Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

💞 01 💞

குருவிகள் கீச்கீச் என்று காலையை வரவேற்க தொடங்கின. அவர்களின் வரவேற்பை ஏற்று சூரியனும் வர தொடங்கி தன் வேலையை தொடங்கியது.

அமைதியான காலை பொழுதில், அந்த வீட்டில் கலவரம் நடந்து கொண்டு இருந்தது. அவளை வார்த்தைகளால் வதைத்து கொண்டு இருந்தனர், அவள் செய்யாத குற்றத்திற்காக. பாவம், மடந்தை அவள் என்ன செய்வாள். அவளுக்கு ஆதரவாக பேசிய பாட்டியையும் வாயடைத்து விட்டார்கள் அவர்கள்.

"ஏய் ஷாஜிதா சொல் இந்த நகை எப்படி உன் பையில் வந்தது? " என்று சிவந்த கண்களோடு கோபம் பொங்க ஹசினா கேட்க, எந்தவொரு பயமும் இல்லாமல் " நான் அந்த நகையை எடுக்கவில்லை பெரியம்மா " என்று ஷாஜிதா சொல்ல;  " சொன்ன பொய்யை திரும்ப திரும்ப சொல்வதால் உண்மையாகாது ஷாஜிதா " என்று மேலும் கோபம் அடைந்தார் ஹசினா.

" நீங்கள் எத்தனை தடவை கேட்டாலும் நான் சொல்வது தான் உண்மை " என்று அழுத்தமாக கூறிவிட்டு , " எனக்கு கல்லூரிக்கு நேரமாகி விட்டது , வண்டி வந்துவிடும் நான் கிளம்ப வேண்டும்" என்று விட்டு நகர்ந்தவளை நில்லு என்று வீடே அதிரும் அளவிற்கு கத்திய ஹசன் குரலிற்கு கூட அசராமல் " இப்போது எதுக்கு  கத்துகிறீர்கள்? "  என்று கேட்டவளிடம் சினம் கொண்டு அவர் கேட்ட கேள்வியில் அதிர்ந்து நின்றாள் அரிவை.

" என்ன அப்பா சொன்னீர்கள்?  மறுமுறை சொல்லுங்கள் " என்று கோபமாக கேட்க ஹசன்  " நீ லவ் பண்றது எங்களுக்கு தெரியாது என்று நினைக்காதே எல்லாம் தெரியும் " என்று அவர் சொல்ல , " என்ன தெரியும் உங்களுக்கு நீ பார்த்தீர்களா? இல்லை கேட்டீர்களா? " என்று பொங்கி எழுந்தவளிடம் " அம்ரீன் கேட்டுள்ளாள் நீ கைப்பேசியில் ஒரு பையனிடம் பேசியதை " என்று ஹசன் கூற அவள் இதயமே ஒரு நிமிடம் நின்று விடும் போல் உணர்ந்தாள் ஷாஜிதா.

தன்னுடன் பிறந்தவளே தன்னை தவறாக எண்ணிவிட்டாளே என்று நொந்து அம்ரீனை ஒரு பார்வை பார்த்தாள். அம்ரீனும் அவளை பார்த்து வருத்தமாக தலைகுனிந்தாள்.  அவள் தலை குனிந்ததை கண்டு ஏதோ தவறு நடந்துள்ளது என்று எதுவும் பேசாமல் இருந்தாள், ஷாஜிதா.

இதை கவனித்து கொண்டு இருந்த பாட்டி மைமுன், எவ்வளவு சொல்லியும் தன் பேத்தியை இப்படி வதைக்கிறார்களே நான் என்ன செய்வேன் என்று கண்ணீர் விட்டார்.

"இனி இந்த வீட்டில் உனக்கு இடமில்லை வெளியே போ " என்று ஹசன் கூற " ஒரு நிமிஷம் ஹசன்" என்று பாட்டி மைமுன் சொல்ல, " இவளுக்கு நீங்கள் ஆதரவு தந்தால் அவளுடன் சேர்ந்து நீங்களும் வெளியே போகலாம் "  என்று உசைன் கூற " யார் வீட்டில் இருந்து கொண்டு யாரை வெளியில் அனுப்புகிறாய்? " என்று கேட்ட பாட்டியை அனைவரும் புரியாமல் பார்க்க ," இது என் பேத்தி ஷாஜிதாவோட வீடு . இந்த வீடு அவர் பெயரில் தான் இருக்கு " என்றவுடன் அனைவரும் அதிர்ந்தனர்.

" என்ன சொல்றிங்க? " என்று உசைன் கேட்க பாட்டி சிரித்து கொண்டு," நீங்கள் அனைவரும் ஷாஜிதாவை தினமும் கொடுமை செய்வதை பார்த்து  விட்டு உங்கள் அப்பா அதான் ஷாஜிதாவோட தாத்தா ரியாஸ் ஷாஜிதா பெயருக்கு மாற்றி விட்டு அவர் அல்லாஹ்விடம் போய் சேர்ந்து விட்டார். இனி போக வேண்டியது அவளில்லை நாம தான் " என்று பாட்டி சொல்ல யாரும் எதுவும் பேசவில்லை அமைதியாகினர்.

" பாட்டி மேல் வீடு காலியாக தானே இருக்கு அங்கு நான் தங்கி கொள்கிறேன்" என்று தன் துணிகளையும் தனக்கு தேவையானவற்றை எடுத்து கொண்டு மாடியில் இருக்கும் வீட்டிற்கு சென்றாள். அவள் செல்வதை யாரும் தடுக்கவில்லை.

மேல் வீடு ஒரு விசாலமான அறையில் இரண்டு அறைகள் அதில் அழகாய் பால்கனி மற்றும் ஒரு சமையலறை  என்று அந்த வீடு அழகாய் இருந்தது. வாசல் முன் விரிந்த இடமாக இருந்தது.

அந்த வீட்டை நேற்று தான் சுத்தம் செய்தாள். இன்று அவளே அந்த வீட்டிற்கு குடிபோவாள் என்று அவள் நினைத்து பார்க்கவில்லை. வெளியில் வண்டி சத்தம் கேட்டவுடன் அவள் அனைத்தையும் ஒர் இடத்தில் வைத்து விட்டு வீட்டை பூட்டிவிட்டு புர்கா அணிந்து கொண்டு கிளம்பினாள்

இறங்கி வந்தவளை வழிமறித்து பாட்டி  அவளுக்கு ஊட்டி விட பாட்டியின் திருப்திப்படுத்த சாப்பிட்டுவிட்டு சென்றாள் ஷாஜிதா.

இவர்களை பற்றி ஒரு சின்ன அறிமுகம் பார்த்து விடலாம்

மைமுன்- ரியாஸ் தம்பதியருக்கு மூன்று மகன்கள் ஒரு மகள். மகன்கள் மூன்று பேரும் ஒன்றாக சொந்த தொழில் செய்கிறார்கள்.

முதல் மகன்  உசைன். இவரின் மனைவி ஹசினா. இவர்களுக்கு இரண்டு மகள்கள். மூத்தவள் ஜாரா பொறியியல் கல்லூரியில் இறுதி ஆண்டு படிக்கிறாள். சற்று திமிர் தலைகனம் தான் தான் என்ற புத்தி என அனைத்து கெட்ட பழக்கமும் இருக்கு. இவளுக்கு தப்பாமல் பிறந்தவள் நாதிரா. அக்காவை போல் இவளும். இவளும் பொறியியல் முதலாம் ஆண்டு படிக்கிறாள்.

இரண்டாவது மகன் ஹசன். ஹசனின் முதல் மனைவி மும்தாஜ். இவர்கள் இருவருக்கும் பிறந்தவள் தான் ஷாஜிதா. ஷாஜிதா பிறந்தவுடன் மும்தாஜ் இறந்து விட்டதால், ஹாஜிதாவை யாருக்கும் பிடிக்கவில்லை .

அவள் பிறந்த நேரம் தான் தங்கள் தொழிலில் நட்டம் ஏற்பட்டு விட்டது என்று நினைத்து அவளை ஒதுக்கி வைத்தனர் அனைவரும். ஆனால் மைமுன் ரியாஸ் இருவரும் எவ்வளவு சொல்லியும் அவர்கள் கேட்கவில்லை.

ஷாஜிதா மூன்று மாத குழந்தையாக இருந்த போது பௌஸியாவை ஹசனிற்கு மணமுடித்து வைத்தார்கள். அவர்கள் இருவருக்கும் பிறந்தவள் தான் அம்ரீன்.

அம்ரீன் தன் அக்காவிடம் ஷாஜிதாவிடம் எப்போதும் அன்பாக இருப்பவள்.  அம்ரீனிற்கு ஷாஜிதா என்றால் உயிர். ஷாஜிதாவிற்கும் தான்.

ஷாஜிதா இளங்கலை தமிழ் இறுதி ஆண்டு படித்து கொண்டு இருக்கிறாள். அம்ரீன் இளம் அறிவியல் இயற்பியல் இரண்டாம் ஆண்டு படித்து கொண்டு இருக்கிறாள்.

மூன்றாவது மகன் வாஹித். இவரின் மனைவி ஹாஜிரா. . இவர்களுக்கு ஒரே மகன் அஜ்மல்.  இவர்கள் காதல் திருமணம் செய்து கொண்டதால் யாரும் ஏற்று கொள்ளவில்லை.

ஆனால் மைமுன் மட்டும் அடிக்கடி சென்று தன் மகன் மருமகள் மற்றும் பேரனை பார்த்து நலம் விசாரித்து விட்டு வருவார்.

நான்காவது மகள் சல்மா. இவர் கணவர் பெயர் அஹமது. இவர்களுக்கு  ஒரு மகன் ஒரு மகள்.

மகன் பெயர் ஷாருக். நம்ம நாயகி ஷாஜிதா மேல் உயிரே வைத்திருக்கிறான். ஷாருக் இன்போசிஸ் கம்பெனியில் எச்ஆர் பதவியில் இருக்கிறான். நேர்மையானவன் கண்டிப்பானவனும் கூட.

இளையவள் பிர்தவுஸ். இவள் முதுகலை வரலாறு படித்து கொண்டு இருக்கிறாள். இவர்கள் அனைவருக்கும் ஷாஜிதா என்றால் அவ்வளவு இஷ்டம்.

சல்மா, தன் அண்ணி இறந்த பிறகு ஷாஜிதாவை நான் வளர்த்து கொள்கிறேன் என்று கூற அவர் அம்மா மைமுன் வேண்டாம் என்றதும் தன் அம்மா கூறினால் ஏதேனும் காரணம் இருக்கும் என்று நினைத்து கொண்டு அமைதியாக இருந்தார்.

ஷாஜிதா தினமும் அனுபவிக்கும் துன்பங்களை பார்த்து மனம் நொந்தார்கள் சல்மாவும் அஹமதும்.

அஹமதின் அம்மா, ரஹிமா. பெயருக்கு ஏற்றாற்போல் கருணை உள்ளம் படைத்தவர். இவருக்கு ஷாஜிதாவை தன் பேரன் ஷாரூக் மணமுடித்து வைத்து ஷாஜிதாவை மகிழ்ச்சியாக பார்த்து கொள்ள ஆசை... நிறைவேறுமா????

தொடரும்

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro