Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

💞 04 💞

தன் தாயின் கடிதத்தை படித்தவர் கண்களில் கண்ணீர் அருவி போல் பெருகியது. சல்மாவை ஆறுதலாக அணைத்து சமாதானம் செய்தார் அவர் ஆருயிர் கணவர் அஹமது.

"ஷாஜிதாவை எப்படியாவது தன் வீட்டு மருமகளாகி விடு அல்லாஹ்" என்று அஹமது துஆ கேட்டார். " இனியாவது அந்த பெண் நிம்மதியாக இருக்கட்டும்" என்று அனைவரும் நினைத்து கொண்டனர். பாவம் அவர்கள் யாரும் அறியவில்லை ஷாஜிதா இன்னும் பல இன்னல்களை சந்திக்க போகிறாள் என்று.

ஷாரூக் மனம் ஷாஜிதாவை நினைத்தே வலம் வந்து கொண்டு இருந்தது. அவன் கண்களில் கண்ணீர் வழிவதை பார்த்த பிர்தவுஸ் அவன் கையை பிடித்து ஆறுதல் கூறினாள். அவன் கண்ணீரை துடைத்து கொண்டு அமைதியாக மகிழுந்தை செலுத்தினான்.

❤️❤️❤️❤️

"ஷாஜி ஷாஜி வா வந்து சாப்பிடும் " என்று ஹாஜிரா அழைக்க "சித்தி ஷாஜி கூப்பிடாதிங்க எனக்கு பிடிக்காது " என்று ஷாஜிதா கூற " அம்மா ஷாரூக் மட்டும் தான் அவளை அப்படி அழைக்கனும் நாம் எல்லாம் அழைத்தால் மேடமிற்கு கோபம் வரும் " என்று அஜ்மல் நக்கலடிக்க அவள் " அ...அப்படியெல்லாம் இல்லை.." என்று முழித்தாள் ஷாஜிதா.

" பின்ன எப்படி? " என்று அஜ்மல் அவள் எதுவும் சொல்லாமல் விழித்தபடி தன் அறைக்கு விரைந்தாள்.

அவள் செல்வதை பார்த்த ஹாஜிரா "இவள் என்ன இப்படி போறாள்? " என்று தன் வேலையை செய்து கொண்டே கேட்டார் ஹாஜிரா. " அதெல்லாம் அப்படி தான் மா " என்ற அஜ்மலை பார்த்து " என்ன டா சிரிப்பே வித்தியாசமாக இருக்கிறது" என்று கேட்டவரிடம் "ஈஈஈஈஈ ஒன்னுமில்லை " என்று கூறிவிட்டு சென்றான் அஜ்மல்.

பிறகு நான்கு பேரும் சாப்பிட்டு விட்டு எழுந்தனர்.

❤️❤️❤️❤️

ஷாரூக் தன் அறையில் அமர்ந்து சிறிது நேரம் ஆழ்ந்த யோசனையில் இருந்தான். தன் யோசனையில் இருந்து விலகி சற்று நேரம் தன் அலுவலக வேலையில் முழ்கினான்.

அவன் அலுவலக கோப்புகளை கவனித்து கொண்டு இருந்தான். நாளை நடக்கவிற்கும் நேர்காணல் (Interview) வருபவர்களின் தற்குறிப்பு (Resume) பார்த்து கொண்டு இருந்தான்.

அதில் இருந்த ஒரு தற்குறிப்பை பார்த்து இந்த தற்குறிப்பு வேண்டாம் என்று தானே நான் தவிர்த்தேன். இதை யார் தேர்வு செய்து அனுப்பியது என்று யோசித்து கொண்டு இருந்தான்.

அப்போது உள்ளே வந்த பிர்தவுஸ் " என்ன ஷாரூக் ஏதோ யோசனையில் இருக்கிறாய்? போல் தெரிகிறதே ? " என்று கேட்டவாறு அங்கிருந்த மெது நாற்காலியில்( Sofa) அமர்ந்தாள்.

"ம்ம்ம் ஆமாம் பிர்தவுஸ் அலுவலகம் வேலையை சிறிது நேரம் பார்க்கலாம் என்று " மடிக்கணினியில் தன் பார்வையை செலுத்தியவாறு கூறினான் ஷாரூக்.

" நீ எப்போது தான் ஷாஜிதாவிடம் உன் காதலை சொல்ல போகிறாய்? " என்று கேட்டவளை முறைத்தான் ஷாரூக்.

" என்ன ஷாரூக் அப்படி பார்க்கிறாய்? " என்று கேட்டாள் பிர்தவுஸ்.

" பின்ன என்ன பிர்தவுஸ் ஷாஜி இப்போது தான் படித்து கொண்டு இருக்கிறாள். படிக்கட்டும். எப்போது சொல்ல வேண்டும் என்பது எனக்கு தெரியும் அதை நீ சொல்ல வேண்டாம் " என்று எரிச்சலாக கூறிவிட்டு " இப்போது மட்டுமின்றி எப்போதும் நான் அவளுக்கு மட்டுமே அவளுக்கு மட்டும் தான் சொந்தம் " என்று அழுத்தமாக கூறினான் ஷாரூக்.

" அதுக்காக இல்லை ஷாரூக். நேற்று நான் ஒன்றை கவனித்தேன் " என்றவளிடம் " என்ன அந்த ஜாரா என்னையே வைத்த கண் வாங்காமல் பார்த்து கொண்டு இருந்ததை தானே சொல்ல வருகிறாய் " என்று கடுப்புடன் கேட்டவனிடம் " ஆமாம் ஷாரூக் " என்றாள் பிர்தவுஸ்.

அவன் ஒரு புன்னகை விட்ட படி " நான் ஒன்னு சொல்லவா அவளால் என்னை நெருங்க கூட முடியாது அவளால் மட்டுமில்லை ஷாஜியை தவிர்த்து வேறு எந்த பெண்ணாலும் என்னை நெருங்க முடியாது பிர்தவுஸ் நான் ஷாஜிக்கு மட்டும் அவளுக்கு மட்டுமே நான் சொந்தமானவன் " என்று ஷாரூக் தெளிவாக கூறினான்.

" சரி ஷாரூக் வா வந்து சாப்பிடும் " என்றவளை " சரி பிர்தவுஸ் வரேன் போ " என்று விட்டு அவன் குளித்து விட்டு சாப்பிட அமர்ந்தான்.

அனைவரும் சாப்பிட்டு முடித்தனர்.

❤️❤️❤️❤️

ஷாஜிதா சாப்பிட்டு விட்டு தன் அறைக்கு வந்து அமர்ந்தாள். அவளுக்கு கவிதை எழுதும் பழக்கம் உண்டு. ஆனால் அது யாருக்கும் தெரியாதவாறு பார்த்து கொண்டாள்.

காதல் என்ற
சொல்லை கேட்டால்
என் மனத்திரையில்
வந்து நிற்பது நீயே...
என் கள்வனே!
நீயே சொல்
இதற்கு பெயர்
என்னவென்று...

டைரியில் எழுதிவிட்டு தன் மனம் கவர்ந்த கள்வனோடு கனவு காண தொடங்கினாள் நம்ம ஷாஜிதா.

❤️❤️❤️❤️

ஜாராவும் நாதிராவும் தன் சித்தி சித்தப்பாவை எப்படி இந்த வீட்டை விட்டு விரட்டுவது என்று தீவிரமாக யோசித்து கொண்டு இருந்தனர்.

"ஜாரா என்ன எந்தவொரு யோசனையும் கிடைக்க மாட்டேன் என்கிறது " என்று நாதிரா கேட்க " இருடி யோசிப்போம் கிடைக்கும் " என்று ஜாரா கூறினாள்.

"சரிவா இப்போது போய் நாம் சாப்பிடுவோம்" என்று இருவரும் சாப்பிட தொடங்கினர்.

" நம்ம ஜாராவுக்கு மாப்பிள்ளை பார்க்க ஆரம்பித்து விடலாம்ங்க " என்று ஹசினா தன் கணவன் உசைனிடம் சொல்ல அவர் " சரி நாம ஏன் வெளியே மாப்பிள்ளை பார்த்திட்டு நம்ம சொந்தத்தில் தான் இருக்கிறானே " என்றார் உசைன்.

" யாரை சொல்றிங்க அண்ணா ? " என்று ஹசன் கேட்க " வேறு யாரு? நம்ம ஷாரூக் தான்" என்று உசைன் சொல்ல அனைவரின் முகமும் மலர்ந்தது இருவரை தவிர்த்து.

அது வேறு யாரும் இல்லை ஷாஜிதாவின் அம்மா பௌஸியாவும் தங்கை அம்ரீனும். இருவரும் அதை வெளியில் காட்டாமல் இருந்து கொண்டானர் .

ஜாராவிற்கு எல்லையில்லா சந்தோஷம். அவள் முகத்தில் இருந்த மகிழ்ச்சியை பார்த்தே அனைவரும் புரிந்து கொண்டனர் அவளுக்கு இதில் சம்மதம் என்று. முதலில் ஜாரா படிப்பை முடிக்கட்டும் பிறகு நாமே பேசலாம் என்றார் ஹசன். பிறகு அமைதியாக சாப்பிட்டனர் அனைவரும்.

"ஏன்டி என் மகளுக்கு திருட்டு பட்டம் கட்டி விட்டு நீ மகிழ்ச்சியாக இருக்கிறாயா? உன் மகிழ்ச்சி ரொம்ப நாள் நீடிக்காது ஜாரா.

இந்த கல்யாணம் எப்படி நடக்கிறது என்பதை தான் நானும் பார்த்து விடுகிறேன். அத்தை இறந்து ஒரு நாள் கூட முழுவதுமாக முடியவில்லை அதற்குள் ச்சே.

ஹே ஹசினா உன் புத்தி எனக்கு தெரியாதா என்ன? எப்போதும் உன் மகள்கள் மட்டும் ஒஸ்தி என் மகள்கள் கேவலம் என்று நினைப்பவள் தானே நீ.

இந்த கல்யாணம் நடக்காது ஹசினா கனவு கூட காணாதே " என்று தன் மனதில் நினைத்து கொண்டு சாப்பிட்டார் பௌஸியா.

இஷா தொழுகை மட்டுமில்லாமல் இரவில் தொழுவது பௌஸியாவின் வழக்கம். அதில் " யா அல்லாஹ் ஷாஜிதா எனக்கு பிறக்கவில்லை என்றாலும் அவளை என் மகளாக தான் நான் பார்க்கிறேன். சிறு வயதில் இருந்தே நிறைய துன்பங்கள் கஷ்டங்களை அனுபவித்து விட்டாள். இனியாவது அவளுக்கு நிம்மதியான வாழ்க்கை கொடு. ஷாரூக் ஜாரா இந்த கல்யாணம் நடக்க கூடாது அல்லாஹ் " என்று அல்லாஹ்விடம் தனது துஆவை முன்னிறுத்தினார் பௌஸியா.

❤️❤️❤️❤️

" என்னங்க இது இப்போது என் அம்மா வேறு நம் வீட்டிற்கு வந்து விட்டார்களாம் அவர்கள் இங்கு வர மாட்டேன் என்று விட்டார். ஷாஜிதாவை எப்படி இங்கே தனியாக விட்டு செல்வது ? " என்று தன் கணவர் வாஹிதிடம் கேட்க " அதான் ம்மா தெரியவில்லை , பேசாமல் அவளை நம்மோடு அழைத்து சென்று விட வேண்டியது தான் " என்று கூற " அதுவும் சரியான யோசனை தான் " என்று ஹாஜிரா சொல்ல " ஷாஜிதா ஷாஜிதா" என்று வாஹித் ஷாஜிதாவை அழைத்தார்.

"ம்ம்ம் சொல்லுங்கள் சித்தப்பா " என்று ஷாஜிதா சொல்ல , " ஊரில் இருந்து அஜ்மலின் பாட்டி வந்திருக்காங்க நாங்க அவங்களை இங்கு வர சொன்னோம் ஆனால் அவர்கள் நான் வர மாட்டேன் என்று கூறிவிட்டார் அதனால் நாம் அங்கு சென்று விடலாம் " என்று வாஹித் கூற , " இல்லை சித்தப்பா நான் வரவில்லை நான் இங்கே இருக்கிறேன் " என்று ஷாஜிதா கூற " ஷாஜிதா நீ தனியாக இருக்க கூடாது எங்களுடன் வந்து விடு " என்று ஹாஜிரா கூறினார்.

ஆனால் ஷாஜிதாவோ அவர்களுடன் செல்ல மறுத்து விட்டாள். " சித்தப்பா இங்கிருந்தா பாட்டி என்னுடன் இருப்பது போல் உணர்கிறேன். அவர்கள் வாழ்ந்த இந்த வீட்டை விட்டு நான் எங்கும் செல்ல மாட்டேன் என்னை வற்புறுத்தாதிர்கள் " என்று அவள் கெஞ்ச அவளின் உணர்வை மதித்து அவளை விட்டு பிடிக்கலாம் என்று " சரிடா செல்லம் அப்போது இந்த வீட்டிற்கு தேவையான எல்லாவற்றையும் வாங்கி வைத்துள்ளோம். உனக்கு டிவியும் இருக்கு அதேபோல் செலவை பற்றிய கவலை வேண்டாம் உனக்கு. அஜ்மல் மட்டும் உனக்கு துணையாக இரவில் வந்து தங்கி கொள்வான் " என்றவுடன் சரி சித்தப்பா என்று சம்மதித்தாள்.

அப்போது அங்கு வந்த அஜ்மலிடம் சொல்ல " அம்மா நான் வரவில்லை பாட்டியை நான் அவ்வப்போது வந்து பார்த்து கொள்கிறேன் நான் ஷாஜிதாவிற்கு துணையாக இங்கு தான் இருப்பேன் நீங்கள் கிளம்புங்கள்" என்று அஜ்மல் கூறிவிட வாஹித்தும் ஹாஜிராவும் சம்மதிக்க ஷாஜிதாவிற்கு என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் யோசித்து கொண்டு இருந்தாள்.

தன் அண்ணன் தன்னுடன் இருந்தால் நன்றாக இருக்கும் என்று எண்ணினாள் ஷாஜிதா. அவளும் சரியென்று சம்மதித்தாள்.

" சரிடா வாங்க சாப்பிடலாம் " என்று நான்கு பேரும் அமர்ந்து சாப்பிட்டனர்.

இன்னிக்கு ஞாயிறு என்பதால் வீட்டில் இருந்தார்கள். "சரிம்மா பார்த்து பத்திரமாக இருக்கனும் ; எந்த உதவி என்றாலும் உடனே அழைக்கனும் புரியுதா " என்று தைரியம் கூறிவிட்டு சென்றார்கள்.

தன் அண்ணன்களிடம் கூறியவுடன் அவர்கள் நிம்மதி கிளம்பு என்பது போல் பார்த்தனர். அவர்களும் அங்கிருந்து கிளம்பிவிட்டனர்.

அஜ்மலும் ஷாஜிதா மட்டும் வீட்டில் இருந்தனர். ஷாஜிதா சிறிது நேரம் தொலைக்காட்சி பார்க்கலாம் என்று போட்டாள். அதில் சன் மியூசிக் சேனலை ஓடவிட்ட படி வீட்டை சுத்தம் செய்து கொண்டு இருந்தாள்.

அதில் திருமண மலர்கள் தருவாயா பாடல் ஒட இவள் அதை ரசித்தபடி தன் வேலையில் ஈடுபட்டாள்.

பாவாடை அவிழும் வயதில்,
கயிரு கட்டி விட்டவன் எவனோ,
தாலி கட்ட வந்தது அவனே,
உறவானவன்,
கொலுசு இடம் ஒசை கேட்டே,
மனசு விடும் பாசை சொல்வான்,
மழை நின்ற மலரை போல,
பதமானவன்,

என்ற வரிகளை தன் வாயில் ரசித்த படி முணுமுணுத்து கொண்டு இருந்தாள். அதை அஜ்மல் கவனித்து விட ," என்ன மேடம் யாரை நினைத்து கொண்டு பாடி கொண்டு இருக்கிங்க ? " என்று கேட்டவனிடம் " எல்லாம் என் ஷாரூவை நினைத்து தான் " என்று தன் வாயில் இருந்து உளறினாள். ஷாஜிதா.

அவன் கண்களை விரித்து  ஆச்சரியமாக " என்ன சொன்னாய் ?" என்று கேட்ட போது தான் ஷாஜிதா உணர்ந்தாள் தான் சொன்னதை. பிறகு தன் நாக்கை கடித்து கொண்டு  "அதெல்லாம் ஒன்னுமில்லை " என்று திக்க " ஏய் நீ ஷாரூக்கை காதலிக்கிறாய் தானே ? " என்று அவன் நேரடியாக கேட்டவனை என்ன சொல்வதென்று தெரியாமல் விழித்து கொண்டு இருந்தாள் ஷாஜிதா.

💕 தொடரும்  💕

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro