Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

💞 08 💞

ஷாஜிதாவின் வாழ்வை நினைத்து பேராசிரியர் தமிழரசனும் வருந்தினார். அவர் வந்தவுடன் மாணவர்கள் அனைவரும் தங்கள் இடத்திற்கு சென்று அமர்ந்தனர். சிறிது நேரத்தில் வெளியே சென்ற தேஜா, பிரியா , கங்கா மூவரும் உள்ளே வந்தனர்.

"மாணவர்களே ! இன்று எனக்கு மனம் சரியில்லை நாளைக்கு பாடம் எடுக்ககறேன் " என்று விட்டு தம் வேலையை கவனித்தார்.

மாணவர்களின் மனநிலையும் அப்படிதான் இருந்தது. ஃபர்ஜானாவின் கலங்கிய கண்களோடு பார்த்தவன், தான் எதுவும் செய்ய முடியவில்லையே என்று தவித்தான் அஜ்மல்.

அஜ்மலின் கண்ணீரை தன்னால் துடைக்க முடியவில்லையே என்னு துடித்தது ஃபர்ஜானாவின் மனம்.

இரு உள்ளமும் தங்கள் காதலை சொல்லாமல் தவித்து கொண்டிருந்தது.

மாணவர்கள் அனைவரும் தேஜா கங்கா இருவரின் மீது கோபமும் வெறுப்பும் அதிகமானது. தங்கள் தோழியின் வாழ்க்கை நன்றாக அமைய வேண்டும் என்று இறைவனிடம் பிராத்தனை செய்தார்கள்.

வீட்டிற்கு செல்லும் மணியை அடித்தவுடன் அனைவரும் கிளம்பினர், தங்கள் வீட்டிற்கு. ஃபர்ஜானா , தன் அண்ணனின் வருகைக்காக நின்று கொண்டு இருந்தாள்.

அப்போது அங்கு வந்த அஜ்மல், தன் மனதில் உள்ளதை சொல்ல அவள் அருகில் சென்றான். அவன், தன் அருகில் வரவர ஃபர்ஜானாவின் இதயம் படபடவென அடிக்க தொடங்கியது.

அவள் அருகில் சென்றவன், தான் பேச வந்ததை மறந்து அமைதியாக நின்றுவிட்டான்.

இருவரின் மனமும் பேசிக்கொள்ள துடிக்க, ஆனால் ஏதோ ஒன்று இருவரையும் தடுத்தது.

அஜ்மல், பிறகு சொல்லி கொள்ளலாம் என்று அவன் நகர, அவள் தனியாக நிற்க பயப்படுகிறாள் என்பதை புரிந்து கொண்டவற் அமைதியாக அவளுக்கு துணையாக அங்கேயே இருந்தான்.

ஃபர்ஜானாவின் மனமோ வேகமாக துடிக்க ஆரம்பித்தது. அவளிடம் பேச நினைத்தாலும் அமைதியாக நின்றிருந்தாள்.

ஒருவரை ஒருவர் பார்க்க நேரத்தில் பார்த்து கொண்டனர்.

சிறிது நேரத்தில் அப்சல் அங்கு வர ஃபர்ஜானா தன் அண்ணனுடன் செல்வதை அவள் முகம் மறையும் வரை பார்த்து கொண்டு இருந்தான் அஜ்மல் (டேய் ! வாயை துடை வழியுது🤦 )

"மன்னித்துவிடு ஜானுமா உன்னிடம் பேசலாம் என்று தான் வந்தேன் ஆனால் முடியவில்லை . கவலைப்படாதே! ஜானு உன் அஜ்மல் உனக்கு தான். அல்லாஹ் என்னை உன்னிடம்  சேர்த்துவிடுவான் இன் ஷா அல்லாஹ் " என்று தன் மனதில் நினைத்த வண்ணம் புன்னகையோடு தன் மிதிவண்டியில் வீட்டிற்கு சென்றான் அஜ்மல்.

வீட்டிற்கு வந்த ஃபர்ஜானா அமைதியாக மெதுநாற்காலியில் (sofa) அமர்ந்தாள் . அவளின் முகம் வாடியிருப்பதையும் கண்கள் கலங்கி இருப்பதையும் சலீமும் ஆபிதாவும் கவனித்தனர்.

"ஃபர்ஸீ மா என்ன ஆயிற்று , ஏன் முகம் வாடியிருக்கு? என்று அப்பா சலீம் கேட்க அதற்கு விடையாக கண்ணீர் மட்டுமே வந்தது ஃபர்ஸானாவிடம் இருந்து.

" ஏய் எதற்கு அழுகிறாய்? " என்று அப்சல் கேட்க , " அண்ணா " என்று அவன் நெஞ்சில் சாய்ந்து அழுதாள்.

"எதுக்குமா அழுகிற? " என்று அம்மா ஆபிதா படபடப்பாய் கேட்க அவளிடம் பதில் இல்லை.

"சரி விடு அழட்டும் " என்று சலீம் சொல்ல அவர்கள் அமைதியாக இருந்தனர்.

அவள் அழுகை நின்றவுடன் " ஏய் லூசு எதற்காக அழுத? " என்று அப்சல் சற்று அதட்ட ஷாஜிதாவை பற்றி அஜ்மல் கூறிய அனைத்தையும் ஒன்றுவிடாமல் சென்னாள்.

அவர்கள் மனம் பதறிவிட்டது. ஷாஜிதாவை நினைத்து வருத்தப்பட்டனர்.  சிறு பெண்ணுக்கு இவ்வளவு கொடுமைகளை செய்ய அவர்களால் , எப்படி முடிந்தது? என்றெல்லாம்  யோசித்து கொண்டிருந்தார்கள்.

"பாவம் அண்ணா ஷாஜிதா , எவ்வளவு கஷ்டப்படுகிறாள் தெரியுமா தினமும்? அவளுக்கு ஏன் இந்த சோதனை? அவள் நல்லவள் தானே ! " என்று கூறியவளின் தலையை வருடிய சலீம் , " நல்லவர்களை தான் அல்லாஹ் சோதிப்பான்" என்றார் பொறுமையாக.

"அதற்காக இப்படியா ?  " என்று முறைத்தவளை பார்த்து சிரித்துக்கொண்டே, " குட்டிமா அல்லாஹ் தனக்கு பிடித்தவரை மட்டுமே சோதிப்பான். எவ்வளவு சோதிப்பானோ அதை விட அதிகமாக மகிழ்ச்சியையும் தருவான். அவனின் நேசம் ஏழு தாய்மார்களின் நேசத்தை விட மெரியதல்லவா? " என்று அப்பா அவளுக்கு நிதானமாக சொல்ல, அவள் கண்களை துடைத்து கொண்டு " அப்போது ஷாஜிதாவின் துன்பமெல்லாம் இன்பமாக கூடிய விரைவில் அல்லாஹ் மாற்றிவிடுவான் அதானே " என்று குழந்தை போல் கேட்டவளை பார்த்து , "இன் ஷா அல்லாஹ் " என்று அம்மா சொல்ல குழந்தை போல் சிரித்து கொண்டு ஓடினாள்.

"அப்படியே உங்களை மாதிரி இருக்கிறாள் " என்று ஆபிதா சலீமிடம் சொல்ல ," என் மகள் ஆயிற்றே ! " என்று காலரை தூக்கி பெருமையாக சொன்னார்.

" அதனால் தான் அவள் இன்னும் மங்குனியாகவே இருக்கிறாள் " என்று அப்சல் சொல்ல , " டேய் என்னடா சொல்கிறாய்?.." என்று செல்லமாக முறைத்தார் அப்பா.

" பின்ன என்ன ? இன்று நான் அவளை அழைக்க சென்றேன். , அப்போது , அஜ்மல் நம் ஃபர்ஜானாவிடம் பேச வந்தான் ஆனால் என்ன நினைத்தானோ தெரியவில்லை அமைதியாக அங்கேயே நின்று விட்டான். நானும் அவர்கள் பேசுவார்கள் என்று சற்று நேரம் அமைதியாக இருந்தேன் ஆனால் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து மட்டும் தான் கொள்கிறார்களே தவிர்த்து ஒரு வார்த்தை பேசவில்லை... அதற்கு நான் சென்று அவளை அழைத்து வந்து விட்டேன் "என்றான் பெருமூச்சு விட்டபடி. (நீ நடத்து மச்சி உனக்கு லவ் வரும்ல அப்போ இருக்கு உனக்கு👊😁)

" எல்லாம் நல்லதுக்கே என்று நினைத்து கொள்வோம் அப்சல் " என்று அம்மா சொல்ல சரி என்றனர் .

இங்கு ஃபர்ஜானாவோ , " எருமை கிட்ட வந்தவன் என்னிடம் பேசாமல் சென்று விட்டான்... கழுதை... அஜ்ஜீ உன்னை எனக்கு ஏன் பிடிக்கும் என்று இதுவரை தெரியவில்லை... ஆனால் முதல் நாள் பார்த்ததில் இருந்து இன்று வரை உன்னை தவிர வேறு எதுவும் பிடிக்க வில்லை... " என்று தன் மனதில் அஜ்மலை நினைத்து கொண்டிருந்தாள்.

" ஷாரு உன் மேல இருக்க நேசத்தை நான் உணர்ந்து நொடியில் இருந்து உன்னை பார்க்க ஏங்கிட்டு இருக்கேன்! நான் இதுவரைக்கும் எதற்காகவும் ஆசைப்பட்டதில்லை முதன்முதலாக உன்மேல் ஆசை கொள்கிறேன் நீ எனக்கு வேண்டும் ஷாரு, எனக்கு மட்டும் தான் நீ சொந்தம் " என்று தன் மனதில் கூறியவாறு கண்களை மூடியவளின் கண்களிலிருந்து வழிந்த கண்ணீரை துடைத்தது ஒரு கரம்.

அவள் திடுக்கிட்டு யாரென்று கண்களை திறந்து பார்க்க பேசற்று நின்றாள். அவள் சுதாரிக்கும் முன் அவள் காதில் அருகில் சென்றவன் , " இந்த ஷாரு உனக்கு தான் உனக்கு மட்டும் தான் சொந்தமானவன் " என்று ஷாரூக் கூறியதை கனவா இல்லை நிஜமா என்று பார்த்து கொண்டிருந்தவளுக்கு இது கனவு தான் என்று உணர வைத்தது "ஷாஜிதா " என்ற அஜ்மலின் அழுத்தமான குரல்.

அவன் குரலில் மீண்டு வந்தவள் , " வா அஜ்மல் " என்று கூறி விட்டு தன் கண்களை துடைத்தவாறு சாப்பிட எடுத்த வைத்தாள்.

இருவரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிட்டனர்.

"ஷாஜிதா conference எப்படி இருந்தது ? " - அஜ்மல்

" ம்ம்ம் பரவாயில்லை, ஆனா அந்த கல்லூரி எனக்கு பிடிக்கவில்லை "

"ம்ம்ம் சரி  எனக்கு வேலைக்கு நேரம் ஆயிற்று நான் கிளம்புகிறேன். பத்திரமாக இரு " என்று அவன் செல்ல,

"சரி அஜ்மல்  " என்று பதில் வினவ

" சரி வரேன் " என்று விட்டு அவன் கிளம்பினான்.

அவன் சென்றவுடன் கதவை மூடிவிட்டு அமர்ந்தவளின் மனதில் தன்னவனின் நினைவுகள் ஓடின...

அஜ்மல் வேலை செய்தாலும் அவன் மனதில் ஷாஜிதா இன்று , அவன் அழைத்ததும் அவள் கனவா நிஜமா என்பது போல் பார்த்தது எதனால் ? என்று யோசித்து கொண்டிருந்தான்.

"எதுவாக இருந்தாலும் அவளிடமே கேட்டு கொள்வோம் இப்போது வேலையை கவனிப்போம் " என்று தன் வேலையை கவனிக்க தொடங்கினார்.

இரவு உணவிற்கு கார செமியாவை செய்து விட்டு சிறிது நேரம் படிக்கலாம் என்று அமர்ந்தாள்.

சிறிது நேரம் படித்துக்கொண்டு இருந்தவளின் மனம் ஷாரூக்கை நினைவூட்டியது. அவனிடம் பேச ஆசை இருந்தாலும் அதை அடக்கி கொண்டு படிக்க தொடங்கினாள்.

அதையும் மீறி அவனிடம் பேச மனம் துடித்தது. வலுக்கட்டாயமாக தன் மனதின் ஆசையை கட்டுபடுத்தி கொண்டவள் , " அல்லாஹ் தயவுசெய்து என் மனதை கட்டுபடுத்து, அவன் எப்படியும் எனக்கு கிடைக்கப் போவதில்லை, எப்படியும் அவனுக்கு என்னை பிடிக்கவும் போறதில்லை. மாமன் மகள் என்ற அன்பு மட்டுமே அவனுக்கு என்னிடம். அதை நான் தவறாக எடுத்து கொள்ள கூடாது அவன் மனதில் நான் இருந்தாலும் அதை அழித்து விடு " என்று அல்லாஹ்விடம் துஆ கேட்டாள்.

அஜ்மல் வேலை முடித்து வர , இரவு உணவை எடுத்து வைத்தாள். இருவரும் ஒன்றாக சாப்பிட்டு முடித்தனர்.

" ஷாஜிதா இங்கே வா " என்று அஜ்மல் அழைக்க ,  "சொல் அஜ்மல்" என்று அவன் அருகில் வந்தமர்ந்தாள்.

"மதியம் , அவ்வளவு நேரம் அழைத்ததும் நான் வந்ததையும் சிறிது கூட உணராமல் , சிலை போல் நின்றிருந்தாயே ஏன்? " என்று கேட்க அவள் என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் அமைதியாக இருந்தாள் .

"ஏய் ஷாஜிதா ஏன் அமைதியாக இருக்கிறாய் ? " என்று அஜ்மல் கேட்க " அ...அது வந்து அஜ்மல் பாட்டி என்னிடம் நேரில் பேசியது போல் பிரம்மை " என்று அவள் சொன்ன விதத்திலே புரிந்து கொண்டான், அவள் பொய் சொல்கிறாள் என்று. அதன் மேல் எதுவும் கேட்காமல் அமைதியாக இருந்தவனின் பல எண்ணங்கள் ஓடி கொண்டிருந்தன.

பிறகு, இருவரும் வேறு விஷயங்களை பேசி கொண்டு இருந்தனர். ஷாஜிதாவிற்கு தெரியும் அஜ்மலும் ஃபர்ஜானாவும் நேசிக்கிறார்கள் என்று அவள் தனக்கு தெரியும் என்பதை காட்டிக்கொள்ள வில்லை.

" ஷாஜிதா நாளைக்கு கல்லூரிக்கு வரமாட்டேன் ஒரு முக்கியமான வேலை இருக்கு " என்று அஜ்மல் சொல்ல " சரி அஜ்மல் " என்று கூறிவிட்டு ஷாஜிதா உறங்க சென்றாள், தன்னை நினைத்து ஒருவன் உருகி கொண்டிருக்கிறான் என்று அறியாமலே❤️

தன் அறையில் இருக்கும் சிறு முற்றத்தில் நின்று கொண்டு நான் எதற்கும் சளைத்தவள் அல்ல என்று முறுக்கி கொண்டு தன் வேலையை செய்யும் நிலவை பார்த்து கொண்டிருந்தவன் மனதில் ஷாஜிதாவே நிறைந்திருந்தாள்ஶ்ரீ

" ஷாஜிமா கவலைப்படாதே! உன் கஷ்டமெல்லாம் சீக்கிரம் மறையும், சிறிது பொறுமையாக இரு நான் உன்னை அழைத்து செல்கிறேன், என் மனைவியாய் " எனுறு தன் மனதில் பேசி கொண்டான்.

இன்று ஷாஜிதா எல்லார் முன்னிலையிலும் தன்னை அடித்தது ஜாராவின் மனதில் எரிமலையாய் எரிந்தது.

" ஏய் ஷாஜிதா ஷாரூக் எனக்கு தான் அவ்வளவு சீக்கிரம் உன்னை சந்தோஷமாக வாழ விட்டுவிடுவேனா?.. நீ அழனும் நீ அழ வேண்டும் " என்று வன்மத்தை கக்கி கொண்டிருந்தாள் மனதில்.

பார்ப்போம் ஷாரூக் ஷாஜிதாவா? இவ்லை ஷாரூக் ஜாராவா என்று

தொடரும்💕💕

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro