Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

💞 06 💞

ஷாஜிதா கவிதையை வாசித்ததை கேட்டவன் , " ஏய் ஷாஜிதா கவிதை நல்லா இருக்கிறது " என்றவுடன் " ம்ம்ம் அப்படியா அஜ்மல் " என்று உற்சாகமாக கேட்டவளை " ஆமாடா யாரு எழுதினது ? " என்று கேட்டவுடன்  "நான் தான் அஜ்மல் எழுதின " என்று கூறியவுடன் " இது எப்போது இருந்து எனக்கு தெரியாமல் " என்று கேட்டவுடன்  " பத்தாம் வகுப்பில் இருந்து "  என்று கூறியவுடன் " இவ்வளவு நாள் ஏன் இதை என்னிடம் சொல்லவில்லை ? " என்று பொய் கோபத்தோடு கேட்டான் அஜ்மல்.

அவள் , " மன்னித்து விடு அஜ்மல் " என்று பாவமாக சொல்ல , " சரி விடு போனால் போகட்டும் மன்னித்து விடுகிறேன் " என்றவுடன் அவனை பார்த்து புன்னகை சிந்தினாள் ஷாஜிதா.

" சரி யாரை நினைத்து கவிதையை எழுதினாய் ? " என்று அஜ்மல் கேட்டவுடன் , " அ...து அ..து அது வந்து ஷாரூவை நினைத்து தான் அஜ்மல் எழுதினேன் " என்று ஷாஜிதா சொன்னவுடன் கண்களை விரித்து ஆச்சரியமாக பார்த்தான் அஜ்மல்.

" என்ன அஜ்மல் அப்படி பார்க்கிறாய் ? " என்று ஷாஜிதா அவனை உலுக்க அவன் சுதாரித்து கொண்டு , " அப்போது நீ ஷாரூக்கை விரும்புகிறாயா ? " என்று அஜ்மல் கேட்க அவள் அமைதியாக நின்றிருந்தாள். அவன் நான் ஷாரூக்கை விரும்புகிறேன் என சொல்வாள் என்று எதிர்ப்பார்த்தவனுக்கு அவள் தெரியாது என்று அவள் அளித்த பதில் சற்று ஏமாற்றம் அளித்தது. "என்னது தெரியவில்லையா ? " என்று குழப்பமாக கேட்டான்.

" ம்ம்ம் ஆமாம் அஜ்மல் எனக்கு விவரம் தெரிந்த முதல் காதல் என்று சொன்னாலே என் மனதில் வந்து செல்வது ஷாரூ தான். அது ஏன் என்றெல்லாம் தெரியவில்லை . நான் எழுதும் கவிதைகூட என்னையே அறியாமல் ஷாரூ இது உனக்கு தான் என்று என் மனம் சொல்கிறது. அதைவிட , அவனை பார்க்க வேண்டும் என்று நினைக்கும் போதெல்லாம் அவன் என் முன் வந்து நிற்கிறான். இதற்கு பெயர் என்னவென்று தெரியவில்லை அஜ்மல் " என்று அவள் கூற அஜ்மல் , " அப்போது இவள் இன்னும் தனக்குள் இருக்கும் காதலை உணரவில்லை " என்று தன் மனதில் புலம்பியபடி இருந்தவனை , " அஜ்மல் என்ன யோசிக்கிறாய் ?"  என்ற ஷாஜிதாவின் குரல் அவனை தன் யோசனையில் இருந்து வெளி வர செய்தது.  " இங்க பாரு ஷாஜிதா இது உன் வாழ்க்கை நீதான் முடிவெடுக்கனும்  " என்றவுடன்  " ம்ம்ம் சரி அஜ்மல், வா சாப்பிடுவோம் " என்று இருவரும் சாப்பிட அமர்ந்தனர்.

❤️❤️❤️❤️

" ஏய் பிர்தவுஸ் போய் ஷாரூக்கை சாப்பிட அழைத்து வா " என்று சல்மா கூற பிர்தவுஸ் ஷாரூக்கை அழைக்க மேல் இருக்கும் அவன் அறைக்கு சென்றாள் பிர்தவுஸ்.

ஷாரூக் மெது நாற்காலியில் சாய்ந்து கண்களை மூடிக்கொண்டு

மைனாவே மைனாவே
என் கனவில் தினம் தினம்
கேட்கும் பாடல் நீதானா ஹே
மைனாவே மைனாவே என்
கண்கள் பூமியில் தேடிய
தேடல் நீதானா

தன்னவளின் நினைப்பில் ஆழ்ந்து பாடலை ரசித்து கொண்டு இருந்தவனுக்கு பிர்தவுஸ் அழைப்பது கேட்கவில்லை. அவள் சற்று கடுப்பாகி ஷாரூக் என்று சப்தமாக அழைத்த போதும்  அவனிடமிருந்து எந்த பதிலும் வராததால் அவன் தலையில் வேகமாக கொட்டினாள்.

" ஆஆஆ யார் என் தலையில் கொட்டியது ? " என்று தலையை தடவியவாறு கண்ணை திறந்து பார்த்தவனை பிர்தவுஸ் கோபமாக முறைத்து கொண்டு இருந்தாள்.

இவன் தலையை சொறிந்தவாறு , " இவள் ஏன் நம்மல இப்படி பார்க்கிறாள் " என்று யோசித்தவனை , " டேய் எருமை எவ்வளவு நேரமாக உன்னை அழைக்கிறேன் ? காது என்ன செவிடு ஆகிவிட்டதா என்ன நாயே" என்று அவள் திட்ட " பிசாசு  யார் காது செவிடு  ? "  என்று அவன் கேட்க ," உன் காது தான் " என்றவளை , " ஏய் இப்போது எதற்கு என்னை அழைத்தாய் ? " என்று கேட்டவனை " ம்ம்ம் வெட்டியாக இருக்கிறாயே சாப்பிடலாம் என்று அழைக்க வந்தால் , நீ ரொம்ப தான் செய்கிறாய்  " என்று நக்கலாக கூறியவளை , " ஏய் யார் வெட்டியாக இருப்பது ? " என்று அவன் எகிற  , " நீதான் டா எருமை " என்று அவளும் சீற உன்னை என்று அவன் அடிக்க கை ஓங்க அவள் ஓடி விட்டாள்.

அவர்களின் விளையாட்டை பார்த்த பெரியவர்கள் ஆரம்பித்து விட்டார்களா இவர்களின் விளையாட்டை என்று அவர்களின் விளையாட்டை ரசித்து கொண்டு இருந்தனர். ஒருவழியாக தங்கள் விளையாட்டை முடித்து விட்டு சாப்பிட அமர்ந்தனர்.

அனைவரும் சாப்பிட்டு கொண்டு இருக்க சல்மா , " ஏன் ஷாரூக் உனக்கு ஷாஜிதாவை பிடித்திருக்கா ? " என்று கேட்டவரை இப்போது எதற்கு அம்மி இதை கேட்கிறார்கள் ? என மனதில் யோசித்தவனாக  இருந்தான் ஷாரூக். " என்ன ஷாரூக் யோசிக்கிறாய் ?" என்று அஹமது கேட்க அவன் புன்னகையுடன் " எனக்கு ஷாஜியை ரொம்ப பிடிக்கும்" என்று மகிழ்ச்சியாக சொன்னவனின் மனதை புரிந்து கொண்டனர் அனைவரும்.

" அப்போது ஷாஜிதாவை மணமுடித்து கொள்ள உனக்கு சம்மதமா ? " என்று பாட்டி ரஹிமா கேட்க அவனும் புன்சிரிப்போடு சம்மதம் என்று கூற அனைவரின் மனமும் மகிழ்ந்தது.  " ஆனால் ஒரு நிபந்தனை " என்று கூற அனைவரும் என்ன என்பதனை  போல் பார்க்க அவன் , " ஷாஜி அவள் படிப்பை முடிக்கட்டும், அதன்பிறகு இதை பார்த்து கொள்வோம் " என்று அவன் கண்டிப்புடன் கூற அனைவரும் சம்மதித்தனர். பிறகு அனைவரும் சாப்பிட்டு விட்டு எழுந்தனர்.

❤️❤️❤️❤️

" ஷாஜிதா  நான் பஜர் முடித்து விட்டு அப்படியே பாட்டியை பார்த்துவிட்டு அங்கிருந்தே நான் கல்லூரிக்கு வந்து விடுவேன் நீயும் பார்த்து கல்லூரிக்கு வந்து விடு சரியா" என்றவனை " ம்ம்ம் சரி அஜ்மல் "  என்று அவனல வழி அனுப்பி விட்டு அவளும் தொழுதுவிட்டு எழுந்தாள்.

இரண்டு நாட்களாக தன் மனதில் மறைத்து வைத்திருந்த வேதனைகளை தனிமையில் கண்ணீர் 😭😭😭 வழியாக கொட்டி தீர்த்தாள் ஷாஜிதா. " ஏன் பாட்டி என்னை விட்டு போனாய் ? நீ இல்லாமல் என்னால் இங்கு இருக்கு முடியலை பாட்டி ; என்னால் சித்தி சித்தப்பா விற்கு கஷ்டம் ; ஏன் பாட்டி இப்படி பண்ண ? " என்று தன் மனவலியை கொட்டி தீர்த்தாள் ஷாஜிதா.

பிறகு தன்னை திடப்படுத்தி கொண்டு கல்லூரிக்கு செல்ல ஆயுத்தமானாள். அறைநாள் கல்லூரி என்பதால் சாம்பாரை மட்டும் செய்து விட்டு வந்து சாதம் செய்து கொள்ளலாம் என்று மனதில் நினைத்து கொண்டு வேலைகளை முடிக்க மணி 7.30 ஆனது. வண்டி வருவதற்கு இன்னும் அறைமணி நேரமே இருந்ததால் விரைவாக வேலைகள் அனைத்தையும் முடித்துவிட்டு சரியாக 7.50 ற்கு கிளம்பி விட்டாள். பிறகு புர்காவை அணிந்து கொண்டு வீட்டை பூட்டி விட்டு வெளியே வந்து நின்றாள்.

தன் மகள் சாப்பிட்டாளா? இல்லையா ? கிளம்பி விட்டாளா? இல்லையா ? என்று தாயின் மனம் அடித்து கொண்டு இருக்க அதற்கு விடையாக ஷாஜிதாவே கீழே இறங்கி வரவும் வண்டி வரவும் சரியாக இருந்தது. அம்ரீனும் ஷாஜிதாவும் அதில் ஏறி சென்றனர். ஷாஜிதா, அம்ரீனை பார்க்கவும் இல்லை பேசவும் இல்லை. அம்ரீன் மனம் வலித்தாலும் அதை வெளிக்காட்டாமல் இருந்து கொண்டாள்.

❤️❤️❤️❤️

"அஸ்ஸலாமு அலைக்கும் ( வரஹ் ) பாட்டி எப்படி இருக்கிங்க ? " என்று நலம் விசாரித்து கொண்டே உள்ளே நுழைந்தான் அஜ்மல். தன் பேரனை கண்ட மகிழ்ச்சியில் " வ அலைக்குமுஸ்ஸலாம் ( வரஹ் )  அல்ஹம்துலில்லாஹ் கண்ணா நான் நல்லா இருக்கிறேன் நீ எப்படி இருக்கிறாய் ? " என்று அன்போடு கேட்டவரை  " அல்ஹம்துலில்லாஹ் நானும் நல்லா இருக்கிறேன் பாட்டி " என்று தன் பாட்டியிடம் பேசி கொண்டு இருந்தான்.

" டேய் ஷாஜிதாவை அழைத்து வர வேண்டியது தானே ? " என்று ஹாஜிரா கேட்க " அம்மா அடுத்த முறை அழைத்து வருகிறேன். அவள் மனதில் வலியை வைத்து கொண்டு வெளியில் சிரிப்பை வரவழைத்து கொண்டு இருக்கிறாள் " என்று கவலைப்பட்டான் அஜ்மல்.

" சரிப்பா நீ அவளை தனியாக விடாதே எப்போதும் உடன் இரு புரிகிறதா" என்று ஹாஜிரா கண்டிப்புடன் சொல்ல அவன் சரி என்று விட்டு சாப்பிட்டு விட்டு கல்லூரிக்கு சென்றான்.

❤️❤️❤️❤️

பரப்பரப்பாக இயங்கி கொண்டு இருக்கும் பாண்டி மாநகரில் இன்போசிஸ் நிறுவனத்திற்கு கம்பீரமாக வந்து இறங்கினான் ஷாரூக்

அவன் வருவதை பார்த்த காவலாளி அவனை சிரித்த முகத்தோடு " குட் மார்னிங் தம்பி " என்று சொல்ல ஷாரூக் புன்சிரிப்போடு " குட் மார்னிங் " என்று கூறியவனாக உள்ளே நுழைந்தான்.

அனைவரும் அவனுக்கு வணக்கம் சொல்ல அவனும் சிரித்த முகத்தோடு வணக்கம் வைத்து விட்டு தன் அறைக்கு வந்தமர்ந்தான்.

" மே ஐ கம் இன் சார் " என்று பிரவீன் ஷாரூக்கின் சுய உதவியாளர் ( Personal assistant ) அனுமதி கேட்க  " உள்ளே வாங்க பிரவீன் " என்று அனுமதி தர உள்ளே வந்தான் பிரவீன்.

" சார் இன்று இண்டர்வியூ இருக்கிறது " என்று கூற  " தெரியும் பிரவீன் அதற்கான கோப்புகள் என்னிடம் தான் உள்ளது " என்று பிரவீன் கூற  " ம்ம்ம் சரிங்க சார் , அப்புறம் இந்த கோப்பையில் நீங்கள் கையெழுத்து போட வேண்டும் இன்றே வேறு நிறுவனத்திற்கு அனுப்ப வேண்டும் " என்று பிரவீன் கூற , " இவ்வளவு நாள் என்ன செய்து கொண்டு இருந்திங்க பிரவீன் " என்று கோபமாக கேட்க  " சாரி சார் " என்று பாவமாக கூற " இதை மட்டும் நன்றாக சொல்லுங்கள் " என்று அதை வாங்கி சரிபார்த்து விட்டு கையெழுத்து போட்டு அவனிடம் நீட்டினான் ஷாரூக்.

" Mr.Praveen call B and C block HR's Ramesh and Yasar to handle the interview along with me. Ask them to come immediately. After they came we can start the interview and send the candidates orderly " என்று கட்டளையிட " எஸ் சார் " என்று அதற்கான வேலையில் ஈடுபட்டான் பிரவீன்.

💕 தொடரும் 💕

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro