💞 25 💞
ஷாஜிதாவிற்கு அதற்கு மேல் உறக்கம் வரவில்லை. என்ன செய்வதென்றும் புரியவில்லை ஷாஜிதாவிற்கு. நேற்று நடந்ததை அசை போட்டு பார்த்து கொண்டிருந்தாள்.
பாங்கு ஓசை கேட்கும் ஐந்து நிமிடங்களுக்கு முன் முஸ்கான் விழித்தாள். சிந்தனையின் விழிம்பில் தன்னருகில் அமர்ந்திருந்த ஷாஜிதாவை பார்த்த முஸ்கான் , " ஹே ஷாஜிதா! ஏன் இப்டி உட்கார்ந்திருக்க? " என உலுக்கியதும் தன்னிலைக்கு வந்த ஷாஜிதா ,"ம்ஹூம் ஒன்னுமில்ல "
முஸ்கான் , " சரி வா தொழுகலாம் " என்றதும் ஷாஜிதா , " ம்ம்ம் " என தலையசைத்தாள்.
பிறகு , இருவரும் உழூ செய்துவிட்டு தொழுதனர். தொழுதுவிட்டு முஸ்கான் , "நா திரும்ப தூங்க போறேன் " என கூறிவிட்டு அமைதியாக உறங்கி விட்டாள். ஷாஜிதாவிற்கு அடுத்து என்ன செய்ய வேண்டுமென தெரியவில்லை.
மெல்ல சூரியன் அகிலத்திற்கு தன் வேலைக்கு வர தொடங்கினான். ஷாஜிதா , எழுந்து வெளியே வந்தாள்.
இன்னும் யாரும் விழிக்கவில்லை என்பதை அந்த வீடே உணர்த்தியது , ஷாஜிதாவிற்கு. ஷாஜிதா , அமைதியாக துடைப்பதை எடுத்து வீட்டை சுத்தம் செய்து கொண்டிருந்தாள்.
தொழுகை முடித்துவிட்டு தன்னறையில் இருந்து வெளியே வந்த அஸ்மா, ஷாஜிதா வேலை செய்து கொண்டிருப்பதை பார்த்ததும் , " அம்மாடி ஷாஜிதா! என்ன வேலை மா பண்ற நீ? " என படபடவென கேட்க , ஷாஜிதா என்ன பதில் சொல்வதென தெரியாமல் விழித்து கொண்டிருந்தாள்.
அஸ்மா , " என்ன மா இதெல்லாம்? நா பண்ணிக்க மாட்டேனா? நீ போய் படி இல்லன்னா டிவி பாரு! " என சொல்ல
ஷாஜிதா , " இ...இல்..இல்ல நா பண்றேன்! "
அஸ்மா , " அட! நீ போய் உட்காரு மா!. நா டீ போட்டு எடுத்துட்டு வரேன். குடிச்சிட்டு காலேஜ்க்கு கிளம்பு டா" என ஷாஜிதாவின் கையில் இருந்த துடைப்பதை வாங்கிவிட்டு தொலைக்காட்சி பெட்டியை போட்டு விட்டார்.
அமைதியாக மெது நாற்காலியில் அமர்ந்து , தொலைக்காட்சியை பார்த்தாள்.
தொழுகை முடித்துவிட்டு வீட்டிற்கு வந்த சமீர் , மெது நாற்காலியில் அமர்ந்திருந்த ஷாஜிதாவை பார்த்ததும் தன்னிலை மறந்தான்.
எந்த ஒப்பனையும் செய்யாமலே சமீரின் கண்களுக்கு தேவதையாக தெரிந்தாள், ஷாஜிதா. அப்போது , லத்தீப் வர சிலையாய் நின்றிருந்த தன் மகனை பார்த்தார். சமீரின் கண்கள் செல்லும் திசையை பார்த்தவர் உணர்ந்து கொண்டு , "டேய்! " என சமீரின் முதுகில் லேசாக தட்டிவிட்டதும், உணர்வு பெற்ற சமீர் வெடுக்கென உள்ளே சென்றுவிட்டான்.
லத்தீப் , எதுவும் சொல்லாமல் அமைதியாக உள்ளே வந்தார்.
லத்தீப் , " குட் மார்னிங்! ஷாஜிதா " என மெது நாற்காலியில் அமர்ந்தார்.
ஷாஜிதா , " கு...குட் மார்னிங் "
லத்தீப் , "என்ன டா காலேஜ்க்கு கிளம்பலையா? "
ஷாஜிதா , "இ...இனிமே தா கிளம்பனும் "
லத்தீப் , " ம்ம்ம் சரி டா! பாத்து போகனும் சரியா! ரோட்டை க்ராஸ் பண்ணும்போது கவனமா க்ராஸ் பண்ணணும்! யார் என்ன கொடுத்தாலும் வாங்க கூடாது சரியா " என கூற ஷாஜிதாவிற்கு வார்த்தைகள் எதுவும் வரவில்லை. கலங்கிய கண்களை கஷ்டப்பட்டு அடக்கிவிட்டு சரியென தலையசைத்தாள்.
சிறிது நேரத்தில் தேநீரை எடுத்துவந்து ஷாஜிதாவிடம் கொடுத்தார் , அஸ்மா. "உங்க ரூம்ல ஹீட்டர் இருக்கு ஆன் பண்ணி விடுறேன்! போய் குளிசிட்டு வா!" என அறைக்கு சென்று ஹீட்டரை ஆன் செய்து விட்டு வந்தார்.
அதன்பின் , ஷாஜிதா சென்று குளித்துவிட்டு வந்தாள். ஷாஜிதா, குளித்துவிட்டு வந்ததை உணர்ந்த அஸ்மா , " ஷாஜிதா வா தலை பின்னி விடுறேன் " என அழைக்க
ஷாஜிதா , " ப....பரவாயில்லை நா...நான் போட்டுக்கிறேன் " என்றதும்
அஸ்மா , " வா நா போட்டு விடுறேன் " என ஷாஜிதாவை கையோடு அழைத்து வந்து அமர வைத்து தலை சீவ தொடங்கினார்.
நீண்ட கூந்தலை பார்த்த அஸ்மா , " தலைக்கு என்னடா போடுற? " என கேட்டதும்
ஷாஜிதா , " அ...அது பூந்திகொட்டையும் வெந்தயத்தையும் நைட்டே ஊற வச்சிட்டு அடுத்த நாள் அதை அரைச்சு தலைக்கு தேய்ப்ப! வீட்டில இருந்த வரைக்கும் இப்டி பண்ண! இப்ப ஷாம்பூ வாங்கி தான் போடுறேன். பிடிக்கவே இல்ல! பாட்டி இருந்தா தோளை உரிச்சு புடும். ஷாம்பூ போட்டதுக்கு " என குழந்தை போல் கூறினாள்.
அஸ்மா , " அதுக்கென்ன இப்ப தான் நம்ம வீட்டுக்கே வந்துட்டல! இனி இப்டியே பண்ணலாம் சரியா ! " என்றதும்
ஷாஜிதா , " ம்ஹூம் வே...வேணா ப...பரவாயில்லை அ...அட்ஜஸ்ட் பண்ணிக்குவேன் "
அஸ்மா , "இதுல எந்த கஷ்டமும் இல்ல டா! பூந்திக்கொட்டை தானே வாங்கிட்டு வந்துட்டா போச்சு! உனக்கு என்ன வேணுமோ தாராளமா கேளு சரியா! இது உன் வீடு ! " என்றதும் ஷாஜிதா சரியென தலையசைத்தாள்.
தன்னறைக்கு வந்த சமீர் , தன் செய்கையை நினைத்து வெட்கி கொண்டிருந்தான்.
கண்ணாடி முன் நின்ற சமீர் , ' அடேய்! பக்கி பயலே! இப்டியா டா பண்ணுவ? அச்சோ ! அப்பா வேற பார்த்துட்டாரே நா என்ன பண்றது?' என தன் தலையில் அடித்து கொண்டான்.
அதன்பிறகு குளித்துவிட்டு வந்தான் , சமீர். சமீர் , கிளம்பி கொண்டிருக்க , வெளியில் இருந்து ஷாஜிதாவின் இனிய குரலை கேட்பதற்கு அவ்வளவு இனிமையாக இருந்தது.
சமீர் , 'நம்ம பட்டுக்குட்டிக்கு இவ்வளவு அழகா பேச தெரியுமா? ' என சிரித்து கொண்டு தன்னை கிளம்பி கொண்டிருந்தான்.
ஷாஜிதாவின் நீண்ட கூந்தலை அழகாய் பின்னி விட்ட அஸ்மா , " சரி டா நீ போய் கிளம்பு " என்றதும்
" நா....நான் மாடிக்கு போகட்டா ! " என தயங்கி தயங்கி ஷாஜிதா கேட்க
அஸ்மா சிரித்து கொண்டே, "இதுல என்ன இருக்கு! போ டா " என்றதும் தலையசைத்து விட்டு மாடிக்கு சென்றாள் , ஷாஜிதா.
மாடிக்கு வந்த ஷாஜிதா , அங்கே அமர்ந்து கொண்டு , ' பாட்டி நா இங்கிருக்கிறது சரியா? தாத்தா நீ சொல்லு நா இங்கிருக்கிறது சரியா? இது அந்த ஹசினாக்கு தெரிஞ்சா இவங்களுக்கு பிரச்சனை கொடுப்பா! என்னையே ஏன் இவங்க கண்ணுல பட வைச்சான் அல்லாஹ்! சொல்லு தாத்தா! பாட்டி நீயாவது சொல்லு பாட்டி! நா எல்லாருக்கும் பாரமா பிரச்சனையா தான் இருப்பேன்! இருக்கிறேன்! நா என்ன பண்றது? நீயும் தாத்தாவும் ஏன் என்னை விட்டு போனீங்க? தாத்தா பாட்டி நீங்க ரெண்டு பேரும் இல்லாம எனக்கு வாழவே பிடிக்கலை! நீங்க ரெண்டு பேரும் அல்லாஹ்கிடட பேசி திரும்ப வாங்களேன்! ' என தன் மனம் போன போக்கில் புலம்பி கொண்டிருந்தாள் ஷாஜிதா
சமீர் , " அம்மா ஷாஜி எங்க? " என கேட்க
அஸ்மா, "மாடிக்கு போய் இருக்கா "
சமீர் , " ம்ம்ம் சரி! நா போய் அழைச்சிட்டு வரேன். காலேஜ்க்கு நேரமாகுது "
அஸ்மா , " நானே அதை சொல்லனும் இருந்தேன்! போய் அழைச்சிட்டு வா! " என்றதும் சமீர் மாடியிற்கு சென்றான்.
அங்கே ஷாஜிதா அமர்ந்திருப்பதை பார்த்த சமீர் , மெல்ல ஷாஜிதாவின் அருகில் சென்று அமர்ந்து , "ஹ்க்கும் " என சத்தமிட்டதும் ஷாஜிதா என்ன என்பது போல் பார்த்தாள்.
சமீர் , " வீடு பிடிச்சிருக்கா? " என்றதும் ஷாஜிதா தலையை மட்டும் தலையசைத்தாள் பிடித்திருக்கிறது என்று.
சமீர் , " பேச மாட்டிங்களோ மேடம் "
ஷாஜிதா , " .... "
ஷாஜிதாவின் கரத்தை பிடித்த சமீர் , " ஷாஜி! ஸாரி டா நேத்து உன்ன அடிச்சதுக்கு! " என மன்னிப்பு கோர
ஷாஜிதா , " ம்ம்ம் பரவாயில்லை! இப்ப கையை விடுங்க " என முறைக்க, சமீர் அசட்டு சிரிப்பை சிந்திய படி , ஷாஜிதாவின் கையை விட்டான்.
சமீர் , " காலேஜ்க்கு நேரமாகுது "
ஷாஜிதா , " அது எங்களுக்கு தெரியும் " என கூறிவிட்டு கீழே சென்றாள்.
சமீர் , 'சரியான சண்டக்காரி! என் கிட்ட வசமா ஒருநாள் மாட்டுவேல அப்ப இருக்கு உனக்கு ' என மனதில் நினைத்தபடி கீழே இறங்கினான்.
அங்கு முஸ்கானும் ஷாஜிதாவும் அமர்ந்து சாப்பிட்டு கொண்டிருந்தனர். சமீரும் அவர்களுடன் சேர்ந்து கொண்டான்.
சாப்பிட்டு முடித்துவிட்டு கல்லூரிக்கு கிளம்பினாள்.
சமீர் , " தனியா போவீங்களா மேடம்! "
ஷாஜிதா , " எங்களுக்கு போக தெரியும்! ம்ஹ்ம் " என கூறிவிட்டு சென்றுவிட்டாள்.
வீட்டின் வாசலுக்கு வந்த ஷாஜிதாவிற்கு கல்லூரிக்கு செல்வதற்கான வழி தெரியவில்லை. வலது பக்கம் செல்வதா? இல்லை இடது பக்கம் செல்வதா? என தெரியாமல் விழித்து கொண்டிருந்தாள்.
ஷாஜிதா , "அல்லாஹ்! இப்ப எந்த பக்கம் போனா மெயின் ரோடு வரும்! தெரியலையே! " என இரண்டு பக்கமும் தன் தலையை திருப்பி திருப்பி பார்த்து கொண்டிருந்தாள்.
வெளியில் வந்த சமீர் , ஷாஜிதாவை பார்த்ததும் புரிந்து கொண்டான். தனக்குள் சிரித்த சமீர் , அதை அடக்கி கொண்டு ஷாஜிதாவின் அருகில் வந்தான்.
சமீர் , " எங்களுக்கு போய்க்க தெரியும் ம்ஹ்ம்! " என ஷாஜிதாவை போல் செய்து காட்ட. , ஷாஜிதா சமீர் பக்கம் திரும்பி , " என்ன? " என முறைக்க
சமீர் , " இல்ல! இங்க ஒருத்தவங்க எங்களுக்கு போய்க்க தெரியும் சொன்னாங்க அவங்களே தான் தேடிட்டு இருக்க! " என்றதும் தன் கண்களை உருட்டி உருட்டி பார்த்து கொண்டிருந்தாள் ஷாஜிதா.
சமீர் , ' அச்சோ! கொல்றாளே! ' என மனதில் நினைத்து கொண்டு , " சரி வா நாம கார்ல போவோம்! " என்றதும்
ஷாஜிதா , "வேணா! நா....நா " என கூறும் போதே
அஸ்மா , " ஷாஜிதா! சமீர் கூட போ! கார்ல தான போறீங்க "
முஸ்கான் , " ஆமா ஷாஜிதா! போ கார்ல ஜாலியா இருக்கும் " என அனைவரும் வற்புறுத்த வேறு வழியின்றி சமீருடன் செல்ல சம்மதித்தாள்.
சமீர் , மகிழுந்தை அமர , ஷாஜிதாவும் முன் பக்க இருக்கையில் அமர்ந்து கொண்டாள்.
சமீர் , மகிழுந்தை ஓட்டினான். சிறிது தூரம் அமைதியாக சென்றது. அதை உடைக்கும் விதமாக ஷாஜிதா தொடங்கினாள்.
ஷாஜிதா , " ஸாரி " என்றதும் தன்னிடம் தான் பேசுகிறாள் என்பதை உணர்ந்த சமீர் , " எதுக்கு ஷாஜி? "
ஷாஜிதா , " இ...இல்ல என்னால தானே உங்களுக்கும் உங்க அம்மா அப்பா தங்கச்சிக்கெல்லாம் கஷ்டம் " என்றதும்
சமீர் , " இங்க பாரு ஷாஜி மா! எங்க வீட்டில இருக்க அத்தனை பேருக்கும் உன்ன ரொம்ப பிடிக்கும். எங்க மொத்த குடும்பமும் நீ தான் எங்க வீட்டு மருமகன்னு முடிவே பண்ணிட்டாங்க. ஆனா உன்ன யாரும் வற்புறுத்த மாட்டோம். உன் மனசு மாறுற வரைக்கும் காத்திருப்போம். " என புன்னகைத்தான்.
ஷாஜிதாவால் எதுவும் பேச முடியவில்லை. வார்த்தைகள் வர மறுத்தது. அதன் பின் அமைதி மட்டுமே இருந்தது.
சிறிது நேரத்தில் கல்லூரி வந்துவிட , அமைதியாக இறங்கி தன் வகுப்பிற்கு சென்றாள்.
சமீரும் காரை அங்கு நிறுத்திவிட்டு தன் இடத்திற்கு சென்று அமர்ந்தான். மனம் சற்று லேசாக இருப்பது போல் இருந்தது. தன்னவள் தன் அருகில் இருப்பதனால் என்னவோ!. அதன்பிறகு , தன் வகுப்பிற்கு சென்றான் சமீர்.
ஷாஜிதாவின் மன்னிப்பை வேண்டி வந்து நின்றான் அஜ்மல். ஷாஜிதா, எதுவும் தெரியாது போல் அமர்ந்திருந்தாள்.
அஜ்மல் , ஷாஜிதாவின் கோபத்தை உணர்ந்ததால் அமைதியாக இருந்து விட்டான். ஆனாலும் என்றாவது ஒருநாள் தன்னை மன்னிப்பாள் என நம்பினான்.
முதல் வகுப்பு முடிய அடுத்த வகுப்பிற்கு சமீர் வந்தான். தான் எடுக்க வேண்டிய பாடங்களை எடுக்க தொடங்கினான்.
அப்போது , "எஸ்கியுஸ் மீ சார்!" என ஒரு குரல் கேட்க , சமீர் திரும்பி பார்த்தான். வந்தவரை பார்த்ததும் சமீரின் முகமெல்லாம் வியர்த்தது. மனமெல்லாம் பதைபதைக்க தொடங்கியது.
அதை எல்லாம் மறைத்து கொண்டு , " ய...யார் வேணும்? " என கேட்டதும்
" அஜ்மல். " என்றார் வந்தவர் வேறு யாருமில்லை! வாஹித் தான்.
" நீங்க " என குரல் தழுதழுக்க கேட்க
" அஜ்மலோட அப்பா! " என்றதும்
" அஜ்மல் போ " என்றுவிட்டு , சமீர் அங்கிருந்து வெளியேறினான்.
ஷாஜிதாவிற்கு ஒன்றும் புரியவில்லை. ஷாஜிதாவும் அமைதியாக சமீர் பின் சென்றாள்.
ஆனால் சமீரின் வேகத்திற்கு ஷாஜிதாவால் ஈடு கொடுக்க முடியவில்லை. சமீர் , தன் மகிழுந்தை எடுத்து கொண்டு வேகமாக செலுத்தினான்.
ஷாஜிதா , ' என்னாச்சு? ' என நினைத்த படி தன் வகுப்பிற்கு வந்தமர்ந்தாள்.
யாழினி , " ஹே ஷாஜிதா! எங்க போன? "
ஷாஜிதா , " எங்கேயும் இல்லை! " என தன் இடத்தில் அமர்ந்து கொண்டாள்.
♥️ தொடரும் ♥️
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro