Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

திருட்டு - 20

"என்ன blue whaleலா?" என்று அவள் அதிர்ச்சியில் அலற

அவனோ அவளிடம் இருந்து விலகிப்போனவாறு முகத்தில் ஒரு எரிசச்சலுடன் "ஆமா blue whale தான் அதுக்கு எதுக்கு என் காதை ப்ளாஸ்ட் பண்ணற" என்றதோடு

அவன் மீண்டும் அந்த லெப்டாப்பை பார்க்க அவளோ அருகில் சென்று அவளும் அதில் என்ன தான் இருக்கிறது என்று பார்த்திட

அவளுக்கோ ஒன்றும் புரிவது போல் இல்லை....

ஒரு கட்டத்தில் அருகில் இருந்தவன் அவள் நெற்றியில் ஆள்காட்டி விரலை வைத்து அவள் தலை விளக்கியபோது தான் அவனையே கவனித்தால்...

"இதுக்கு என்ன பிரச்சனை" என்று அவள் அருகில் இருந்த லெப்டோபின் புறம் கைநீட்டி கேட்க்க

அவனோ கண்ணை உருட்டிவிட்டு "பெருசா ஒன்னும் இல்லை...எனக்கு ஒரு சில போட்டோஸ் தேவப்பட்டதுன்னு கொஞ்சம் நாள் முன்னால இந்த ஜேசோனோட மொபைலை ஹேக் பண்ணி வச்சிருந்தேன்...
அப்பறம் அது தேவை படாதுன்னு அப்படியே விட்டுட்டேன்.... இப்போ தான் அவனோட டீடெயில்ஸ்க்கு ஒரு லம்ப் offer வந்திருக்கு...இப்பொன்னு பத்து அவனுக்கு புதுசா புத்தி எல்லாம் வந்து எதுக்கு பூமிக்கு பாரமாக இருக்கணுன்னு blue whale game போட்டு இருக்கான்...அதுதான் என் software இப்போ வேலை செய்ய மாட்டேன்கிறது...என்னால் அவன் மொபைலை பார்க்க முடியுது ஆனால் அக்சஸ் பண்ண முடியல...actually it's kinda irritating-"முன்னாள் வாயை பிளந்து கொண்டு அதிர்ச்சியில் உறைந்திருப்பவளின் முகத்தை பார்த்து அவன் குரல் அமைதியானது....

"என்ன?"என்று அவன் குழப்பத்தில் கேட்க்க...

"ஜேசன்" என்றதோடு அவள் குரல் உள்ளே போனது...

"ஜேசன்?...so" அவன் புருவத்தை தூக்க...

"you mean jason...as in the guy who sat two row back from my bench.... is going to die in somedays?" என்று அவள் கேட்க்க அவனோ கண்ணை உருட்டிவிட்டு...

"அதுக்கென்ன இப்போ?" என்று அவன் கூறிட அவளோ கோபத்தில் அவனை தலையில் ஒறு அடியை போட அவனோ அவனை முறைக்க ஆரம்பித்தான்...

"உன்னோட படிக்கிற ஒருத்தன் சாக போரான்னு கண்டு புடிச்சிருக்கே அவனை காப்பாத்துறதை விட்டுட்டு அவன் மொபைலை பற்றி கவலை பட்டுட்டு இருக்கே?" என்று அவள் கோபத்துடன் கேட்க்க

அவனோ அவள் அவனுக்கு பிடிக்காது எதையோ சொன்னது போல் முகத்தை வைத்துக்கொண்டு

"அதை எதுக்கு நான் செய்யணும்? சகனுன்னு இவ்வளவு முயற்சி செய்யிறவங்களை எல்லாம் மத்தவங்க காப்பாத்துரதே தப்புன்னு நான் சொல்வேன் அந்த முட்டாள் தனத்தை நான் எதற்க்கு பண்ணுவேன்னு நீ நினைக்கிறே?" என்று அவன் கேட்டிட

முதலில் ஏதோ பேசப் போனவள் பிறகு நம்பிக்கை இழந்து முகத்துடன் தலையை ஆட்டிக் கொண்டு சற்று நேரம் அமைதியாக போனவள் சிறிது நேர மௌனத்திற்கு பிறகு

"நீ இதுகுள்ள தலை விட்டால் போலீஸ் பிரச்சனை வரும்னு நினைக்கிரியா?" என்று அவள் சுருங்கிய புருவத்துடன் கேட்க

அவள் என்னவோ வானம் நீளமா என்று கேட்டதை போல் அவளை பார்த்து விட்டு

"இதுல என்ன நினைக்கிறதுக்கு இருக்கு of course பிரச்சனை வரதான் செய்யும் அதுவும் நான் ஒன்னும் இங்க நல்லவன் இல்ல என்னை பரிதாபப்பட்டு விட்டுட்டு போறதுக்கு... நான் பண்ண அல்மோஸ்ட் ஆக்சிடெண்ட்ஸ்... அதுக்காக போலீஸ்ட இருந்து எஸ்கேப்ஸ் அப்பறம்..dink and dirve அப்பறம் அவனுங்களுக்கு முன்னால ஏகத்தாளமாக பேசுனது... நான் எல்லாம் அவங்க கிட்ட மாட்டினால் அவனுங்களுக்கு கொண்டாட்டம் தான்... அதோட நான் என் க்லைண்ட்சோட விஷயங்களை வெளிய பேச மாட்டேன்" என்று அவன் மீண்டும் கணினியில் இருந்து முகத்தை எடுத்து அப்போது தான் அவளை பார்த்ததான்

அவள் முகமோ அச்சர்யத்திற்கும் குழப்பத்திற்கும் நடுவில் இருந்தது...

"அப்போ எதுக்காக என் கிட்ட சொல்லற?" என்பதை அவள் பாதி பயத்துடனும் அளவற்ற ஆர்வத்துடனும் கேட்க்க

அவனோ அப்போது தான் மீண்டும் அந்த கணினியில் இருந்து முகத்தை எடுத்து விட்டு அவளிடம் அந்த பெரிய புன்னகையுடன் பேச ஆரம்பித்தான்...

'oh....my...god....கடவுளே என்னை காப்பாத்து' என்ற அவள் வேண்டுதலை களைத்தவாறு.

"இல்ல நீ expection" என்று சிறு பிள்ளையை கிள்ளுவது போல அவள் கன்னத்தை கில்ல்லிக்கொண்டு

"ஏன நீ என்னோட pet" என்றதோடு அவன் மீண்டும் கணினியை காண

அவளோ வலிக்கும் அவள் கன்னத்தை தேய்த்துக்கொண்டு... "அப்படின்னா? என்ன பார்த்தால் உனக்கு நாய் இல்லன்னா பூனை மாதிரி இருக்குன்றியா?" என்று அவள் முறைக்க

அவனோ இன்னும் கணினியில் இருந்து கண் எடுக்காமல் சிரித்துக்கொண்டே " உன் சைஸ்க்கு நாய் பூனை எல்லாம் கொஞ்சம் சின்னதா தெரியல?" அவளுக்கோ இன்னும் கோபம் வர

அவளோ அவன் கையில் இருந்த கருவியை உருவி கீழே நிலத்திற்கு நேராய் காண்பித்தவாறு..."இப்போ சொல்லு நான் எப்படி இருக்கேன்" கையில் வலி தாக்கியும் பல்லை கடித்துக் கொண்டு அவள் கேட்க்க...

அவனோ கண்கள் பெரிதாகி முகத்தில் பயத்துடன்

"நீயாம்மா நீ ரொம்ப அழகுமா சன்னி லியோன் மியா கலிஃபா எல்லாம் உன் கிட்ட பிச்சை வாங்கணும் தயவு செஞ்சி லெப்டோப்பை அங்க இருந்து எடுத்துடும்மா..." என்று அவன் கூறிட

அவளோ குழப்பத்தில் லேப்டாப்பை அவள் மடியில் வைத்துக் கொண்டு முகத்தை சுருக்கி கொண்டு...

"இவங்கல்லாம் யாரு நான் கேள்வி பட்டதே இல்லையே" என்றிட

அவனோ சிரித்துக்கொண்டு அவன் லெப்டோப்பை கையில் எடுத்து இறுக்க கட்டிக்கொண்டு "அவங்க எல்லாம் நான் பார்க்கிற படத்தில் வர்ற ஆர்டிஸ்ட்ஸ்" என்றவாறு அங்கிருந்து கீழே இறங்க ஆரம்பித்தான்...

அவளும் அவனுக்கு பின்னால் இறங்க ஆரம்பிக்க அப்போது தான் அவள் இன்று காலுக்கு கொடுத்த தண்டனைகள் எல்லாவற்றையும் அது பிரதிபலிக்க ஆரம்பித்தது

அவளோ மிக்க சிரமத்துடன் கீழே இறங்கி தரையில் அமர்ந்து விட அப்போது தான் அவனுக்கு புரிய ஆரம்பித்தது... அவன் கண்களோ குழப்பத்தை காட்டியது அப்போது தான் கோபமாக மாறியது...

"The f*ing side effects...நீ இன்னும் painkiller use பண்ணாமல் மூணு மாடி ஏறி மேளா வந்து இருக்க?...are you...are you mad jaana?" இது தான் அவன் அவளை முதல் முறை அவள் பெயரில் அழைப்பது என்ற எண்ணம் அவள் தலைகுள் முளைக்க

அதற்காக அவள் தன்னை கடிந்து கொண்டாள்...

"it's okay... நீ கீழே போ...கொஞ்சம் லேட்டாகி நான் கீழ வர்றேன்" என்றதோடு அவள் கூற

அவனோ இன்னும் கோபம் குறையாமல் "like a hell i would leave you alone here...நாளைக்கு நம்ம 2 பேரும் போய் உன் டாக்டரை பார்க்கிறோம்... now come on..." என்றதோடு மீண்டும் அவன் அவளை காலுக்கு கீழும் முதுகிற்கு பின்னாலும் கைகளை வைத்து தூக்க

அவளோ "அய்யோ திரும்பவுமா... இப்படி பண்ணாத சமர் எனக்கு மற்றவர்களை சப்போர்ட்ல இருக்குறது சுத்தமா புடிக்கல..."

'நான் அந்த கோபத்தில் தான் கால் வலிச்சாலும் பரவா இல்லைன்னு நானே ஏறி வந்தேன்'

" just leave me ஏற்கனவே வீட்ல எல்லாத்துக்கும் அம்மா ஹெல்ப் அண்ணா ஹெல்ப் கேட்டு கோபத்தில் இருக்கேன்...leave me now..." என்று அவள் அலற

அவனோ அவளை ஆச்சர்யத்தில் பார்த்து விட்டு "பரவா இல்லை உன் காரணம் கொஞ்சம் கன்வின்சிங்கா தான் இருக்கு...but unfortunately அதை கேட்டுட்டு இருக்கிறது நான்...you see...சமர்...என்னை தவிர வேற யாராலும் என்னை கண்விண்ஸ் பண்ண முடியாது மிஸ் தக்காளி" என்ற அவன் மீதிருந்து இறங்க முயன்று வலியில் மீண்டும் தோற்று போய் ஒரு கட்டத்தில் அமைதியானாள் அவள்....

"இதுக்கு மேல் உள்ள போனா cctv கேமரா இருக்கும் சமர்" அவள் கைகளை கட்டிக்கொண்டு வெற்றிடத்தை முறைத்துக் கொண்டு கூற

அவனோ சிரித்துக்கொண்டு..."ஹலோ நீ பேசிட்டு இருக்கிறது ஒரூ ஆசம்
ஹேக்கர் கிட்ட கேமரா நான் சொல்லர நேரத்துல ஆணாகி ஆஃப் ஆகும்"

அவன் நேராய் நடக்கி வாசல் வந்த பிறகு

"இப்போ வாவது இறக்கி விடு இப்போ இருந்து எல்லோராலையும் நம்மல பார்க்க முடியும்" என்றிட இதை முறை அவன் கீழே இறக்கி விட்டுவிட்டு...

"Definitely...i don't want spoil my reputation for you after all" என்று அவன் கூறி விட்டு அவன் ஒரு பக்கம் நடக்க ஆரம்பிக்க..

அவளோ "அதை நான் சொல்லணும்" என்று கோபத்துடன் கூறிவிட்டு அவளும் மறுபக்கம் பார்த்து நடக்க ஆரம்பித்தாள்..

-----------

வெயில் வெப்பத்தின் தாக்கம் குறையும் மதியத்தின் பின் நேரம் அது...

எறும்புகள் போல் சாலைகளில் வாகனங்கள் வரிசையில் ஓட அதன் சலசலப்புடன் சேர்ந்து நடை பாதையில் நடக்கும் மனிதர்களின் பேச்சு சத்தமுமாக இருந்த அந்த சாலையில் தனித்து நிற்கும் அந்த கண்ணாடியிலான உயரமான கட்டிடத்தின் மேல்தளத்தில் கண்ணாடிக்கு பின் கோபத்துடன் வீரிட்டுக்கொண்டிருக்கும் நம் கேப்ரியளின் குரலோ அவன் இருந்த அறையை அதிர செய்தது...

"என்ன காணோமா? இதை எதுக்கு நீ் என்கிட்ட முதலிலேயே சொல்லலன்னு தெரிஞ்சிக்கலாமா?" அவனோ வருடக்கணக்கில் முதலீடு இட்டு தன்னிடமிருந்த சிறந்த ஆராய்ச்சியாளர்களை தேர்வுசெய்து வெளிநாட்டு அரசுகளின் கண்களை கட்டி அங்கு சிறந்த கச்சா எண்ணெய் கிணற்றை தோண்ட இடத்தை கண்டு பிடித்து அனைத்தையும் தயார் செய்து அதை விலைக்கு வாங்கும் தருவாயில் அதை மற்றவன் இடையுறுவதா?

"சார் அது தான் நம்மகிட்ட காப்பி இருக்கேன்னு நான் அதை பெருசா எடுத்துக்கல சார்" முன்னால் நின்ற அவன் அனுப்பிய அணியை சேர்ந்தவனோ முட்டாள்தனத்தை வாயிலிருந்து கொட்ட...

பள்ளைகடித்துக் கொண்டு நெற்றியில் நரம்பு தெறிக்க ஜீயோ தன்னை ஆசுவாசப்படுத்த முயன்றவாறு மூச்சை இழுத்துவிட்டவாறு...

"அப்போ உனக்கு நாலு குழந்தை இருக்கு ஒண்ணு திருட்டு போச்சுன்னு மிச்ச மூணு வச்சு சமாளிச்சுக்கலாம்னு அப்டியே விட்டுடுவியா?" தன் எஜமானன் கோபத்திற்க்கோ இல்லை இப்போது அவன் கூறும் எடுத்துக்கட்டிருக்கோ பொருள் தெரியாமல் குழம்பி போய் அமர்ந்து இருந்த அந்த நாற்பதுகளை சேர்ந்தவனோ ஜீயிடம் வாதிக்க வாய் திறக்க அவன் அதற்கு முன்னால்...

"you bloody... இத்தனை நாட்கள் இல்லாமல் நீங்க ப்ரொஜெக்ட் முடிக்கிற நேரத்தில் உன்னோட ஒரிஜினல் காபி இருக்குற பென்றைவ் காணாமல் போய் இருக்கு...காபி வச்சி சமாளிக்கிறேன்னு சொல்லரா...bloody dumb.. use your brain..."

கேப்ரியளின் கோபமோ விட்டத்தை தொட அருகில் வலப்புறம் இருக்கும் அவன் நம்பிக்கை கூறிய நண்பனோ முன்னாள் இருந்த மேஜையில் கைகளை வைத்துக் கொண்டு நெற்றியில் கட்டை மற்றும் ஆள்காட்டி விரல்களால் தேய்த்து அவன் தலை வலியை குறைத்துக் கொண்டு தன் எஜமானனை அமைதிப்படுத்த வழித்தெரியாமல் அவனை பார்த்துக்கொண்டிருக்க...

"you are fired... get the hell out of my office" என்று அளரிட அங்கிருந்தவன் பாதி குழப்பத்தில் கோபத்திலும் எழுந்து சென்றிட அவனுடன் அவனின் இருபதுகளில் அருகில் நின்ற அசிஸ்டெண்டும் பின்னால் நடக்க ஆரம்பித்தவன் ஒருமுறை தன் மேல் அதிகாரியை பார்த்து விட்டு பிறகு கேப்ரியளின் புறம் திரும்பி "சார் அந்த பென்றைவில் டேட்டா பதிவு பன்னது நான் தான் சார்... அதனால தான் எதுக்கும் இருக்கட்டும்னு நம்ம சேகுறிட்டி டிப்பார்ட்மென்டில் ரேகமெண்ட் பண்ண ட்ரைவ் லாக்கை இன்ஸ்டால் பண்ணி இருக்கேன் சார்...சாருக்கு அவருக்கு இந்த சீக்ரேட் மிஷன் பற்றி எல்லாம் அவ்வளவு தெரியாது சார் ஆனால் i can say he is great geologist sir.." என்றதோடு அவனும் திரும்பி தன் மேல் அதிகாரி போன வழியில் சென்றான் கார்த்திக்...

ஜீக்கோ கோபம் கொஞ்சம் குறைந்தது போல் இருந்தாலும் இன்னும் முழுதாக போய் விட வில்லை...

கோபம் தெரிப்பவனின் எதிரில் நிற்கும் அவனின் மேனேஜரோ கைகள் நடுங்க எச்சிலை விழுங்கியவாறு...

"இப்போ என்ன பண்ணலாம் சார்...?" என்றிட ஜீயோ அவனுக்கு ஒரு ஏறி பார்வையை விட்டுவிட்டு...

"நம்ம டிடெக்ட்டிவ்ஸ் கிட்ட ஏதாவது தகவல் கிடைக்காதா?"

அந்த இருப்பதில் கடேசிகளில் இருப்பது போல் தெரியும் அவன் தன் முன் இருப்பவனின் எதிர்வினைக்கு பயந்தவாறு எஜமானனிடம் ஒரு பையை முன்னாள் வைத்து...

"அங்கே இருந்த பெட்ரோல் பங்க் அப்பறம் ஷாப்பிங் மால்லில் அவங்களுக்கு கிடைச்ச சிசிடிவி ஃபூட்ஜ் சார்..." அந்த பையை இருந்ததை எடுத்து ஆரைந்தவனோ அதில் அவன் பணியாளர்களின் போட்டோக்களை கண்டதும் கேப்ரியளின் கோபமோ அளவை கடந்தது அதை கவனிக்காத அவன் மேனேஜரோ...

"but சார் இதை பண்ணவங்க தெளிவாக திட்டம் போட்டு ப்ரொஜெக்ட் காக நம்ம சீக்ரெட்டா துபாய்க்கு அனுப்பின ஜியாலொஜிஸ்ட்ஸை கண்டு பிடிச்சு ப்ரொஜெக்ட் முடியிர நேரம் வரைக்கும் காத்திருந்து அப்புறம் அதை பத்தின தகவலுக்கு எல்லாம் இருந்த பெண்ட்ரைவை எடுத்து இருக்காங்க சார் இது கண்டிப்பா அந்த நாட்டு காரங்க பன்னது இல்ல சார் நமக்கு தெரிந்த யாரோ தான் உங்களோட பெயரை கெடுப்பதற்காக பண்ணி இருக்கங்க "

முன்னாள் நிற்கும் தன் மேனேஜரோ மீண்டும் தெரிந்த விஷயங்களையே கூறிக்கொண்டிருக்க

ஜீயோ தன் அந்த போட்டோக்களில் சிகப்பு வட்டங்கள் போடப்பட்ட அந்த முகத்தை அறையிலிருந்து மற்ற இவரிடம் காட்டினான்...

"பீட்டர்" மீதம் இருந்த இருவரும் சேர்ந்து கூறிட பிறகு இருவரும் சற்று நேரம் அமைதியான...

சிறிது நேரத்திற்கு பிறகு அவன் நண்பனும் நிறுவனத்தை பொருப்பாளருமான ரிஸ்வான் பேச ஆர்பித்தான்...

"ஜி அல்ரெடி வெப்பன் பிஸ்னஸ்ல இப்போ நம்ம லீட்ல இருக்கோம்னு அவன் கோபத்தில் இருக்கான் இப்போ நீ ஆயில் டிரேடிங்குள்ள இறங்குனேன்னா இந்தியா தொழிலதிபர் பட்டியலில் அமீரோட பெயர் இரண்டாவது இடத்திற்கு வர வாய்ப்பிருக்கு அதை தடுக்க தான் காசிம் பிளான் பண்ணி இருக்கான்னு நினைக்கிறேன்..." அமீர்... அமீரை பொறுத்த வரையில் அவன் பொருளாதாரத்தில் முதலில் இருப்பதோ இல்லை காடேசியில் வருவதை பற்றியோ யோசிக்க நேரம் ஒதுக்கும் ஆள் அவன் இல்லை அவனுக்கு வேண்டியது எல்லாம் எதிரில் நிற்பவனின் கண்களில் தெரியும் மரண பயம் தான்...

மற்றவர் நெஞ்சத்தில் திகிலை கொடுப்பது தவிர்த்து அவனுக்கு விருப்பமானது எதுவும் கிடையாது ஆனால் அவனின் நண்பன் மற்றும் அவன் நிறுவனத்தின் பொருப்பாளனான காசீமுக்கோ வேண்டியது மற்றும் தெறிந்தது எல்லாம் பணம் தான்...

அவனின் சம்பள கொடுத்த அடிமைகளிள் ஒருவன் தான் இந்த பீட்டர்...

இதை எல்லாவற்றையும் பார்க்கும்போது இப்போது தான் இறங்கி இருக்கும் வேலையை தகுந்த ஆதாரத்துடன் வெளி அரசிடம் காட்டி கொடுத்து விட்டால் கேபிரியளின் இந்திய எண்ணெய் வருவாயை பெருக்கும் திட்டம் படுதோல்வி அடைவது மட்டுமின்றி இதன் மூலம் அவனுக்கு அந்த அரசுடன் ஆயுத பரிமாற்றம் செய்வதற்கும் வாய்ப்புக்கள் தோன்றும் என்பது தான் அவனின் ஜீயின் கணிப்பு...

அவன் இந்த பயணத்தை 'secret task' என்று வெறும் பெயருக்கு கூறவில்லை இதில் அவன் வைத்த ஒவ்வொரு அடியும் ராகசிம் தான் அதனால் தான் அவன் அங்கு அனுப்பி வைத்த அணியின் தகவல் வேறு வழியில் வெளியே தெரிவதர்க்கோ வாய்ப்புக்கள் மிக குறைவு...

"அங்க போன எல்லோரையும் விசாரிசிங்களா? வந்த திருடனுக்கு எப்படி நம்ம வச்சிருந்த ஒரிஜினல் டாகுமெண்ட்ஸ் இருந்த ட்ரைவை மட்டும் தெரிஞ்சு இருக்கு?
எப்படி நீங்க அவங்கள சும்மா விட்டீங்கன்னு தெரிஞ்சிக்கலாமா"

"ஆமா சார் விசாரிச்சோம் ஆனால் பெண்ட்ரைவ் எப்படி காணாமல் போனது என்று யாருக்கும் தெரியல சார்" என்று முன்னிருப்பவன் கூறிட

நுண்ணிய கவனத்துடன் கையில் பேனாவை சுற்றிக்கொண்டு இருந்த ஜீயோ

"அவங்க போன ஒரு இடத்தை பீட்டர் கண்டு பிடிச்சி போனான்னா ஓகே அவங்களுக்கு தெரியாம விஷயம் லீக் ஆயிடுச்சின்னு சொல்லலாம்...
ஆனால் இவங்க போற ஒவ்வொரு இடத்திலும் இவன் இருக்கான்... அங்க போன யாருக்கும் ஒரு சின்ன அடி கூட படல...

ஆனால் information மட்டும் வெளிய போய் இருக்கு...

ஆனால் அது போன் வழியாக இல்ல அந்த நாட்டு கவர்மெட் காதுக்கு போக கூடாதுங்குற காரணத்திற்காக after all f*ing thing we where using bloody satellite phones for contacting அதை ட்ரெஸ் பண்ண வாய்ப்பே இல்லைங்கிறபோது நீ எப்படி அவனுங்களை சும்மா விட்டே... உன்னை எல்லாம் எவன் வேலைக்கு சேர்த்தான் கௌதம்" பேச்சின் கடேசியில் அவனின் கோபம் சிதறி வெடிக்க ஆரபித்தது

முன்னாள் நிற்பவன் அங்கிருந்து ஓடிவிடலாமா என்ற பாவனையிடன் நிற்க ஜீயோ இழுத்து பெருமூச்சு விட்டு கோபத்தை கட்டுக்குள் கொண்டு வந்தவாறு...

"but sir அவங்களை என்னன்னு சொல்லி நம்ம பின் பண்ணறது சார் நம்ம பன்னது சீக்ரெட் மிஷன் அவங்க அங்க டூரிஸ்ட் வீசால போனதால் நம்மலாள போலீஸ் ஹெல்ப் கூட கேக்க முடியாது சார்...மிஞ்சுனா எல்லாரையும் வேலையை விட்டு தூக்கலாம்" என்றதற்கு பதில் சொல்லாமல் சற்று நேரம் அமைதியாக யோசனையில் இருந்த ஜீ மீண்டும் பேச ஆரம்பித்தான்....

"மொத்தமா எத்தனை பெரு மிஷன்க்கு போனது?" என்றவனிடமிருந்து கண்ணை எடுத்த கௌதம் அவன் கையில் இருந்த பைலை மேஜையில் வைத்த வாறு...

"மொத்தம் 10 பேரு போய் இருக்காங்க சார் அதுல ரெண்டு பேரு சீஃப் ஜியாலொஜிஸ்ட் and அவகளோட அசிஸ்டெண்ட் 4 பேரு சார் அப்பறம் ட்ரான்சலேடர், கைடு, ஹல்பெர்ஸ்னு 10 பேரு போய் இருக்காங்க சார் அவங்களோட bio data and details filesல இருக்கு சார்" அவன் கொடுத்த காகிதங்களை நோட்டமிட்டவாறே அவன் கேள்விகளை கேட்க்க ஆரம்பித்தான்...

"ஓகே அப்போ இந்த பத்து பேரும் மொத்தமாக நமக்கு பின்னால ஹாசிம் கூட contact வச்சி இறுப்பாங்கன்னு பார்த்தோம்னா அதுக்கு வாய்ப்பு இல்லை காரணம் என்னென்ன நம்பர் ஒன் இந்த போட்டோஸ்ல யாரும் அவன் கிட்ட நேரா பேசிக்கல அதனால இந்த ஆள் மத்தவங்க கிட்ட இருந்து மறைஞ்சி தான் இதை செய்து இருக்கான்...

நம்பர் ட்டூ என்னென்னா இது எழுதி இருக்குற விபரத்தின் படி இந்த ட்ரைவ் அங்க இருந்த 6 பேர் சீஃப் ஜியாலொஜிஸ்ட்ஸ் அவங்களோட அசிஸ்டெண்ட்ஸ் தவிர வேற யாரும் பார்த்து இருக்கவோ ஆக்சஸ் பண்ணி இருக்கவோ வாய்ப்பு இல்லை...

நம்பர் த்ரீ இவ்வளோவு நாள் இல்லாமல் எக்ஸாக்ட்லி இந்த 5000 கிறோர் ப்ரொஜெக்ட் மட்டும் அவங்க கைல போய் இருக்குன்னா

1 திருடன் நல்ல வாய்ப்புக்காக காத்து கொண்டு இருந்து இருக்கலாம்

2 திருடன் இப்போ தான் உருவாகி இருக்கலாம்

3 திருடன் இதுக்காகவே சமீபத்தில் நம்ம கூட சேர்ந்து இருக்கணும்...

so இதுல எந்த பாயிண்ட் இவங்களுக்கு பொருந்துது?...நீ சொல்லு ரிஸ்" என்ரவாறு ஜீ அவன் நண்பனிடம் திரும்ப

அவனோ இன்னும் நெற்றியில் கைவைத்தவாறு...

"கண்டிப்பா இப்போ போன ரெண்டு பேரும் பண்ணி இருக்க வாய்ப்பு இல்லை ஏன்னா அந்த ஆளுக்கு இந்த மிஷன் எதுக்கு சீக்ரேட்டா இருக்குன்குர காரணமே தெரியல அப்பறம் அவன் அசிஸ்டெண்ட்டையும் விட்டுடு திருடனே என் கிட்ட வந்து சீனியர்க்கு வக்காலத்து வாங்க வாய்ப்பு கம்மி... இவகலை தவிர்த்து மீதம் இருக்கின்ற மூணு அசிஸ்ஸ்டேண்ட் அப்புறம் இரு சீனியர் ஜியலொஜிஸ்டை பத்தோம்னா அவங்களோட பைலை படிச்சதிலிருந்து இவங்க மேல இதுவரை எந்த கம்ப்லைண்டோ இல்லை லோன் பெண்டிங்கோ கிடையாது... like he side nothing to pinpoint them as suspect G...

but there is this sutiuation happend there கடேசியாக நான் அவங்க கிட்ட விசாரிச்சப்போ அங்க ஒருநாள் அவங்க இருந்த காம்பிற்க்குள்ள பாம்பு வந்ததா நம்ம இப்போ வந்து போன ஜியலொஜிஸ்ட் பேசிட்டு இருந்தப்போ சொன்னாரு..." நண்பனின் தொடர்பில்லாத தலைப்பை கண்டு அவன் புருவத்தை உயர்த்த மற்றவனோ தொடர்ந்தான்...

"அவங்க சொன்ன பாம்போட அடையாளத்தின்படி அந்த இடத்தில் அந்த மாதிரி பாம்புகள் இருந்து இருக்க வாய்ப்பே இல்லை...its an african origin..." நண்பன் சொல்லி முடிக்கவே

"distraction" ஜீயின் ஒலித்த வார்த்தைகளை அவன் வெளியே கூறிட நண்பனோ அதற்கு ஆம் என்று தலையசைத்த வாறு...

"but unfortunately அந்த டெண்ட்க்குள்ள இருந்தது நமமோட ரெண்டு சீனியர் ஆஃபீஸ்ர்ஸூம் இப்போ பேசிட்டு போன அந்த அசிஸ்டெண்டும் என்பததால் மீதம் இருக்கின்ற மூணு பேரில் யாரு திருடன்னு நம்ம தான் கண்டு பிடிக்கணும்..

என்ன தான் நம்ம கம்பெனி சேகுறிட்டி லாக் upgradedடா இருந்தாலும் everything is hackable"

என்றவாறு நண்பன் முடித்திட ஜீயோ மீண்டும் நாற்காலியில் சாய்ந்தவாறு...

" at least that get us closer to the suspect... ஆனால் ஒரு விஷயத்தை நீ மறந்துட்டே... இந்த கடேசி போட்டோ" என்று ஒரு பிட்டோவை அவன் நீட்டிட அதிலும் சிவப்பு வட்டத்தில் பீட்டரின் முகம் இருந்தது...

இது கடேசியாக நம்ம டீம் ஊருக்கு வர்றதுக்காக வைட் பண்ணின ஏர்போர்ட் சிசிடிவி கேமராவில் பதிவானது..." என்று அவன் புகைபடத்தின் தேதியை சுட்டி காட்டிட

"அப்படின்னா இன்னும் பெண்ட்ரைவ் அவங்க கைக்கு போகல" மேனேஜரின் தீர்க்கம் இல்லாத அந்த குரலில் கோரிட ஜீ தலையை அசைத்து விட்டு...

'வேற எதுக்கு அவங்க திருட்டு போன அப்புறமும் பின்தொடரனும்?'

"அந்த மூணு பேரையும் நம்ம ஆட்களை விட்டு ஃபாலோ பண்ண சொல்லுங்க அவங்க யாரை மீட் பண்ணுறாங்க பண்ணாங்க என்ன நடக்குது எல்லாமும் எனக்கு தெரிஞ்சாகனும்" என்றதோடு அங்கிருந்து எழுந்து சென்றான் கேப்ரியல்...

------------

A/N: So indha chapter pathi enna ninaikkireenga?

Indha samar edhukku ippadi wierda nadandhukkuraan?

Inga yaarukellaam samar pudikkum?

Gabbyoda innoru side life paththi unga opinion enna?

Idhula ungalukku pudicha partai comment pannunga...

Okay finally romba naal kalichi update pannite ennai innum marakkaama encorage panna en readerskku romba nandri...

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro