💞 23 💞
தனக்கும் சமீருக்கும் திருமணம் நடப்பது போல் கனவு வர திடுக்கிட்டு விழித்தாள் ஷாஜிதா. என்ன செய்ய வழியறியாது தவித்தாள் பேதை.
நேற்று நடந்த அத்தனையும் தன் கண்முன் வந்து செல்ல மனம் நொந்து போனது ஷாஜிதாவிற்கு.
கல்லூரிக்கு எப்போதும் போல் கிளம்பி சென்றாள். ஷாஜிதா , அமைதியாக அமர்ந்திருந்தாள்.
தேர்வுக்கு படித்து கொண்டிருந்தாள் ஷாஜிதா. நேரம் ஆக ஆக மாணவர்கள் வர தொடங்கினார்கள்.
ஃபர்ஜானா வர , ஷாஜிதா எழுந்து அவள் உள்ளே செல்ல வழியை விட்டாள்.
ஃபர்ஜானா , " ஷாஜிதா! உ...உன் கிட்ட பேசனும் " என்றவுடன் ஷாஜிதா தன் கையை உயர்த்தி , " உன்கிட்ட பேச எனக்கு எதுவுமில்ல. நேரத்தை வீணாக்காம போ போய் உன் இடத்துல உட்காரு. " என முகத்தை வேறு எங்கோ பார்த்தபடி கூற , ஃபர்ஜானா எதுவும் பேசாமல் தன் இடத்திற்கு சென்று அமர்ந்தாள்.
சமீர் , வகுப்பிற்கு வர ஷாஜிதா சமீரை பார்க்கவே இல்லை. தன் வேலையை அமைதியாக செய்து கொண்டிருந்தாள்.
சமீர், ஷாஜிதாவை புரிந்து கொண்டு அமைதியாக இருந்தான். 'என் பட்டுகுட்டி கடைசியில நீ என்கிட்ட தானே வர போற அப்ப இதுக்கெல்லாம் சேத்து வைச்சிக்கிறேன் ' என மனதில் சமீர் நினைத்து கொண்டான்.
ஷாஜிதா , தன் மனதை ஒருநிலை படுத்தி கொண்டு படிப்பில் கவனம் செலுத்தினாள்.
அன்றைய தினம் அப்படியே முடிய , வழக்கம் போல் தன் விடுதிக்கு சென்று தன் வழக்கமான செயலை செய்ய தொடங்கினாள்.
தேர்விற்கு போதுமான அளவுக்கு தன்னை தயார்படுத்தி இருந்தாள் , ஷாஜிதா. அதனால் படிக்க மனம் செல்லவில்லை.
முதன்முறையாக தன் வாழ்வில் வெறுமையை உணர்ந்தாள் , ஷாஜிதா. வெறுமையை உணர்ந்த ஷாஜிதாவின் இதழ்கள் தானாக விரக்தியான புன்னகை ஒன்றை சிந்தியது.
ஷாஜிதா சுவற்றில் தன் தலையை சாய்த்து கொண்டு அமைதியாக இருந்தாள். படிப்பு முடிந்ததும் அடுத்து என்ன? என ஷாஜிதாவின் மனம் யோசிக்க , எதுவும் எட்டவில்லை. என்ன செய்வதென தெரியாமல் தவித்தாள்.
தன்னுடைய வாழ்க்கை இப்படியே போய்விடுமோ என ஷாஜிதாவின் மனம் நொந்தது.
அல்லாஹ்வின் மேல் பாரத்தை போட்டுவிட்டு அமைதியாக இருந்தாள். ஆனாலும் மனம் வெறுமையை உணர்ந்தது.
தேர்வு நாள் அன்று விரைவாகவே கல்லூரிக்கு சென்றுவிட்டாள். அங்கு சென்று பாடங்களை புரட்டி கொண்டிருந்தாள்.
தேர்வறைக்கு செல்ல அனுமதி அளித்தவுடன், தன் அறையை நோக்கி சென்றாள் , ஷாஜிதா.
கண்காணிப்பாளராக சமீர் தான் வந்திருந்தான். சமீர் , வினாத்தாள் கொடுத்து , " நல்லா எழுது ஷாஜி " என்றதும் ஷாஜிதா சமீரை முறைத்துவிட்டு தன்னிடத்தில் அமர்ந்து கொண்டாள்.
சமீர் , " ஏன் இந்த முறைப்பு? பிடிக்கலை அப்டினா விடு " என கூறி நகர்ந்தான்.
ஷாஜிதா அமைதியாக வினாத்தாளை படிக்க தொடங்கினாள். அதில் தனக்கு தெரிந்த வினாக்கள் இருக்க அதை குறித்து வைத்து கொண்டாள்.
சிறிது நேரத்தில் விடைத்தாள் கொடுக்கப்பட்டது. கொடுத்ததும் ஷாஜிதா, விடைகளை எழுத தொடங்கினாள்.
சமீர், ஷாஜிதாவை ஒரு மெல்லிய சிரிப்போடு பார்த்து கொண்டிருந்தான். அதேநேரத்தில் தேர்வறையும் கவனமாக பார்த்து கொண்டிருந்தான்.
சமீர் , 'ஷாஜி உன்ன நா எங்கேயோ பாத்திருக்கேன்! இந்த பால் முகத்தை ! ஆனா எங்க தான் நியாபகம் வரமாட்டேன்து, நீ யாரையோ ரிசம்பல் பண்ற? ஆனா யாரை தான் தெரியலை? ' என மனதில் நினைத்து கொண்டிருந்தான்.
ஷாஜிதா , " அடிஷனல் ஷீட் " என கைதூக்க , சமீர் தன் நினைவிலிருந்து மீண்டு விடைத்தாளை ஷாஜிதாவிடம் கொடுக்க , அதை வாங்கி கொண்டு எழுத ஆரம்பித்தாள்.
இரண்டு மணிநேரம் தேர்வை ஒன்றரை மணி நேரத்தில் முடித்துவிட்டு, அறையை வேடிக்கை பார்த்து கொண்டிருந்தாள்.
சமீர் , " என்ன ஷாஜி எக்ஸாமை முடிச்சிட்ட போல " என கேட்க , அதற்கு பதிலாய் முறைப்பு தான் கிடைத்தது.
சமீர், அழகாய் சிரிப்பொன்றை சிந்திவிட்டு நகர , ஷாஜிதாவிற்கு கனவில் தன்னை தூக்கியவனின் அதே சிரிப்பை உணர்த்தியது.
'யார் அந்த சமீர்? எதுக்கு என்னை தூக்கி அவன் மடியில வைச்சான். அவனோட குரலும் இந்த சமீர் ஸார் குரலும் ஒரேமாதிரி இருக்கு? அந்த சிரிப்பு கூட மாறல அப்டியே இருக்கு? எனக்கு ஏன் இவரோட நிக்காஹ் ஆகுற மாதிரி கனவு வந்துச்சு எனக்கு ஒன்னுமே புரியலை! அல்லாஹ் நான் என்ன பண்ணுவேன். ஒருவேளை அந்த சமீர் தான் இவரா? வேறயா? ' என ஷாஜிதாவின் மனதில் பல குழப்பங்கள் எழுந்தன.
மனதில் பல குழப்பங்கள் எழுந்தவாற அமர்ந்திருந்தாள் , ஷாஜிதா. தேர்வு நன்றாக முடித்துவிட்டு , வெளியே வந்தாள், ஷாஜிதா.
-----
சமீரின் அறையில் விளக்கு ஏறிவதை பார்த்த , அம்மா அஸ்மா கதவை திறந்து , " சமீர் " என அழைத்தபடி உள்ளே வந்தார்.
சமீர் , தன் நினைவலைகளில் இருந்து மீண்டு , " ம்ம்ம் வாங்க ம்மா " என அழைத்தான்.
தன் மகனின் தலையை வாஞ்சையாக வருடிய அஸ்மா , " இவ்வளவு நேரம் நீ முழிச்சிட்டு இருக்க மாட்டியே? என்னாச்சு? " என கேட்க
சமீர் , " ஷாஜி நினைப்பாவே இருக்கு ம்மா " என தன் அம்மாவின் மடியில் படுத்து கொண்டு கூற
அஸ்மா , "என்னாச்சு டா? " என சமீர் தலையை வருடியவாறே கேட்டார்.
சமீர் , " ஷாஜி குடும்பம் நமக்கு ரொம்ப பழக்கமா ம்மா? "
அஸ்மா , "இல்ல ஏன் டா? "
சமீர் , " ஷாஜியை நா எங்கேயோ பார்த்திருக்கிறேன் ம்மா! எங்க தான் தெரியலை "
அஸ்மா , " தெரியலையா? "
சமீர் , " ம்ம்ம் ஆமா ம்மா! அம்மா ஷாஜி எனக்கு வேணும் ம்மா! கிடைப்பாளா ? "
அஸ்மா , " கண்டிப்பா கிடைப்பா டா! பொறுமையா இருந்தாலே போதும் "
சமீர் , "பேச கூட மாட்டறா ம்மா! முறைச்சிட்டே இருக்கா. அதுவும் என் மனசுல இருக்கிறத சொன்ன நாள்ல இருந்து " என வருந்திய குரலில் கூறியதும்
அஸ்மா , "சமீர்! ஷாஜி வாழ்க்கையில ரொம்ப அடிப்பட்டு இருக்கா அவ்ளோ சீக்கிரம் யாரையும் தன்னோட வாழ்க்கையில அனுமதிக்க மாட்டா. பாதுக்காக்கிற அப்பாலருந்து காதலிச்சவன் வரை ஷாஜிதாவை ஏமாத்தி இருக்காங்க துரோகம் செய்து இருக்காங்க. இப்டி இருக்கும்போது ஷாஜிதா யாரை டா நம்புவா? ஷாஜிதாவோட மனசு மாறுற வரைக்கும் நாம பொறுமையா இருந்துதான் ஆகனும். கண்டிப்பா ஷாஜிதா உன்ன ஏத்துப்பா."
சமீர் , " ம்ஹூம்! ஷாஜி என்னை ஏத்துப்பான்ற நம்பிக்கையே இல்ல! " என தோய்ந்த குரலில் கூற
அஸ்மா , " நம்பிக்கை தானே டா வாழ்க்கை. ஒருநாள் உன்ன ஷாஜிதா தன்னோட கணவனா உன்ன ஏத்துப்பா நீயும் உன் ஷாஜியும் சந்தோஷமா வாழ்வீங்க! எனக்கு அந்த நம்பிக்கை இருக்கு. மனசுல எதையும் போட்டு குழப்பிக்காம தூங்கு. அல்லாஹ் பாத்துப்பான் " என நம்பிக்கை அளிக்க தன் அம்மாவின் மடியிலே உறங்கி போனான் சமீர்.
தன் மகனை சரியாக உறங்க வைத்த அஸ்மா , சமீரின் நெற்றியில் இதழ் பதித்துவிட்டு விளக்கை அணைத்து விட்டு வெளியே வந்தார்.
-----
இஷா தொழுகையை முடித்த ஷாஜிதா , நாளைய தேர்விற்கு படித்துவிட்டு உறங்கினாள்.
அந்த பெரிய வீட்டின் தோட்டத்தில் மூன்று வயது பெண் குழந்தை அங்கிருந்த மணலை வைத்து விளையாடி கொண்டிருந்தது.
மழலை விளையாடும் அழகை ரசித்து கொண்டிருந்தான் பன்னிரண்டு வயது மிக்க சிறுவன்.
மெல்ல அந்த குழந்தையின் அருகில் வந்து அமர்ந்தான். அந்த மழலை அச்சிறுவனை பார்த்து புன்னகைக்க அவனும் புன்னகைத்தான்.
குழந்தையிடம் வந்த அச்சிறுவன் , "பட்டு பெர் என்ன? " என்று கேட்டதும் , " தாதிதா " என்று தன் மழலை மொழியில் சொல்ல அச்சிறுவனுக்கு புரியவில்லை.
"பட்டு குட்டியோட பேர் என்ன? " என மறுபடியும் சிறுவன் கொஞ்சும் மொழியில் கேட்டதும் , " தாதிதா " என்று மழலை மொழியில் கூற அச்சிறுவன் யோசித்து விட்டு , " ஓ உங்க பெயர் ஷாஜிதாவா? " என்று கேட்க அந்த மழலை வாகாய் ஆம் என தலையசைத்து விட்டு " உங்க பேர் என்ன? " என்று மழலை ததும்ப கேட்க
அச்சிறுவன் சிரிப்போட குழந்தையை தன் மேல் அமர வைத்து ," சமீர் "
குழந்தை , " தமீர் " என்று அச்சிறுவனை காண அவன் சிரிப்போடு , " தமீர் இல்ல சமீர் "
" தமீர் "
"ம்ஹும் ச...மீ...ர் "
"தமீர் "
எப்போதும் தன் பெயரை தவறாக யாரேனும் உச்சரித்தால் கோபம் கொள்ளும் அவன் இன்று இந்த மழலை மொழி கேட்டு ரசித்தான்.
"பட்டுகுட்டி என் பெரு ச....மீ...ர்" என விளக்க
"ச...மீ....ர் " என மழலை மொழியிலும் குழந்தை கூறியதும் அவளை தூக்கி கன்னத்தில் முத்தமிட்டு , " நா அப்றம் வரேன் " என்றதும் குழந்தை அவனை பக்கத்தில் அழைத்து அவன் கன்னத்திலும் முத்தத்தை கொடுத்தது. அதை மகிழ்வோடு வாங்கி கொண்டு சென்றான்.
இரவின் இரண்டாம் ஜாமத்தில் இக்கனவு வர எழுந்தமர்ந்தாள் ஷாஜிதா.
' என்ன இது மறுபடியும் மறுபடியும் இந்த கனவு வருது? யாரு அந்த தமீர் ச்சே சமீர்? ம்ஹ்ம் அல்லாஹ்! இந்த சமீர் யாருன்னு சொல்லேன் ' என புலம்பிய ஷாஜிதா தண்ணீரை அருந்திவிட்டு மறுபடியும் உறங்க தொடங்கினாள்.
அந்த மண்டபத்தில் , ஹஜ்ரத் ஷாஜிதாவின் அருகில் வந்து , "உனக்கு சமீரை திருமணம் செய்து கொள்ள சம்மதமா? " என கேட்டதும்
ஷாஜிதா , மன நிறைவுடன் " அல்ஹம்துலில்லாஹ்♥️ சம்மதம் " என அந்த நிக்காஹ் பதிவேட்டில் கையெழுத்திட்டாள்.
அந்த நிக்காஹ் பதிவேட்டில் கையெழுத்திட்டதும் உறக்கத்திலிருந்து பதறியடித்து கொண்டு எழுந்தமர்ந்தாள், ஷாஜிதா.
ஷாஜிதா, அல்லாஹ்விடம் தன் கேள்விக்கு விடை கேட்டதும் அதற்கான பதிலாக தான் இக்கனவை காட்டினான். ஆனால் , ஷாஜிதாவால் தான் அதை உணர முடியவில்லை.
இரவின் மூன்றாம் ஜாமத்தில் தோன்றியது. அந்த கனவு ஏன் தோன்றியது எதனால் தோன்றியது என எதுவும் தெரியாமல் தவித்தாள் , ஷாஜிதா.
அதன்பின் தூக்கம் வர மறுத்தது. அமைதியாக அப்படியே அமர்ந்திருந்தாள் ,ஷாஜிதா.
அனைத்து தேர்வையும் நல்லபடியா எழுதி முடித்தாள் , ஷாஜிதா. தினமும் அந்த இரண்டு கனவுகள் வந்து வந்து சென்றது.
அந்த கனவிற்கு விடை தெரியாமல் அனுதினமும் தவித்து கொண்டிருந்தாள் , ஷாஜிதா.
வழக்கமான வகுப்புகள் தொடங்கியது. சமீரின் முகத்தை கூட பார்க்காமல் தன் வேலையை செய்து கொண்டிருந்தாள் , ஷாஜிதா.
சமீரின் மனம் தான் ரொம்ப வலித்தது. ஒருசில நேரங்களில் சமீரை அறியாமலே சமீரின் கண்கள் கலங்கிவிடும்.
தன் மனதை கஷ்டப்பட்டு அடக்கி வைத்திருந்தான் , சமீர்.
-----
சல்மா மற்றும் அஹமது இருவரும் ஃபிர்தவுஸ் வீட்டிற்கு பத்திரிக்கை வைக்க சென்றனர்.
ஃபிர்தவுஸ் , " இந்த கல்யாணத்துக்கு நா மாட்டேன். " என கறாராக கூறிவிட்டு தன் அறைக்குள் சென்று விட்டாள்.
யாசர் , " அத்த சாரி நானும் வரமாட்டேன். கட்டாயப்படுத்தாதீங்க! ஷாரூக் பண்ணது துரோகம். அத நீங்க வேணா அதுக்கு ஆதரவா இருங்க எங்களால முடியாது " என தெளிவாக கூறிவிட்டு வேலைக்கு சென்றுவிட்டான்.
மெஹ்ராஜ் , " இல்ல சல்மா! என் மகனும் மருமகளும் வர முடியாது சொல்லிட்ட போது எங்களுக்கும் அங்க வர விருப்பமில்ல ! மன்னிச்சிடு " என கூற சல்மா மற்றும் அஹமது கவலையோடு வீடு திரும்பினார்கள்.
வீட்டில் வந்து நடந்ததை கூற ஷாரூக்யிற்கு கோபம் வந்தது.
ஷாரூக் , " எல்லாமே ஷாஜிதா சொல்லி கொடுத்திருப்பா! அதான் உன் பொண்ணு இப்டி ஆடுறா! வேற ஒன்னுமில்ல " என கோபமாக கூற
அஹமது , " அந்த பொண்ணை ரொம்ப நல்ல பொண்ணு நினைச்சேன்! ஆனா ? " என வருந்த
சல்மா , "ம்ஹ்ம் அவளுக்கு போய் நா நல்லது நினைச்சேன் பாருங்க! என்னை சொல்லனும் ! " என தன் அடித்து மெது நாற்காலியில் அமர்ந்தார்.
ரஹிமா , " விடு நம்ம தலையெழுத்து இதான் போல நடக்கிறது தான் நடக்கும். தலைக்கு வந்தது தலப்பாகையோட போச்சு நினைச்சிக்கோ விடு " என்றதும் மற்ற வேலைகளில் கவனம் செலுத்தினார்கள்.
திருமணத்திற்கு இன்னும் ஏழு நாட்களே உள்ள நிலையில் , இரண்டு வீட்டினரும் வேலைகளில் மூழ்கியிருந்தனர்.
ஜாராவின் உடைகள் மற்றும் தேவையான பொருட்களை எடுத்து அடுக்கி வைத்து கொண்டிருந்தார்கள்.
ஷாரூக்யின் நண்பர்கள் யாரும் வரவில்லை. அவர்கள் அனைவருக்கும் இந்த விஷயம் தெரிந்துவிட ஷாரூகை வெறுத்து விட்டார்கள்.
ஒருசில பேர் மட்டுமே வந்திருந்தார்கள். அதுவும் உடன் வேலை செய்பவர்கள்.
திருமண வீடு கலகலவென இருந்தது. வேலை எல்லாம் நல்லபடியாக நடக்க தொடங்கியது.
-----
அகிலன் , " டேய் என்னடா அந்த பொண்ணுக்கு கல்யாணம் நடக்க போது! இன்னும் நாம எதுவும் கண்டுபிடிக்காம இருக்கோம் "
சூரஜ் , "டேய் பொறுமையா இரு! கிடைக்கும் "
அகிலன் , " என்னடா பொறுமையா இருக்க சொல்ற? ஒரு பொண்ணுக்கு துரோகம் பண்ணிட்டு அவன் சந்தோஷமா இன்னொரு பொண்ணோட வாழ போறான். அவனை நம்பி ஏமாந்த ஷாஜிதாவுக்கு பதில் என்ன டா? "
சமீர், " அதுக்கு என்ன பண்ண சொல்ற? "
நஃபீஸ் , " டேய்! மச்சான் கொஞ்சம் பொறுமையா இருடா! நம்மகிட்ட எவிடென்ஸ் இல்ல. எவிடென்ஸ் இல்லாம நாம எந்த ஆக்ஷனும் எடுக்க முடியாது. வெறும் வாய்ஸ் ரெக்கார்டிங்யை வச்சி ஒன்னும் பண்ண முடியாது. ஸ்ட்ராங்ஆன எவிடென்ஸ் மட்டும் கிடைக்கட்டும் நாம அவங்களை உண்டு இல்லன்னு பண்ணிடலாம். அவங்க யாரும் அந்த ரெக்கார்டிங் நம்ப மாட்டாஙஅக கொஞ்சம் பொறுமையா இரு! " என சமாதானம் செய்ய , அமைதியானான் அகிலன்.
சமீருக்கும் உள்ளுக்குள் கொதித்து கொண்டுதான் இருந்தான். அமைதியாக தன் கோபத்தை அடக்கி வைத்திருந்தான்.
ஷாரூக்யிற்கு தக்க தண்டனை கொடுக்க வேண்டும் என மனம் கொதித்து கொண்டிருந்தது.
-----
ஷாரூக் - ஜாராவின் திருமண நாள் இன்று. அந்த மண்டபமே கலைக்கட்டியது.
ஷாரூக் மற்றும் ஜாரா இருவரும் தங்களுக்கு இந்த நிக்காஹ்வில் சம்மதம் என கையெழுத்திட்டனர்.
இதையெல்லாம் அமைதியாக வேடிக்கை பார்த்து கொண்டிருந்த அம்ரீன் மற்றும் பௌஸியா கண்களிலிருந்து கண்ணீர் வர , இருவரும் அங்கிருந்து நகர்ந்தனர்.
தன் அக்கா இருக்க வேண்டிய இடத்தில் வேறொருத்தி இருப்பதை பார்த்த அம்ரீனுக்கு கோபம் அதிகரித்தது. பௌஸியா தன் அம்மாவை அணைத்து கொண்டு அழுதாள்.
பௌஸியா , " அழாதடா! விடு. நம்ம ஷாஜிதாவுக்கு இவனை விட நல்லவன் கிடைப்பான். அவ கண்டிப்பா எங்கேயாவது நல்லா இருப்பா. அழ கூடாது. வா நாம வீட்டுக்கு போவோம். நாளைக்கு காலேஜ் போகனும்ல வா " என இருவரும் வீட்டிற்கு சென்று விட்டனர் ஹசனிடம் கூறிவிட்டு.
ஆனால் பாவம் ஷாரூக் மற்றும் ஜாரா இருவருக்கும் இனி தான் நரக வாழ்க்கை தொடங்க போகிறது என்பதை இருவரும் உணரவில்லை.
-----
அன்று எப்போதும் தன் அறையில் இருந்தாள் ஷாஜிதா. அப்போது யாரோ அறை கதவை தட்டும் சத்தம் கேட்க , ஷாஜிதா கதவை திறந்தாள்.
அந்த விடுதியின் உரிமையாளர் தான் வந்திருந்தார்.
ஷாஜிதா , " உள்ள வாங்க சார் " என அழைக்க , " இல்ல பரவாயில்லை! நாளைக்கு எனக்கு இந்த ரூம் வேணும் நீ காலி செஞ்சிடு மா! " என்றதும் ஷாஜிதாவிற்கு தூக்கி போட்டது.
அறையை உடனே காலி செய்ய சொன்னால் எப்படி? எங்கே செல்வது என எதுவும் தெரியாமல் விழித்தாள் , ஷாஜிதா.
ஷாஜிதா , "சார் உடனே காலி பண்ண சொன்னா என்ன அர்த்தம்? " என கேட்க
உரிமையாளர் , " என்ன அர்த்தம் அப்டினா? இந்த ரூம் வேற ஒருத்தவங்களுக்கு தேவைப்படுது அர்த்தம். அப்டி உனக்கு இங்க இருக்கனும்னா என்கூட வா நா அனுமதி தரேன் " என தவறாக பேசியதும் ஷாஜிதா , உரிமையாளரை ப்ளார் என அறைந்து விட்டு , " இதுக்கெல்லாம் வேற ஆளுங்க இருக்காங்க அவங்ககிட்ட வைச்சிக்கோ என்கிட்ட வைச்சிக்காதே! இப்ப என்ன ரூமை காலி பண்ணணும் அதானே காலி பண்ணிடுறேன் " என வேகமாக தன்னுடைய உடைமைகளை எடுத்து கொண்டு அங்கிருந்து நகர்ந்தாள்.
இனி ஷாஜிதாவின் நிலை?
♥️ தொடரும் ♥️
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro