உயிரானவன் 2
மீரா இரவு தன் அறைக்குள் நுழைந்ததும் அவளை இழுத்து அணைத்துக்கொண்டான் ஜெகதீஸ்..
"என்ன சார் ரொம்ப சந்தோசமா இருக்கீங்க.. தங்கச்சி ஊருக்கு போய்ட்டாலேனு பீலிங்ஸ்ல இருப்பீங்கனு நெனச்சேன்" என்று அவனின் அணைப்புக்குள் அடங்கியபடியே அவள் கேட்டாள்..
அவனோ அவளை விடாமல், "ஹ்ம்ம் என் தங்கச்சிய நான் நெனச்ச நேரம் போய் பாத்துக்குவேன்.. அதுவா இப்போ பிரச்சனை.. நான் எவ்ளோ சந்தோசமா இருக்கேன் தெரியுமா.. பாலா அண்ணா எவ்ளோ மாறிட்டாங்க.. இன்னிக்கு வளைகாப்பு அப்போ நடந்ததை மறந்துட்டியா" என்று வினவ அவளும் அதனை நினைவில் கொண்டுவந்தாள்..
(வாங்க நாமலும் என்ன நடந்துச்சுனு பார்ப்போம்)
ரம்யாவிற்கு அப்பா அம்மா மாமனார் மாமியார் வளையல் போட்டவுடன் அனைவரும் அண்ணன் என்ற முறைக்கு பாலாவை போட சொன்னார்கள்.. ஆனால் ரம்யாவோ ஜெகதீஷை பார்த்துக்கொண்டு இருந்தாள்.. அவன் அதனை கவனித்தும் கவனிக்காதவன் போல நகர்ந்து வேறு புறம் செல்ல நினைக்கையில் அவனை கை பிடித்து நிறுத்தினான் பாலா..
அவனை அழைத்து மேடைக்கு சென்று, "என்ன இருந்தாலும் நீயும் அவ அண்ணா.. முழுமையா அண்ணாவா இருந்தது நீ தான்.. அதுனால நீ போட்டு விடு.." என்று சிரிப்புடன் சொல்ல அவனை அதிர்ச்சியும் ஆசிரியமும் கலந்து ரம்யா ஜெகதீஸ் இருவரும் நோக்கினர்..
இதனை எவருமே எதிர்பார்க்காததால் அங்கே மௌனமே ஆட்சி புரிந்தது.. அதனை முதலில் கலைத்தது ஜெகதீஸ் தான்.. "இல்ல அண்ணா.. நீங்க போடுங்க அடுத்ததே நான் நம்ம தங்கச்சிக்கு போட்டு விடுறேன்" என்று அவன் சுற்றி இருக்கும் உறவினர்களை பார்த்து தயக்கத்துடன் சொன்னான்..
அதனை புரிந்துக்கொண்ட ரம்யா, "ரெண்டு பேரும் சேந்து ஒரு ஒரு கைல ஒரே நேரத்துல போட்டு விடுங்க" என்று அவள் கைகளை நீட்டினாள்.. இருந்தும் ஜெகதீஸ் தயங்க தான் வாங்கி வந்த தங்க வளையல் ஒன்றை ஜெகதீஷின் கையில் குடுத்து, "நீ அந்த கைக்கு போடு நான் இதுக்கு போடுறேன்" என்று சிறிது அழுத்தமாக அவன் கூற அவனும் மறுக்க முடியாமல் போட்டுவிட்டான் கண்களில் அனந்த கண்ணீருடன்.. ரம்யாவின் கண்களில் நீருடன் மனமும் நிறைந்தது..
💖
கணவனின் அணைப்பில் அமைதியாக உறங்கும் மனைவியை ரசித்தபடி அவளின் காதலை அவள் சொன்ன தருணத்தை இதழில் புன்னகையுடன் யோசித்துக்கொண்டு இருந்தான் வருண்..... 🤔
( நாமலும் ரம்யா எப்படி ப்ரொபோஸ் பண்ணுனானு பாப்போமா.... ஆனா மெதுவா பாப்போம்.. இப்போ அவன் மட்டும் யோசிக்கட்டும்.. 😋)
காலை சூரியன் தனது கதிர்களால் அனைவரையும் எழுப்பி விட ரம்யா நன்றாக உறங்கிக்கொண்டு இருந்தாள்..
கம்பீரமாக படிகளில் இறங்கி வந்துக்கொண்டு இருந்தான் பாலா.. வள்ளி அவனை சாப்பிட அழைக்க அவனும் அவசரமாக சென்று அமர்ந்தான்.. அப்பொழுது தான் எழுந்து குளித்துவிட்டு வந்தான் வருண்..
வருணை கண்டதும் சிறிதாய் புன்னகை செய்து "வாங்க மாப்பிளை.. சாப்பிடலாம்" என்று அழைக்க அவனோ, "இல்ல மச்சான்.. உங்க தங்கச்சி எந்திரிச்சதும் சாப்பிடுக்கிறேன்.. இப்போ எனக்கு ஒரு காபி அத்தை" என்றான்..
"இன்னுமா தூங்குறா.. வெறும் வயிறா இருக்க கூடாது.. நான் போய் எழுப்பி விடவா மாப்பிளை" என்று வள்ளி கேட்க, "ஹயோ அத்தை.. எழுப்பி விட நீங்க போகாதீங்க நானே எழுப்பிடறேன்" என்றான் பதற்றத்துடன்.. அவரும் சரி என்று காபி போட சமையல் அறைக்குள் சென்றார்..
அவனின் பதற்றத்தை பார்த்த பாலா மெல்ல சிரிப்புடன், "என்ன இவ்ளோ டென்ஷன்" என்று கேட்டு குறும்பாக பார்க்க, "மச்சான் நான் அத்தைய காப்பாத்த தான் அப்டி சொன்னேன்.. ஒடனே என்ன கலாய்க்காதிங்க" என்றான் சிரிப்புடன்.. "ஹாஹா நம்பிட்டேன்" என்று பாலா சொல்ல, "கடிச்சு வச்சுருவா மச்சான்.. சரியான விஷ ஜந்து" என்று வருண் சொல்ல சத்தமாக சிரித்துவிட்டான் பாலா.. 😂
"அதான் கை அங்க அங்க வீங்கிருக்கா" என்று பாலா கிண்டலாக கேட்க, "அத அடுத்த வருஷம் ஒருத்தவங்க மூலமா நானும் பாப்பேன் உங்க கையில.. ஆனா டிரீட்மென்ட்க்கு வேற எங்கையும் போக தேவையில்ல போலயே" என்று அவன் சொல்ல, வள்ளி அங்கே வரவும், பாலா "ஹான் எனக்கு டைம் ஆச்சு மாப்ள.. ரம்யாவ பாத்துக்கோங்க" என்று அவசரமாக சாப்பிட அவன் புன்னகைத்துக்கொண்டே வள்ளி தந்த காபியுடன் மேலே ஏறினான்.. 😋
உறங்கும் மனைவியை பார்த்தவன் அவளின் அருகில் சென்று தலையை தடவி "ரம்யா எந்திரி.. டைம் ஆச்சு"என்று சொல்ல அவளோ கண்களை திறக்கலாமலே கையை நீட்டி அவனை இழுத்து அருகில் அமர வைத்து மடியில் படுத்துகொண்டாள்..
"ஹோய் என்ன கொழுப்பா.. எந்திரி.. இல்லனா உன்ன எழுப்ப அத்தைய வர சொல்லுவேன்.." என்று அவன் சொல்ல அவனின் விரலை பிடித்து கடித்து வைத்தாள்.. "ஆஆஆஆ வலிக்குது டி.. இதுக்கு தான் என் மாமியாரை காப்பாத்துனேன்.. எந்திரி டி.. என் பேபியும் சாப்பிடாம இருக்கு" என்றான் பொய்யான கோபத்துடன்..
சட்டென்று எழுந்தவள் அவனை பார்த்து கோவமாக பேச ஆரம்பிக்கையில் அவளின் வாயை தனது கைகளால் பொத்தி, "அப்போ பேபி சாப்பிடாம இருக்குனு தான் அக்கறையா எழுப்புறிங்களா.. என் மேல பாசம் இல்லையா.. இப்போவே இப்படியா.. இதான சொல்லப்போற.. அதுக்கு எல்லாத்துக்கும் நானே பதில் சொல்றேன்.. இப்போ போய் பிரஷ் பண்ணு போ" என்று அவன் சொல்ல அவளின் வாயை மூடிய கையை பிடித்து நன்றாக கடித்து விட்டு சென்றாள் ரம்யா..
"ஸ்ஸ் ஆஆஆ கடிநாயே.. இது நல்லதுக்கு இல்ல டி.. விஷம் ஏறப்போகுது" என்று கையை உதறியபடியே சொல்லிக்கொண்டு இருந்தான் வருண் இதழில் சிறிய சிரிப்புடன்..
அவளும் பாத்ரூம் கதவை திறந்து எட்டி பார்த்து வெவ்வெவ்வா என்று பழிப்பு காட்டுவிட்டு உள்ளே சென்று மறைந்தாள்..
💖
பாலா ஷேர் மார்க்கெட் மூலம் கிடைத்த பணத்தை வைத்து டெக்ஸ்டைல் இண்டஸ்ட்ரி அரபித்து தரமான உடைகள் செய்து கொடுப்பதாக ஆரம்பித்து இப்பொழுது அதனை நேரடியாக விற்க மிகப்பெரிய துணி கடைகள் 3 நடத்தி வருகிறான்.. அவனின் நேர் பார்வை மற்றும் கண்டிப்பான பேச்சு மற்றவர்களை அவனிடம் இருந்து தள்ளி வைக்கும்..
அவன் தனது கடைகளில் ஒன்றின் உள்ளே செல்ல அனைவரும் அவனை பார்த்து காலை வணக்கம் சொல்ல, அவனும் அனைவர்க்கும் தலை அசைத்துவிட்டு தனது தனி அறைக்குள் நுழைந்தான் பாலா..
இருக்கையில் அமர்ந்ததும் அவனின் மனது அவளை முதலில் சந்தித்த தருணத்தை அசைபோட்டது.. 1 ஆண்டு முன்பு ஒரு மருத்துவமனையில் ரத்தம் குடுக்க சென்றிருந்தான்.. அடிக்கடி ரத்ததானம் செய்வான்.. அதே போல திடீரென்று யாருக்கும் ரத்தம் தேவை என்றால் பலர் அவனிடம் கேட்பர்..
அதே போல தான் ஒரு வருடம் முன்பு ஒரு மருத்துவமனைக்கு ரத்தம் குடுக்க சென்றிருந்தான்.. அங்கே தான் அவனின் அவளை முதலில் கண்டான்..
💖
1 வருடம் முன்.........
இரவு நேரம் கம்பீரமாக உள்ளே அவன் நுழைய அவளோ எளிமையான ஆடையில் அழகாக நின்றாள்.. அவனை பார்த்ததும், "நீங்க தான் அந்த பேஷண்ட்க்கு ரத்தம் குடுக்க வந்திங்களா.. சீக்ரம் உள்ள வாங்க" என்று கூறி அவனின் கையை பிடித்து இழுத்து சென்றாள்..
அவளை பார்த்து ரசித்தவன் அவள் கையை பிடித்து இழுத்து சென்றதும் இறகு இல்லாமல் வானத்தில் பறக்க தொடங்கினான்.. அவளோ அவனை ஒரு அறைக்குள் கூட்டி சென்று அமரவைத்து ரத்தம் எடுக்க ஊசியை எடுத்தாள்.. அவனோ அவளை வைத்த கண் வாங்காமல் பார்த்தான்.. ( குத்துனாதான் இவன் கீழ வருவான் போலயே 🤔 )
ஊசியை கையில் வைத்துக்கொண்டு, "ஹலோ குடிச்சுருக்கீங்களா" என்று கேட்டாள்.. அவனிடம் பதில் இல்லாமல் போக மீண்டும் அவள் சற்று சத்தமாய் கேட்க இம்முறை நிதர்சனம் உணர்ந்து, "குடிச்சா ரத்தம் குடுக்க வருவாங்களா" என்று முயன்று சற்று கோவமாக கேட்க, "சரி கோவப்படாதிங்க.. அப்புறம் வலிக்குற மாதிரி குத்திடுவேன்" என்று ஊசியை காட்டி மிரட்டினாள்..
அவளை உற்று பார்த்தவன், "உங்க கை தான் மா நல்லா நடுங்குது" என்று சொல்ல தனது நடுங்கும் வலது கையை இடது கையால் பிடித்தவள், "ஹீஹீ ஊசினா ரொம்ப பயம் அதான்" என்று அசடு வழிய கூற அவன் சிரித்துவிட்டான்.. பின்பு அவள் ஊசியை போட்டு அவனின் ரத்தத்தை பாட்டிலில் எடுக்க தொடங்க, அவனின் மனதை அவள் கேட்காமலே அவளிடம் கொடுத்துவிட்டான் பாலா..
"உங்கள யாரு டாக்டர் ஆக்குனாங்க" என்று கேட்க அவனை முறைத்தவள் நான் இன்னும் டாக்டர் ஆகல.. பைனல் இயர்.. ஆனா இப்போவே பழகிக்கொன்னு இங்க சேத்துட்டாங்க" என்று சற்று சலிப்புடன் கூற அவன், "ஏன் இவ்ளோ சலிப்பு.. உனக்கு இதுல இஷ்டம் இல்லையா" என்று விசாரித்தான்..
"சாச்சா நமக்கு இதெல்லாம் செட் ஆகாது.. வேற வலி இல்லாம படிக்குறேன்.. டாக்டர் வேலை செய்ய தைரியம் வேணும்.. எனக்கு ரத்தம் பாத்தாலே பதறும்.. அதுனால என்கிட்ட வரவங்க உயிர்க்கு ஆபத்து வந்தா அது கஷ்டம் தானே.." என்று சொல்ல அவளை கவனித்து கொண்டு இருந்தான்.. ( அவன் வேலையை சிறப்பா செய்றான் போலயே )
"ஹ்ம்ம் அப்போ உனக்கு கல்யாணம் ஆயிட்டா உன் புருஷன் வேலைக்கு போக சொல்வானே" என்று கேட்க அவளோ, "ஹயோ அப்படி சொல்றவனை கல்யாணமே பன்னிக்கமாட்டேன்.. கல்யாணம் முடிஞ்சா அவனை கவனிச்சுக்கிட்டு, அப்புறம் பொறக்குற பாப்பாவ ஒழுங்கா வளக்கணும்.. இப்படியே என் வாழ்க்கை போனும்.. வேலைக்குலாம் நான் போகமாட்டேன்" என்று அவள் சொல்ல அவன் புன்சிரிப்புடன் கேட்டுக்கொண்டே இருந்தான்.. (அவனுக்கு தேவையான டீடெயில்ஸ் கேட்டுட்டானே 😂)
ரத்தம் எடுத்து முடித்ததும், "எடுத்தாச்சு சார்.. நீங்க கொஞ்சம் ரெஸ்ட்
எடுத்துட்டு அப்புறம் கிளம்புங்க" என்று சொல்லி நகர்ந்தவளை போகவிடாமல் வைக்க என்ன பேசலாம் என்று யோசித்தான்.. சட்டென்று, "ஹலோ எப்படி நான் தான் ரத்தம் குடுக்க வந்தேன்னு உங்களுக்கு தெரியும்.. நான் சொல்லவே இல்லையே" என்று கேட்டான்..
மெல்ல சிரித்துக்கொண்டே, "நான் இந்த பிளட் வேணும்னு என் பிரண்ட் கிட்ட கேட்டப்போ நீங்க கொடுக்குறேன்னு சொல்லிருக்கீங்க.. உங்கள எனக்கு தெரியாததுன்னால அவ என்கிட்ட ப்ளூ ஜீன்ஸ் வைட் ஷர்ட் போட்டு ஸ்மார்ட்டா கம்பீரமா வருவாங்கனு சொன்னான்.." என்று சொல்ல, "அப்போ நான் ஸ்மார்ட்டா" என்று கேட்டான் பாலா
"பொழச்சு போங்க.. கொஞ்சம் ஸ்மார்ட் தான்" என்று அவள் அழகாக சொல்ல அவன் மெல்ல அவளிடம் தோற்றான்.. "உன் பேர் என்ன" என்று பாலா கேட்க, "ஷாலினி" என்று கூறி அவள் சென்றுவிட்டாள்.. அவளோடு அவன் நெஞ்சமும்..
💖
இன்று........
தன்னவளின் நினைவில் இருந்து வெளியில் வந்து வேளையில் மூழிகினான் சிறிய புன்சிரிப்புடன்.. 😎
....
நாட்கள் அழகாக உருண்டு ஒரு வாரம் ஓடியது.. இரவில்..
கண்மூடி உறங்கும் மனைவியை மார்பில் போட்டுகொண்டு தலையை தடவி விட்டு உறங்க வைத்தவன் திரும்பி பார்க்க அவனின் அலைபேசி அவனை அழைத்தது..
அவளின் தலையை மெல்ல கட்டிலில் வைத்து படுக்கவைத்தவன் எழுந்து சற்று தள்ளி வந்து திரையில் இருந்த எண்ணை பார்க்க அது ஜெகா என்று இருந்தது.. அழைப்பினை ஏற்றுக்கொண்டு காதில் வைத்தான்..
"ஹலோ மச்சி எப்படி இருக்க.. என் தங்கச்சி எப்படி இருக்கா.." என்று கேட்க, "நல்லா இருக்கோம் டா.. அவ தூங்குறா" என்று சொல்ல "சாப்பிடாலா" என்று கேட்டான் அக்கறையுடன்.. "ம்ம் சாப்பிட்டா.. நீ என்ன பண்ற" என்று கேட்க, "அவரு நல்லா குதிச்சுட்டு இருக்காரு அண்ணா" என்று மீரா குரல் குடுத்தாள்..
"ஹாஹா ஏன் டா குதிக்குற.. கட்டைய வச்சு என் தங்கச்சி அடிச்சுட்டு இருக்கா?" என்று கிண்டலாக வினவ அவனோ, "ஹுக்கும் நான் என் தங்கச்சிய நாளைக்கு பாக்க வர போறேன் டா.. அதான் கொஞ்சம் ஹாப்பி.. அது தான் உன் தங்கச்சி கண்ணனுக்கு உறுத்துது போல" என்று சொல்ல சிரித்தான் வருண்..
"ஆனா உண்மையிலே என்னைவிட அவ தான் டா ஆர்வமா இருக்கா.. சீக்ரம் சீக்ரம்னு" என்று ஜெகதீஸ் சொல்ல, "ஆமா என் பிரண்ட்ட நான் பாக்க போறேன்.. அதான் ஆர்வமா இருக்கேன்.. உங்களுக்கு என்ன" என்று சொல்லி அவளும் வாதம் செய்ய வருண், "ஹயோ சரி எப்போ வறீங்க.. யாரு யாரு" என்று கேட்டு அவர்களின் வாதத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தான்..
"நான் மீரா திலிப் பிரியா வரோம் டா" என்று சொல்லிவிட்டு, "அதான் என் தங்கச்சிக்கு என்ன வேணும் என்ன வாங்கிட்டு வரணும்னு கேட்கலாம்னு போன் பன்னேன்.." என்று சொல்ல "அவளுக்கு எல்லாம் வாங்கி கொடுத்தாச்சு நீ ஒழுங்கா வந்து சேறு'" என்று சொன்னான்..
திடீரென்று அவனின் பின்னால் இருந்து கையை நீட்டி போனை பிடிங்கியவள், "டேய் அண்ணா எனக்கு ஐஸ் கிரீம் வாங்கிட்டு வா.. திலிப் ப்ரோவ சாக்லேட் வாங்கிட்டு வர சொல்லு.. எல்லாரும் பத்திரமா வாங்க.. நான் வெயிட் பண்ணிட்டே இருக்கேன்.. மிஸ் யூ அண்ணா" என்று பேசிக்கொண்டே போக அவளின் கையில் இருந்து போனை வாங்கினான் வருண்..
"நீ எப்போ எந்திரிச்ச" என்று அவன் கேட்க அவளோ, "நான் எப்போ தூங்கினேன்" என்று எதிர் கேள்வி கேட்டாள்.. "டேய் மச்சி நீ எதுவும் வாங்கிட்டு வராத டா" என்று சொல்லி போனை அணைத்துவிட்டு அவளை பார்த்து முறைதான்.. அவளோ சற்றும் அலட்டிக்கொள்ளாமல் அவன் மேல் மெல்ல சாய்ந்துகொண்டு,"நீ ரொம்ப பேட்.. எனக்கு எதுவுமே வாங்கிட்டு வர வேணாம்னு சொல்லிட்ட.. போ நான் கோவமா இருக்கேன்" என்று சொல்ல சிரித்துவிட்டான் வருண்..
"ஹப்பா சிரிச்சுட்டியா.. எப்போவுமே நான் கோவமா இருக்கேன் சொன்னா தான் சிரிப்பு வருமா" என்று அவள் முறைக்க அவன் அவளின் நெற்றியை தன் நெற்றியோடு செல்லமாக முட்டி, "மை பூனை குட்டி டி நீ" என்று சொல்ல அவளும் சிரித்துவிட்டாள்..
"ஆஆ" என்று சிறிதாக கத்த, "என்ன மா என்ன ஆச்சு" என்று பதறினான் வருண்.. "ஒன்னுமில்லபா.. உன் பேபி சேட்டை பண்ணுது.." என்று தம்மை உணர்வுடன் சொல்ல சிரிப்புடன் அவளை பார்த்தான்.. "ஆனா எனக்கு ஏன் ரெண்டு சைடும் கால் இருக்க மாதிரியே இருக்கு" என்று அவள் வினவ, "அது எப்படி ரெண்டு சைடும் கால் இருக்கும்.. உனக்கு அப்படி தோணுது.. ஒரு சைடு தல தானே டா இருக்கும்" என்று அடிக்கடி அவள் சொல்வதை கேட்டு அடிக்கடி இதே விளக்கம் அவன் பொறுமையாக சொல்ல அவளும், "ம்ம் எனக்கு தான் அப்படி தோணுது போல.. ஆனா உங்களுக்கு எப்படி தெரியும்.. உங்களுக்கு இது எத்தனாவது பிரசவம்" என்று சிறிதாக இருந்த அவனின் தொப்பையை தொட்டு கேட்க, "அடி வாலு" என்று அடிக்க ஓங்கிய கையை அப்படியே அவளை அணைத்துக்கொண்டு நெற்றியில் முத்தமிட்டான்..
அடுத்த விடியல் நன்றாக விடிந்தது.. ஜெகதீஸ் மீரா அவர்களின் மகள், திலிப், பிரியா அவர்களின் மகன் கரண் வீட்டிற்குள் வர அவர்களை வரவேற்றனர் அனைவரும்.. வருண் மட்டும் எங்கோ சென்றிருந்தான்..
திலிப்பிற்கு மொபைலில் அழைப்பு வர அவன் வெளியில் சென்று பேசிவிட்டு வந்தான்..
( adhigama characters venamnu nenachu, varun ramya and jegathis meera pair matum podhumnu nenachen.. aana dilip ilama storyla comedy ilama ellarum miss panuvome.. adhavadhu dilip priyakita adi vangama avanukum bore adikumla.. adhan dilip part kondu vanten.. adhigama varadhu.. apapo varum.. so adjust panikonga uravugale 😊)
அழைப்பை துண்டித்து வீட்டிற்குள் வர அங்கு ஜெகதீஸ் ஏதோ பேப்பரில் பேனா வைத்து எழுதிக்கொண்டு இருந்தான்.. அருகில் சென்று அமர்ந்தவன், "என்ன டா என்னமோ எழுதிட்டு இருக்க" என்று கேட்க, "இம்போசிஷன் (imposition) மச்சி.." என்று கூற அவனின் நோட்டை வாங்கி பார்க்க அதில், "இனிமேல் ஐஸ் கிரீம் வாங்கி வர மறக்கமாட்டேன்" என்று பலமுறை எழுதி இருந்தான்..
"என்ன டா இது" என்று அவன் கேட்டுக்கொண்டு இருக்கும் நேரம் வருண் உள்ளே நுழைந்தான்.. "ஹாய் டா.. எப்போ வந்திங்க" என்று வருண் கேட்க, திலிப் "நாங்க வந்தது இருக்கட்டும் நீ எங்க போய் யார சைட் அடிச்சுட்டு வர" என்று கேட்டான்..
"ஏன் டா நீ தான் எங்கையும் போகாத இந்த ஊரு பொண்ணுங்க அழகா இருகாங்க நான் வந்ததுக்கு அப்றம் போலாம்னு சொல்லிட்டியே.. அதான் காய் கடைக்கு மட்டும் போய்ட்டு வந்தேன்" என்று சொல்ல என்ன இவன் சம்மந்தம் இல்லாம எங்கையோ பாத்துட்டே பேசுறான் என்று வருணை புரியாமல் பார்த்தான் திலிப்..
"ஓ இந்த ஊரு பொண்ணுங்க அழகா இருக்காங்களா" என்று ப்ரியாவின் குரல் கேட்டு திரும்பி பாக்கிற அங்கே இடுப்பில் கை வைத்து முறைத்துக்கொண்டு நின்றாள்.. "ஏன் டா இப்படி" என்று வருணை பார்க்க அவனோ, "படிக்குறவங்க நீ அடி எப்போ வாங்குவனு வெயிட் பன்றாங்க.. அதான் ஹெல்ப் பண்ணுனேன்.." என்றான் சிரிப்புடன்
"வாழ்க வளமுடன்" என்று அவன் சொல்லிவிட்டு பிரியா பக்கம் பார்க்க அங்கே திலீப்பின் கையில் காபியை திணித்து விட்டு ரம்யா திலீப்பை முறைத்தாள்.. "ஏன் மா நீ முறைக்குற.. இதெல்லாம் சீன்ல இல்லையே" என்று அவன் கேட்க, "சாக்லேட் எங்க" என்று கேட்டாள்..
அவன் திருதிருவென முழிக்க, "வாங்கிட்டு வரலைல ஒழுங்கா நோட் எடுத்து இனிமேல் வாங்கிட்டு வருவேன்னு 25 டைம்ஸ் எழுதுங்க" என்று ரம்யா கூற "அதெல்லாம் முடியாது.. எழுதலனா என்ன பண்ணுவ" என்று கேட்க, "டேய் வேணாம் டா எழுதிடு" என்று வருண் சொல்ல, "ஆமா மச்சி எழுதிரு.. வீனா அவகூட வம்பு பண்ணாத.. என்ன பண்ணுவனு கேக்காத.. செஞ்சு காமிச்சுடுவா" என்று ஜெகதீஸ் கூற, "டேய் நீயும் அனுபவிச்சுட்டியா" என்று வருண் கேட்க, "அப்போ நீயுமா" என்று ஜெகதீஸ் கேட்க, "யா பிளட் சேம் பிளட்" என்று வருண் சொல்ல திலிப் ஒன்றும் புரியாமல் விழித்தான்..
"என்ன டா ரெண்டு பேரும் ரொம்ப பண்றீங்க.. நான் எழுத மாட்டேன்.. மூட்டைப்பூச்சி என்ன பண்ணுவ" என்று அவன் கேட்க, ஜெகதீஸ் அவனின் ஒரு காலை பிடிக்க வருண் வந்து மற்றொரு காலை பிடித்துக்கொண்டான்..
இரண்டு கைகளையும் பிரியா மற்றும் மீரா பிடித்துக்கொள்ள ரம்யா தனது அறைக்குள் சென்றாள்.. "டேய் என்னங்கடா பண்றீங்க.." என்ன அவன் மிரண்டு கேட்க, "நாங்க ஒன்னும் பண்ணல டா அவ தான் பண்ணப்போறா" என்று வருண் சொல்ல ரம்யா அந்த அறையில் இருந்து சீப்பு பொட்டு கையில் எடுத்துவந்தாள்..
"என்ன மேக்கப் ஐட்டம் கொண்டு வர" என்று அவன் கேட்க அவளோ அவன் அருகில் சென்று அவனின் தலையில் சீப்பை வைத்து குடும்பி போட ஆரம்பித்தாள்..
"அய்யொ என்ன விடுங்க எல்லாம்.. என் பெர்ஸெனாலிட்டி போச்சே.. துரோகிகளா விடுங்க டா.. இது தான் விஷயம்னு சொல்லாம விட்டுட்டீங்களே.. நான் கூட அடிக்க போறா போல.. நாம பிரியா கிட்ட வாங்காத அடியானு நெனச்சு இருந்தேனே.. இது புதுசா இருக்கே" என்று அவன் கதற சற்றும் அசராமல் குடும்பி போட்டு முடித்து பவுடர் அடித்து போட்டு வைத்துவிட்டாள் ரம்யா..
அதோடு நிறுத்தாமல் செலஃபீ எடுத்து வைத்துக்கொண்டாள்.. 📸
பிரியா சிரித்துக்கொண்டு நின்றாள்.. அவளை பார்த்தவன், "நீலாம் ஒரு பொண்டாட்டியா.. புருஷன இப்படி பண்றங்களேனு கொஞ்சம் கூட கவலை படமா போட்டோக்கு போஸ் குடுக்குற மாதிரி ஈஈ னு நிக்குற.." என்று கேட்க அவள் மேலும் சிரித்தாள்..
அனைத்திலும் பார்வையாளனாக இருந்தான் பாலா கண்களில் வலியுடன்.. அதற்கு மேல் அங்கு இருக்க முடியாமல் எழுந்து சென்றான்.. அவன் பின்னே ஜெகதீஸ் சென்றான்..
"அண்ணா" என்று ஜெகதீஸ் அழைக்க அவனை திரும்பி பார்த்தவன், "இப்போதான் நான் எவ்ளோ மிஸ் பண்ணிருக்கேன்னு புரியுது டா.. எல்லாத்தையும் இழந்துருக்கேன்.. அவளோட குழந்தைத்தனம் கூட இப்போதான் எனக்கு தெரியுது" என்று வேதனையாக பாலா கூற அவனை அணைத்து ஆறுதல் கூறினான்..
பாலா எழுந்து செல்லும் நேரம் ரம்யா வருண் இருவரும் அவனை கவனித்தனர்.. வருண் ரம்யாவை பார்க்க அவளோ அமைதியாக தரையை பார்த்துக்கொண்டு இருந்தாள்.. அவளின் தோலை தொட்டு, "வா கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கலாம்" என்று அழைக்க ஒன்றும் சொல்லாமல் அவன் பின்னே சென்றாள்..
அறைக்குள் சென்றதும் அவன் கட்டிலில் அமர அவள் அருகில் அமர்ந்து தன்மேல் சாய்த்துக்கொண்டவன், "மச்சான் முகத்தை கவனிச்சியா.. பாவம் தானே' என்று சொல்ல அவளும் அமைதியாக ம்ம் என்று மட்டும் சொன்னாள்..
அவளை நிமிர்த்தியவன், "ஏன் நீ ஜெகதீஸ் கிட்ட இருக்க மாதிரி பாலா மச்சான் கிட்ட இருக்க மாட்டேங்குற" என்று வினவ அவள் அவனிடம் இருந்து விலகி அமர்ந்தாள்.. அவள் ஏதோ சொல்லப்போகிறாள் என்று உணர்ந்து அவனும் அமைதியாக அவள் முகம் பார்த்தான்.. சிறிது நேரம் கடந்தது..
"நான் பொண்ணுங்கனு பொதுவா சொல்ல விரும்பல.. என்னோட கேரக்டர் வச்சு சொல்றேன்.. நான் ரொம்ப பேசுவேன் இப்படிலாம் பேசத்தெரியும்னு தெரிஞ்சதே ஜெகதீஸ் கூட பழக ஆரம்பிச்சதுக்கு அப்புறம் தான்.. அதுக்கு முன்னாடி வரைக்கும் எல்லாத்துலயும் ஒரு ஏக்கம் இருக்கும்.. அது ஏன்னு எனக்கே தெரியாது.. ஜெகதீஸ் அண்ணா கூட பழகுனதுக்கு அப்புறம் அம்மா அப்பா அண்ணா தம்பி பிரண்ட் எல்லாமே ஒருத்தர் கிட்ட உணர்ந்தேன்.. அப்போதான் என்னோட உண்மையான சுபாவம் வெளில வந்தது.." என்று சொல்லிவிட்டு அமைதியாக இருந்தாள்..
சிறிது நேரத்திற்கு பிறகு, "சின்ன பிரச்சனைல இருந்து பெரிய விஷயம் வரைக்கும் அவன் கிட்ட சொல்லிட்டா எல்லாமே முடிஞ்ச மாதிரி இருக்கும்.. அதெல்லாம் நான் ஸ்கூல் படிச்சப்போ எனக்கு கிடைக்காத நிம்மதி.. அவனால தான் நான் என்னையே உணர்ந்தேன்.. அதுக்காகவே அவனுக்குனு ஒரு இடம்.. அது எப்போவுமே யாராலயும் அடைய முடியாது.. நீங்க கேக்கலாம் கணவர்னு நான் ஒருத்தன் இருக்கேனு.. ஹ்ம்ம் இருக்கலாம்.. ஆனாலும் அவன் இடம் வேற உங்க இடம் வேற.. யார விட யாரு முக்கியம்னு சொல்லமுடியாது" என்றால் ரம்யா..
அவளை மீண்டும் அவன் மேல சாய்த்துக்கொண்டு, "எல்லாமே சரி தான் மா.. ஆனா தப்பா உணர்ந்த உன் அண்ணாவை மன்னிக்க கூடாதா.." என்று வருண் கேட்டான்..
"இதுல மன்னிக்க ஒன்னும் இல்லங்க.. அவன் இன்னும் புரிஞ்சுக்காம இருந்தா கூட அவனை மத்தவங்க கிட்ட விட்டுகுடுக்கமாட்டேன்.. இப்போ புரிஞ்சுக்கிட்டதுல எனக்கு சந்தோஷம் தான்.. இருந்தாலும் நடந்ததை நான் இழந்ததை மீண்டும் கிடைச்சுடுமா.. அதுக்காக அதையே யோசிச்சு அண்ணாவ விளக்கி வைக்கல.. அதே எல்லாத்தையும் ஒடனே மறந்து ஏத்துக்க மனசு ஒன்னும் மெஷின் இல்லையே.. சுவிட்ச் போட்டதும் எல்லாத்தையும் மறக்க.. கொஞ்சம் காலம் வேணும்னு தான சொல்றேன்.." என்று சொல்ல அவளை புரிந்தவன் அமைதியாக அவளின் தலையை தடவி விட்டான்..
"என்ன நடந்தாலும் ஜெகதீஸ் அண்ணா கிட்ட இருக்க மாதிரி என்னால யாரு கிட்டையும் இருக்கவும் முடியாது யாரையும் அவனுக்கு நிகரா நினைக்கவும் முடியாதுங்க.. முடிஞ்ச அளவுக்கு பாலா அண்ணா கிட்ட இயல்பா பழக ஆரம்பிக்குறேன்.. ஆனாலும் "எதிர் பாக்குறப்போ கிடைக்காத அன்பு, தேவை படுறப்போ கிடைக்காத அரவணைப்பு, அவசியம் இருந்தப்போ கிடைக்காத பாதுகாப்பு, நேரம் கடந்து கிடைச்சு என்ன பயன்" என்று கேட்க வார்த்தைகளின் வலி புரிந்து அமைதியானான் வருண்..
சிறிது நேரத்தில் கதவு தட்டும் சத்தம் கேட்டு வருண் கதவை திறக்க கைகளை பின்னால் கட்டிக்கொண்டு உள்ளே நுழைந்தான் ஜெகதீஸ்.. ரம்யாவின் அருகில் சென்று அமர அவள் அவனின் மடியில் படுத்துகொண்டாள்.. வருண் சென்று ஜெகதீஸ் அருகில் அமர்ந்தான்..
"டேய் அண்ணா நான் பாலா அண்ணாவ கஷ்டப்படுத்துறேனா' என்று கேட்க அவனோ வருணை திரும்பி ஒரு நிமிடம் பார்த்துவிட்டு, "குட்டிமா, நடந்தத யாராலயும் மாத்த முடியாது.. இனிமே நடக்கபோறதும் நம்ம கையில இல்ல.. அண்ணாவ கஷ்டப்படுத்துறேனோன்னு நெனச்சுட்டே அவங்க கிட்ட நீ பொய்யா ஜாலியா பேசுனா அது அதைவிட கஷ்டத்தை தான் குடுக்கும்.. அதுனால நீ நீயா இரு.. காலம் எல்லாத்தையும் மாத்தும்" என்று சொல்ல அமைதியாக ம்ம் என்றாள் ரம்யா..
"சரி இந்தா" என்று அவளிடம் கையை நீட்ட அவள் எழுந்து, "ஐ ஐஸ் கிரீம்.. தேங்க்ஸ் டா அண்ணா" என்று சொல்லி இதற்கு முன் நடந்த அனைத்தையும் மறந்து ஐஸ் கிரீமை சுவைக்க தொடங்கினாள்..
வருண் மற்றும் ஜெகதீஸ் புன்னகையுடன் அவளை பார்த்துக்கொண்டு நின்றனர்..
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro