Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

💞 20 💞

வானத்தை வெறித்த படி மனதில் ஷாஜிதாவை புகைப்படத்தில் பார்த்ததிலிருந்து இன்று இந்த நொடி வரை தன் வாழ்வில் நிகழ்ந்த மாற்றங்களை சிந்திக்க தொடர்ந்த சமீரின் மனம் கொஞ்சம் கொஞ்சமாக ஷாஜிதாவின் மேல் இருக்கும் காதலையும் நேசத்தையும் உணர தொடங்கினான் சமீர்.

தன் காதலை உணர்ந்ததும் சமீர் கண்களில் கண்ணீர் துளிர்ந்தது. அதை துடைக்க கூட மனமில்லாமல் ஷாஜிதாவை நினைத்து கொண்டு இருந்தான், சமீர்.

ஹசினா பேசிவிட்டு சென்றதில் இருந்து ஷாஜிதாவிற்கு எதாவது ஆகிவிடுமோ? என சமீர் மனம் துடித்தது. அதுவே சமீரை இப்போதிக்கு எதையும் யோசிக்க விடாமல் செய்தது. ஆனால் சமீரின் கண்களில் வந்த கண்ணீர் மட்டும் நிற்கவில்லை.

மேலே வந்த அனைவரும் வானத்தை வெறித்து பார்த்து கொண்டிருந்த  சமீரின் அருகில் வந்தனர்.

அக்கா முசினா , சமீரின் தோளில் கை வைக்க , திரும்பி பார்த்த  சமீர் தன் அக்காவை அணைத்து கொண்டு அழுதான்.

சமீர் , " க்கா எனக்கு ஷாஜி வேணும் க்கா. I am in love with her. என்னால ஷாஜி இல்லாம வாழ முடியாது. ஷாஜி வேணும் க்கா.  " என சிறு குழந்தை போல் அழுதான்.

சமீரின் கண்ணீரே உணர்த்தியது ஷாஜி மேல் அவன் வைத்திருக்கும் நேசத்தை. சூரஜ், அகிலன் மற்றும் நஃபீஸ் மூவரின் கண்களும் கலங்கியது.

முசினா , " சமீர் , சரி அழுவாத! " என சமாதானம் செய்ய சமீரின் கண்களில் கண்ணீர் வந்து கொண்டிருந்தது.

முசினா , "சமீர் , இப்டி உட்காரு " என கூற சமீரும் அமைதியாக கீழே அமர்ந்தான். சமீர் அருகில் முசினாவும் அமர்ந்து கொண்டாள்.

சமீர் , தன் அக்காவின் மடியில் தலை வைத்து கொண்டு  , "அக்கா ஷாஜி எனக்கு வேணும் க்கா. "

முசினா , " சரிசரி ஷாஜி தான் உன் மனைவி. எங்க எல்லாருக்கும் சம்மதம். நீ மொதல்ல அழுகுறதை நிறுத்து! " என்றதும் ,  சமீர் எழுந்தமர்ந்து புரியாமல் தன் அக்காவை பார்த்தான்.

முசினா , " டேய்! எங்க எல்லாருக்கும் ஷாஜிதாவை பிடிச்சிருக்கு. "

சமீர் , " உண்மையாவா? " என தன் அம்மா அப்பாவை பார்க்க, இருவரும் சேர்ந்து , " எங்களுக்கு முழு சம்மதம் " என்றார்கள்.

முஸ்கான் , "அதான் எல்லாரும் ஒத்துக்கிட்டாங்களே இன்னும் ஏன் அழுகுற? கண்ணை துடை " 

ஆனாலும் சமீரின் கண்களில் இருந்து கண்ணீர் வருவதை மட்டும் நிறுத்த முடியவில்லை.

சமீர் , " முடியலை , தானா வருது. ஷாஜிக்கு எதாவது ஆயிடுமோன்னு பயமா இருக்கு "

முசினா , " டேய் அதான் இவ்ளோ பாதுகாப்பு போட்டு இருக்க. அத மீறி என்ன பண்ண முடியும்? "

சமீர் , " இல்ல க்கா! இன்னிக்கி நடந்தது அப்டி! " என வகுப்பில் நடந்த அத்தனையும் ஒன்று விடாமல் கூறி முடித்தான்.

சமீர் கூறி முடித்ததும் சில நிமிடங்கள் அமைதி நிலவ, அதை சமீர் களைத்தான்.

சமீர் , "அதுங்க ரெண்டும் க்ளாஸ்ல காலடி எடுத்து வைக்கிறப்ப எனக்கு அப்டியே துடிக்க துடிக்க வெட்டி போடனும் போல இருந்துச்சு. ஆனா அமைதியா இருந்துட்ட. அவ்ளோ அகங்காரம் அந்த பொம்பளைக்கு. அதோட பொண்ணு அதுக்கு மேல இருக்கு. ஆனா அவங்க ரெண்டு பேருக்கும் சரியான பதிலடி ஷாஜி கொடுத்திட்டா. ஷாஜி வெளியே போக சொன்ன போது அந்த பொம்பளை மொகத்தை பாக்கனுமே அவ்ளோ கோபம் வெறி. அதான் பயமா இருக்கு "

முஸ்கான் , "டேய் லூசு மாதிரி பேசாத அண்ணிக்கு ஒன்னும் ஆகாது."

லத்தீப் , " டேய்! அந்த பொண்ணு ரொம்ப தைரியமா இருக்கா. அதனால அவளுக்கு எதுவும் ஆகாது. அல்லாஹ் அந்த பொண்ணுக்கு பலமா தைரியத்தை கொடுத்திருக்கான். அதனால என் மருமகளுக்கு எதுவும் ஆகாது."

அஸ்மா ,  "சரிங்க இப்ப எப்டி இவங்க ரெண்டு பேருக்கும் நிக்காஹ் பண்ணி வைக்கிறது? "

சூரஜ் , "அது ரொம்ப கஷ்டம் "

முசினா , " என்னடா சொல்லற? "

நஃபீஸ் , " ம்ம்ம் ஆமா க்கா ; டேய் சமீர் உனக்கு ஷாஜிதா வேணும்னா நீ ரொம்ப பொறுமையா இருக்கனும். பொறுமையா இருக்க முடியலைனாலும் இருந்து தான் ஆகனும் "

சமீர் ,  "ஏன்டா? "

அகிலன் , " ஏன்வா? நீ உன் காதலை சொன்னதும் தங்கச்சி ஏத்துக்கும் நினைக்கிறியா? "

சூரஜ் , " இல்ல கண்டிப்பா ஏத்துக்க மாட்டா! ஏன்னா ஒருத்தனால ஏமாறபட்டு இருந்தாலே அந்த வலியை மறந்து இன்னொரு வாழ்க்கையை தேட மனசு அவ்ளோ சீக்கிரம் இடம் தராது. அவங்களுக்கே அப்டினா. இந்த பொண்ணு அப்டி இல்ல. மொத்த குடும்பமும் சேர்ந்து ஏமாத்தி இருக்கு. அம்மாவிலருந்து காதலிச்சவன் வரைக்கும் எல்லாருமே கஷ்டப்படுத்தி துரோகமும் பண்ணி இருக்காங்க. அவ்ளோ சீக்கிரம் அந்த பொண்ணு மனசு இன்னொரு வாழ்க்கையை ஏத்துக்காது. அவள் ஏத்துக்கிற வரைக்கும் நீ பொறுமையா இருந்து தான் ஆகனும். " என்றதும்

சமீர் , " ம்ம்ம், சரி " என தலையசைத்தான்.

நஃபீஸ் , " அப்பா அம்மா நீங்க என்ன சொல்றீங்க? "

லத்தீப் , அஸ்மா " எங்களுக்கும் இதுலை சம்மதம் தான் " என்றதும் அனைவரின் முகமும் மலர்ந்தது.

முஸ்கான் , " சரி இப்ப எதுக்கு நீ ஃபிர்தவுஸை வர சொன்ன? முசினா "

முசினா , " ம்ம்ம் இவங்க ரெண்டு பேர் விஷயத்தை பேச தான் "

சிறிது நேரத்தில் யாசர் மற்றும் ஃபிர்தவுஸ் வந்தனர். 

யாசர் , " அத்த என்ன விஷயம்? "

லத்தீப் , " ஒன்னுமில்ல டா. ஷாஜிதாவை எங்க வீட்டுக்கு மருமகளா அழைச்சிட்டு வரலாம் இருக்கோம். நீங்க ரெண்டு பேரும் தான் பேசி சம்மதிக்க வைக்கனும் " என்றதும் இருவருக்கும் என்ன சொல்வதென்று தெரியவில்லை.

யாசர் , " மாமா உண்மையாவா சொல்றீங்க! "

லத்தீப் , " ம்ம்ம் ஆமா டா. அந்த  பொண்ணை எங்க எல்லாருக்கும் பிடிச்சிருக்கு "

ஃபிர்தவுஸ் , "மாமா ! ஷாஜிதா அவ்ளவு சீக்கிரம் சம்மதிப்பாளா தெரியாலை. நான் பேசி பாக்குற. நீங்க பொறுமையா இருந்தா போதும் "

அஸ்மா , " கண்டிப்பா டா "

ஃபிர்தவுஸ் ,  "இல்ல அத்த! அவ கொஞ்சம் கோப காரி ரொம்ப பிடிவாத காரி. இப்ப இருக்க சூழ்நிலைக்கு அவ்ளோ சீக்கிரம் எதுக்கும் ஓத்துவர மாட்டாள். அவ்ளோ அடிப்பட்டு இருக்காள். அவளை அடிபணிய வைக்கிறது ரொம்ப கஷ்டம், கொஞ்சம் பொறுத்தா அவளை சம்மதிக்க வைக்கலாம் " என்றதும் அனைவரும் சம்மதித்தனர்.

அப்போது சமீர் அலைபேசி அடித்தது. அதை எடுத்து பார்க்க சார்லஸ் தான் . எடுத்து பேசினான்.

சமீர் , " சொல்லுங்க சார்லஸ் "

சார்லஸ் , " சமீர் நீங்க அந்த ரெக்கார்டிங் கேட்டிங்களா? "

சமீர் , " எந்த ரெக்கார்டிங் ? "

சார்லஸ் , " என்ன சமீர் நீங்க இவ்ளோ அலட்சியமா இருக்கீங்க? நாம தேடிட்டு இருக்க ஆதாரம் அதுலை இருக்கு! மொதல்ல அதை கேளுங்க! "

சமீர் , " சரிசரி சார்லஸ் இப்ப கேட்கிற " என்று அலைபேசியை வைத்தான்.

சூரஜ் , " என்ன டா? "

சமீர் , " சார்லஸ், அந்த ரெக்கார்டிங் கேட்க சொன்னாரு ! "

நஃபீஸ் , " ம்ம்ம் போடு "

அந்த ரெக்கார்டிங் போடப்பட்டது.

அதேவேளை , ஹசினா தன் அறையில் அங்கும் இங்கும் கொலவெறியோடு நடந்து கொண்டிருந்தார்.

' ஏய் ஷாஜிதா! உனக்கு எவ்ளோ திமிரு இருந்தா! என்னையே எதிர்த்து பேசுவ? சரி கொஞ்ச நாள் உயிர் வாழுன்னு விட்டா ரொம்ப தான் பண்ற! உன் அம்மாவை போட்டு தள்ளுன்ன அப்பவே உன்னையும் போட்டிருந்தா நல்லா இருந்திருக்கும். போனா போது உன்ன விட்டேன்ல பேசுவடி பேசுவ! உன் அம்மாவை போட்டு தள்ளுன்ன மாதிரி உன்னயும் போட்டு தள்ளிட்டு அந்த கொல பழியை உன் அப்பன் மேல போட்டுறுவேன். அப்றம் உன் தொங்கச்சியையும் உன்  சித்தியையும் இந்த வீட்டை விட்டு விரட்டிடுவேன். அவ்ளோ தான் ரொம்ப சுலபம். அப்றம் இந்த சொத்து எனக்கு மட்டும் தான், ஹாஹாஹா ' என அந்த அறையே அதிரும் அளவிற்கு சத்தமாக வன்மமாக சிரித்தார் , ஹசினா.

ஜாரா தனியே அமர்ந்து யோசித்து கொண்டிருந்தாள். அப்போது நாதிரா , " ஏய் ஜாரா என்ன யோசிக்கிற? "

ஜாரா , " இல்ல நாதிரா எனக்கு இந்த கல்யாணம் வேண்டாம். ஷாரூக் எனக்கேத்தவன் கிடையாதோ தோனுது "

நாதிரா , " என்ன சொல்ற ஜாரா? ஷாரூக் உனக்கேத்தவன் கிடையாது யாரு சொன்னா? "

ஜாரா , " இல்ல தோனுது நாதிரா! "

நாதிரா , " நீ இப்டி எல்லாம் யோசிக்க மாட்ட என்னாச்சு? "  என்றவுடன் ஜாரா இன்று நடந்ததை கூறியதும்

நாதிரா ,  "ஏய் லூசு அக்கா! அந்த எரும சொன்னுச்சு சொல்லி நீ இப்டி தப்பா யோசிக்கலாமா? "

ஜாரா , " ஏய் உனக்கு ஷாஜிதாவை எந்தளவுக்கு தெரியுமோ? அதவிட அதிகமா எனக்கு ஷாஜிதாவை பத்தி தெரியும். அவள் எந்த விஷயத்தையும் யோசிக்காம சொல்ல மாட்டாள். அதேமாதிரி அவ மனசுல ஷாரூக் சுத்தமா இல்ல. அதை அவளோட கண்ணுலே நான் பாத்தேன்.  உனக்கு தெரியாது. ஷாஜிதாவுக்கு எந்தளவுக்கு அம்ரீனை பிடிக்குமோ அதே அளவுக்கு என்னையும் அவளுக்கு பிடிக்கும். அவளை பொறுத்தவரை நான் குழந்தை. அதனால தான் நான் என்னை பண்ணாலும் கண்டுக்க மாட்டாள். நான் அவளோட துணியை எடுத்து போட்டுகிட்டாலும் எதுவும் சொல்லமாட்டாள். அதெல்லாம் அவள் என்மேல வைச்ச பாசம் தான் காரணம். பெரிய தப்பு பண்ணா மட்டும் என்னை அடிப்பாள். என்மேல அவளுக்கு அக்கறை இருந்ததால தான் என்கிட்ட இதை சொன்னா! ம்ஹ்ம் உனக்கு அவளை பத்தி தெரியாது நாதிரா. ஷாஜிதா ரொம்ப நல்லவள். " 

நாதிரா , " ஜாரா! அவளுக்கு பொறாமை. நீயும் ஷாருக் மாமாவும் கல்யாணம் பண்றது பார்த்து பொறாமை படுறா. அதனால தான் உன் மனசை கலைக்க ஆரம்பிச்சிட்டா! அதனால நீ எதையும் போட்டு குழப்பிக்காத!  " என பேசி ஜாராவின் மனதை கலைத்துவிட்டாள்.

ஜாராவும் தன் தங்கை சொல்லுவதை நம்பி , தன் மனதை மாற்றி கொண்டாள்.

அனைத்தும் ரெக்கார்ட் ஆகி சமீர் மற்றும் அனைவரும் கேட்டு அதிர்ந்தனர்.

அஸ்மா , " இவளா ஒரு பொம்பளையா? சொத்துக்கு ஆசைப்பட்டு ச்சே "

முசினா , " டேய் இப்ப எனக்கு உண்மையாவே ரொம்ப பயமா இருக்குடா! நம்ம ஷாஜிதாவை எப்டியாவது காப்பாது டா. ஃபிர்தவுஸ் நீ ஷாஜிதா கிட்ட பேசி அவளை நம்ம வீட்டுக்கு அழைச்சிட்டு வந்துடேன் "

சமீர் , " வர மாட்டா க்கா! பிடிவாதம் அவளுக்கு ஜாஸ்தி. அவ வழியில விட்டுதான் பிடிக்கனும் " என்றதும் அனைவரும் அமைதியாக இருந்தனர்.

ஃபிர்தவுஸ் , " நா இப்ப எப்டி ஷாஜிதா கிட்ட இதை பத்தி பேசுவேனா? " என அவள் யோசனை சொல்ல

முஸ்கான் , " ஹே கை கொடுங்க சூப்பர் நல்லா வொர்க் ஆகும் "

ஃபிர்தவுஸ் , " அப்ப சரி நாங்க ரெண்டு பேரும் நாளைக்கு போய் ஷாஜிதா கிட்ட பேசுறோம் "

லத்தீப் , " டேய் நீங்க மூனு பேரும் என்ன யோசிக்கிறீங்க? "

சூரஜ் , " அது ஒன்னுமில்ல. இப்ப இந்த ஹசினா தன்னோட வாயாலே வாக்குமூலம் கொடுத்திட்டாங்க! நாம ஆக்ஷன் எடுக்கலாமா வேணாமா யோசிட்டு இருக்கேன் "

நஃபீஸ் , " டேய் கேன! அவங்க யாரும் நம்ப மாட்டாங்க! இன்னும் ஸ்ட்ராங்ஆ எவிடென்ஸ் கிடைச்சா தான் நம்மால அடுத்த மூவ் கொடுக்க முடியும். கொஞ்சம் அமைதியா இரு. பண்ணலாம். "

அகிலன் , " டேய் அந்த ஜாரா புள்ளை பேசுனது கேட்டாங்களா?" என சொன்னதும் அப்போது தான் அனைவரும் அதை நினைவுபடுத்தி பார்த்தனர்.

நஃபீஸ் , " டேய் இந்த புள்ள திருந்துனாலும் அதோட தங்கச்சி திருந்த விடாது போல "

சமீர் , " ம்ஹ்ம் ஷாஜி சரியா தான் சொல்லியிருக்கா கூட இருக்கிறவங்களை விலகிவிட்டு நீ தனிய யோசி. உன்ன அவங்க தேவைக்கு பயன்படுத்தி கிட்டு இருக்காங்கன்னு புரியும் சொன்னா. அது சரி தான் போல "

ஃபிர்தவுஸ் , " இருந்தாலும் ஜாராவை நம்ப முடியாது "

நஃபீஸ் , " சரி அதெல்லாம் இருக்கட்டும். எனக்கு இந்த நாதிரா எதோ கேம் ஆடுது நினைக்கிற! "

சமீர் , " எதுவா இருந்தாலும் பாத்துக்கலாம். "

சூரஜ் , " சரி டா நாங்க கிளம்பிறோம் " என்று நண்பர்கள் கிளம்பிவிட, மற்றவர்களும் கீழே சென்றனர்.

சமீர் மட்டும் தனியாக இருந்தான். தன் ஜோபில் இருந்த ஷாஜிதாவின் புகைப்படத்தை வெளியே எடுத்தான்.

ஷாஜிதாவின் புகைப்படத்தை மெல்ல வருடிய சமீர் , ' எப்டி ஷாஜி என் மனசுல வந்த? கவலைப்படாத நானிருக்க உனக்கு. உன் அழுகை சிரிப்பா உன் துன்பத்தை இன்பமா நான் மாத்துவேன். உனக்கு அம்மாவா அப்பாவா இப்டி எல்லா உறவாவும் நானிருப்பேன் உனக்கு'  என மெலிதாய் புன்னகைத்து ஷாஜிதாவின் புகைப்படத்திற்கு முத்தம் வைத்தான்.

நோன்பை திறந்து விட்டு தொழுது முடித்தாள் ஷாஜிதா. சிறிது நேரம் படித்துவிட்டு இரவு ஒன்பதாக தூக்கம் வர உறங்கினாள் ஷாஜிதா.

அந்த பெரிய வீட்டின் தோட்டத்தில் மூன்று வயது பெண் குழந்தை அங்கிருந்த மணலை வைத்து விளையாடி கொண்டிருந்தது.

மழலை விளையாடும் அழகை ரசித்து கொண்டிருந்தான் பன்னிரண்டு வயது மிக்க சிறுவன்.

மெல்ல அந்த குழந்தையின் அருகில்  வந்து அமர்ந்தான். அந்த மழலை அச்சிறுவனை பார்த்து புன்னகைக்க அவனும் புன்னகைத்தான்.

குழந்தையிடம் வந்த அச்சிறுவன் , "பட்டு பெர் என்ன? " என்று கேட்டதும் , " தாதிதா " என்று தன் மழலை மொழியில் சொல்ல அச்சிறுவனுக்கு புரியவில்லை.

"பட்டு குட்டியோட பேர் என்ன? " என மறுபடியும் சிறுவன் கொஞ்சும் மொழியில் கேட்டதும் , " தாதிதா " என்று மழலை மொழியில் கூற அச்சிறுவன் யோசித்து விட்டு , " ஓ உங்க பெயர் ஷாஜிதாவா? " என்று கேட்க அந்த மழலை வாகாய் ஆம் என தலையசைத்து விட்டு " உங்க பேர் என்ன? " என்று மழலை ததும்ப கேட்க

அச்சிறுவன் சிரிப்போட குழந்தையை தன் மேல் அமர வைத்து  ," சமீர் "

குழந்தை , " தமீர் "  என்று அச்சிறுவனை காண அவன் சிரிப்போடு  , " தமீர் இல்ல சமீர் "

" தமீர் "

"ம்ஹும் ச...மீ...ர் "

"தமீர் "

எப்போதும் தன் பெயரை தவறாக யாரேனும் உச்சரித்தால் கோபம் கொள்ளும் அவன் இன்று இந்த மழலை மொழி கேட்டு ரசித்தான்.

"பட்டுகுட்டி என் பெரு ச....மீ...ர்" என விளக்க

"ச...மீ....ர்  " என மழலை மொழியிலும் குழந்தை கூறியதும் அவளை தூக்கி கன்னத்தில் முத்தமிட்டு ,  " நா அப்றம் வரேன் " என்றதும் குழந்தை அவனை பக்கத்தில் அழைத்து அவன் கன்னத்திலும் முத்தத்தை கொடுத்தது. அதை மகிழ்வோடு வாங்கி கொண்டு சென்றான்.

மறுபடியும் அதே கனவு வர , திடுக்கிட்டு எழுந்தமர்ந்தாள்.

ஷாஜிதா , ' என்ன இது இந்த கனவு திரும்ப வருது. யார் அந்த சமீர்? யாரா இருக்கும் ! ' என தன் மனதிலே போட்டு குழப்பி கொண்டிருந்தாள்.

பிறகு , தன் கடிகாரத்தில் நேரத்தை பார்க்க, மணி மூன்று என இருந்தது. அதன் பிறகு உறக்கம் வர மறுக்க , எழுந்து  தன் வேலைகளை முடித்துவிட்டு உழூ செய்து கொண்டு குர்ஆனை ஓத தொடங்கினாள்.

♥️ தொடரும் ♥️

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro