Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

சந்தேகம் - 11

அன்று அவன் எப்போதும் போல மதிய பள்ளியை உதறிவிட்டு அவன் ஆடி காரும் அவனுமாக வீட்டுக்கு சென்று கொண்டிருக்க,

அவன் காரின் முன்னாள் அவன் பள்ளி உடையோடு முகத்தை பார்க்க வழி இல்லாத அளவிற்கு ஒருத்தி பெரிய கண்ணாடியில் உள்ள சூரிய ஒளி அவன் ஹெட் லைட் வெளிச்சத்தையும் மிஞ்சும் அளவிற்க்கு பிரதி பலிக்கும் கண்ணாடியுடன் ஒரு பெண் எதிரில் நடந்து வர,

அது ஆட்கள் நடமாட்டம் இருக்கும் சாலை என்பதால் அவன் சலித்துக்கொண்டு காரை மெதுவாக 40தில் ஓட்ட அந்த நேரத்தில் அவனின் கைபேசி அடிக்க அவன் அதை எடுக்க தலையை திருப்பியது தான் திரும்ப பார்க்கும் போது அந்த பெண்ணோ காரின் முன் நிற்கிறாள், அவன் அவளை நகர சொல்லிக் கொண்டே அவன் sudden break கை போட அடுத்த நொடி என்ன நடந்த தென்றே தெரியவில்லை அப்பெண் அவன் bumper மீது சாய்ந்து விழுந்து கிடக்கிறாள்,

சுற்றி இருப்பவர்களோ அவன் கொலை செய்து விட்டதுப் போல் அவனை பார்க்கின்றனர்,

அவன் ஒரு 2 ரெண்டு நிமிடங்கள் அவளை அப்படியே ரோட்டில் போட்டு விட்டு செல்லலாமா இல்லை கண்டிப்பாக காரில் ஏற்றி அவளுக்கு வைத்தியம் பார்த்தே ஆக வேண்டுமா என்று அவன் தனக்குள் விவாதித்து விட்டு,

இத்தனை பேர் பார்த்த பிறகு அவளை தூக்கி செல்லவில்லை என்றால் அவனுக்கு நிறைய நஷ்டங்கள் ஏற்படும் என்பதால் அவளை காருக்குள் தூக்கி வந்து போட்டு விட்டு சுயநினைவு இல்லாத அவளை பார்த்து 'இது எல்லாம் அவள் தவறுதான்' என்பதாக அவளை முறைத்து விட்டு காரை ஓட்ட தொடங்கினான் சமர்,

------

"மிஸ்டர் டாக்டர் நான் தான் சொல்லறேன்ல இந்த மூஞ்ச நான் என் வாழ்க்கைல எந்த இடத்திலும் பார்த்ததே இல்ல, உங்களுக்கு காசு வேணுன்னா its ஓகே ஒப்பான சொல்லுங்க நான் தர்றேன் இந்த குடும்பத்தை கூப்பிடறது கையெழுத்து போதுறதுக்கு எல்லாம் என்னால ஒன்னும் பண்ண முடியாது" என்று அவன் ஆத்திரத்தில் கத்த

அருகில் இருந்த மறுத்துவரோ பொறுமையுடன்,

"ஆனா சமர் நீங்க ரெண்டு பேரும் ஒரே uniform தானே போட்டு இருக்கீங்க?" என்று அமைதியாய் கேட்க்க

அந்த திமிரு பிடித்த மற்றவனோ "அதுக்காக அவளை தெரிஞ்சி இருக்கணுமா வாட் தெ....என் ஸ்கூல்ல 6000 ஸ்டுடெண்ட்ஸ் படிக்கிறாங்க அவங்க பேரெல்லாம் என்னால தெரிஞ்சி வெச்சிக்கிட்டா இருக்க முடியும்... அதுவும் அந்த கண்ணாடியை பாத்தீங்களா நீங்க அதுக்கு பின்னால ஒரு ஆள் இருக்கங்கன்னு கண்டுபிடிக்கிறதே கஷ்டம் பஸ்ஸோட front க்ளாஸ் மாதிரி இருக்கு அது" என்று அவன் கண்டதை உளறி தள்ள

அந்த மறுத்துவரோ கோப படாமல் அந்த ஆணவம் பிடித்த மாணவனிடம்,

"அப்படி இல்லை சமர் அந்த பொண்ணு கண்டிஷன் கொஞ்சம் சீரியஸ் கேஸ், she had seizure and unconscious for ½ hour, so further information and treatment காக அவங்க லீகல் கார்டியன் or parent sign வேணும் எவ்வளோ சீக்கிரம் பார்குரமோ அவ்ளோவ் நல்லது" என்று டாக்டர் எடுத்துரைக்க அவன் முகமோ முதலில் குழப்பத்தில் இருந்தது சற்று நேரம் சிந்தனையாக மாறியது...

"seizure நா like fits... வழிப்புன்னு தானே சொல்லுவாங்க" என்று அவன் கொஞ்சம் மெதுவாய் கேட்க்க

அதற்கு மருத்துவர் 'ஆம்' என்று தலையாட்ட அவனோ அவருக்கு சற்று அருகில் வந்து

"அப்ப கார்ல அடிபட்டு அவள் கீழ விழுந்த மாதிரி இல்லையா?" என்று அவன் அவரிடம் மெதுவாய் கேட்க்க,

"இல்ல அந்த பொண்ணுக்கு visible அ எந்த காயமும் இல்லையே maybe ஷாக் அதை trigger பண்ணி இருக்கலாம் but there is no sign of that" என்று அவர் சாதாரணமாக கூற அவனோ பெருமூச்சுடன் ஒரு சிரிப்பையும் மாட்டிக்கொண்டு,

'அப்பாடா அப்ப போலீஸ் பிரச்சனை இல்லை'

என்று மனதுக்குள் நினைத்தவாறு,

"ஒரு 5 நிமிஷம் வெய்ட் பண்ணுங்க இந்த வந்துடறேன்" என்று சொல்லி கொண்டிருக்கும் போதே ஜானவிற்கு உறுதியாக தெரியும் அவன் இதற்குமேல் இந்த இடத்திற்குள் தலை காட்ட போவதில்லை என்று,

அவள் அவர்களின் விவாதத்தின் ஆரம்பத்திலேயே எழுந்து விட்டாள் அவன் இன்னும் எவ்வளோவு தான் பேசுகுறான் என்று பார்ப்பதற்காக காத்துக் கொண்டிருந்தாள்

அவன் அந்த வார்த்தைகளை சொன்னது போதும் அவளுக்கு இது தான் அவன் இறுதி வாதம் என்று தெரிந்து கொள்ள,

"டாக்டர்...கொஞ்சம் என் மொபைலை எங்க இருக்குன்னு சொன்னிகன்னா நானே என் அம்மாவுக்கு கால் பண்ணி வர சொல்லிடுவன்" என்று திடீரென்று அவள் சொல்ல

இருவரும் அவள் முகத்தை பார்த்தனர் மருத்துவர் முகத்திலோ மெல்லிய சிரிப்பு,

மற்றவன் முகத்திலோ புருவம் சுருங்கி இருக்க முதலில் மருத்துவர் பேச ஆரம்பித்தார்,

"உன் பேரு என்னமா" என்று அவர் கனிவான கேட்க்க,

"ஜானா பெர்னாண்டஸ் டாக்டர்" எங்க டாக்டரும் அடுத்தடுத்து கேள்விகள் கேட்க ஆரம்பிக்க அவள் பதில் கூற ஒரு கட்டத்தில் மற்றவன் நழுவுவதையும் அவள் கவனிக்கவில்லை,

அங்கு அவனோ முகத்தில் சிரிப்புடன் படிக்கட்டில் இறங்கி பிரச்சனை தொலைந்த தென்று அங்கிருந்து வெளியேற தயாரானான்,

ஒரு வழியாக ஏகப்பட்ட டெஸ்டுகளுக்கும் அதையும் விட ஏகப்பட்ட கேள்விகளுக்கும் பிறகு அவள் தாய் கையெழுத்து கிடைத்து விட்டது என கூறி அவளை EEG லாபிற்குள் அழைத்து சென்றனர்,

அவள் ஒருவழியாக EEG, MRI எல்லாம் முடித்து வெளியே வரும்போது அவள் தாயின் குரல் முதலில் கேட்டது அவளுக்கு ஆச்சர்யம் எதுவும் இல்லை

ஆனால் அத்துடன் அவள் காதில் கேட்ட குரல் தான் அவளை பதறிப்போய் வெளியே வர வைத்தது,

"நான் ரோட்ல ஓரமா கார் ஓட்டுட்டு போய்ட்டு இருந்தேன் ஆண்ட்டி...திடீர்னு பாத்தா யாரோ விழுந்து கிடைந்தங்க யாருன்னு போய் பாத்தா நம்ம ஜானு..." அளவில்லாமல் அவன் புழுகுவதை தங்க முடியாமல் அவள் வெளியே வந்து அவனை பார்த்து முறைக்க அரை நொடியில் அவன் முகத்த்தை கவலை படுவது போல் நொடியில் மாற்றியவன் அந்த கயவன்,

"என்னாச்சு ஜானு are you alright? டாக்டர் தான் உன்னை ரெஸ்ட் எடுக்க-" அவள் விட்ட சுளீர் பார்வை அவன் வாய் மூடியது ஆனால் அவள் தாயிடம் பேசுவதை நிறுத்தவில்லை,

"இங்க பாருங்க ஆண்ட்டி இவள் எப்போ பாத்தாலும் இப்படி தான் படிப்பு படிப்புன்னு தான் இவ்வளவு பிரச்சனையை-" என்று அவன் பேசி கொண்டிருக்க அவளோ அவள் தாயிடம்,

"அம்மா இவன் ஏன் இன்னும் இங்க இருக்கான்?" என்று படக்கென்று கேட்டு விட,

"என்னடி friends குள்ள பிரச்சனை வர்றது சகஜம் தான் அதுக்காக புள்ளைய இப்படியா வைய்வ, பாவம் அது தான் உண்ண இங்க வந்து அட்மிட் பண்ணி MRI ஹாஸ்பிடல் செலவுக்கு எல்லாம் பில் கட்டி இருக்கு, நான் காசு கொடுத்தாலும் வாங்க மாட்டேங்குது அதை பொய் இப்படி பேசுரியே" என்று அவள் தாய் அவன் புகழ் பாட,

அவள் அவன் புறம் கோபத்துடன் திரும்ப அவனோ சிறு குழந்தை போல் முகத்தை சுழித்து கொண்டு கையை அசைக்க அவளுக்கு என்ன சொல்வதென்று தெரியாமல் சுவற்றின் மேல் சாய்ந்தவள்,

"MRI result எப்ப வரும்? அண்ணன் எங்க?" என்று அவள் கேட்க்க

அவள் தாயோ "MRI result வர time ஆகுமாம் நம்மள அது வரைக்கும் வீட்டுக்கு போகலாம்னு சொல்லிட்டாங்க உன் அண்ணன் இன்னும் ஹாஸ்பிடல்ல இருந்து வரல" என்றால் அவள் தாய்,

உடனே அருகில் இருந்த குரங்கோ "நீங்க கவலை படாதீங்க ஆண்ட்டி நான் MRI result வந்த உடனே வாங்கி கொண்டு வர்றேன்" என்று அவன் கூற அவளுக்கோ குழப்பமும் கோபமும் தங்க முடியவில்லை,

பின் அவள் தாயை அவள் elevator ரில் திணித்து விட்டு அவன் காலரை தரதரவென இழுத்து வேறு புறம் அவனை இழுத்து சென்று,

"என்ன play பண்ற நீ" என்று அவள் உயரத்திற்கு அவனை கீழே இழுத்து அவன் கண்ணை பார்த்து கேட்க்க,

"சும்மா bore அடிச்சது அதுதான் கொஞ்சம் family drama பாக்கலாம்னு.."என்று அவன் விட்டு விட

அவளோ சிறிதும் நம்பிக்கை இல்லாத பார்வையுடன்

"you THE SAMAR-selfish-money-addicted-nothing-free-stalker-plus-hacker-plus-psycho நீ எனக்கு எனக்கு உதவி பன்றியா? இதுல என்னவோ தப்பு இருக்கு உனக்கு என்ன வேணும் ? அந்த டாக்டரும் நீயும் கூட்டா? என் கிட்னிய வித்து காசை பிரிச்சுக்கலாம்னு பிளான் போட்டு இருக்கீங்களா?"

என்றவாறு அவள் சட்டையை தூக்கி இடுப்பில் சோதனை செய்ய அவனோ "nice hip நல்ல shape தான் என்ன கொஞ்சம் தொப்பை தான் அதிகம் it's ok workout பண்ணா-" என்றவனின் டையை அவள் கைகளால் இறுக்கியவாறு

"இந்த வேலை எல்லாம் என் கிட்ட வச்சிக்காதே இப்ப நீ மட்டும் எனக்கு பதில் சொல்லல..." என்று அவள் இன்னும் இறுக்க...

"அய்யோ அம்மா அங்கிள் ஆண்ட்டி யாராவது என்னை காபாத்துங்க இந்த பொண்ணு என்னை கொலை பண்ணுது" என்று அவன் தொண்டை கிழிய கத்த

சுற்றி இருந்தவர்கள் அவர்களை வித்தியாசமாக பார்க்க அவள் படக்கென்று அவனை விட்டுவிட்டு சாதாரணமாக நிற்பதை போல் நடிக்க ஆரம்பித்தாள்,

அதே நேரத்தில் அவள் மொபைலில் அவள் தாய் அழைபதை பார்த்து விட்டு, "இருடா உண்ண அப்பறம் பாத்துக்குறேன்" என்று கூறிவிட்டு அவள் போக அவனோ,

"அப்பறம் பாத்து..... கிழிப்ப போடி குண்டு தக்காளி" என்று அவள் முதுகின் பின்னால் கூறுயவாறு அவன் வேறு புறம் போக ஆரம்பித்தான்...

-----------------------

அன்று மாலை அவளுக்கு ஜானாவிடம் இருந்து அழைப்பு வந்த பிறகு தான் கொஞ்சம் நிம்மதியாய் இருந்தது,

அவளுக்கு ஏதோ தலை வழி அதிகமானதால் பள்ளிக்கு வர முடியவில்லை என்று அந்த sms ல் கூறி இருந்தால் ஒருபுறம் தோழிகளின் கவலை தீர்த்தாலும் அவளுக்கு இந்த விபத்தை பற்றிய சந்தேகம் என்னவோ அதிகம் தான் ஆனது,

அன்று காலை ஜானா சொன்ன தகவல்கள் அவள் உடலை நடுங்க வைத்து விட்டது,

மைகேளிடம் அதையும் கூறினால் அவன் அவளை பைத்தியம் என்று முடிவு கட்டி இருப்பான் என்ற நினைப்பில் அவள் அதை பற்றி வாயை திறக்க வில்லை,

"ஜானா உன் brother அந்த டெட் body case ல ஏதோ confused ட இருக்கான்னு சொன்னே? எல்லாம் சரி ஆயிடுச்சா?" என்று அவள் எதார்த்தம் போல் கேட்டால்

ஆனால் உண்மையில் இந்த விஷயத்தில் உள்ள ஒற்றுமைகள் அவள் மூளையை தின்றுகொண்டு இருக்கிறது,

"இல்ல நானி நான் தான் சொன்னேன்ல்ல அது அவன் dean பாத்துக்குறேன்னு சொல்லிட்டாருன்னு, அவன் என்னன்னா அந்த ஆளு asphyxia தான் இறந்திருக்கணும்னு சொல்லுறான் but மெடிக்கல் ரிப்போர்ட் என்னவோ அவன் spinal damage blood loss ஷாக்ன்னு ஒரு ரெண்டுனால் அதை பத்தியே பேசிட்டு இருந்தான் தென் அடுத்த கேஸ் வந்தப்பரம் விட்டுட்டான்"

என்று அவள் வார்த்தைகள் அவள் காதில் சுத்தியல் வைத்து அடிப்பது போல் கேட்ட்டுக் கொண்டிருந்தது,

இவ்வளோவ் நேரம் அவள் சுவற்றை வெறித்து பார்த்து கொண்டு இருந்தாள் என்று உணராத அவளை அவள் எதிரியின் குரல் வெளியே எழுப்பியது,

"ரெண்டு மூணு நாளா நல்லா தானே இருந்த ஏன் திரும்ப அந்த முகம் அப்படி போச்சு" என்று அவன் கேட்க்க அவளோ நகத்தை கடித்த வாறு எச்சிலை விழுங்கி கொண்டு இருந்தாள் சில நேரம்,

பிறகு நடுங்கிய கைகளுடன் அவன் அருகில் சென்று அமர்ந்து அவன் தோலுக்குள் முகத்தை புதத்தவாறு என்னவோ உலர,

"ஹே என்னாச்சு nyla just an dead body இதுக்கு நீ இப்படி ரியாக்ட் பண்ற... It's nothing" என்று அவள் தலையை கோதிவிட,

அவள் சற்று அவன் புறம் தலையை திருப்பியவளாக "இல்ல its not nothing abhi... It's not nothing, that's not just accident or missing case... someone is killing them" என்று அவள் இன்னும் நடுக்கத்துடனும் அவள் கண்ணில் பயதுடனும் கூற அவனோ அதை பிடிக்காமல்,

"இப்போ ஏன் நீ பாட்டுக்கு லூசு மாதிரி பேசுரே அப்படியெல்லாம் ஒன்னும் இருக்காது, நீயே உண்ண வருத்திகாத நைலா" என்று அவன் அவள் தோலை குலுக்க,

"இல்ல...அபி அன்னிக்கி ஜானா ஏதோ அந்த பாடிய பத்தி உளருணாள் நான் சரியா கேக்கலைன்னு சொன்னேன்ல" என்று அவன் சட்டையில் அவள் கண்ணீரை துடைத்தவாறு கூற,

"ம்ம்ம்..." என்று அவன் அவள் முகத்தை கவலையுடன் பார்க்க,

"அன்னிக்கி நான் பாத்த ஆல் ஷாக்ல சாகல மூச்சு திணறி தான் செத்திருக்கான்னு அவள் அண்ணனுக்கு குழப்பமாம்" என்று அவன் மீண்டும் அவன் சட்டையில் மூக்கை துடைத்தவாறு கூற,

அவனோ "அப்ப எதுக்கு இதை போலீஸ் accident னு சொல்லணும்?" என்று அவன் கேட்க்க,

"மெடிக்கல் ரிப்போர்ட் அவன் ஷாக் ல தான் சேத்திருக்கணு சொல்றதுனால இதை பற்றி போலீசுக்கு சந்தேகம் வரல" என்று அவள் அவனை நிமிர்ந்து பார்த்தவாறு கூற,

"ஓஹ்" என்றவாறு அவன் தாடையை தேய்க்க,

" இதை மைக்கல் கிட்ட சொல்ல லான்னு தான் நினைச்சேன் but அவன் அந்த tattoo போட்ட பொண்ண பத்தி சொன்னதுக்கே தெரிச்சி ஓடிட்டான்" என்று அவன் தோலுக்குள் மூக்கை நுழைத்தவளாக கூற,

"என்ன tattoo?" என்று அவன் கேட்க்க,

"அன்றைக்கு நைட் அந்த பொண்ணு பின்னால திரும்பி இருந்ததால நான் அவள் முகத்தை பார்க்கல புட் அவளோட வலது கைல ஸ்டார் tattoo போட்டு இருந்தது அதை அன்னைக்கு நியூஸ்ல காமிச்சது நாள தான்.."

"அன்னிக்கி நைட் கூட சொல்லிக்கிட்டு இருந்தியே.." என்று அவன் கேட்க்க,

"ம்ம்" என்ற படி அவள் சோபாவில் அமர்தாள்,

"அந்த பொண்ணு தான் கைல star tattoo.." என்றதற்கு அவள் தலை அசைக்க,

அவனோ கையில் தலை வைத்த வாறு சற்று நேரம் அமைதியாய் போக,

"ஏன் என்னாச்சு?" என்று இவள் கேட்க்க அவனோ ஒரு கவனமாக முகத்தோடு,

"அன்றைக்கு நான் பீச்ல அந்த நேதன் கூட பார்த பொண்ணும் கைல ஸ்டார் tattoo போட்டு இருந்தாள்" என்று சொல்லி அவன் மீண்டும் மௌனமாக அவளுக்கோ சொல்ல வார்த்தைகள் கிடைக்கவில்லை,

அவள் உறைந்து போய் தரையை கண் சிமிட்டாமல் வெகுநேரம் பார்த்து கொண்டு இருக்க அவள் எதிரியோ அவள் தோலை குலுக்கி,

"என்ன யோசிச்சிட்டு இருக்க?....may be நான் சரியா பாக்காம இருக்கலாம், may be its just co-insidents" அவன் அவளுக்கு சமாதானம் கூற,

"இதுக்கும் நேத்தன்கும் ஏதாவது சம்மந்தம் இருக்கும்னு நெனகிரியா அபீ" என்று அவள் கேட்க்க,

"இல்லை...அவன் மேல அவன் நல்லவனானு சந்தேகம் வராம இல்லை but ரெகுலராக காசு வர்ற ஒரு ATM மெஷின அவனே எப்படி close பண்ணுவான்னு யோசிச்சி பாத்தா...its not making any sense nyla" என்று அவன் முடியை தன் பிடித்து இழுத்தவனாக கூற அவளோ அவன் முடியில் இருந்து கையை எடுத்து விட்டு,

"அதுக்காக உன் முடி யெல்லாதயும் நீ பிச்சிக்காத blade guys அ பொண்ணுங்களுக்கு அவ்ளோவ் பிடிக்கிறது இல்லையாம்" என்று அவன் அந்த சமயத்தில் நகைச்சுவையை புகுத்த அவனோ சிரிப்பதற்கு பதிலாக நீண்ட யோசனையில் அமர்தவனாக,

'அப்போ யாரோ ஒருத்தன் அந்த ஆளை கொன்னதை பார்த்ததுக்காக பக்கத்தில் இருந்த பொண்ணையும் செத்து கொன்னு இருக்கான்னா...

அவங்க ரெண்டு பேரையும் ஒண்ணா பார்த்த ஒரே சாட்சி நைலா...அப்படினா??....No not happening எனக்கு இந்த சம்பவடத்தொட முழு விவரமும் தெரிஞ்சாகனும் என்னால அவள் safety அப்படி விட முடியாது' என்று மனதில் நினைத்தவனாக....

அங்கிருந்து தள்ளி சென்று அவன் தொலைபேசியில் நம்பரை டைல் செய்தவனாக "ஹலோ ரிஸ் எனக்கு சமீபத்தில் வந்த நியூச பத்தி முழு விவரம் வேணும் including their backgrounds family details and medical reports" என்று அவன் கூற,

"அதெல்லாம் ஒன்னும் பிரச்சனை இல்லை சார் நம்ம employes backgroud செக்கிங் பண்ற அதே ஏஜென்ஸிலேயே பாத்து பண்ணிடலாம் சார்" என்று அவன் மேனேஜர் அவனிடம் கூற,

"ஓகே கொஞ்சம் சீக்கிரம் பாருங்க" என்ற வார்தைகளோடு அவன் மீண்டும் அந்த சோபாவில் போய் அமர,

அங்கோ பெரிய கண்களோடு பயந்த முகத்துடன் அவனை எதிர் பார்த்திருந்தால் அவன் நைலா,

ஒரு சில வினாடிகள் கண்ணை மினுக்கி விட்டு பிறகு "அபி இன்னைக்கும் நான் உன் கூடவே படுத்துகவா?" என்று அவள் கேட்க்க அவள் இப்படி பயத்தில் நடுங்குவது அவனுக்கு சிறிதும் பிடிக்க வில்லை,

சிறிது அவளை பார்த்து விட்டு ஒரு பெருமூச்சுடன் அவன் அவளின் அருகில் சென்று தரையில் முட்டியில் அமர்ந்தவாறு இரு விரல்களால் அவள் நாடியி கைவைத்து முகத்தை நிமிர்த்து,

"நைலா நல்ல கேட்டுக்கோ இதை இன்னொரு தடவை நான் சொல்ல மாட்டேன் இப்படி பயந்து வேர்த்து வடிஞ்சு பொண்ணுங்க மாதிரி கண்ணுல பயற்தொட.... இது நீ இல்ல என் நைலா யாராவது அவளை கொஞ்சம் நேரம் ஜாஸ்தியா பாத்துட்டாலே அவன் முகத்த பேத்துட்டு வர்றவ, என் நைலா ஒருதடவை class ல ஒரு பையன் உண்ண கீழ தள்ளி விட்டுடான்னு சொல்லி weak அ இருக்குறது எனக்கு பிடிக்கல எனக்கு சண்டை போட சொல்லி கொடுன்னு என் உயிரை வாங்குனவ you're strong baby don't show me that scardy eyes i don't like it" என்று அவன் தீவிரமாய் கூற அவளோ கண்ணை துடைத்து விட்டு,

"ஓகே நான் அழ மாட்டேன் but உன் கூட தூங்க விடுவெல்ல, ஏன்னா seriously இந்த murdering thoughts எல்லாம்.... It's driving me nuts" என்று அவள் கைகளை அசைத்தவாறு பேசவும் அவன் இதழகளில் சிறு புன்னகையோடு அவள் தலையை லேசாய் தட்டி விட்டு,

"லூசு" என்றவனாக அங்கிருந்த புத்தகத்தை எடுத்து கொண்டு "ஹனி பசிக்கிது எதுனா சாப்பாடு போடுரியா?" என்றவாறு அவன் கிச்சனுக்குள் புகுந்தான்...

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro