முன்னோட்டம்
"யார் சொன்னது லவ்ல எல்லாமே ஃபேர்ன்னு. அப்டி என்னதான் இருக்கு அந்த லவ்ல. பெரிய பொல்லாத ஃபீலிங்கு." காரணமே இன்றி காதல் மீது வெறுப்பை கக்கியபடி இருந்தாள் சஹானா. அவளது ஆக்ரோஷமாக பேச்சை அசட்டு சிரிப்புடன் பார்த்தபடி இருந்தனர் அவளது சகோதரிகள்.
"அதுக்குன்னு பெத்த பிள்ளைய இந்தா வச்சுக்கோன்னு தூக்கி குடுத்துடுவாங்களா. அப்டி செஞ்சா அவ என்ன அம்மா. அந்த குள்ளன் ஒரு மனுஷனா இருந்தா கூட பரவாயில்ல அவன் ஒரு பூதம் டி நீ பேசுறது உனக்கே அநியாயமா இல்ல" அவளது சிரிப்பை கட்டுப்படுத்தியவளாக புருவம் சுருக்கி கேட்டபடி அவளுக்கு எதிரில் கைகளை விரித்து அமர்ந்திருக்கும் புனிதாவின் கையில் மருதாணியை அப்பினாள் மிதுனா.
சஹானா அவளை ஏற்ற இறக்கமாக பார்த்தபடி உதட்டை சுளித்தவள் "ப்ச்.. பெத்த அம்மா தான் மித்தி. ஆனா அவ செஞ்சத நீ எப்டி நியாயம்ன்னு சொல்லவ. குடுத்த ப்ராமிஸ பிரேக் பண்ணுறது தப்பு தான. தேவைக்கு யூஸ் பண்ணிக்கறா அவ. அவளுக்கு நீங்களும் சப்போர்ட் பண்ணுறீங்க. எனக்கு புரியல லவ்க்கும் வார்க்கும் மட்டும் என்ன ஓரவஞ்சனைய ஒரு நியாயம். பாவம் ரம்பில் டில்ட்ஸ்கின். அவன் டுவார்ஃபா இருந்தாலும் நல்ல மனசு அவனுக்கு. ஆனா அந்த ராணி மனுஷியா இருந்துக்கிட்டு கல் மனசோட இருக்கா" கதையில் வரும் மாயாஜால குள்ளனுக்காக அவள் அனுதாப்பட வாய் விட்டு சிரித்தாள் மணப்பெண் புனிதா.
"ஏய் போதும் டி ரெண்டு பேரும் நிறுத்துங்க. என்னிக்கோ படுச்ச ஃபேரி டேல நியாபகம் வச்சுட்டு சண்ட போடுறீங்க. விடிஞ்சா எனக்கு கல்யாணம். கொஞ்சம் ரெஸ்ட் குடுங்க டி" என்றாள். அவளை சகோதரிகள் இருவரும் சீண்ட அதை புறம் தள்ளியவள் "அன்பு ன்னு வந்துட்டா அதுக்கு நியாயம் அநியாயம் எல்லாம் தெரியாது சகி. போர்லா கூட போர் தர்மமுன்னு ஒன்னு பேருக்காவது இருக்கு. பட் லவ்ல..ம்ஹூம்.ஆல் இஸ் ஃபேர் இன் லவ்" அவளுக்கு தெரிந்ததை எடுத்துரைத்தாள் புனிதா.
"நல்லா சொல்லு அப்போவாது அதோட அருமை அவளுக்கு புரியுதான்னு பார்ப்போம்" என்ற மித்தியின் குதுகலத்துக்கு "ஒரு எருமையும் தெரிய வெண்டாம். புனிக்கா நீ சொன்ன மாதிரி காதல்ல எல்லாமே சரின்னா அப்போ கண்டிப்பா காதல் தப்பானதா தான் இருக்கும். எனக்கு தப்பு பண்ண பிடிச்சாலும் இந்த காதல் மேல சுத்தமா விருப்பமில்ல" முகத்தை சுருக்கி சொல்லவும் மிதுனா மருதாணி கோலத்தை முடித்து தலையை நிமிர்த்தவும் சரியாக இருந்தது.
அவள் ஒரு கேலி சிரிப்புடன் " நல்ல வேலை புனிக்கா இந்த பிராவெர்ப எழுதுனவர் செத்து போயிட்டாரு இல்லன்னு வையேன் இன்னிக்கு தான் அவருக்கு டெத் டேவா இருந்திருக்கும். என்னோட டுவின் சிஸ்டர் அவர போட்டு தள்ளிட்டு ஜெயிலுக்கு போயிருப்பா. அவள வெளிய எடுக்க நான் ஒரு நல்ல லாயர தேடியிருக்கனும் " என்று முடித்தவளின் கேலி பேச்சில் புனிதாவும் சஹானாவும் அவளை ஒரு சேர அவளை முறைத்தனர்.
***************
"எக்ஸ்கியூஸ் மீ " வார்த்தைகளுக்கும் வாய்க்கும் வலிக்காமல் சொல்லி முடித்துவிட்டு தன் முன்னால் இருப்பவனை பார்த்தாள் மிதுனா. அவனோ சாதாரணமாக "எஸ் சொல்லுங்க" என்றான் சிறு புன்னகையுடன்.
அவனிடம் பேச தயக்கம் கொண்டவளாக "ஆன்.. அது நான்...இங்க உக்காரலாமா?" கேள்வியாக கேட்க அந்த ஆடவன் குழப்பத்துடன் புருவம் சுளித்தவன் "நோ ப்ராப்ளம்.. ப்ளீஸ்" என்றபடி இருக்கையை காட்ட அதன் விழும்பில் அமர்ந்துகொண்டாள் மிதுனா.
மெல்ல தலையை உயர்த்தி தனக்கு முன்னால் இருப்பவனை பார்த்தவள் "நான் உங்ககிட்ட... அது வந்து... " பேசுவதற்கு பழகியபடி இருந்த அவளிடம் பொறுமையை இழந்தவன் "ஹலோ மிஸ்... ரிலாக்ஸ்.. ஏன் டென்ஷனாகுறீங்க" என்றான் சிரித்தபடி.
மிதுனா கண்களை மூடி திறந்தபடி "அது..நீங்கள் தப்பா எடுத்துக்க மாட்டிங்கன்னா நான் உங்ககூட ஒரு செல்ஃபி எடுத்துக்கலாமா..." ஒருவழியாக சொல்லி முடித்தவள் மூச்சுவிட்டுக்கொண்டாள்.
அவளது தடுமாற்றத்தை கண்டவனின் மூளை எதையோ அறிவுறுத்த சுற்றும் முற்றும் பார்வையை சுழற்றியபடி "இந்த பொண்ண பார்த்தா அப்பாவியா தெரியுறா. அப்டி எதுவும் இருக்காது" என்று மனதில் நினைத்தபடி "அதுல எனக்கு என்ன ப்ராப்ளம் வரும்னு நீங்க நினைக்கிறீங்க. ஜஸ்ட் அ பிக் அவ்ளோதான். ஐம் ஓகே வித் தட் பட்... நீங்க எதுக்கு என்கூட செல்ஃபி எடுக்கனுன்னு தான்...புரியல" அவன் தோளை குலுக்க மிதுனா அவனை அமைதியாக ஏறிட்டவள் "இது எனக்கு நீங்க செய்யபோற ரொம்ப பெரிய ஹெல்ப் சார். இதுல தான் இப்போ என் லைஃபே இருக்கு" என்றவளின் பேச்சில் முழுவதுமாக குழம்பிப்போனான்.
அவன் அவளை கூர்விழிகளால் நோக்க காதின் மடல்களை தேய்த்துக்கொண்டவள் "டக்குனு திரும்பி பார்த்து என்ன சிக்க வச்சுடாதிங்க. அப்டியே கேஷுவலா திரும்பி பாருங்க." என்றபடி எதிரில் இருந்த டேபிளை சுட்டிக்காட்டினாள். "யார பார்க்க சொல்றா இந்த பொண்ணு. டேய் வருண் உனக்கு ஏற்கனவே நேரம் சரியில்ல.பீ கேர்ஃபுல்" என்று முணுமுணுத்தபடி திரும்பினான். அவள் காட்டிய இருக்கைகளை பார்த்தவனின் மூச்சு இப்போது தான் சீரானது.
*****************
சஹானா அவள் முன் கண்கள் நிரம்ப அலட்சியத்துடன் நிற்பவனை மிக சாதாரணமாக பார்த்தாள். அவள் எதிரில் "நீயெல்லாம் ஒரு ஆளா" என்ற தலைக்கனத்துடன் நின்றுகொண்டிருந்தவன் அலட்சிய முறுவலுடன் "என்ன மேடம் கேஸ்ல ரொம்ப தீவிரமா இறங்கியிருக்கீங்க போல. அவ்ளோ தூரம் சொல்லியும் கேட்காம பிடிவாதம் பிடிக்கிறதா கேள்விபட்டேன்" தாடையை தேய்த்தபடி இருந்தவனின் ஆணவ பேச்சை சட்டை செய்யாதவள் அவன் முன் புருவம் தூக்கி மெச்சுதல் பார்வை பார்த்தவிட்டு கைகளைக் கட்டிக் கொண்டாள்.
" பார்க்க சின்ன பொண்ணா தெரியுற. உனக்கு எதுக்கு இந்த வேண்டாத வேலை. நல்ல பொண்ணா சொல்றத கேளு. இல்லனா எப்பவும் சொல்லிக்கிட்டே இருக்க மாட்டேன். கோர்ட்ல ஆர்கியூமெண்ட் பார்த்தல்ல. உன்னால என்ன செய்ய முடிஞ்சுது ஆஃப்டர் ஆல் நீ ஒரு பெட்டிக்கேஸ். நீ தலைகீழா நின்னு தண்ணி குடிச்சாலும் உன்னால என்ன ஜெயிக்க முடியாது. அப்றம் உன்ன நம்பிட்டு இருக்குற உன் கிளைண்ட் அவன நான் சும்மா விடபோறதே இல்ல. அவன் பண்ணின தப்புக்கு தண்டனை கிடைச்சே ஆகனும் " என்றான் ஆக்கிரோசமாக.
சஹானா அவனது பேச்சை கிஞ்சித்தும் பெரிது படுத்தாதவளாக அவனை ஆழ்ந்து நோக்கியபடி ஒரு புன்முறுவல் செய்தவள் "ஆரியா ராம்பிரசாத் தி கிரேட் பிஸ்னஸ்மேன். உங்க பேச்சுல ஒரு கலக்கம் தெரியுதே." நக்கலில் நனைந்த குரலில் ராகம் பிடித்தவள் " பெரிய பெரிய லாயர்ஸ் எல்லாரையும் காசு குடுத்து கரெக்ட் பண்ணி வச்சிருக்க உங்களுக்கு இந்த பெட்டி கேஸ பார்த்து என்ன சார் பயம். ஏன் சார் நான் தெரியாம தான் கேட்குறேன் உங்களுக்கு உண்மையிலேயே தப்புக்கு தண்டனை கிடைக்கனுன்னு எண்ணம் இருக்கா? இல்ல..என் கிளைண்ட் மேல உள்ள தனிப்பட்ட பகைய தீர்த்துக்க இந்த கேஸ யூஸ் பண்ணிக்க பார்க்குறீங்களா ? " என்றவள் அவனை கூறுபோடும் பார்வை பார்த்தாள்.
அவளை தன்னால் முடிந்தவரை முறைத்தான் ஆரியா. ஆனால் அவனுக்கு எதிரில் இருப்பவளோ யாருக்கும் அஞ்சும் ரகமில்லை என்பதை அவள் தோரணையே கட்டிவிட்டிருந்தது. சகி "சார் நீங்க எப்டியோ அது எனக்கு தெரியாது. தெரிஞ்சுக்க வேண்டிய அவசியமும் எனக்கு இல்ல. இது கோர்ட் இங்க தப்பு செஞ்சவங்க தண்டிக்கப்படுவாங்க. அவங்களுக்கு தண்டனை வாங்கி கொடுக்க தான் நான் லா படிச்சேன். தப்பே செய்யாதவங்கள பனிஷ் பண்ணுறது லாவோட வேலை இல்ல. உண்மைக்கு துணை நிக்காம பயந்து ஒட நான் ஒன்னும் உங்க பணத்துக்கு விலைபோற பப்பெட் இல்ல. என் கிளைண்ட் தப்பு பண்ணியிருந்தா நானே அதையும் இதே கோர்ட்ல தைரியமா எடுத்து வைப்பேன். உங்களோட குரோதத்துக்கு எங்க தொழில கேவலப்படுத்தாதிங்க." என்று அமைதியாக அதே நேரம் அழுத்தமாக சொல்லிவிட்டு கையில் இருந்த கோட்டி உதறியவள் அதை கரத்தின் வளைவில் பத்திரப்படுத்தியபடி அவனது அலட்சியம் தெரிக்கும் பார்வையை அவனுக்கே வீசியவள் அங்கிருந்து அகன்றாள்.
**************
ஹாய் ரீடர்ஸ் ;
இது என்னோட அடுத்த ஸ்டோரியோட ஒரு சின்ன முன்னோட்டம். இப்ப எதுக்கு இதுன்னு கேட்டிங்கன்னா ஸ்டோரி நேம் ரிஜிஸ்டர் பண்ண தான்.ஏன்னா என்னால இன்னோரு சினிமா பாட்ட கேட்டு நேம் வைக்க இப்போதைக்கு முடியாது.அப்றம் முன்னோட்டம் எப்டி இருக்கன்னு படிச்சுட்டு சொல்லுங்க. நன்றி🙏💕
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro