Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

💞 03 💞

ஜாரா தன் கேவலமான புத்தியை வெளிப்படுத்தினாள். அதற்கு ஆதரவாக அவள் தோழிகளும் நாதிராவும் பேசினார்கள். நாதிராவும் ஜாராவும் வீட்டில் நல்ல பிள்ளைகள் போல் அதாவது பெரியவர்கள் முன்பு மட்டும் நல்ல  பிள்ளைகள் போல் நடிப்பார்கள்.

அறை நாள் கல்லூரி என்பதால் அம்ரீனும் ஷாஜிதாவும் வீடு வந்து சேர்ந்தனர். ஷாஜிதா தன் வீட்டிற்கு சென்றாள். அங்கு எல்லாம் அடுக்கி வைத்திருந்ததை பார்த்து பாட்டி தான் இதை செய்தார் என்று புரிந்து கொண்டு பாட்டியை காண சென்றாள்.

தயங்கியவாறு உள்ளே சென்றவள் ஹாலில் பாட்டி உறங்கி கொண்டிருப்பதை பார்த்து," என்ன இது பாட்டி எப்போதும் பகலில் தூங்க மாட்டார்களே அதுவம் தொழுகை நேரத்தில்" என்று நினைத்தவாறு பாட்டி பாட்டி என்று அவள் எழுப்ப மைமுனிடம் இருந்து எந்த பதிலும் இல்லை . அம்ரீனும் வந்து மைமுனை அழைக்க எந்த பதிலும் இல்லாமல் போனதை உணர்ந்து பதறியடித்து கொண்டு அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்," எங்களை மன்னித்து விடுங்கள் இவர் மாரடைப்பால் ஒரு மணிநேரத்திற்கு முன்பே இறந்து விட்டார்" என்று வருத்தமாக கூறிவிட்டு சென்றார்.

யாருக்கும் என்ன செய்வதென்று புரியவில்லை. பிறகு, அவரை தங்கள் வீட்டிற்கு அழைத்து சென்றனர். ஷாஜிதா எதுவும் பேசவில்லை. தன் பாட்டியின் உடலை பார்த்து அமைதியாக அதன் அருகிலே அமர்ந்திருந்தாள். பிறகு இச்செய்தியை சல்மா மற்றும் வாஹித் தெரிவித்தனர். அவர்கள் இருவரும் குடும்பத்துடன் பதறியடித்து கிளம்பி வந்தனர்.

கல்லூரிக்கு சென்று இருந்த ஜாரா, நாதிரா இருவருக்கும் செய்தியை அனுப்பி அவர்களை அழைத்து வந்தனர். அலுவலகத்தில் இருந்த ஷாரூக் விடுப்பு எடுத்து கொண்டு வந்தான்.  மைமுன் ரஹிமா இருவரும் அவனுக்கு பிடிக்கும்.

ஷாஜிதா, தன் பாட்டியின் முகத்தையே வெறித்து பார்த்து கொண்டு இருந்தாள். யார் வருகிறார்கள் என்பதை கூட உணரவில்லை அவள்.

எல்லோரும் கண்ணீர் சிந்தினர். ஜாரா நாதிரா இருவரும் போலி அழுகை சிந்தியபடி பாட்டி அருகில் வந்து , " பாட்டி ஏன் எங்களை விட்டு சென்றாய்? எழுந்திரியுங்கள் " என்று சப்தமாக அழுதனர்.

ஷாஜிதா உணர்ச்சி வந்தவளாய், " ஏய் ச்சி வாயை மூடு உயிரோடு இருந்த போது தண்ணீர் கேட்டால் அதை கூட செய்யாத நீங்கள் அவர் இறந்த பிறகு எதற்கு அழுகிறீர்கள்? உங்கள்  நீள கண்ணீரை வேறு யாரிடமாவது வைத்து கொள் ; எதற்காக இப்போது அழுது அவர் உடலுக்கு பாரத்தை தருகிறீர்கள்? நாம் சிந்தும் ஒவ்வொரு துளியும் கடல் போல் அவர் முன் நிற்கும் மண்ணறையில் ; அதை கடப்பதற்கு அவர் அவ்வளவு சிரமமாக இருக்கும்; தயவுசெய்து அழுவதை நிறுத்தி விட்டு  அமைதியாக இருங்கள்" என்று கூறி இருவரையும் முறைக்க அவர்கள் இருவரும் ஷாஜிதா பார்த்த ஒரு பார்வையிலே தங்கள் வாயை கப்சிப் என்று மூடிக்கொண்டனர். சொல்ல போனால் மிரண்டு விட்டார்கள். பெரியவர்களும் தான்.

மறுபடியும் தன் பாட்டி அருகில் அமர்ந்து அவர் முகத்தையே வெறித்து பார்த்து கொண்டு இருந்தாள். அவள் மனதில் வேதனைகள் வலிகள் இருந்தாலும் வெளியில் காட்டி கொள்ளாமல் அமைதியாக இருந்தாள்.

அவளை இந்த நிலைமையில் காண முடியாமல் அஜ்மலும் ஷுரூக்கும் அங்கிருந்து வெளியேறினர்.  பிறகு அவரின் அடக்கம் செய்ய எடுத்து சென்று விட்டார்கள்.

ஷாஜிதாவின் நிலையை கண்டு வருந்தினார்கள்.

பிறகு ஷாஜிதா யாரிடமும் பேசாமல் தன் வீட்டிற்கு சென்று அல்லாஹ்விடம் தன் வேதனைகளை கொட்டி தீர்த்தாள்.

" டேய் ! ஷாரூக் ஏன் இப்படி அமர்ந்திருக்கிறாய் ? " என்று அஜ்மல் கேட்க , " ஷாஜியை பற்றி தான் யோசித்து கொண்டு இருக்கிறேன் " என்றான்.

" நானும் ஷாஜிதாவை பற்றி தான் பேச வந்தேன் " என்றவனை என்ன என்பது போல் பார்க்க அஜ்மல் புரிந்து கொண்டு ," ஷாரூக் இனி ஷாஜிதா உன் பொறுப்பு " என்றவனை புரியாமல் பார்த்தான் ஷாரூக்.

அஜ்மல் அவனை பார்த்து புன்னகைத்து விட்டு , " இன்று ஷாஜிதா உன்னிடம் பேசிவிட்டு வந்த பிறகு அவள் முகத்திலும் கண்களிலும் என்றும் இல்லாத ஒரு மகிழ்ச்சியை கண்டேன் ; அப்பொழுதே முடிவு செய்து விட்டேன் என் தங்கைக்கு பொருத்தமானவன் நீதான் என்று " என்றவுடன் அவனை அணைத்து கொண்டான் ஷாரூக். " இனி ஷாஜி என் பொறுப்பு  அஜ்மல் ; இதுவரை அவள் பட்ட துன்பம் எல்லாம் போதும் " என்றான் காதலோடு. " சரி ஷாரூக் நான் வீட்டிற்கு கிளம்புகிறேன் " என்றவுடன் " சரி அஜ்மல் பார்த்து போ " என்று வழி அனுப்பி வைத்தான் ஷாரூக்.

ஷாஜிதாவிடம் பேச சல்மா பிர்தவுஸ் ஷாரூக் மூவரும் மேல வந்தனர். அங்கு அவள் கீழே படுத்து கிடந்தவளை கண்டு  ," என்ன ஆயிற்று இவளுக்கு " என்று நினைத்து கொண்டு அவளை எழுப்ப எந்த பதிலும் இல்லாமல் போனது. சிறிதும் தாமதிக்காமல் ஷாரூக் அவளை தூக்கி கொண்டு நான் மட்டும் செல்கிறேன் என்று  மருத்துவமனைக்கு விரைந்தான்.

அப்போதும் ஷாஜிதா மேல் இரக்கம் காட்டவில்லை யாரும். பெறவில்லை என்றாலும் வளர்த்தவர் அல்லவா பௌஸியா ( Fouziya)  அவர் மனம் அடித்து கொண்டது ஷாஜிதாவிற்கு என்ன ஆயிற்று என்று.

மருத்துவமனையில்...

சிறிது நேரத்தில் கண் விழித்தாள் ஷாஜிதா. அவளை பரிசோதித்த மருத்துவர் , " சாப்பிடாமல் இருந்திருக்கிறார் ; அதனால் தான் மயங்கி இருக்கிறார் , பயப்பட ஒன்றும் இல்லை நன்றாக சாப்பிட்டடாலே போதும் " என்று மருத்துவர் கூற இருவரும் அதை கேட்டு கொண்டு விடை பெற்று கொண்டனர்.

இருவரும் மகிழுந்தில் (காரில்) ஏறி கொண்டனர். " ஷாரூ மன்னித்து விடு " என்று கூற , " எதுக்கு ஷாஜி? " என்று ஷாரூக் கேட்க , " இல்லை என்னால் தானே உனக்கு தேவை இல்லாத செலவு " என்றவுடன் ," ஏய் லூசு அப்படி எல்லாம் ஒன்றுமில்லை உனக்கு செய்யாமல் வேறு யாருக்கு செய்ய போகிறேன் ஷாஜி ?" என்றீ ஷாரூக் கேட்க அவள் அமைதியாக இருந்தாள்.

" ஆமாம், ஏன் மதியம் சாப்பிடவில்லை?" என்று கேட்டவனிடம் , " சாப்பிட தோன்றவில்லை ஷாரூ " , என்று கூறியவளை அதிர்ச்சியுடன் பார்க்க ," என்ன ஷாரூ அப்படி பார்க்கிறாய்? " என்று சிரித்த முகத்தோடு கேட்டவளிடம், " ஒன்றுமில்லை ஷாஜி " என்று கூறிவிட்டு அதற்கு மேல் எதுவும் பேசாமல் வண்டியை செலுத்தினான்.

அண்ணா, இனி ஷாஜிதாவை தனியாக விட்டு  செல்ல எனக்கு மனமில்லை அதனால் அவளை எங்கள் வீட்டிற்கு அழைத்து செல்கிறோம்"  என்று சல்மா கூற அனைவரும் அதிர்ந்தனர். இருவரை தவிர்த்து. அவர்கள் யாரும் இல்லை பௌஸியாவும் அம்ரீனும் தான். அங்கு சென்றாவது அவள் சந்தோஷமாக இருக்கட்டும் என்று நினைத்தனர்.

" அதெல்லாம் வேண்டாம் இனி ஷாஜிதாவை நாங்கள் பார்த்து கொள்கிறோம்" என்று வாஹித் கூறி கொண்டே வந்தவரை பார்த்து அனைவரும் அதிர்ந்தனர்.

" உன்னை யார் இங்கே வர சொன்னது ? " என்று உசைன் கேட்க , " ஒரு நிமிடம் என்னை பேச விடுங்கள்" என்று வாஹித் கூற அனைவரும் அமைதியாகினர்.

" இரண்டு நாட்களுக்கு முன் அம்மா எங்கள் வீட்டிற்கு வந்தார். எங்களிடம் நான் இறந்த பிறகு ஷாஜிதாவை நீங்கள் இரண்டு பேரும் தான் பார்த்து கொள்ள வேண்டும் , அவளுக்கு சித்தப்பா சித்தி என்ற உறவில்லாமல் அம்மா அப்பாவை போல் அவளை பார்த்து கொள்ள வேண்டும் என்று கூறி விட்டு சென்றார். சல்மா இந்தாடா நம்ம அம்மா இந்த கடிதத்தை உன்னிடம் கொடுக்க சொன்னார்" என்று  சல்மாவிடம் கொடுக்க அவரும் அதை வாங்கி கொண்டார்.

பிறகு கனத்த இதயத்தோடு ," இது என் அம்மாவின் கடைசி ஆசை  அதுபோல் என் மகள் ஷாஜிதாவின் வாழ்க்கைக்காக தான் நாங்கள் இங்கு வந்துள்ளோம் மேல் வீட்டில் தங்கி கொள்கிறோம் மாத வாடகை உங்களிடம் சரியாக வந்து விடும் ..." என்று முடித்தார்.

தங்கள் அம்மாவின் கடைசி ஆசை என்பதற்காக உசைன் ஹசன் இருவரும் சம்மதித்தனர். அவர்கள் பேசியதை கேட்டு விட்டனர் ஷாஜிதாவும் ஷாரூக்கும்.

சல்மாவிற்கு மகிழ்ச்சியாக இருந்தாலும் சற்று வருத்தமளித்தது. ஆனாலும் ஷாஜிதா நன்றாக இருந்தால் சரி என்று அல்லாஹ்விடம் துஆ கேட்டார் சல்மா.

ஷாஜிதா, சித்தி என்று அழைத்தவுடன் திரும்பி பார்த்தனர் அனைவரும் . எல்லாம் கேட்டு விட்டேன் சித்தி என்று கூறி கொண்டே அருகில் நின்றிருந்த அஜ்மலை ஓடி சென்று அண்ணா என்று அணைத்து கொண்டாள்.  அவனும் புன்னகையுடன் தன் தங்கையை அணைத்து கொண்டான்.

ஷாரூக் தன்னவள் முகத்தில் சிறிது மகிழ்ச்சியை  கண்டவன் சற்று நிம்மதி பெருமூச்சு விட்டான். அவர்கள் இருவரின் பாசத்தை கண்டு மகிழ்ச்சி அடைந்தனர் ஒரு சில பேரை தவிர்த்து.

அனைவரும் அவர்கள் வீட்டிற்கு சென்றனர். சல்மா மகிழுந்தில் சென்று கொண்டிருந்த போதே தன் தாய் கொடுத்த கடிதத்தை படிக்க தொடங்கினார்.

" அன்பு மகளே!!..

சல்மா என்னுடைய கடைசி நாட்கள் நெருங்கி விட்டது. நான் அல்லாஹ் விடம் சென்ற பிறகு ஷாஜிதாவை உன் வீட்டிற்கு மருமகளாக சீக்கிரமே அழைத்து செல்... எனக்கு தெரியும் நீ ஷாஜிதா மேல் எவ்வளவு அன்பு வைத்திருக்கிறாய் என்று.  ஷாஜிதாவை உன் வீட்டு மருமகளாக அனுப்பி வைப்பதே என் விருப்பம் அதனால் தான் நான் ஷாஜிதாவை உன்னிடம் வளர நான் அனுமதிக்கவில்லை. அதனால் தான் உன் அண்ணன் அண்ணியிடம் அவளை ஒப்படைத்தேன். அவளை சீக்கிரமாக உன் மருமகளாக உன் வீட்டிற்கு அழைத்து செல்...."

என்று படித்தவரின் கண்களில் நீர் அருவி போல் வர தொடங்கியது. அவரை தன் நெஞ்சோடு பொருந்தி கொண்டு ஆறுதல் கூறினார் அவர் ஆருயிர் கணவர் அஹமது

தொடரும்

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro