💞 26 💞
சமீர் , அஜ்மலின் தந்தை வாஹிதை பார்த்ததும் ஏனோ மனமெல்லாம் படபடத்தது. தான் பார்த்ததும் நிஜமா? இல்லை கனவா? என தெரியாமல் தவித்தான். தன் பார்வையை ஷாஜிதாவின் புறம் திருப்பியதும் சமீரின் மனக்கண் முன் ஒரு உருவம் வந்து செல்ல ஒரு நொடி திகைத்து நின்றான்.
அஜ்மலை செல்வதற்கு அனுமதி கொடுத்து விட்டு தானும் அவ்விடத்தை விட்டு வேகமாக அகன்றான். சமீர் வேகமாக செல்வதை பார்த்த ஷாஜிதாவிற்கு ஒன்னும் புரியவில்லை. ஷாஜிதாவும் சமீரின் பின் சென்றாள்.
ஷாஜிதா, சமீரின் பின் சொல்வதை பார்த்த , மாணவர்கள் என்ன என்று புரியாமல் விழித்தனர்.
சமீரின் வேகத்திற்கு ஷாஜிதாவால் தாக்கு பிடிக்க முடியவில்லை. சமீரின் பின்னாலே ஓடிக் கொண்டே , ' என்ன இவரு ஒலிம்பிக்கில ஓடுற மாதிரி இவ்ளோ வேகமா நடக்குறாரு! ' ,என மனதில் நினைத்து கொண்டே சமீரின் பின் நடந்தாள்.
சமீரை எப்படி அழைப்பதென்றும் தெரியவில்லை ஷாஜிதாவிற்கு. சமீர் , தன் பின் வந்த ஷாஜிதாவை கவனிக்கவில்லை. சமீர் வேகமாக தன் மகிழுந்தை எடுத்து கொண்டு விரைந்தான்.
ஷாஜிதா , கல்லூரிக்கு வெளியே செல்ல முடியாது என்பதால் வகுப்பிற்கு திரும்பினாள்.
சமீரின் கலங்கிய முகத்தை கவனித்த ஷாஜிதாவிற்கு என்ன செய்வதென்று புரியவில்லை. ஷாஜிதாவின் கண்களும் கலங்கியது.
ஷாஜிதா , ' என்னாச்சு? இவருக்கு! அல்லாஹ் எதுவா இருந்தாலும் அவருக்கு துணையா நீ இரு அல்லாஹ்! ' , என அல்லாஹ்விடம் வேண்டி கொண்டாள்.
அமைதியாக தன் வகுப்பறைக்கு வந்தாள் , ஷாஜிதா. ஷாஜிதா வந்ததை பார்த்ததும் யாழினி , " ஏய் ஷாஜிதா எங்க போன? " என கேட்க
ஷாஜிதா , " ஆங்! எ..எங்கேயும் இல்ல " என தன் இடத்தில் அமர்ந்து கொண்டாள்.
சமீர், சென்ற பின் ஷாஜிதாவால் இயல்பாக இருக்க முடியவில்லை. கண்கள் குளமாக நிரம்பியது. அதை யாருக்கும் தெரியாமல் துடைத்து கொண்டாள்.
அப்போது ஒரு குரல் , " என்ன ஷாஜிதா கண்ணுலாம் கலங்கி இருக்கு? " என கேட்க
அந்த குரல் வந்த திசையை திரும்பி பார்த்த ஷாஜிதா , " ஹே நீ யாரு? "
" நான் உன் மனசாட்சி! சரி அதெல்லாம் இருக்கட்டும்! இப்ப ஏன் நீ அழுவுற? "
ஷாஜிதா , " ந..நா எ..எங்கே அழுவுற? "
"நடிக்காத டி "
"....."
" என்ன பேச்சு வரலையா? "
" என்ன ? "
" முறைக்காத ஷாஜிதா! இந்த கண்ணீர் யாருக்காக? "
"அ....அது... "
" சொல்லு யாருக்காக ? "
"......"
" நா சொல்லவா ? சமீர் " என்றதும் ஷாஜிதா கலங்கிய கண்களுடன் தவித்தாள்.
" என்ன நா சொன்னது சரியா? "
"...."
" இதுக்கு என்ன அர்த்தம் ஷாஜிதா? "
" எ...என்ன அர்த்தம் ? "
" யப்பா! அடியேய் உனக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம் டி "
"...."
"அமைதியா இருந்து சாதிச்சிட்டலாம் மட்டும் நினைக்காத ஷாஜிதா! நீ சமீரை நேசிக்க ஆரம்பிச்சிட்ட! அதை ஒத்துக்கோ! "
" இல்ல "
" போதும் ஏற்கனவே நடிகர் திலகம் சிவாஜி எல்லாரையும் பார்த்தாச்சு! இதுவரைக்கும் உனக்காக நீ கண்ணீர் விடாதப்ப பாட்டி இறந்தப்ப கூட கண்ணீர் விடாதவ! எதுக்கு சமீரோட கலங்கிய முகத்தை பார்த்ததும் உனக்கு கண்ணீர் வந்துச்சு சொல்லு? "
"...."
" என்ன பேச்சு வரலையா? புரிஞ்சிக்கோ! நீ சமீரை நேசிக்கிறதை உணர்ந்து தொலை. உன் வாழ்க்கையை அவர தவிர வேறு யாராலும் அழகா மாத்த முடியாது! சொல்றதை கேளு! நல்லா யோசி! சமீர் தான் உனக்கானவர். ஷாரூக் மாதிரி இவரும் ஏமாத்திட்டு போய்ட்டா நினைக்காத! கண்டிப்பா அப்டி ஒரு தப்பை தெரியாம கூட செய்ய மாட்டாரு சமீர். அவரோட சேருவதற்கான வழியை பாரு! " என ஷாஜிதாவை தெளிய வைத்துவிட்டு சென்றது.
இருவரும் பேசியது யாருக்கும் கேட்கவில்லை. காரணம் மனதிற்குள் நடந்த போராட்டம் அல்லவா!. அதனால் கேட்கவில்லை. ஷாஜிதாவின் மனம் யோசிக்க தொடங்கியது.
-----
சமீரின் மகிழுந்து நேராக அந்த ஊரின் இஸ்லாமிய இடுகாட்டிற்கு சென்றது. அங்கே தன் மகிழுந்தை நிறுத்திய, சமீர் காலணியை மகிழுந்திலே விட்டுவிட்டு உள்ளே சென்றான்.
நேராக ஒரு சமாதியின் முன் மண்டியிட்ட, சமீரின் கண்கள் கலங்கியது. அந்த நிலையிலே அமர்ந்திருந்தான் சமீர்.
எத்தனை நிமிடங்களில் அந்த நிலையில் இருந்தான் என்பது தெரியவில்லை சமீருக்கு. " சமீர் " என நஃபீஸ் சமீரின் தோளில் கைவைத்ததும் உணர்ந்த சமீர் , தன் கண்களை துடைத்து கொண்டு எழுந்தான்.
சமீர் வெளியே வந்த வேகத்தை பார்த்த சமீரின் நண்பர்கள் , சூரஜை மட்டும் அங்கே ஷாஜிதாவின் பாதுகாப்பிற்கு விட்டு விட்டு நஃபீஸும் அகிலனும் சமீரை பின்தொடர்ந்து வந்தார்கள்.
நஃபீஸ் , " டேய் என்னடா இங்க வந்திருக்க? "
சமீர் , " ந...நா பாத்தது கனவா நிஜமா தெரியலை டா ! " என குரலில் தவிப்பு தென்பட
அகிலன் , "என்னடா ஆச்சு? சொல்லு ! "
சமீர் , "ஷா...ஷாஜி வே...வேற யா...யாருமில்ல! "
நஃபீஸ் , " யாருடா? "
சமீர் , " நம்ம ஹஜ்ரத் ரியாஸ் பேத்தி டா " என்றதும் நஃபீஸ் முகத்தில் ஒரு சந்தோஷம்.
நஃபீஸ் , " டேய்! நீ சொல்றது உண்மையா? உன்கிட்ட மட்டுமே இருந்தே அந்த குழந்தை ஷாஜிதா இந்த பிள்ளையா டா! "
சமீர் , " ம்ம்ம் ஆமா டா! " என தலையசைத்தான்.
அகிலன் , " உனக்கு எப்டி டா தெரிஞ்சிது? " என கேட்டதும் சமீர் அகிலனை பார்த்தான்.
"இன்னிக்கி அஜ்மலோட அப்பா வந்திருந்தாரு! அவர் அப்படியே எங்க ஹஜ்ரத் சாயல் தான். அப்ப தான் நா உணர்ந்த ஷாஜி நம்ம ஹஜ்ரத் பேத்தின்னு. சின்ன வயசுல மதரஸாக்கு தூக்கிட்டு வருவாரு. அந்த குழந்தை சிரிப்பு இன்னும் என் கண்ணை விட்டு மறையலை. எப்பயுமே என்கிட்ட தான் இருப்பா. ஒருசில நாள் என்மேல தூங்கி கூட இருக்காள். கிட்டத்தட்ட ரெண்டு வருஷம் அப்றம் அவள் வரலை. அவள் இல்லாம எனக்கு எதையோ இழந்த மாதிரி உணர்ந்த. "
அகிலன் , " சரிடா! நீ ஃபிர்தவுஸ் போட்டோ காட்டுன அப்ப இத கவனிக்கலையா? "
சமீர் , " இல்ல டா அப்ப ஷாஜியை எப்படியாவது பாதுக்காக்கனும் அதுமட்டும் தான் என்னோட மூளையில ஓடுனது. அதை தவிர வேறு எந்த சிந்தனையும் என்னோட மனசுல ஓடுல. அப்றம் தான் எனக்கு தோன ஆரம்பிச்சுது! " என தன் இரு புருவங்களுக்கு இடையில் இருக்கும் பகுதியில் தன் விரலை தேய்த்தான்.
நஃபீஸ் , " டேய்! இதுக்கு ஏன்டா சோகமா வைச்சு இருக்க முகத்தை! "
சமீர் , "ஷாஜி என்னோட காதலை ஏத்துக்கவே மாட்டாளா டா? " என உடைந்த குரலில் கேட்க
அகிலன் , " டேய்! மச்சா அதெல்லாம் இல்லடா ! கண்டிப்பா தங்கச்சி உன் காதலை ஏத்துக்கும் "
சமீர் , "ம்ஹ்ம் எனக்கு அந்த நம்பிக்கையே இல்லடா! என் முகத்தை கூட பாக்க மாட்றா! " என கலங்கிய கண்களோடு கூறிய சமீரை பார்த்து
நஃபீஸ் , " டேய்! லூசு மாதிரி பேசாத! இப்ப தான் ஷாஜிதா மனசுல இடம் பிடிச்சிருக்க! அதை நீயே கெடுத்துக்காத! " என்றதும்
சமீர் , " என்னடா சொல்ற? " என புரியாமல் விழித்தான்.
அகிலன் , " ம்ம்ம் ஆமா! கொஞ்சம் யோசி! எப்பவும் மத்தவங்க கிட்ட வாயாடுற அந்த பொண்ணு ஏன் உன்கிட்ட மட்டும் அடங்கி போகுது? நீ அடிச்சியே அன்னிக்கி நீ பண்ண மாதிரி வேற யாரா பண்ணிருந்தா மொகற எல்லாம் பேந்து இருக்கும்! நேத்து நீ நடுரோட்டுல அந்த பிள்ளைய அடிச்சியே! அதுக்கு அவ கோபப்பட்டாளா? நீ கையை பிடிச்சி உன் வீட்டுக்கு அழைச்சிட்டு போனப்ப அமைதியா உன் பின்னாடி வந்துச்சே ஏன்? யார்கிட்டயும் அடங்கி போகாதவ உன் கிட்ட மட்டும் அடங்கி போறானா என்ன அர்த்தம்? இப்ப தான் அந்த பொண்ணு மனசுல கொஞ்சம் கொஞ்சமா வாழ ஆரம்பிச்சு இருக்க அதை நீயே கெடுத்துக்காத! சொல்லிட்டேன். "
நஃபீஸ் , " நீ வேகமா வந்துட்டே ஆனா உன் பின்னாடியே ஓடிவந்த ஷாஜிதாவை நீ கவனிக்கலை! " என்றதும்
சமீர் , " என்னடா சொல்ற? உண்மையாவா? " என நம்பாமல் கேட்க
நஃபீஸ் , "ம்ம்ம் ஆமாடா! ஷாஜிதா உன் பின்னாடியே வந்தா! ஆனா அந்த பிள்ளை முகமும் சரியில்லை. அது கண்டிப்பா உன் முகத்துல எழுந்த அந்த மாற்றம் தான் காரணம். நீயா எதுவும் சொதப்பிடாத! ஷாஜிதா கண்டிப்பா ஏத்துப்பா உன்னை! நம்பு சரியா ! " என்றதும்
சமீர் , " ம்ம்ம் சரி " என அந்த சமாதி முன் மண்டியிட்டு , " அஸ்ஸலாமு அலைக்கும் யா அஹ்லல் கபூர்! ஹஜ்ரத் உங்க பேத்தியோட வாழ்க்கையை பத்தி நீங்க கவலப்படாதீங்க! நா அவளுக்கு எல்லாமுமா நானிருப்பேன். எனக்கு உங்களை ரொம்ப பிடிக்கும். எனக்கு உங்களல மாதிரி ஒரு ஆசான் கிடைச்சதால தான் நிறைய நல்ல விஷயங்களை கத்துக்க முடிஞ்சது. நீங்க எங்க கூட இல்லன்னா கூட கற்று தந்த வழிமுறைகள் எங்களை வழிநடத்திட்டு இருக்கு. கண்டிப்பா உங்க பேத்தி ஷாஜிதாவை நா நல்லா பாத்துப்பேன். " என்றதும் அங்கிருந்த மணல் எல்லாம் சற்று காற்றில் பறந்தது.
அது தனக்கு சம்மதம் தெரிவித்து கொள்கிறேன் என்பது போல் உணர்ந்து மெல்லிய சிரிப்போடு எழுந்து நின்றான்.
ஆம் அந்த சமாதி ஷாஜிதாவின் தாத்தா ரியாஸின் சமாதி தான்.
ரியாஸ் , இஸ்லாமிய மார்க்கத்தை நன்றாக கற்ற ஆலிம். அவர் தான் சமீர் மற்றும் நஃபீஸ் இருவருக்கும் இஸ்லாமிய கல்வி அறிவு மற்றும் குர்ஆன் ஓத கற்று தந்தவர்.
சிறுவயதில் எப்போதும் ஷாஜிதாவை வீட்டில் தனியே விடமாட்டார் தாத்தா ரியாஸ் , எப்போதும் தன்னுடனே அழைத்து சென்று விடுவார்.
மீதி போக போக பார்க்கலாம்.
நஃபீஸ் , "சரிடா! போலாமா? "
சமீர் , " ம்ம்ம் ! ஷாஜி தனியா இருப்பா "
அகிலன் , " யப்பா டேய்! ரொம்ப பீல் பண்ணாத! அங்க சூரஜை விட்டுட்டு தான் வந்திருக்கோம் வா " என்றதும் சமீர் அசட்டு சிரிப்பை சிரித்துவிட்டு கல்லூரிக்கு கிளம்பினான்.
சமீர் , " ம்ம்ம் அப்றம் ஷாஜி ஒரு ஹாஸ்டல்ல தங்கி இருந்தாள! அந்த பரதேசி ஷாஜி கிட்ட தப்பான உறவுக்கு அழைச்சி இருக்கான்! "
அகிலன் , " என்னடா சொல்ற? " என இறுகிய முகத்தோடு கேட்க
சமீர், " ம்ம்ம் ஆமாடா! உடனே ரூம் காலி பண்ணு அப்டி இல்லன்னா.... " என தன் கையை முறுக்கி கொண்டு மகிழுந்தில் ஓங்கி குத்திவிட்டு , " நீங்க போங்க அவனை ஒரு வழி பண்ணிட்டு வரேன்! என்னோட காரை எடுத்துட்டு போய் காலேஜ்ல விட்டுறுங்க! " என சாவியை அவர்களிடம் கொடுத்துவிட்டு வேகமாக ஆட்டோவில் ஏறி சென்றான்.
அகிலன் , " டேய் இவன் போற வேகத்தை பாத்தா பயமா இருக்கு ! "
நஃபீஸ் , " சரி வா "என இருவரும் சமீரை பின்தொடர்ந்தார்கள்.
-----
ஷாஜிதா மனம் பெரிய குழப்பமே நடந்து கொண்டிருந்தது. அடுத்த வகுப்பிற்கு பேராசிரியர் வந்தார்.
பாடங்களை எடுத்து கொண்டிருந்தார் , ஆனால் அது எதையும் ஷாஜிதா கவனிக்கவில்லை. அதை பார்த்த பேராசிரியர் , " ஷாஜிதா " என அழைக்க ஷாஜிதா உணரவில்லை.
ஃபர்ஜானா, ஷாஜிதாவை உலுக்கி , " ஸார் கூப்பிடுறாரு ! " என்றவுடன் ஷாஜிதா எழுந்து நின்றாள்.
பேராசிரியர் ," கவனமெல்லாம் எங்க இருக்கு? வெளிய போ! " என்றதும் ஷாஜிதா எதுவும் பேசாமல் அமைதியாக வகுப்பில் இருந்து வெளியேறினாள்.
அங்கிருந்து நேராக லைப்ரரிக்கு அருகில் இருந்த கட்டிடத்திற்கு சென்று அமர்ந்தாள்.
சமீரை பற்றிய நினைவுகள் தான் ஷாஜிதாவின் மனதில் ஓடி கொண்டிருந்தனர்.
-----
சமீர் , ஷாஜிதா தங்கியிருந்த விடுதிக்கு வந்தான். உள்ளே சென்று உரிமையாளரை சந்தித்தான்.
சமீர் , " நீங்க தான் இந்த ஹாஸ்டல் ஓனரா? "
உரிமையாளர் , " ம்ம்ம் ஆமா "
சமீர் , " உங்ககிட்ட தனியா பேசனும் வர முடியுமா? "
உரிமையாளர் , " ம்ம்ம் பேசலாமா " என்று கூறியதும் ' வாடி வா உனக்கு இருக்கு வேட்டு ' என மனதில் நினைத்த சமீர், விஷமம் புன்னகை சிந்தியபடி அவரை வெளியே அழைத்து சென்றான்.
வெளியே வந்ததும் , "ஆமா! உங்க ஹாஸ்டல்ல ஷாஜிதா ஒரு பொண்ணு தங்கியிருந்தாளே! அவள் ஏன் ரூமை காலி பண்ணா? " என சமீர் கேட்டதும் அந்த உரிமையாளர் என்ன சொல்வதென்று தெரியாமல் விழிக்க , பின்பு " அந்த பொண்ணே காலி பண்ணுடுச்சு " என்றதும்
சமீர் தன் குரலில் கடுமையை காட்டியபடி , " ஓ அந்த பொண்ணே! காலி பண்ணிடுச்சு! ம்ம்ம் "என கூறியதும் பயந்து , "ஆ...ஆமா " என்று உரிமையாளர் பொய் கூறியதும் கோபம் கொண்ட சமீர் ஓங்கி கன்னத்தில் அறைந்து , " பொய்யா சொல்ற? உண்மையை சொல்லு! " என தன் பெல்ட்டை அவிழ்த்தான்.
அதை பார்த்தவருக்கு பீதி கிளப்ப , " ஆமா நாதான் காலி பண்ண சொன்ன! " என்று உண்மையை கூற
சமீர் , "சரி காலி பண்ண சொன்ன! அந்த பொண்ணு அவகாசம் கேட்டுச்சுல அதுக்கு என்ன பண்ணிருக்கனும் முடியும் முடியாது சொல்லிருக்கனும் அதை விட்டுபுட்டு தப்பான உறவுக்கு அழைச்சி இருக்க! உன்ன சும்மா விட்டுற முடியுமா " என கோபம் கொண்ட சிங்கமாய் கர்ஜித்தபடி அந்த பெல்ட்டால் அடித்தான்.
உரிமையாளர் , "ஸ்ஸ்ஸ் ஆஆஆஆ அம்ம்ம்ம்மா "
சமீர் , " வலிக்கனும்! உன்னால இப்டி அடிச்சிட்டே இருக்கனும் ! நட அந்த பொண்ணு கிட்ட நீ மன்னிப்பு கேட்டே ஆகனும்! நட! அதுக்கு முன்ன இதை சொல்லிட்டே நட! இனி எந்த பொண்ணுகிட்டயும் நான் தப்பா நடந்துகிட்ட மாட்டேன் ! தப்பா பேச மாட்டேன் சொல்லிட்டே நட " என அடிக்க அவனும் சமீர் சொன்னது போலவே செய்தான்.
சமீர், தன் பெல்ட்டால் வழி முழுக்க அந்த உரிமையாளரை அடித்து கொண்டே வந்தான்.
வழியில் செல்லும் அனைவரும் பாவமாக பார்க்க , அதை உணர்ந்த சமீர் , " இந்த பரதேசி பொறம்போக்கு நாய்க்கு பாவம் பாக்காதீங்க! இவன் ஹாஸ்டல்ல தங்கியிருந்த பொண்ணுகிட்ட தப்பான உறவுக்கு வந்தா தான் இங்க தங்க இடம் கொடுப்பேன் சொல்லிருக்கான். இப்டி பட்ட நாதாரியை நா அடிக்கிறது தப்பா" என கேட்க அனைவரும் இல்லை என்று கூறினர்.
" என்னடா பார்வை சொல்லு சொல்லிட்டே நட இல்லன்னா அடி இன்னும் பலமா விழும் " என்றதும் அவன் சத்தமாக கூறினான்.
கல்லூரி வந்தும் சமீரின் அடி நின்ற பாடில்லை. அதேநேரம் கல்லூரியும் முடிந்தது. அங்கு ஷாஜிதா சமீரின் வருகைக்காக காத்திருந்தாள்.
முதலில் சமீரின் மகிழுந்து வந்தது. அதன்பின், சமீர் அவனை அடித்த படி வந்து கொண்டிருந்தான்.
ஷாஜிதா , அடிவாங்கி கொண்டிருப்பவனை கவனித்ததும் புரிந்ததும் அதிர்ச்சியாக பார்த்தாள், சமீரை.
சமீர் தன் பெல்ட்டால் அவனை விளாசு விளாசென விளாசி கொண்டே வந்தான்.
கடைசி ஒரு அடியில் ஷாஜிதாவின் காலில் வந்து விழுந்தான். " அம்மா என்னை மன்னிச்சிடு மா! இனி நா எந்த தப்பும் பண்ண மாட்டேன். எந்த பொண்ணுக்கிட்டயும் தப்பா நடந்துக்க மாட்டேன் " என மன்னிப்பு கேட்க , ஷாஜிதா அமைதியாகவே நின்றிருந்தாள்.
அங்கு வந்த காவலர்கள் , ரத்த கறையில் இருந்தவனை தூக்கினார்கள்.
சமீர் , " இனி எந்த பொண்ணு கிட்டயாவது தப்பா நடந்துக்கனூம் நினைச்ச! இதை விட மோசமான நிலைக்கு போய்டுவ! போ " என எச்சரித்து அனுப்பினான்.
ஷாஜிதா , அப்படியே சமீரை அதிர்ச்சியாக பார்த்து கொண்டிருந்தாள். தன் கலங்கிய கண்களை சமீருக்கு தெரியாமல் துடைத்து கொண்டாள்.
சமீர், தன் பெல்ட்டை சரியாக அணிந்து கொண்டு , " என்ன பாக்குறீங்க எல்லாரும்! அந்த பரதேசி நாய் தப்பா நடந்துக்க பாத்தா இந்த பொண்ணுகிட்ட அதான் இது! " என அங்கிருந்த மாணவர்களை பார்த்து கூறிவிட்டு அகன்றான். மாணவர்கள் அனைவரும் களைந்து செல்ல ஷாஜிதா மகிழுந்தில் ஏறினாள்.
♥️ தொடரும் ♥️
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro