💞 18 💞
ஜாரா மற்றும் ஷாரூக் திருமணத்தின் பத்திரிக்கைகள் வந்துவிட, அதை உற்சாகமாக எடுத்து பார்த்து கொண்டிருந்தார்கள்.
ஜாராவும் நாதிராவும் பத்திரிகைகள் எல்லாம் பார்த்து கொண்டிருக்க, அம்ரீன் தன் படிக்கும் வேலையை பார்த்து கொண்டிருந்தாள்.
அம்ரீன், படிப்பதை பார்த்த ஜாராவும் நாதிராவும் அவளை சீண்டலாம் என்றெண்ணி அம்ரீன் அருகில் சென்றனர்.
அம்ரீன் அவர்கள் தன்னருகில் வருவதை உணர்ந்து அமைதியாக இருந்தாள்.
ஜாரா , " ஓய் " என திமிராக அழைத்தாள். ஜாராவின் திமிரான குரலுக்கு பதில் எதுவும் சொல்லாமல் தன் வேலையை செய்து கொண்டிருந்தாள்.
அம்ரீன் அமைதியாக இருப்பதை பார்த்த நாதிரா , " ஏய் அதான் கூப்பிடுறாங்கள? என்ன கேட்க மாட்டியா? " என்றதும் எரிச்சலுற்ற அம்ரீன் ,
"அம்ம்மா , கொசு வச்சி ஏத்தி வைன்னு எத்தனை தடவை சொல்ற? இப்ப பாரு கொசு தொல்லை தாங்க முடியலை! " என கத்தினாள்.
அம்ரீனின் குரல் கேட்டு பௌஸியா அங்கு வந்து , " ஏய் என்ன டி பிரச்சினை உனக்கு?" என முறைக்க ,
"கொசு தொல்லை தாங்கலை ம்மா " என பல்லை கடித்து கொண்டு ஜாரா மற்றும் நாதிரா இருவரையும் முறைத்து கொண்டே அம்ரீன் கூறியதும் இருவருக்கும் கோபம் வந்தது.
பௌஸியா , " கொசுவை அடித்து விட்டு படிக்கிற வேலையை பாரு "
அம்ரீன், "என்ன ம்மா பண்றது அது வெட்க கெட்ட கொசுவா இருக்கே, எவ்ளோ அடிச்ச்சாலும் அடிப்பட்டாலும் திரும்ப திரும்ப வருதே ! " என இருவரையும் முறைத்து கொண்டே கூறியதும் எரிச்சலுற்றார்கள் ஜாராவும் நாதிராவும்.
பௌஸியா , " என்ன அம்மு பண்றது. ஒருசிலதுங்க அப்டிதான் இருக்கு " என்றுவிட்டு நகர்ந்தார்.
ஜாரா மற்றும் நாதிரா இருவருக்கும் சினத்தை வரவழைக்க கோபத்தோடு தன் தாயை தேடி போனார்கள்.
ஜாரா , " அம்மா இங்க பாரும்மா இந்த அம்ரீனை, என்னையும் நாதிராவையும் வெட்கம் கெட்டவள் சொல்றா ம்மா என்னன்னு வந்து கேளு "
நாதிரா , " ஆமா ம்மா. அம்ரீனுக்கு கொழுப்பு அதிகமாகிடுச்சு. ரொம்ப திமிரா இருக்கா " என பங்கிற்கு சொல்லவும் ஹசினாவின் கோபம் அதிகமானது.
ஹசினா, கோபமாக அம்ரீன் இருக்கும் இடத்திற்கு வந்தார். ஹசினா வருவதை உணர்ந்த அம்ரீன் எதுவும் சொல்லாமல் பாவமாக முகத்தை வைத்தபடி எழுந்து நின்றாள்.
ஹசினா , "ஏய் எதுக்கு இவங்களை வெட்கம் கெட்டவள் சொன்ன? " என்று கோபமாக கேட்க
அம்ரீன் , "அய்யய்ய நான் எங்க பெரியம்மா இவைங்களை சொன்ன. நான் சொன்னது கொசுவை. "
ஜாரா , " ஏய் பொய் சொல்லாத! நீ எங்களை பாத்து தானே சொன்ன " என்று எகிற,
அம்ரீன் , " அல்லாஹ்! நான் எதுக்கு அப்டி சொல்ல போறேன். நீங்க அப்டி இருந்தா தானே நீங்க கவலைப்படனும். நீங்க தான் அப்டி இல்லையே அப்றம் எதுக்கு கவலைப்படுறீங்க? " என்று இரு புருவங்களையும் உயர்த்தி கேட்டதும் இருவரும் அமைதியாக பதில் பேசாமல் நின்றார்கள்.
ஹசினா எதுவும் பேசாமல் அமைதியாக சென்று விட்டார். ஜாராவும் நாதிராவும் காதில் புகை வராத குறையாக நின்றிருந்தார்கள்.
அவர்களின் நிலையை பார்த்த அம்ரீன். , தன் கைகளை வாய் மேல் வைத்து கொண்டு சிரித்து கொண்டிருந்தாள்.
அதை பார்த்து எரிச்சலுற்ற இருவரும் , " ஏய் " என கத்த
அம்ரீன் , " அட ச்சி வாயை மூடு. "
நாதிரா , " ஏய் என்ன கொழுப்பு அதிகமாகிடுச்சா? "
அம்ரீன் , " அப்டியே வச்சிக்கோயேன். அதுக்கு என்ன இப்ப? "
ஜாரா , " அதுக்கு என்னவா? உன் அக்காவை இந்த வீட்டை விட்டு துரத்தின மாதிரி உன்னயும் இந்த வீட்டை விட்டு துரத்துவோம் பாக்கிறியா? "
அம்ரீன் , " எங்க துரத்து பாக்கலாம். தைரியமான பொண்ணா இருந்தா துரத்து பாக்கலாம்."
நாதிரா , " ஏய் என்ன முடியாது நினைக்கிறியா? "
அம்ரீன், "அய்யய்ய இப்ப எதுக்கு எகிறுற? இப்ப நீங்க மட்டும் என்னை வீட்டை விட்டு அனுப்பிட்டிங்க வைங்க. நீங்க ஷாஜிதாவையும் என்னையும் பார்த்து பயந்துட்டிங்க அர்த்தம். நாங்க ஜெயித்து விட்டோம் அர்த்தம். " என சாதாரணமாக கூறியதும்
ஜாரா , " ஏய் அவள் இப்ப பிச்சை எடுத்துட்டு இருப்பா டி "
அம்ரீன் , "ஹாஹாஹாஹா "
நாதிரா , " ஏய் என்ன சிரிக்கிற? "
அம்ரீன் , " நீயே என் அக்கா போட்ட பிச்சையில தான் வாழ போற! நீ என் அக்காவை சொல்றீயா? " என்றதும் ஜாராவிற்கு கோபம் வந்து அடிக்க கை ஓங்க அதை லாவகமாக பிடித்து கையை முறுக்கினாள் , அம்ரீன்.
ஜாரா , " ஸ்ஸ்ஸ்ஸ் ஆஆஆஆ "
அம்ரீன், " என்ன வலிக்குதா? வலிக்கட்டும். என்ன நீ அடிச்சா வாங்கிட்டு போறதுக்கு நான் ஒன்னும் அப்பாவி கிடையாது. கையை ஒடச்சிடுவேன். இங்க நடந்தது நமக்குள்ள இருக்கனும் இதை பெரிய விஷயமாகின அப்றம் நடக்குற எதுக்கும் நா பொறுப்பில்ல சொல்லிட்டேன். பே " என கூறிவிட்டு விளக்கை அணைத்துவிட்டு கட்டிலில் படுத்தாள்.
ஜாரா மற்றும் நாதிராவுக்கு என்ன செய்வது என தெரியாமல் விழித்து கொண்டு இருந்தனர்.
ஹசினா, தன்னறைக்கு வந்தவர் அமைதியாக அங்கும் இங்கும் நடந்து கொண்டிருந்தார்.
ஷாஜிதாவின் உயிரை எப்படி பறிப்பது? என யோசித்து கொண்டிருந்தார். ஆனால் , எந்த யோசனையும் ஹசினாவுக்கு சிக்கவில்லை. சரி பொறுமையாக இருப்போம். அதுக்கான நேரம் வரும்போது அதை செய்வோம் என மனதில் நினைத்து கொண்டு அமைதியாக உறங்கினார்.
-----
சமீர், தன் வீட்டின் மாடியில் வானத்தை வெறித்து பார்த்து கொண்டிருந்தான். சமீரின் மனதெல்லாம் ஷாஜிதாவை தான் சுற்றி சுற்றி வந்தது.
சமீர் , ' ஷாஜியை எங்கோ பார்த்து இருக்கிறேன். ஆனா எங்க? அந்த முகம் அந்த பால் முகத்தை எங்கோ நா பார்த்திருக்கேன். எங்க? எப்பன்னு தான் நியாபகத்துக்கு கூட வர மாட்டேன்து ' என தன் மனதில் வானத்தை பார்த்து நினைத்து கொண்டிருந்தான்.
அகிலன் , சூரஜ் மற்றும் நஃபீஸ் மூவரும் சமீர் வீட்டிற்கு வந்தனர். வீட்டின் அழைப்பு மணி கேட்டதும் லத்தீப் கதவை திறந்தார்.
லத்தீப் , " என்னடா மணி பத்தாவது, இன்னும் தூங்காம இங்க வந்திருக்கிங்க? "
அகிலன் , " அது ஒன்னுமில்ல ப்பா சும்மா நம்ம வீட்டை சுத்தி பாத்துட்டு போலாம் வந்தோம் ப்பா "
அஸ்மா , " ம்ம்ம் ஆமாடா உங்க ப்பா பெரிய மைசூர் மஹாராஜா பேலஸ் கட்டி வச்சியிருக்காரு பாத்துட்டு போகுறதுக்கு வந்திருக்கிங்க. போங்கடா பிக்காலி பயலுங்க நீங்க எதுக்கு வந்திருக்கீங்க எனக்கு தெரியாதா? "
அகிலன் , " அச்சோ என் அம்மாவுக்கு என்ன கோபம் "
அஸ்மா , " ஓஓஓஓ இப்ப தான் அம்மான்னு தெரிஞ்சு தான்க்கும். "
சூரஜ் , "ம்மா நாங்க என்ன பண்றது? எங்க வேலை அப்டி ம்மா. சாப்பிடலாம் உட்காருவோம் போன் வரும் திரும்பி போய்டுவோம். "
அஸ்மா , " வேலை வேலை சொல்லி சொல்லியே மூனு பேரும் உங்க உடம்பை கெடுத்து வைச்சியிருக்கிங்க! பாரு எப்டி எளச்சி போய் இருக்கீங்க?"
நஃபீஸ் , "ம்மா நாங்க எப்பயும் போல தான் இருக்கோம். ரொம்ப நாள் கழிச்சு எங்களை பாக்கிறதால உங்களுக்கு அப்டி தெரியுது "
லத்தீப் , " சாப்பிடிங்களா? "
அகிலன் , "அதெல்லாம் முடிச்சாச்சு "
சூரஜ் , " அப்பா சமீர் எங்க? "
லத்தீப் , " மேல இருக்கான் டா. என்ன எதாவது பிரச்சினையா? "
நஃபீஸ் , " இல்ல ப்பா சும்மா பேசலாம் தான். "
அஸ்மா , "மேல மாடியில தான் இருக்கான் போங்க "
அகிலன் , " ம்ம்ம் சரிங்க ம்மா நாங்க போய் பாத்துக்கிறோம்! " என மூவரும் மாடிக்கு சென்றனர்.
மூவரும் மாடிக்கு வந்ததும் சமீரை பார்த்தனர். சமீர் , வானத்தையே வெறிக்க வெறிக்க பார்த்து கொண்டிருப்பதை பார்த்தவர்கள் ஒருவரையொருவர் பார்த்து கொண்டனர்.
அகிலன் , " டேய்! என்னடா இவன் வானத்தை இப்டி பாத்துட்டு இருக்கான்."
சூரஜ் , "தெரியலையே ! "
அகிலன் , "ஒருவேளை, அந்த நிலால பாட்டி வடை சுடுறது தெரியுதோ "
நஃபீஸ் , " மூஞ்சியை பாரு... அவனே அந்த பொண்ணோட நினைப்புல இருக்கான். "
சூரஜ் , "சரி சரி வா வந்த விஷயத்தை சொல்லலாம் " என்று மூவரும் சமீர் அருகில் சென்றனர்.
சமீர் , யாரோ வந்திருக்கிறார்கள் என்பதை உணர்ந்து திரும்பினான். தன் நண்பர்களை பார்த்த சமீர் , " என்ன டா இந்த நேரத்தில எதாவது முக்கியமான விஷயமா? "
நஃபீஸ் , " ம்ம்ம் ஆமா டா. "
சூரஜ் , " டேய்! இந்த ரெக்கார்டிங் கேளு " என அந்த ரெக்கார்டிங் போட்டான்.
அம்ரீன் , "ஏய் " என கத்த
அம்ரீன் , " அட ச்சி வாயை மூடு. "
நாதிரா , " ஏய் என்ன கொழுப்பு அதிகமாகிடுச்சா? "
அம்ரீன் , " அப்டியே வச்சிக்கோயேன். அதுக்கு என்ன இப்ப? "
ஜாரா , " அதுக்கு என்னவா? உன் அக்காவை இந்த வீட்டை விட்டு துரத்தின மாதிரி உன்னயும் இந்த வீட்டை விட்டு துரத்துவோம் பாக்கிறியா? "
அம்ரீன் , " எங்க துரத்து பாக்கலாம். தைரியமான பொண்ணா இருந்தா துரத்து பாக்கலாம்."
நாதிரா , " ஏய் என்ன முடியாது நினைக்கிறியா? "
அம்ரீன், "அய்யய்ய இப்ப எதுக்கு எகிறுற? இப்ப நீங்க மட்டும் என்னை வீட்டை விட்டு அனுப்பிட்டிங்க வைங்க. நீங்க ஷாஜிதாவையும் என்னையும் பார்த்து பயந்துட்டிங்க அர்த்தம். நாங்க ஜெயித்து விட்டோம் அர்த்தம். " என சாதாரணமாக கூறியதும்
ஜாரா , " ஏய் அவள் இப்ப பிச்சை எடுத்துட்டு இருப்பா டி "
அம்ரீன் , "ஹாஹாஹாஹா "
நாதிரா , " ஏய் என்ன சிரிக்கிற? "
அம்ரீன் , " நீயே என் அக்கா போட்ட பிச்சையில தான் வாழ போற! நீ என் அக்காவை சொல்றீயா? " என்றதும் ஜாராவிற்கு கோபம் வந்து அடிக்க கை ஓங்க அதை லாவகமாக பிடித்து கையை முறுக்கினாள் , அம்ரீன்.
ஜாரா , " ஸ்ஸ்ஸ்ஸ் ஆஆஆஆ "
அம்ரீன், " என்ன வலிக்குதா? வலிக்கட்டும். என்ன நீ அடிச்சா வாங்கிட்டு போறதுக்கு நான் ஒன்னும் அப்பாவி கிடையாது. கையை ஒடச்சிடுவேன். இங்க நடந்தது நமக்குள்ள இருக்கனும் இதை பெரிய விஷயமாகின அப்றம் நடக்குற எதுக்கும் நா பொறுப்பில்ல சொல்லிட்டேன். பே " என கூறிவிட்டு விளக்கை அணைத்துவிட்டு கட்டிலில் படுத்தாள்.
இந்த ரெக்கார்டிங் கேட்டதும் சமீர் தீவிரமாக யோசிக்க தொடங்கினான்.
சூரஜ் , "மச்சி இதை வைச்சு எதாவது அவங்களை பண்ண முடியுமா? "
நஃபீஸ் , " ம்ம்ம் பண்ணலாம் டா ஆனா இதை அவங்க பொய் எடிட்டிங் சொன்னா மத்தவங்க நம்பிடுவாங்க. ஏன்னா இப்ப வீட்டுல எல்லாரும் இவங்களோட கட்டுப்பாட்டுல தானா இருக்காங்க."
அகிலன் , " ஆமாடா, நாம ஏன் அம்ரீன் கிட்ட வீடியோ எடுத்து அனுப்ப சொன்னா என்ன? "
சமீர் , "டேய்! அவனை ஒங்கி ஒரு அடி அடியேன் "
அகிலன் , "என்ன டா? "
நஃபீஸ் , " பின்ன என்ன டா? அந்த பொண்ணு இவ்ளோ உதவி பண்ணதே பெருசு. அந்த பிள்ளைக்கு எதாவது பிரச்சனை வந்துச்சுனா என்ன பண்ணுவ? அவளே கொலைக்கார கூட்டத்துல மாட்டிட்டு இருக்கா. ரொம்ப கவனமா இருக்கனும். அதெல்லாம் வேண்டாம் "
சமீர் , " எல்லாமே ரெக்கார்ட் பண்ணி பென் டிரைவ்ல சேவ் பண்ணி வை. அவங்களை யாரையும் சும்மா விட போறதில்லை "என்ற போது சமீரின் முகம் கோபத்தில் இறுகியது.
மூவருக்கும் மனதில் கலக்கத்தை ஏற்படுத்தியது.
சமீர் , " சரி நீங்க கிளம்புங்க! நாம காலையில பாக்கலாம் " என்றதும் அதற்கு மேல் என்ன பேசினாலும் பதில் பேச மாட்டான் என்பதை அறிந்த மூவரும் அமைதியாக நகர்ந்தனர்.
அகிலன் , " டேய் சமீர் அந்த பொண்ணை ரொம்ப நேசிக்கிறான் டா "
நஃபீஸ் , " ம்ம்ம், ஆனா அந்த பொண்ணு இவனை ஏத்துக்கனும் "
சூரஜ் , " கஷ்டம் தான் டா. ஏன்னா அந்த பொண்ணு ஒருத்தனால ஏமாத்தபடலை. ஒரு குடும்பமே அவளை ஏமாத்தி இருக்கு. அந்த வலி அவ்ளோ சீக்கிரம் அந்த பொண்ணை ஏத்துக்க விடாது. ஆனா பொறுமையா இருந்தானா ஏத்துப்பாள். எதுவும் நம்ம கையில இல்ல. வாங்க கிளம்பலாம் "
அதன்பின் மூவரும் தங்கள் வீட்டிற்கு புறப்பட்டனர்.
-----
ஷாஜிதா , 'இந்த சமீர் சாரோட குரலை நான் எங்கேயோ கேட்டு இருக்கேன். அதேமாதிரி இந்த பெயரை எங்கேயோ கேட்டு இருக்கேன், எங்க? ' என தன் எழுத்துக்கோலை கையில் வைத்து ஆட்டிய படி யோசித்து கொண்டிருந்தாள்.
எவ்ளோ யோசித்தும் ஷாஜிதாவிற்கு எதுவும் நினைவிற்கு வரவில்லை. அமைதியாக உறங்கினாள்.
அந்த பெரிய வீட்டின் தோட்டத்தில் மூன்று வயது பெண் குழந்தை அங்கிருந்த மணலை வைத்து விளையாடி கொண்டிருந்தது.
மழலை விளையாடும் அழகை ரசித்து கொண்டிருந்தான் பன்னிரண்டு வயது மிக்க சிறுவன்.
மெல்ல அந்த குழந்தையின் அருகில் வந்து அமர்ந்தான். அந்த மழலை அச்சிறுவனை பார்த்து புன்னகைக்க அவனும் புன்னகைத்தான்.
குழந்தையிடம் வந்த அச்சிறுவன் , "பட்டு பெர் என்ன? " என்று கேட்டதும் , " தாதிதா " என்று தன் மழலை மொழியில் சொல்ல அச்சிறுவனுக்கு புரியவில்லை.
"பட்டு குட்டியோட பேர் என்ன? " என மறுபடியும் சிறுவன் கொஞ்சும் மொழியில் கேட்டதும் , " தாதிதா " என்று மழலை மொழியில் கூற அச்சிறுவன் யோசித்து விட்டு , " ஓ உங்க பெயர் ஷாஜிதாவா? " என்று கேட்க அந்த மழலை வாகாய் ஆம் என தலையசைத்து விட்டு " உங்க பேர் என்ன? " என்று மழலை ததும்ப கேட்க
அச்சிறுவன் சிரிப்போட குழந்தையை தன் மேல் அமர வைத்து ," சமீர் "
குழந்தை , " தமீர் " என்று அச்சிறுவனை காண அவன் சிரிப்போடு , " தமீர் இல்ல சமீர் "
" தமீர் "
"ம்ஹும் ச...மீ...ர் "
"தமீர் "
எப்போதும் தன் பெயரை தவறாக யாரேனும் உச்சரித்தால் கோபம் கொள்ளும் அவன் இன்று இந்த மழலை மொழி கேட்டு ரசித்தான்.
"பட்டுகுட்டி என் பெரு ச....மீ...ர்" என விளக்க
"ச...மீ....ர் " என மழலை மொழியிலும் குழந்தை கூறியதும் அவளை தூக்கி கன்னத்தில் முத்தமிட்டு , " நா அப்றம் வரேன் " என்றதும் குழந்தை அவனை பக்கத்தில் அழைத்து அவன் கன்னத்திலும் முத்தத்தை கொடுத்தது. அதை மகிழ்வோடு வாங்கி கொண்டு சென்றான்.
என்றோ எப்போதோ நடந்த நிகழ்வு இன்று ஷாஜிதாவின் கனவில் வர, திடுக்கிட்டு எழுந்தமர்ந்தாள். ஆனால், ஷாஜிதாவிற்கு அது தன் வாழ்வில் நடந்ததா? இல்லையா? என்றும் கூட நினைவிற்கு வரவில்லை.
இந்த கனவை நினைத்து மனதில் குழப்பி கொண்டிருந்தாள், அப்பேதை.
♥️ தொடரும் ♥️
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro