குடும்பம்-6
நாட்கள் நடந்து சென்றான...ஒரு அந்தி மாலை நேரம் வெயிலில் சாலையில், நிற்கும் கார்களுக்கு நடுவில் இருச்சக்கர வாகனத்தின் மேல், கருப்பு வண்ண உடைகளில் குளிர்க் கண்ணாடியை தூக்கி கண்ணடித்து தன்முன் இருக்கும் வாகனத்தில் அவனை பார்த்து சிரிக்கும் யுவதியை அவன் இதழில் ஒரு ஓர சிரிப்புடன் பெண் மனதை கொக்கி போட்டு இழுக்கும் வசீகரத்துடன் பச்சை விழக்குக்காக காத்து கொண்டிருக்கும் இவன் வெறுயாரும் அல்ல நம் நாயகியின் பழைய எதிரி தான்…
தன்னை பெற்றவள் அழைத்துவிட்டால் என்பதால் அவன் வீட்டிற்கு செல்லும் வழியில் இருக்கிறான்,
பெற்றவளுக்கு அவன் மீது இவ்வளவு பாசம் என்று நினைக்கலாம் ஆனால் அவனை அழைத்தது பணத்திற்காக தான் என்பது அவனுக்கு நன்றாகவே தெரியும்,
அதனால் அதை பற்றி யோசித்து தன் நேரத்தை வீணாக்க வேண்டாம் என்று தான் அவன் அவனுக்கு தெரிந்த வகையில் மனதை திசை திருப்புக்கிறான்…
பச்சை விளக்கு எரிந்தது வாகனங்கள் நகர்ந்தன, அவனுக்கு திரும்பவும் நைலா கேட்டது காதுக்குள் ஒளித்துக்கொண்டு இருந்தது,
“please abi...Help her... Would you leave me like that in her situation?”
நைலா இன்று சொன்ன வார்த்தைகள் மீண்டும் மீண்டு அவனை தொல்லை செய்ய,
‘அட...ச்சே... நான் எதுக்கு யாரோ ஒருத்திக்காக guiltyஅ feel பண்ணனும் நான் அல்ரடி அவள வார்ன் பண்ணிட்டேன் if she really want to jump into that pit after my warning then that's her choice, இந்த நைலா எதுக்கு நான் ஏதோ கொலை பண்ணபோரா மாதிரியே பேசுறா, why would she think I would help her friend,
please i am not a superhero to rescue random people’ என சாலைகளில் மனப்புலம்பலுடன் வீட்டிற்கு சென்றடைந்தான்.
இப்போது தான் வசிக்கும் வீட்டின் அளவை போல் நான்கு மடங்கு அளவிற்கும் அந்த நீல வெள்ளை வண்ண நிறம் கொடுக்கப்பட்டுள்ள முற்றத்தில் வெள்ளை நிற இருக்கையில கால் போட்டு அமர்தவனாக தன்னை ஈன்று எடுத்தவள் வருகைக்காக சலித்த முகத்துடன் காத்திருந்து பிறகு அவன் கை பேசியை தடவிக்கொண்டு இருக்க அவன் மனதும் அதன் வேலையை மீண்டும் ஆரம்பித்தது,
‘actually that guy is not good...Not at all…actually me நானே நல்லவன் இல்ல இப்ப என் range கே அவன் பண்றது கேவலமா இருந்தா அவன் எவ்லோவ் கேவளமானவன், இந்த Barbie face ஏன் இவ்ளோவ் stupid அ இருக்கா? ஒரே time ல நாலு பெற ஓட்றறவங்களை எல்லாம் பாத்து இருக்கேன் not a big thing, நான் கூட பண்ணி இருக்கேன்...well then அதுனால நெறய time waste ஆச்சு so….
but அவங்க கிட்ட எல்லாத்தையும் முடிச்சிட்டதுக்கு அப்பறம் அவங்க photos எல்லாத்தையும் Internet ல விட்டுடுவேன்னு மிரட்டி பணம் வாங்குறது... that’s cheap even for me…. not that I’m upset about it or whatever but it's just such useless thing to do… இதுல அந்த குட்டிச்சாத்தன் தலையிடலன்ன நான் இதை பத்தி யோசிக்க கூட மாட்டேன் such a wast of my precious time... இதுக்கு எப்படி நா நைலா கிட்ட proof காமிக போறேன்? நான் கொஞ்சமா காசு செலவு பண்ணா அவனோட background ல இருந்து அவனோட mobile calls வரை என் கைக்கு வந்துடும் but அதை எல்லாம் உண்மை தான்னு அந்த stupid Barbie கு எப்படி புரிய வைக்கிறது????
Wait a minute நான் தான் இந்த mess ல எல்லாம் தலையிட போராதில்லனு முடிவு பண்ணிடனே நான் எதுக்கு அதை பத்தி யோசிக்கிறேன்? Just forget it…’ என அவன் மனதில் பட்டிமன்றம் ஓடிக்கொண்டிருக்க அவனோ இருக்கையில் அமரதவாறு அங்கிருந்த சுவற்றை வெறித்து பார்த்து கொண்டிருக்க, காலடி சத்தம் கேட்டு அவன் திரும்பினான்….
அங்கு மாடிப்படியில் இருந்து தன் தாயின் காதல் கணவனுக்கு பிறந்தவன் கீழே இறங்கினான்,
தான் இருப்பதை பார்த்து விட்டு ஓர் நொடி அவன் கண்கள் அச்சரியத்தில் பார்த்து மறு நொடி பொய் வருத்தமாக மாறி அவன் முகத்தில் அந்த ஏழனச்சிரிப்பு அச்சடித்தது போல் மாற மறு வினாடி அவன் ஏமாற்றமடைந்தது போல் முகத்தை சுழித்துக்கொண்டு…
“என்ன brother அம்மா மேல பாசம் பொங்கி வந்துடுச்சு போல வீட்டுக்குள்ள எல்லாம் வந்து இருக்கீங்க… எப்பவும் என் அப்பா வீட்ல கால் எடுத்து வைக்க மாட்டேன்னீகளே... இப்ப என்ன ரோஷம் ice cream சாப்புட போய்டுச்சா”
என்று வந்தவன் கண்களில் விஷத்தயும் இதழ்களில் சிரிப்பையும் வைத்து பேச முன்னிருப்பவனுக்கோ மனதில் சினம் எழ ஆரம்பிக்க அவன் அதை வெளி காட்டாமல் தம் தமயனுக்கு நிகரான சிரிப்பை அவன் முகத்தில் அணிந்தவாறு,
“ஓ...உன் dear daddy உன் கிட்ட சொல்ல மறந்துட்டாரா? Guess what I did on my 18th birthday?” என்று அவன் உற்ச்சாகத்துடன் கேட்க தனக்கு இளையவன் அவனை சந்தேகத்துடன் பார்க்க,
“எனக்கு 18 ஆன உடனே நா பண்ண முதல் purchase இந்த வீடு தான், அவரு பாவம் என்ன பண்ணுவாரு வீடும் bank ல அடமானதுல இருந்தது….உன் அப்பாக்கு financial help காக இல்ல, i just don't like it when your old man open that mouth...” என்று தன் முன்னிருப்பவன் நடிப்பை தோற்கடிக்கும் பரிதாப முக பாவனையுடன் தன் தமயனை பார்க்க அவன் முகத்துல அப்போது வெடித்த எரிமலை இவன் மனதுக்குள் குளிர்நீரை ஊற்றியது போல் ஆறுதல் அளித்தது….
இப்போது கொந்தளித்து கொண்டிருக்கும் இவன் பெயர் தான் சமர், படிக்கும் சிலபேருக்கு இது இதற்கு முன் பழக்கப்பட்ட பெயர் போல் தோன்றலாம் உங்கள் கணிப்பும் சரி தான் இது அவன் தான்,
என்னதான் இவர்கள் இதை ஒற்றுக்கொள்ள மறுத்தாலும் இவன் தான் கேப்ரியளின் சகோதரன், இருவரும் ஒரு அறையில் இருந்தால் தான் நாளை உயிரோடு இறுப்போம் மற்றவனை நம்பி இன்னொருவன் கண்ணுறங்க முடியாது, அந்த அளவுக்கு மற்றவரின் மீதும் அவர்களுக்கு அவறிவித நம்பிக்கை இது தான் இவர்களின் பாச பிணைப்பு,
ஒருபுறம் அண்ணனோ தாய் பாசத்திற்காக தானே ஒரு வீட்டிற்கு தத்து செல்ல இங்கு தம்பிக்கோ ஆடம்பர வரவேற்பு,
தற்போதய பெற்றோருக்கு இவன் தான் செல்ல பிள்ளை, என்னதான் அவன் தந்தை சிறுவயதில் அண்ணனுக்கு ஒரு சட்டை எடுத்து கொடுக்க கூட தயங்கினாலும் தம்பிக்கோ சரமாரியாக வாரி இறைத்தார்கள் இருவரும்,
அப்போது ஆரம்பித்தது இன்னும் இவனுடைய கையில் உள்ள ஆப்பில் ஃபோனும் இவன் ஓட்டிக்கொண்டிருக்கும் ஆடி காருமாக தொடர்கிறது,
என்ன தான் தந்தைக்கு வியாபாரம் நஷ்டமாக இருந்தாலும் இவனின் ஆடம்பரமோ இன்னும் கொஞ்சம் கூட குறையவில்லை,
இவனை பற்றி கூற வேண்டும் என்றால் சமருக்கு ரசிகனும் அவனே அவனுக்கு காதலும் அவனே உலகத்தில் அவனை தவிர வேறு யாரும் அவனுக்கு முக்கியம் இல்லை, சுயனலவாதிக்கு அகராதியில் பொருளே அவன் பெயர்தான்,
இருவரும் வேலைக்குள் இறங்கி வீடு ரத்தவெல்லமாக ஆவதற்கு முன்பு சரியான நேரத்தில் அவனை பெற்றவளின் குரல் தன் காதில் ஒலித்தது,
“hey Gabby...Oh my baby i missed you” என சொல்லிக் கொண்டு நாற்பதுகளில் இருக்கும் ஒரு பெண் முகத்தில் அதிக ஒப்பனைகளுடன் அவன் பக்கத்தில் அமர்ந்து அவனை கட்டி தழுவினால்,
‘ஆஅஹ்…..drama started….எப்பவும் phone ல தானே amountஅ சொல்லுவாங்க இன்னக்கி எதுக்கு வீட்டுக்கு எல்லாம்…. 2 வீக்ஸ் முன்னால தானே காசு கொடுத்தேன்...இன்னக்கினு கட்டியெல்லாம் புடிக்கிறாங்க அமௌண்ட் ஜாஸ்தியா இருக்கும் போலயே’ என மனக்குறல் விடாமல் பேசிக் கொண்டிருக்க அவன் அதை நிறுத்தி விட்டு அவளிடம் திரும்பி,
“என்னாச்சு மம்மி டியர் விஷயத்துக்கு வாங்க” என பாதி கிண்டலுடன் அவளை தன் மீதிருந்து பிரித்தவனாக கேட்க,
“என்ன கேபி எனக்கு உண்ண பாக்கணும்போல இருந்துச்சு…”
“shaaluuu but how about me? எனக்கு hug கிடையாதா?” என்று தான் தம்பி தாயை இறுக்கமாக கட்டி அணைக்க அவளின் முகமோ முதலில் அதிர்ச்சில் உறைந்து பிறகு மீண்டு வந்து முகத்தில் ஒரு குழப்பசிரிப்பை மாட்டியவாறு…
“you too baby…. ஹி ஹி ஹி”
என்ன தான் சகோதரனுடன் அவன் பல வகையில் மாறுபட்டு இருந்தாலும் அவர்கள் ஒன்று போல் யோசிக்கும் ஒரே விஷயம் அவனை பெற்றவளை கணக்கிடுவதில் தான்,
என்னதான் அவன் இப்போது பாசத்தை பிழிவது போல பேசினாலும் அவன் சில வருட கால அனுபவத்தை வைத்து பார்க்கும்போது இந்த வார்த்தைகளை தன் தாயின் அசௌகரியத்திற்காக தான் செய்கிறான் என்பதை அவனால் நன்றாக புரிந்துகொள்ள முடிகிறது,
‘இப்படியே போனால் வேளைக்கு ஆகாது’ என மனதில் நினைத்துக்கொண்டு..
“ஓகே அப்ப நான் கெளம்புறேன்” என அவன் மீண்டும் வாசலுக்கு செல்ல,
அவளோ தம்பியை அங்கேயே விட்டு அவனை வாசலுக்கு துரத்திக்கொண்டு...
“ இல்ல...கேபி நில்லு...அது நேத்து ஒரு club ல donation பண்ண….” என அவனை பெற்றவள் வளக்கமாக சொல்லும் காரணங்களில் ஒன்றை சொல்ல அவன் அதை காதில் வாங்காமல்,
“எவ்லோ அமௌண்ட் னு சொல்லுங்க மம்மி டியர்” என அவன் கேட்க அவளோ சற்று தயங்கியவாறு,
இடையில் அவன் தமயனோ வாயை உலாவ விட்டவாறு,
“க்ளப்புல மப்புல திரியிர பொம்பள, என்னடி நடக்குது செந்தமிழ் நாட்டில…”
என அவன் மண்ணுக்கு பாரமாக இருக்கும் அவன் வேலையை அவன் பார்க்க, அவன் தாயோ இளையவனுக்கு ஒரு கோப பார்வையை வீசிவிட்டு..
அவன் பக்கத்தில் போய் நின்று மெதுவாக “10 lacks” என்க
அவனோ கோபத்தில்,
“really??? Are you kidding me mom? Three weeks ஒரு தடவ தான் உங்க அக்கௌட்கு 2 lacks transaction பண்நரேன்ல...two days முன்னால தானே ….”என்று அவன் சத்தம் போட,
அவனுக்கு இளையவனோ அவன் வேலையை தவறாமல் தொடர்ந்தான்…
“ஆமா ஷாலு சொல்ல மறந்துட்டேன் எனக்கு pocket money காலி ஆயிடுச்சி னு சொன்னதுக்கு நீ அனுப்பி வச்ச 2 lacks வந்துடுச்சு”
என அவன் நெருப்பில் என்னை ஊற்றனான்...
கல்லூரி படிக்கும் மாணவனுக்கு எங்கிருந்து இவ்வளோவ் பணம் என்று நீங்கள் ஆச்சர்யப்படலாம், அது அவனுடைய அப்பாவின் பரம்பரை சொத்துக்கள் அவன் வயதிற்கு வந்து விட்டதால் இப்போது இவனால் அதை கையாள முடியும்,
இந்த வருடம் படிப்பு முடிந்தவுடன் அவன் தொழிலை முழுமையாக கையாள ஆரம்பித்து விடுவான்,
அதுவரை அந்த கம்பெனிகளின் பங்குதாரர்கள் முக்கியமாக அவன் தந்தையின் நண்பர்கள் பொறுப்பிலேயே கம்பெனிகள் இருக்கும், அவ்வப்போது போய் கவனித்து கொண்டால் போதும்,
அவனை பெற்றவளின் கணவனின் கைகளிலும் சில கொடிகள் புரலாலாம் ஆனான் அது அவனிடம் இருப்பதில் 50தில் ஒரு சதவீதத்தை கூட எட்டாது நல்லவேளை அவன் தாய்க்கோ அவன் வங்கியின் மதிப்பு பற்றி தெரியாது தெரிந்தால் இந்நேரம் மாத அழைப்புகள் நாளுக்கு ஒருமுறை வர ஆரம்பித்துவிடும்,
‘நான் அம்மான்னு கூப்பிட நினைக்கிறவங்க நான் காச பத்தி பேசுனாலே என்ன அடிக்க வராங்க, but என்ன பெத்த ஒரே காரணத்துக்காக இவங்களுக்கு நான் செலவு பண்ண வேண்டியது இருக்கு இல்லனா ஹனி கிட்ட எதாவது இவங்க சொல்லி அப்பறம் நான் தான் 2 மணி நேரம் lectureஅ கேக்க வேண்டி இருக்கும்’
“அது லாஸ்ட் வீக் பார்ட்டி வ…” பக்கத்தில் இருக்கும் சாத்தானை விலங்காதவாறு அவள் தொடர்ந்தால்...
“ பார்ட்டி…. ப்ளாட்டி பார்ட்டி…. அங்கங்க அவன் அவன் சாப்பிட காசு இல்லாம திரியிறான்…. How could you_” என்று அவன் சத்தத்தை கூட்டியவுடன்…
பின்னால் சத்தானோ விடாமல் அவன் வேலையை பார்த்துக்கொண்டுதான் இருந்தான்,
“காசு பணம் துட்டு மணி மணி, காசு பணம் துட்டு மணிமணி”
'seriously இவானா கொன்னா தான் என்ன தப்பு atleast இந்த உலகத்துக்கு நா ஒரு நல்லது செஞ்சாதா இருக்கட்டுமே’
அண்ணன் காரனோ அவனை முறைத்து பார்க்க தமயனின் கண்களிலோ நகைச்சுவை... அவன் கழுத்தை பிடித்து தரையில் உருள்வதற்கு சற்று முன்னாள் அந்த பழகிய சத்தம் அவனுக்கு கேட்டது..
அவனை பெற்றவள் நாடகத்தை ஆரம்பிக்க கண்களில் கண்ணீருடன் மூக்கை துடைத்தவாறு அவன் முன் திரும்பினாள்,
அவன் அதை பார்த்து கண்களை உருட்டிவிட்டு…. 'ஆஹ்...இன்னக்கி இதுக்குமேல drama பாத்தா என் மூல போகஞ்சிடும்' என அவன் தமையன் முணு முணுத்துக்கொண்டு அவன் வெளியே போக அண்ணனோ அவனை கிட்டதட்ட ஒரு பொறாமை கண்ணுடன் பார்க்க அவனோ அண்ணனை பார்த்து ஒரு ஊர சிரிப்புடன் “ love you too brother good luck” என கிண்டலுடன் சொல்லி விட்டு வெளியேறினான்,
‘ ஆ ஆஹ்...என்னால அப்படி போக முடியலையே’ என இவன் மனதிற்கும் புலம்பிக்கொள்ள அவளோ பேச ஆரம்பித்தாள்,
“எனக்கு புரியுது நீ சின்னவயசுல உன்ன அப்பாக்கூட விட்டுட்டு வேரா கல்யாணம் பண்ணிகிட்டதால என்ன வெறுத்துட்டே ஆனால் நீ என்ன பத்தி கொஞ்சம் யோசிச்சி பாத்தியா கேபி, என் அப்பா, அம்மா நா லவ் பண்ணவன விட்டுட்டு உன் அப்பாக்கு என்ன கல்யாணம் பண்ணி வச்சிடங்க என்னால உன் அப்பா கூட இருந்தா சந்தோஷமா இருக்க முடியாது அது தான் நா…”
‘ but mommy dear இதுல நீங்க உங்க current hubby ஓட affair வச்சிருந்தத எந்த இடத்துல சொல்ல போறீங்க?? ஆ ஆஹ்...I don't want this...God help me or i am going to kill this woman someday’
என அவன் மனதிற்குள் கொதித்து கொண்டு கை பேசியில் அவள் பணத்தை அவளுக்கு அனுப்பி வைக்க,
அவன் தாய் என்கிறவளோ கை பேசியில் தகவல் வந்ததை கேட்டவுடன் அவள் முகம் சோகத்திலிருந்து நம்ப முடியாத நொடி பொழுதில் சந்தோஷமாக மாறியது, உடனே அவள் கை பேசியை பார்த்துவிட்டு,
“thank you so much baby, i know you love mamma so much, அதுதான் நான் உனக்கு ரொம்ப புடிச்ச பிரியாணி இன்னைக்கு லஞ்சுக்கு பண்ணி இருக்கேன் வா வந்து சாப்பிடு” என அவள் அழைக்க, அவனோ கோபத்தில் எதுவும் பேசி இன்னொரு நாடகத்தை பார்க்க வேண்டாம் என்று நினைத்துக்கொண்டு மிக கவனமாக அவளை திரும்பி பார்க்காமல் அந்த வீட்டை விட்டு வெளியேறினான்….
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro