நீ எனதே
அதிகாலை வேலையிலே,
பனி கவர்ந்த சாலையிலே,
உனை நான் கண்டேனே.
சிறகடிக்கும் பட்டாம்பூச்சியாய் உன் இமை,
வர்ணம் பல ரசிக்க,
நானோ உனை ரசித்தேனடா.
காந்த கருவிழி எனை நோக்க,
நெஞ்சம் துடி துடிக்க,
காந்தத் துகளாய் சிதரினேனடா.
உன் மொட்டு செவ்விதழ் மலர,
நெடும் புருவம் உயர,
என் உள்ளம் உன்னுள் சிறை கொண்டதடா.
கண்டதும் மயங்கினேன் உன்னில்,
என் மன்னவனே, இனி நீ எனதே,
உனை சேர என்றும் காத்திருப்பேனடா.
**************************
Er_Sabeer மச்சி நீ சொன்ன மாறி கவிதை ஒன்னு ட்ரைபன்னி இருக்கேன். ஓகேவா?
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro