உயிரானவன் 3
அன்று காலை வேளையில் பாலா வேலையில் மூழ்கி இருந்தான்.. அவனிற்கு அழைப்பு வர அதனை ஏற்றான்..
"ஹலோ நான் ஷாலினி பேசுறேன்.. ஒடனே நம்ம ஹாஸ்பிடல் வரிங்களா.. பிளட் தேவைப்படுது.." என்று கேட்க, "ஹ்ம்ம் ஒரு அரை மணி நேரத்துல வந்துறேன்.. ஓகேவா?" என்று அவன் கேட்க அவளும் சரி என்று கூறி அணைப்பை துண்டித்தாள்..
சரியாக அரை மணி நேரத்திற்குள் அவன் மருத்துவமனையை அடைந்தான்.. சுற்றிலும் ஷாலினியை தேட அவன் அருகில் வேறு ஒரு பெண் வந்து "நீங்க தான் பாலாவா" என்று வினவினாள்.. அவனும் ஆமாம் என்று தலை அசைக்க, "வாங்க சார்.. ஷாலினி வெளில போயிருக்கா.. நீங்க வந்தா உங்கள கூட்டிட்டு போய் பிளட் எடுக்க சொன்னா" என்று கூற அவன் அப்பெண்ணை தொடர்ந்தான் ஏமாற்றத்துடன்..
ரத்தம் குடுத்த பின்னர் அவன் எழுந்து செல்லும் நேரம் கௌஷிகா அவன் எதிரே வந்தார் ..
அவர்களை பார்த்ததும் சிறிய புன்னகை புரிய அவனை பார்த்தவள் அவன் அருகில் சென்று, "ஹாய் மிஸ்டர் பாலா.. என்ன இந்த பக்கம்.. ஆர் யூ ஆல்ரைட்? " என்று கேட்க, அவன் "ஐயம் பெர்ப்பெக்ட்லி ஓகே மேம்.. பிளட் டொனேட் பண்ண வந்தேன்.. நீங்க? " என்று கேட்க அவள் அவனை பார்த்து புன்னகையுடன், "இது என் ஹாஸ்பிடல்" என்று சொல்ல அவன் "ஓ சாரி தெரியாது" என்று சொல்ல அவளும், "பரவா இல்லை" என்றாள்..
"சரி மேம் நான் கிளம்புறேன்" என்று கூற "வாங்க பாலா ஒரு ஜூஸ் சாப்பிடலாம்" என்று அவள் அழைக்க அவன் வேண்டாம் என்று மறுத்தான்.. திடீரென்று அவள் அருகில் ஷாலினி வந்து நின்று, "அக்கா நான் வீட்டுக்கு போகணும்.. என்னால இங்க இருக்க முடியல.." என்று சொல்லிக்கொண்டு இருக்க அவளை பார்த்து நின்றான் பாலா..
"இரு ஷாலு.. போலாம்.. நானும் வரேன்.." என்று கூறியவள் பாலாவின் நினைவு வந்து அவனை பார்த்தவள், "ஷாலு இவரு பாலா.. பிசினஸ்ல பழக்கம்.. அண்ட் (and) பாலா இது என் தங்கச்சி ஷாலினி" என்று இருவரையும் அறிமுகம் செய்து வைக்க இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து புன்னகைத்துக்கொண்டனர்..
"சார் நீங்களா.. பிளட் குடுத்துடீங்களா.. ஆர் யூ ஓகே.. ஏதாவது வேணுமா வாங்கிட்டு வரவா" என்று ஷாலினி கேட்க அவன், "இல்ல ஐயம் ஓகே.. நான் கிளம்புறேன்" என்றான்.. இருவரையும் புரியாமல் பார்த்த கௌஷிகா, "முன்னாடியே உங்க ரெண்டு பேருக்கும் பழக்கமா" என்று கேட்டாள்..
"ஹ்ம்ம் ஆமா மேம்.. பிளட் குடுக்க போன டைம் வந்தேன்.. அப்போ தான் ஷாலினி மேம் எனக்கு ஊசி போடுறேனு ஊசி கூட போராட்டம் பன்னிட்டு இருந்தாங்க" என்றான் கிண்டலாக.. "ஹாஹா அவ எப்போவுமே அப்டி தான்.. பேரு தான் டாக்டர்" என்று கௌஷிகா தன் பங்கிற்கு கலாய்க்க ஷாலினி இருவரையும் முறைத்தாள்..
"கௌஷி நான் ஒன்னும் ஆசைப்பட்டு டாக்டர்க்கு படிக்கல.. நீ தான் என்ன படிக்க வச்ச.. நான் இன்னும் படிப்ப முடிக்கல.. அதுக்குள்ள உனக்கு ஆல் வேணும்னு என்ன இங்க ஒர்க் பண்ண வச்சுட்ட.. கேஸ் போட்டுறுவேன் ஜாக்கிரதை" என்று அவள் விரல் நீட்டி எச்சரிக்கை விடுக்க மற்ற இருவரும் மீண்டும் சிரித்தனர்..
"என்னமோ இங்க வந்து ஆபரேஷன் பண்ண வைக்குற மாதிரி பேசுற.. ஒரு ஊசி போட இவ்ளோ சீன் போடுற.. அந்த ஊசிக்கே அவ்ளோ அலப்பறை பண்றியே உன்ன டாக்டர்க்கு படிக்க வச்சதுக்கே எனக்கு தூக்கு தண்டனை தான் குடுக்கணும்" என்று கௌஷிக்கா சொல்ல இருந்த மானமும் போய்விட்டது என்று அவள் அமைதியாக நின்றுவிட்டாள்..
"ஓகே பாலா.. பிரீயா இருக்கப்போ வீட்டுக்கு வாங்க.. நாங்க கிளம்புறோம்" என்று கௌஷிகா சொல்ல சரி என்று அவனும் விடைபெற்றான்..
காரில் செல்லும் நேரம் முழுதும் அவளின் நினைவுகளை சுமந்துக்கொண்டு சென்றான்..
'அழகா இருக்கா.. அவங்க அக்கா கலாய்கச்சதும் திரு திருனு முழிச்சாலே.. ச்ச செம்ம கியூட்.. அவ்ளோ பெரிய ஹாஸ்பிடல் அவளோடதுனு ஒரு கெத்து மாதிரியே அவ இல்லாம எவ்ளோ சிம்பிள்ளா இருக்கா.. ஒரு ஒரு டைமும் புதுசா தெரியுறாளே.. கொல்றியே டி' என்று மனதினுள் புலம்பியபடி வீட்டிற்கு சென்றான்..
வீட்டில் வருண் ரம்யா திலிப் பிரியா ஜெகதீஸ் மீரா அமர்ந்து பேசிக்கொண்டு இருந்தனர்..
"திலிப் ப்ரோ.. உனக்கு என்ன வயசு" என்று ரம்யா கேட்க அவளை பார்த்தவன், "உன்ன விட ஒரு வயசு பெரியவன்" என்று சொல்ல, "நீ எப்போவுமே நேரடியா பதில் சொல்ல மாட்டியா.. எனக்கு இப்போ என்ன வயசுன்னு தெரியலைனா உன் வயசு என்னனு எனக்கு எப்படி தெரியும்" என்று ரம்யா கேட்க அவன் அவனையே தலையில் அடித்துக்கொண்டு "25" என்றான்..
"ஹ்ம்ம் இதை முன்னாடியே சொல்லிருக்கலாம்ல" என்று அவள் கேட்க, "பழக்க தோஷம்" என்றான் திலிப்.. "ம்ம்ம் ஆமா ஆமா.. இப்படி சுத்தி வளச்சு பேசினா தான பொண்ணுங்க கூட ரொம்ப நேரம் மொக்க போட வசதியா இருக்கும்" என்று சொல்ல அவனும், "கரெக்டா கண்டுபுடிச்சுட்ட மூட்ட பூச்சி" என்றான்..
அதனை கேட்டு அனைவரும் சிரிக்க பிரியா அவனை பார்வையலையே சுட்டு எரிந்துகொண்டு நின்றாள்.. அவளை பார்த்து அசடு வழிய சிரித்தவன், "ஹீஹீ அதெல்லாம் அப்போ.. இப்போ இல்லையே" என்று சொல்ல பிரியா அவனின் முகத்தை பார்த்ததும் சிரித்துவிட்டாள்..
சிறிது நேரத்தில் "எனக்கு காபி வேணும்" என்றான் ஜெகதீஸ்.. "ஹ்ம்ம் உன் அன்பு பாசமலர போட்டு தர சொல்லு" என்று வருண் சொல்ல தண்ணீர் குடித்துக்கொண்டு இருந்த திலிப்பிற்கு பொறை ஏறியது..
"திலிப்பூ என்ன பா ஆச்சு உனக்கு.. ரம்யா செஞ்ச காபி வேணுமா" என்று வருண் கேட்க திலிப் கை எடுத்து கும்பிட்டான்.. "என்ன காபிக்கு இவ்ளோ பண்றீங்க" என்று வள்ளி புரியாமல் வினவ "அது ஒரு காபி கதை" என்று திலிப் சொல்ல, "அத எங்களுக்கும் சொன்னா நாங்களும் தெரிஞ்சுப்போம்ல" என்று ஜெகதீஸ் ஆர்வமாக கேட்டான்.. ரம்யா வருண் மற்றும் திலிப்பை முறைத்தாள்..
"ஒரு நாள் தெரியாம இவங்க வீட்டுக்குள்ள போய்ட்டேன் மச்சி" என்று வராத கண்ணீரை துடைத்துக்கொண்டு திலிப் கூற, "உன் வீடுன்னு நெனச்சு தெரியாம போனியா டா" என்று ஜெகதீஸ் கேட்க அவனை திலிப் முறைதான்..
"ஹாஹா அந்த தெரியாம இல்ல மச்சி.. அவன் அடி வாங்க தெம்பு இல்லாம, பிரியாக்கு தெரியாம ஒழிய அங்க வந்தான்.." என்றான் வருண்.. "இப்போ அது ரொம்ப முக்கியமா" என்று திலிப் வருணிடம் கேட்க, "அது தெளிவா சொல்லணும்ல" என்று சிரிக்க, "இளிக்காத" என்றான் திலிப் கடுப்புடன்..
"சரி சரி நீ மேல சொல்லு" என்று ஜெகதீஸ் அவனை சொல்ல தூண்ட அவனும் அதை தொடர்ந்தான்.. "அன்னைக்கு நான் உள்ள போனதுமே இவன் கைல ஒரு கப் இருந்துச்சு.. ஒடனே ஹாய் டா னு சொல்லிட்டு அத வாங்கிட்டேன் டா" என்றான் திலிப்
"ஹாஹா ஆமா டா.. என் மூஞ்சிய பாத்துருந்தா வாங்கியிருக்க மாட்டான்.. ஆனா அவன் தான் பாக்கலயே.. பாவம்" என்று பொய்யாக வருத்தமாய் சொன்னான் வருண்.. "சரி விடு டா அவன் சோறுனு வந்துட்டா மத்தத கவனிக்க மாட்டான்னு உனக்கு தெரியாதா" என்று ஜெகதீஸ் கேட்க மற்றவர்கள் சிறிது விட்டனர்.. திலிப் அவனை முறைத்துக்கொண்டு நின்றான்..
"மொறைச்சது போதும்.. அதுக்கு அப்புறம் என்ன ஆச்சுன்னு சொல்லு டா" என்று ஜெகதீஸ் திலிப்பின் தோளில் கை போட்டு கேட்க, "அதுக்கு மேல என்ன டா ஆகணும்.. ஒடனே ஓடிட்டேன் டா என் வீட்டுக்கு" என்றான் திலிப்..
"பின்ன ஓடாம என்ன பண்ணுவான்.. ஓடி போய் வாஷ்ரூம்க்குள்ள ஒழிஞ்சவன் தான்.. ஒரு மணி நேரம் அப்புறம் தான் வெளிலையே வந்தான்" என்றால் பிரியா சிரிப்புடன் 😂😂
இதனை கேட்டு அனைவரும் சிரிக்க வள்ளி அவளிடம், "அப்படி என்ன டி காபில போட்ட" என்று வினவ, "நான் அப்போவே சொன்னேன் அம்மா காபி டீ மட்டும் நீங்க டெய்லி போட்டு தாங்க.. சமையல் எல்லாம் நான் பணிக்குறேன்னு.. அவரு கேக்கல.. அவருக்கு அப்போ தான் தொண்டை வலின்னு சொன்னாரு.. அதான் உடம்புக்கு நல்லதுன்னு கொஞ்சமே கொஞ்சம் மிளகு பொடி சேத்துட்டேன்.. இது தெரியாம திலிப் ப்ரோ வந்து மாட்டிகிட்டாரு" என்று ரம்யா முகத்தை பாவமாக வைத்துக்கொண்டு சொல்ல மற்றவர்கள் சிரிக்க வள்ளி அவளை முறைத்தார்..
"அதுக்கு அப்றம் ஒழுங்கா செஞ்சியா இல்லையா" என்று சற்று கோவமாக வினவ, "ஹுக்கும் அதுக்கு அப்றம் உன் மாப்பிளை சமத்தா டெய்லி போட்டு தந்தாரு.. நானும் சமத்தா குறை சொல்லாம குடிச்சேன்" என்று சொல்ல வள்ளி தன் தலையில் தானே முடித்துக்கொண்டார்..
"என் மானத்தை வாங்குற நல்லா" என்று அவர் குறை பட "அப்படிலாம் இல்ல மா.. என்னதான் அவரு உன்ன விட சூப்பரா காபி போட்டாலும் அத அவர்கிட்ட நான் சொல்லவே மாட்டேன்.. பாத்தியா எப்படி உன் மானத்தை கபத்திருக்கேன்னு" என்று நகர்ந்துக்கொண்டே சொன்னவள், சொல்லி முடியும் நேரம் உள்ளே சென்று விட்டாள்..
"உன்ன" என்று அவளை முறைத்து விட்டு தன் மருமகனின் அருகில் சென்று, "அது.. அவ சின்ன புள்ள தனமா அப்படி செஞ்சுருக்கா.. நான் நீங்க திரும்பி போறதுக்குள்ள நல்லா சொல்லி குடுத்துருவேன்.. இனி நீங்க கஷ்டப்படவேணாம் மாப்பிள்ளை.. அப்றம் இது வரைக்கும் அவ பன்னுனதெல்லாம் மனசுல வச்சுக்காதிங்க"என்று வருத்தமாக சொன்னார் வள்ளி..
"இப்போ ஏன் அத்தை இவ்ளோ வருத்தப்படுறீங்க.. ஒரு டீ போடுறதுல எனக்கு எந்த கஷ்டமும் இல்லை.. அதே மாதிரி இனி டீ விசஷயத்துல உங்க பொண்ண நம்பவே முடியாது.. பாப்பா வந்துட்டா அவளுக்கும் கஷ்டம் தானே.." என்று சொல்ல அவனை பெருமையாக பார்த்தார் பாண்டியன்..
நிலைமையை சீகராக்க "அது மட்டும் இல்லாம, ஒரு சிலர் சமையலே அவங்க தான் பன்றாங்க.. நா வெறும் டீ தானே போடுறேன்" என்று கிண்டலாக திலிப்பை பார்த்து சொல்ல அவன் அவனை பார்த்துவிட்டு மற்றவர்களை பார்த்து திரு திருவென முழிக்க பிரியா குனிந்து சிரித்தாள்..
வருண் அவனின் அறைக்குள் நுழைய அவனின் அவள் ஜன்னல் ஓரம் வேடிக்கை பார்த்துக்கொண்டு நின்றாள்.. மெல்ல அவள் அருகில் சென்று நின்றுக்கொண்டு அவளை மெதுவாக அவனின் தோள் மேலே சாய்த்தான்..
அவளும் அவன் மீது சாய்த்துக்கொண்டு, "நான் உங்கள கஷ்டப்படுத்துறேன்ல.. நீங்க டீ போடுறீங்கன்னு தெரிஞ்சதுக்கே இப்படி திட்றாங்க.. இதுல எனக்கு முன்னாடியே எந்திரிச்சு டீ போடுவீங்கன்னு அம்மாக்கு தெரிஞ்சா அவ்ளோதான்.." என்று அவள் சொல்ல சிறிய புன்னகையுடன் அவளின் நெற்றியில் மென்மையாக முத்தமிட்டான் வருண்..
"செல்லம்.. இதுல எனக்கு எந்த கஷ்டமும் இல்லை.. அப்றம் நான் உனக்கு முன்னாடி எந்திரிக்கிறேன்னு ஏன் அத்தைக்கு தெரியணும்.. வீட்டுக்கு யாராவது வந்தா சமத்தா எந்திரிச்சுடுரல்ல அது போதும்.. நமக்குள்ள என்ன.. விடு டியர்.. வா ரொம்ப நேரமா நிக்கிற போய் உக்கரலாம்" என்று அவளை அழைத்துக்கொண்டு கட்டிலில் அமர்த்தினான்..
"நம்ம பேபி வரதுக்கு இன்னும் 10 நாள் தான இருக்கு.. ஜாலியா இருக்குங்க.. நல்லா விளையாடலாம்.." என்று மகிழ்வுடன் சொன்னவளை குழந்தையாய் பாவித்து ரசித்தான் வருண்..
திடீரென சிறிதாக வழி எடுக்க வயிற்றை பிடித்துக்கொண்டு கண்களை மூடி "ஸ்ஸ்ஸ்ஸ்" என்றாள் ரம்யா.. அதனை கண்டவன் பயத்துடன், "ஹேய் என்ன மா ஆச்சு.. என்ன பண்ணுது" என்று பதற்றமாக வினவ கண்களை திறந்தவள், "உங்க பேபி ஒதைக்குது.. அவங்க அப்பா எனக்காக டீ போடுறாங்கனு சொல்லவும்" என்று சிறிய புன்னகையுடன் சொன்னாள்..
இருவரும் மகிழ்வுடன் சிரிக்க மீண்டும் இரு பக்கமும் வலி எடுக்க ஆஆ என்று சற்று வலியுடன் கத்தினாள் ரம்யா.. மீண்டும் அவன் பயத்துடன், "என்ன மா ரொம்ப வலிக்குதா.. அத்தைய வர சொல்றேன் இரு" என்று அவன் எழுந்து செல்ல முற்பட அவனின் கையை பிடித்து வேண்டாம் என்று இடம் வலம் தலையை அசைக்க அவன் அவளை கேள்வியாக பார்த்தான்..
அவனை தன் அருகில் அமர வைத்து, "என்னங்க சும்மா சும்மா அம்மாவ கூப்பிட போறேன்னு ஓடுறீங்க.. இது அப்பப்போ நம்ம பேபி செய்ற சேட்டை.. அப்பா மாதிரியே இருக்கு.."என்று அவள் சிரிப்புடன் சொல்ல அவன் அவளின் கண்களை பார்த்தான்..
அவளின் கைகள் அவனின் கைகளை இறுக பற்றி இருந்தன.. கண்களில் வலியுடன் கலங்கி இருந்தது.. வலியை அவளின் கரங்களின் இறுக்கம் அவனுக்கு உணர்த்த அவளின் கரத்தை அவனும் இறுக்கமாக பற்றிக்கொண்டு, "ரம்யா வா என்கூட" என்று அழைத்தான்.. மாட்டேன் என்றாள்..
அவளை கண்களில் வலியுடன் பார்த்து "சரி இங்கையே இரு.. நான் வந்துறேன்" என்று அவன் நகரப்போக அவனின் கையை அவள் விடவும் இல்லை.. கண்களை இறுக மூடி இருந்தாள்.. அவளின் நிலையை உணர்ந்து அவளை கைகளில் ஏந்தினான் வருண்..
அனைவரும் பயத்துடன் அருகில் வர ஜெகதீஸ் காரினை ஓட்ட மருத்துவமனையை அடைந்தனர்.. அப்பொழுது வீட்டு சேர்ந்த பாலா விஷயம் அறிந்து அவனும் மருத்துவமனைக்கு விரைந்தான்..
காரில் இருந்து இறங்கும் நேரம் வருணின் கண்களில் கண்ணீரை கண்டவள் அவனை பார்த்து மெலிதாக புன்னகைத்து, "வருண் இப்போ ஏன் அழறிங்க.. எனக்கு சும்மா குட்டி வலி.. டாக்டர் செக் பன்னிட்டு சாதா வலின்னு சொல்ல போறாங்க.. அம்மா வந்து இந்த வலிய கூட தாங்கிக்கமா இப்படி என் மாப்பிள்ளையை அழ வச்சுட்டியேனு திட்ட போறாங்க.." என்று சொல்ல அவளின் கைகளை இறுக்கமாக ஒருதரம் பிடித்து பின்பு அவளை மீண்டும் தூக்கிக்கொண்டு உள்ளே சென்றான்..
பிரசவ வலி என்பதை அவர்கள் யாரும் எதிர்பார்க்காததால் அனைவரும் சிறிது அதிர்ந்தனர்.. அறையின் வெளியே அனைவரும் காத்திருக்க பிள்ளையை உலகத்திற்கு கொண்டுவர போராடிக்கொண்டு இருந்தாள் ரம்யா..
இரு ஆண்களின் கண்களில் கண்ணீர் தேங்கி நின்றது.. ஜெகதீஸ் மற்றும் திலிப் பார்வைகளில் வலியும் பயமும் இருந்தது.. பெண்கள் அனைவரும் ஆண்டவனை வேண்டி நின்றனர்..
கால் மணி நேரத்திற்கு பின்பு அறையில் இருந்து நர்ஸ் இருவர் குழந்தையுடன் வெளியில் வர அதனை கவனிக்காமல் உள்ளே சென்று ரம்யாவை பார்த்தனர் வருண் மற்றும் பாண்டியன்.. இருவருக்கும் உயிரே ரம்யா தானே 😍
அவளின் நலத்தை தெரிந்துக்கொண்டு வெளியில் வர இருவர் கைகளிலும் ஒரு ஒரு குழந்தை கொடுக்கப்பட்டது.. வருண் கேள்வியாக நோக்க, "உங்களுக்கும் ரம்யாக்கும் மட்டும் தான் இரட்டை பிள்ளைகள் இருக்குனு தெரியாது.. மத்த எல்லாருக்கும் தெரியும் மாப்பிள்ளை.. நீங்க ரெண்டு பேரும் பயப்பட கூடாதுனு தான் நாங்க சொல்லல.." என்றார் சிறிது தயக்கத்துடன்..
அவரை நன்றியுடன் பார்த்தவன் கண்களில் அவனின் குழந்தைகளின் மீது பதிந்தது.. ஒரு பெண் ஒரு ஆண்.. இருவரின் ஆசையும் நிறைவேறியது என்று பெருமிதம் கொண்டான்..
சிறிது நேரம் கடந்த பின் ரம்யா கண் விழிக்க அவளின் தாய் தந்தை ஜெகதீஸ் மீரா திலிப் பிரியா இருந்தனர்.. அவர்களை பார்த்து புன்னகைத்தவள், "எங்க என் அழுமூஞ்சி கணவர்" என்று கேட்க, "ஹலோ நாங்க அழுகலாம் இல்ல.. திலிப் தான் என் கண்ண குத்திட்டான்.." என்று சொல்லிக்கொண்டே கையில் ஜூஸ் கொண்டு வந்து அவளிடம் நீட்டினான்..
அதனை வாங்கிக்கொண்டவள், பேபி எங்க என்று அவள் தேட அதனை புரிந்துக்கொண்டவன் இருந்தும் காட்டிக்கொள்ளாமல், "என்ன தேடுற.. மோதிரம் ஏதாவது கீழ விழுந்துருச்சா" என்று வினவ, "சச்சு விளையாடாதீங்க.. என்ன பேபி நமக்கு.. எங்க காணோம்" என்று கேட்டாள்..
"என் பேபி தான் கண்ணு முன்னாடியே இருக்கே அப்றம் என்ன" என்று அவன் கேட்க அவனை முறைத்தவள் அமைதியாக இருக்க கைகளில் குழந்தையுடன் இரு நர்ஸ் உள்ளே நுழைந்து குழந்தைகளை ரம்யாவின் இரு பக்கமும் வைத்தனர்.."
அவள் குழப்பத்துடன் வருணை பார்க்க அவன் புன்னகையுடன், "பையன் பொண்ணு ரெண்டும் ஒண்ணா ஒரே நேரத்துல பெத்து குடுத்து எனக்கு டபுள் ப்ரோமோஷன் குடுத்துட்டியே மை செல்லம்" என்று அவளின் நெற்றியில் முத்தமிட கண்களில் அனந்த கண்ணீருடன் குழந்தைகளின் விரல்களையும் பிடித்து பார்த்தாள்..
"ஹப்பா எவ்ளோ பயப்பட வச்சுட்ட.. மத்த பொண்ணுங்க மாதிரி கதறி அழுதுருந்தா அப்போவே கூட்டிட்டு வந்துருப்பேனே டி.. சிரிச்சிட்டே இருந்துட்டியே.." என்றான் கவலையாக..
"உங்க மாமியார் தான் எப்போவும் என்ன பாத்து சின்ன வலி கூட தாங்கிக்க மாட்டேங்குற.. இப்படி கதறுற.. பிரசவம் நேரத்துல என்ன பண்ண போரியோன்னு சொல்லிட்டே இருப்பாங்க.. அதான் இது பிரசவ வலியா இல்லையானு எனக்கு தெரியல.. பொருத்துக்கலாம் இன்னும் வலிச்சா சொல்லலாம்னு அப்படியே இருந்தேன்" என்றாள் ரம்யா..
"ஹுக்கும் இன்னும் பொருத்துருந்தா பேபி பொறந்துருக்கும் டி" என்றான் சிரிப்புடன்.. அவளும் அந்த சிரிப்பில் கலந்துகொண்டாள்..
( பாவம் அவனுக்கு தெரியவில்லை அவள் ஒரு நாள் பேச்சு மூச்சின்றி அவன் முன்னே கிடந்து அவனை கதற விட போகிறாள் என்று.. )
காலம் செய்யும் கோலம் 😒
______________________________________
Hai my dr wtpd families.. Nan again vandhuten.. "Yaru ni? idhu enna kadhai? " apdnu ketradhenga.. 🙊
Idhelam oru kadhaiyaa idha nanga niyabagam vachu un update kaga ivlo naal wait pananuma apdnu ellarum ketramatenganu namburen..🙉 ( nambikai adhane ellam 💪)
Indha update epd iruku.. story continue panava venama.. enake theriyala.. neenga solunga my dr kudumbangale 🤗
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro