ரகசியங்கள் -2
ஒரு அழகிய வெள்ளை நிற வீட்டு பால் கேணியில் நாற்காலி போன்று தொங்கும் ஊஞ்சலில் பால் மற்றும் பவள நிற இரவு உடை அணிந்து விடிந்து வெகு நேரம் ஆகியும் இன்னும் முழுதாக கண்ணை திறக்காமல் அங்கு வேலைகார அம்மா வந்து வைக்கும் காபியை உயிர் தீர்த்தமாக நினைத்து குடித்து கொண்டே தான் தோழிகளுக்கு செய்தி அனுப்பி கொண்டிருக்கிறாள் தியா...
நேற்று தன் காதலனுடன் நேரம் மறந்து பேசிக்கொண்டு இருந்ததில் அவள் தூங்கிய நேரம் மணி மூன்று, அதனால் இன்று எழுவதில் அவளுக்கு தாமதம்,
என்ன தான் அவளுக்கு தன் தோழிகளை உயிராக பிடித்திருந்தாலும் சில நேரம் அவர்கள் இவள் எதிர் பாலாருடன் அவள் நெருங்காமல் இருக்க செய்யும் விஷயங்கள் அவளுக்கு கோபமூட்டுவது வழக்கம் அதனால் வரும் சண்டைகளும் அதிகம்,
அதனாலேயே இந்த தடவை அவளுக்கு தவறி வந்த அழைப்பினால் பழக்கமான தன் தோழியின் (நம் நாயகியின்) செல்ல பெயாரைக் கொண்ட ஆடவனை பற்றி தன் தோழிகளிடம் மாத கணக்கில் மறைத்து ஒரு வாரம் முன்னாள் அவள் அவர்களிடம் சொன்ன போது அவர்களின் வெளிப்பாடோ முதலில் கோபமாக இருந்தாலுக் பிறகு அமைதியாகி விட்டார்கள்,
ஒரு முறை தருனுடன் பகிர்ந்த தன் முதல் முத்தத்தை பற்றி சொல்லி அடுத்த நாள் அவன் மூக்கில் கட்டு போட்டு கொண்டு வருவதை அவள் பார்க்காமல் இல்லை
அவன் அன்றிலிருந்து அவளை பார்த்தவுடன் பேய்யை பார்த்ததுபோல் விரண்டோடுவதை அவள் அறியாமலுமில்லை நானிக்கு சண்டையில் மூக்கை உடைப்பது தான் அவள் விசேஷ திறன் என்பதை அவள் மறக்கவும் இல்லை,
ஆனால் அவனுக்கு தன் தோழிகளிடம் கூட அவள் தான் முக்கியம் என்று சொல்ல முடியாமால் கோலையாக இருப்பவனை எப்படி அவள் காதலிக்க முடியும் எண்ணத்தில் பிறகு அவள் அவனிடம் பேசவில்லை,
அதனால் தான் இந்த தடவை அவனை பற்றி ஓரளவுக்கு நன்றாக தெரிந்தபின் தன்தோழிகளுக்கு அறிவிக்க அவனை பற்றிய அவர்களின் எண்ணங்கள் அவளுக்கு மர்மமாகவே உள்ளது, இருந்தாலும் இந்த இரவு பேசிச்சுக்கள் தெரிந்தால் அவர்களின் வெளிப்பாடு நல்ல ஒன்றாக இருக்கும் என சொல்ல இயலாது,
இந்த எண்ணத்தை மூலையில் போட்டு அளசியவலாக குளித்து விட்டு கண்ணாடியில் ஃப்ரான்ச் பின்னலை முடிந்து கூந்தலை ஒருபக்கம் போட்டு கொண்டு இருக்கும் போது தான்
ஜானு தன் வாட்ஸாப்பில் குரல் அஞ்சல் அனுப்பி இருப்பது தெரிந்து அதை திறக்க ஜானுவின் குரல் அறையில் ஒலித்தது,
"கண்ணாடி பாத்தது போதும் எல்லாம் நீ அழகா தான் இருக்கே கிளம்பி வா" என அவள் குரல் அங்கிருக்கும் காட்சியை பிரதிபலிக்க,
தியாவின் முகத்தில் ஒரு புன்னகை பூத்தது,
'இவர்கள் இல்லாமல் எப்படி நான் இருப்பேன்'
என்ற ஒரு சிந்தனையில் கட்டிலில் கிடைந்த தோல் பையை கையில் எடுத்தவளாக தன் ஸ்கூட்டியில் அமர்ந்து தோழியின் வீட்டிற்கு கிளம்பினாள்,
____________________
வரிசையாக அமைந்திருக்கும் ஒரே மாதிரியான நடுத்தர வீடுகளில் ஒரு வீட்டு ஜன்னலின் ஓரத்தில் ஒளிந்து கொண்டு இரு தோழிகள் தொலை நோக்கியை வைத்து எதிரில் உள்ள வீட்டை நோட்டமிட்டு கொண்டு சிரித்து பேசிக்கொண்டு அவர்களுக்கு சற்று தொலைவில் இருக்கும் இன்னொரு தோழியுடன் விவாதித்து கொண்டிருக்கும் இவர்கள் ஒன்றும் இந்திய அரசியல் விவாகத்தில் இல்லை யாருடைய ஆள் இதில் மிக அழகு என்ற வாதத்தில் தீவிரமாக இருக்கின்றனர்,
எந்த அளவுக்கு என்றால் அங்கே தான் அறையின் கதவில் சாய்ந்தவாறு நின்றுக்கொண்டு இருக்கும் தன் எதிரியை கூட கவனிக்கமல் தன் ஆசைக்குரியவனின் அங்கங்களை வர்ணித்து கொண்டு இருக்கிறாள் நம் நாயகி,
ஏதோ ஒரு நினைப்பில் தன் கழுத்தை கதவின் பாக்க திருப்ப அவளுக்கு பெரிய அதிர்ச்சி ஒன்று காத்து கொண்டு இருந்தது,
இவன் கிடைக்கும் சந்தர்ப்பங்களில் எல்லாம் அவளை எரிச்சலூட்டுவது மட்டுமல்ல அவளை கேவளப்படுத்த என்னென்ன வழிகள் உண்டோ அத்தனை வழிகளையும் அவன் கைகளில் வைத்திருக்கிறான்
இவன் உதாரணத்திற்கு இப்போது ஒலி படம் எடுக்கும் அந்த கருவியின் முகத்தை அவளை நோக்கி பார்த்தவாறு வைத்திருக்கும் அவன் கையில் வைத்திருக்கும் அந்த செவ்வக எந்திரம் போன்று,
அதை பார்த்தவுடன் அவள் ஒலிம்பிக் வீரர்கள் எல்லாம் அசரும் அளவிற்க்கு ஒரு வேகத்தில் அவனை நெருங்க, அவனோ அதற்க்குள் அந்த விஷ கருவியை அவன் கையில் இருந்து பிடுங்க முயன்ற அதே சமயத்தில் அவன் கையை உயர்த்தி விட்டான்,
அவனோ ஆரரை அடிக்கு மலை போல் வளர்ந்து நிற்கிறான் அவளோ ஐந்தை தொட மாட்டாள், இனி அவள் அந்த கருவியை எடுத்தவாறு தான் என மனம் சோர்ந்து போனால்,
அவளுடைய தலையில் ஓடுவதெல்லாம் நாளை யூட்யூபில் அவள் இன்று மைக்கேலின் முதுகுத்தசையை பற்றி அவன் முதுகின் பின்னால் பேசியது எல்லாம் அவன் முகதிற்கு முன் வந்து நின்றாள் என்ன ஆகும் என்பதுதான்,
ஒரு சில நொடிகளில் பல விதமான வெளிப்பாடுகள் அவள் மனதில் ஓடியது, அதில் எல்லாவற்றிலும் மைக்கேல் அவளை ஒரு அருவருப்புடன் பார்க்கும் காட்சிதான் மிகதெளிவாக இருந்தது,
நோ ஐ ஹவ் டூ ஸ்டாப் இட் என்று மனதில் உறுதிமொழி எடுத்தவாறு,
"அபீ தேட்ஸ் இட், வொலுங்க ப்ஃபோன கொடுத்துடு" என்ன தான் மனதில் நடுக்கம் இருந்தாலும் அவனை மிரட்டும் தோணியில் கேட்டாள்,
ஆனால் அவனோ அவளின் இத்தனை வருட நாடகங்களை நன்கு அறிந்தவன்,
"இல்லன என்ன பன்னுவீங்க ப்ரின்ஸஸ்" என்று அவன் எகத்தாலமாக கேட்க்க,
அவளுக்கு கோபம் மூக்கில் ஏறியது அவன் சொன்ன வார்த்தைகளில் மட்டும் அல்ல அவன் பயன் படுத்திய அடை மொழியாலும் தான்,
எப்போதெல்லாம் அவள் சிறுபிள்ளை என்று குத்தி காண்பிக்க நினைக்கிறானோ அப்போதெல்லாம் தான் அவன் அந்த வார்த்தியை பயன்படுத்துவான்,
இப்போது அவள் மிரட்டியது அவனுக்கு சிறுபிள்ளை தனமாக உள்ளது என சொல்லாமல் சொல்கிரான் கயவன் என கோபத்தில் கொந்தளித்தால் நம் நாயகி,
"...ஹும்... என்ன அப்படி கூப்டாதேனு எத்தனை தடவ சொல்லி இருக்கேன்"
தன் வெருப்பை வெளிக்காட்டுவது அவனுக்கு பேரின்பம் தரும் என்பதை அவள் அறிந்திருந்தும் ஒரு நொடி யோசிக்காமல் வார்தைகளை கொட்டி விட்டு இப்போது எப்படி சூழ்நிலையை சமாளிப்பது என்று அவள் யோசித்துக்கொண்டிருந்த போது தான் அவள் தொழிகளிடமிருந்து எந்த சத்தத்தையுன் காணவில்லை என்பதை உணர்தாள்,
அவர்களை கண்ட போது இருவரும் இன்னும் அதிர்ச்சியிலிருந்து வெளியே வரவில்லை,
என்ன தான் அவளுக்கு இது போன்ற நிகழ்வுகள் தினமும் நடக்க கூடியது என்று அவர்கள் அறிந்திருந்தாலும் இது அவர்களுக்கு புதிது தான்,
அவள் முன்னால் நிற்கும் எதிரியயோ எப்போதும் அந்த முகத்தில் பதித்திருக்கும் அந்த இளியுடன் சலித்துக்கொண்டு நிர்கிறான், அது அவளை தேவைக்கு அதிகமாகவே எரிச்சலூட்டியது,
அவள் தன் தோழிகளிடம் அதே கோபத்துடன் திரும்பி,
"ஹெல்லொ லேடீஸ் அதுல உங்க வல்லலும் தான் இருக்குது ஹெல்ப் மீ ப்லீஸ்"
என அவள் ஆதங்கத்துடன் கத்த,
அப்போது தான் தோழிகள் அதிர்ச்சியில் இருந்து வெளியெ வந்தனர்,
தியாவின் கண்களில் கோபம் எழுந்தது, ஆனால் ஜானு என்னவோ முதலில் கொஞ்சம் அதிர்ச்சி இருந்தாலும் இன்னும் சாந்தமாகவே இருந்தாள்,
இது அவளுக்கு சினத்தை இன்னும் அதிகரித்தது, சில சமயங்களில் ஜானுவுக்கும் கெபியலுக்கும் இடையில் ஏதும் இருக்குமோ என்றொரு சந்தேகம் எழும் பிறகு ஜானுவின் ஐ.க்யு வின் மீதுள்ள தன் தீராத நம்பிக்கையில் அது திரும்ப போய் விடும்,
அப்படி பட்ட சமயங்களில் ஒன்று தான் இது.
ஜானுவுக்கும் கேப்ரியளுக்கும் இடையில் உள்ள உறவு கொஞ்சம் வித்தியாசமானது அவள் எதிரியின் சுபாவமோ அவள் வீட்டில் உள்ள மூவரை தவிர இது வரை யாருக்காகவும் அவன் நேரத்தை செலவிட்டு மற்றவர்கள் வார்த்தைகளை கேட்பது பெரும் கடினம் அவனை பொறுத்த வரையில் அது ஒரு பெரும் தியாகம், இது நான் சொன்னதல்ல அவனுடைய வார்த்தைகள்,
இப்படி இருந்தும் இதுவரை இவர்கள் இருவரும் ஓரிரு சமயங்களில் பேசிக்கொள்ள அவள் கண்டிருக்கிறாள்,
நம் நாயகி போர்க்களத்தில் ஆழ்ந்த சிந்தனையில் சென்றிருந்த சமயத்தில்தான் தியா வின் சத்தம் அவளை எழுப்பியது,
"இதெல்லாம் ஓவர் கேப்ரியல் மத்தவங்க ரிலேஷன்ஷிப் குள்ள நீ ஏன் எப்ப பாத்தாலும் தல இட்ரே?" என தியா கேட்க,
நானிக்கோ ஒரே குழப்பம் இவள் யாருடைய உறவை பற்றி பேசுகிறாள்,
அவளுக்கு தெரிந்து எதிர் வீட்டில் இப்படி ஒரு கதாபாத்திரம் இருப்பதே இன்னும் மைக்கேளுக்கு தெரியாது இவள் யாரை பற்றி பேசுகிறாள் என்ற சந்தேகம் ஒருபக்கம் இருந்தாலும் கேபிரியல் பிற மனிதர்கள் எல்லாம் உலகில் இருக்கிறார்கள் அவர்களுக்கும் வாழ்க்கை உண்டு என்பதை அறிந்திருக்கிறானா? என்ற மலைப்பு ஒரு பக்கம்,
நம் நாயகியின் மலைப்பிற்கும் ஒரு காரணம் இருக்க தான் செய்கிறது, ஏனெனில் அவளின் எதிரி பல பெண்கள் பின்னால் சுற்றும் மன்மதன்,
அவன் எத்தனை பேரை அழ வைத்தாலும் இந்த பெண்கள் கூட்டம் மட்டும் குறையவில்லை என்ற நினைக்கையில் இந்த பெண்களின் தேர்வுகள் ஏன் இப்படி மட்டமாகிவிட்டது என்று ஒரு பக்கம் அவள் நம்ப மறுத்தாலும் இன்னொரு பக்கம்,
இவன் கை விட பட்ட கதை எனவே அவனை பற்றி கவலை பட தேவ இல்லை என்று இந்த ஒரு விஷயத்தில் தான் நாணி அவனை நினைத்து முதல்முறையாக சந்தோஷ படுகிறாள்,
ஏனென்றால் அவன் என்ன தான் எல்லோரையும் பார்வையில் மிரட்டி வைத்தாலும் அவள் தோழிகளின் மீது கை வைத்தால் அவள் அவனை சந்ததி இல்லாமல் ஆக்கி விடுவாள் என அவனுக்கும் தெரியும்,
"இப்போ யாரோட ரிலேஷன்ஷிப் பத்தி பேசிக்கிட்டு இருக்க பாபிடால்" அவன் எப்போதும் தியாவை வெறுப்பேற்ற பயன்படுத்தும் பெயரை வைத்து கூப்பிட அதுவும் அவன் நினைத்த பாவனையை அவள் முகத்தில் கொண்டுவந்தது,
ஆனால் இங்கு இன்னுமொறு கூற்றை அவள் தெளிவு படுத்த வேண்டி வருகிறது, எப்படி ஜானுவுக்கும் அபியுக்கும் எப்படி மரியாதை கலந்த ஒரு அமைதியான உடன்படிக்கை இருக்கிறதோ அதற்கு மாறாக தியா வுக்கும் அவனுக்கும் முற்றிலும் வெறுப்பினால் ஆன ஒரு உறவு உண்டு,
நானியை விட அதிகமான வெறுப்பை அவள் அவன் மீது வைத்திருக்கிறாள் என்றால் நாம் பார்த்துக்கொள்ள வேண்டியது தான்,
"இங்க நீங்க எதை பத்தி பேசிக்கிட்டு இருக்கீங்கன்னு நா கொஞ்சம் தெரிஞ்சிக்கலாமா?"
நானிக்கு அதற்கு மேல் பொறுக்க முடியவில்லை, தன் எதிரி மட்டும் தான் தங்கைக்கு ஏதாவது செய்திருக்கட்டும் அப்பறம்...
என்ற வாக்கியத்துடன் நானியின் தலையில் வித விதமான காட்சிகள் ஓட ஆரம்பித்தன,
அந்த எல்ல காட்சிகளிலும் கடேசியில் அவள் எதிரி அவன் உயிருக்காக்க தன்னிடம் கெஞ்சிக்கொண்டு இருக்கிறான்,
"உன் பிரதர்க்கு என் ரிலேஷன்ஷிப் மேளா ஜெலஸ் நாணி" என்று அவள் எதிரியை முரைத்தவாறு தியா கூற,
இங்கு நடக்கும் காட்சியின் கேளிக்கையை தன்னால் பொறுக்க முடியாமல்,
"வாட்?" என்று ஒரு நம்ப முடியாத தொனியில் எதிரிகள் இருவரும் ஒருசேர அந்த வார்த்தையை தூக்கி எறிய,
பிறகு அவள் எதிரி தன்னுடை கண்களில் ஒரு நம்பிக்கை இழந்த பார்வையுடன்,
"யூ ஹவ் கிரேட் இமாஜிநேக்ஷன் தேர் பேபிடால் நெக்ஸ்ட் ஜெ. கே. ரௌலிங் நீதான்" என்று சொல்லிவிட்டு, இவ்வளவு நேரத்தை வீணாக்கி விட்டோமே என்ற சலித்துக்கொண்ட தோரணையில் அவன் அறையை விட்டு வெளியேற,
பிரச்சனை எதிரியின் பக்கம் இல்லை என்பதை நாணி உணர்தால், ஆனால் அதே நொடியில் அவன் எடுத்த ஒளிப்பதிவும் ஞாபகம் வர அவன் பின்னால் ஓட தொடங்கிய நானியின் கழுத்து சட்டையை பிடித்து நிப்பாட்டினால் ஜானா.
"ஃபார் காட் ஷேக் நாணி அவன் வீடியோவும் எடுக்கல ஒன்னும் எடுக்கல உண்ண சும்மா ரீல்ட் அப் ஆகி விற்றான், ஃபர்ஸ்ட் நம்ம பியூட்டி க்வின் ஏதோ சொல்ல வேண்டி இருக்கு அதை பாரு"
ஜானா ஒரு வெறுத்து போன பாணியில் சொல்ல நாணி அமைதியானால் பிறகு சந்தேகத்தில் ,
"உணக்கெப்புடி தெரியும்?' எனக்கெட்க ஜானுவிடம் கண்ணை உருட்ட,
"அதுக்காக நா ஒன்னும் மைண்ட் ரீடெரா இருக்கணும்னு ஒன்னும் அவசியம் இல்லை, சின்ன கால்குலேஷன் தா அவன் உண்மையாவே உன் வீடியோவை எடுத்து இருந்தால் அது இப்போதைக்கு உன் நோட்டிஃபிகேஷன் போக்ஸ்ல இருக்கும், இவன் இவ்ளோவ் நேரத்தை பேசி வேஸ்ட் பண்ணி இருக்க மாட்டான்" என ஜானாசொல்லும் போது தான் அடுத்தவளின் புத்திக்கு உரைத்தது,
அவள் எதிரி ஒன்றும் மடையன் அல்ல அவளின் பலகீனம் அவள் கைகளில் இருந்தும் அவளுடன் நின்று உரையாடுவதற்கு அவன் வீடியோ எடுத்திருந்தால் அது இந்நேரம் காற்றில் பரவி இருக்க எல்லா வாய்ப்புகளும் உள்ளது, எதற்கும் ஒரு சாட்சிக்காக அவள் கைபேசியை எடுத்து அதை சோதித்து கொண்டால், புதிய நினைவூட்டல்கள் எதுவும் இல்லை என்பதை பார்த்த உடன் தான் நிம்மதி பெருமூச்சு விட்டாள்,
இப்போது இன்னொரு முடிக்க வேண்டிய வேலை ஒன்று பாக்கி இருக்கிறது என்று நினைத்தவாறு தியாவின் பக்கம் திரும்பினாள்...
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro