Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

உயிரானவன் 1

Continuation of kangalil mozhi last part....

( Main note : idhula neriya flashbacks presents varum.. idhu kangalin mozhi story oda contiuation, so adhula ramya seemandham mudinjadhula irundhu idhula start paniruken )

ரம்யா, சீமந்தம் முடிந்து மாலை 6 மணி அளவில் தனது பிறந்த வீட்டிற்கு வந்து சேர்ந்தாள்.. ஆனால் அவளின் நினைவுகளை வருணே ஆக்ரமித்திருந்தான்.. ரம்யா வருண் இருக்கும் இடம் சேலத்தில் உள்ள டவுன் ஏரியா.. அதனை சற்று தள்ளி அவர்களின் வசிப்பிடம்.. ரம்யாவின் பிறந்த வீடு சேலத்தை தாண்டிய சிறிது சின்ன ஊர்.. ஆனால் அதுவும் சேலம் மாவட்டத்தை சேர்ந்ததே.. இரண்டுக்கும் இடையில் 2 மணி நேர பயணமே..

வீட்டிற்கு வந்ததும் அவளை நன்கு கவனித்தனர் அவளின் பெற்றோர் மற்றும் அவளின் அண்ணன் பாலா..

வந்ததும் சோபாவில் அமைதியாக அமர்ந்த தங்கையை பார்த்ததும் தன் தாயிடம் சென்று அவளுக்கு ஜூஸ் பெற்று அவளிடம் வந்து குடுத்தான்.. அதனை வாங்கி குடித்தாள்.. இருவருக்குள்ளும் அவ்வளவாக பேச்சு வார்த்தை இல்லை என்றாலும் இருவரும் ஒருவரை ஒருவர் விட்டுகுடுக்காமல் இருந்தனர்..

தனது அண்ணன் தன்னை புரிந்துகொண்டது சந்தோஷம் என்றாலும் ஜெகதீஸுடன் இருக்கும் ஒட்டுதல் பாலாவிடம் ஏற்படவில்லை.. பாலாவும் தனது குற்றவுணர்ச்சியால் அவளிடம் நெருங்கி பழகாமல் இருந்தான்.. நெருங்கவும் இல்லை விலகவும் இல்லை ( தாமரை இலை மற்றும் தண்ணீர் போல.. தண்ணீருக்குள் விழுந்த எண்ணெய் போல.. ஹாஹா போதும் போதும்னு சொல்லி திட்டாதிங்க 😂 : author mv )

((((பாலா : நம் கதையின் நாயகன்.. மிகவும் கம்பீரமான தோற்றம் உடையவன்.. மனிதர்கள் இடத்தில் நல்ல மதிப்பும் புகழும் பெற்று விளங்கும் நபர்.. ஷேர் மார்க்கெட் பிசினஸ் செய்து பல ஏற்றங்கள் இறக்கங்கள் வந்தும் சலிக்காமல் போராடி இப்பொழுது வெற்றிகளை குவித்துள்ளான்.. சேலம் நகரத்தில் இருக்கும் முக்கிய பணக்காரர்களில் இவனும் ஒருவன்.. கோவம் மட்டுமே இவனின் குறை என்றே கூறலாம்.. போதும்னு நினைக்குறேன்.. வாங்க கதைக்குள்ள போலாம் )))))

ஜூஸ் குடித்து முடிக்கும்வரை அவள் அருகில் நின்று அவளை பார்த்துக்கொண்டே நின்றவன் அவள் குடித்து முடித்ததும் காலி கிளாசை பெற்றுக்கொண்டு சென்றான்.. தந்து தங்கையின் முகத்தில் இருக்கும் கவலையின் காரணம் தெரியாமல் அம்மாவிடம் கேட்டான்..

"அம்மா ஏன் ரம்யா ஒரு மாதிரி இருக்கா.." என்று வினவ "டேய் புள்ளத்தாச்சி கார்ல இவ்ளோ நேரம் வந்ததால இப்டி இருப்பா.. களைப்பா இருக்கும்.. ஜூஸ் குடிசால்ல.. சரி ஆயுடுவா" என்றார் வள்ளி.. இருந்தும் மனம் கேளாமல் ஜெகதீஸிற்கு அழைத்தான் பாலா..

"ஹலோ அண்ணா.. என்ன இப்போதானே கிளம்புனீங்க.. வீட்டுக்கு போயிட்டங்களா பத்திரமா.. குட்டிமா என்ன பண்றா" என்று ஜெகதீஸ் கேள்விகளை அடுக்கிக்கொண்டே போக பாலா, "ஜெகதீஸ் பக்கத்துல மீரா இருக்காளா" என்று கேட்டான்.. "அண்ணா நான் என்ன கேக்குறேன்.. நீங்க என்ன கேக்குறீங்க.." என்று கேட்க அவனோ, "கேட்டியே பதில் சொல்ல விட்டியா.. மீரா இருந்தா உன் வாய கொஞ்சம் மூட வைக்க சொல்லலாம்னு பாத்தேன்" என்றான்..

"அச்சோ சாரி அண்ணா.. சரி சொல்லுங்க" என்று ஜெகதீஸ் கேட்க, "உன் குட்டிமா வந்ததுல இருந்து ஒரு மாதிரியாவே இருக்கா டா.. என்னனு கேட்டு சொல்லு" என்றான் பாலா.. "அத பக்கத்துல இருக்க நீங்களே கேட்கலாமே" என்று ஜெகதீஸ் சொல்ல, "ம்ம்ச் நீயே கேளு" என்று சொல்லிவிட்டு ரம்யாவிடம் சென்று, "ஜெகதீஸ் லைன்ல இருக்கான்" என்று தனது தொலைபேசியை அவளிடம் நீட்டினான்..

அதனை பெற்றவள், "டேய் அண்ணா என்ன டா பண்ணுற.. மீரா என்ன பண்றா.. என்ன இங்க அனுப்பிட்டு அங்க எல்லாரும் கூத்தடிக்குறீங்களா.. சீக்கிரமே உன் மருமகளோட வந்துடுவேன்.. வருண் என்ன பன்றாரு.. அவர பாத்துக்கோ" என்று பேசிக்கொண்டே போக அதனை பார்த்த பாலா, 'ஹ்ம்ம் இப்போதான் தெரியுது அவன் எப்படி அப்படி பேசுனானு.. ஜெகதீஸ்க்கு இப்டி விடாம பேசுற பழக்கத்தை இவ தான் கத்து குடுத்துருப்பா போல' என்று எண்ணி சிரித்தான்..

அவள் பேசி முடித்ததும் ஜெகதீஸ் பக்கம் பேச்சே இல்லாமல் இருக்க, "டேய் அண்ணா கால் பண்ணிட்டு ஏன் டா பேசாம இருக்க" என்று வினவ "அதுக்கு நீ கொஞ்சம் கேப் விடணும் குட்டி" என்றான் ஜெகதீஸ்.. "சரி சரி சொல்லு" என்று அவள் சொல்ல, "என்ன பண்ற.. ஏதாவது இப்போ சாப்டியா" என்று அவன் அக்கறையுடன் கேட்க அவளும், "ம்ம் ஜூஸ் சாப்பிட்டேன்" என்றாள்.,

"போய் கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடு மா" என்று அவன் சொல்ல, "போ.. எனக்கு தூக்கம் வரல.. போர் அடிக்குது.." என்று சலிப்புடன் சொன்னாள்.. "உண்மையா சொல்லு வருண் இல்லாம இருக்க முடியலையா" என்று கிண்டலாக கேட்க, "ஆமா டா அண்ணா" என்று ஒத்துக்கொண்டாள் ரம்யா.. "சரி அவன் கண்டிப்பா உன்ன சீக்கிரமே பாக்க வருவான்.. அண்ணா அனுப்பிவைப்பேனாம்.. இப்போ நீ போய் கொஞ்சமா ரெஸ்ட் எடுப்பியாம்.." என்று சொல்ல அவளோ வேறு வழி இன்றி "சரி டா அண்ணா.. கிளாஸ் எடுக்காத.. நான் போய் ரெஸ்ட் எடுக்குறேன்" என்று சொல்லிவிட்டு போனை பாலாவிடம் குடுத்துவிட்டு அவள் அறைக்குள் சென்றாள்..

இரவு 9 மணி ஆகியும் வருண் ரம்யாவை தொடர்புகொள்ளவில்லை..
"கொஞ்சம் கூட பாசமே இல்லை வருண்.. எப்போ போவேன்னு இருந்திங்களா.. கால் கூட பண்ணாம அப்டி என்ன வேலை பாக்குறாரு.." என்று மனதுக்குள் அவனிடம் பேசிக்கொண்டு இருக்க வள்ளி அறைக்குள் நுழைந்தார்..

"பாப்பா இந்தா சாப்பிடு" என்று சொல்ல "அதுகுல்லையா.. எனக்கு பசிக்கல மா" என்றாள்.. "பரவாயில்ல.. கொஞ்சம் சாப்பிடு.. அம்மா ஊட்டுறேன்" என்று சொல்ல அவளும் சரி என்று சிறிது சாப்பிட்டாள்.. பின்பு அவளின் அம்மா எழுந்து செல்ல பாண்டியன் உள்ளே வந்தார்..

"பாப்பா என்ன பண்ற" என்று விசாரித்தபடி உள்ளே நுழைய அவளோ, "உங்க மருமகனுக்கு அர்ச்சனை பன்னிட்டு இருக்கிறன்" என்றாள்.. அதனை கேட்டு சிரித்தவர், "ஏன் மா.. மாப்பிளை மேல கோவமா" என்று கேட்க, "ஒரு போன் கூட பண்ணல பா.. சாப்பிட்டாரா என்னனு தெரியல.. இந்த ரெண்டு வருஷத்துல நானும் அவரும் தனியா சாப்பிட்டது இல்ல.. வெளில இருந்தா கூட நான் சாப்பிட போறேன்.. நீயும் சாப்பிடுன்னு போன் பண்ணி சொல்லிடுவார்.. இன்னிக்கு இன்னும் போன் பண்ணல" என்றாள்..

"மாப்பிளை வேலையா இருப்பாரு.. போன ஒரு வாரமா அம்மா வீட்டுக்கு போகமாட்டேனு அவர ஆபீஸ் போகவிடாம பாடா படுத்திட்டே.. இப்போவும் வேலை செய்யக்கூடாதா" என்று வள்ளி கேட்க முறைத்தவள், "அம்மா நீ அப்பாவை கூடவே ஊருக்கு கூட்டிட்டு போயிட்டியாமே.. கேள்விப்பட்டேன்.." என்று சிரிப்புடன் கூற தான் கணவரை முறைத்தார் வள்ளி..

"ஹாஹா சரி விடு மா.. நீ போன் பண்ணி கேளு" என்று பாண்டியன் சொல்ல, "ஹுக்கும் அவரே பண்ணட்டும்.. அவருக்கு அக்கறை இல்லாதபோ எனக்கும் இருக்காது" என்று சிறு பிள்ளை போல முகத்தை வெட்டி சொல்ல அதனை பார்த்து வள்ளி பாண்டியன் இருவரும் சிரித்தனர்..

சிறிது நேரம் பேசி விட்டு அவர்கள் எழுந்து சென்றனர்.. அவர்கள் சென்றதும் போனை எடுத்தவள் மணியை பார்த்தாள் மணி 10.30.. இதுக்கு மேல முடியாது என்று அவளே அவனை அழைத்தாள்.. ஆனால் அழைப்பு ஏற்கப்படவில்லை..

மீண்டும் அழைக்க மனம் இல்லாமல் மொபைலில் இருந்த புகைப்படங்களை பார்த்தாள்..

அதனை பார்த்ததும் பழைய நியாபகங்கள் வந்தது.. "எரும.. யூ.. எப்போவும் கூடவே இருப்பேன்.. என் அணைப்புலையே உன்ன தூங்க வைப்பேன்னு நல்லா டயலாக் பேசிட்டு இப்படி தவிக்க விடற.. போ கோவமா வருது.. உன்ன திட்டப்போறேன்.. லூசு பிசாசு மெண்டல் அப்றம் அப்றம்......." என வாய் விட்டு அவள் திட்டிக்கொண்டு இருக்க "ஹ்ம்ம் அப்றம்" என்ற சத்தம் அவளின் பின்னே வந்தது..

திரும்பி பார்க்க மார்பின் குறுக்கே கையை கட்டிக்கொண்டு உதட்டில் மயக்கும் புன்னகையுடன் கதவின் அருகில் நின்றுகொண்டு இருந்தான் அவளின் வருண்.. அவனை அதிர்ச்சியும் ஆசிரியமும் ஒன்றுசேர விழி விரித்து பார்த்தவளின் அருகில் வந்தான்..

அருகில் வந்தவன் அவளை தொடாமல் புருவம் உயர்த்தி என்ன என்று கேட்க, அவனை பார்த்தவள், "இதுவரைக்கும் சினிமா அப்பறம் கதைகள் எல்லாத்துலயும் இந்த மாதிரி நினைச்சதும் உருவம் வரும்னு சொல்லுவாங்க.. அதே மாதிரி தான் நீயும் வந்துருக்கியா" என்று அவள் கேட்க அவளை நினைத்து மானசீகமாக தலையில் அடித்துக்கொண்டவன், "என்னது நீயா" என்றான்..

"இங்க பாரு எனக்கு கோவம்.. அதுனால உனக்கு மரியாதை இல்ல.. ஒழுங்கா முட்டி போடு" என்று அவள் ஆள்காட்டி விரலை நீட்டி கண்களை உருட்டி மிரட்ட அதனை ரசித்தவன், "அதெல்லாம் முடியாது" என்றான் மிடுக்காக.. "இங்க பாரு என்ன விட்டுட்டு எனக்கு ஒரு கால் கூட பண்ணாம இருக்க உன்மேல எனக்கு பயங்கர கோவம்.. உன்ன முட்டி போட சொன்னேன்ல போடு ஒழுங்கா.. அத விட்டுட்டு கனவுல கூட கெத்து காட்டுற" என்றாள்..

இதற்கு மேல் விட்டால் தோப்புக்கரணம் போட சொல்லி அடம்பிடிப்பாள் என்று அறிந்த வருண் அவளின் அருகில் சென்று அவளை மெல்ல தன் மேல் சாய்த்தான்.. அவள் நிஜமா என்று விழிகளை விரித்து பார்க்க அவளின் தலையை மெல்ல தடவியவன் அவளிடம், "நிஜமா நான் வந்துட்டேன் டா.. சாப்பிட்டியா" என்று கேட்க அவள் அவனிடம் "ம்ம்" என்று முனங்கினாள்..

அவளின் முகத்தை நிமிர்த்தியவன் "கோவமா மை டியர்" என்று கேட்க அவளும் ஆம் என்று தலை அசைத்தாள்.. 'ஹுக்கும் கோவமா இருக்கவ தான் என்ன கட்டிபுடிச்சுட்டு நிக்குறா போல' என்று மனதில் நினைத்து சிரித்துக்கொண்டே அவளை கட்டிலில் அமரவைத்தவன் எழுந்து வெளியே செல்ல நினைத்து திரும்பினான்.. அவனின் கைகளை பற்றிக்கொண்டாள் ரம்யா..

அவளை திரும்பி பார்த்தவன் "என்ன மா" என்று மென்மையாக கேட்க, "நிஜமா வந்துடீங்களா.. நான் கோவம்னு சொல்லவும் கிளம்புறிங்களா.. போகாதிங்க ப்ளீஸ்.. எனக்கு கோவமே இல்ல" என்றாள் முகத்தில் கலவரத்துடன்..

அதனை பார்த்தவன் மீண்டும் அவள் அருகில் அமர்ந்து அவளின் கைகளை எடுத்து தன் கைக்குள் வைத்துக்கொண்டு, "வருண்க்கு ரொம்ப பசிக்குது.. சாப்பிட்டு வரவா.." என்று கேட்க மணியை பார்த்தவள் கோவம் கொண்டு அவனை திட்ட தொடங்குமுன் அவளின் வாயில் கை வைத்து தடுத்தான்..

"திட்றதுக்கு டைம் வேணுமா இல்ல நான் போய் சாப்பிடவா" என்று வினவ "அங்க சாப்பிட்டா என்னை ஏமாத்திருவிங்க.. இங்க எடுத்துட்டு வந்து சாப்பிடுங்க" என்றாள் ரம்யா.. அவளை பார்த்து புன்னகைத்தவன் அவளின் தலையை செல்லமாக கலைத்து விட்டு எழுந்து சென்றான்.. திரும்பி வருகையில் ஒரு கையில் தட்டும் ஒரு கையில் பால் டம்ளர்ம் எடுத்து வந்தான்..

அவள் அருகில் வந்தவன் பால் டம்ளரை அருகில் இருந்த டேபிளில் வைத்து விட்டு தட்டில் உள்ள தோசையை உண்ண தொடங்கினான்.. அவள் அவனையே பார்த்துக்கொண்டு இருந்தாள்.. சிறிது நேரத்தில் அவளின் வாய் அருகில் அவன் கை நீட்ட அவள் வாய் திறந்தாள் அவளை அறியாமலே..

யார் ஊட்டினாலும் ஆ என்று வாய் திறக்கும் பழக்கம் ரம்யாவிற்கு உண்டு என்பது வருண் அறிந்த ஒன்று.. பசி இல்லை சாப்பிடவே மாட்டேன் என்று அடம் செய்யும் நேரம் ஊட்டினாள் அவளே அதிகமாக சாப்பிடுவாள்.. 😂😜

அவனும் ஊட்ட அவளும் ஒரு தோசையை காலி செய்தாள்.. உள்ளே வந்த வள்ளி, "என்ன மாப்பிளை நீங்க சாப்பிடாம அவளுக்கு ஊட்டி விட்டுட்டு இருக்கீங்க" என்று கேட்டபொழுதே அவள் உணர்வுக்கு வந்தாள்.. அவளை வள்ளி பொய்யாக முறைக்க அவளோ திருதிருவென முழித்தாள்..

"பரவாயில்ல அத்தை.. அவளை பாக்க வச்சு சாப்பிட்ட வயிறு வலிக்குமேனு தான் ரெண்டு வாய் ஊட்டுனேன்" என்றான் சிரிப்புடன்.. அவனை முறைத்தாள் ரம்யா.. "சரி மாப்பிளை.. இன்னும் ரெண்டு தோசை எடுத்துட்டு வரவா" என்று வினவ, "இல்ல அத்தை.. பாலா மச்சான் என்கிட்ட ரம்யா சாப்பிட்டானு சொன்னப்போவே நானும் பக்கத்துல இருந்த ஹோட்டல்ல சாப்பிட்டேன்.. அவ ஒழுங்கா சாப்பிடலைனு தான் நான் ஏதாவது செஞ்சு தாங்கனு கேட்டேன்.. இப்போ அவளும் சாப்பிட்டா நானும் சாப்பிட்டுட்டேன்.. போதும்" என்றான் புன்னகையுடன்..

மருமகன் மகளின் மேல் கொண்ட அன்பை நினைத்து மனம் நிறைந்து அனந்த கண்ணீருடன் தன் அறைக்குள் சென்றார்.. வருண் சொன்னதை கேட்ட ரம்யா அவனை காதலுடன் பார்த்துக்கொண்டு இருக்க அவன் எழுந்து கை கழுவி வந்து அவள் அருகில் அமர்ந்தான்.. வீங்கிய காலை நீட்டி விட்டு மெதுவாக தடவி கொடுத்தான்..

அவள் அவனின் கையை எடுத்துவிட அவன் அவளை முறைத்து மீண்டும் மெதுவாக நீவி விட்டான்.. தாய்மையின் காரணமாக வீங்கி இருந்த அவள் கால்களுக்கு அதுவும் சுகமாகவே இருந்தது.. பின்பு அவளே அவனை பார்த்து கொண்டே, "எப்போ மறுபடியும் கெளம்புரிங்க" என்று அவள் மெதுவாக கேட்க அவளை நிமிர்ந்து பார்த்தவன், "உன்னையும் பாப்பாவையும் சேர்த்து கூட்டிட்டு போவேன்" என்றான் மெலிதான புன்சிரிப்புடன்..

சந்தோசத்தில் விழித்தவள் "நிஜமாவா" என்று கேட்க "ஆமா" என்று கூற அவள் மீண்டும் "ப்ராமிஸ்" என்று கேட்க அவளின் தலையில் வலிக்காமல் கொட்டியவன், "ப்ராமிஸ் டி செல்லக்குட்டி" என்றான்.. "அப்போ வேலை" என்று கேட்க, "அதான் உன் பாசமலர் ஜெகதீஸ், ரித்விக், திலிப், அர்ஜுன் எல்லாரும் இருக்காங்களே வெட்டியா அவனுங்க பாத்துப்பானுங்க" என்று கூற அவனை கிள்ளியவள், "அவங்கள வெட்டினு சொல்லாதீங்க" என்றாள் கோவமாக..

"சரிங்க மஹாராணி.. பால குடிச்சுட்டு தூங்கு" என்று பாலை எடுத்து குடுக்க, "வேணாம்.. போ.. வயிறு புல்.. இடமே இல்லை" என்றாள் தனது உதட்டை சுளித்து.. அவன் மெல்ல தனது பாக்கெட்டில் இருந்து பூஸ்ட் எடுத்து அதில் கலங்கினான்.. அவள் சந்தோசத்துடன் அமர்ந்துஇருக்க அவன் கலக்கிய பூஸ்ட்டை அவன் வாய் அருகில் கொண்டு சென்றான்..

"அடப்பாவி.. நான் இருக்கப்போ நீ பூஸ்ட் குடிக்குற" என்று அவள் கோவமாக கேட்க, "நீ தான் வேணாம் சொன்னியே.. அதான் நான் குடிக்குறேன்.. உன் வயிறு புல் சொன்னியே" என்றான் தோலை குலுக்கி..

"பால்க்கு தான் இடம் இல்லைனு சொன்னேன்.. பூஸ்ட்க்கு இல்லனு சொன்னனா.. அதுக்கு தனியா இவ்ளோவே இவ்ளோ மட்டும் இடம் இருக்கு" என்று கைகளை விரித்து காட்டி சிறுபிள்ளை போல உதட்டை பிதுக்கி அவள் சொல்ல அதனை ரசித்தவன் அவளிடம் கிளாஸ்சை நீட்டினான்..

அவனை காதலுடன் ரசித்துக்கொண்டே பூஸ்ட்டை ருசித்து குடித்து முடித்தாள்.. பின்பு சிறிது நேரம் அறைக்குள் மெதுவாக அவளை நடக்க வைத்தான்..

"வா தூங்கலாம்" என்று சொல்ல அவள் கட்டிலில் படுத்துகொண்டாள்.. ஆனால் ஏனோ உறக்கம் வரவில்லை.. அவனோ மொபைலில் எதுவோ செய்துகொண்டு இருந்தான்.. சட்டென அதனை பறித்து டேபிளில் வைத்து விட்டு அவனை பார்க்க அவன் முறைத்துக்கொண்டு இருந்தான்.. அவளும் அவனை முறைத்தாள்..

"என்ன டி" என்று அவன் கேட்க, "எப்போவுமே என் கை அணைப்புல வச்சு உன்ன தூங்கவைப்பேன்னு கல்யாணம் முடிஞ்சப்போ டயலாக் பேசுன.. இப்போ நீ என்ன பண்ற.. பாப்பா வந்ததுக்கு அப்பறம் மனைவிய கண்டுக்கமாட்டாங்களாம்.. ஆனா நீ அதுக்கு முன்னாடியே என்ன மறந்துட்ட" என்று அவள் பேசிக்கொண்டே போக அவளை சலனம் இல்லாமல் பார்த்துக்கொண்டு இருந்தான்..

அவளுக்கு தொடர்ந்து பேசியதில் சிறிது மூச்சு வாங்க அவனை நிமிர்ந்து பார்த்தாள்.. அவன் அவளிடம் தண்ணீர் பாட்டிலை குடுத்தான்.. அவளும் சிறிது அருந்தினாள்.. மீண்டும் அவள் பேசத்தொடங்கும் முன் அவளை அரவணைத்துக்கொண்டான்.. அவளும் அமைதியாக அவனின் கை அணைப்பில் நிம்மதியாக இருந்தாள்..

அவன் அவளின் தலையை மெல்லமாக தடவி குடுத்துக்கொண்டே, "இப்படிலாம் யாரு உனக்கு சொன்னது" என்று கேட்க, அவனை மெதுவாக நிமிர்ந்து பார்த்தாள்.. "பக்கத்து வீட்டு அக்கா" என்றாள்.. "மொதல்ல அவங்க பிரண்ட்ஷிப்ப கட் பண்ணு" என்றான்.. பின்பு, "நான் உன்ன கண்டுக்கமாட்டேனா.. உனக்கு அப்படி தோணுதா" என்று கேட்க இல்லை என்று தலை அசைத்தாள்..

"நீங்க இங்க வரதா ஏன் சொல்லல.. கால் பன்னுனப்போ கூட பேசலையே" என்று வினவ, "ஹாஹா அத்தைக்கு தெரியும் நான் வருவேன்னு.. நா வரேன்னு சொல்லிருந்தா அப்போவே கார்ல வாங்கனு சொல்லிருப்ப.. ஆனா வேலை எல்லாத்தையும் ஜெகதீஸ் தலையில கட்டிட்டு வரனும்ல.. கிளம்புறப்போ சொல்லலாம்னு நெனச்சேன்.. ஆனா பஸ் கிடைக்கல.. எப்படியும் நீ தூங்கமாட்டனு தெரியும்.. அதான் பைக்லேயே வந்தேன்.. உனக்கு தெரிஞ்சா பயப்படுவ இல்லனா வேணாம்னு சொல்லுவ.. உங்கிட்ட பொய்யும் சொல்லமுடியாது.. அதான் கால் அட்டென்ட் பண்ணல" என்று அவன் கூறினான்..

அவள் மெல்ல அவனின் கன்னத்தில் முத்தமிட அவன் அவளின் நெற்றியில் முத்தமிட்டு மெல்ல அவளை தூங்கவைத்தான்..

( enna iva hero nu bala va solitu varun ramya part matum potrukalenu thitadhenga.. ini ramya varun parts konjam varum and bala part adhigama varum.. )

Padichutu apdye pogama Indha part epd irukunu comment la solitu ponga...

Happy sunday alllllll.......

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro