Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

உயிர் - 7


நாட்கள் உருண்டோடிட ஒருபுறம் நாயகிக்கோ அவள் பெயரைக் கொண்டவனை பற்றி தகவல் ஏதும் கிடைக்கவில்லை, இன்னொரு புறம் அவளின் கண்களை கவர்தவனோ கொலைவெறியுடன் அவளை தேடி கொண்டிருக்க,

இங்கு இவள் கடந்த தினங்களை போல் அவன் வாசலில் இல்லாமல் இருக்கிறானா என உறுதி படுத்தி கொண்டு வெளியே செல்ல அவள் ஜன்னலோரம் ஒலிந்தபடி ஓரமாக திரையை விழக்கி பார்த்துக்கொண்டு....

"என்னடா வாழ்கை இது கொஞ்சம் நாள்  முன்னலதான் அவன் வாசல்ல இருக்குறானான்னு பாத்து அவன பாக்குறதுக்காகவே வாசலுக்கு போனேன் இப்ப பாரு என் நிலமய...இத அபி கிட்ட கூட என்னனு கேக்க முடியாது தெரிஞ்ச அவன் வேணுன்னு என்ன மாட்டி விடறதுகாகவாவது அவன் கிட்ட எதுனா பண்ணுவான்"

என்று தனக்குள் புலம்பிக்கொண்டவாறு ஜன்னலின் திரையை தலைக்கு கவசம்போல் போட்டு கொண்டு எதிர் வீட்டை நோட்டமிட்டு கொண்டிருக்க...

"வர வர உன் creepiness ஒரு அளவே இல்லாம போய்கிட்டு இருக்கு..."

என்று அவள் அருமை தம்பியோ அவன் முகத்தில் குழப்பம் கலந்த அருவருப்புடன் சொல்லிவிட்டு அவள் அறையை கடந்து அவன் அறைக்குள் செல்லும் வழியில் நின்று அதை கூற, எப்போதும் போல அவனை பொருள் படுத்தாமல் தோல் பையை போட்டுகொண்டு அவள் வீட்டைவிட்டு வெளியேற தயாரானாள்.

நாளை எழுத வேண்டிய கணக்கு பாடம் கஷ்டமாக இருந்தால் அவள் ஜானாவின் உதவியை கேட்டிருந்தாள், ஆனால் சமீப காலங்களில் அவளுக்கு வெளியே செல்வதுதான் குதிரைகொம்பாக இருக்கிறதே என்று மனதுக்குள் புலம்பியவாறு வீடுகளை கடந்து சென்றாள்,

'ஏதோ கோபத்துல கேட்டவார்தைல திட்டிட்டேன் அதுக்குனு இப்படியா விரட்டுவான் வீட்டுக்கு வெளியே தலைகாட்ட முடியல, நல்ல வேலை ground ல அபி இருக்குறதுனால அந்த லேசர் லுக்கோட நிறுத்திக்கிறான், but என்னவோ plan...'

அவளின் மணபுலம்பளில் அவள் முன்னிருந்ததை பார்க்காமல் அவள் முன்னிருந்தவரின் மீது மோதி மீண்டும் திரும்பவும் கீழே விழ...

"sorry sorry sor..." என்று பதறியடித்து கொண்டு சொல்லவந்த வார்த்தைகள் அவள் முன்னிருப்பவன முகத்தை பார்த்தும் தொண்டைகுழிக்குள் சிக்கிக்கொண்டது,

'அய்யய்யோ திரும்பவும் இவனா? அவன் வீட்டுக்கு முன்னடியில்லாம் சுத்தி சுத்தி பாத்துட்டு இப்புடி ரோட்ல பாக்காம அவன் கைலயே போய்க்கி சிக்கிட்டியே நானி உன் திறமைக்கு ஒரு அளவே இல்லையா?' என அவள் யோசித்துக்கொண்டே அடுத்தனோடி அவள் தலைதெறிக்க ஓட ஆரம்பிக்க ஆனால் இரு அடி எடுத்து வைத்தவுடன் மீண்டும் அவன் மீதே போய் மோத பிறகுதான் அவன் தன் கைகளை இரும்பு பிடியில் வைத்திருப்பதை கவணித்தாள்,

'drama வ start பண்ணிட்டு வேண்டியதுதான்'

"இங்க பாருங்க இப்படி ஒரு அப்பாவி பொண்ண கொடுமை படுத்துதுறது நல்ல புல்லக்கி அழகில்லை..."

"நான் நல்லவேன்னு என்னகாவது உண்ண கூப்பிட்டுவச்சி சொல்லி இருக்கேனா?" என அவள் முடிப்பதற்குள் அவன் ஆரம்பிக்க,

'இந்த ரூட் work out ஆகளையே'

"மன்னிக்கிரவன் தான் பெரிய மனுஷன்" அவள் இன்னொரு முறை முயல...

"நான் மனுஷன் இல்லன்னு வச்சிகவேன்"  அவன் இந்த பந்தயும் விக்கெட் ஆக்க...

'இதெல்லாம் வேலக்கி ஆகாது' என அவள் அவன் காலில் அவள் காலால் ஓங்கி உதைக்க அவனோ வலியில் கத்தியவாறு அவன் காலின் பக்கம் கவனத்தை திருப்ப,

இது தான் வாய்ப்பென்று உடனே ஓட ஆரம்பித்தாள் நானி,

அவனிடமிருந்து தப்பித்த சந்தோஷம் அரைநொடி கூட நீடிக்கவில்லை பின்னால் அவன் அவளை துரத்தி வருவதை கவனித்து மீண்டும் ஓட தொடங்கினாள் அவள்,

ஆனால் அவன் துரத்த ஆரம்பித்து கொஞ்ச நேரம் கடக்கவில்லை, அருகில் யாரோ ஒருவர் எழுப்பும் ஓலக்குறலின் சத்தம் கேட்டு இருவரும் அதிர்ந்து நின்றார்கள்,

குரல் வந்த திசையை நோக்கி சாலைக்கு அருகில் போய் பார்த்த நானிக்கோ அவள் வாழ்க்கையில் இதுவரை காணாத அதிர்ச்சி ஒன்று காத்திருந்தது...

அவளுக்கு முன் ஒரு பெண் உயிர்போவது போல் கத்திக்கொண்டு இருந்தால் அது இல்லை அவளுக்கு அதிர்ச்சி, அந்த பெண்ணுக்கு எதிரில் சாலையில் கிடந்த உடல் நசுக்கப்பட்ட ஒரு ஆணின் சடலம் தான் பெரிய அதிர்ச்சி அவளுக்கு...

அவள் பின்னால் வந்த மைக்கேலோ செய்வதறியாது திகைத்து நிர்க்க அதிர்ச்சிலிருந்து வெளியே வந்த நானி அதிர்ச்சியில் பெண்னின் இடைவிடாத கூச்சலை நிறுத்த அந்த பெண்ணின் தோழின் மீது கைவைக்க அந்த பெண்ணோ அவள் சுய நினைவிற்கு வந்தவுடன் அவள் கூச்சல் அழுகையாக மாறியது,

பின்னிருந்து மைக்கேலோ அதிர்ச்சியில் இருந்து வெளியே வந்து நானியின் இன்னொரு கையை பிடித்து கொண்டு வேறு புறம் வேகமாக நடக்க ஆரம்பித்தான்,

அந்த சம்பவ இடத்திலிருந்து சிறிது தூரம் போனவுடன் தான் நானிக்கு மூளை மீண்டும் வேலை செய்ய தொடங்கி தன்னை இழுத்து செல்பவனிடம் கேள்வி கேட்டால்,

"ஏன் என்னை அங்க இருந்து இழுத்துட்டு வந்த?" அவள் புறம் திரும்பிய அவன் அவளுக்கு அறிவு இருக்கிறதா என்று சந்தேகப்படுவதுபோல் ஒரு பார்வையை வீசி விட்டு,

"Are you Seriously asking me that?" அவன் கேள்விக்கு அர்த்தம் எதுவும் புரியாததால் அவனை ஒரு குழப்ப கண்களுடன் பார்க்க,

"dumbass நான் மட்டும் யாரும் இல்லாதப்பவே உண்ண கூட்டிட்டு வரலென்ன இன்னும் கொஞ்சம் நேரத்துல அங்க எல்லாரும் அங்க வந்துடுவங்க including போலீஸ், அப்பறம் என்ன ஏதுன்னு கேள்விகேட்டு ஸ்டேஷன் வா கோர்டுக்குவான்னு சாகடிப்பனுங்க நான் உன்னை ஏகப்பட்ட தலைவலி ல இருந்து காப்பாதி இருக்கேன் நீ அதுக்கு என் கிட்டthanks சொல்லணும், நீ கேள்வியா கேக்குற... wait a minute அந்த பொண்ணு உன் முகத்த பாதுடுச்சா? எல்லாம் என் தப்பு நான் உன்னையும் விட்டுட்டு ஓடி வந்து இருக்கணும் my mistake...." என அவன் தனக்கு தானே புலம்பிக்கொண்டு போக அவள் மூளைக்குள் முதலில் தகவல்களை இறக்கிக்கொண்டு அவள் பதில் கூற ஆரம்பித்தாள்,

"இல்ல பாக்கல, நான் கைவைக்க ஒடனே அந்த பொண்ணு அழ ஆரம்பிச்சது ஆன என்ன திரும்பி பாக்குறதுக்கு முன்னால நீ இழுத்துட்டு வந்துட...." என அவள் மெதுவாக கூற ஆரம்பிக்க அவன் அப்போது தான் பெருமூச்சு விட்டான்,

"but மத்தவங்களுக்கு help பண்றது நல்லது தானே?" என அவள் அதை கேள்வியாய் கேட்க,

அவனோ "நல்லது...மத்தவங்களுக்கு நல்லது but நம்ம ரெண்டுபேருக்கும் இல்ல....அப்டியே நீ காபாதனும்னு நெனச்சாலும் அங்க காப்பாத்த யாரு இருக்க? எனக்கு தெரிஞ்சவரைக்கும் டயர்ல நசுங்கி ரெண்டா போன ஒரு ஆளை யாரும் உயிர் பிழைக்க வசதா நான் medical history ல எங்கேயும் கேள்விப்பட்டதே இல்ல" அவன் திரும்பவே அவள் சற்று முன்பு பார்த்த பயங்கரத்தை அவள் மூளைக்கும் படமாக வரைய அவளுக்கு பயத்தில் மேல் சிலிர்த்தது.

சிறிது நேரம் ஒன்றும் சொல்லாமல் இருவரும் தங்கள் வீட்டை நோக்கி நடந்து சென்றுகொண்டு இருக்க,

"ஏதோ dead bodyஅ பாத்த shock ல உண்ண சும்மா விட்டுடுவேன்னு மட்டும் நெனைக்காத நீ பண்ண எல்லாத்துக்கும் கண்டிப்பா உண்ண pay பண்ண வைக்காம விடமாட்டேன்" என அவன் திடீர் என்று கூற,

"நான் அப்படி என்ன உலகத்துல இல்லாத தப்பு பண்ணிட்டேன்? நீ எதுவுமே பண்ணாமயா நான் திட்டினேன் you totally deserve that"  என அவள் தைரியமாக கூற அவனோ நடப்பதை நிறுத்தி விட்டு அவள் புறம் திரும்பி ஒரு பயம் தரும் சிரிப்புடன்...

'did he just said that? நான் பயந்திருக்கேன்னு ஆறுதல் சொல்ல வேணாம்....but like Seriously?' அவளின் பதிர்ச்சி கோபமாய் மாற,

"என்ன பாத்து இந்த மாதிரி பேசிட்டு போனால் நான் உண்ண அப்டியே வழி அனுப்பி வச்சிடுவேன்னு நெனகிரியா?" அவன் முகத்தில் அந்த பயங்கர பார்வையுடன் கூற அவள் சற்று பயந்தாள்...

"...ok... sorry???" என்று அவள் மன்னிப்பை கேள்வியாக கேட்க,

அவனோ அவளை பார்த்து நமட்டு சிரிப்பு ஒன்றை சிரித்து விட்டு... "good bye dumbass நாளைக்கு என் கண்ணுல பட்டுடாதே" என்று சொல்லிவிட்டு அவன் வீட்டினுள் புகுந்தபோது தான் அவளுக்கு அவள் வீட்டை வந்து அடைந்து விட்ததை உணர்தால்.

அடுத்த நாள் காலையில் தொலைக்காட்சியில்  செய்தி வாசிப்பவர் அன்று இரவு ஏன் அவள் சரியாக தூங்க முடியவில்லை என்று நினைவு படுத்தினார்,

"....அருகில் உள்ள நெடுஞ்சாலை ஒன்றி நேற்று மாலை 6 மணி அளவில் இவரின்  சடலம் கண்டறியபட்டுள்ளது  24 வயதான ஜோஸப் என்பவர் லாரியில் நசு-" என்று தொலை காட்சியில் விபத்தினால் சிதைந்த அவரின் முகத்தை கட்டியவுடன் அவளால் அதற்குமேல் பொறுக்க முடியாமல் அந்த சதுர எந்திரத்தை அணைக்க அவள் எதிரியோ,

" ஏய் லூசு ஏன்டி அமத்துற அது நம்ம எரியான்னு வேற  சொல்லுறான் tv ய on பண்ணு" என்று அவள் எதிரி coffee யை குடித்த வாறு அவளிடம் கூற அவளோ வழக்கம் போல் காது கேட்காததுபோல் அவள் அறைக்கு சென்றாள்,

அவனோ அவளை சந்தேக கண்ணுடன் நோட்டமிட்டுக் கொண்டு அவளை பின் தொடர்ந்து வந்ததை அவளரியவில்லை,

"what's wrong nyla?" என்று அவன் மிகவும் குறைந்த கரிசனதுடன் அவளிடம் கேட்க,

அவளோ அவள் நாடக திறமையை மீண்டும் வெளிக்காட்ட முயன்றால், "what what's wrong? எனக்கு அந்த news பிடிக்கல சோ நான் off பண்ணேன் இதுல என்ன இருக்கு?" என்று அவள் குரலில் கொஞ்சம் ஸ்ருதியை ஏற்றி அவனிடம் கூற, அவன் புருவங்களை குவித்தவாறு அவள் முகத்தை ஆராய்ந்தான்,

அவள் அவன் முகத்தை பார்த்து விட்டு தோல்வியில் தோலை தொங்கவிட்டவாறு, அங்கு நடந்ததை கூற ஆரம்பித்தாள்,

".....அபி அதோட face எல்லாம் பெருசா அதோட கண்ணு எல்லாம் ஓபன் ஆகி......ஆஹ்...அந்த கண்ணுல...."

"nyla"

"there is no life அபி.... நீ மட்டும் அந்த இடத்துல இருந்து இருக்கணும்... he's dead"

"nyla...."

"just like that ....."

"nyla stop it" அவள் மூச்சு வாங்க தொடங்கிய உடன்  அவன் அவள் தோல் புஜங்களை குலுக்கி நிறுத்தி"

"it's ok...It's ok..." என்று அவன் தோழகளில் சாய்த்து ஆறுதல் சொல்ல அப்போது தான் அவள் கண்களில் இருந்து கண்ணீர் ஓடத்தொடங்கியது,

" ஆனால் அவனுக்கு family எல்லாம் இருக்கு்ல அபி எனக்கே இப்படி இருந்தால் அவங்கள எல்லாம் எப்ப..."

"sh...Sh...It's ok...It's ok..." என்று தோலை தட்டிவிட சிறிது நேரத்தில் அவள் அமைதியானால்,

"but அங்க வேற யாருமே இல்லையா? உண்ண யாருமே பாக்கலையா?" என்று அவன் கேள்வி எழுப்ப,

"இல்ல அதுக்குள்ள மைக்கேல் என்ன இழுத்துட்டு வந்துட்டான்" அவன் பேரை சொன்னவுடன் அவன் முகம் மாரியதை கண்டதும் அவள் தன் தவறை உணர்தால்,

"திடீர்னு மைக்கேல எங்க இருந்து வந்தான்" என்று அவன் பிழைகண்ட பாவனையின் சொல்ல,

பிரச்சனையை இன்னும் கிளராமல் முடிக்க அவள் "இல்ல அவனும் அந்த side தான் போய்ட்டு இருந்தான் நாங்க ரெண்டுபேரும் தான் பாத்தோம், இருந்தாலும் நான் அந்த ஓடிவந்திருக்க கூ..."

"உண்ண அங்க இருந்து கூட்டிட்டு வந்ததெல்லாம் சரிதான், but அதை மைக்கேல் பண்ணனு சொன்னியே அதுதான் எனக்கு சந்தேகம், அவன் ரத்ததை பாத்த அடுத்த sec தலைதெறிக்க ஓடி இருக்குமே..."

"அது என்னமோ உண்மைதான் என்ன இழுத்துட்டு வந்ததுக்கு அப்பறம் ரொம்ப feel பண்ணான்" என அவள் கண்ணை உருட்டியவாறு கூற,

"now that's more sounds like him" என்று கூறியவாறு அவன் அறையை விட்டு வெளியேறினான்.

---–------------

அந்த நாள் பள்ளி தோடகிங்கியது ஆனால் அங்கும் அவளின் மனநிலையை மாற்றுவதுபோல் எதுவும் நடப்பதாக இல்லை,

அவள் நேற்று நடந்ததை அவர்களிடம்  சொன்னதிலிருந்து அந்த சம்பவத்தை பற்றி பேசுவதை நிறுத்துவதாக இல்லை,

" ....நேத்து வாட்ஸ்அப் ல எல்லா group ளையும் நேத்து இது தான் டாபிக், உனக்கு photo வந்துச்சா ஜானு" என்று தியா கேட்க,

"no thanks please இன்னக்கி காலைலருந்து என் அண்ணன் அதை பத்தியே பேசி என்ன கொன்னுட்டான், அவன் சொன்ன details ஏ தங்க முடியல, இதுல photo வேர பாத்தா அவ்ளோவ் தான்" என ஜானா மருத்துவம் படிக்கும் அவள் அண்ணனை நினைவூட்ட, நானியோ ஆர்வ கோலாரில் நாவை கட்டுக்குள் கொண்டுவர முடியாமல் அந்த கேள்வியை கேட்டால்.

"அண்ணன் என்ன சொன்னான்?" என கேட்க,

"அவன் என்ன சொல்ல, அவனால கொஞ்சம் நேரம் தான் அதை பார்க்க முடிஞ்சதாம் அது அவன் காலேஜ் deanன்னோட கேஸாம், அண்ட் he's Like so confused with asfaqxia and spinal-"

"wait wait wait...  கொஞ்சம் புரியிர பாஷைல பேசுறீங்களா?" என்று தியா இடையில் தலையிட ஜானா அதை நிறுத்தி

" அதுக்கு அர்த்தம் லாரில அவன் முதுகெலும்பு நசுங்கி அவனோட nervous சிஸ்டம் எல்லாம் collapes ஆகுறதுக்கு முன்னாலேயே அவன் shock ல போய்ட்டானா இல்லன்னா-" அதற்கு மேல் அவர்களால் தாங்க முடியவில்லை,

"இப்ப தயவு செஞ்சி இன்னக்கி நான் சாப்பிட breakfast வெளிய வர்றதுக்கு முன்னால அந்த topic அ விட்டுட்டு வேர ஏதாவது பேசுறீங்களா" என அவள் கூற அது அவர்கள் வாயை அடைத்தது, பிறகு அவர்கள் மைக்கேலை பற்றி பேச ஆரம்பித்து விட்டார்கள்,

"so உன் crush உன்ன crush பண்ணுறதுக்கு ரொம்ப rush ல இருக்கான் so....crush crash ஆயிதுச்சா?" என தியா ஆரம்பித்தாள்,

'oh god இதுக்கு dead body ஏ தேவள' என்று நாவல் நினைத்து கொண்டு வேறு வழி இன்றி பேச ஆரம்பித்தள்,

"i don't know diya, அவன பாத்தா அப்படி கோவமா வருது இருந்தாலும் அவன் இன்னும் கொஞ்சம் அழகா தான் இருக்கான், but அதுக்கும் இதுக்கும் சம்மந்தம் இல்ல right? அவன் மேள கோவமா இருந்தா அவன sight அடிக்க கூடாதா என்ன?" என அவள் கேட்க்க ஜானாவோ அதற்கு கண்களை உருட்டி விட்டு அமைதியாய் இருக்க தியாவோ முதலில் ஓரு குழப்பத்தில் அவள் முகத்தை பார்த்து கொண்டிருந்தாள் பிறகு அவள் கூறியதை புரிந்து கொள்ள முயல்வதை கைவிட்டு தோற்றது போல் தலையை ஆட்டிவிட்டு அவளும் அறைக்குள் நுழைந்த ஆசிரியரை கவனிக்க ஆரம்பித்துவிட்டாள்,

அப்போது தான் நானிக்கு தலைக்குள் எச்சரிக்கை மணி அடித்தது...

"அய்யய்யோ இன்னைக்கு math test க்கு ஒண்ணுமே பாக்கலையே....!!!!!"

நல்லவேளை அன்றைய கணக்கு test அவளுக்கு மட்டுமல்ல வகுப்பில் உள்ள அனைவருக்கும் கடினமாகத்தான் இருந்தது, என்னதான் ஜானாவால் அந்த விஷயத்தை ஜீரணிக்க முடியவில்லை என்றாலும் எனக்கோ அதில் ஒரு அதீத நிம்மதி,

அன்று பள்ளியில் நன்கு படிப்பவர்கள், கணக்கை பிடித்தவர்கள், கணக்கு நடத்துபவரை பிடித்தவர்கள் என்று எல்லோரும் முழு மதிப்பெண் எடுத்தவரின் மீது பொறாமையில் புரிந்து தள்ளும்போது அவளுக்கோ "அப்பாடா நம்ம மானம் போகாத வரைக்கும் சந்தோஷம்" என்று கால் மீது கால் போட்டவளாக அவள் வழக்கமான பிரச்சனைகளை யோசிக்க தொடங்கி விட்டாள்....

A/N: okay intro ellaam mudinjaachu be ready for a roller coster ride..please vote and comment to motivate me...

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro