உயிரானவன் 5
மருத்துவமனை அருகில் விபத்து நடந்ததால் உடனடியாக அவளிற்கு சிகிச்சை மேற்க்கொண்டனர்.. ஜெகதீஸ் பாலா இருவரும் இன்னும் நினைவிற்கு வராமல் அதிர்ச்சியில் அமர்ந்து இருந்தனர்.. அந்நேரம் ஜெகதீஸின் செல் போன் சிணுங்கியது.. அதனின் ஒலியில் நினைவுக்கு வந்தவன் பெயரை பார்க்காமல் அதனை ஏற்றான்..
"ஹலோ ஜெகா.. எங்க இருக்க.. எங்க டா உன் தங்கச்சி.. போன் சுவிட்ச் ஆப்னு வருது.. சார்ஜ் போடாம விட்டுட்டாளா.. இல்லை என் செல்லங்கள் யாராவது ஒடைச்சுட்டாங்களா.. ஹலோ டேய்.. ஜெகா.. இருக்கியா இல்லையா.. என்ன டா பதிலே சொல்ல மாட்டேங்குற.. ஹலோ" என்று அவன் பதில் வராமல் போக கத்திக்கொண்டு இருந்தான்..
அவனின் பேச்சிற்கு பதில் கூற முடியாமல் வாயை இறுக ஒரு கையினால் மூடி அழுதுகொண்டு இருந்தான்.. ஏதோ தேம்பும் சத்தம் கேட்டு, "ஹலோ ஜெகதீஸ் என்ன டா.. பதில் சொல்லு.. இல்லனா ரம்யா கிட்ட போனை குடு" என்றான் வருண் பதட்டமாக..
அதற்குமேல் முடியாமல், "வருன்ன்ன்ன்ன்.. ரம்யா ரம்யா" என்று அழுதுவிட்டான்.. "ஹலோ ஜெகா.. ரம்யா.. என்ன டா சொல்ல வர.. ஏன் அலற.. டேய் பயமா இருக்கு தெளிவா சொல்லு டா டேய்" என்று அவன் பயத்தில் கேட்டுக்கொண்டே போக அருகில் இருந்த ஷாலினி அவனின் மொபைலை வாங்கி தகவல் சொன்னாள்..
அதனை கேட்டு உறைந்து போன வருண் சிறிது நேரத்தில் ரம்யா என்று கத்தினான்.. சட்டென்று மொபைலை அனைத்தவன் உடனடியாக டிக்கெட் புக் செய்து பிளைட்டில் கிளம்பினான்.. அவன் வந்து சேர்ந்த நேரம் அனைவரும் மருத்துவமனையில் இருந்தனர்..
அமைதியாக ஜெகதீஸ் அருகில் சென்றவன் அவனின் சட்டையை பிடித்து "எப்படி டா என்ன ஆச்சு" என்று அவன் கேட்க கண்களில் கண்ணீருடன் அங்கு பாலாவை காப்பாற்ற அவள் செய்த செயலை கூறினான் ஜெகதீஸ்.. ஜெகதீஸை மாறி மாறி அறைந்தான் வருண்.. "உன்ன நம்பி தான டா விட்டுட்டு போனேன்.. ஏன் டா இப்படி விட்டுட்ட.. எப்படி டா இப்படி ஆச்சு.. ஏன் டா ஏன்.." என்று அடிDத்துக்கொண்டே இருந்தான்..
மற்றவர்கள் அவனை தடுக்க வர, அவர்களை விலக்கினான் ஜெகதீஸ்.. அத்தனை அடிகளையும் அழுகையுடன் வாங்கிக்கொண்டான்.. அவனிற்கு அடிகளின் வலியை விட ரம்யா உயிர்க்கு போராடி அவசர சிகிச்சை பிரிவில் இருப்பதே வேதனையாக இருந்தது..
அடித்துக்கொண்டு இருந்தவன் அவன் மேலேயே அழுது விழுந்தான்.. அவனை அணைத்துக்கொண்டு கண்ணீர் விட்டான் ஜெகதீஸ்.. "மச்சி ப்ளீஸ் டா மனச விடாதிங்க.. கண்டிப்பா நம்ம ரம்யா வருவா டா.." என்று கண்களில் கண்ணீருடன் மற்றவர்களை தேற்ற முயன்றான் திலிப்..
சிகிச்சை செய்துகொண்டு இருந்த அறையில் இருந்து மருத்துவர் வெளியில் வர அவர் அருகில் ஓடினர் அனைவரும்.. அவர் மெதுவாக அவரிடம், "தலையில பலமா அடி பட்டுஇருக்கு.. டிரீட்மென்ட் பன்னிட்டு இருக்கோம்.. முடிஞ்சதும் தான் எதுனாலும் சொல்ல முடியும்.. உயிர காப்பாத்த தான் முயற்சி பண்றோம்.. ஆனா ரொம்ப கிரிட்டிக்கள் ஸ்டேஜ்ல இருகாங்க.. கடவுளை நம்புவோம்.. எல்லாம் தைரியமா இருங்க" என்று கூறி விட்டு நகர்ந்தார்..
அனைவரும் அமைதியுடன் நின்றனர்.. அனைவரும் தங்களின் இஷ்ட தெய்வங்களை வேண்டி நின்றனர்.. வருண் ஒரு நாற்காலியில் அமர்ந்து கண்களை மூடினான்.. அவன் அருகில் ஜெகதீஸ் அமர்ந்து இருக்க அவன் கண்களில் வந்த கண்ணீர் அனைவரையும் இன்னும் வேதனையை ஏற்படுத்தியது..
திலிப் அவர்கள் இருவர் அருகில் சென்று, "நம்புங்க டா ரம்யா வந்துடுவா.. அவளுக்கு ஒன்னும் ஆகாது டா.." என்று மெதுவாக சொன்னவன் அதற்கு மேல் முடியாமல் இருவரின் கையையும் பிடித்து, "வந்துருவல்ல" என்று கேட்டு அழுதுவிட்டான்.. ரம்யாவின் தந்தை தாய் இருவரும் அழுகையில் குலுங்க, இரண்டு மணி நேரங்கள் அனைவர்க்கும் நரகம் போலே சென்றது..
குழந்தைகளுக்கு பால் எடுத்து வந்து குடுக்க அவர்கள் தனது தாய் இன்றி குடிக்க மறுத்தனர்.. இருவரும் அவர்களின் தந்தை மேலே தாவ, அவர்களின் நியாபகம் வந்து திரும்பி பார்த்தான் வருண்.. பின்பு அவர்களை மடியினில் இரு பக்கமும் அமர வைத்து பாலை குடிக்க வைத்தான்..
மருத்துவர் மீண்டும் வெளியில் வர, "அவங்க உயிர காப்பாத்தியாச்சு.. ஆனா....." என்று அவர் நிறுத்த அனைவரும் அவரை பார்க்க, "இன்னும் நினைவு திரும்பல.. சொல்லப்போனா இது கோமா ஸ்டேஜ் தான்.. எப்போவேனாலும் நினைவு திரும்பலாம்.. சீக்கிரமே திரும்பிடணும்னு எல்லாரும் வேண்டிக்கோங்க.. நம்பிக்கையா இருங்க.." என்றார்..
சிறிது நேர அமைதிக்கு பின், "நாங்க போய் பாக்கலாமா" என்று கேட்டார் பாண்டியன்.. "ஹ்ம்ம் ஒரு மணி நேரம் கழிச்சு பாக்கலாம்.. ரெண்டு ரெண்டு பேரா போய் பாருங்க.. கூட்டமா போகாதீங்க.." என்று கூறிவிட்டு நகர்ந்தார்..
முதலில் வள்ளி பாண்டியன் சென்று பார்த்தனர்.. அவளை பார்த்த வள்ளியின் நினைவுகள் ஒரு நாள் நடந்ததை நினைத்து பார்த்தது..
******--- 4 வருடங்கள் முன்பு ---******
"அம்மா அம்மா அம்ம்ம்ம்மா வள்ளி வில்லி" என்று கத்திகொண்டே வந்தாள் ரம்யா.. "இப்போ எதுக்கு இப்படி கத்துற.. என்ன வேணும்" என்று கேட்டார் வள்ளி.. "நான் ஒரு டிஷ் செஞ்சேன் மா.. சாப்பிட்டு பாருங்க.." என்று அவள் ஒரு பிளேட்டை நீட்ட அதனை எடுத்து சுவைத்து பார்த்தவர், "ம்ம்ம் நல்லா இருக்கு.. போற எடத்துல எப்பிடியாவது பொழச்சுப்ப.. ஆனா இப்போ எனக்கு பெரிய கவலையே சமையல் செய்றேன்னு சமையல் ரூமில என்ன அலங்கோலம் பன்னிருக்கியோனு தான்.." என்றார் வள்ளி..
தாயை முறைத்தவள், "ஒரு நாள் நீ யோசிப்ப மா.. ஹயோ நம்ம பொண்ணு சமைச்சு இப்போ குடுத்தா எவ்ளோ நல்லா இருக்கும்னு.. அப்போ சமைச்சு குடுக்குற நிலைமையில நான் இருக்க மாட்டேன் ஜாக்கிரதை" என்று கை நீட்டி எச்சரித்த மகளை காதை பிடித்து திருகி, "வாயாடி உன் சமையல்க்காக நான் ஒன்னும் ஏங்க மாட்டேன்" என்று கூறி தலையை திருப்பிக்கொள்ள இருவரும் சிறித்துவிட்டனர்..
***********------------------*************
இதனை நினைத்து பார்த்த வள்ளிக்கு பேச்சின்றி கிடைக்கும் தன் மகளை அதற்கு மேல் பார்க்க முடியாமல் வெளியில் சென்று விட்டார்..
பாண்டியன் அவரின் மகளை பார்த்துக்கொண்டு இருந்தார்.. அவரின் நினைவுகளில்,
**********************************
முதல் ஹார்ட் அட்டாக் வந்து சிறிது குணமடைந்த பாண்டியன் வீட்டில் அமைதியாக ஏதோ யோசனையில் இருந்தார்.. அவரின் முகத்தில் கவலைகளின் ரேகை அவர் கால் அருகில் கீழே அமைதியாக அமர்ந்தாள் ரம்யா.. அவள் வந்ததை அறிந்து தலையை மெதுவாக தடவி கொடுத்தவர் "என்ன மா" என்றார் மென்மையாக..
"ஏன் அப்பா கவலையா இருக்கீங்க.. பாலா பொறுப்பு இல்லாம இருக்கானு வருத்தப்படுறீங்களா.. இப்போ தான் நான் இருக்கேனே.. நான் போன அப்றம் அவனுக்கு இருக்க தொல்லை டென்ஷன் எல்லாம் போய்டும்.. அப்டி இருக்கப்போ அவன் கண்டிப்பா பொறுப்பா மாறிடுவான் பா.. எனக்கு மாப்ள பாத்து சீக்ரம் கல்யாணம் பண்ணி வச்சுடுங்க பா.. யாரா இருந்தாலும் பரவாயில்ல.. நான் அட்ஜஸ்ட் பண்ணிப்பேன் பா.. நான் இல்லனா தான் நீங்களும் பயப்படாம அவனை கேள்வி கேப்பிங்க.. நான் ஏன் பொறந்தேனு எனக்கே கஷ்டமா இருக்கு பா.. நான் பொறக்காம இருந்துருந்தா எல்லாமே சரியா இருந்துருக்கும்.." என்று அவள் கண்ணீருடன் கூற அவளின் தந்தையின் கண்களிலும் கண்ணீர்..
"என்ன மா இப்டிலாம் பேசுற.. அப்பா கிட்ட தெம்பு இருக்கு மா.. நீ எதுவும் யோசிக்காம அமைதியா இரு.. அப்றம் எனக்கு ஒரு பெரிய டவுட் மா" என்று பாண்டியன் கேட்க அவள் அவர் முகத்தை நிமிர்ந்து பார்க்க, "எப்போ என் பொண்ணு இவ்ளோ பெரிய மனுஷியா ஆனா.. இப்டிலாம் சீரியஸ் மூஞ்சி வச்சு அவளுக்கு பேச தெரியாதே.." என்று அவர் கேட்டார்..
அவரை பார்த்து மெல்ல சிரித்தவள், "நான் எப்போவுமே குட்டி பொண்ணு தான்.. பெரிய மனுஷிலாம் இல்லை.. இப்டிலாம் பேசுனா கல்யாணம் பண்ணி வைப்பீங்களேனு பாத்தேன்.. ஆனா நோ யூஸ்" என்று அவள் சலித்துக்கொள்ள அவளின் தலையில் மெல்லமாக கொட்டினார்..
***********************************
நினைவில் இருந்து வெளியில் வந்தவர் அவரின் செல்ல மகள் அசைவின்றி இருக்க அவளின் அருகில் சென்று, "எவ்ளோ தெளிவா பேசுவ.. இப்படி பேசாம அமைதியா இருக்கவே மாட்டியே மா.. கொஞ்ச நேரம் அமைதியா இருனு சொன்னாலே கேக்கமாட்டியே.. இப்போ இப்படி இருக்கியே மா.. இதெல்லாம் தாங்கிகிற தைரியம் யாருக்குமே இல்ல டா.. வந்துரு மா.. சீக்கிரமா எந்திரிச்சு வந்துரு" என்று சொல்லிவிட்டு மனதில் வலியுடன் அறையிலிருந்து வெளியில் வந்தார்..
வெளியே சுவற்றை வெறித்து பார்த்துக்கொண்டு அமர்ந்து இருந்த பாலாவின் அருகில் சென்று அவனின் தோள் மீது கை வைத்தாள் ஷாலினி.. நினைவு வந்து அவளின் முகத்தை பார்த்தவன் சட்டென்று அவளின் கையை உதறி விட்டு எழுந்து பூங்காவிற்குள் சென்று விட்டான்..
அவன் பின்னே சென்றவள் அவன் ஒரு இடத்தில் அமர்ந்ததும் அவன் அருகில் சென்று மீண்டும் அவன் மீது கை வைக்க, அவளை பார்த்து முறைத்தவன், "எல்லாம் உன்னால தான்.. ஏன் டி என் லைப்ல வந்த.. அவளை எவ்ளோவோ கஷ்டப்படுத்திருக்கேன்.. ஆனா அப்போல்லாம் வலிக்கல.. இப்போ வலிக்குது டி அவளை இந்த நிலைமைல பாக்க வலிக்குது.. உன்ன யாரு என்ன விரும்ப சொன்னா.. உன்ன யாரு என்ன விட்டு விலக சொன்னா.. போடி போயிடு.. போ" என்று கத்தினான்..
ஆனாலும் அவன் மீது இருந்த கையை எடுக்காமல் அவன் ஒரு அழுத்தம் குடுக்க சட்டென்று அவளை அணைத்துக்கொண்டு அழுதான்.. "என்னால முடியல.. நான் அவ்ளோ பண்ணியும் என் பக்கம் இருக்க நியாயத்தை அவ உனக்கு சொல்லி புரிய வச்சுருக்கா.. ஆனா நான் அவளுக்காக ஒன்னுமே பண்ணாம இருக்கேன்.." என்று அழுதான் பாலா..
"அவ chairல உக்காந்து இருந்தப்போ நான் எட்டி ஒதச்சுருக்கேன்.. எல்லாமே என் கண்ணு முன்னாடி வந்து நின்னு என்ன கொல்லுது.. என்னால எதையுமே ஏத்துக்க முடியல.. ஹயோ" என்று கதறினான்.. ஆனால் அவனின் கதறலை கேட்கவோ அவனை சமாதானம் செய்யவோ அங்கே ரம்யா இல்லையே.. 😔
💕
வள்ளி பாண்டியன் வெளியில் வந்ததும் வருணை பார்க்க அனுப்ப அவன், "எல்லாரும் பாத்துட்டு வாங்க.. அப்றம் பாத்துக்குறேன்" என்று சொல்லி விட்டு கண்களை மூடினான்.. அவன் மனதில் சிரித்துக்கொண்டு அவனிடம் தனது காதலை சொன்னா ரம்யா முன்னே வந்தாள்..
****** 3 வருடங்களுக்கு முன்பு ******
வருண் அவனின் காதலை சொல்லி (கண்களின் மொழி 49 part ) 3 நாட்கள் சென்றது.. அன்று இரவு அவன் உறங்கிய பின்னர், அவன் அருகில் நெருங்கி படுத்த ரம்யா, "ஹ்ம்ம் தூங்கிட்டியா.. என்ன நீ உன் இஷ்டத்துக்கு இருக்க.. லவ் சொன்னோமே அதுக்கு என்ன சொல்லப்போறா, நோ சொன்னா கொஞ்சம் இம்ப்ரெஸ் பண்ணலாமே அப்படிலாம் கொஞ்சம் கூட உனக்கு பொறுப்பே இல்லை.. எப்படி கொறட்ட விட்டு தூங்குறான் பாரு.. ஹ்ம்ம் அழகா தான் இருக்க.. ரொம்ப நல்லவனா இருக்க.. உன்ன வச்சு எப்படி காலத்த தள்ள போறேன்னு தெரியல.." என்று பேசிக்கொண்டு இருக்க அவனிடம் சிறிது அசைவு தெரிந்தது..
"ஹயோ முழிச்சுட்டானா" என்று அவள் நகர்ந்து படுத்து கண்களை மூடிக்கொண்டாள்.. ஆனால் அவன் மீண்டும் உறங்கவும் அவனின் அருகில் சென்றவள் அவன் கையை எடுத்து அவளின் கைக்குள் வைத்துக்கொண்டு, "எனக்கு உன்ன ரொம்ப புடிச்சிருக்கு.. சீக்ரம் உங்கிட்ட சொல்ல ட்ரை பன்னிட்டு தான் இருக்கேன்.. ஆனா புதுசா வெக்கம்னு ஒரு நியூ ப்ரோடக்ட்( product ) வந்து என்கிட்ட பெர்மிஸ்ஸன் கேக்காம ஒட்டிக்கிது.. அதான் என்னால உன்கிட்ட சொல்ல முடியல.. சொல்லிடுறேன் நல்லா நாள் நேரம் காலம் எல்லாம் பாத்து.." என்று பேசிவிட்டு அவனின் கன்னத்தில் மெதுவாக ஒரு முத்தத்தை பதித்து விட்டு கண்களை மூடிக்கொண்டு உறங்கினாள்..
தினமும் அவன் உறங்கியதும் இதுவே நடந்தது.. ஆனால் அவன் இதனை அறியாமல் இருந்தான்..
ஒருநாள் அவன் வேலைக்கு என சென்றுவிட்டு மீண்டும் ஏதோ பைலை எடுக்க அவசரமாக அவனின் அறைக்குள் நுழைந்தான்.. நுழைந்தவன் அமைதியாக நடப்பதை கவனித்தான்.. அவனின் மனைவி அவனுடைய சட்டையை போட்டுக்கொண்டு கண்ணாடி முன்னே நின்று பேசிக்கொண்டு இருந்தாள்..
"அட வருண் பையா.. ஏன் டா இவ்ளோ டூப்லைட்டா இருக்க.. நான் என் லவ் சொல்ல எவ்ளோ கஷ்டப்படுறேன் தெரியுமா.. அதென்ன எப்ப என்ன பாத்தாலும் ஒரு மாதிரி சிரிக்குற.. அதுவே எனக்கு வெக்கம் வந்து தொலைக்கிது.. இதுல நான் லவ் எப்படி சொல்லுவேன்.. சரி இவ சொல்லமாற்றலே நாமளே கேக்கலாம்னு கொஞ்சமாச்சும் உன் மூளைக்கு தோணுதா.. ஹப்பா நீ மட்டும் எப்படி செமயா என்ன ப்ரொபோஸ் பண்ணுன.. எனக்கு அதெல்லாம் செய்ய தெரியல.. நான் சாதாரணமா தான் சொல்லுவேன்.. அதுக்கு இப்போ என்னங்குற.. லவ் எப்படி சொல்றோம்னு முக்கியம் இல்ல.. எந்த அளவுக்கு நம்ம லவ்வ சொல்றோம்னு தான் இருக்கு.. புரிஞ்சுதா.." என்று அவள் விரல் நீட்டி எச்சரித்து விட்டு திரும்ப அவளின் அவன் வாசலில் கை கட்டி அவளை ரசித்து நின்றான்..
அவனை கண்டதும் திருவிழா கூட்டத்தில் காணாமல் போன குழந்தை போல அவள் முழித்துக்கொண்டு நிற்க, "என்ன தப்பு பண்ணி போலீஸ் கிட்ட மாட்டிக்கிட்ட மாதிரியே முழிக்குற.. என்ன ஆச்சு" என்று கேட்டுக்கொண்டே அவள் அருகில் செல்ல, உண்மையிலே வந்துவிட்டானே என்று அவள் பின்னே சென்றுக்கொண்டு இருந்தாள்..
ட்ரெஸ்ஸிங் டேபிள் மீது அவள் மோதி நிற்க அவளின் அருகில் சென்று அவளையே பார்த்துக்கொண்டு ஒற்றை புருவம் உயர்த்தி என்ன என்று கேட்க அவள் கைகளை பிசைந்துக்கொண்டு புரியாமல் விழித்தாள்.. அவன் தனது கையை அவளின் அருகில் செண்டு சென்று அவள் அணிந்திருக்கும் அவனுடைய சட்டையின் காலரை சரி செய்து விட அப்பொழுது தான் அவள் அணிந்திருக்கும் சட்டையின் நினைவு வந்தது..
வெட்கத்தில் முகம் சிவக்க அதனை மறைக்க கீழே குனிந்துக்கொண்டாள்.. அவளின் முகத்தை அவன் நிமிர்த்த மீண்டும் கீழே குனிந்துக்கொண்டாள்.. அவள் பிசைந்த கைகளில் புதையல் தேட, "எனக்கு நீ எங்க எப்படி லவ் சொல்றன்னு முக்கியமே இல்ல டியர்.. எந்த அளவுக்கு என்மேல லவ் வச்சுருக்கனு தெரிஞ்ச போதும்.. அத நீ சொல்லி தான் எனக்கு புரிய வைக்கணும்னு கூட இல்ல.. எனக்கு எப்போவோ தெரியும்.. இன்னும் சொல்ல போனா உனக்கு நீ என்ன லவ் பன்றேன்னு தெரியுறதுக்கு முன்னாடியே தெரியும்" என்றான் வருண்..
உடனே அவனின் முகத்தை நிமிர்ந்து பார்த்தவள், "ஒஹ்ஹஹ் எப்போ தெரியும்" என்று கேட்டாள்.. "இப்படி நின்னு கேட்டாலாம் சொல்ல முடியாது.." என்று வருண் சொல்ல அவனை புரியாத பார்வை பார்த்தாள் ரம்யா.. "ஹயோ lkgல இருந்து சொல்லி குடுக்கனும் போலயே" என்று சொல்லியவன் அவளை அருகில் இழுத்தான்..
அவன் இழுத்ததில் முதலில் அதிர்ந்தவள் பின்பு வெட்கம் வர அவனின் மார்பினில் புதைந்துக்கொண்டாள்.. அவளை அனைத்தவன், "ம்ம்ம்ம் நான் நம்ம கல்யாணம் கேன்சல் பன்னிட்டு அமெரிக்கா போறேன்னு சொன்னேனே அப்போவே உன் கண்ணுல ஒரு ஏமாற்றம் ஏக்கம் வலி எல்லாம் தெரிஞ்சுது.. அது வரைக்கும் நிஜமாவே நமக்குள்ள கல்யாணம் வேணாம்னு நெனச்சுட்டு இருந்த எனக்கு அப்போ தான் குழப்பம் அதிகமா ஆச்சு.. அப்றம் என்னென்னமோ ஆயிடுச்சி" என்றான் கண்களில் காதலுடன்..
"எனக்கு அப்போல்லாம் தெரியலயே.. ம்ம்ம்ம் நீங்க திரும்பி வர வரைக்கும் உங்கள மிஸ் பன்னேன்.. பட் அப்போல்லாம் லவ்னு தெரியல.. நமக்கு கல்யாணம் நடந்தே ஆகணும்னு நீங்க சொன்னப்போ எனக்குள்ள அது சந்தோசமா இருந்துச்சு.. நீங்க அமெரிக்கா போனதுக்கு அப்றம் நிறைய மாப்ள பத்தி அப்பா அம்மா சொன்னாங்க.. ஆனா நான் வேணாம்னு முடிவா சொல்லிட்டேன்.. அப்போ தான் எனக்கு தெரிஞ்சுச்சு.. உங்கள தவிர வேற யாரையும் என்னால ஏத்துக்க முடியாதுனு.." என்றாள் ரம்யா..
"ஹ்ம்ம் எல்லாம் சரி தான்.. அப்புறம்" என்றான் வருண்.. அவன் ஏதோ சொல்ல வருகிறானோ என்று அவன் முகம் பார்க்க அவனோ கண்களை சிமிட்டி அவளின் கன்னங்களை சிவக்க செய்தான்.. "இப்பிடிலாம் அழகா முகம் சிவந்து வெக்கபட்ட அப்றம் ஏடா கூடம் ஆயிடும் பாத்துக்கோ" என்று வருண் சொல்ல, அவனின் அணைப்பிலிருந்து வெளியில் வந்தவள், யாரோ கூப்பிடுறாங்க என்று குரலே வராமல் சொல்லி நகரபார்க்க அவளின் கையை பிடித்து நிறுத்தினான்..
"அதெல்லாம் யாரும் உன்ன கூப்பிடல.. இங்க வா" என்று அவளை இழுக்க அவள் மீண்டும் அவனின் அணைப்புக்குள் இருந்தாள்.. "ஹயோ விடுங்க சமைக்கணும் எல்லா வேலையும் இருக்கு" என்று அவள் சொல்ல அவனோ, "அப்போ டெய்லி நைட் எனக்கு கொடுக்குறத குடுத்துட்டு போ" கன்னங்களை காண்பித்து கேட்டான்..
என்ன என்று முதலில் புரியாமல் நின்றவள் அவன் கன்னங்களை காண்பிக்கவும் அவனின் மார்பில் நன்றாக புதைந்துக்கொண்டு, "அப்போ டெய்லி நைட் தூங்கலையா.. முழிச்சே இருந்திங்களா" என்று மெதுவாக கேட்க, அவன் சிரித்துவிட்டு, "எத்தனை நாள் இந்த திருட்டு வேலை செய்யுறனு தெரியல.. ஆனா ஒரு வாரமா நான் முழிச்சு இருக்கேன்" என்றான் சிரிப்புடன்..
அவள் அமைதியாக இருக்க, "அது என்ன தூங்குனதுக்கு அப்றம் கிஸ் பண்ணி குட் நைட் சொல்றது.. நான் முழிச்சு இருக்கப்போ செஞ்சா நான் கொஞ்சம் அதிகமா சந்தோசப்படுவேன்ல" என்று அவன் கேட்க அவள் அமைதியாக இருந்தாள்.. "அச்சோ என் டியர்க்கு வெட்கம் ஓவரா ஆயிடுச்சு போல.. சரி சீக்ரம் குடு" என்றான் அவளை அவன் எதிரில் நிற்க வைத்து..
அவளோ கீழே குனிந்துகொண்டு, "எனக்கு ஒரு மாரி இருக்குங்க.. நான் போறேன்" என்று சொல்ல, "குடுத்துட்டு போ" என்றான் விடாமல்.. அவள் அமைதியாகவே நிற்க அவன் பொறுமை இழந்து "சரி நீ கொடுக்கவே வேணாம்.. நானே தரேன்" என்று சொல்லி அவள் நெற்றியில் இதழ் ஒற்றினான்..
அவள் மெல்ல நகர்ந்து சென்று பின்பு திடீரென அவன் அருகில் வந்தவள் "ஐ லவ் யூ சோ மச்" என்று சொல்லி அவன் எதிர் பார்க்கா நேரம் அவனின் கன்னத்தில் இதழ் பதித்துவிட்டு ஓடினாள்..
***********************************
பழைய பசுமையான நினைவுகளில் மூழ்கி இருந்த வருணின் தோளில் கை வைத்தான் ஜெகதீஸ்..
"ரம்யாவை போய் பாத்துட்டு வா டா" என்று அவன் சொல்ல, "எல்லாரும் போய் பாத்துட்டு வாங்க.. நான் கடைசியா போய் கொஞ்ச நேரம் அவ கூட இருந்துட்டு வரேன்" என்றான் கண்களில் கண்ணீருடன்.. அதனை கேட்ட ஜெகதீஸ் சரி என்று மட்டும் தலையை அசைத்துவிட்டு மீராவுடன் உள்ளே சென்றான்..
பாலாக்கும் ஷாலினிக்கும் என்ன சண்டை??.. ஷாலினி ஏன் பாலாக்கூட பேசாம இருந்தா??.. ரம்யா ஷாலினிகிட்ட என்ன பேசிருப்பா??.. ரம்யா உயிர் பிழைச்சு நினைவு திரும்பி வந்துருவாளா??.. அவ உயிர்க்கு ஏதாவது பிரச்சனை வருமா????
எல்லாம் இனி வர போற அப்டேட்ஸ்ல பாக்கலாம்..
______________________________________
Hi all.. ellarum epd irukenga..
Update epd irukunu konjam solunga pls...
Bore ah iruka???
Sad ah iruka???
Kevalama iruka???
Slow ah iruka???
Ok paravala apd iruka????
Yepd irundhalum franka solalam... dnt hestitate... 🙈🙊
Konjam bore ah pora feel enaku... 😕
Edhavadhu story la change pananuma.. edhavadhu pudikalaya.. Apd irundhalum solunga kandipa sirappa panidalam...
K Biiiii...... next ud la pakalam 🚶🚶
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro