Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

💞 24 💞

ஷாஜிதா தன் உடைமைகளை எடுத்து கொண்டு அந்த விடுதியை காலி செய்தாள். விடுதியை விட்டு வெளியேறிய போது மணி ஏழு.

எங்கே செல்வதென தெரியாமல் விழித்தாள் ஷாஜிதா. யாரிடமும் உதவி கேட்க மனம் செல்லவில்லை. மனதில் வலிகள் அத்தனையும் சுமந்து கொண்டு நடந்தாள் ஷாஜிதா.

வேறு விடுதி கிடைக்குமா? என அங்கே சுற்றி இருக்கும் விடுதியில் சென்று அனுமதி கேட்க அனைவரும் அறை காலியாக இல்லை என்று விட , என்ன செய்வது ? என அறியாமல் பேதை மனம் தத்தளித்தது.

அந்த பிரதானமான சாலையின் ஓரத்தில் அமைந்திருந்த நடைபாதையில் கண்கள் கலங்க அமர்ந்த ஷாஜிதா , 'யா அல்லாஹ்! ஏன் இந்த சோதனை? இது மூலமா நீ என்ன எனக்கு தர போற? எனக்கு ஒன்னும் புரியலை! என்னால முடியலை அல்லாஹ்! ஒன்னு என்ன உன்கிட்ட இப்பவே அழைச்சிக்கோ இல்லயா நான் வாழ வழி காமி! இது ரெண்டும் இல்லாம எதுக்கு என்ன இப்டி பண்ற? ' என தன் மனதுக்குள்ளே அல்லாஹ்விடம் அழுதாள்.

ஷாஜிதாவிற்கு அனைத்து வழிகளும் அடைந்து விட்டது போல் உணர்ந்தாள். யாரிடமும் உதவி கேட்க மனம் அனுமதிக்கவில்லை. யாரையும் நம்பவும் ஷாஜிதாவின் மனம் தயாராக இல்லை.

இருள் சூழ சூழ பெண்ணவளின் மனம் அச்சம் பற்றி கொள்ள தொடங்கியது. கண்கள் கலங்க மனமெல்லாம் பதைத்தது. அடுத்து என்ன செய்ய ஏது செய்ய என எதுவும் தெரியாமல் விழி பிதுங்கி நின்றாள் பேதை.

இன்று சமீர் மற்றும் அவன் நண்பர்களுக்கு எஸ்பி திவ்யசாந்தி அழைத்திருக்க ஷாஜிதாவிற்கு வேறு காவலாளி ஒருவனை பாதுகாப்பு பணியில் வைத்துவிட்டு அங்கே சென்றார்கள். காவலாளி தன் வேலைக்காக சென்றிருக்கும் நேரத்தில் ஷாஜிதா அங்கிருந்து சென்றதால் காவலாளிக்கு தெரியவில்லை. சமீர் மற்றும் அவன் நண்பர்கள் அனைவரும் தங்கள் வீட்டிற்கு சென்றனர்.

ஷாஜிதா , அருகில் யாரோ நிற்பது போல் உணர , திரும்பி பார்த்தாள். அமைதியாக எழுந்து நின்றாள் , ஷாஜிதா.

வந்தது வேறு யாருமில்லை சமீர் தான். சமீர் பொறுமையாக , "இந்த நேரத்துல இங்க என்ன வேலை? " என கேட்க

ஷாஜிதா , " சு...சும்...சும்மா "

சமீர் , " ஓ சும்மாஆஆ.... சும்மா எதுக்கு பேக் எல்லாம் தூக்கிட்டு வந்திருக்க? " என கேட்டதும் பதில் எதுவும் சொல்ல முடியாமல் முழித்தாள் ஷாஜிதா.

சமீர் , " ஷாஜி சொல்லு " என தன் குரலில் கடுமையை காட்டினான்.

ஷாஜிதா , "என்ன சொல்லனும்? " என சமீரை முறைத்தாள்.

சமீருக்கு கோபம் வர , அதை அடங்கியவனாக , "இந்த நேரத்துல தனியா இங்க என்ன பண்ணிட்டு இருக்கன்னு கேட்டேன் " என்றதும் இதற்கு மேல் மறைக்க முடியாது என ஷாஜிதா, " நா இருந்த ரூமை உடனே காலி பண்ண சொல்லிட்டான். டைம் கேட்டதுக்கு தப்பா பேசுனா ஒரு அரைவிட்டு நா வந்துட்டேன்! போதுமா இன்னும் எதாவது சொல்லனுமா? " என்றதும் சமீருக்கு கோபம் தலைக்கு ஏறியது அதையெல்லாம் அடக்கி கொண்டு , "சரி வா நம்ம வீட்டுக்கு போலாம் " என்றதும்

" நா வர மாட்டேன்! என்னோட வாழக்கையை எப்டி பாத்துக்கனும் எனக்கு தெரியும்! நீங்க போங்க! " என தன் கைகளை நெஞ்சின் குறுக்கே கட்டியபடி எங்கோ பார்த்து கூறினாள் , ஷாஜிதா.

சமீர் , " ஷாஜிமா! ப்ளீஸ் வா! காலம் ரொம்ப கெட்டு கிடக்குது! ஒழுங்கா வா " என பொறுமையாக எடுத்து கூறினான்.

ஷாஜிதா , " என்னை எப்டி காப்பாத்திக்கிறது எனக்கு தெரியும். நீங்க உங்க வேலையை மட்டும் பாத்துட்டு போங்க " என்றதும் சமீரின் கோபத்தில் கண்கள் சிவந்தது.

ஆனாலும் பொறுமையாக , " ஷாஜிமா ப்ளீஸ் டா! புரிஞ்சிக்கோ டா! இதுவரைக்கும் நீ பட்ட கஷ்டமே போதும் டா! வா நம்ம வீட்டுக்கு போலாம் " என சமீர் மென்மையாய் புரிய வைக்க முயன்றான்.

ஆனால் ஷாஜிதா எதுவும் புரிந்து கொள்ளாமல் , நான் வர மாட்டேன் என பிடிவாதமாக இருந்தாள். அதற்கு மேல் பொறுமையை இழந்த சமீர் , தன் உதடுகளை கடித்து கொண்டு வேகமாக ஷாஜிதாவை அறைந்தான்.

"என்ன மனசுல என்ன நினைச்சிட்டு இருக்க? நானும் பொறுமையா கிளி பிள்ளைக்கு எடுத்து சொல்ற மாதிரி சொல்றேன்! புரிஞ்சிக்கவே மாட்டேன் சொன்னா என்ன அர்த்தம்? அவ்ளோ பெரிய ஆள் ஆகிடிங்களோ! உன்ன இங்க தனியா விட்டுட்டு நா நரக வேதனை அனுபவிக்கிறேன்டி! நீ சாப்பிட்டியா? இல்லையா? பாதுகாப்பா இருக்கியா எதாவது பிரச்சனையா? இப்டி இருபத்தி நாலு மணிநேரமும் என் மூளையில உன்ன பத்தின சிந்தனை மட்டும் தான்டி ஓடுது. இதுக்கு மேல எதாவது பேசுன அவ்ளோ தான் "என்ற சமீரை தன் கன்னத்தில் கைவைத்தபடி பார்த்து கொண்டிருந்தாள் ஷாஜிதா.

சமீர் , தன் ஒரு கையால் ஷாஜிதாவின் கரத்தை பற்றி கொண்டும் இன்னுமொரு கையில் ஷாஜிதாவின் பையை எடுத்து கொண்டு அவளை தன்னோடு அழைத்து சென்றான்.

சமீர் , அங்கு வந்த ஆட்டோவை நிறுத்தி தன் வீட்டின் விலாசத்தை கூறி ஏறினான் , ஷாஜிதாவுடன்.

அகிலனுக்கு அலைபேசியின் மூலம் அழைத்தான். " டேய் என்னோட பைக் இங்க இருக்கு வந்து எங்க வீட்டில விட்டுட்டு போ " என்றதும் " சரிடா மச்சான் " என அலைபேசியை வைத்தான்.

எஸ்பி திவ்யசாந்தியை பார்த்து விட்டு வீட்டிற்கு சென்றுவிட்டான் சமீர். தன் வீட்டிற்கு சென்று கொண்டிருந்த நஃபீஸ் , நடை பாதையில் அமர்ந்திருந்த ஷாஜிதாவை பார்த்தான். உடனே அந்த காவலாளிக்கு அலைபேசி மூலம் அழைத்தான்.

நஃபீஸ் , "சார்! ஷாஜிதா வெளியே வந்ததை நீங்க பாத்தீங்களா? "

காவலாளி , "இல்ல சார்! "

நஃபீஸ் , "சரி நீங்க ஹாஸ்டலுக்கு போய் விசாரிங்களேன் கொஞ்சம் "

காவலாளி , "இதோ இப்பவே போறேன் சார் " என்று அவர் சென்று விசாரித்தார்.

நஃபீஸ் , "என்ன சார் சொன்னாரு? "

காவலாளி , "ஆமா சார் அந்த புள்ளை வெகேட் பண்ணிடுச்சான். "

நஃபீஸ் , " நீங்க பாக்கலையா? "

காவலாளி , " இல்ல சார்! நா ரெஸ்ட் ரூம் போய் இருந்தேன் "

நஃபீஸ் , " பரவாயில்லை சார் விடுங்க அதுல உங்க தப்பு இல்ல! நாங்க பாத்துக்கிறோம். "

காவலாளி , " சார் சாரி ! "

நஃபீஸ் , " பரவாயில்லை இல்ல சார் விடுங்க ! நீங்க வீட்டுக்கு கிளம்புங்க " என்றுவிட்டு சமீருக்கு அழைத்தான்.

சமீர் , " ம்ம்ம் சொல்லு டா ! "

நஃபீஸ் , " டேய்......" என நடந்ததை கூற சமீர் , " சரி டா நா இப்ப வந்துடுறேன் !"

நஃபீஸ் , " சரிடா ! " என அலைபேசியை வைத்துவிட்டு அங்கேயே மறைவாக நின்றுகொண்டு இருந்தான் ஷாஜிதாவிற்கு பாதுகாப்பாக.

அஸ்மா , " டேய் ! இப்ப தானே வந்த அதுக்குள்ள எங்க போற? "

சமீர் , " எல்லா உன் மருமகளை அழைச்சிட்டு வர தான். அவள் ஹாஸ்டலை வெகேட் பண்ணிட்டாளா! எங்க போறதுன்னு தெரியாம நடுரோட்டில் உட்கார்ந்துட்டு இருக்கா ! "

லத்தீப், " டேய் நீ போய் மருமகளை அழைச்சிட்டு வா! போ! " என அனுப்பி வைத்தார்.

அஸ்மா , "ஹே முஸ்கான்! உன் ரூம்ல தான் உன் அண்ணி தங்குவா "

முஸ்கான் , " எனக்கு ஓகே "

லத்தீப், " சமீரை ஏத்துக்கிற வரைக்கும் அவளை பேர் சொல்லியே கூப்பிடுங்க , உறவு முறை எல்லாம் வேணாம் சரியா! "

அஸ்மா, "ம்ம்ம் சரிங்க "

லத்தீப் , " ம்ம்ம் சரி முஸ்கான் மா நீ போய் ரூமை ரெடி பண்ணி வை " என்றதும் முஸ்கான் தன்னறையை தயார் செய்தாள்.

சமீர் , ஷாஜிதாவை அழைத்து கொண்டு வீட்டிற்கு வந்தான். சமீர் மற்றும் ஷாஜிதா இருவரும் ஒன்றாக வருவதை புகைப்படமாக எடுத்தாள் , முஸ்கான்.

இருவரின் ஜோடி பொருத்தமும் அவ்வளவு அழகாக இருந்தது. " ஏங்க ! ரெண்டு பேரும் ஜோடியா பார்க்கிறப்ப ரொம்ப பொருத்தமா இருக்குலே " என அஸ்மா, லத்தீபிடம் சொல்ல

லத்தீப் , " ம்ம்ம் ஆமா நல்லா தான் இருக்கு " என்றார்.

இருவரும் உள்ளே வர ஷாஜிதா , அனைவருக்கும் ஸலாம் வைத்தாள். அவர்கள் அனைவரும் இன்முகத்துடன் பதில் ஸலாம் கூறினார்கள்.

சமீர் , " அம்மா இவள் இன்னும் எதுவும் சாப்பிடலை! சாப்பிட எடுத்துட்டு வாங்க"

ஷாஜிதா , "வேணா பசிக்கலை ! "

அஸ்மா , " உன் முகமே சொல்லுது நீ பசியில இருக்குன்னு! இப்படி உட்காரு டா! நா இட்லி எடுத்துட்டு வரேன் " என சமையலறைக்கு சென்றார்.

சமீர் , "ஷாஜி! எதையோ கேட்கனும் நினைக்கிற என்னன்னு சொல்லு ! " என எதையோ கேட்க தயங்கி நின்ற ஷாஜிதாவிடம் கேட்க , "அ..அது கைகால் கழுவனும்? "என விழிக்க , " வா நா அழைச்சிட்டு போறேன் " என முஸ்கான் ஷாஜிதாவை அழைத்து சென்றாள்.

ஷாஜிதா கைகால்களை கழுவி கொண்டு வந்தாள். அஸ்மா , " ஷாஜிதா வா வந்து சாப்பிடு! " என கூற ஷாஜிதா அமர்ந்து சாப்பிட தொடங்கினாள்.

முதல் வாய் வைத்ததும் ஷாஜிதாவிற்கு, பெற்ற தாயின் கையில் உண்பது போல் உணர்ந்தாள். கிட்டத்தட்ட நான்கு மாதங்கள் ஆகிறது அல்லவா சாப்பாட்டை கண்ணீல் பார்த்து. நான்கே இட்லியை மட்டும் சாப்பிட்டு விட்டு எழுந்தாள்.

லத்தீப் , "ஷாஜிதா இங்க வாம்மா " என அழைக்க , ஷாஜிதா மெதுவாக லத்தீப் முன் சென்று நின்றாள்.

லத்தீப் , " உட்காரு டா "

ஷாஜிதா , " இல்ல வேணாம் "

லத்தீப் , "உட்காரு டா " என்றதும் அமைதியாக அமர்ந்தாள்.

லத்தீப் , " என்ன படிக்கிற? "

ஷாஜிதா , " இளங்கலை தமிழ் கடைசி வருஷம். "

லத்தீப் , " ம்ம்ம் குட்! இங்க பாரு ஷாஜிதா! இதுவும் உன் வீடு தான். இங்க நீ உன் விருப்பம் போல இருக்கலாம். எதாவது வேணும்னா தாராளமா என்கிட்ய இல்லன்னா அத்த கிட்ட இல்லனா முஸ்கான் கிட்ட இல்லைனா சமீர் கிட்ட கேளு செய்றோம்! சரியா! எந்த பயமும் இல்லாம நீ இங்க சந்தோஷமா இரு! உனக்கு நாங்க எல்லாரும் இருக்கோம்! சரியா " என்னதும் ஏனோ ஷாஜிதாவிற்கு மறுப்பு கூற மனம் வரவில்லை சரியென தலையசைத்தாள்.

அஸ்மா , "சரிடா நீயும் முஸ்கானும் அந்த ரூம்ல படுத்துக்கோங்க டா நாளைக்கு பேசலாம் " என கூற ஷாஜிதா எதுவும் பேசாமல் தலையை மட்டும் அசைத்தாள்.

முஸ்கான் , " வா ! ஷாஜிதா " அறைக்கு அழைத்து சென்றாள்.

ஏனோ முஸ்கானுக்கு ஷாஜிதாவை அவ்வளவு பிடித்திருந்தது. காரணமே இல்லாமல் ஷாஜிதாவை பிடித்திருந்தது அவளுக்கு.

ஷாஜிதா , " நா...நான் கீழே படுத்துக்கிறேன் நீங்க மேல படுத்துக்கோங்க "

முஸ்கான் , " ஹே என்னமா இது ! அதெல்லாம் செல்லாது என் பக்கத்துல தான் படுக்கனும்! வா " என ஷாஜிதாவின் கையை பிடித்து சென்று கட்டிலில் உறங்க வைத்து தானும் உறங்கினாள்.

அந்த பெரிய வீட்டின் தோட்டத்தில் மூன்று வயது பெண் குழந்தை அங்கிருந்த மணலை வைத்து விளையாடி கொண்டிருந்தது.

மழலை விளையாடும் அழகை ரசித்து கொண்டிருந்தான் பன்னிரண்டு வயது மிக்க சிறுவன்.

மெல்ல அந்த குழந்தையின் அருகில்  வந்து அமர்ந்தான். அந்த மழலை அச்சிறுவனை பார்த்து புன்னகைக்க அவனும் புன்னகைத்தான்.

குழந்தையிடம் வந்த அச்சிறுவன் , "பட்டு பெர் என்ன? " என்று கேட்டதும் , " தாதிதா " என்று தன் மழலை மொழியில் சொல்ல அச்சிறுவனுக்கு புரியவில்லை.

"பட்டு குட்டியோட பேர் என்ன? " என மறுபடியும் சிறுவன் கொஞ்சும் மொழியில் கேட்டதும் , " தாதிதா " என்று மழலை மொழியில் கூற அச்சிறுவன் யோசித்து விட்டு , " ஓ உங்க பெயர் ஷாஜிதாவா? " என்று கேட்க அந்த மழலை வாகாய் ஆம் என தலையசைத்து விட்டு " உங்க பேர் என்ன? " என்று மழலை ததும்ப கேட்க

அச்சிறுவன் சிரிப்போட குழந்தையை தன் மேல் அமர வைத்து  ," சமீர் "

குழந்தை , " தமீர் "  என்று அச்சிறுவனை காண அவன் சிரிப்போடு  , " தமீர் இல்ல சமீர் "

" தமீர் "

"ம்ஹும் ச...மீ...ர் "

"தமீர் "

எப்போதும் தன் பெயரை தவறாக யாரேனும் உச்சரித்தால் கோபம் கொள்ளும் அவன் இன்று இந்த மழலை மொழி கேட்டு ரசித்தான்.

"பட்டுகுட்டி என் பெரு ச....மீ...ர்" என விளக்க

"ச...மீ....ர்  " என மழலை மொழியிலும் குழந்தை கூறியதும் அவளை தூக்கி கன்னத்தில் முத்தமிட்டு ,  " நா அப்றம் வரேன் " என்றதும் குழந்தை அவனை பக்கத்தில் அழைத்து அவன் கன்னத்திலும் முத்தத்தை கொடுத்தது. அதை மகிழ்வோடு வாங்கி கொண்டு சென்றான்.

இரவின் இரண்டாம் ஜாமத்தில் இக்கனவு வர எழுந்தமர்ந்தாள் ஷாஜிதா.

ஷாஜிதா விழித்ததை உணர்ந்த முஸ்கான் , தானும் எழுந்தமர்ந்து , " ஷாஜிதா என்னாச்சு? "

ஷாஜிதா , " ஒ...ஒன்னுமில்ல! த...தண்ணி " என கேட்க

முஸ்கான் , " தண்ணியா! இதோ இந்தா " என மேசையில் இருந்து தண்ணீரை எடுத்து கொடுத்தாள்.

தண்ணீரை வாங்கி குடித்த ஷாஜிதா , " தேங்க்ஸ் " என கூறிவிட்டு மறுபடியும் உறங்கினாள்.

அந்த மண்டபத்தில் , ஹஜ்ரத் ஷாஜிதாவின் அருகில் வந்து , "உனக்கு சமீரை திருமணம் செய்து கொள்ள சம்மதமா? " என கேட்டதும்

ஷாஜிதா , மன நிறைவுடன்  " அல்ஹம்துலில்லாஹ்♥️ சம்மதம் " என அந்த நிக்காஹ் பதிவேட்டில் கையெழுத்திட்டாள்.

அந்த நிக்காஹ் பதிவேட்டில் கையெழுத்திட்டதும் உறக்கத்திலிருந்து பதறியடித்து கொண்டு எழுந்தமர்ந்தாள், ஷாஜிதா.

முஸ்கான் , " ஹே! ஷாஜிதா, திரும்ப என்னாச்சு! " என கேட்க

ஷாஜிதா , " து....தூக்கம் களைஞ்சிடுச்சு அதான்! நீங்க தூங்குங்க " என்றதும் முஸ்கான் அமைதியாக உறங்கிவிட்டாள்.

♥️ தொடரும் ♥️

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro