சங்கடம்-3
அந்த அமைதியான அறையில் தியா அங்குள்ள பீன் பேக்கில் அமர்ந்து இருக்க மற்ற இரு தோழிகளும் கட்டிலில் அமரதவாறு ஆளுக்கு ஒருபக்கம் பார்த்து கொண்டு இருக்க,
நானியின் மனத்திற்குள்ளோ இந்த விஷயத்தில் தியாவை அதிகம் அழுத்தியதால் தான் அவள் தனக்கு தெரியாமல் உறவு வைத்துக் கொள்ளும் அளவிற்க்கு தள்ள பட்டு விட்டாலோ என அவளின் மனதிற்குள் ஒரே உறுத்தல் ஆனால் அவளுக்கு நல்லதை தானே செய்ய நிந்ததோம் என்று தனக்குள்ளே கேள்விக் கேட்டு கொள்ள,
அந்த தருண் ஓரே நேரத்தில் தியாவை தவிர்த்து இன்னும் மூன்று உறவுகள் இருந்ததால் தான் அவள் தடுத்தாள்,
அப்பறம் அந்த கார்த்திக் அவன் அவள் பணத்திற்காக அவளிடம் பின்னால் சுற்றினான் இதற்கு முன் அவனிடம் பழகிய பெண்களை பார்த்து விட்டுத்தான் அவள் அவனிடமும் பேசினாள்,
ஒருவேளை அவள் இதுவரை செய்தது தப்போ என ஒரு எண்ணம் அவளை வாட்டி வதைத்தது, இன்னும் நடந்த தப்புகளை ஆராய்ச்சி செய்வதற்குள் ஜானுவின் குரல் அங்கு ஒலிக்க ஆரம்பித்தது,
"சோ இதெல்லாம் எப்போ ஆரம்பிச்சது"
ஜானா அதை கேட்டதும் தியா சிறிது நேரம் குலப்பமடைந்த ஒரு முகபாவத்தை வைத்தபடி,
"...எது?" என்று இழுக்க நானிக்கு அது ஏனோ வலித்தது.
"இன்னும் நீ எங்கே கிட்ட எத்தனை விஷயத்த சொல்லல?" என்று நானி ஒரு சோர்ந்து போன குரலில் கேட்க,
தியா அதை கேட்டு கண்கள் பெரிதாகி ஒரு அதிர்ச்சியான பாவத்தில்,
"இல்ல இல்ல நாணி என்ன தப்பா எடுத்துக்கிட்ட நா இந்த கேப்ரியால் விஷயத்த மட்டும் தான் உன் கிட்ட சொல்லல அவன் உன்னோட ப்ரதர் அண்ட் ஆல் தேட்-"
அவள் சொல்லி முடிப்பதற்குள் இடையில் மறித்து,
"அவன் என் பிரதர் இல்ல தியா கசின் தியா.... ப்ளட்டி கசின்....." என கோவமா குரலை உயர்த்த,
"அ..ஆமாம் ஆமாம் பட் அவன் எப்பவும் உங்க வீட்லயே இருக்கான், அண்ட் நீங்க ரெண்டுபேரும் பேசுறது வேர...ஓகே அதை விடு நா உன்கிட்ட சொல்ல கூடாதுன்னு இல்ல அவன் உன் ஃபேம்லி வேர அண்ட் இட் வாஸ் சோ எம்பரிசிங் தெரியுமா? நா சொன்ன உடனே அவன் ஸ்ரைட் அவுட் சிரிச்சி கிட்டே கெட் அவுட் சொல்லிட்டான் எனக்கு உன்கிட்ட எப்படி சொல்ரதுன்னு நெனச்சேன் தென் அவன் என்ன பத்தி சொல்லி உன்கிட்ட நல்ல சிரிச்சிருப்பானு நெனச்சேன் அப்ப இருந்து தான் எனக்கு அவன் மேல வேருப்பே ஆரமிச்சது..."
நானிக்கு நினைவிருக்கும் வரை தியா எப்போதும் அவன் மீது வெறுப்பாகத்தான் இருப்பாள்,
அப்படி பார்த்தால் இது எப்போ நடந்த சம்பவம் என்ற கேள்வி எழுந்தது, அதற்குள் தியா தொடர ஆரம்பித்தாள்...
"எப்போ....எப்போ அவன் கிட்ட சொன்ன?"
அதற்கு தியா ஒரு சங்கடம் கலந்த முகத்துடன்,
"10th ல பட் அது மட்டும் தான் நாணி நா வேற எதையும் மறைக்கல... ப்ராமிஸ்"
தியாவும் நானியும் தோழிகளா ஆனதே ஒன்பதாம் வகுப்பில் தான் என்பதை அவள் நினைவு கூர்ந்தால்,
" இதுல இருந்து எப்படி நீ அவன் உன் ரிலேஷன்ஷிப்ப பார்த்து ஜலஸ் ஆகுராணு முடிவுக்கு வந்தேன்னு தெரிஞ்சிக்கலாமா?"
ஜானா ஏறக்குறைய ஒரு நகைச்சுவை கலந்த குரலில் கேட்டாள்,
ஆனால் நானிக்கு ஏனோ இதில் எந்த சிரிப்பும் தென்படவில்லை,
"இல்ல ஜானு நா இந்த ரெண்டு வருஷமா நெறய வெறுப்பேத்தி இன்சல்ட் பண்ணி இருக்கேன் அதான் அவன் ஏதோ பிளான் பண்ரானு நெனச்சேன்.....அதுவும் அன்னைக்கு அவன் திடீர்னு வந்து நீ புது பாய் டாய் பாதுக்கோ இவன் எல்லாம் உனக்கு செட் ஆக மாட்டேன்னு சொன்னா நா என்ன நெனக்கிறது "
ஆம் அது முழுக்க முழுக்க அவன் வார்த்தைகள் போல் தான் உள்ளது,
ஆனால் தியா சொல்லும் வார்த்தைகளில் ஒருபுறம் நானிக்கு கிட்டத்தட்ட கோபம் வர ஆரமித்தது,
என்ன தான் அவன் எதியியாய் இருந்தாலும் அவன் அவள் எதிரி அவளை தவிர தோழிகளை அவன் இதுவரை ஏறெடுத்து கூட பார்த்ததில்லை அப்படி இருக்கும்போது எப்படி இவள் அவன் மேல் பழி சுமத்தலாம்?
"அவன் இது வரைக்கும் நீ ப்ரொபோஸ் பன்னதுக்கு அப்பறம் உண்ண ஏதாவது பதிலுக்கு ட்ரை பன்னானா?"
அவளுக்கு அதற்கு பதில் தெரியும், அபி அவளை காதலித்து ஏமாற்றினான் என்றால் நம்பும் அவள்,
அவன் அவளை எந்த வகையிலும் துன்புறுத்தினான் என்றால் அவளால் நம்ப இயலாது
எண்ணென்றால் அபி அவளுடைய எதிரி, அவளை தவிர வேறு யாரிடமும் அவனின் அந்த பக்கத்தை காட்டி அவள் பார்த்ததில்லை,
அப்படி அவன் காட்டினால் அவள் தான் அவன் துணை என்று நானி சந்தோஷமாக இருவரையும் வாழ்த்தி அனுப்பி விடுவாள் அது தியா வாக இருந்தாலும் சரியே,
"இல்ல ஹீ ஸ்டார்ட்டட் ட்டு ஆக்டிங் லிக் ஐ டிடிண்ட் எக்சிஸ்ட் அது எனக்கு இன்னும் கோவமா வந்தது, அது தான் அவன் அன்னைக்கு வந்து திரும்ப பேசுனப்போ எனக்கு எப்படி ரியாக்ட் பண்றதுன்னு தெரியல" தியா சொல்லி முடித்தால்,
"ம்ம்" என்றதோடு நாணி பேச்சை முடித்தால்.
"ஏன் மேல கோபமா இருக்கீங்களா?" என்று ஒரு பதற்றமான குரலில்,
"இட்ஸ் ஓகே பேபி, நடந்தது நடந்துடுச்சி அதுக்கு என்ன பண்ண முடியும் நோ பிரோப்ளேம்"
என வாயால் சொன்னாலும் அவள் மனதிற்குள் கோபம் அல்ல சந்தேகம் எழுந்தது... அதுவும் தியா வின் மீதல்ல தன் பேரை கொண்ட ஆணின் மீது,
ஏனென்றால் விஷயம் பெரிதில்லை என்றால் அபி இதில் தலையிட்டு இருக்க வாய்ப்பே இல்லை,
ஆனால் இப்போது அவர்கள் அவளிடம் பேசினால் கண்டிப்பாக இதற்கு முடிவு கிடைக்காது, கொஞ்சம் நாள் போகட்டும் முதலில் அந்த நானியை பற்றி விசாரிக்க வேண்டும்.
ஆனால் சந்தேகம் அவளுக்கு மட்டும் இல்லை ஜானுவுக்கும் அதே சந்தேகம் எழுந்திருக்கும் போலும், நானி அவள் கண்களை பார்த்த போது அவளுக்கு அது உறுதியானது,
~~~~~~~~~~~~~~~~~~~~~~~
அடுத்து வந்த விடுமுறை நாள் அவள் வீட்டில் உக்கார்ந்து பள்ளி வேலையை பார்பதர்கே சரியாக இருந்தது அன்று சாயந்திரம் தான் நாணி ஒரு பழைய பச்சை நிறம் கொண்ட பெரிய டீ ஷர்டயும் ஒரு பழுப்பு நிற முக்கால் பேண்டையும் போட்டுகொண்டு சவுகர்யமாக வீடு முற்றத்தில் சோஃபாவில் காலை மடக்கி போட்டு அமர்ந்து தன் வீட்டுபாடங்களை எழுதி கொண்டே இன்னொரு கையால் அவள் பழ சாற்றை குடித்து கொண்டிருக்க தன் கூட பிறந்தவன் எதுவும் செய்யாதது பொல் வந்து சோபாவில் பக்கத்தில் அமர அவளுக்கு அப்போதே தோன்றியது இது நல்ல முடிவாக இருக்க போவது இல்லை என்று,
வந்து அமர்ந்த உடன் பிறந்தவன் அவள் எழுதிய காகிதங்களை எடுத்து என்னவோ இவன் தான் கலெக்டர் இன்டெர்வியூவ் க்கு கேள்வி கேட்க போவது போல கண்ணால் அளசினான்,
அவளும் பல்லை கடித்துக்கொண்டு அமைதியாக அவள் வேலையை செய்ய ஆரமிக்க,
"என்ன நாணி உன் ஹன்றைட்டிங் இன்னும் படும் கேவலமா இருக்கு"
என அவள் கஷ்டப்பட்டு எழுதிய காகிதங்களை போத் என்று ஒரு ஏகத்தாள பார்வையுடன் கீழே போட அவளுக்கு ரத்தம் கொதிக்க ஆரம்பித்தது,
"இப்படி எழுதி நீயெல்லாம் என்னக்கி வக்கீல் ஆகி..."
என்று கூறியவாறு ஒரு நொடி பழச்சாறு இருந்த பாட்டிலை அவன் பிடுங்க முயல அவளோ அதை கோபத்தில் இருக்க பிடித்திருக்க எனவே அது கை தவறி பக்கத்தில் கிடைக்கும் அவள் கஷ்டப்பட்டு எழுதிய காகிதங்களில் பொய் கவில,
அவளுக்கு பூமி சுற்றியது நின்றது, அவள் ரத்தம் கொதித்தி காதிலிருந்து புகை வெளியாக ஆரம்பித்தது,
அவள் பற்களை கடித்துக்கொண்டு அந்த கயவனை பார்க்க அவனோ அங்கிருந்து மாயமாகி விட்டான் அப்போது எழுந்து ஓட ஆரமித்தது தான் சரியாக அரை மணி கழித்து அவளும் தன் உழைப்பை ஜூஸ் ஆக்கியவனும் வீட்டுக்கு வெளியில் வாசலில் மண்ணில் உருண்டு கொண்டு இருக்க,
வந்து பார்த்த தன் எதிரியோ அவள் இருக்கும் நிலையை பார்த்து அவன் சந்தோஷத்தை சத்தம் போட்டு சிரித்து காட்டி விட்டு இருவரின் மீதும் தாண்டி வாசலுக்கு சென்று விட,
இப்போது அவளோ வீட்டு வாசல் முன்னாள் மண்ணில் புரண்டுகொண்டு அவள் தம்பி அவளுக்கு மேல் ஏறி உட்கார்ந்தவாறு அவனின் கையை இவள் கடிக்க முயன்று கொண்டு இருக்கும்போது அவன் மறு கையொ அவளின் முடியை வேருடன் பிடித்து இழுத்து அவனை கடிக்க விடாத வாறு இருக்க இந்த நிலையில் தான் மைக்கேல் அவைகளை கண்டான்.
முதலில் ஏதோ வேற்றுக்கிரகவாசியை பார்த்தது போல் அதிர்ந்து நின்ற மைக்கேல் ஒரு சில நொடிகளில் சுயணிவிற்கு வந்தவுடன் இவர்கள் நகராமல் வீட்டிற்குள் போக முடியாது என தெரிந்தவுடன்,
அவர்கள் பார்க்க செய்வதற்காக குரலை சரிசெய்யும் சத்தம் எழுப்ப அந்த இரு குட்டிச்சாதான்களும் ஒன்றை ஒன்று கொலை செய்வதில் மிக தீவிரமாக இருந்ததால் அங்கு ஒரு ஜீவன் என்ன செய்வதென்று தெரியாமல் திணறிக் கொண்டிருப்பதை யாரும் கவனிப்பதாக இல்லை,
அவன் இன்னொரு முறை குரலை சரி செய்த போது தான் ஒரு எரிச்சல் கலந்த பார்வையுடன் மேத்திவ்(Matthew) தலையை தூக்கினான்,
இவன் பெயர் தான் மேதிவ் நானியின் குட்டி தம்பி அவள் பள்ளியிலேயே ஒன்பதாம் வகுப்பு படிக்கிறான் தன் அக்காவின் வாழ்க்கையை தன்னால் இயன்ற வரை கடினமாக்குவது தான் இவனுக்கு பிடித்த பொழுதுபோக்கு,
ஜானாவின்மேல் இவனுக்கு ஒரு பெரிய ஈர்ப்பு, அவள் என்ன சொன்னாலும் கேள்வி கேட்காமல் அதை செய்து விடுவான்,
இவனுக்கு விவரம் தெரியும் முன்னே இவன் தந்தை இறந்து விட்டதாலும், சிறு வயது இருந்து பார்த்து வளர்ந்தாலும் கேப்ரியால் தான் இவனுக்கு முன்னோடி, கால் பந்தாட்டத்தில் இருப்பதால் மைக்கேலை இவனுக்கு தெரியும்,
என்ன இவ்வளவு காலமாக இல்லாமல் திடீரென்று இவன் வீடு வாசலுக்கு வந்து இருக்கிறான் என மேதிவ் குழப்பத்துடன் மைக்கேலை அவன் கேள்வியாக பார்க்க உள்ளே இருந்து வந்த சத்தம் அவன் குழப்பத்தை தெளிவு படுத்துயது,
" ஹேய் நான்தான் கிரவுண்ட்ல வந்து வாங்கிக்கிறேன்னு சொன்னனே எதுக்கு வீடு வரைக்கும்...?" என வீட்டுற் க்குள்ளிருந்து கேப்ரியளின் குரல் எழ மைக்கேல் அவனை திரும்பி பார்த்து,
"இல்ல பாஸ் நாளைக்கு என்னால கிரவுண்டுக்கு வர முடியாது அத்தான்"
என் கூறி நாலைந்து நோட்டுகளை கொடுக்க கேபிரியல் அதை வாங்கி கொண்டு அவனிடம் மற்ற விஷயங்களை பேசிக் கொண்டிருக்க அங்கு பூமி தன்னை விழுங்கி விடாதா என்ற முகத்துடன், இத்தனை நாள் தான் வண்ண வண்ண உடைகளில் வந்து வெளியில் நிற்கும்போது எல்லாம் அவளை கவனிக்காத அவள் ஆசைக்குரியவன் இப்படி மண்ணில் புரண்டு கொண்டு மிக கொடூரமான நிலையிதானா தன் வீட்டிற்கு வரவேண்டும் என மனம்நொந்து பொய் அவனை பார்த்துக் கொண்டிருப்பதை அங்கிருந்த எவரும் அறியவில்லை.
தன்னை ஈர்த்தவனின் கவனத்தை கூட இன்னும் ஈர்க்க வில்லை என்று ஒரு புறம் கொஞ்சம் கவலை இருந்தாலும்,
அவளை இந்த நிலையில் பார்ப்பதற்கு இது மேல், என மனதை தேற்றுக்கொண்டு, மூவரையும் பார்த்தால்,
நல்லவேளை தன் எதிரிக்கு மட்டும் அவள் மனநிலை தெரிந்தால் இன்னும் மாத கணக்கில் இந்த விஷயத்தை கூறி அவளை வைத்து வருத்தெடுத்து விடுவான் என்று அங்கிருந்து நழுவ முடிவெடுத்தால்,
ஆம் அவள் எதிரிக்கு அவளுக்கு மைக்கேலின் மீதுள்ள கிருக்கை பற்றி தெரியாமல் இல்லை,
எப்போதும் அவள் வாழ்க்கையை இடையூறு செய்வதையே குறிக்கோளாக வைத்திருப்பவனுக்கு இது எப்படி தெரியாமல் இருக்கும்,
பிறகு அவள் கிறுக்கு தனம் ஒன்றும் தங்கமலை ரகசியம் அல்ல வீட்டில் எல்லோருக்கும் தெரிந்ததுதான்,
"ஓகே தென், நான் கெலம்புறேன்" என மைக்கேல் சொல்வதற்கும் தன் வீட்டு ஆண்கள் உள்ளே நுழைவதற்கு அவள் வீட்டு படியில் கால் வைத்து வழுக்கி கீழே விழுவதற்கு சரியாக இருந்ததது,
வீட்டைசேர்ந்த இரு அரக்கர்களும் சிரிக்க ஆரமிக்க தோல்புஜங்களை பிடித்து ஒரு கை எழுப்பியது, இதுயெல்லாம் வெறும் கெட்ட கனவாக இருக்க கூடாதா என நினைத்துக் கொண்டே நானி கண்ணை இருக்க மூடி திறந்து ஒரு சங்கடத்துடன் மைக்கேலின் பக்கம் திரும்பினாள்,
இல்லை இது காணவில்லை இவன் இன்னும் இங்குதான் இருக்கிறான் என்ற சோகத்துடன்,
"தேங்க்ஸ்" என கூற,
அவன் அவளை பரிதாபத்துடன் பார்த்து,
"இட்ஸ் ஓகே குட்டிமா நீங்க மேட் தங்கச்சியா? என்ன ஸ்டாண்டர்ட் படிக்குறீங்க?" என அவளை குழந்தாயிடம் பேசுவதுபோல கேட்க அவள் தலையில் இடி விழுந்தது போல இருந்தது,
வாட்? தங்கச்சியா? ஐம் ஹிஸ் பிக் ப்ளாட்டி சிஸ்டேர் குல்லாம போறந்தது என் தப்பா ஏன் எல்லாரு குட்டி பொண்ணு மாதிரி பாக்றீங்க என அவள் மனதிற்குள் ஆவேசத்துடன் அளறிக்கொண்டு வெளியில் அமைதியாக,
"இல்ல நா அவன் அக்கா, 12த் படிக்கிறேன்" என சோகமாக சொன்னால்,
"ஓ அப்ப நீங்க பெரிய பொண்ணா சாரி, இனி பாத்து நடந்து பழங்குங்க" இன்னும் பால்வாடி குழந்தையிடம் சொல்லும் தோணியில் பேசுவது அவளுக்கு கோபத்தில் தான் குழந்தை இல்லை என்று கத்திவிடும் அளவிற்க்கு கோபம் வந்தாலும் அதுவும் சிறு பிள்ளை தனமாக இருக்கும் என்பதால் அமைதியாக தலையை மட்டும் ஆட்டியவாறு வீட்டுக்குள் கிளம்பினாள்.
அங்கு அவள் வீட்டுக்குள் நுழைந்த சில நொடிகளில் " என்ன ஸ்டாண்டர்ட் படிக்குறீங்க குட்டிமா" என்று ஒரு கேலிச் சீண்டலுடன் தன் எதிரியின் குரல் கேட்க மீண்டும் சண்டையிட சக்திக் கூட இல்லாமல் தரையில் காளை அடித்து விட்டு சுருண்ட முகத்துடன் அவனின் சிரிப்பு சத்தம் அவளை தொடர்வது கேட்காதது போல மாடிக்கு ஓடினாள் நாயகி....
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro