💞 11 💞
ஜாரா அந்த காணொளியை காட்டியதும் , ஷாஜிதா அதிர்ந்து அப்படியே நின்றிருந்தாள்.
அதை பார்த்த அத்தனை நபரும் உண்மை என்று நம்பும் அளவிற்கு இருந்தது அக்காணொளி.
கீழே இருந்த அத்தனை சொந்தமும் மேலே வந்தது. அவர்களும் இந்த காணொளியை கண்டு அதிர்ந்தார்கள்.
ஹசினா , சல்மாவை நோக்கி , "என்னமோ சொன்ன இவளை என் வீட்டு மருமகளாக்க போறேன். இவள் உன் வீட்டுக்கு மருமகளா வந்தா யாரையுமே உயிரோட இருக்க விட மாட்டாள். இந்த கொலைகாரியவா உன் பையனுக்கு கல்யாணம் பண்ணி அழகு பாக்க போற? " என ஏத்திவிட்டார்.
சல்மா கோபமாக , " ஏய்! எதுக்குடி இப்டி பண்ண? சொல்லு ! நா என்னடி பாவம் பண்ண உனக்கு சொல்லு? " என ஷாஜிதாவை பார்த்து கேட்க , ஷாஜிதாவிற்கு இதெல்லாம் எப்போது நடந்தது என யோசித்து கொண்டிருந்தாள்.
சல்மா , " ஏய் ஷாஜிதா கேட்கிறேன்ல சொல்லு. "என கோபமாக கத்திய பிறகு தான் ஷாஜிதா நிகழ்காலத்திற்கு வந்தாள்.
ஷாஜிதா , " இல்ல நா பண்ணலை ! " என உறுதியாக சொல்லிவிட்டு ஷாரூக் அருகில் சென்று,
"ஷா....ஷாரூக் , இவங்க எல்லாரும் பொய் சொல்றாங்க நம்பாத! நீயும் இத நம்புறியா " என கேட்டவுடன்
ஷாரூகின் கோபம் ஷாஜிதாவின் கன்னத்தில் அடியாக இருந்தது. அடித்ததில் சுருண்டு கீழே விழுந்த ஷாஜிதாவை பார்த்து , " நா தான் சொன்னல நான் உன்ன வந்து பொண்ணு கேட்டு என் மனைவியா உன்ன அழைச்சிட்டு போறன்னு! அப்றம் எதுக்கு இப்டி பண்ண? " என கோபமாக கேட்ட ஷாரூகை அதிர்ச்சியாக பார்த்தாள்.
சல்மா , "ஏன் இப்டி பண்ண சொல்லு? " என கோபமாக கேட்க
ஷாஜிதா , "இல்ல இல்லவே இல்ல நா இத பண்ணல. இந்த மாதிரி செயல் பண்றளவுக்கு நான் மோசமானவ இல்ல. என் பாட்டி என்னை அப்டி வளக்கவும் இல்ல! " என கதறினாள்.
தன் சித்தப்பாவின் அருகில் சென்று , " சித்தப்பா நீங்களாது நா சொல்றதை நம்புங்க! நா இதை பண்ணலை. இன்னிக்கி முழுக்க முழுக்க கீழ தான் இருந்தேன் " என தன் சித்தப்பாவின் அருகில் சென்று கெஞ்சினாள்.
வாஹித் , " எப்டிம்மா நம்பாம இருக்க சொல்ற? அப்ப அந்த வீடியோ பொய்ன்னு சொல்றியா? " என்று கேட்டவுடன், தன்னிடமிருந்த நம்பிக்கையை இழந்தாள் , ஷாஜிதா.
அடுத்து அஜ்மல் அருகே செல்ல , அஜ்மல் ஷாஜிதாவின் முகத்தை கூட காணமல் அங்கிருந்து நகர்ந்து விட்டான். ஷாஜிதாவிற்கு இருந்த கொஞ்ச நஞ்ச நம்பிக்கையையும் போனது.
ஷாஜிதா , ஒரு விரக்தியான சிரிப்பை உதிர்த்து விட்டு , அனைவரையும் நோக்கி , "நா சொல்றது உண்மை. இதை நா பண்ணலை. " என கதறினாள்.
தன் மேல் தவறில்லை என்று எவ்வளவோ கெஞ்சினாள், கதறினாள் ஆனால் அதை நம்ப யாரும் தயாராக இல்லை. அப்போது ," போதும் நிறுத்துறீயா உன் நாடகத்தை! " என ஷாரூக் கத்த, அங்கு பெரும் அமைதி நிலவியது.
ஷாரூக் , "என்னை அடைய நீ வேற என்ன பண்ணியிருந்தாலும் ஏத்திருப்பேன். ஆனா! எப்ப என் அம்மாவை கொல்லனும் நீ நினைச்சியோ! அப்பவே நீ எனக்கு வேணாம் முடிவு பண்ணிட்டேன். இனி ஜென்மத்துக்கு என் முகத்துல முழிச்சிடாத! , என் அம்மா யாரை சொல்றாங்களோ அவங்களை தான் நான் நிக்காஹ் பண்ணிப்பேன் " என கோபமாக கூறினாள்.
இதை கேட்டதும் ஷாஜிதா ," போதும் ஷாரூக் , விட்டா ரொம்பதான் பேசுற? உன்ன நேசிச்சது உண்மை தான். அதுக்காக ஒரு உயிரை கொல்றளவுக்கு நா மோசமானவளும் இல்ல கோழையும் கிடையாது." என ஜாராவையும் ஹசினாவையும் முறைத்தவாறு அழுத்தமாக கூறிவிட்டு. , "நான் சின்ன வயசுல ஒரு தப்பு பண்ண அப்ப தாத்தா என்கிட்ட நமக்கு ஒரு பொருள் வேணும் அதுக்காக நேருக்கு நேரா தான் மோதனுமே தவிர முதுகுல குத்த கூடாது. அபாண்டமா மத்தவங்க மேல பழியை போட்டு நாம அடைய கூடாது. அப்டி அடைய நெனச்சோம்னா நிலைக்காது. எப்டி வந்துச்சோ அப்டியே போய்டும்ன்னு ! சொல்லி கொடுத்திருக்காரு. இப்பன்னு எப்பவும் எனக்கு அந்த புத்தி கிடையாது " என ஷாரூகை முறைத்தாள்.
ஹசன் , "ஏய் உன் வீர வசனமெல்லாம் போதும் இனி உனக்கு இந்த வீட்டுல இடம் கிடையாது. வெளியே போ " என ஷாஜிதாவின் தலையை பிடித்து இழுத்து கொண்டு ரோட்டில் விட்டார்.
ஷாஜிதா , " ஒரு நிமிஷம் என்னோட துணிமணி எல்லாம் எடுத்துட்டு போய்டுறேன் " என கெஞ்ச ஹசன் அனுமதியளித்தார்.
ஷாஜிதா , தன்னுடைய துணிகள் படிக்கும் புத்தகங்கள் , தன் தாத்தா தனக்கு கொடுத்த குர்ஆன் மற்றும் தொழுகையின் விரிப்பை எடுத்து கொண்டு அந்த வீட்டை விட்டு வெளியேறினாள்.
தன் அக்காவுடன் தானும் செல்ல போகிறேன் என துணிந்து வெளியே வந்த அம்ரீனையும் போக விடாமல் தடுத்து விட்டார் , ஹசன்.
அம்ரீன் அழுகையுடன். , "அம்மா சொல்லு மா அக்கா எந்த தப்பும் பண்ணலை மா. அக்கா ரொம்ப நல்லவள் மா. போக வேண்டாம் சொல்லு மா! எனக்கு அக்கா வேணும் மா! "என தன் அன்னையை அணைத்து கொண்டு கதறினாள்.
பௌஸியா, தன் கையாலாகாத தனத்தை நினைத்து தன்னையோ நொந்து கொண்டாள். பெண் பிள்ளை தனியாக எப்படி? எதாவது ஆகிவிட்டால்? என்ன செய்வது? என்று நினைக்கும் போதே பௌஸியாவின் மனம் பதறியது.
தங்களின் எண்ணம் நிறைவேறிய சந்தோஷத்தில் இருந்தார்கள் ,ஹசினா மற்றும் அவள் மகள்கள்.
ஷாஜிதாவிற்கு என்ன செய்வதென்றே புரியவில்லை. மெல்ல தன் உடைமைகளை எடுத்து கொண்டு , அந்த இடத்தின் பிரதான சாலைக்கு நடந்தே வந்தாள்.
நடந்ததை நினைத்து வருந்தி எந்தவொரு பயனுமில்லை, இனி எதற்கும் கண்ணீர் சிந்தவே கூடாதென முடிவெடுத்து கொண்டாள், ஷாஜிதா.
அடுத்து என்ன என்று யோசிக்க தொடங்கினாள், ஷாஜிதா. அப்போது , " பாட்டி தன்னிடம் உனக்காக தாத்தாவும் நானும் சேர்ந்து நாப்பது லட்சம் வங்கில போட்டு இருக்கோம் டா. அது உன் பணம் " என்று கூறி அந்த வங்கியின் இருப்பு கணக்கீடு புத்தகத்தை தன்னிடம் கொடுத்ததும் , அதை தாம் பெட்டியில் வைத்தது நினைவே வர , உடனே தன் பெட்டியை திறந்து பார்த்தாள் , ஷாஜிதா.
அதில் அந்த பொருள் இருக்க , அல்லாஹ்விற்கு நன்றி கூறிவிட்டு ஒரு ஆட்டோவை பிடித்து கொண்டு , அந்த வங்கியிற்கு சென்றாள்.
வங்கி சென்று , தனக்கு தேவையான இருபதாயிரம் எடுத்துக்கொண்டு தன் கல்லூரி அருகில் அமைந்திருக்கும் பெண்கள் விடுதி ஒன்றுக்கு சென்றாள்.
அதில் , கல்லூரி மாணவியர்களுக்காக மட்டும் கட்டப்பட்ட விடுதி அல்ல. வேலை செய்பவர்களுக்காக கட்டப்பட்ட விடுதியும் கூட.
அங்கு தானே சமைத்து சாப்பிட்டு கொள்ள வேண்டும். ஷாஜிதாவிற்கு , தாத்தா தன் பெயரில் வைத்த பணத்தை வீணடிக்க விருப்பமில்லை. அதுமட்டுமின்றி அதில் அம்ரீனுக்கும் பங்கு உண்டல்லவா. அதனால் அதை தன் படிப்பிற்கும் மிக மிக தேவையான விஷயங்களுக்கு மட்டும் பயன்படுத்த முடிவெடுத்து சம்மதம் அளித்தாள்.
அறையில் தனது உடைமைகளை வைத்துவிட்டு , கடைக்கு சென்று பழங்கள் மற்றும் பேரீட்சை பழம் வாங்கி வந்தாள்.
இரவு , அனைவரும் அமைதியாக அமர்ந்திருந்தனர். சல்மா ஒரு முடிவெடுத்து , "அண்ணா நா ஒரு முடிவெடுத்திருக்க ! " என உசேனிடம் சொல்ல
உசேன் , " என்ன முடிவு மா? " என கேட்டதும் ,
சல்மா, எழுந்து ஜாரா அருகில் சென்று , " இனி ஜாரா தான் என் வீட்டுக்கு மருமகள் " என்று சொல்ல அனைவருக்கும் இன்ப அதிர்ச்சி.
ஷாஜிதாவின் மேல் இருந்த கோபத்தில் ஜாராவுடன் தனக்கு திருமணத்தில் சம்மதம் என கூறினான்.
கோபத்தில் எடுக்கும் முடிவு எவ்வளவு பெரிய ஆபத்தை விளைவிக்கும் என்பதை உணரமால் முடிவெடுத்தான், ஷாரூக்.
இரவு, சமைத்து சாப்பிட விருப்பமில்லாமல் , ஒரு ஆரஞ்சு பழத்தை சாப்பிட்டு தொழுதுவிட்டு உறங்கினாள்.
♥️ தொடரும் ♥️
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro