💞 12 💞
ஷாரூக், ஜாராவை திருமணம் செய்ய சம்மதம் கூறியவுடன் அனைவரும் மகிழ்ந்தனர்.
ஹசன் , " எப்ப நிச்சயம் வச்சிக்கலாம்? " என கேட்க
சல்மா , "வெள்ளிக்கிழமை வச்சிக்கலாம் ண்ணா! நிக்காஹ் ஜாராவோட படிப்பு முடிச்சதும் வச்சிக்கலாம் " என சொல்ல
உசைன் , "அல்ஹம்துலில்லாஹ் மா. சந்தோஷம். எவ்ளோ நகை போடனும் உன் மருமகளுக்கு ? " என கேட்க
ஷாரூக் , "அதெல்லாம் எதுவும் வேண்டாம் மாமா. மஹர் கொடுத்து அழைச்சிட்டு போறது தான் வழக்கம். அப்டியே பண்ணிக்கலாம் " என்று மறுத்துவிட்டான்.
கல்லூரியில் முக்கியமான ப்ராஜெக்ட் ஒப்படைக்க வேண்டும் என்று காலையில் சென்ற, ஃபிர்தவுஸ் , ஷாரூகின் தங்கை இப்போது தான் வந்தாள்.
இங்கு நடப்பதை கவனித்த ஃபிர்தவுஸ் அதிர்ந்தாள். உடனே, அஜ்மலை தனியே அழைத்து விசாரிக்க , அஜ்மல் நடந்ததை கூறியதும் அஜ்மலை அறைந்து , "த்து... நீயெல்லாம் ஒரு அண்ணன்.. ச்சி. " என விடுவிடுவென உள்ளே சென்றாள், ஃபிர்தவுஸ்.
ஃபிர்தவுஸ் , "நிறுத்துங்க " என கத்தினாள்.
ஃபிர்தவுஸின் குரலை கேட்டு அனைவரும் அவளை பார்த்தனர். சல்மா , "எதுக்கு டி இப்டி கத்துற? " என அதட்ட
ஃபிர்தவுஸ் , "நீ பண்றது உனக்கே அநியாயமா தெரியலையா ம்மா? "
சல்மா , " என்ன அநியாயம்? "
ஃபிர்தவுஸ் , " இந்த கேடுகெட்டவ நம்ம வீட்டுக்கு மருமகளா? " என ஜாராவை கைநீட்டி கேட்டவுடன் சல்மா ஃபிர்தவுஸின் கன்னத்தில் அறைந்தார்.
ஜாராவிற்கு கோபம் வந்தது. "இரு கல்யாணத்துக்கு அப்றம் உனக்கு கச்சேரி வச்சிக்கிறேன். " என மனதில் வன்மத்தை கக்கினாள்.
ஃபிர்தவுஸ் , " எவ்ளோ வேணாலும் அடி. ஆனா ஒன்னு இவள் மட்டும் நம்ம வீட்டுக்கு மருமகளா வந்தா, நம்ம வீடு கூடிய சீக்கிரம் சுடுகாடா தான் மாறும் சொல்லிட்டேன். " என்றதும்
சல்மா , " ஏய் என்ன வாய் நீளுது? " என முறைக்க
ஃபிர்தவுஸ் , "தப்பை தட்டி கேட்டா வாய் நீளம்னா அப்டியே இருந்துட்டு போகட்டும்! ஏம்மா உனக்கு மனசாட்சி என்ற ஒன்றே இல்லையா? எப்டி மா ஷாஜி மேல போய் இப்டி அபாண்டமா பழிய போட முடிஞ்சது? நீங்க யார் பேசுறதும் நா கேட்க விரும்பலை. " என்று ஷாரூக் அருகே சென்று
"உன்னலாம் அண்ணன் சொல்லிக்கவே அருவருப்பா இருக்கு. ச்சி! பேசி எந்த பயனும் இல்ல... இனி என்னோட மொகத்துல முழிக்காத! " என கூறிவிட்டு பௌஸியாவின் அருகே சென்றாள்.
"ஏன் அத்த இதுவே ஷாஜிதா உங்க வயித்துல பொறந்திருந்தா எல்லாரையும் எதிர்த்து பேசி இருப்பிங்கள? ம்ஹ்ம் பாவம் பாட்டி உயிரோட இருந்திருந்தா இந்த நிலைமை அவளுக்கு வந்திருக்காது. தனியா எங்க போய் கஷ்டப்படுறாளோ? " என கண்ணீரோடு வெளியே சென்று நின்றிருந்தாள்.
சல்மா , " அண்ணா அவள் கெடக்கிறா விடு! வெள்ளிக்கிழமை நிச்சயத்துக்கு அன்னிக்கி பாப்போம் " என தன் குடும்பத்தாரோடு விடைபெற்று சென்றார்.
சமையல் செய்ய எந்த பொருட்களையும் ஷாஜிதா வாங்கவில்லை. அதனால் விடியற்காலையில் நான்கு மணிக்கெல்லாம் எழுந்து , பல் துலக்கி கொண்டு , தான் வாங்கி வந்த ஆரஞ்சு பழத்தை ஒன்னை மட்டும் சாப்பிட்டு விட்டு நோன்பை வைத்துக்கொண்டாள்.
மணி ஐந்தாக , காலை தொழுகை தொழுது விட்டு கல்லூரிக்கு கிளம்பினாள்.
தன் வகுப்பறையில், அமைதியாக அமர்ந்திருந்தாள் ஷாஜிதா. மனம் நேற்றைய நாளை சிந்தித்து கொண்டிருந்தது.
அதை யார் செய்திருக்க வேண்டும்? என யோசித்த, ஷாஜிதாவிற்கு அப்போது தான் உண்மை புரிந்தது. ஷாரூகின் வாயாலே ஜாராவை தான் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்பதே அவர்களின் திட்டம். அது அப்படியே நடந்தேறியது நேற்று.
ஷாஜிதா , "உண்மை காதல்! ம்ஹ்ம் மண்ணாகட்டி காதல்! உண்மையா காதலிச்சு இருந்தா , சந்தேகத்துக்கு அங்க இடமே இருந்திருக்காது. விடு ஷாஜிமா... அவன் கொடுத்து வச்சது அவ்ளோ தான் " என மனதில் தனக்குள்ளேயே பேசி கொண்டாள்.
மாணவர்களும் வர தொடங்கினார்கள். அஜ்மல் , ஷாஜிதாவின் முகத்தை கூட பார்க்க விரும்பாது அமர்ந்திருந்தான்.
ஷாஜிதா அதை ஒரு பொருட்டாகவே எடுத்துக் கொள்ளவில்லை. காரணம் , செய்யாத தவறுக்காக யாரிடமும் கெஞ்ச இஷ்டமில்லை. அதனால் அமைதியாக இருந்துவிட்டாள்.
பாடங்கள் தொடங்கியது. அதை கவனமாக குறிப்பெடுத்து கொண்டாள். அன்றைய தினம் ஏதோபோல் சென்றது.
கல்லூரி முடிய, நேராக விடுதிக்கு சென்று தொழுதுவிட்டு, நூலகம் சென்றாள்.
நூலகத்தில் தன்னையும் ஒரு நபராக இணைத்து கொண்டு, தமிழ் இலக்கிய நூல்களை வாசிக்க தொடங்கினாள்.
அதிலிருந்து தமக்கு தேவையான குறிப்புகளையும் எடுத்து கொண்டாள். நேரம் தெரியாமல் வாசித்து கொண்டு இருந்தாள். ஐந்து மணி போல் விடுதிக்கு கிளம்பினாள்.
விடுதிக்கு வந்தவுடன் அறையை பெருக்கி விட்டு, தொழுதாள். ஆறரை மணிபோல் தன் நோன்பை பேரீத்த பழத்தை கொண்டு திறந்தாள்.
இரவும் அந்த பழத்தை உண்டு விட்டு உறங்கினாள். நாட்களும் இப்படியே நகர்ந்தது.
ஜாரா - ஷாரூகின் நிச்சயமும் நன்றாக நடந்தேறியது. ஃபிர்தவுஸ், அன்றிலிருந்து தன் வீட்டில் இருப்பவர்களிடம் பேச வில்லை.
யாசருக்கு அழைத்து தன்னை விரைவாக திருமணம் செய்து கொள்ள கூற அவனும் அதற்கு சம்மதம் தெரிவித்தான்.
ஃபிர்தவுஸ் - யாசர் இருவரின் நிச்சயமும் நடந்தேற, அடுத்த வாரமே தங்களின் நிக்காஹ் நடக்க வேண்டும் என்று உறுதியாக கூறினார்கள் இருவரும். இருவரின் பிடிவாதத்தாலும் இரு வீட்டாரும் சம்மதித்தனர்.
அடுத்த வாரம். இருவரின் திருமணமும் நன்முறையில் நடந்தேறியது. ஷாஜிதாவை அழைக்க மனம் துடித்தாலும், எங்கிருந்தாலும் அவள் நன்மையை நாடி ஃபிர்தவுஸ் ஷாஜிதாவை அழைக்கவில்லை. ஒவ்வொரு தொழுகையிலும் ஷாஜிதாவிற்காக துஆ கேட்டாள்.
யாசருக்கு, ஷாரூகின் செயல் பிடிக்கவில்லை. ஷாரூகின் முகத்தை கூட அவன் பார்க்க விரும்பாமல் அங்கிருந்து வேலையை விட்டுவிட்டு வேறு நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்துவிட்டான்.
காலையில் எழுந்து நோன்பல வைத்து கொண்டு கல்லூரி சென்று விடுவாள். மதியம் , நூலகத்திற்கு சென்று இலக்கிய நூல்கள், வரலாற்று புதினங்கள் , கணக்கு சம்மதமான நூல்கள் என பலவிதமான நூல்களை படித்து தன் அறிவை வளர்த்து கொண்டாள். ஐந்து மணிபோல் விடுதிக்கு வந்து நோன்பை திறந்து கொள்வாள்.
தன் தாத்தா பாட்டி இருவரும் தனக்காக சேமித்த பணத்தை எடுத்து செலவு செய்ய மனமில்லை , ரொம்ப ரொம்ப அவசியமான தேவைகளான நாப்கின் வாங்குவதற்கும் பழங்கள் மற்றும் பச்சையாக சாப்பிட கூடிய கேரட் மற்றும் வெண்டைக்காய் வாங்கி கொள்வாள் ஷாஜிதா.
அதுவே அவளது உணவாக இருந்தது. தன்னை பற்றி கேட்பவர்களுக்கு ஒரு புன்னகையை மட்டுமே பதிலாக கொடுப்பாள். ஒருசில நேரம் முறைப்பும் பதிலாக இருக்கும்.
துணிமணி என்றால் ஐந்து தான் அதையே மாற்றி மாற்றி உடுத்தி கொண்டாள். புது துணி வாங்க கூட ஷாஜிதாவின் மனம் இடம் கொடுக்கவில்லை.
ஷாஜிதாவின் நம்பிக்கை தொழுகையும் அதில் அல்லாஹ்விடம் தான் கேட்கும் துஆவுமே. என்றாவது ஒருநாள் தன் வாழ்க்கை மாறும் என்ற நம்பிக்கையில் வாழ்ந்து கொண்டிருக்கிறாள்.
இப்படியே ஷாஜிதாவின் வாழ்க்கை நகர்ந்து கொண்டிருந்தது. செமஸ்டர் பரீட்சை இன்னும் ஒரு வாரத்தில் தொடங்க இருப்பதால் , அதற்காக தன்னை இன்னும் அதிகமாக தன்னை தயார்படுத்தி கொண்டிருந்தாள்.
நாட்கள் நெருங்கியது , இன்று செமஸ்டர் பரீட்சை தொடங்க, அதை வெற்றிகரமாக அனைத்து பாடங்களையும் நன்முறையில் எழுதி முடித்தாள்.
அஜ்மல் ஷாஜிதாவின் பிரிவின் காரணத்தை அறிந்த கொண்ட மொத்த வகுப்பும் அஜ்மலை கடுமையாக கண்டித்தனர்.
இன்னும் ஒரு செமஸ்டர் தான் கல்லூரி வாழ்க்கை முடிய, அடுத்து என்ன? என்று யோசித்த ஷாஜிதாவிற்கு மனமெல்லாம் வலித்தது. வேலைக்கு செல்ல முடிவெடுத்தாள்.
தன்னுடைய பாதி நாட்கள், கல்லூரியிலும் நூலகத்திலும் கழித்து வந்தாள், ஷாஜிதா.
அன்று செமஸ்டர் ரிசல்ட் வர, தன் தேர்வு முடிவுகளை ஆர்வமாக பார்த்தாள். மொத்தமாக 80% பெற்று தேர்ச்சி பெற்றிருந்தாள் ஷாஜிதா.
ஃபிர்தவுஸ் மற்றும் யாசர் இருவரும் ஷாஜிதாவை காண கல்லூரிக்கு வந்திருந்தனர். கேண்டீனில் மூவரும் அமர்ந்திருந்தனர்.
ஷாஜிதா , " எப்டி இருக்கீங்க? "
ஃபிர்தவுஸ் , " அல்ஹம்துலில்லாஹ் நல்லா இருக்கோம். எனக்கு நிக்காஹ் முடிஞ்சிடுச்சு " என்றதும்
ஷாஜிதா அதிர்ச்சியாக , "எப்ப? " என கேட்க
ஃபிர்தவுஸ் , " போன மாசம் தான். உன் மேல பழியை சுமத்திட்டாங்க அதுக்கப்புறம் அந்த வீட்டில இருக்க எனக்கு பிடிக்கலை. அதான் இவர்கிட்ட சொல்லி சீக்கிரமா கல்யாணம் பண்ணிகிட்டோம். ஜாராவை கல்யாணம் பண்ணிக்க ஷாரூக் சம்மதிச்சிட்டான்" என்றதும்
ஷாஜிதா , "அவங்க திட்டமே அதானே ஃபிர்தவுஸ். விடு நடந்து முடிஞ்சதை பத்தி பேசி எந்த பயனும் இல்ல " என்றவுடன்
யாசர் , " ஆமா இப்ப நீங்க எங்க இருக்கிங்க? "
ஷாஜிதா , "ஹாஸ்டல் ! சரி நீங்க ரெண்டு பேரும் டீ சாப்பிடுங்க! " என இரண்டு தேநீரை வாங்கி அவர்களிடம் கொடுத்தாள்.
யாசர் , " உங்களுக்கு? "
ஷாஜிதா , " நா....நோன்பு " என்றவுடன்
ஃபிர்தவுஸ் , " ஏன் ஷாஜி தீடிருன்னு? "
ஷாஜிதா , சிரித்து கொண்டே , " சும்மா தான் " என்றாள்.
ஃபிர்தவுஸ் , "பொய் சொல்லாத! " என்றவுடன் ஷாஜிதா உண்மையை கூறியவுடன் ஃபிர்தவுஸ் கண்ணிலிருந்து கண்ணீர் வழிந்தது.
யாசர் சற்றும் யோசிக்காமல் , " நீங்க எங்க கூட வந்திடுங்க. நாம ஒன்னா இருக்கலாம் " என சொன்னதும்
ஷாஜிதா , " அல்ஹம்துலில்லாஹ் நன்றி ண்ணா, ஏற்கனவே தாத்தா காசுல சாப்பிட்டுட்டு இருக்கேன். அதுவே எனக்கு சங்கடமா இருக்கு! இதுலை இதுவேறயா ? வேணா ண்ணா! என்னால எல்லாருக்கும் பிரச்சினை தான். நா தனியாவே இருந்துக்கிற "
ஃபிர்தவுஸ் , " ஏன் ஷாஜி இப்டி பண்ற? எங்க கூட வந்துரு! நாம ஒன்னா இருக்கலாம் " என சொல்ல
ஷாஜிதா , " இல்ல ஃபிர்தவுஸ், இப்ப இந்த விஷயம் ஜாராவுக்கு அவ அம்மாக்கு தெரிஞ்சா என்ன எதுவும் பண்ண மாட்டா! ஏன்னா நா எதுக்கும் பயப்பட மாட்டேன் அவளுக்கு நல்லாவே தெரியும். அதனால உன் வாழ்க்கையை கையில எடுத்து உனக்கு சிக்கலை ஏற்படுத்துவா! அதேமாதிரி என்னை பாக்க அடிக்கடி வராத! எப்பவாது வா! அதுதான் நல்லது. அவங்களுக்கு தெரிஞ்சா பிரச்சனை பண்ணுவாங்க. அதனால தான் சொல்றேன். உங்க துஆ எனக்கு போதுமானது. "
ஃபிர்தவுஸ் கண்ணீரோடு , " சரி ஷாஜிதா பத்திரமா இரு! " என்றவுடன்
ஷாஜிதா , " சரி ஃபிர்தவுஸ் "
யாசர் , " ஷாஜிதா, பிடி இந்த பணத்தை வச்சிக்கோ மா " என்றவுடன் ஷாஜிதா விடாப்பிடியாக வாங்க மறுத்துவிட்டாள். ஆனால் யாசர் ஷாஜிதா கையில் வலுக்கட்டாயமாக திணித்து விட்டு இருவரும் விடைபெற்று சென்றனர்.
யாசர் , " உன் அண்ணனை செருப்பால அடிச்சாலும் பத்தாது டி "
ஃபிர்தவுஸ் , " விடுங்க! அவன் ஜாராவை கல்யாணம் பண்ணிட்டு நரக வாழ்க்கையை தான் வாழப்போறான். நாம எதுவும் பண்ண வேண்டாம் " என அலட்சிய சிரிப்பை சிந்தினாள்.
யாசர் , "இந்த பொண்ணை நாம கண்காணிச்சி கிட்டே இருக்கனும்.. " என கூறிவிட்டு தன் வீட்டை நோக்கி நகர்ந்தான்.
♥️ தொடரும் ♥️
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro