அறிமுகம்
நனெலியா ஜார்ஜ்,
உங்க வண்ண கனவுகளுடன் வலம்வருகிர சராசரி டீனெஜர்,
துருதுருனு இருப்பா ஆனா அவள ரொம்ப நல்லவன்னு சொல்லிட முடியாது,
அவள் சில நேரம் புத்திசாலி பல நேரம் லூசு,
அவள் குறும்புத்தனம் செய்தாலும் அதற்கும் அவளுக்கென ஒரு அளவுண்டு,
தப்பு பண்ணாலும் அதை உணர்ந்த உடன் யோசிக்காமல் அதை சரி செய்யும் பக்குவம் அவளுக்குண்டு,
இதையும் தாண்டி அன்பால் நிறைந்த சிரிப்பை பரப்பும் கருவி அவள்.அவளுக்கு இரு தோழிகள் அவளுக்கு ஏற்றார் போல் இருந்தும் முற்றிலும் வேறாக,
ஒருத்தி புத்திக்கு பின்னால் போக இன்னொருத்தியொ காதலை தேடி அலைய,
என்ன தான் அவர்கள் உலகம் அவளுக்கு புரியாதபோதும் அவர்கள் மீதுள்ள அவளின் அன்பிற்கு அளவில்லை,
வீட்டிளோ அன்னையின் பாசத்தை பங்குபோடும் அவளின் ஆத்ம விரோதி,
அவளை விட அவனுக்கு அதிகம் பாசம் காட்டும் அவள் தாய்,
வாய்ப்பு கிட்டினால் அவன் கழுத்தயும் பிடிக்கும் அளவிற்கு எரிச்சலில் அவள்...
எப்போதும் அவளை சீண்டி பார்க்கும் அவளின் தம்பி,
கண்கள் கெஞ்ச இதயம் பட படக்க அவள் இருக்கும் செய்தியை கூட இன்னும் அறிந்திடாத அவளின் ஈர்ப்பிர்குரியவன் அவள் கண் எதிரில்,
இந்நிலையில் அவள் மறுபாதியை இவள் எப்படி அடையாளம் காண போகிறாள் என்பதை தெரிந்து கொள்ள,
அவளின் வாழ்க்கை பயணத்தை என்னொடு நீங்களும் சேர்ந்து பயணிக்க அடுத்த பாகத்திற்கு செல்லவும்.
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro