💞 02 💞
காலையில் நடந்ததை எண்ணி வருந்தி கொண்டு இருந்தார் பாட்டி மைமுன். தாங்க முடியாமல் தன் மகள் சல்மாவிடம் கைபேசியில் தொடர்பு கொண்டு நடந்த அனைத்தையும் கூறினார் மைமுன். தன் அம்மாவை நோகடிக்க வேண்டாம் என்று நினைத்து கொண்டு ஆறுதலாக பேசிவிட்டு போனை வைத்தார் சல்மா.
இந்த விடயத்தை சொன்னவுடன் அஹமது மிகவும் நொந்தார். " அந்த பெண் மீது எப்படி இப்படி ஒரு குற்றத்தை சுமத்த முடிந்தது அவர்களால்" என்று அஹமது கேட்க ," அதான் தெரியவில்லை " என்று சல்மா கூற , " ஏன்மா சல்மா பேசாமல் ஷாஜிதாவை நம் ஷாரூக் மணமுடித்து வைத்தாள் என்ன? " என்று ரஹிமா தன் மனதில் உள்ளதை சொல்ல " அத்தை எனக்கும் ஆசை தான் ஷாஜிதாவை நம் வீட்டு மருமகளாகி கொள்வதற்கு, ஆனால் ஜாராவிற்கு திருமணம் முடியாமல் ஷாஜிதாவை எப்படி? " என்று தன் மனதில் உள்ளதை சொல்ல , " சரிதான் காத்திருப்போம் " என்று கூறிவிட்டு அஹமது தன் வேலையை செய்ய தொடங்கினார். அதான் நாளிதழ் படிப்பது.
கண்ணாடி முன் நின்று கொண்டு விசிலடித்த படியே தலைசீவி கொண்டிருந்தான் ஷாரூக். அப்போது உள்ளே வந்த அவன் தங்கை பிர்தவுஸ் , " என்ன ஷாரூக் ரொம்ப சந்தோஷமாக இருக்கிறாய் போல " என்று கேட்டவளிடம் ," ம்ம்ம் ஆமாம் பிர்தவுஸ் கொஞ்சம் சந்தோஷமாக தான் இருக்கிறேன் " என்றான். " நீ எப்போது ஷாஜிதாவிடம் உன் காதலை சொல்ல போகிறாய்? ", என்று பிர்தவுஸ் கேட்க , " ஷாஜி இப்போது தானே படித்து கொண்டு இருக்கிறாள் படிக்கட்டும் " என்றான்.
படிக்கட்டும் என்று கூறியவனை முறைத்து கொண்டு , " பாவம் டா அவள், தினம் தினம் எதையாவது சொல்லி அவள் மனதை புண்படுத்தி கொண்டு இருக்கிறார்கள் ; இன்று ஜாராவின் நகையை இவள் தான் எடுத்துள்ளாள் என்று திருட்டு பழி சுமத்தி இருக்கிறார்கள். அதுமட்டுமின்றி அவள் யாரோ ஒரு பையனை ச்சே.." என்று நிறுத்தியவள் மேலும் தொடர்ந்தாள், " எப்படி ஷாரூக் மனம் வருகிறது அவர்களுக்கு இப்படியெல்லாம் பேச; மும்தாஜ் அத்தை இறந்ததற்கு இவள் என்ன செய்வாள் ? இல்லை அவர்கள் தொழில் நட்டம் அடைந்ததற்கு இவள் என்ன செய்தாள் ? இது எல்லாம் அல்லாஹ்வின் செயல் அல்லவா? இது போன்ற மூட நம்பிக்கைகளை அல்லாஹ் தடை செய்துள்ளதை இவர்ஙள் யாரும் அறியவில்லையா? " என்று அவள் ஷாரூக்கை பார்க்காமல் தன் கோபத்தை கொட்டியவள் ; இப்போது தான் அவன் முகத்தை பார்க்கிறாள்.
அவனோ தன்னவளை எப்படி அப்படி சொல்லாம் என்று கோபம் அடைந்தான். பிர்தவுஸ் கூற கூற அவன் முகம் இறுகியது. கண்கள் சிவக்க இருந்தவன் அருகில் சென்று , " ஷாரூக் கோபம் கொள்வதற்கான நேரம் கிடையாது; அவள் வாழ்க்கையில் மகிழ்ச்சி என்ற ஒன்றை உன்னால் மட்டுமே தர முடியும் ; அதேபோல் அவளை தவிர்த்து வேறு யாராலும் உன்னை நன்றாக பார்த்து கொள்ள முடியாது " என்று கூறிவிட்டு , " எனக்கு கல்லூரிக்கு நேரமாகி விட்டது நான் கிளம்புகிறேன் " என்று விட்டு சென்றாள்.
ஷாரூக் தன் கைபேசியில் இருந்த அவள் புகைப்படத்தை பார்த்து , " எப்படி இவ்வளவு கஷ்டத்தையும் தாங்கி கொண்டு இருக்கிறாய்? கவலை படாத நான் இருக்கிறேன் உனக்கு நான் சீக்கிரமே வருகிறேன் செல்லம் " என்று கூறி கொண்டு மனதின் வலியை அல்லாஹ்விடம் முறையிட தொழுகைக்கு ஆயுத்தமானான். தொழுகையில் தன் மனவலியை இறக்கிவிட்ட நிலைமையில் புறப்பட்டான்.
"இனி உன் வாழ்க்கையில் சிரிப்பை மட்டுமே பார்ப்பாய் ஷாஜிமா அதுக்கு நான் பொறுப்பு " என்று மனதில் உறுதி கொண்டு தன் அலுவலகத்திற்கு விரைந்தான் ஷாரூக்.
காலையில் நடந்தவற்றை மறக்க முடியாமல் தவித்து கொண்டு இருந்தாள். பேராசிரியர் நடத்துவதை கவனிக்க முடியாமல் தவித்தாள் ஷாஜிதா. அவள் கண்களிலிருந்து தானாக வந்தது கண்ணீர். தன்னை கட்டுப்படுத்தி கொண்டு பாடம் கவனிக்க முயன்றாலும் அவளால் முடியவில்லை.
இதையெல்லாம் கவனித்து கொண்டு இருந்த அஜ்மல், " என்ன இவள் இப்படி இருக்கிறாள் ? ஏதேனும் பிரச்சினாயா? கண்டிப்பாக பிரச்சினை தான் . எல்லாம் அந்த ஜாரா, நாதிரா இருவரால் தான் இவளுக்கு பிரச்சினை வந்திருக்கும் " என்று மனதில் புலம்பி கொண்டான்.
" கவலைப்படாத ஷாஜிதா இந்த அண்ணன் நான் இருக்கும் வரை நான் உன்னை சந்தோஷமாக பார்த்து கொள்வது என் பொறுப்பு ; நீ என் சொந்த பெரியப்பா மகள் ; நீ எங்கள் வீட்டு ராணி; நீ என் தங்கை " என்று மனதில் தனக்குள் பேசி கொண்டான்.
சிறிது நேரத்தில், இடைவேளை மணி அடித்தவுடன் அனைத்து மாணவர்களும் வெளியில் செல்ல ஷாஜிதா மட்டும் அமர்ந்திருந்தாள். அவள் அருகில் சென்று அஜ்மல் அமர்ந்தான். ஷாஜிதா என்று அழைக்க அவள் அஜ்மல் என்று கூறி கொண்டு அவன் மடியில் முகம் புதைத்து கொண்டு அழ தொடங்கினாள். அவள் அழட்டும் என்று அவன் அவளுக்கு ஆதரவாக அவள் தலையை வருடிவிட்டான். சிறிது நேரத்திற்கு பிறகு அவளே தன் கண்களை துடைத்து கொண்டு நடந்தவற்றை சொல்ல அவன் முகம் சிவந்தது. அவளிடம், " ஷாஜிதா இந்த அண்ணன் இருக்கும் வரை உனக்கு கவலை வேண்டாம் " என்று சொல்ல " ம்ம்ம் சரி அஜ்மல் " என்று கண்களை துடைத்து கொண்டாள் ஷாஜிதா.
அஜ்மல் ஷாஜிதா இருவரும் சிறுவயதில் முதலே நல்ல நண்பர்கள். இருவருக்கும் இடையில் இனம் புரியாத அன்பு உண்டு. கல்லூரி முதலாம் ஆண்டு படிக்கும் போது வாஹித் தன் மகன் அஜ்மலிடம் ஷாஜிதா அவன் தங்கை என்று சொன்னார். அன்று முதல் ஷாஜிதாவை இன்னும் கவனமாக பார்த்து கொண்டான்.
இவையனைத்தும் சக மாணவர்கள் கவனித்தாலும் அவர்கள் இடையில் உள்ள நட்பையும் அன்பையும் தவறாக தவறி கூட எண்ணியது கிடையாது அவர்கள். அதனால் இதை சாதாரணமாக எடுத்து கொண்டனர்.
வகுப்பு ஆசிரியர் வந்தவுடன் அவரவர் இடத்தில் அமர்ந்து கொண்டு பாடத்தை கவனிக்க தொடங்கினர். அப்போது அட்டெண்டெர் ஒருவர் ஐயா என்று அழைக்க சொல்லுங்கள் என்றவுடன் அவர் , " ஷாஜிதாவை சந்திக்க அவர்கள் உறவினர் வந்திருக்காங்க " என்றவுடன் " சரி அனுப்பி வைக்கிறேன் " என்று ஷாஜிதாவை அனுப்பி வைத்தார் ஆசிரியர். அவளும் யாரென தெரியாமல் சென்றாள்.
ஷாரூக், ஷாஜிதா தன் படிப்பை முடிக்கும் வரை பார்ப்பதை தவிர்த்து வந்தான். ஆனால் இன்றோ தன் மனம் அவளை காண துடித்தது. அதனால் அவளை காண கல்லூரிக்கு வந்து விட்டான். நான்கு வருடங்கள் பிறகு அவளை சந்திக்க போவதில் ஏதோ இனம் புரியாத இன்பம் பதட்டம் இரண்டும் மனதில் ஒட்டி கொண்டது.
ஷாஜிதா, தொலைவில் இருந்தே ஷாரூக் என்று அறிந்து கொண்டவள் மனம் அளவில்லாத சந்தோஷம் கொண்டது. அவனும் அவளருகில் சென்று , " அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) " என்று அவன் புன்னகை பட கூற " வ அலைக்குமுஸ்ஸலாம் (வரஹ்) " என்று பதில் கூறிவிட்டு அவனை முறைத்தாள்.
" ஏன் ஷாஜி முறைக்கிறாய் ? " என்று பாவமாக முகத்தை வைத்து கொண்டு கேட்க " ம்ம்ம் துறைக்கு இப்போது தான் என் நினைவு வருகிறதோ? " என்று கேட்டவுடன் , " அப்படியெல்லாம் இல்லை ஷாஜி " என்று கூற , " ஆஹான் நம்பிட்டேன், சரிவா ஷாரூ நாம கேண்டீன் உள்ளே அமர்ந்து பேசலாம்" என்று இருவரும் உள்ளே சென்று அமர்ந்தனர்.
"ஆளே மாறிவிட்டாய் போல் தெரிகிறதே ஷாஜி" என்று அவன் கேட்க " அப்படியெல்லாம் இல்லை ஷாரூக் " என்று அவள் சொன்னாள். "ம்ம்ம் சரி கல்லூரி வாழ்க்கை எப்படி செல்கிறது? " என்று கேட்டவனிடம் ," அல்ஹம்துலில்லாஹ் நன்றாக செல்கிறது , ஆமாம் என்ன திடீரென வந்திருக்கிறாய் ? "என்று கேட்டவளிடம் , " சும்மா உன்னை பார்க்க தான் வந்திருக்கிறேன் " என்றவனிடம் நம்பிட்டேன் என்றாள்.
அவன் , " என் மேல் சத்தியம் " என்று அவன் தலையில் கை வைக்க அவள் வாய் விட்டு சிரித்து விட்டாள். " இந்த சிரிப்பு எப்போதும் உன் கூட இருக்கும் ஷாஜிமா இனிமேல் அதற்கு நான் பொறுப்பு " எனறு மனதில் நினைத்து கொண்டான்.
" இங்க பாரு அம்ரீன் இப்போது நாங்கள் என்ன சொல்கிறோமோ அதை நீ செய்ய வேண்டும் " என்று ஜாரா கூற " என்னால் முடியாது " என்று அம்ரீன் தெளிவாக கூறினாள். " நீ மட்டும் நாங்கள் சொல்வதை செய்யவில்லை என்றால் உன் அக்கா அதான் ஷாஜிதா அவளை நீ உயிரோடு பார்க்க முடியாது " என்று நாதிரா மிரட்ட , " என்ன மிரட்டுகிறாயா? " என்று அம்ரீன் கேட்க , " நாங்இ சொல்றதை நீ செய்யவில்லை என்றால் உன் அக்காவை நாங்கள் கொன்றுவிடுவோம்" என்று ஜாரா கடுமையாக சொல்ல அம்ரீன் பயந்துவிட்டாள். "சரி சொல் என்ன செய்ய வேண்டும் ", என்று எரிச்சலாக கேட்டவளிடம் " அப்படி வா வழிக்கு ஷாஜிதா ஒரு பையனை காதலிக்கிறாள் என்று சொல்ல வேண்டும் " என்று ஜாரா கூறியவுடன் " முடியாது " என்று அம்ரீன் கூற " அப்போது உன் அக்காவை நீ உயிரோடு பார்க்க முடியாது என்று நாதிரா கூற " செய்து தொலைக்கிறேன்" என்று அம்ரீனும் சம்மதம் சொன்னாள் தன் அக்காவின் உயிர்காக.
பிறகு அதை செயல்படுத்தினார்கள். அது நிறைவேறி விட்டது. இதை எல்லாம் நினைத்து கொண்டு தன்னை வருந்தி கொண்டு இருந்தாள் அம்ரீன்.
அவளால் எதிலும் கவனம் செலுத்த முடியாமல் திணறினாள். தன் அக்காவிற்கு தன்னாலே துன்பம் ஏற்பட்டு விட்டதே என்று நொந்து கொண்டாள்.
" சரி ஷாரூ வந்து நீண்ட நேரம் ஆகிவிட்டது நான் செல்கிறேன் " என்றவளை போக வேண்டாம் என்று சொல்ல வேண்டும் என்று தோன்றியது அவனுக்கு . ஆனால் அதை கட்டுப்படுத்தி கொண்டு, " சரி ஷாஜி நீ போ நானும் கிளம்புகிறேன்; அஸ்ஸலாமு அலைக்கும்( வரஹ் ) ", என்று கூற அவளும் ," சரி ஷாரூ வ அலைக்குமுஸ்ஸாம் ( வரஹ்)" என்று விடைபெற்று கொண்டாள். அவனும் அவளிடம் இருந்து விடைபெற்று கொண்டு தன் அலுவலகத்திற்கு புறப்பட்டான்.
தன் இடத்தில் வந்தமர்ந்தவளின் முகத்தில் இருந்த சந்தோஷத்தை கண்டு புரிந்து கொண்டான் அஜ்மல். அவனுக்கும் தெரியும் ஷாரூக் ஷாஜிதாவை நேசிக்கிறான் என்று. காலையில் தான் ஷாரூக் கைபேசியில் அவனிடம், " இன்று ஷாஜியை பார்க்க நான் வருகிறேன் " என்றான். அவனை தான் பார்த்து விட்டு வருகிறாள் என்பதை புரிந்து கொண்டு நிம்மதியாக பாடத்தை கவனித்தான்.
" ஏய் உனக்கு எவ்வளவு தைரியம் இருந்தால் என் காலை மிதிப்பாய் " என்று தெரியாமல் செய்த தவறுக்காக தன்னுடன் பயிலும் சக மாணவியை அறைந்தாள் ஜாரா. " தெரியாமல் தானே உன் காலை மிதித்தேன் " என்று பாவமாக கூறியவளின் கழுத்தை பிடிக்க அவள் மூச்சு விடமுடியாமல் திணறினாள். சிறிது நேரத்திற்கு பிறகு, அம்மாணவி மன்னிப்பு கேட்க "ம்ம்ம் அந்த பயம் இருக்கட்டும் " என்று அவளை முறைக்க அவள் பயந்து தன் இடத்திற்கு சென்று அமர்ந்தாள்.
அந்த வகுப்பிலே தான் மட்டும் தான் அழகு என்று நினைப்பு அவளுக்கு. அதேபோல் தனக்கு மட்டும் தான் எல்லாம் தெரியும் என்ற மிதப்பு. அவளுக்கு ஜால்ரா அடிக்க நான்கு தோழிகள் எப்போதும் அவள் பின் சுற்றி கொண்டே இருப்பார்கள். நாதிராவும் தன் அக்காவை போல் தான். அவளுக்கும் இது பொருந்தும்.
இடைவேளை நேரத்தில், நாதிரா தன் அக்காவை காண வந்தாள். அவள் ," ஜாரா கலக்கிவிட்டாய் , அந்த ஷாஜிதாவை வீட்டை விட்டு துரத்தி விட்டோம் " என்று நாதிரா கூற அவளும் ஒரு சிரிப்பை விட்டு " ஆமாம் நாதிரா அவளுக்கு இது போதாது , இதைவிட பெரிதாக ஏதாவது செய்ய வேண்டும்" என்று தன் கேவலமான புத்தியை வெளிப்படுத்தினாள் ஜாரா.
தொடரும்
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro