Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

பாசம் - 14

அவள் எதிரியோ அதற்கு மேல் அவளிடம் எதுவும் பேசாமல் ஜானாவின் கையில் இருக்கும் கைபேசியை பிடுங்கி கொண்டு அறையை விட்டு வெளியேறினான்

தோழிகளோ ஒருவருக் கொருவர் பார்த்தவர்களாக திகைத்து போய் நிர்க்க அப்படியே மௌனத்தில் நேரம் கழிய..

ஒரு கட்டத்தில் ஜானாவின் வீட்டிலிருந்து அழைப்பு வந்திட அவளும் அங்கிருந்து வெளியேற..

அந்த கனமான நிசப்தம் மீண்டும் தியாவின் அழுகையினால் கலைந்தது.

நானி அவள் அருகில் சென்று அவள் தோளில் கை வைக்க அவளை கட்டி பித்தவளாக அவள் அழுகை இன்னும் அதிகமானது,

“நேனு பயப்படுத்துன்னான்னு நானி, நான் அவனை கண்மூடித்தனமாய் நம்பியது தப்புதான் காணி நாக்கு இன்டக பெத்த பெனாலிட்டி  லேது...என் அப்பா அம்மாக்கு கூட நான் திடீர்னு மிஸ் ஆனால் சந்தேகம் வருமா இல்ல அதுவும் தெரியாம போய்டுமான்னு தெரியல பாவம் என் தாத்தா பாட்டி வாறு ஏம்மி சேஸ்த்தாறு?...வாறு நாகோசம் எக்கடுன்னாரு அவங்களுக்கு நான் இல்லாம  என்ன பண்ண முடியும் அல்ரெடி அப்பா அம்மா விட்டு போய்ட்டாங்க இப்புடு நேனும் கூட...” என்று அவள் அதை முடிக்காமல் விட

நானியோ “இப்போ எதுக்கு இப்படி பேசுற லூசா நீ? இப்ப என்ன ஆகி போச்சுன்னு நீ நாளைக்கே சகா போன்ற மாதிரி பேசுறே-” இடையில் பேச வந்த அவளை பேச விடாமல்,

“இப்ப என்ன அவன் என்ன பெரிய...கடவுளா அவன் அவன பாத்து நீ பயப்பிடுறதுக்கு அவனும் உண்ண மாதிரி என்ன மாதிரி ஒருநாள் சாக தான் செய்வான் மனுஷன் தானே அவன் அடிச்சா அவனுக்கும் வழிக்க தானே செய்யும் அவனுக்கும் கத்திய வச்சு சொருகுணா அவனு செத்து தானே ஆகணும், நீ தைரொயமா இரு உனக்கு அந்த மாதிரியெல்லாம் எதுவும் நடக்க விட்டுட்டு இருக்க மாட்டோம் இங்க நீ just தனியா சுட்டதுரத அவோய்ட் பண்ணி crowded places சோட நிறுத்திக்கோ எனக்கு தெரிஞ்சி இந்த ஆள்கள் எல்லாம் public ல யாரும் kidnapp பண்ணி இருக்க சான்ஸ் இல்ல இவங்கல isolate பண்ணினது நால தான் இன்னும் யாருக்கும் சந்தேகம் வரல” என்று சொல்லிவிட்டு சிறிது நேரம் அமைதியாக இருந்தவள் மீண்டும்,

“எதுக்கும் கைல மொளகா பொடி பாக்கெட்,பேப்பர் spray,  எப்போவும் ஸ்டாக் வச்சிக்கோ முடிஞ்சா ஒரு பாக்கெட் knife யும் கொண்டு போ, மொதல்ல இப்படி அழரத நிறுத்து” என்று அவள் அறிவுரை கூற,

தியா கண்களை துடைத்து கொண்டவாறு

“எனக்கு பயமா இருக்கு இன்னக்கி நான் உன் வீட்லயே தூங்கிடவா?” என்று அவள் கேட்டவுடன் நானியின் பார்வை மென்மையானது,

“of coures sweet heart நான் அம்மா கிட்ட சொல்லி உனக்கு dinner பண்ண சொல்றேன் நம்ம ஏதாவது movie பாத்துட்டு தூங்கலாம்” என்று அவள் உற்சாகத்துடன் சொல்லி விட்டு அவள் அறையில் இருந்து வெளியேறினால்.

---------------

அன்று இரவு உணவிற்கு அபீ வரப்போவதில்லை என்று சொன்ன தாக அம்மா சொன்னாள் இருந்தும் அபியின் பங்கான அவனின் கோழியின் காலை அவளுக்கு எடுக்க மனதில்லை.

தியாவும் அவளும் கிட்டத்தட்ட படத்திற்குள் மூழ்கிப்போனவுடன் அவளின் கைபேசி அழைப்பு மணி அவள் காதுகளுக்கு கேட்டது,

அதன் திரையில் அவன் பெயர் இருந்ததால் எப்போதும் போல அவள் அதை அட்டெண்ட் செய்யாமல் வாசலுக்கு பொய் கதவை திறக்க அவனோ முகம் வியர்த்து தலை களைந்து போய் குடியின் மணமும் பெண்ணின் மணமுமாக வாசலில் கூறில்லாத பார்வையுடன் வந்து நிற்க்க அவளால் அவள் கைகளை நிறுத்த முடியவில்லை.

ஆனால் அவனோ அவள் விரல்களில் பிரதிகள் அவன் கன்னத்தில் விழுந்ததில் தாக்கம் அவனுக்கு இல்லை என்பாற்போல்,

“போடி… சும்மா.. வழி விடு நான் போகணும்” என்று அவளை நகர்த்திவிட்டு அவன் அவனுடைய அறைக்குள் செல்ல,

“இப்படியே குடிச்சி கொஞ்சம் கொஞ்சமா செத்துக்குட்டு இருந்தால் அவள் பன்னதையோ இல்ல அவளையே மறந்திட முடியும்னு நினைக்கிரியா?” என்று அவள் அவன் பின்னால் சென்று கொண்டு கேட்க்க,

அவனோ அதற்கு ஒரு ஏகத்தள சிரிப்பு ஒன்றை சிரிக்க ஆரம்பித்தவன் அதை தொடர்ந்து,

“ஹாஹா நான் அவளுக்காக தான் இன்னும் உருகி உருகி feel பண்ணி வேற பொண்ணுங்க கூட இருக்கேன்னு  நினைச்சிக்கிட்டு இருக்கியா நைலா, ஏன் இன்னும் darn f******* innocent அ இருக்க நைலா அவள் chapter அ நான் என்னைக்கோ என் life ல இருந்து close பண்ணிட்டேன், இது….எனக்காக this is my way of….relaxation…” என்று அவன் விட அவளோ அருவருப்பில் முகத்தை திருப்பிக்கொண்டு அவனை திரும்பி பாராமல் அவள் அறைக்கு மீண்டும் செல்ல,

அங்கிருந்த தியாவோ அவள் அங்கு வந்தவுடன் “gabbya?” என்று கேட்டதற்கு அவள் தலையாட்ட அவளோ வாய்க்குள் முணங்கிக்கொண்டு பிறகு நாணியிடம்,

“என்ன தான் அவன் உன் brother அ இருந்தாலும் அடிக்கிறது எல்லாம் ரொம்ப ஓவர் நானி how could he? நீ நம்பரியோ இல்லையோ நான் first தடவை அவனை பாத்தப்பவே ஒரு பெண்ணை மோசமா பேசி எல்லாருக்கும் முன்னால அவளை break up பண்ணி அவமானம் படுத்திட்டு இருந்தான், அந்த பொண்ணு அழரத பாத்து சிரிக்கவேர செய்றான் such a sadist-” என்று அவள் அதற்கு மேல் போகும் முன்,

“தியா எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு நீ tv பாத்துட்டு இரு இல்லனா தூங்கு நான் இப்ப வந்துடறேன்” என்று சொல்லி ஒட்டி அவள் தோழி அவள் எதிரியின் மேல் போடும் பழியையும் தாங்கிக்கொள்ள முடியாமல், அவனிடம் முழுயாக கோபமும் கொள்ள முடியாமல், அவளோ கால் நடக்கும் பாதையில் செல்ல அவள் கண் முன்னால் அவள் கடந்த கால காட்சிகள் படமாய் ஓட ஆரம்பித்தது,

“ஏன்டா சஞ்சனா கிட்ட அப்படி பேசுனே? என்னவோ true love கோவா beach ல marriage னு என்ன என்னவோ ஒளரிட்டு இருந்தே?அந்த ஷாலினி கெட்ட பொண்ணுன்னு அன்னைக்கு தானே சொன்னே இப்போ எதுக்கு நீ ஷாலிலியோட சேர்துகுட்டு அவள...பாவம் அந்த அக்கா நீ போனப்பரம் எவ்வளவு அழுதங்க தெரியுமா? ஏன் இப்போ பதில் சொல்லாம நிக்கிற ஏதாவது சொல்லு” என்று பதிமூன்று வயதை சேர்ந்த  நாணி அவனிடம் சத்தம் போட அவனோ அவளிடம் ஒரு வேற்று பார்வையை வீசியவாறு,

“எனக்கு நெறய வேலை இருக்கு நைலா என் ரூமை விட்டு வெளியே போ” என்று கூற,

அவனோ இப்போதெல்லாம் அவளிடம் சரியாக பேசுவதில்லை அடிக்கடி கடிந்து கொண்டவனாக அவளை ஒதுக்கி கொண்டே இருப்பது அவள் மனதில் ஒரு தூரத்தை ஏற்படுத்தி இருந்தது இன்று அவன் அவளை முற்றிலுமாக வெளியில் தள்ளும்போது அவளால் தாங்க இயலவில்லை ஒருபுறம் அவனுக்கு முதுகை காண்பித்து அவனை இனி ஏறெடுத்தும் பார்க்க கூடாது என்றிருந்தாலும் இன்றும் அவளால் அவனை புரிந்து கொள்வதை மட்டும் நிறுத்த முடியவில்லை,

என்னதான் அவன் அடிக்கடி கோபப்பட்டாலும் இன்று கேன்டீனில் பார்த்த அபீ அவள் அபீ கிடையாது நிச்சயம் இதற்கு ஏதாவது காரணம் இருக்கும்,

அவனோ அங்கு இருந்த அவனுடைய படுக்கையில் அமர்த்த வாறு அவளை முறைத்துக் கொண்டிருக்க,

அவளோ அவனருகில் சென்று நின்றுகொண்டு அவளுக்கு சூடு பார்வை விடும் அவன் கண்களை பார்க்க அது முற்றிலும் சிவந்து எப்போதும் இருக்கும் அவனின் கண் இல்லாமல் வேறொருவர் கண்போல் இருக்க

அவள் கையை அவன் கன்னங்களில் வைக்க அவனோ அதை தட்டி விட்டான்,

அவளுக்கோ அவன் சிவந்த கண்களில்ன் மாயம் வெளிப்பட அவன் கன்னத்தில் மீண்டும் கைவைத்து அவன் முகத்தை நிமிர்த்தி மீண்டும் அவனை பார்த்த போது தான் அவன் கண்களில் தேங்கி இருந்த கண்ணீர் அவளுக்கு தெரிந்தது,

என்றும் அந்த நிலையில் பார்க்காத அவனை அப்படி ஒரு நிலையில் பார்த்து திணறிய அவள்,

“அபீ” என்று அவள் கூற அவனோ அவள் வயிற்றை மூச்சு முட்டும் அளவிற்க்கு இருக்க கட்டிக் கொண்டு சிறிது நேரம் அமைதியாய் இருக்க பிறகு குழுங்க ஆரம்பித்ததும் தான் அவன் அழுகிறான் என்பதை அவள் அறிந்தாள்,

“அபீ” இந்த முறை அவள் பதற்றத்தில் குரலை ஏற்றி கேட்க்க,

“she don't like me nyla, she’s just acting...I saw them...She...She’s kissing him and more then that… எல்லாமே பொய்” என்று அவன் உடைந்த கண்களுடன் அவளிடம் சொல்ல அவளுக்கோ அவன் வழி எதற்கென்று புரியவில்லையோ ஆனால் அவன் வலி அவளை காயபடுத்துவதை மட்டும் உணரமுடிகிறது,

“அபீ அழாத அபி” என்று அவள் குரல் நடுக கண்ணீர் தேங்க பதறிப்போய் கூறினாள்,

“அது தான் அப்படி பண்ணுனேன்...எப்படியும் ஒருநாள் எல்லாத்துக்கும் முன்னால அவள் என்னை விட்டுட்டு அவன் கூட போய்டுவா அதுதான் அவளுக்கு முன்னால நானே அதை பண்ணிட்டேன்” என்று இன்னும் அவள் வயிற்றுக்குள் ஒழிந்துகொண்டு அழ,

என்றும் அழுது பார்க்காத அவனை அப்படி பார்க்க அவளால் முடியவில்லை சிறிது நேரம் அவள் அழுகையை விழுங்கி விட்டு  அவன் அணைப்பிலிருந்து எழுந்து அவன் அருகில் படுக்கையில் அமர்ந்து,

அவனை அவள் மடியில் தள்ளி அவன் முடியை வருடியவாறு “it’s ok abi may be she is not your soul mate அதுனால தான் கடவுள் அவளுக்கு உன்னை பிடிக்க வைக்கல உன் soul mate வந்தப்பரம் எல்லாம் சரி ஆயிடும் நீ அழாதே” என்று அந்த 13 வயது பிஞ்சு மனதிற்கு தோன்றியதை அவனுக்கு ஆறுதலாய் சொல்ல அவனுக்கோ அது எதுவும் விழங்க வில்லை,

“என்னை எதுக்கு யாருக்குமே பிடிக்கல நைலா முதல்ல என் அம்மா என்ன வேணான்னு யாரு கூடவோ போய்ட்டாங்க, அப்பறம் என் அப்பா, இப்போ சஞ்சனா...என்னை ஏன் யாருக்குமே பிடிக்க மாட்டேங்குது” என்று பாசம் என்றால் என்னவென்று சரியாக அறிந்திடாத 17 அவனும் அவன் வயதிற்குள் அடங்காத விரத்தியுடன் அவளிடம் சொல்ல அவளுக்கோ இதற்கென்றே காரணம் தெரியாமல் கண்களில் இருந்து கண்ணீர் தாரை தாரையாக வடிந்திடியவாறு அவளோ...

“ஏன் அப்படி சொல்லரா? அப்பா போனப்போ நீ தானே சொன்னே நான் எப்பவும் உன் கூட இருப்பேன்னு அப்போ நான் மட்டும் எப்படி உன்னை விட்டுட்டு போவேன்? எப்பவும்...even after death நான் எப்பவும் உன் கூட தான் இருப்பேன்” என்று அவள் கூற

அவனோ “really?” என்று அவன் தலையை எடுத்து கொண்டு கேட்க்க,

“really… நான் எப்பவும் உன் கூட தான் இருப்பேன்” என்று அவள் கூற அவனோ புருவத்தை சுருக்கியவாறு,

“அப்போ உன் புருஷனுக்கு என்னை புடிக்கலன்னா என்ன பண்ண?” என்று அவன் கேட்க அவள் புருவத்தை சுருக்கியவாறு சற்று யோசித்து விட்டு,

“புடிக்கலன்னா அவன divorce பண்ணிட்டு வேற உண்ண பிடிச்ச புருஷனை கட்டிகிறேன் போதுமா?” என்று அவள் கூற அவனோ அவளை நம்பமுடியாதவாறு பார்த்து விட்டு,

“நெஜமாவா?”என்று சந்தேகமாக கேட்க்க,

“நெஜ்ஜஜமா” இரு அவள் கண்ணை இருக்க மூடியவாறு கூற அவனோ முகத்தில் ஒரு மெல்லிய புன்னகையுடன் மீண்டும் அவள் மடியில் படுத்தான்…

என்ற அவனின் குரளுடன் அவள் பாதங்கள் தானாக நிற்க்க என்ன இடமென்று அவள் பார்க்க.

அவள் நின்றதோ 4 வருடத்திற்கு முன் அவன் அவளை வெளியே போகச் சொன்னா அதே அறையின் வாயில்.

அதன் உள்ளோ அவன் குளித்து விட்டு அரை கால்சட்டையுடன் தலையில் ஈரத்துடன் நிர்க்க,

அவளோ அங்கு உறைந்து நின்றாள் அவன் அவளை பார்த்துவிட்டு முதலில் உறைந்து நின்றவன்

பிறகு அவளருகில் வந்து நின்று அவள் கன்னங்களில் கைவைத்து கட்டை விரலால் தடவியவன் பிறகு அவள் கண்களை பார்த்தவனாக நின்றவன்..

சிறிது நேரம் அவன் அறைக்குள் புகுந்தவன் கையில் ஒரு ட்டியுபுடன் வந்தவன் அதை அவன் விரல்களில் எடுத்து அவள் கன்னத்தில் தெரிவித்து அந்த இடத்தில் மெலிதாய் காற்றை ஊதியவன்

“ஏன் நைலா இன்னிக்கும் உனக்கு அங்க தூக்க பயமா இருக்கா?.....நீ வேணுன்னா இன்னிக்கும் என் கூட தூங்கிக்கோ ஓகே…” என்று அவன் நிதானம் இல்லாமல் சிறு பிள்ளை போல் கூற அவளோ முதலில் ஒன்றும் சொல்லாமல் அங்கேயே நின்று கொண்டிருந்தவள் பிறகு அவன் உள்ளே போன வழியை பார்த்து பின்தொடர்ந்து அவன் கைகளுக்கு அடியில் கையை வைத்து படுத்து கொண்டாள்.

அவனோ அவள் தலையை எடுத்து அவன் தோழின் மேல் வைத்து விட்டு அவள் மூக்குடன் அவன் மூக்கை உரசியவன் “now my nyla is always gonna be safe in my arms” என்று அதை பாதி உலரியவனாக கண்களை மூடினான்.

“ஏன் அபீ இதெல்லாம் சாப்பிட்டு உடம்பு கெடுத்துக்குற” என்று அவள் மெதுவாக அவன் தலையை வருடியவாறு கூற அவனோ கண்களை சிரமத்துடன் திறந்து,

“எல்லாம் உன்னாலதான்” என்று சொல்லிவிட்டு அவன் உதட்டை குவித்து கொள்ள,

“என்னாலையா நான் என்ன பன்னேன்?” என்று அவள் அவனிடம் எதார்த்தமான குழப்பத்தில் கேட்க்க,

“நீதான் அவன் உன்ன கொல பண்ண போறான் உனக்கென்ன அப்படி இப்டின்ன்னு என் மண்டைய போட்டு குழப்பி விட்டுட்டே...நான் அதே கோபத்துல வெளிய போனேனா இந்த ஹர்ஷா பக்கத்துல கிளப் எங்கேயோ கூட்டிட்டு போனானா போய் சரகடிச்சா தான் நான் கோபமா இருக்க மாட்டேன்னு சொல்லி அதை எடுத்து கைல கொடுத்தானா நானும் பாத்தேன் அல்ரெடி உன் மேல கோபமா வேரா இருந்தேன் சோ அத பார்த்த உடனே நீ இதை சாப்பிட்டா கோப்படுவேன்னு ஞாபகம் வந்துச்சா…” என்றவாறு அவன் அவளை பார்க்க அவளோ ஆர்வமாக.

“ம்ம் எனக்கு பிடிக்காதுன்னு ஞாபகம் வந்தப்ப என்ன பண்ண?” என்று அவள் சற்று எதிர்பார்ப்புடன் கேட்க்க.

“ம்...நா தான் உன் மேல கோபமா இருந்தனே அதான் தப்பிள்ளைன்னு குடிச்சிட்டேன்” என்று அவன் கண்களை சுருக்கியவாறு சற்று பயத்தில் கூற அவளுக்கோ ஏமாற்றமும் கோபமும் ஒன்று சேர்ந்து வர,

“போடா” என்றவாறு அவள் அவனின் தலையை தட்ட அவனோ குழந்தை போல்  உதட்டை குவித்துக்கொள்ள

அவள் அதை பார்த்து புன்னகைத்து பிறகு ஏதோ ஒரு எண்ணத்தில் அந்த புன்னகை காணாமல் போய்,

“you know i dont like girls perfumes on you, நீ ஏன் இன்னும் இப்படியே இருக்கே?” என்று எதார்த்தமாக அவள் கேட்க்க,

“அது என் தப்பு இல்ல எல்லாம் அந்த….அந்த...ஷீலா…?ஷில்பா...ஷ்...யாரோ அந்த பொண்ணு தான் அங்க என் கூட டான்ஸ் பண்ணுறேன்னு first touch பண்ணது...நான் just கம்பெனி கொடுத்தேன் அப்பறம் கொஞ்சம் நேரத்துல ரொம்ப freaky யா சிரிச்சிட்டு என்ன அவள் வீட்ல drop பண்ணி விட சொன்ன சோ நானும் அங்க போனால் அங்க யாருமே இல்லை-”

“அபீ”

“அப்ப தான் லைட்டா மூட்-”

“அபீ”

“அப்பறம் அந்த பொண்ணு ரூம் குள்ள போய் ஒரு குட்டி ட்ரெஸ்-”

“அபீ” என்று அவள் இந்த முறை சத்தமாக அவனை நிறுத்த அவனோ பாதி தூக்கம் பாதி குழப்பத்தில்,

“என்ன?” என்று கேட்க்க,

“தூங்கு” என்று அவன் தூக்கி இருந்த தலையை கீழே இறக்கி தலையணைக்குள் அமர்த்த அவன் மீண்டும் கண்களை மூடியவன் சிறிது நேரத்தில் அவன் மூச்சு காற்று சீராய் வர ஆரம்பிக்க அவளோ சிறிது நேரம் அவனுடன் படுத்து இருந்தவள் தன் தோழியின் நினைவு வர எழுந்து அவள் அறைக்கு போகும்போது தான் உணர்தாள்,

இன்று அவள் அவனுடன் உறங்க தயாரானது அவள் பயத்திற்காக அல்ல அவளின் உயிரின் மேல் அவனுக்கிருக்கும் பயத்திற்காக என்று...

A/N: sooo...which is your favorite part?...please vote and comment your opinions...

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro