி இந்த வேலையெல்லாம் செய்ய மாட்டாளாம். " என்றதும் ஷாரூகிற்கு கோபம் கொண்டு , " ஏய் ஜாரா! " என கத்த
சல்மா , "ஷாரூக்! விடு அவள் சின்ன பொண்ணு ! போக போக சரியாகிடுவாள். நீ எதுவும் சொல்லாத. அம்மா சொன்னா கேட்கனும் சரியா? " என ஷாரூகின் கோபத்தை கட்டுப்படுத்தி அறைக்கு அனுப்பி வைத்தார்.
ஷாரூக் கோபமாக அறைக்குள் வந்தான். அங்கே ஜாரா கட்டிலில் அமர்ந்து கொண்டு அலைபேசியை அலசிக் கொண்டிருந்தாள். அதைப் பார்த்த ஷாரூகிற்கு கோபம் வர , " ஏய்! அம்மாக்கு உடம்பு சரியில்லை சொல்லி தானே உன்ன வேலை செய்ய சொன்னாங்க! அங்க முடியாது சொல்லிட்டு இங்க வந்து போனை நொண்டிகிட்டு இருக்க! " என கோபமாக கத்த
ஜாரா , "நா உனக்கு மனைவியா தான் இங்க வந்தேன். வேலைக்காரியா இல்ல! " என திமிராக கூறியதும்
ஷாரூக் , "என்னடி திமிரா பேசுற? "
ஜாரா , " நா ஒன்னும் திமிரா பேசலை" என்று பதில் பேசியதும் ஷாரூக் அதற்கு மேல் அங்கு நிற்க பிடிக்காமல் குளிக்க சென்றுவிட்டான்.
-----
அப்சல் , சந்தோஷமாக வீட்டிற்கு இனிப்புடன் வந்து சேர்ந்தான். " அம்மா , அப்பா , ஃபர்ஜு மா எல்லாரும் வாங்க ஒரு சந்தோஷமான விஷயம் " என வீட்டிற்கு வந்ததும் வராததுமாய் சந்தோஷத்தில் துள்ளி குதித்துக் கொண்டிருந்தான் , அப்சல்.
ஆபிதா , " என்ன டா! இவ்வளவு சந்தோஷமா இருக்க? என்ன விஷயம் " என சிரித்து கொண்டே கேட்டார்.
அப்சல் , " அம்மா நான் bank exam la பாஸ் பண்ணிட்டேன். நம்ம ஊருலே வேலை ம்மா ! " என்றதும் அனைவரின் முகத்திலும் சந்தோஷம் தாண்டவம் ஆடியது.
சலீம் , "அல்ஹம்துலில்லாஹ்! நல்ல செய்தி சொல்லி இருக்க! இனி உனக்கு பொண்ணு பாக்க ஆரம்பிச்சிட வேண்டியது தான் ! சரி நீ யாரையோ விரும்புற தெரியுது அது யாருன்னு இப்பவாது சொல்லு! " என்றதும் அப்சல் விழித்தான்.
ஆபிதா , " என்னடா அப்டி முழிக்கிற? "
ஃபர்ஜானா , " நமக்கு எப்டி தெரியுமுன்னு முழிக்கிறான் ம்மா இவன் "
சலீம், "டேய்! நீ என் மகன்டா! நீ யாரு எனக்கு தெரியாதா?"
ஆபிதா , "யாருடா அந்த பொண்ணு சொல்லு! " என கேட்க ,
அப்சல் , " ஷாஜிதா தங்கச்சி அம்ரீன்"
♥️ தொடரும் ♥️
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro